Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அபயம் அபாயம் அருணா & வளைவுகள் அபாயம்
அபயம் அபாயம் அருணா & வளைவுகள் அபாயம்
அபயம் அபாயம் அருணா & வளைவுகள் அபாயம்
Ebook257 pages1 hour

அபயம் அபாயம் அருணா & வளைவுகள் அபாயம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நியூ ஆர்ட்ஸ் காலேஜுக்கு முன்னால் அந்த போலீஸ் வேன் நின்றிருந்தது. மாணவர்கள் சின்னச் சின்னக் குழுக்களாய் - திகிலடித்த முகங்களோடு தெரிந்தார்கள். கோட் அணிந்த புரபசர்கள் காலேஜ் மரத்தடியில் உறைந்து போய் நின்றிருந்தார்கள்.
 கல்லூரி முழுவதும் - ஒரு நீளமான - ஆழமான நிசப்தம்.
 யமஹா பைக்கை - அந்த மரத்துக்குக் கீழே மௌனமாக்கினான் விவேக். அதை ஸ்டாண்ட் இட்டுக் கொண்டிருக்கும்போதே - இன்ஸ் பெக்டர் கோகுல்நாத் - வேக வேகமாய் அவனை நோக்கி வந்தார்.
 "நானே உங்களுக்கு போன் பண்ணனும்னு நினைச்சுட்டிருந்தேன்... விவேக்... உங்களுக்கு எப்படி ந்யூஸ் தெரியும்...?
 "சந்திர வார்க்கர் சொன்னார்..."
 "வாங்க... நடந்த சம்பவம் மகா கோரம்..."
 "ஸ்டூடண்ட்டோட பேரென்ன?"
 "எழில் செல்வன்..."
 "இவ்வளவு அழகான பேரை வெச்சுகிட்டு எதுக்காக இந்த முடிவைத் தேடிக்கிட்டான்...? என்ன கோர்ஸ்...?"
 "பி.ஏ. லிட்டரேச்சர்!"
 "சம்பவம் எப்படி நடந்ததுன்னு விசாரிச்சீங்களா...?"
 கோகுல்நாத் நகர்ந்து போய்- இரண்டு நிமிஷ அவகாசத்தில் லாட மீசை வைத்து - தலைமுடியைப் பக்கவாட்டில் வழித்துச் சீவிய அந்த இளைஞனோடு வந்தார். அந்த சூழ்நிலையில் வணக்கம் சொல்லலாமாவேண்டாமா என்று தயங்கி - பின் வலது கையை நெஞ்சு வரைக்கு ம் உயர்த்தி விஷ் பண்ணினான்.
 " உம் பேரென்ன...?"
 "உதயகுமார்..."
 "காலேஜுக்கு பிரஸிடெண்ட் நீ தானா...?"
 "ஆமா...ஸார்..."
 "எழில் செல்வன் ட்ரான்ஸ்பார்மர்ல ஏறும் போது நீயும்... காலேஜ் கேம்பஸுக்குள்ளே தானே இருந்தே?"
 "ஆமா...ஸார்... ஆனா நான் சம்பவத்தை பார்க்கலை... லைபரரியில் இருந்தேன். ஸ்டூடண்ட்டோட கூச்சல் சத்தம் கேட்டுதான் வெளியே வந்தேன்... உடம்பெல்லாம் புகை கிளம்பிட்டிருக்க - எழில் செல்வன் கீழே விழுந்து கிடந்தான்..."
 "எழில் செல்வன் ஒரு ட்ரக் அடிக்ட்டா...?"
 "ஆமா... ஸார்..."
 "போதை மாத்திரையெல்லாம் அவனுக்கு எங்கிருந்து கிடைக்குது...?"
 "எனக்கு தெரியாது ஸார்..."
 விவேக் அவனுடைய தோளில் கையைப் போட்டான். "இதோ பார் உதயகுமார்... உனக்குத் தெரியாமே இந்த காலேஜில எதுவும் நடக்காது... ஒவ்வொரு ஸ்டூடண்டைப் பத்தியும் நீ பயோ-டேட்டா எடுத்து வெச்சிருப்பியே..."
 "ஸார்... ஸ்டூடண்ட்ஸோட பர்சனல் விவகாரம் ஆயிரம் இருக்கும்... அதுல போய் நான் தலையிட்டுக்கிட்டிருக்க முடியுமா? எழில் செல்வன் போதை மருந்துக்கு அடிக்ட் ஆனவன்... மாசத்தில பாதி நாள் காலேஜுக்கு வர மாட்டான்... போதை மருந்தை தின்னுட்டு கட்டில்லேயே விழுந்து கிடப்பான்... யாராவது புத்தி சொன்னா அடிக்க வருவான்..."
 "எழில் செல்வன் ஹாஸ்டலரா? டே ஸ்காலரா?"
 "ஹாஸ்ட்லர்...சொந்த ஊர்?"
 "காரைக்குடி ஸார்..."
 "எழில் செல்வனுக்கு ரொம்பவும் க்ளோஸ் ஃப்ரண்ட் யார்?"
 "பெர்னாண்டஸ்..."
 "அவனும் போதை மருந்து சாப்பிடற ஆசாமிதானா...?"
 "அது எனக்குத் தெரியாது ஸார்... ஆனா அந்த பெர்னாண்டஸ் அமைச்சர் அடைக்கலராஜுக்கு ரிலேடிவ். அவனும் சரியா காலேஜுக்கு வரமாட்டான்..."
 விவேக்கும் ஸ்டூடண்ட் லீடர் உதயகுமாரும் பேசிக் கொண்டிருக்கும் போதே - பக்கவாட்டு கும்பலில் நின்றிருந்த அந்த மாணவன் - தயக்க நடை போட்டு விவேக்கை நெருங்கினான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798215689646
அபயம் அபாயம் அருணா & வளைவுகள் அபாயம்

