Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

March - 6, Raththa Aaru
March - 6, Raththa Aaru
March - 6, Raththa Aaru
Ebook180 pages1 hour

March - 6, Raththa Aaru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
March - 6, Raththa Aaru

Read more from Rajeshkumar

Related to March - 6, Raththa Aaru

Related ebooks

Related categories

Reviews for March - 6, Raththa Aaru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    March - 6, Raththa Aaru - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    விஷ்ணு சொன்ன குட்டிக்கதைகள் - 1

    ஒரு பார்க்கில் காதல் ஜோடி ஒன்று உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது. கொஞ்சம் தள்ளி ஒரு ஆண் நாயும், ஒரு பெண் நாயும் ஒன்றுக்கொன்று முத்தம் இட்டபடி விளையாடிக் கொண்டிருந்தது. அதைப்பார்த்துக் கொண்டிருந்த காதலன் காதலியைப் பார்த்து கண்சிமிட்டியபடி சொன்னான்.

    அந்த ஆண் நாய் செய்வது போல் நானும் செய்யட்டுமா?

    தாராளமாக செய்..! ஆனால் பத்திரம்! அந்தப் பெண் நாய் கடித்து வைக்கப் போகிறது...!

    1

    விஷ்ணு மைலாப்பூர் லஸ் கார்னர் அருகே பைக்கை நிறுத்திவிட்டு, இந்த கத்திரி வெய்யிலுக்கு அசின் சிபாரிசு செய்யும் மிராண்டா சாப்பிடலாமா? இல்லை ஐஸ்வர்யா ராயின் சாய்ஸான கோக் சாப்பிடலாமா? என்று யோசித்து பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருந்த போது செல்போன் கூப்பிட்டது.

    ‘டாடி மம்மி வீட்டில் இல்ல... தடை போட யாருமில்ல’ என்ற பாட்டின் ரிங்டோனை பாதியிலேயே வெட்டினான் விஷ்ணு. செல்போனை காதுக்கு ஒற்றினான்.

    எஸ்...! என்றான் அமர்த்தலாய்.

    என்னடா எஸ்...? இந்த பந்தாவுக்கு ஒண்ணும் குறைச்சல் கிடையாது. உன்னோட பாஸ் விவேக் ஜெனிவா புறப்பட்டுப் போனதிலிருந்து நீ கண்ணுக்கே தட்டுப்படலை. க்ரைம் பிராஞ்ச் பக்கம் வர்றியா என்ன?

    மறுமுனையில் விஷ்ணுவின் கொலீக்கான நெப்போலியன் கோபத்தால் படபடத்தான். விஷ்ணு சிரித்தான்.

    டேய்... நெப்ஸ்... நீயா...! ரெண்டு நாளா எனக்கு உன்னோட நினைப்புதான்... உனக்கு போன் பண்ணலாம்ன்னு நினைக்கிறது... அப்புறம் எப்படியோ மறந்து போயிடறது... நல்லவேளை நீயே எனக்கு போன் பண்ணிட்டே...!

    என்னோட ஞாபகம் கூட உனக்கு வருதா...? இந்த பீலா விடற வேலையை எல்லாம் வேற யார்கிட்டேயாவது வெச்சுக்கோ!

    அட நிஜமாத்தாண்டா சொல்றேன்!

    சரி... திடீர்ன்னு என்மேல உனக்கு அப்படியென்ன ஞாபகம்..?

    நீ பேப்பர்ல நியூஸ் பார்க்கலையா?

    நியூஸா... என்ன நியூஸ்...?

    நீ பார்க்கலை... அதான் கவலை இல்லாமே பேசிட்டு இருக்கே...

    விஷ்ணு...! சும்மா சஸ்பென்ஸை ‘பில்ட் அப்’ பண்ணிட்டுப் போகாதே... நியூஸ் என்னான்னு சொல்லு...

    எப்படி சொல்றதுன்னு தெரியலை. ஏன்னா இது உன்னோட வயிற்றுப் பிரச்னை...

