Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Inkey Kolaikal Inimaiyaga Seiyapadum
Inkey Kolaikal Inimaiyaga Seiyapadum
Inkey Kolaikal Inimaiyaga Seiyapadum
Ebook192 pages1 hour

Inkey Kolaikal Inimaiyaga Seiyapadum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Inkey Kolaikal Inimaiyaga Seiyapadum

Read more from Rajeshkumar

Related to Inkey Kolaikal Inimaiyaga Seiyapadum

Related ebooks

Related categories

Reviews for Inkey Kolaikal Inimaiyaga Seiyapadum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Inkey Kolaikal Inimaiyaga Seiyapadum - Rajeshkumar

    21

    1

    புவன்தாஸ் உள்ளே திரும்பி கண்ணைக் காட்ட, வெல்வெட் வைத்த நாற்காலிகள் வந்தன.

    ப்ளீஸ்.. பீ ஸீட்டட்...

    அருணும் சுவர்க்காவும் உட்கார்ந்தார்கள்.

    மிஸ்டர் புவன்தாஸ்...! இவர் என்னுடைய ஹஸ்பெண்ட் மிஸ்டர் அருண்...

    அருண் சங்கடத்தோடு சிரிக்க வியர்த்துப் போன அவனுடைய கையைப் பிடித்துக் குலுக்கினார் புவன்தாஸ். நீங்கள் எங்கள் கடைக்கு வந்தது என் பாக்கியம்.

    சுவர்க்கா புவன்தாஸைப் பார்த்து மென்மையாய் புன்னகை செய்தபடி சொன்னாள். என்னுடைய மதர் விரும்பின லேட்டஸ்ட் கிம்பர்லி டைமண்ட் உங்ககிட்ட இருப்பது எங்கள் பாக்கியம்.

    தங்கத்தால் செய்யப்பட்ட கடைவாய்ப் பற்கள் பூராவும் தெரிய, முகம் பூராவும் சிரித்தார் புவன்தாஸ். அவர் ஏதோ சொல்ல வாயெடுத்த அதே நேரம் அவருக்கு அருகிலிருந்த டெலிபோன் ரீங்கரித்தது.

    ஃபர்ஸ்ட்.. யூ அட்டெண்ட் த ஃபோன் சுவர்க்கா சொன்னாள்.

    புவன்தாஸ் ரிஸீவரை எடுத்தார். மறுமுனையில் ஓர் ஆண் குரல் ஆங்கிலத்தில் கரகரத்தது. புவன்தாஸ் ஜுவல்லரி மார்ட்தானே?

    எஸ்!

    அங்கே ஜெய்ப்பூர் சமஸ்தானத்து பிரின்ஸ் மிஸ் சுவர்க்கா இருந்தால் கொஞ்சம் கூப்பிடுறீங்களா? நான் சமஸ்தானத்து செக்ரட்ரி...

    புவன்தாஸ் ரிஸீவரின் வாயை தன் இடது கை விரல்களால் மூடிக்கொண்டு சுவர்க்காவிடம் பவ்யமாய்ச் சொன்னார்.

    மிஸ் சுவர்க்கா?

    எஸ்... மைசெல்ஃப்...

    உங்க செக்ரட்ரி ஃபோன் பண்றார். புவன்தாஸ் நீட்டிய ரிஸீவரை வாங்கிக் கொண்டாள் சுவர்க்கா. சரளமான ஆங்கிலத்தில் அவருக்குக் கேட்கும்படியாகப் பேச ஆரம்பித்தாள். எஸ்.. எஸ்... ஐ...ஹேவ் கம் ஹியர் வித் மை பெஸ்ட் ஹாஃப்.. ஓ...கே... ஓ...கே... ஐ வோண்ட் பாதர் அபௌட் த பிரைஸ்... எனி ஹௌ ஐ வில் டூ இட். கன்வே த மெஸேஜ் டு மை மா... நோ.. நோ.. நீட் நாட் கம்...!

    ரிஸீவரை வைத்தாள்.

    அருகே அமர்ந்திருந்த அருண் பாமரத்தனமாய் நகைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, சுவர்க்கா சொன்னாள்:

    அருண், என்ன விலையானாலும் சரி, டைமண்ட் வாங்கிட்டு வரும்படியா சொல்றாங்களாம் என்னோட மதர்...

