Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சிவப்பு பனித்துளி
சிவப்பு பனித்துளி
சிவப்பு பனித்துளி
Ebook107 pages38 minutes

சிவப்பு பனித்துளி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

லியோநார்டோ - டா - வின்ஸி. ரோம் ஏர்ஃபோர்ட்.
 விவேக் விமானத்தின் ஸ்டெப்ஸ்களில் - இறங்கிக் கொண்டிருந்தபோது சாயந்தர நேரம். லேசாய் மழைத்தூறிக் கொண்டிருந்தது. நூறடி தூரத்தில் ஏர்போர்ட் ப்ளோரஸண்ட் விளக்குகளோடு வெளிச்சமாய் இருந்தது. ஸ்பீக்கர்களில் லேடி அனௌன்ஸர்கள் இத்தாலிய மொழியில் - பிரயாணிகளை கொஞ்சி கொஞ்சி வரவேற்று கொண்டிருந்தார்கள். ஏர்போர்ட்டின் கம்யூட்டர் திரைகளில் - ஆங்கில எழுத்துக்கள் அவசர அவசரமாய் உதிர்த்தன.
 You are in Rome
 Follow the Dream
 Share the Dream
 Experience the Dream
 விவேக் பிரயாணிகளோடு நடந்தான். நிறைய பெண்கள் - விதவிதமாய் செண்ட் வாசனை. ஒரு பெண் விடாப்பிடியாய் விவேக்கின் தோள் பட்டையை உரசிக் கொண்டே வர - அவன் விலகி நடக்க - அவள் - வரிசை பற்களைக் காட்டிச் சிரித்தாள். 'யூ... இண்டியன் கை' என்று சொல்லி அவள் தாய் பாஷையில் ஒரு நீள வாக்கியம் பேசினாள். விவேக் பொருட்படுத்தாமல் நடந்து - வெளிச்சத்திற்கு வந்தான்.
 லெளன்ஞ்ச் அதி சுத்தம்.
 தரை பரப்பில் மனித பிம்பங்கள் அசைவது தெரிந்தன. செக் கெளண்டர்களுக்கு முன்னால் - சின்னச் சின்ன கியூக்கள் மெளனமாய் நின்றன. கறுப்பு நிற பேனர் போர்டில் ITALIA-90ஃபுட்பால் பொம்மை. பிரயாணிகளை வரவேற்கிற மாதிரி கைகளைக் காட்டி சிரித்தது. 'வெல்கம்' என்ற வார்த்தையை உதிர்த்தது

