Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

புல்லட் சேம்பர்
புல்லட் சேம்பர்
புல்லட் சேம்பர்
Ebook97 pages31 minutes

புல்லட் சேம்பர்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலிங்பெல் அந்த ராத்திரி நேரத்தில் வீறிட்டு அடங்கியதும் - போர்வைக்குள் இருந்த பப்ளிக் பிராசிகூட்டர் ஜெயகோபாலன் எழுந்து உட்கார்ந்தார்.
 'இந்நேரத்திற்கு யார் வந்து காலிங்பெல் கொடுப்பது?'
 கட்டிலின் தலைமாட்டு திட்டின் மேல் வைத்திருந்த கண்ணாடியை எடுத்து நைட் கவுனில் தேய்த்து - கண்களுக்கு கொடுத்தபடியே சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார்.
 நேரம் 11.05.
 மறுபடியும் யோசனை வந்தது.
 'இந்நேரத்துக்கு யார்?'
 ஜீரோ வாட்ஸ் விளக்கு வெளிச்சத்தில் நடந்து - ஹாலைக் கடந்து - வாசல் கதவுக்கு வந்தார். கதவில் பொருத்தியிருந்த வ்யூஃபைண்டர் லென்ஸில் கண்ணை வைத்துப் பார்த்தார்.
 காக்கி யூனிஃபார்ம் தெரிந்தது.
 உற்றுப் பார்த்தார்...
 சப்-இன்ஸ்பெக்டர்.
 கதவின் தாழ்ப்பாளை விலக்கினார். கதவை உள்வாங்கி திறந்தார். வெளியே நின்றிருந்த சப்இன்ஸ்பெக்டர் அட்டென்ஷனுக்கு வந்து - நெற்றிக்கு கையைக் கொண்டு போய் 'சுளீர்' என்று சல்யூட் அடித்தார்.
 "யார்..."
 "நான் செம்மேடு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ." ஜெயகோபாலன் நெற்றியைச் சொறிந்தார். "என்ன விஷயம்?"டி.எஸ்.பி. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை கன்வே பண்ணச் சொன்னார். அந்த பேரூர் ரெட்டைக் கொலை சம்பந்தமா..."
 "உள்ளே வாங்க..."
 சப்-இன்ஸ்பெக்டரை உள்ளே வரவிட்டு கதவைச் சாத்தினார். ஹால் சோபாவுக்கு கூட்டிப்போய் - உட்கார வைத்து "சொல்லுங்க" என்றார்.
 எஸ்.ஐ. தொப்பியைக் கழற்றி மடியில் வைத்துக் கொண்டு - மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார். "ஸார்! அந்த ரெட்டை கொலைக் சம்பந்தமா - டிபென்ஸ் தரப்பு லாயர் நாளைக்கு கோர்ட்ல ஒரு முக்கியமான சாட்சியைக் கொண்டு வர இருக்கார். அந்த சாட்சியை கோர்ட் கூண்டு ஏறவிட்டா... போலீஸ் தரப்பு வாதம் படுத்துக்கும்... அதனால்..."
 "அதனால...?"
 "அந்த சாட்சியை முடக்கணும்னு டி.எஸ்.பி. சொல்லிவிட்டார்."
 ஜெயகோபாலன் புன்னகைத்தார். "நான் சாயந்திரமே டி.எஸ்.பி. கிட்டே இதைப்பத்திப் பேசிட்டேன். அந்த சாட்சி நாளைக்கு காலையில் கோர்ட்டுக்கு வரமாட்டான். வேண்டிய ஏற்பாடுகளைப் பண்ணியாச்சு..."
 "என்ன ஏற்பாடு ஸார்...?"
 "உங்ககிட்ட டி.எஸ்.பி. ஏதும் சொல்லலையா...?"
 "இல்ல ஸார்... உங்களைப் போய் பார்க்கச் சொன்னார். நீங்க என்ன சொல்றீங்களோ அதைச் செய்யச் சொன்னார். இந்த ஃபைலையும் உங்ககிட்ட குடுக்கச் சொன்னார்."
 எஸ்.ஐ. ஃபைலை நீட்ட - ஜெயகோபாலன் வாங்கிப் பிரித்தார். ஃபைலில் இரண்டே இரண்டு - தாள்கள் மட்டுமே இருந்தன.
 தாளைத் தள்ளினார்.
 சிவப்பு மையில் அந்த எழுத்துக்கள் - இரண்டு வரிகளில் தெரிந்தனபிரியத்துக்குரிய பிராசிகூட்டர்!
 உங்களுடைய பிறந்த தேதி எனக்குத் தெரியாது. ஆனால் இறக்கப் போகிற தேதி எனக்குத் தெரியும். இன்று தான் உன் இறந்த தேதி...'
 ப்ராசிக்கூட்டர் அதிர்ந்து நிமிர்ந்தார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 18, 2023
ISBN9798223717805
புல்லட் சேம்பர்

