Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இரவுத் தாமரை
இரவுத் தாமரை
இரவுத் தாமரை
Ebook289 pages1 hour

இரவுத் தாமரை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அமிர்தா தன் இடுப்புச் சேலையின் மறைவிலிருந்து பளபளப்பான ஒரு அடி நீள கத்தியை எடுப்பதைப் பார்த்ததும் கதிர் முகம் மாறி உடனே வியர்த்தான்.
 "அ...அ... அமிர்தா...! இ... இதென்ன...?"
 "தெரியலை...? கத்தி... உங்க உடம்புக்குள் ஒரு சொட்டு ரத்தம்கூட இருக்கக்கூடாது..." சொல்லிக் கொண்டே ஒரு விகார புன்னகையோடு மெல்ல எழுந்தாள் அமிர்தா. கதிர் மிரண்டுபோய் பின்வாங்கினான்.
 "அமிர்தா. உ... உ... உனக்கு என்னாச்சு...? இதென்ன பைத்தியக்காரத்தனம்...?"
 "இது பைத்தியக்காரத்தனம் இல்லை. புத்திசாலித் தனம். எனக்கு இந்த வெள்ளைச் சேலை பிடிச்சிருக்கு... பொட்டு இல்லாத நெற்றியும், பூ இல்லாத தலையும், தாலி இல்லாத கழுத்தும் பிடிச்சிருக்கு. காலம் பூராவும் நான் இப்படி இருக்க ஆசைப்படறேன். என்னோட ஆசை நிறைவேறணும்ன்னா நீங்க உயிரோடு இருக்கக்கூடாது."
 பின்வாங்கிய கதிர்சுவரில் முட்டிக்கொண்டு நின்றான். அமிர்தாவை பயமாய் விழிகள் விரிய பார்த்தான், 'திடீரென்று இவளுக்கு என்னாயிற்று...?' 'எதற்காக இந்தக் கொலை வெறி?' அமிர்தா பளபளக்கிற கத்தியோடு ஒவ்வொரு அடியாய் எடுத்து முன்னேறிவந்தாள்...
 கதிர் ஓட முயன்றான். முடியவில்லை. பாதங்கள் தரையோடு தரையாய் பிணைந்த மாதிரியான உணர்வு.
 அமிர்தா அவனை நெருங்கினாள். கதிர் அலறினான்.
 "வேண்டாம் அமிர்தா...! என்னை ஒண்ணும் பண்ணிடாதே!அவள் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தாள். "வராதே...!" வந்தாள். பத்தடி... எட்டடி... இரண்டடி... கதிர் அமிர்தாவின் கையிலிருந்த கத்தியைப் பறிப்பதற்கு முன்பே அது அவனுடைய அடிவயிற்றில் ஆழமாய் பாய்ந்தது. வெதுவெதுப்பான ரத்தம் அவள் முகத்தில் தெறித்தது.
 "அம்மா...! ஆ...!" திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான் கதிர். உடம்பு முழுவதும் வியர்த்து சொதசொதத்துப் போயிருந்தது. இதயம் துரிதமான துடிப்பில் இருந்தது... பக்கத்தில் அமிர்தா ஒரு குழந்தையைப்போல் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். - 'என்ன ஒரு பயங்கரமான கனவு?' 'ஏன் இப்படியொரு கனவு...?' கதிர் பார்வையை சுவரில் அப்பியிருந்த சதுர கடிகாரத்துக்குக் கொண்டுபோய் பார்த்தான்.
 மணி விடியற்காலை ஐந்து மணி. ஜன்னலுக்கு வெளியே பறவைகள் இன்னும் சற்று நேரத்தில் உதிக்கப் போகும் சூரியனுக்காக கிரீச்சிட்டுக் கொண்டிருந்தன.
 கதிர் தன் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு அப்படியே உட்கார்ந்தான். அந்தக் கனவு மறுபடியும் மனசுக்குள் வந்தது.
 அமிர்தா வெள்ளைப் புடவை கட்டி - கையில் பளபளக்கும் கத்தியோடு தன்னைக் கொல்ல ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து வந்த காட்சி எலும்பு மஜ்ஜை வரைக்கும் குளிரோடு பாய்ந்தது. 'என்ன... ஒரு அர்த்த மற்ற கனவு...?' 'எனக்கு முகச்சவரம் செய்யும்போது பிளேடு கீறி கன்னத்தில் காயம் ஏற்பட்டுவிட்டாலே அமிர்தா துடிதுடித்துப் போய்விடுவாளே...? டெட்டாலையும் பஞ்சையும் எடுத்து வைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்துவிடுவாளே...?
 'இவளா... கத்தியை எடுத்துக் கொண்டு என்னைக் கொல்ல வருவது...?'
 'நெற்றியில் குங்குமம் இல்லாமல் ஒரு நிமிடம்கூட இருக்கமாட்டாளே...?' கதிர் கலக்கமாய் யோசித்துக் கொண்டிருக்கும் போதே முதுகில் அந்த வெப்பமான கை விழுந்தது. திரும்பினான்.
 அமிர்தா தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்திருந்தாள். மெல்ல புன்னகைத்தபடி கேட்டாள்.
 "என்ன... எப்பயிருந்து இந்த பழக்கம்...?"எது...?"
 "இப்படி எந்திரிச்சதுமே முழங்கால்களைக் கட்டிக்கிட்டு கட்டிலிலேயே தவம் பண்ற பழக்கம்..." கதிர் கலக்கத்தை மறைத்துக் கொண்டு சிரித்தான்.
 "திடீர்ன்னு முழிப்பு தட்டிடுச்சு... எந்திரிச்சு உட்கார்ந்துட்டேன்..."
 "ராத்திரி ஏதாவது பேய் கனவு கண்டீங்களா?"
 "இ...இ...இல்லையே...?"
 "பின்னே ஏன் உங்க முகம் பேயறைஞ்ச மாதிரி இருக்கு?"
 "அதெல்லாம் ஒண்ணும் இல்லை... தூக்க கலக்கம்..."
 "அது சரி...! இன்னிக்கு எனக்கு பிறந்தநாள். போன வருஷம் கண் விழிச்சதுமே என்னைக் கட்டிப்பிடிச்சு வாழ்த்து சொன்னீங்க. இந்த வருசம் ஊமைச் சாமியார் மாதிரி உட்கார்ந்துட்டிருக்கீங்களே..."
 "மன்னித்துவிடு... அமிர்தா...! என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!"
 அமிர்தா கணவனை வியப்பாய் பார்த்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 14, 2023
ISBN9798223479055
இரவுத் தாமரை

