Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

விவேக் வான்ட்டட்!
விவேக் வான்ட்டட்!
விவேக் வான்ட்டட்!
Ebook147 pages35 minutes

விவேக் வான்ட்டட்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சக பயணி ஒருத்தர் இறந்துபோன கலக்கத்தில் மற்ற பயணிகள் உறைந்துபோய் உட்கார்ந்திருக்க விவேக் விஷ்ணுவின் காதருகில் கிசுகிசுத்தான்.
 "இளைஞன் சீட்ல ப்ரீப்கேஸ் ஒண்ணு இருக்கு. அதை எடுத்து திறந்து பாரு... நான் ராஜசுந்தரிகிட்டே பேசிட்டு வந்துடறேன்."
 விஷ்ணு தலையாட்ட விவேக், ராஜசுந்தரி உட்கார்ந்திருந்த இருக்கையை நோக்கிப் போனான். அவள் விவேக்கைப் பார்த்ததும் மெல்ல எழுந்து நின்றாள். கண்களில் கலவரம்.
 "ஸ... ஸார்..."
 "அவனால உங்க உயிர்க்கு ஆபத்துன்னு சொன்னீங்க. இப்ப அவனே உயிரோடு இல்லை..."
 "எ... எ... எப்படி ஸார்?"
 "புரியலை. மூளையில் இருக்கிற ஒரு ரத்தக்குழாய் வெடிச்சதால மரணம்ன்னு டாக்டர் சொல்றார். ட்ரிப்ஷீட்ல அவனோட பேரு மெய்கண்டன்னு போட்டிருக்கு... மெய்கண்டன் என்கிற பேர்ல உங்களுக்கு யாரையாவது தெரியுமா?"
 "மெய்கண்டன்...?" - அவள் யோசித்தாள்.
 "ம்..."
 "தெரியாது ஸார்."
 "உங்களை எத்தனை நாளா ஃபாலோ பண்ணிட்டிருந்தான்?"
 "ஒரு வார காலமா..."
 "போன் பண்ணி பேசுவானா...?"
 "இல்லை..."
 "மிரட்டல் கடிதம் ஏதாவது வந்ததா...?"
 "இல்ல ஸார்... வெறுமனே ஃபாலோ பண்றதோடு சரி...நீங்க போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணாமேவிட்டது தப்பு... இவன் ஒரு ரசிகனாய் உங்களை ஃபாலோ பண்ணி வரலை. வேற ஏதோ ஒரு காரணத்துக்காக ஃபாலோ பண்ணியிருக்கான்."
 "ஸார்...! அவனோட மரணம்...?"
 "இயற்கையான மரணம் இல்லை... விமானம் பறந்து கொண்டிருக்கும்போதே ஒரு விபரீதம் நடந்திருக்கு..."
 "எனக்கு ஒண்ணுமே புரியலை ஸார்... அவன் யார்...? எதுக்காக என்னை ஃபாலோ பண்ணி டெல்லிக்கு வரணும்...? திடீர்ன்னு அவன் செத்துப் போக யார் காரணம்...? டெல்லிக்கு போகவே எனக்கு பயமாயிருக்கு ஸார்... நான் டெல்லி போய்ச் சேர்ந்ததும் இதே ஃப்ளைட்ல மறுபடியும் சென்னை திரும்பிடலாம்ன்னு பார்க்கிறேன்."
 "நோ... நோ... நீங்க டெல்லியில் ரெண்டு நாளாவது தங்கியிருக்கணும்... மெய்கண்டன் என்கிற இந்த இளைஞன் உங்களை எதுக்காக ஃபாலோ பண்ணிட்டு வந்தான்னு தெரிய வேண்டாமா? ட்ரிப்ஷீட்ல மெய்கண்டனோட முகவரி க்ளீயரா இருக்கு... டெல்லி போனதும் முதல் வேலை அந்த அட்ரஸுக்குப் போய்ப் பார்க்கிறதுதான்."
 "எனக்கென்னமோ அந்த அட்ரஸ் பொய்யாயிருக்கும்ன்னு தோணுது ஸார்..."
 "பார்க்கலாம்..."
 "பாஸ்..." விஷ்ணு கையை அசைக்க விவேக் அவனை நோக்கிப் போனான்.
 "என்ன... ப்ரீப்கேஸைப் பார்த்தியா?"
 "ம்."
 "உள்ளே என்னென்ன இருந்தது...?"
 "நீங்களே பாருங்க பாஸ்" விஷ்ணு சொல்லிக் கொண்டே கையில் வைத்து இருந்த ப்ரீப்கேஸைத் திறந்து காட்டினான்.
 உள்ளே - எந்தப் பொருளும் இல்லாமல் மொத்த பரப்பையும் அடைத்துக் கொண்டு மூன்று புத்தகங்கள் மட்டும் காலிகோ பைண்டிங்கோடு கனமாய் தெரிந்தன. "என்ன புக்ஸ்டா இது...?ஒவ்வொரு புத்தகமா எடுத்துப்பாருங்க பாஸ்."
 விவேக் முதல் புத்தகத்தை எடுத்தான்.
 பகவத் கீதை.
 இரண்டாவது புத்தகத்தை எடுத்தான்.
 பைபிள்.
 மூன்றாவது புத்தகம்.
 குர் ஆன்...
 "என்னடா... இது...?"
 "ஒண்ணும் புரியலை பாஸ். ஆள் பாரத விலாஸ் டைப்ன்னு நினைக்கிறேன்..."
 "இந்த மூணு புக்ஸைத் தவிர ப்ரீப் கேஸுக்குள்ளே வேற எதுவுமே இருக்கலையா?"
 "இல்ல பாஸ்..."
 விமானத்தில் இருந்த பயணிகள் எல்லோருமே இருக்கைகளிலிருந்து எழுந்து நின்று கலவரமாய் பார்த்துக் கொண்டிருக்க விவேக் இறந்து கிடந்த அந்த இளைஞனைப் பார்த்தான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 15, 2023
ISBN9798223508656
விவேக் வான்ட்டட்!