Read more from Rajeshkumar

Related to புல்லட் சேம்பர்

Related ebooks

Related categories

Reviews for புல்லட் சேம்பர்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    புல்லட் சேம்பர் - Rajeshkumar

    1

    மூன்றாவது கண் - டிடெக்டிவ் ஏஜென்ஸி. ராத்திரி பத்துமணி. ஒரு கேஸ் ஹிஸ்டரியைப் பார்த்து டைப் பண்ணிக் கொண்டிருந்த கவிதா - தன் சின்ன வாயை அதிகபட்சமாய் திறந்து ‘ஆ... ஆவ்’ என்று கொட்டாவி விட்டு - கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி நெட்டி முறித்தாள்.

    ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த சுரேன் நிமிர்ந்து புன்னகைத்தான். என்ன தூக்கமா...?

    ஆமா... பாஸ்...

    உதைப்பேன்... எட்டு மணியிலிருந்து மூணு கப் டீ விழுங்கியிருக்கே.

    முடியல்ல பாஸ்...

    ஒரு ஜோக் சொல்றேன் கேக்கறியா...? உடம்புக்கு புத்துணர்ச்சி வரும்...

    சொல்லுங்க பார்க்கலாம்.

    சுரேன் சொல்ல ஆரம்பித்தான். நள்ளிரவு நேரம். டெலிபோன் அடித்தது. ஒரு பெண்ணின் குரல்.

    டாக்டர்! உடனே வாருங்கள். என் குழந்தை காண்டத்தை விழுங்கி விட்டான்.

    டாக்டர் பதட்டமாகி ட்ரஸ் மாற்றிக் கொண்டு புறப்படத் தயாரானார். மீண்டும் டெலிபோன் மணி அடித்தது. அதே பெண் பேசினாள்.

    ஸாரி டாக்டர்! நீங்கள் வரவேண்டாம். என் கணவர் வேறொரு காண்டத்தை தேடிக் கண்டுபிடித்து விட்டார்.

    சுரேன் ஜோக்கை சொல்லி முடித்ததும் கவிதா தன் காதுகளைப் பொத்திக் கொண்டு ச்சீய்! என்றாள்.

    ஜோக் எப்படி...?

    சாக்கடைக்குள்ளே கையை விட்ட மாதிரி இருக்கு...! சகிக்கலை பாஸ்! உங்களுக்கு எங்கிருந்துதான் இவ்வளவு மட்டமான ஜோக்ஸ் - கிடைக்குது...?

    மட்டமான இங்கிலீஷ் புஸ்தகத்திலிருந்து தான். இன்னொரு ஜோக் சொல்லட்டுமா...?

    அம்மாடி! வேண்டாம்... நான் கிளம்பறேன் கவிதா எழுந்து கொண்டாள்.

    ஏய்... என்ன கிளம்பிட்டே? டைப் அடிக்கிறது யாராம்? உன் பாட்டியா...?

    உம்... பாட்டிதான்... வீட்டுக்குப் போய் அனுப்பிச்சு வைக்கிறேன். என் பாட்டி அந்தக் காலத்துல கால்டுவெல் துறை ஆபீஸில் டைப்பிஸ்ட்டா வேலை பார்த்தவங்கதான்... - சுவரில் மாட்டியிருந்த டம்பப் பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு - மேஜையின் மேலிருந்த கைனடிக் ஹோண்டா சாவியைப் பொறுக்கிக் கொண்டாள்.

    குட்நைட்! நாளைக்குக் காலையில் பார்க்கலாம் பாஸ் கவிதா குதிகால் செருப்பை மாட்டிக்கொண்டு ‘டாக்டாக்’ என்று கிளம்பிவிட்டாள்.

    கவிதா... ஒரு நிமிஷம்

    நின்றாள்.

    என்ன பாஸ்...?