Read more from Rajeshkumar

Related to இரவுத் தாமரை

Related ebooks

Related categories

Reviews for இரவுத் தாமரை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இரவுத் தாமரை - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    மாலை நேரக் கதிரவன் கோபம் தணிந்து கொண்டிருந்த ஐந்து மணி.

    மேகலை கம்ப்யூட்டருக்கு பிளாஸ்டிக் உறையைப் போர்த்திவிட்டு அழகாய் சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்தாள்.

    அம்மா...! திரும்பினாள். அலுவலகபையன் டேவிட் நின்றிருந்தான். என்ன டேவிட்...?

    ஜி.எம். உங்களைக் கூப்பிட்டாரும்மா...

    மேகலை தன் அழகான சின்ன நெற்றியில் ஆச்சரியப்பட்டாள்.

    என்னையா கூப்பிட்டார்...?

    ஆமாங்கம்மா...

    அவரோட அறைக்குள்ளே வேற யாராவது இருக்காங்களா?

    இல்லீங்கம்மா... அவர் மட்டுந்தான் இருக்கார்...

    மேகலை ஒரு சில விநாடிகள் தன் வெல்வெட் உதடுகளை அரிசிப் பற்களால் கடித்து யோசித்துவிட்டு

    தோளில் தொங்கும் பையோடு ஜி.எம்.மின் அறையை நோக்கி நடந்தாள்.

    ‘எதற்காகக் கூப்பிட்டிருப்பார்...? ஐந்து மணிக்கு மேல் அலுவலக வேலை விஷயமாய் தன் அறைக்கு கூப்பிட மாட்டாரே...?’

    வேகமாய் நடந்து அலுவலகத்தின் நிர்வாக அறைக்குள் நுழைந்து கோடியில் இருந்த ஜி.எம்.மின் அறைக்கு முன்னால் போய் நின்றாள்.

    "எம். கதிர், ஜெனரல் மேனேஜர் என்று ஆங்கிலம் பேசிய பித்தளை உலோக எழுத்துக்கள் பளபளப்பாய் தேக்குமரக் கதவில் மின்னியது.

    டொக்... டொக்...

    கதவை மெல்லத் தட்டினாள்.

    உள்ளே வரலாம்...

    மேகலை கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனாள். குளிரூட்டப்பட்ட அந்த அறை மிதமான குளிரை நிரப்பி வைத்திருந்தது.

    வணக்கம் சார்...