Read more from Rajeshkumar

Related to அபயம் அபாயம் அருணா & வளைவுகள் அபாயம்

Related ebooks

Related categories

Reviews for அபயம் அபாயம் அருணா & வளைவுகள் அபாயம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அபயம் அபாயம் அருணா & வளைவுகள் அபாயம் - Rajeshkumar

    1

    புதிதாய் வடக்கேயிருந்து மாற்றலாகி வந்த போலீஸ் சூப்ரிண்டென்டெண்ட் சந்திர வார்க்கர் தன் சின்னக் கண்களால் - சீற்றமாய் - சுற்றிலும் நின்றிருந்த போலீஸ் ஆபீஸர்களைப் பார்த்தார். கொச்சையான தமிழில் குதறினார். நடுநடுவே ஆங்கிலத்தையும் சின்னா பின்னப்படுத்தினார்.

    கஞ்சி போட்டு அயர்ன் பண்ணின காக்கி ட்ரஸ்ஸை மாட்டிகிட்டு - உட்கார்ந்த இடத்திலிருந்து வயர்லஸ் பேசறதுக்காக மட்டும் நாம சம்பளம் வாங்கலை... குற்றங்களை தடுக்கிறதுக்காகவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறதுக்காகவும்தான் சம்பளம் வாங்கறோம்.. லாரி லாரியா போதை இலையையும், கஞ்சா, அபினையும் ஒரு லோக்கல் பார்ட்டி கடத்திட்டு வர்றான். ரேஷன் கடையில அரிசி விநியோகம் பண்ற மாதிரி... ஊர்ல இருக்கிற சில்லறை பார்ட்டிகளுக்கெல்லாம் அதை சப்ளை பண்றான். அந்த காலத்து காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் புஸ்தகத்துக்கு நடுவுல செக்ஸ் புத்தகத்தை மறைச்சு வெச்சுகிட்டு படிக்கிற மாதிரி - இந்த காலத்து காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் அபினையும், கஞ்சாவையும், சரஸையும் பாக்குப் பொட்டலம் ஷேப்புல புஸ்தகத்துல மறைச்சு வெச்சுகிட்டு திரியறாங்க... மாசத்துல ஒருத்தன் மென்டல் கேஸா மாறிடறான்... சிலபேர் நரம்புத் தளர்ச்சியில கோமா ஸ்டேஜுக்கு போயிடறாங்க... ஊர்ல இருக்கிற ஒவ்வொரு பத்திரிகைக் காரனும் நம்ம டிபார்ட்மெண்ட்டை நார் நாராய் கிழிக்கிறான். நாம சம்திங் வாங்கிகிட்டு அந்த கடத்தல்காரங்களுக்கு உடந்தையா இருக் கோம்ன்னு பேனா கூசாம எழுதறான்... அந்த ஜக்கால்ஸை வித் இன் ஏ வீக் டைம் வீ ஹேவ் டூ காட்ச் தெம்...