    அருண் என்னவோ மாதிரி சிரித்தான்.

    புவன்தாஸ் சொன்னார்: உங்கள மாதிரி ராஜவம்சத்துக் குடும்பங்களுக்காகவே சுரங்கத்தில் அபூர்வமா உருவாகிற வைரம் அது. பார்க்கறீங்களா?

    உம்.

    வாங்க, உள்ளே போயிடலாம்.

    புவன்தாஸ் எழுந்து நடந்தார்.

    அருகே அமர்ந்தபடி பில்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்த புவன்தாஸுக்கு இளையவர் மங்கள்தாஸ் தலையை உயர்த்தினார். க்யா பய்யா? பவ்யமாக எழுந்தார்.

    புவன்தாஸ் நகைக் கடைக்காரர்களுக்குரிய சங்கேத பாஷையில் சொன்னார். பெரிய பார்ட்டி மாட்டியிருக்கிறது. பிசினஸை முடிக்க உள்ளே போகிறேன். கடையைப் பார்த்துக்கொள்.

    ஹாங்... பய்யா! சொல்லிவிட்டு உட்கார்ந்து கொண்டார்.

    புவன்தாஸ் உள்ளே நடக்க, சுவர்க்காவும் அருணும் அவரைப் பின்தொடர்ந்தார்கள். கடைசி அறைக்கு முன்னால் போய் நின்ற புவன்தாஸ், கையிலிருந்த சாவிக் கொத்தால் அறையின் பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்தார்.

    சுவரைத் தடவி ஸ்விட்ச் பட்டன்களைப் படபடவென்று தட்டினார்.

    லஸ்தர் விளக்குகள் குற்றாலமாய் வெளிச்சத்தைக் கொட்ட, வெல்வெட் வைத்துத் தைத்த சோபாக்கள் ரத்தச் சிவப்பு நிறத்தில் அறையின் மையத்தில் சதுரம் கட்டியிருந்தன.

    பைட்டியே!

    சோபாக்களைக் காட்டினார் புவன்தாஸ். அருணும் சுவர்க்காவும் உட்கார்ந்தார்கள். புவன்தாஸ் சுவரோரமாய் இருந்த இரும்பு பீரோவை நோக்கி நடந்தார். சில சாவிகளை வரிசையாய்ப் போட்டு, போராடிப் பின் பீரோவைத் திறந்தார்.

    ஒரு சின்ன கண்ணாடிப் பெட்டியோடு வந்தார். டீபாயின் மேல் பெட்டியை வைத்து மெள்ளத் திறந்தார். வைரங்கள் பனித் துளிகளாய் உருண்டன.

    ஓ! ப்யூட்டிஃபுல்...! சுவர்க்கா தன் அழகிய விழிகளை அகலமாக்கினாள். புவன்தாஸ் பெருமிதத்தோடு கண்ணாடிப் பெட்டியின் ஓரத்தில் இருந்த வெள்ளியால் ஆன ஒரு சிறிய இடுக்கியில் மிக லேசான மஞ்சள் நிறத்தில் தெரிந்த அந்த வைரத்தை எடுத்தார்.

    இதுதான் நீங்கள் குறிப்பிட்ட லேட்டஸ்ட் கிம்பர்லி.

    சுவர்க்காவின் ரோஜா நிற உள்ளங்கையில் அந்த வைரத்தை வைத்தார். ஒரு தேன் துளியாய் ஜொலித்தது அது.

    ரியலி ப்யூடிஃபுல்! பார்த்தீங்களா அருண்! எங்கம்மா விரும்பின வைரம் இதுதான். அம்மா பார்த்தா ரொம்பவும் சந்தோஷப்படுவாங்க.

    சுவர்க்கா... விலை என்னன்னு கேளு.

    பிரைஸ்?

    புவன்தாஸ் வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டே சொன்னார்.

    பன்னிரண்டு லட்சம்!

    மை குட்னஸ்! அருண் வியப்பில் விழுந்தான். சுவர்க்கா வியப்புக் காட்டாமல் உட்கார்ந்திருந்தாள். சில விநாடிகளுக்குப் பிறகு சொன்னாள்.