    பதிலுக்கு வணக்கம் சொன்ன கதிருக்கு இருபத்தேழு வயது இருக்கும். மாநிறத்துக்கும் சற்று கூடுதலான நிறம். தூக்கி வாரிய அடர்த்தியான முடி அவனுடைய சதைப் பிடிப்பான முகத்துக்கு தனி அழகைக் கொடுத்தது. மேல் உதட்டில் அப்பியிருந்த கரிய மீசையும் கண்களுக்கு கொடுத்திருந்த வெளிர் நிற கண்ணாடியும் அவனுக்கு பாந்தமாய் பொருந்தியிருந்தது.

    உட்காரு மேகலை... தயக்கமாய் உட்கார்ந்தாள்.

    கதிர் பேப்பர் உருளையை உருட்டிக்கொண்டு தலையை சாய்த்தபடி மெல்லிய குரலில் கேட்டான்.

    இன்னிக்கு உனக்கு வெளியே முக்கியமான வேலை ஏதாவது இருக்கா மேகலை...?

    இல்ல... சார்...

    எனக்கு நீ ஒரு உதவி பண்ணணுமே...?

    சொல்லுங்க சார்...?

    இப்ப நீ என்கூட வெளியே வரணும்...

    எங்கே சார்...?

    கடைக்கு...! ஏதாவது ஒரு நல்ல பட்டுச்சேலை கடைக்குப் போய் ஒரு சேலை எடுக்கணும்...

    சேலை யாருக்கு சார்...?

    என் மனைவி அமிர்தாவுக்குத்தான்...

    உங்க மனைவியை கூட்டிக்கிட்டு போய் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி சேலை எடுக்கலாமே சார்...?

    கதிர் புன்னகைத்தான். அது எனக்கு தெரியாதா என்ன மேகலை... நாளைக்கு அமிர்தாவோட பிறந்த நாள். பிறந்த நாள் பரிசா உனக்கு என்ன வேணும்ன்னு அவள் கிட்ட கேட்டேன். நீங்கள் பிரியமா எது வாங்கிட்டு வந்தாலும் சரின்னு சொல்லிட்டா. போன ஆண்டு அவளுக்கு ஒரு நகைப்பெட்டி வாங்கிக் கொடுத்தேன். இந்த ஆண்டு பட்டுச்சேலை எடுத்துக் கொடுக்க ஆசை. எனக்கு இந்த சேலைகளைப் பத்தி அதிகம் தெரியாது. அதனால்தான் உன்னைக் கூப்பிடறேன். கொஞ்சம் சிரமம் பார்க்காமே என்கூட வந்து ஒரு நல்ல பட்டுச் சேலையை தேர்வு பண்ணி கொடுக்க முடியுமா?

    வர்றேன் சார்...

    ரொம்ப நன்றி...! சொன்ன கதிர் எழுந்து கொண்டான்.

    கிளம்பலாமா...?

    கதிர் ஆபீஸ் போர்டிகோவில் நிறுத்தியிருந்த காரை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட, மேகலை தயக்கமாய்ப் பின் தொடர்ந்தாள்.

    கார் கிளம்பி போக்குவரத்து நெரிசலில் கலந்து தியாகராய நகரை நோக்கி விரைய ஆரம்பித்தது.

    கதிர் கழுத்து டையை தளர்த்தி விட்டுக்கொண்டு காரை கவனமாய் ஓட்டிக் கொண்டிருக்க - பக்கத்தில் நாகரீக இடைவெளி விட்டு உட்கார்ந்திருந்த மேகலை கேட்டாள்.

    சார்...! உங்களுக்கு கல்யாணமாகி எத்தனை வருசமாச்சு...?

    இரண்டரை வருசம்...

    அவ்வளவுதானா...? எத்தனையோ வருசங்கள் ஆன மாதிரி இருக்கு சார்...!

    அது சரி... உனக்கு எப்போ கல்யாணம்...?

    வீட்டில் மாப்பிள்ளை பார்த்துட்டிருக்காங்க சார்...

    நீ யாரையாவது காதலிக்கிறியா...?

    சேச்சே...!

    என்ன சேச்சே...? காதலிக்கிறது கெட்ட காரியமா...?

    நான் அப்படி சொல்லலை சார்... கல்யாணம்ங்கிறது ரொம்ப பெரிய விஷயம். நம்ம விருப்பத்துக்கு ஒருவரை காதலிச்சிட்டு அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லி பெத்தவங்களோட மனசை துன்பப்படுத்த நான் தயாராயில்லை... கல்யாணத்தை பண்ணி வைக்கிறது பெத்தவங்களோட கடமை, உரிமை. அதை நாம கையில எடுத்துக்கக் கூடாது.