    சுற்றிலும் நின்றிருந்த போலீஸ் ஆபீஸர்க்கு மத்தியிலிருந்து விவேக் ஓரடி முன்னால் வந்தான். நீல நிற சர்ட்டை வெள்ளை நிற ரேமான்ஸ் பேண்ட்டில் இன் செய்து - கண்களில் கொஞ்சம் கவலை காட்டினான். போலீஸ் சூப்ரிண்டென்டண்டை ஏறிட்டான்.

    ஸார்... இது தொடர்பா நான் ஒரு கருத்தைச் சொல்லலாமா?

    எஸ்... ப்ளீஸ்...

    ஸார்... இந்த போதை இலைகள் - போதை வஸ்துக்கள் எல்லாமே மாலத் தீவிலிருந்துதான் வரவழைக்கக் கூடிய சாத்தியம் இருக்கு...!

    எப்படி சொல்றீங்க...?

    அக்ரிகல்ச்சர் யூனிவர்ஸிடியில் புரபசர் ஆதிஷேசய்யான்னு ஒருத்தரைப் போன வாரம் சந்திச்சு இந்த போதையிலை விவகாரம் குறித்து பேசிட்டிருந்தேன். அங்கேதான் இந்த போதை இலைகள் விளையக் கூடிய அருமையான வெதர் இருக்குன்னு சொல்றார்...

    இதெல்லாம் நமக்கு தேவையில்லாத விஷயம்... இது எங்கேயோ விளைஞ்சுட்டு போகட்டும்... ஆனா அது தமிழ்நாட்டுக்குள்ளே ஊடுருவக்கூடாது... மிஸ்டர் விவேக்! நீங்க கொலைக் கேஸ்களை திறமையாக துப்பறிஞ்சு - கொலையாளிகளை மடக்கிறதுல எக்ஸ்பர்ட்ன்னு கேள்விப்பட்டிருக்கேன்... இந்த போதையிலை கடத்தற கேஸ்ல நீங்க எனக்கு உதவணும். பார்ட்டி யார்ங்கிறதைக் கண்டு பிடிச்சு உடனடியா மடக்கணும்...

    ஸார்...

    என்ன...?

    இந்த கடத்தல் விவகாரத்துல... அரசியல் வட்டாரத்தில் உள்ள ஒரு பெரிய புள்ளி சம்பந்தப் பட்டிருக்கிறதா... எதிர்க்கட்சிப் பத்திரிகை ஒண்ணு ஹேஷ்யம் சொல்லியிருக்கு...

    சந்திர வார்க்கர் வெடித்தார்.

    குற்றவாளி யாராக இருந்தாலும்... சரி... இஃப்...ஹி...ஈஸ்...ஏ...மினிஸ்டர்... டோண்ட் ஒர்ரி... ஆதாரங்களை என்கிட்டே கொண்டு வாங்க... ஐ’ல் அரஸ்ட் ஹிம்... -அவர் சொல்லிக் கொண்டிருந்த அதே விநாடி-

    அருகே மேஜை மேலிருந்த டெலிபோன் அலறியது.

    ரிஸீவரை எடுத்தார் சந்திர வார்க்கர்.

    ஹலோ... சொன்னவர் விறைப்பானார்.

    மறுமுனையில் கமிஷனர் பேசினார்.

    மிஸ்டர் சந்திர வார்க்கர்...

    எஸ்...ஸார்...

    ஸ்பெஷல் டிஸ்கஷன் போட்டீங்களே... முடிஞ்சுதா?

    நடந்துகிட்டிருக்கு ஸார்...

    தினமும் இப்படியே ஒரு ஸ்பெஷல் மீட்டிங்கைப் போட்டு நடத்திகிட்டே இருங்க... கடத்தல்காரன் கோடி கோடியா சம்பாதிச்சு... பணத்தைப் பாதுகாக்க இடமில்லாமே... பணத்து மேலே அவனுக்கே வெறுப்பு தட்டிப் போய் ... அவனே இந்தக் கடத்தல் தொழிலை விட்டுடுவான்... அதுக்கப்புறம் நம்ம டிபார்ட்மெண்ட்டுக்கு எந்த சிரமும் இருக்காது...

    ஸாரி...ஸார்...

    எதுக்காக ஸாரி சொல்றீங்க?

    ஒரு வாரம் டயம் குடுங்க...ஸார்... ஆளை எப்படியும் மடக்கி பிடிச்சுடறோம்...