Read more from Rajeshkumar

Related to விவேக் வான்ட்டட்!

Related ebooks

Related categories

Reviews for விவேக் வான்ட்டட்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    விவேக் வான்ட்டட்! - Rajeshkumar

    விவேக் வான்ட்டட்!

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    ரன்வேயில் ஃப்ளைட் பறக்க காத்திருந்தது.

    மொத்த பயணிகள் 123 பேர்களில் விவேக்கும் விஷ்ணுவும் எக்னாமிக் வகுப்புக்கு அடுத்தபடியாக உள்ள ’ஆ’ வரிசையில் இடம் பிடித்து இருந்தார்கள். விவேக்கின் கையில் ‘இண்ட்டர்போல் லா’ என்ற புத்தகம் ஐந்து கிலோ எடையில் இடம் பிடித்திருக்க - விஷ்ணுவின் கையில் ஒரு தமிழ் நாளிதழ்.

    பாஸ்... தலைசாய்த்துக் கூப்பிட்டான் விஷ்ணு.

    என்னடா...?

    அந்த ‘இண்ட்டர்போல் லா’வை விட்டு கொஞ்சம் வெளியே வர்றீங்களா?

    என்ன விஷயம் சொல்லு...

    இந்த ஜோக்கைப் படிங்க...

    டேய்! என்னை டிஸ்டர்ப் பண்ணாதே... ஃப்ளைட் டெல்லி போய் சேர்றதுக்குள்ளே இந்த அஞ்சு கிலோவை மூளைக்குள்ளே ஏத்தி ஜீர்ணம் பண்ணியாகணும். இண்ட்டர்போல் செமினாரில் நான் பத்து நிமிஷம் பேசியாகணும். மொத்தம் 600 செக்கண்ட்ஸ்... மைக்குக்கு முன்னாடி நிக்கணும்.

    என்ன பாஸ்... இந்த புஸ்தகமெல்லாம் உங்களுக்கு ஒரு சுண்டல் காகிதம் மாதிரி! உங்க மூளைக்குள்ளே ஒரு மினி லைப்ரரியே மூணு ஷிஃப்ட்ல வேலை பார்த்துகிட்டு இருக்கும்போது இந்த செமினார் எல்லாம் உங்களுக்கு முன்னாடி பாப்கார்ன்; பஞ்சு மிட்டாய்...

    டேய்... லொட லொடா...! உன்னோட வாயைச் சாத்திகிட்டு கொஞ்ச நேரம் சும்மாயிருக்கமாட்டியா...?

    இந்த ஜோக்கை படிங்க பாஸ்... ரிலாக்ஸ் ஆயிடுவீங்க.

    நீ விடமாட்டியே... கொண்டாடா... அதை...

    விஷ்ணு கையில் வைத்திருந்த நாளிதழை மடித்து நீட்ட விவேக் அதை வாங்கிப் படித்தான்.

    அவர்கள் இளம் காதலர்கள். இரவு முழுவதும் காதலியின் அறையில் காதலில் கட்டுண்டு கிடந்த பிறகு காதலன் சிகரெட்டைப் புகைக்க நினைத்து லைட்டரைத் தேடினான். கிடைக்கவில்லை. பேண்ட், சர்ட், பெட், தலையணை என்று எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கடைசியாக காதலியின் மேஜையைத் திறந்ததும் லைட்டர் இருந்தது. அத்துடன் ஒருவனது போட்டோவும். காதலன் அவளிடம் கேட்டான்.

    யார்... இது... உன் கணவனா...?

    இல்லை...

    உன்னோட பாய் ஃப்ரண்டா...?

    சேச்சே... இல்லை...