    நல்ல நோக்கம்... சரி... நான் இப்போ ஒரு கேள்வி கேட்கிறேன்.

    கேளுங்க சார்...

    உனக்கு வரப்போகிற மாப்பிள்ளை எப்படி இருக்கணும்னு நினைக்கிறே...?

    என்னை உயிருக்குயிரா நேசிக்கிறவரா...

    அழகா இருக்கவேண்டியதில்லை...?

    அழகு இரண்டாம் பட்சம்... நேர்மையான ஒரு நல்ல உத்தியோகம் தான் ஆணுக்கு அழகு...

    மேகலை! உன் அழகுக்கும் அறிவுக்கும் நீ ஒரு மகாராணி மாதிரி வாழணும்...

    வேண்டாம்... சார்... தலையில் கிரீடத்தை வைச்சுக்கிட்டு காலம் பூராவும் சிம்மாசனத்தில் உட்கார்ந்துட்டு இருக்கமுடியாது...

    கதிர் சிரித்துக்கொண்டிருக்கும் போதே மாலை நேர தியாகராய நகர் வந்தது.

    எந்தகடைக்குப் போகலாம் சார்...?

    நீயே சொல்லு...

    நல்லி...

    நானும் அதுதான் நினைத்தேன்...

    காரை பனகல் பார்க்குக்குப் பக்கத்தில் நிறுத்திவிட்டு கதிரும் மேகலையும் இறங்கி கடைக்குள் நுழைந்தார்கள். மேகலை கேட்டாள்.

    சார்! பட்டுச்சேலை என்ன விலையில் இருக்கலாம்?

    பத்தாயிரம் ரூபாயில் இருந்து பதினஞ்சாயிரம் ரூபாய்க்குள்ள.

    இந்த விலைக்கு அமர்க்களமா ஒரு பட்டுச்சேலை எடுத்துவிடலாம்.

    குளிரின் ஜில்லிப்போடு கூடிய அந்தப் பெரிய அறைக்குள் உட்கார்ந்து ஒருமணி நேரத்தை செலவழித்து. தங்கக் காசுகள் பதித்து வைத்த மாதிரியான காரட் நிற சேலையைத் தேர்ந்தெடுத்தாள் மேகலை. கதிர் மலர்ந்தான்.

    அருமையான தேர்வு! என் மனைவி அமிர்தாவோட நிறத்துக்கு எடுப்பா இருக்கும்... நான் தர்ற இந்த அன்பளிப்பு அவளுக்கு பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கும்னு நினைக்கிறேன்.

    சார்... விலை எவ்வளவு தெரியுமா?

    எவ்வளவு?

    உங்கள் பட்ஜெட்டை மீறிடுச்சு... பத்திலிருந்து பதினஞ்சுன்னு சொன்னீங்க?

    ஆமா.

    இது பதினேழாயிரம்.

    "இருக்கட்டுமே! சேலையைப் பார்த்துட்டு அமிர்தா படற மகிழ்ச்சிக்கு முன்னாடி விலை ஒரு பெரிசே கிடையாது.

    சார்! பொறாமையா இருக்கு...

    எதுக்குப் பொறாமை?

    உங்களை மாதிரி ஒரு கணவர் வாய்க்க உங்கள் மனைவி ரொம்பவும் கொடுத்து வைச்சிருக்கணும்... எத்தனை ஆண்கள் மனைவியோட மகிழ்ச்சியை பெரிசா நினைக்கிறாங்க?

    இது குளிர் அறை. நீ வேற ஐஸ் வைக்காதே! என்னால் தாங்க முடியாது...

    மேகலை சிரித்தாள்.

    மறுநாள். காலை ஆறு மணி.

    ஜன்னலுக்கு வெளியே தெரிந்த பங்களாவின் தோட்டத்துப் பக்க மரங்களில் பறவைகள் போட்ட உற்சாகக் கூச்சலைக் கேட்டுக் கண் விழித்த கதிர் பக்கத்தில் படுத்திருந்த தன் மனைவி அமிர்தாவைப் பார்த்தான். அவள் நிச்சலனமாய் தூங்கிக் கொண்டிருந்தாள். ‘என்ன ஒரு அழகான முகம் என் அமிர்தாவுக்கு? இந்தப் புருவங்கள், இந்தக் கண்கள், இந்த செர்ரி சிவப்போடு கூடிய சின்ன மூக்கு, இந்த பஞ்சு போன்ற உதடுகள்... எவளுக்கு இருக்கிறது!’