    வயிற்றுப் பிரச்னையா... நீ என்னடா சொல்றே? நெப்போலியன் கேட்க, விஷ்ணு சொன்னான்.

    "பருத்திக் கொட்டை புண்ணாக்கு விலை கிர்ர்ன்னு ஏறிடுச்சாம். இனிமே நீ என்னடா பண்ணப்போறே?

    உன்னை வந்து உதைக்கப் போறேன். சொல்லிவிட்டு சிரித்த நெப்போலியன் கேட்டான்.

    நீ இப்ப... எங்கடா இருக்கே...?

    மயிலாப்பூர் லஸ் கார்னர்ல...

    சரி! உடனே புறப்பட்டு ஹோட்டல் கோல்டன் லீஃப் இண்ட்டர் நேஷ்னலுக்கு வா... ஒரு காபி சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்.

    விஷ்ணு அயர்ந்தான். நெப்ஸ்! அது செவன் ஸ்டார் ஹோட்டல். அங்கே எல்லாம் கால் வைக்க உனக்கும் அருகதை கிடையாது. எனக்கும் கிடையாது. அந்த ஹோட்டல் காம்பௌண்ட் சுவர் மேல நாம கையை தப்பித் தவறி வெச்சுட்டாக்கூட பில் போட்டு பணத்தைக் கறந்துடுவான். தெரியுமில்ல..?

    அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாம நீ புறப்பட்டு வாடா...! இன்னிக்கு உனக்கும் எனக்கும் இந்த கோல்டன் லீஃப் செவன் ஸ்டார் ஹோட்டல்லதான் ட்யூட்டி. ட்யூட்டி என்ன தெரியுமா? உனக்கு ரொம்பவும் பிடிச்ச ட்யூட்டி.

    எனக்குப் பிடிச்ச ட்யூட்டியா?

    ஆமா. ப்யூட்டிகளைப் பாதுகாக்கிற ட்யூட்டி

    ப்யூட்டிகளைப் பாதுகாக்கிற ட்யூட்டியா...? என்னடா குழப்பறே..?

    நான் ஒண்ணும் குழப்பலை. தெளிவாத்தான் சொல்லிட்டிருக்கேன். நாளை கழிச்சு மறுநாள், நேரு உள் விளையாட்டு அரங்கில் ‘மிஸ் இந்தியா ஃபேஷன் ஷோ’ நடக்கிற விஷயமும், அந்த ஃபேஷன் ஷோவுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து கல்லூரி மாணவிகள் வந்து கலந்துக்கற விஷயமும் உனக்குத் தெரியுமா தெரியாதா?

    தெரியாதே...!

    நீ க்ரைம் ப்ராஞ்ச்சுல உட்கார்ந்துட்டு என்ன வேலை பார்க்கிறேன்னு எனக்குத் தெரியலை... பேப்பரெல்லாம் நீ பார்க்கிறதே இல்லையா?

    காலையில் கூட பேப்பரெல்லாம் பார்த்தேனே?

    ஹிண்டு பார்த்தியா?

    பார்க்கலை...

    "அதான் உனக்குத் தெரியலை... ஹிண்டுவுல ரெண்டாம் பக்கம் ப்ரீஃபா போட்டிருக்கான். தலைப்பு என்ன தெரியுமா? பட்டர்ஃப்ளைஸ் ஆர் லேண்டிங்...!"

    அடடா... எப்பேர்ப்பட்ட நியூஸை ‘மிஸ்’ பண்ணியிருக்கேன்.

    விஷ்ணு! அந்த ஃபேஷன் ஷோ நடந்து முடிகிற வரைக்கும் நீயும் நானும்தான் அவங்களைப் பாதுகாக்கிற பணியில் ஈடுபடப்போறோம்.

    ஏன்... அவங்களுக்கு ஏதாவது பிரச்னையா?