பின் மறைந்து வேறொரு நிறத்தில் தோன்றி - கண்ணைச் சிமிட்டியது. அதை யாரும் பொருட்படுத்தாமல் நடந்தார்கள். விவேக் நடந்தான். லெளன்ஞ்சில் மிதமான கும்பல் இளம் பச்சை கண்ணாடி அறைகளில் - Booth என்ற வாசகம் தெரிய - டெலிபோன் ரிஸீவர்களில் சிலர் தீவிரமாய் இருந்தார்கள்.
 விவேக் பேக்கேஜ், செக்ஷனுக்கு போய் - தன் ரோலர் சூட்கேஸை வாங்கிக் கொண்டு - லௌன்ஞ்சின் முகப்பிற்கு வந்தபோது - செம்பட்டை முடியோடு உயரமான அந்த இளைஞன் எதிர்பட்டான்.
 "வெல்கம் மிஸ்டர் விவேக்...''
 "நீங்கள்?''
 "பிரான்ஸிஸ், ரெட் ட்யூ அமைப்பாளர்களில் நானும் ஒருவன்" - சொன்னவன் அடையாள அட்டையையும் காட்டினான். வாங்கிப்பார்த்த விவேக் - அதை அவனிடமே கொடுத்துவிட்டு - க்ளவுஸ் அணிந்த அவன் கையைப் பற்றி குலுக்கினான்.
 "என்னை எளிதாக கண்டுபிடித்து விட்டீர்களே?"
 "உங்களுக்கு அழகான முகம். போட்டோவைப் பார்த்தபோதே கவலைப்பட்டேன்."
 "கவலையா...?"
 "ஆமாம். இந்த ஊர் பெண்களிடமிருந்து நீங்கள் எப்படி தப்பிக்கப் போகிறீர்கள் என்கிற கவலைதான்.''
 விவேக் சிரித்தான். கூடவே ஒரு உண்மையும் புரிந்தது. இந்த பிரான்சிஸ், பெண்கள் விஷயத்தில் தீவிரமானவன்.
 கஸ்டம்ஸ் இமிக்ரேஷனை முடித்துக் கொண்டு - ஏர்போர்ட்டைவிட்டு வெளியே வந்தார்கள் இருவரும். ஆயிரக்கணக்கான கார்களுக்கு மத்தியில் - தூறின மழையில் பேசிக் கொண்டே நடந்தார்கள். –
 "ஃபுட்பால் ஜூரம் எப்படியுள்ளது... மிஸ்டர் பிரான்ஸிஸ்?"இந்த முறை அதிகம்... ஆயிரம் லிராவுக்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகளை மூவாயிரம் லிரா வரைக்கும் ப்ளாக்கில் போகின்றன. பெண்கள் மார்புகளிலும் - தொடைகளிலும் - தங்கள் அபிமான விளையாட்டு வீரர்களின் பெயர்களை பச்சை குத்திக் கொள்கிறார்கள்.''
 'மறுபடியும் பெண் விஷயம் இந்த பிரான்சிஸ் ஸ்வீடனில் ஒரு ஜெகதலப் பிரதாபனாய் இருக்க வேண்டும்...'
 ''இதுதான் நம் கார்..." பிரான்சிஸ் ஒரு கிளாஸிக்காரை காட்டிக் கொண்டே நின்றான்.
 கார் சில்வர் நிறத்தில் இருந்தது. உள்ளே ஒரு வயர்லஸ் சாதனம் உயிரோடு இருப்பது தெரிந்தது.
 கார் ரோட்டுக்கு வந்து - புல்லட் மாதிரி சீறிக் கொண்டிருந்தபோது பிரான்ஸிஸ் கேட்டான்.
 "நீங்கள் ரோமுக்கு வருவது இதுதான் முதல் தடவை இல்லையா?"
 "ஆமாம்...''
 "சரித்திர புகழ் வாய்ந்த நகரம்..."
 "படித்திருக்கிறேன்..."
 "ரோம் நகர பெண்கள் அழகானவர்கள்.''
 விவேக் பிரான்ஸிஸ்ஸை எரிச்சலாய் பார்த்தான்.
 'ஊ... ஹும்... இவன் போலீஸ் துறைக்கு லாயக்கில்லாத ஆசாமி. இவனை எப்படி 'ரெட் ட்யூ'வில் செலக்ட் பண்ணினார்கள்? பக்கா வுமனைஸராய் இருப்பான் போலிருக்கே...'
 அவன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். "இங்கே பெண்கள் அழகாய் இருப்பதற்கு காரணம் உண்டு. பெரும்பாலானவர்கள் மன்னர் பரம்பரையில் வந்தவர்கள். மார்க் ஆன்டனி, ஜூலியஸ் சீஸர், கிளியோபாட்ரா... வம்சாவழியினர் இன்னமும் இருக்கிறார்களாம்...''
 விவேக் குறுக்கிட்டான்.
 "எனக்கு எந்த ஹோட்டல் தங்க ஏற்பாட ஆகியிருக்கிறது?"
 "ஹோட்டல் ப்யூஜிதா நாரி.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 10, 2023
ISBN9798223167006
சிவப்பு பனித்துளி

Read more from Rajeshkumar

Related to சிவப்பு பனித்துளி

Related ebooks

Related categories

Reviews for சிவப்பு பனித்துளி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சிவப்பு பனித்துளி - Rajeshkumar

    1

    விவேக் தான் எழுதிய புதுக்கவிதையை ரூபலாவுக்கு வாசித்துக் காட்டிக் கொண்டிருந்தபோது - க்ரைம் பிராஞ்ச் மெஸேஞ்சர் மூலமாய் அந்த அரசாங்க கவர் வந்தது. கெட்டியான சாணி நிறக் கவர். கவரின் நான்கு ஓரங்களிலும் அரக்கு சீல் வட்டம் வட்டமாய் - உடும்பு பிடி மாதிரி ஒட்டியிருந்தது. - கவரின் மையத்தில் கம்ப்யூட்டர் ஜாதி காகிதம். அதில் விவேக் பெயர், விலாசம். கவரின் இடது பக்க மூலையில் Central Intelligence Agency (of U.S.A.) என்ற வார்த்தை கர்வமாய் தெரிந்தது.

