Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hongkong Athirchi
Hongkong Athirchi
Hongkong Athirchi
Ebook152 pages1 hour

Hongkong Athirchi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Hongkong Athirchi

Read more from Rajeshkumar

Related to Hongkong Athirchi

Related ebooks

Related categories

Reviews for Hongkong Athirchi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hongkong Athirchi - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    இந்த நாவலைப் படிக்க ஆரம்பித்திருக்கும் அத்தனை வாசகர் வாசகியர்க்கும் ஒரு அன்பான வேண்டுகோள். புத்தகத்தை ஒரு நிமிஷ நேரத்திற்கு மூடி வைத்துவிட்டு - மௌனமாய் எழுந்து நின்று அஞ்சலி செலுத்துங்கள். அஞ்சலி யாருக்காக...?

    ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு - இந்த உலகில் பிறக்கப் போகும் குழந்தைகளுக்காக! அவர்களுக்கு ஏன் இப்பொழுதே அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்கிறீர்கள்...? | உங்களுடைய வாஸ்தவமான கேள்விக்கு ஒரு அதிர்ச்சியான பதில். ஐம்பது வருடம் கழித்து இந்த உலகில் பிறக்கப் போகும் அத்தனை குழந்தைகளுக்கும் ஆயுள் 24 மணி நேரம்தான். அந்தக் குழந்தை பிறந்ததிலிருந்தே அதற்கு மரண அவஸ்தைதான். தாயிடம் பால் குடிக்காது. காற்றை மட்டும் திணறி திணறி சுவாகிக்கும். 24 மணி நேரத்திற்கு பிறகு தோல் உரிந்து, ரத்தம் உடம்பின் சகல திசைகளிலும் கோடு கோடாய் சிந்தி சிசு இறந்து விடும். காரணம்...?

    ஒரு நிமிஷ அஞ்சலியை முடித்துக் கொண்டு - படிக்க ஆரம்பியுங்கள்.

    விஞ்ஞான உண்மைகளை அடிப்படையாக வைத்து - எழுதப்பட்ட இந்த நாவல், நாளைய உலகில் நடக்கப் போகிற அதிர்ச்சிகளை உங்களுக்குச் சொல்லும்.

    பயாலஜிகல் ரிசர்ச் ஸ்டேஷன் டைரக்டர் ஹர்ஷவர்த்தனன், ஆளுயரக் கண்ணாடி முன் நின்று - அணிந்திருந்த இளநீல நிற சூட்டை சரிபார்த்துக் கொண்டு - வழுக்கை மண்டையில் உயிரோடு இருந்த சில உபரி வெள்ளி ரோமங்களை சீப்பால் படிய வைத்தார். கைகளின் அக்குள் பகுதிகளை உயர்த்தி - 'க்ளோரி ஃப்ளவர் வெளிநாட்டு சென்ட்டை மாறி மாறி பீய்ச்சிக் கொண்டார். சற்று நேரத்திற்கு முன் மழித்திருந்த மோவாயை ஆட்காட்டி விரலால் நெருடி - அதன் மென்மையை உணர்ந்து கொண்டிருந்தபோது -

    த்த்ட்... த்த்ட்...

    அறைக்கதவு மெலிதாய் தட்டப்பட்டது.

    எஸ்... கம்மின்...

    குட் மார்னிங் டாட்...

    ஹர்ஷவர்த்தனனின் ஒரே புத்திரன் ஜெயந்த் உள்ளே நுழைந்தான். கையில் சில பாக்ஸ் ஃபைல்கள் ஆறடி உயர உடம்புக்கு க்ரீம் நிற சூட்டைக் கொடுத்திருந்தான் அவன் அணிந்திருந்த சூட்டுக்கு பொருத்தமில்லாமல் நெற்றியில் சின்னதாய் விபூதிக் கீற்று.

    குட்மார்னிங் மை சன்

    ரெடியா டாட்...?

    நான் ரெடியாகி பத்து நிமிஷமாச்சு... நீதான் லேட்...

    டாட்... இன்னிக்கு வெள்ளிக்கிழமை. அதுவுமில்லாமே அம்மா இறந்த தினம். அதான் சாமி படங்களுக்கெல்லாம் மாலையைப் போட்டுட்டு...

    ஹர்ஷவர்த்தனன் தலையில் அடித்துக் கொண்டார்.

    ஜெயந்த்! செத்துப் போனவங்களை மனசளவில் நினைச்சுக்கலாம் தப்பில்லை. அதுக்காக மாலை போடறது, பிரார்த்தனை பண்றது எல்லாமே வேஸ்ட். பயாலஜிகல் தியரிபடி - எல்லா உயிருள்ள பொருள்களும் ஒரு நாளைக்கு சிதைஞ்சுதான் ஆகணும். 'உயிர்'ங்கிறது என்ன...? ஒரு உடம்புக்குள்ளே இருக்கிற ஆர்கானிக் காம்பௌண்ட்ஸ்...