    ஓ... கே.. ஐ அக்ரி வித் யுவர் பிரைஸ். செக் தரலாமா...?

    புவன்தாஸ் ஸாரி...! நாங்க செக் வாங்கறதில்லே! என்றார்.

    ஓ...கே.. தட் ஈஸ் பெஸ்ட் பாலிஸி. எனக்கு ஒரு அரை மணி நேரம் அவகாசம் கொடுங்க. நானும் என்னோட செக்ரட்ரியும் கேஷோட வர்றோம். கேஷ் பெட்டியோட சாவி என்கிட்டே இருக்கு. இல்லேன்னா போன்லயே செக்ரட்ரியை கான்டாக்ட் பண்ணி கேஷை கொண்டு வரச் சொல்லிடலாம். நான் திரும்பற வரைக்கும் என்னுடைய பெஸ்ட் ஹாஃப் இங்கே உட்கார்ந்திருப்பார்.

    ஸாரி... மேம்சாப்...! நான் உங்ககிட்ட கேஷ் டிமாண்ட் பண்ணினதைத் தப்பா எடுத்துக்காதீங்க..!

    புவன்தாஸ் பின்னந்தலையைக் கீறிக் கொண்டே சொன்னார்.

    வாட் ஈஸ் தேர்...? ஒரு ‘ஹாஃப் அன் அவர்’ல கேஷோட வந்துடறேன். இஃப் யூ டோண்ட் மைண்ட்... அந்த வைரத்தை எங்க மதருக்குக் காட்டிட்டு வரலாமா?

    சுவர்க்கா இயல்பாய்ச் சொல்ல...

    ஒரு விநாடி முகம் மாறினார் புவன்தாஸ். மறுவிநாடியே சகஜநிலைக்கு வந்தார். டைமண்டைக் கொண்டு போறீங்களா...?

    உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா கொடுங்க. எம் மேல துளியளவு சந்தேகம் இருந்தாலும் வேண்டாம். நான் கேஷோட வர்ற வரை என்னோட ஹஸ்பெண்ட் இங்கதான் இருப்பார்.

    தயங்கினார் புவன்தாஸ்.

    சுவர்க்கா மெள்ளச் சிரித்தாள். ஓகே மிஸ்டர் புவன்தாஸ்! நீங்க டைமண்டைத் தரவேண்டாம். நான் பணத்தைக் கொடுத்துட்டே கொண்டுட்டு போறேன்.

    எழுந்தாள்.

    புவன்தாஸ் பதட்டமாய் எழுந்தார். நோ... நோ.. உங்க மேல எனக்குச் சந்தேகம் இல்லை... வைரத்தைவிட மதிப்பு வாய்ந்த உங்க கணவரையே இங்கே இருக்கவிட்டுப் போறீங்க! தாராளமா நீங்க டைமண்டைக் கொண்டுட்டு போய் உங்க மதருக்கு காட்டிட்டு வரலாம்...!

    சுவர்க்கா வைரத்தோடு எழுந்தாள்.

    2

    சுவர்க்கா உடம்பு பூராவும் ததும்பிக் கொண்ட அவசரத்தோடு வெளியே வந்தாள்.

    ஜவேரி பஜார் இன்னமும் அதிகமான கசகசப்போடு தெரிய அதனூடே ஊடுருவினாள். சந்தோசம் இதயத்தை அடைக்கக் காரை நோக்கி வேகமாய் நடந்தாள். கையிலிருந்த சின்னஞ்சிறு பெட்டியில் லேட்டஸ்ட் கிம்பர்லி பன்னிரண்டு லட்சம் ரூபாய் மதிப்போடு தாங்கிக் கொண்டிருக்க, ஃப்ரில் வைத்துத் தைத்த ராஜகுமாரி டிரஸ் காலைத் தடுக்கிவிட, முகம் லேசாய்த் வியர்த்து, மார்புகள் அதிகப்படியாய் ஏறித்தாழ்ந்து, கண்களைப் பரபரவென்று சுற்றிலும் அலையவிட்டு மூலையில் நின்றிருந்த தன்

    Enjoying the preview?
    Page 1 of 1