    அப்படீன்னா யார் இவன்...?

    அமைதியான குரலில் சொன்னாள் காதலி. "அது நான்தான்...! ஆபரேஷனுக்கு முன்னாடி எடுத்த போட்டோ.

    ஜோக்... எப்படி பாஸ்...?

    விவேக் முறைத்தான். ஏண்டா...! இந்த பேப்பர்ல எவ்வளவு நல்ல விஷயங்கள் எல்லாம் இருக்கு... அதெல்லாம் உன்னோட கண்ணுல படாதா...?

    அதையெல்லாம் இனிமேத்தான் படிக்கணும் பாஸ்.

    விஷ்ணு சொல்லிக் கொண்டே - அந்தப் பக்கமாய்ப் போன ஏர்ஹோஸ்டஸ்ஸை எக்ஸ்க்யூஸ்மீ சொல்லி கூப்பிட்டான். அவள் பளீரென்ற புன்னகையோடு பக்கத்தில் வந்து குனிந்தாள்.

    எஸ்...

    விமானம் எப்போது புறப்படும்...?

    இன்னும் பதினைந்து நிமிடத்தில்.

    உங்களை இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்து இருக்கேன்...

    எங்கே...?

    ஞாபகம் வரலை...

    நோ ப்ராப்ளம்...! - அந்த ஏர்ஹோஸ்டஸ் சிரித்தாள். ஃப்ளைட் டெல்லி போய் சேர - இரண்டரை மணி நேரம் பிடிக்கும். அதுவரைக்கும் யோசனை பண்ணிட்டு வரலாம். பை... த... பை... வேற ஏதாவது உதவி தேவையா...?

    எஸ்... என்றான் விஷ்ணு.

    சொல்லுங்கள்...

    அது ஒரு சின்ன உதவிதான்... இருந்தாலும்...

    தயங்க வேண்டாம்... கேளுங்கள்...

    விஷ்ணு தன் சர்ட் பாக்கெட்டில் குத்தி வைத்திருந்த பால் பாயிண்ட் பேனாவை எடுத்து ஏர்ஹோஸ்டஸ்ஸிடம் நீட்டினான்.

    இதை வாங்கிக் கொள்ளுங்கள்.

    இது எதுக்கு...?

    இது உங்கள் கையில் இருந்தால்தான் நீங்கள் எனக்கு உதவி செய்யமுடியும்...

    அப்படியென்ன உதவி...?

    நடு முதுகு கொஞ்சம் அரிக்கிறது. பால் பாய்ண்ட் பேனாவால் கொஞ்சம் சொறிந்துவிட முடியுமா...?

    ஏர்ஹோஸ்டஸ் முறைக்க விவேக் குறுக்கிட்டான். டோன்ட் மிஸ்டேக் ஹிம். ஹி ஈஸ் வெரி ஜோவியல்.

    அவள் கண்களில் தீப்பொறி பறக்க நடந்து போக விவேக் விஷ்ணுவை ஏறிட்டான்.

    டேய்...! வாயை வெச்சுகிட்டு சும்மாயிருக்க மாட்டியா...?

    ஸாரி... பாஸ்...

    விவேக்கின் செல்போன் கனைத்தது. எடுத்து காதுக்கு ஒற்றினான். ரூபலா பேசினாள்.

    என்ன... ஏர்போர்ட் போய் சேர்ந்துட்டீங்களா?

    ஃப்ளைட்ல உட்கார்ந்துட்டிருக்கோம்... இன்னும் பத்து நிமிஷத்துல பறந்துட்டிருப்போம்...

    டெல்லி போய்ச் சேர்ந்ததும் பேசுங்க...

    கண்டிப்பா...!

    செமினார் ரெண்டுநாள்தானே...?

    ஆமா... ஆமா...

    லேட்டாயிடாதே...?

    ஆகாது...! இன்னிக்கு ஃப்ரை டே. மண்டே மத்தியானம் நம்ம வீட்டு டைனிங் டேபிள்ல உட்கார்ந்து லஞ்ச் சாப்பிட்டுகிட்டு இருப்பேன்...

    பி.ஜே.பி. என்ன பண்ணுது...?

    பி.ஜே.பி.யா! என்ன சொல்றே ரூபி...?

    படா ஜொள்ளு பார்ட்டி அந்த விஷ்ணுவைச் சொன்னேன். ஏர்ஹோஸ்டஸ்கிட்டே ஏகத்துக்கு வழிஞ்சுகிட்டு இருப்பானே...?

    அதையேன் கேட்கிறே...! எல்லாம் நேர்ல வந்து சொல்றேன்...

    டெல்லியில் எந்த ஹோட்டல்...?

    இந்திர பிரஸ்தா...

    கோஹினூர் சர்க்கிளில் இருக்கே... அதுதானே?

    அதேதான்...!

    "டெல்லியில்

    Enjoying the preview?
    Page 1 of 1