Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyir Meethu Thaagam
Uyir Meethu Thaagam
Uyir Meethu Thaagam
Ebook161 pages1 hour

Uyir Meethu Thaagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Uyir Meethu Thaagam

Read more from Rajeshkumar

Related to Uyir Meethu Thaagam

Related ebooks

Related categories

Reviews for Uyir Meethu Thaagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyir Meethu Thaagam - Rajeshkumar

    12

    உயிர் மீது தாகம் - 1

    ஒரு டிசம்பரின் சனிக்கிழமை. ராத்திரி நேரம். மணி 10.04. இதைச் சொல்கிற நேரம் பக்கத்துக் கட்டத்தில் முப்பது விநாடி தாண்டியிருந்தது. 30, 31, 32...

    சென்னை நிலமங்கை நகரின் கோடியில் தெரிந்த பங்களாவில் - மாடியில் பவுடர் போட்ட மாதிரி - கண்ணாடி ஜன்னல்கள் வழியே ப்ளோ ரஸண்ட் வெளிச்சம் அடிக்க - சைக்கியாட்ரிஸ்ட் தியாகேஷ் மேஜையில் குனிந்து டயரியில் எதையோ எழுதிக்கொண்டிருந்தார். வேகமான ஆங்கில வார்த்தைகள் பக்கங்களைக் கறுப்பாக்கிக் கொண்டிருந்தன.

    தியாகேஷ் தன்னுடைய நாற்பத்தேழு வயதை போன மார்ச் மாதத்தில் முடித்திருந்தார். குபீரென்ற உயரம். நெற்றியின் இரண்டு பக்கங்களும் பாலக்காட்டுக் கணவாய் மாதிரி வழுக்கை உள் வாங்கியிருந்தது. நீள சைஸ் மண்டைக்கு அந்தப் பெரிதான இரண்டு காதுகளும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகள் மாதிரித் தெரிந்தன. பலஹீனமான புருவ முடிகளுக்குக் கீழே முயல் கண்கள். அமுங்கின மூக்குக்கு அடியில் - ஒழுங்காய்ப் பராமரிக்கப்பட்ட மீசை. சதைப் பிடிப்பான உதடுகளுக்கு மத்தியில் - உறுதியான பல்வரிசை. கால் கிலோ சதையை ஒட்டவைத்த மாதிரி ஆரோக்கியமான மோவாய்.

    தியாகேஷ் வேகமாய் டயரியில் எதையோ எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் கீழே ஹாலில் இருந்த டெலிபோன் கதறியது. அந்தக் கதறலைப் பொருட்படுத்தாமல் அவர் எழுதிக் கொண்டிருந்தார்.

    சில விநாடிகளில் -

    மேஜையின் மேல் இருந்த அந்த சாம்பல்நிற இண்ட்டர்காம் ஒரு அழகான சினிமா நடிகையைப் போல் இருமியது.

    தியாகேஷ் ரிஸீவரை எடுத்து வலது காதுக்குக் கொடுத்தார்.

    ஹலோ...

    ஹாலில் கீழேயிருந்து அவருடைய மனைவி சப்தமி பேசினாள்.

    யாரோ சூர்ய கலாதரனாம்... உங்ககூட பேசணுமாம்...

    பேசச் சொல்லு...

    ஐந்தே விநாடிகள்! ஓர் ஆண்குரல் ரிஸீவரில் வழிந்தது.

    ஹலோ... டாக்டர் தியாகேஷ்?

    எஸ்... ஹோல்டிங்!

    டாக்டர்... என்னோட பேர் சூர்யகலாதரன்... அண்ணாநகர் ஈஸ்ட்லயிருந்து பேசறேன்.

    என்ன விஷயம் சொல்லுங்க...

    டாக்டர்... நான் இப்போ உங்களைப் பார்க்க வரலாமா...?

    இந்நேரத்துக்கா...?

    தியாகேஷ் தன் கையிலிருந்த வாட்ச்சைப் பார்த்தார். நேரம் 10.07.

    ஆமா... டாக்டர்... உங்ககிட்டே நான் ஒரு கன்சல்டேஷனுக்காக வரணும்... ஒரு மணி நேரம் எனக்கு ஒதுக்கித் தரமுடியுமா...?

    நாளைக்குக் காலையில என்னோட க்ளினிக்குக்கு வாங்களேன். நான் ராத்திரி நேரங்களில் கன்சல்டேஷனை அட்மிட் பண்றதில்லை.

    ப்ளீஸ் டாக்டர்... நீங்க கேக்கிற பீஸைத் தர்றேன்.

    என்னோட பீஸ் எவ்வளவுன்னு உங்களுக்குத் தெரியுமா?

    தெரியும் டாக்டர். ஒரு மணி நேரத்துக்கு ஐநூறு ரூபாய். நான் ஆயிரம் ரூபாய் தருகிறேன்... வரட்டுமா டாக்டர்?

    உங்களுக்கு என்ன பிராப்ளம்...?

    நேரில்தான் சொல்ல வேண்டும்...

    நான் என் வீட்டில் கன்சல்டேஷனை வைத்துக் கொள்வதில்லை.

    உங்களுடைய க்ளினிக்கிற்கே வந்து விடட்டுமா...?

    வாங்களேன்.

    தியாகேஷ் ரிஸீவரை வைத்துவிட்டு நிமிர்ந்தபோது - பால் நிரம்பிய டம்ளரோடு - சப்தமி மாடிப் படிகளின் உச்சியில் தெரிந்தாள்.