    "பஞ்சாப்பின் படுகொலைகளைப்

    பற்றி பத்துவரி எழுதினேன்.

    காகிதமே சிவப்பாகிப் போனது."

    சற்று முன் விவேக் எழுதிய புதுக்கவிதையை - அலட்சியப்படுத்திய ரூபலா - விவேக்கின் கையிலிருந்த அந்தக் கவரைப் பறித்தாள்.

    என்னங்க கவர்...? ஹைலி கான்ஃபிடென்ஷியல்ன்னு போட்டிருக்கு.

    "பிரி...’’ கவரின் ஓரத்தை கத்திரிக்கோலால் துண்டித்து - உள்ளேயிருந்த இளஞ்சிவப்பு காகிதத்தை உருவினாள் ரூபலா. கம்ப்யூட்டர் டைப் செய்த கடிதம். தெளிவான ஆங்கில வரிகள். இரண்டு வரிகளைப் படித்துப் பார்த்த ரூபலா - தலையைக் கீறிக் கொண்டாள்.

    கனமான லாங்க்வேஜ்... நீங்களே படிங்க...

    விவேக் வாங்கி - டைப் வரிகளின் மேல் பார்வையை ஓட்டினான். மனசுக்குள் கடிதத்தின் தமிழாக்கம் ஓடியது.

    சர்வதேச அளவில் குற்றங்களைப் புரிவதில் வல்லுநர்களாய் விளங்கும் சிலர் ரோம் நகரில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறப்போகிற அந்த ஒரு மாத காலத்தில் - கலவரங்களை தூண்டிவிட்டு - படு கொலைகளை நடத்த திட்டமிட்டுள்ளார்கள் என்று - சர்வதேச புலனாய்வு துறை - எங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் - பங்கு கொள்ளப் போகும் இருபத்தி நான்கு நாடுகளில் உங்கள் நாடான இந்தியாவும் ஒன்று. சர்வதேச அளவில் குற்றங்களைப் புரிபவர்களில் இந்தியர்களும் உண்டு என்ற உண்மையை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். எனவே - ரோம் நகரில் கால்பந்தாட்டத்தையொட்டி - நடைபெறலாம் என்று அஞ்சப்படுகின்ற கலவரங்களையும் கொலைகளையும் - தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் இருபத்தி நான்கு நாடுகளைச் சேர்ந்த - புலனாய்வுத் துறையின் - திறமை சாலிகளை ஒன்று சேர்த்து - (நாட்டுக்கு ஒருவர் வீதம்) ‘RED DEW’ என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்த உள்ளோம். உங்கள் நாட்டு சார்பாக - இந்திய அரசு சிபாரிசு செய்துள்ள நீங்கள் அந்த ரெட் ட்யூவில் இடம் பெறுகிறீர்கள். போட்டி நடைபெறுகிற ஒரு மாத காலத்திற்கு நீங்கள் ரோமில் தங்கியிருக்க வேண்டும். அங்கே தங்கியிருக்கும் காலக்கட்டத்தில் உங்கள் பணிகள் என்ன என்பதை - ‘ரெட் ட்யூ’ வரையறுத்து கொடுக்கும். இந்தக் குழுவில் நீங்கள் இடம் பெறுவதில் உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருந்தாலோ - அல்லது ஏதாவது ஆட்சேபணைகள் இருந்தாலோ - உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்.

    விவேக் கடிதத்தை புன்னகையோடு மடித்துக் கவர்க்குள் போட ரூபலா கேட்டாள்.

    லெட்டர்ல என்னங்க...?

    விவேக் சொன்னான்.

    ரூபலா முகம் மாறி போகாதீங்க - என்றாள்.

    போகக்கூடாதா... ஏன்...?

    "எனக்கு பிடிக்கலை...’’

    ஏன் பிடிக்கலை...?

    "அங்கேயிருக்கிற கிரிமினல்ஸுக்கு - போலீஸ் டிபார்ட்மெண்டைக் காட்டிலும் புத்திசாலித்தனம் அதிகம்...’’