    ஒவ்வொரு வாரமா டயம் கேட்டு இப்போ மாசம் மூணாயிடுச்சு... டிபார்ட்மெண்ட்ல எல்லாரும் என்னதான் பண்ணிட்டிருக்கீங்க...? கொஞ்ச நேரத்தக்கு முன்னாடி வெல்ஃபேர் மினிஸ்டர் எனக்கு போன் பண்ணி ஒரு ஷாக் நியூஸை சொல்றார்... நியூ ஆர்ட்ஸ் காலேஜ் ஸ்டூடண்ட் ஒருத்தன்- போதை மாத்திரையைத் தின்னுட்டு - ஹாஸ்டலுக்குப் பக்கத்திலிருந்த ட்ரான்ஸ்பார்மர் மேலே ஏறியிருக்கான்...

    வாட் ஹேப்பண்ட்....ஸார்...?

    என்ன நடக்கும்... ஏகப்பட்ட வோல்டேஜ் மின்சாரம் இருக்கிற அந்த ட்ரான்ஸ்பார்மர் அவனைக் கரிக்கட்டையாய் பொசுக்கி - தூக்கி எறிஞ்சுடுச்சு...

    பிட்டியபிள் ஸார்...

    பரிதாபப்பட்டு பிரயோஜனமில்லை மிஸ்டர் சந்திர வார்க்கர்... இன்றைய யூத்ஸும், மாணவர்களும் அநியாயத்துக்குக் கெட்டுப் போறாங்க... சினிமா, சிகரெட் மாதிரி இந்த போதை மருந்தும் அவசியம் என்கிற நிலைமைக்கு வந்துட்டாங்க... பம்பாய், டெல்லி மாணவர்கள் மத்தியில பரவலா இருந்த அந்தப் பழக்கம்... மெல்ல மெல்ல மெட்ராசுக்கும் பரவிடுச்சு... இதை முளையிலேயே கிள்ளியெறியணும்...

    அந்த முளை எங்கேயிருக்குன்னு தெரியலையே ஸார்...

    மிஸ்டர் சந்திர வார்க்கர், கடுமையான வார்த்தைகளை நான் உபயோகப்படுத்தும் படியான சூழ்நிலையை உண்டாக்கிடாதீங்க... போலீஸ் ஃபோர்ஸை முழு அளவில் பயன்படுத்துங்க... என்கிட்டயிருந்து எந்த பர்மிஷனையும் - வாய் மூலமாவோ - எழுத்து மூலமாவோ கேட்காதீங்க... நீங்களாகவே எடுத்துக்குங்க... எனக்கு வேண்டியது ரிசல்ட்தான் ... அதுவும் ஃப்ரூட்புல் ரிசல்ட்...

    கமிஷனர் தன் கோபத்தை ரிஸீவரின் மேல் காட்டினார்.

    2

    நியூ ஆர்ட்ஸ் காலேஜுக்கு முன்னால் அந்த போலீஸ் வேன் நின்றிருந்தது. மாணவர்கள் சின்னச் சின்னக் குழுக்களாய் - திகிலடித்த முகங்களோடு தெரிந்தார்கள். கோட் அணிந்த புரபசர்கள் காலேஜ் மரத்தடியில் உறைந்து போய் நின்றிருந்தார்கள்.

    கல்லூரி முழுவதும் - ஒரு நீளமான - ஆழமான நிசப்தம்.

    யமஹா பைக்கை - அந்த மரத்துக்குக் கீழே மௌனமாக்கினான் விவேக். அதை ஸ்டாண்ட் இட்டுக் கொண்டிருக்கும்போதே - இன்ஸ் பெக்டர் கோகுல்நாத் - வேக வேகமாய் அவனை நோக்கி வந்தார்.

    "நானே உங்களுக்கு போன் பண்ணனும்னு நினைச்சுட்டிருந்தேன்... விவேக்... உங்களுக்கு எப்படி ந்யூஸ் தெரியும்...?

    சந்திர வார்க்கர் சொன்னார்...

    வாங்க... நடந்த சம்பவம் மகா கோரம்...

    ஸ்டூடண்ட்டோட பேரென்ன?

    எழில் செல்வன்...

    இவ்வளவு அழகான பேரை வெச்சுகிட்டு எதுக்காக இந்த முடிவைத் தேடிக்கிட்டான்...? என்ன கோர்ஸ்...?

    பி.ஏ. லிட்டரேச்சர்!

    சம்பவம் எப்படி நடந்ததுன்னு விசாரிச்சீங்களா...?