    ஆமா..! தமிழ் கலாச்சார பாதுகாப்புக் குழு என்கிற ஒரு அமைப்பு, அந்த ஃபேஷன் ஷோவை நடத்தறதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு போராட்டம் நடத்தப் போறாங்களாம்.

    என்னது! போராட்டம் நடத்தப் போறாங்களா..? என்ன ஒரு ரசனை இல்லாத ஜென்மங்கள்!

    டேய் விஷ்ணு...! நீ உடனே புறப்பட்டு ஹோட்டலுக்கு வா... மத்ததை ஹோட்டல்ல வெச்சு பேசிக்கலாம். அஸிஸ்டண்ட் கமிஷனர் சூர்யமூர்த்தி உனக்காக வெயிட் பண்ணிட்டிருக்கார்.

    இதோ புறப்பட்டேன்...! பை... த... பை... நெப்ஸ்...

    சொல்லுடா...

    ஃபேஷன் ஷோவுக்கு வந்த பாப்பாக்களையெல்லாம் பார்த்தியா? எப்படி இருக்காங்க..?

    வந்து பாரு...! ஒரே கலர்ஃபுல்தான்... அதிலும் கேரளா, ஆந்திரா சூப்பர்... பார்க்க ரெண்டு கண்ணு போதாது. பத்து கண்ணாவது வேணும்...

    இனி தாங்காது நெப்ஸ்...! இருபதே நிமிஷம். ஹோட்டலுக்கு வந்துடறேன்.

    வா.. ரிசப்ஷன்ல வெயிட் பண்றேன்...! வரும் போது ரெண்டு கர்ச்சீப் எக்ஸ்ட்ராவாய் வாங்கிட்டு வந்துரு..

    எதுக்கு...?

    வழியற ஜொள்ளைத் துடைச்சுக்கத்தான். மறுமுனையில் நெப்போலியன் செல்போனை அணைத்துவிட, விஷ்ணு ஒரு உற்சாகத் துள்ளலோடு ஓடிப்போய் பைக்கில் தாவி ஏறி உட்கார்ந்து கிக்கரை உதைத்தான். பைக் உயிர் பிடித்து ஒரு பிடி புகையைக் கக்கிவிட்டு பறந்தது.

    சரியாய் இருபது நிமிஷங்கள்!

    விஷ்ணுவின் பைக் ஹோட்டல் கோல்டன் லீஃப்பின் பிரம்மாண்டமான முகப்பு கேட்டுக்குள் நுழைந்தது. டைட்டானிக் கப்பலைப் போல் விஸ்தாரமாய் பரவி நின்ற ஹோட்டலின் பின்பக்கத்தில் இருந்த பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திவிட்டு புல்வெளிகளுக்கு நடுவில் நடந்து வரவேற்பறைக்கு முன்பாய் இருந்த ராட்ஸச கண்ணாடிக் கதவுக்கு முன்பாய் வந்து நின்றான். ஒரு மஹாராஜாவைப் போல் யூனிஃபார்ம் தரித்திருந்த ரிசப்ஷன் பேரர் தலையைத் தாழ்த்தி சல்யூட் வைத்து கண்ணாடிக் கதவை மெதுவாய் திறந்துவிட்டான்.

    விஷ்ணு உள்ளே நுழைந்தான்.

    ஒரு வெளிச்சமான கிரிக்கெட் மைதானத்தைப் போல் அந்த வரவேற்பு ஹால் பிரம்மாண்டமான லஸ்தர் விளக்குகளின் உபயத்தால் ஜொலித்தது. கருநீல நிறத்தில் ஃபுல்சூட் அணிந்த ஹோட்டல் சிப்பந்திகள் ஆங்காங்கே பார்வைக்குக் கிடைத்தார்கள். இம்போர்ட்டட் லெதர் சோபாக்களில் வெளிநாட்டு முகங்கள் தெரிய, ஹோம் தியேட்டர் டி.வி. திரைகளில் ‘செரீனா வில்லியம்ஸ்’ டென்னீஸ் விளையாடிக்

    Enjoying the preview?
    Page 1 of 1