    நாளைக்கு காலையில... ஆபீஸுக்கு வர்றதுக்கு முந்தி லாயர் ஜெகந்நாதனை பார்த்துட்டு வந்துடு...

    நான் போகணுமா?

    ஏன்...? போனா என்ன...?

    அந்த ஜெகந்நாதன் ஒரு B.J.P பாஸ்.

    அந்த ஆள் B.J.P. யா இருந்தா உனக்கென்ன...? காங்கிரஸ்ஸா இருந்தா நமக்கென்ன...?

    அய்யோ பாஸ் விவரம் தெரியாம பேசாதீங்க...! B.J.Pங்கிறது கட்சியில்லை...

    பின்னே...?

    பயங்கர ஜொள்ளு பார்ட்டின்னு அர்த்தம்.

    பயங்கர ஜொள்ளு பார்ட்டியா...?

    ஆமா... காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மத்தியில் இந்த வார்த்தைதான் இப்ப பிரபலம்... லாயர் ஜெகந்நாதனை நீங்களே பார்த்துட்டு வந்துடுங்க பாஸ்... கவிதா கையசைத்துவிட்டு - மாடிப்படிகளில் இறங்கினாள். அடுத்த சில நிமிடங்களுக்குள், அவளுடைய கைனடிக் ஹோண்டா ஸ்கூட்டர் சீறி - அடக்கமாய்ப் புகை கக்கி ‘ர்ர்ர்ர்ர்’ என்று போனது.

    சுரேன் ஜன்னலினின்றும் திரும்பி - படித்துக் கொண்டிருந்த புத்தகத்திற்கு வந்தான். பத்தரை மணி வரைக்கும் படித்துவிட்டு கிளம்பலாம் என்ற யோசிப்போடு உட்கார்ந்தவனை - டெலிபோன் அலறி உசுப்பியது. ரிஸீவரை எடுத்தான்.

    ஹலோ...

    ஒரு பெண் குரல் கேட்டது.

    தேர்ட்ஐ டிடெக்டிவ் ஏஜென்ஸி...?

    எஸ்...

    மிஸ்டர் சுரேன்...?

    நீங்க சுரேன் கிட்டத்தான் பேசிட்டிருக்கீங்க...

    மிஸ்டர் சுரேன். நான் ஒரு டாக்டர். பேரு ஹேமலதா. கௌலி ப்ரெளன் ரோட்டில் இருக்கிற ‘ஹேமா நர்சிங் ஹோம்’ என்னோடது தான்.

    சரி...

    உங்ககிட்ட ஒரு உதவி கேட்கத்தான் போன் பண்ணினேன்.

    சொல்லுங்க...

    நான் ஒரு ப்ளாக் மெயிலர்கிட்ட மாட்டியிருக்கேன்! மாதா மாதம் அவன் எனக்குப் போன் பண்ணியோ... நேர்ல வந்தோ... ஒரு பெரிய தொகையை வாங்கிட்டுப் போயிடறான்... அவன்கிட்டயிருந்து தப்பிக்கிறதுக்கு நீங்க தான் உதவணும்.

    ப்ளாக் மெயில் பண்ற ஆசாமி யார்?

    "அவனைப்பத்தி எனக்கு எதுவும் தெரியாது. அதாவது அவன் எதையுமே என்கிட்ட சொல்லலை. மாசா மாசம் வீட்டுக்கோ க்ளீனிக்குக்கோ வருவான். பணத்தை வாங்கிட்டுப் போயிடுவான்...

    அவன் எதுக்காக... உங்களை ப்ளாக்மெயில் பண்றான்?

    ஸாரி... அது என்னோட பர்ஸனல் மேட்டர். அதை பகிரங்கப்படுத்த நான் விரும்பலை.

    ஓ... கே... உங்களுக்கு நான் என்ன உதவி பண்ணணும்?

    அந்த பிளாக்மெயிலர்கிட்டயிருந்து என்னைக் காப்பாத்தணும்.

    சுரேன் புன்னகைத்தான்.

    "திடீர்னு இந்த ராத்திரி நேரத்துல போன் பண்ணி ப்ளாக்மெயிலர்கிட்டயிருந்து காப்பாத்துங்கன்னு சொன்னா எப்படி டாக்டர்...? அவன் உங்ககிட்ட எந்த நேரத்துக்கு வருவானோ... அப்ப போன் பண்ணுங்க. நான் வந்து

    Enjoying the preview?
    Page 1 of 1