    டாட்... கிளம்பலாமா...? உங்க பிரசங்கத்தை சாவகாசமா நாளைக்கு ஃப்ளைட்ல ஹாங்காங் போகும்போது கேட்டுக்கிறேன்... இப்ப ப்ரஸ் மீட்க்கு கிளம்பலாம்... ரிப்போர்ட்டர்ஸ் ரொம்ப நேரமா காத்திட்டிருக்காங்க... ப்ளீஸ்... கம்... -

    இருவரும் வெளியே வந்தார்கள்.

    ரிப்போர்ட்டர்ஸ் மொத்தம் எத்தனை பேரு...?

    அம்பது பேரு...

    எல்லா பத்திரிகைக்குமே லெட்டர் அனுப்பினியா...?

    ம்... நீங்க லிஸ்ட் போட்டுக் குடுத்த எல்லா பத்திரிகைக்கும் லெட்டர் போட்டு போன்லேயும் சொல்லிட்டேன். மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்தைச் சேர்ந்த மிஸ்டர் சர்மாவும் ப்ரஸ் வீட்டில் கலந்துக்கிறதாய் தகவல் குடுத்திருக்கார்...

    அவன் வரமாட்டான். எந்த இந்தி நடிகையாவது தன்னோட பிறந்த நாளைக் கொண்டாடட்டும். 'பொக்கே'யோடு போய் பல்லிளிப்பான். இவன் மாதிரியான ஆட்கள் மினிஸ்ட்ரியில் இருக்கிறதுனாலத்தான்... இந்திய தேசம் கையில கப்பரையை வெச்சுகிட்டு... டாலர்க்கும் யென்னுக்கும். அந்நிய தேசங்களை எதிர் பார்த்துட்டிருக்கு... எனக்கு மட்டும் இந்த தேசத்தோட அதிகாரம் ஒரே ஒரு நாள் கிடைச்சாக் கூட போதும்...

    என்ன பண்ணுவீங்களாம்...?

    இந்தியா பூராவும் இருக்கிற உபயோகமில்லாத மந்திரிகள், ஆட்சியை அடிக்கடி மாத்தற - கலைக்கிற அரசியல் தலைவர்கள் இவர்களையெல்லாம் லிஸ்ட் பண்ணி...

    பண்ணி... வரிசையாக நிக்க வெச்சு சுடுவீங்களாக்கும்...?

    சுடறதா...? தோட்டாக்களை எதுக்காக வேஸ்ட் பண்ணனும்...? எல்லாத்துக்கும் ஒரு முழு நைலான் கயிறுதான்... ப்ளடி பாஸ்டர்ட்ஸ்! ஒருத்தனுக்காவது தேசப்பற்று கிடையாது. தேசத்துல எவ்வளவு பெரிய ஊழல் நடந்தாலும் சரி... எந்த மந்திரியும் கண்டுக்க மாட்டாங்க... நடவடிக்கை எடுப்போம்ன்னு ஒரு வார்த்தையை சொல்லிட்டு... குற்றவாளிகளோட வீட்டுக்கே போய் டின்னர் சாப்பிட வேண்டியது. தேசம் எப்படி உருப்படும்...?

    அய்யோ டாட்...! ப்ரஸ் மீட்டிற்குப் போறது அரசியல் பேச இல்லை... உங்க அறிவியல் கண்டுபிடிப்பை பத்தி பேசத்தான்... நம்ம தேசத்தைப் பத்தி நினைக்காமே வாங்க... நினைச்சா உங்களுக்கு 'மூடு' அவுட்டாயிடும். அப்புறம் ரிப்போர்ட்டர்ஸ் கேக்கிற கேள்விகளுக்கு உங்களாலே பதில் சொல்ல முடியாது.

    இருவரும் பேசிக் கொண்டே ரிசர்ச் கட்டிடத்தின் மையப் பகுதிக்கு வந்திருந்தபோது லேப் அஸிஸ்டெண்ட் ஷீலா பக்கத்து அறையினின்றும் வெளிப்பட்டாள்.

    ஸார்...

    நின்றார்கள்.

    உங்களுக்கு போன்...

    ஜெயந்த் கேட்டான்.

    போன்ல யாரு?

    கேட்டேன் ஸார்... சொல்லலை... உங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் கிட்டே பேசணுமாம்...

    டாட்...! நீங்க ரிப்போர்ட்டர்ஸ் இருக்கிற கம்யூனிடி ஹாலுக்கு போயிட்டிருங்க. நான் போன்ல யார்ன்னு கேட்டு பேசிட்டு வந்துடறேன்.

    போன்ல வேறு யாருமில்லை. அந்த சர்மாதான். என் பொண்டாட்டிக்கு வயித்து வலி. அதனால... ப்ரஸ் மீட்டிற்கு என்னால் வர முடியாதுன்னு சொல்லப் போறான். யூஸ்லெஸ் பெக்கர்...

    மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா டாட்...!

    சரி... சரி... நீ பேசிட்டு வா... நான் கம்யூனிடி ஹாலுக்கு போயிட்டிருக்கேன்...

    அவர் கோட் பாக்கெட்டுகளுக்குள் கைகளை

    Enjoying the preview?
    Page 1 of 1