    சப்தமிக்கு முப்பது வயதிருக்கலாம். அழகான முகம் என்று துணிந்து வர்ணிக்கலாம். பூசின மாதிரியான உடம்புக்கட்டுக்கு கார்டன் சில்க் க்ரெஸண்ட் சேலையைக் கொடுத்திருந்தாள். மோவாய்க்கும் கீழுதட்டுக்கும் இடையில் எள்ளைப் பதித்தமாதிரி கறுப்பாய் ஒரு மச்சம் - அவளுடைய பர்சனால்டியை உச்சத்திற்குக் கொண்டுபோயிற்று.

    யார்ங்க அந்த சூர்ய கலாதரன்...?

    கேட்டுக்கொண்டே பால் டம்ளரை நீட்டினாள் சப்தமி. அவரருகே காலியாக இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.

    எனக்கும் தெரியலை. ஏதோ ஒரு கேஸ்... கன்சல்டேஷனுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் ரூபா தர்றானாம்...

    க்ளினிக்குக்கு போகப்போறீங்களா?

    ஆமா...

    காசுன்னா ஏன் இப்படிப் பறக்கறீங்க...?

    ஏன் பறக்கிறேனா...? காசில்லாத இந்த உலகத்தை ஒரு நிமிஷம் நினைச்சுப் பாரு... ஆட்சியைப் பிடிக்கிறதுக்காகக் கட்சிகள் மத்தியில் சண்டையே வராது... அப்புறம் பெண்டாட்டிக்கு...

    சரி... சரி... மொதல்ல பாலைக் குடிங்க. ஏற்கெனவே ஆறிப்போன பால்லதான் சர்க்கரை போட்டுகிட்டு வந்தேன்...

    தியாகேஷ் பால் டம்ளரை எடுத்து ஒரே மூச்சில் குடித்துவிட்டு எழுந்தார். சப்தமி...! ஒரு எக்ஸ்பரிமெண்ட் ரிப்போர்ட்டை எடுக்கிறதுக்காக நானே க்ளினிக்குக்குப் போகணும்ன்னு நினைச்சுட்டிருந்தேன். இப்போ கேஸும் வருது... ஆயிரம் ரூபாயை விடுவானேன்...?

    பேசிக்கொண்டே பக்கத்து அறைக்குள் நுழைந்து - நீளமான அங்கி சைஸில் கோட்டு ஒன்றை மாட்டிக்கொண்டு வெளியே வந்தார். சுவர் ஆணியில் மாட்டியிருந்த உல்லன் தொப்பியை எடுத்துப் பொருத்திக் கொண்டார். சப்தமியிடம் திரும்பினார்.

    க்ளினிக் சாவியை பீரோவுக்குள்ளே வெச்சிருந்தேன் எடு...

    சப்தமி எழுந்து போய் - பீரோவைத் திறந்து - சாவியை எடுத்துக் கொடுத்தாள். லேட் பண்ணாமே சீக்கிரமா வந்துடுங்க... இவ்வளவு பெரிய வீட்ல நான் ஒருத்தி மட்டும் தனியா நடுங்கிகிட்டே உட்கார்ந்திருக்கணும்...

    எதுக்காக நடுங்கணும்... இந்த வீட்ல என்ன பயம்...? சிரித்துக் கொண்டே மாடிப்படிகளில் இறங்கி ஹாலுக்கு வந்தார் தியாகேஷ். டி.வி.யின் தலைமேலிருந்த சான்ட்ரோ கார் சாவியை எடுத்துக் கொண்டார்.

    பத்திரம் சப்தமி...

    ம்... ம்...

    காலிங்பெல் சத்தம் கேட்டா யார்ன்னு கேளு... தெரிஞ்சவங்களாயிருந்தா கதவைத் திற... இல்லேன்னா கம்ன்னு இருந்துடு...

    ம்... ம்...

    போர்டிகோ இருட்டில் சான்ட்ரோ கார் காத்திருந்தது. முன்புறக் கதவைத் திறந்து கொண்டு ட்ரைவிங் சீட்டுக்குப் போனார். காரின் தொண்டைக் குழிக்கு சாவியைக் கொடுத்து உசுப்பிக்கொண்டே, வரட்டுமா... கதவை உள்பக்கமா தாழ் போட்டுக்க... நான் ஒரு மணி நேரத்துல வந்துடறேன்...

    சப்தமி தலையாட்ட - கார் காம்பௌண்ட் கேட்டை நோக்கிப் போயிற்று. கேட்டைக் கடந்து - ரோட்டுக்கு வந்து வேகம் பிடித்தது.

    நிலமங்கை நகரின் பெரும்பாலான வீட்டு ஜன்னல்களில் இருட்டுத் தெரிய - சில ஜன்னல்கள் மட்டும் வெளிச்சமாய்த் தெரிந்தது.

    காரை மண் பாதைகளில் விரட்டி - மெயின் ரோட்டுக்கு வந்தபோது டிஜிட்டல் வாட்ச் 10.15 என்றது.

    தியாகேஷ் டாஷ் போர்டுக்குப் பக்கத்திலிருந்த டேப் ரிக்கார்டர் பட்டனைத் தட்ட - சோம்பலாய் ஒரு பாப் ம்யூஸிக் கார் பூராவும் அலைந்தது.

    ‘டூ... யூ... லைக்... மீ...?’

    Enjoying the preview?
    Page 1 of 1