    கதிர் குனிந்து தன் வெப்பமான உதடுகளை அமிர்தாவின் நெற்றியில் பதித்தான். அவள் சிணுங்கினாள்.

    அமிர்தா...! என் அமிக்கண்ணு...! அவள் அப்படியே புரண்டு கதிரின் கழுத்தை ஆசையாய் கட்டிக்கொண்டாள்.

    நன்றி.

    எழுந்திரு! குளிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வரலாம்.

    அமிர்தா கண்களை விழிக்காமலேயே இப்ப மணி என்னங்க? என்று கேட்டாள்.

    ஆறு.

    ராத்திரி பூராவும் நீங்க என்னை தூங்கவிடலை. ரொம்ப அலுப்பா இருக்கு...

    இன்னிக்கு ராத்திரியும் உன்னை தூங்க விட மாட்டேன். வரவர நீங்க ரொம்ப மோசம்...

    போகப்போகப் பாரு. இன்னும் மோசமா தெரிவேன்.

    என்னங்க...

    உம்...

    நமக்கு கல்யாணமாகி இரண்டரை வருசமாகியும் என் வயிறு திறக்கலையேன்னு எங்கம்மாவுக்கு ரொம்ப வருத்தம்...

    கவலையே படாதே! அடுத்த வருடம் திறப்பு விழா நடத்திடுவோம். வர்ற உன்னோட பிறந்தநாளைக்கு குட்டிக் கதிர் உன்மடியில் இருப்பான்.

    நிச்சயமா?

    நிச்சயமா. நீ போய் முதல்ல குளிச்சிட்டு வா. நான்! பரிசளிக்கப் போகிற பட்டுச் சேலையைக் கட்டிக்க.

    சேலை என்ன நிறங்க?

    அது சஸ்பென்ஸ்... போய் குளிச்சிட்டு வா. அமிர்தா அழகாய் சோம்பல் முறித்துக் கொண்டு குளியலறையை நோக்கிப் போக - கதிர் உடற்பயிற்சி செய்வதற்காக மொட்டை மாடிக்குப் போனான்.

    கதிர் உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு அரை மணிநேரம் கழித்து கீழே வந்தபோது அமிர்தா குளியலை முடித்துக் கொண்டதற்கு அடையாளமாய் குளியலறைக் கதவு விரியத் திறந்து கிடந்தது.

    அமி... கொஞ்சலாய் குரல் கொடுத்துக்கொண்டே உடை மாற்றும் அறைக்குள் எட்டிப்பார்த்தான். சமையலறைக்குள் போனான். காணோம். ‘எங்கே போயிட்டாள்?’ முன் அறைக்கு வந்து வாசல் பக்கமாய் பார்வையை துரத்திப்பார்த்தான். அமிர்தாதட்டுப்படவில்லை. ‘தோட்டத்தில் இருப்பாளோ?’ முன் அறையை வேக நடையில் கடந்து பின்பக்கமாய் போக முயன்ற கதிர் சட்டென்று நின்றான். மாடிப்படிகளுக்குக் கீழே - அமிர்தா தன் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

    தோற்றம் வித்தியாசமாய் இருந்தது. வெள்ளைச்சேலை. வெள்ளை ஜாக்கெட். நெற்றியில் பொட்டு இல்லை. தலையில் பூ இல்லை. துடைத்து வைத்த மாதிரியான வெறுமைக் கோலம். கதிர் பலத்த அதிர்ச்சியோடு அமிர்தாவுக்குப் பக்கத்தில் போய் நின்றான்.

    அமிர்தா! பிறந்தநாள் அதுவுமா இது என்ன விதவைக் கோலம்...?

    அவள் புன்னகையோடு கதிரைப் பார்த்தாள். மெல்லிய குரலில் சொன்னாள்.

    நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் விதவையாகப் போகிறேன். அதுக்காகத்தான் இந்த கோலம்.

    அமிர்தா! நீஎன்ன சொல்றே?

    அமிர்தா பதில் பேசாமல் தன் இடுப்புச் சேலையின் மறைவிலிருந்து அந்த ஒரு அடி நீள பளபளப்பான கத்தியை எடுத்தாள்.

    2

    அமிர்தா தன் இடுப்புச் சேலையின் மறைவிலிருந்து பளபளப்பான ஒரு அடி நீள கத்தியை எடுப்பதைப் பார்த்ததும் கதிர் முகம் மாறி உடனே வியர்த்தான்.

    அ...அ... அமிர்தா...! இ... இதென்ன...?

    "தெரியலை...? கத்தி... உங்க உடம்புக்குள் ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1