    அப்படீன்னு எந்த புஸ்தகத்துல படிச்சே?

    "பேப்பர்லதான். எவ்வளவு நியூஸை பார்க்கிறோம்...?’’

    விவேக் எழுந்து - சுவர் செல்ப்பை நோக்கிப் - போய் ஒரு புத்தகத்தை எடுத்து வந்தான்.

    என்னங்க அது...?

    அரௌண்ட் த வொர்ல்ட் புஸ்தகம்.

    இது எதுக்கு இப்ப...?

    ரோமைப் பத்தி... ஒரு வெள்ளோட்டம் விட்டுக்கத்தான்... இத்தாலியின் தலைநகரம் ரோம்ங்கிறது மட்டும் தான் தெரியும். மத்த விபரங்களை ஞாபகப்படுத்திக்க வேண்டாமா...?

    ரூபலா முறைப்பதை லட்சியம் செய்யாமல் - புத்தகத்தைப் பிரித்து கண்ட்ரீஸ் ஆஃப் த வொர்ல்ட் சாப்டரை எடுத்து இத்தாலியைக் கண்டுபிடித்தான். மெல்லிய குரலில் படித்தான்.

    "காபிடல் ஆஃப் இட்டாலி ரோம். ஸ்போக்கன் லாங்க்வேஜ் இட்டாலியன், ரெவிலிஜியஜன் கிறிஸ்டியன், கரன்ஸி. லிரா. ஏரியா ஆஃப் இட்டாலி - த்ரிலாக்ஸ் அண்ட் அபௌவ் கிலோ மீட்டர்ஸ். பாப்புலேசன். சிக்ஸ்க்ரோர்ஸ் இம்பார்ட்டண்ட் ஐலேண்ட்ஸ் - ஸிஸிலி, சர்தீனியா, எல்பா, அண்ட் காப்ரீ. காபிடல் ரோம் ரோன் ரஸ் சிட்டி ஆஃப் ஹெவன் ஹில்ஸ். டெம்பிள் ஆஃப் டயானா ஈஸ் த வொண்டர் ஆஃப் த வொர்ல்ட்.’’

    ரூபலா தரையில் காலை உதைத்தாள்.

    பரீட்சைக்கு படிச்சது போதும் நிறுத்தறீங்களா...?

    ஆஹா! ரோமுக்கு போக எப்பேர்ப்பட்ட சான்ஸ்...?

    அலையாதீங்க...

    "நான் அலையலை... யூ.எஸ்.ஏ.யிலிருந்து லெட்டர் அனுப்பியிருக்கான். நான் வலிய போகலை. அதுவா வந்திருக்கு...’’ - விவேக் சொல்லச் சொல்ல டெலிபோன் கூப்பிட்டது.

    விவேக் போய் ரிஸீவரை எடுத்தான்.

    "ஹலோ...’’

    மிஸ்டர் விவேக்...?

    "எஸ்...’’

    திஸ்... ஈஸ்... டெல்லி சி.பி.ஐ. டைரக்டர் ஜெனரல் ஆபீஸ். டெப்டிஜெனரல் கெளசிக் கபூர் ஸ்பீக்கிங்... மிஸ்டர் விவேக்! டிட் யூ ரிஸீவ் ஒன் கன்டென்ட் ஃரம் சி.ஐ.ஏ...?

    விவேக் ஆங்கிலத்தில் சொன்னான்.

    கிடைத்தது ஸார்.

    படித்துப் பார்த்தீங்களா...?

    பார்த்தேன்...

    நீங்கள் என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்...?

    "ரெட் ட்யூ... அமைப்பில்... ஒரு மாதம் பணிபுரிய நான் தீர்மானித்துள்ளேன்.’’

    உங்கள் முடிவு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அந்தக் குழுவில் பங்கு பெற - நீங்கள் சி.ஐ.ஏ.யில் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு என் வாழ்த்துக்கள்.

    நன்றி ஸார்...

    "உங்கள் பாஸ்போர்ட், விசா... விவகாரங்களை அரசே விரைந்து ஏற்பாடு செய்து, கொடுக்கும்... பயண தேதி,

    Enjoying the preview?
    Page 1 of 1