    கோகுல்நாத் நகர்ந்து போய்- இரண்டு நிமிஷ அவகாசத்தில் லாட மீசை வைத்து - தலைமுடியைப் பக்கவாட்டில் வழித்துச் சீவிய அந்த இளைஞனோடு வந்தார். அந்த சூழ்நிலையில் வணக்கம் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கி - பின் வலது கையை நெஞ்சு வரைக்கு ம் உயர்த்தி விஷ் பண்ணினான்.

    உம் பேரென்ன...?

    உதயகுமார்...

    காலேஜுக்கு பிரஸிடெண்ட் நீ தானா...?

    ஆமா...ஸார்...

    எழில் செல்வன் ட்ரான்ஸ்பார்மர்ல ஏறும் போது நீயும்... காலேஜ் கேம்பஸுக்குள்ளே தானே இருந்தே?

    ஆமா...ஸார்... ஆனா நான் சம்பவத்தை பார்க்கலை... லைபரரியில் இருந்தேன். ஸ்டூடண்ட்டோட கூச்சல் சத்தம் கேட்டுதான் வெளியே வந்தேன்... உடம்பெல்லாம் புகை கிளம்பிட்டிருக்க - எழில் செல்வன் கீழே விழுந்து கிடந்தான்...

    எழில் செல்வன் ஒரு ட்ரக் அடிக்ட்டா...?

    ஆமா... ஸார்...

    போதை மாத்திரையெல்லாம் அவனுக்கு எங்கிருந்து கிடைக்குது...?

    எனக்கு தெரியாது ஸார்...

    விவேக் அவனுடைய தோளில் கையைப் போட்டான். இதோ பார் உதயகுமார்... உனக்குத் தெரியாமே இந்த காலேஜில எதுவும் நடக்காது... ஒவ்வொரு ஸ்டூடண்டைப் பத்தியும் நீ பயோ-டேட்டா எடுத்து வெச்சிருப்பியே...

    ஸார்... ஸ்டூடண்ட்ஸோட பர்சனல் விவகாரம் ஆயிரம் இருக்கும்... அதுல போய் நான் தலையிட்டுக்கிட்டிருக்க முடியுமா? எழில் செல்வன் போதை மருந்துக்கு அடிக்ட் ஆனவன்... மாசத்தில பாதி நாள் காலேஜுக்கு வர மாட்டான்... போதை மருந்தை தின்னுட்டு கட்டில்லேயே விழுந்து கிடப்பான்... யாராவது புத்தி சொன்னா அடிக்க வருவான்...

    எழில் செல்வன் ஹாஸ்டலரா? டே ஸ்காலரா?

    ஹாஸ்ட்லர்...

    சொந்த ஊர்?

    காரைக்குடி ஸார்...

    எழில் செல்வனுக்கு ரொம்பவும் க்ளோஸ் ஃப்ரண்ட் யார்?

    பெர்னாண்டஸ்...

    அவனும் போதை மருந்து சாப்பிடற ஆசாமிதானா...?

    அது எனக்குத் தெரியாது ஸார்... ஆனா அந்த பெர்னாண்டஸ் அமைச்சர் அடைக்கலராஜுக்கு ரிலேடிவ். அவனும் சரியா காலேஜுக்கு வரமாட்டான்...

    விவேக்கும் ஸ்டூடண்ட் லீடர் உதயகுமாரும் பேசிக் கொண்டிருக்கும் போதே - பக்கவாட்டு கும்பலில் நின்றிருந்த அந்த மாணவன் - தயக்க நடை போட்டு விவேக்கை நெருங்கினான்.

    ஸார்...

    விவேக் திரும்பினான்.

    அந்த ஒல்லியான மாணவன் கக்கத்தில் இடுக்கின புத்தகங்களோடு நின்றிருந்தான். படபடவென்று பேச ஆரம்பித்தான்.

    ஸார் எம்பேர்...சுந்தரராமன்...செத்துப் போன எழில் செல்வனைப் பற்றியும், அந்த பெர்னாண்டஸைப் பத்தியும் எனக்கு சில விவரம் தெரியும் ஸார்...

    விவேக் ஆர்வமாகி சொல்லு என்றான்.

    "ரெண்டு பேருமே... பாண்டி பஜார்ல இருக்கிற ஒரு பான் கடைக்கு சாயந்தரம் அஞ்சு மணியானா போயிடுவாங்க ஸார்... பான் கடை சிராஜ்தீன் இவங்க ரெண்டு பேர்க்குமே தோஸ்த் ஸார்... பெர்னாண்டஸும், எழில் செல்வனும் மெட்ராஸ்ல இருக்கிற எந்தப்

    Enjoying the preview?
    Page 1 of 1