Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கவனம் விவேக்!
கவனம் விவேக்!
கவனம் விவேக்!
Ebook113 pages37 minutes

கவனம் விவேக்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மைசூர்.
 தியேட்டர் வித்யாரண்யாவில் மாலைக் காட்சி முடிந்து கும்பலின் நடுவே மிதந்து வந்தார்கள் அரவிந்தனும் வசந்தியும்.
 அரவிந்தன் ஒரு போலீஸ் ஆபீஸர்க்குரிய கட்டுமஸ்தான உடம்போடு ஒரு ஹிந்தி பட ஹீரோவுக்குரிய முகத்தோற்றத்தை வாங்கியிருந்தான். அடர்த்தியான புருவங்களும் கவனமாய் செதுக்கப்பட்ட மீசையும், மினுமினுப்பாய் அலையடிக்கிற கிராப்பும் அவனுடைய பர்சனால்டிக்கு பக்க வாத்தியங்கள்.
 வசந்தியை வர்ணிப்பது சுலபம். 'மிஸ் கர்நாடகா' போட்டிக்கு போனால் நிச்சயமாய் பட்டத்தை வாங்கிக் கொண்டு வந்து விடுவாள். தெருவில் போகும் ஆண்களில் தொண்ணூறு சதவீதம் பேர் வசந்தியை தப்பான பார்வை பார்த்திருக்கிறார்கள்.
 "'வசந்தி! நீ போய் கேட்ல நில்லு... நான் போய் ஸ்கூட்டரை எடுத்துகிட்டு வந்துடறேன்."
 ''சீக்கிரமா வாங்க...''
 சொல்லிக் கொண்டே வசந்தி கேட்டருகே நின்று கொள்ள கும்பல் கரைந்தது. எதிரே இருந்த ராட்சஸ பேனர்களில் நடிகர் அம்பரீஷம் நம்ம ஊர் ராதாவும் சமிக்கி உடைகளில் பளபளத்தார்கள். இரண்டாவது காட்சிக்காக கெளண்டர்களின் முன்னால் எலி வால் மாதிரி சின்னச் சின்ன க்யூக்கள்.
 வசந்தி மணிக்கட்டில் இருந்த சிட்டிஸன் குவார்ட்ஸைப் பார்த்தாள்.
 நேரம் 9.50.
 "வீட்டில் அம்மாவும் நந்திதாவும் காத்துக்கொண்டிருப்பார்கள்.

இன்விடேஷன் டிஸ்ட்ரிப்யூட் பண்ண இவ்வளவு நேரமா...? என்று கோபிப்பார்கள். எங்கெங்கே போனாய்...? என்று கேள்வி கேட்பார்கள்."
 ''என்ன பதிலைச் சொல்வது?"
 யோசனையோடு நின்றிருந்த வசந்தியின் முதுகுக்குப் பின்னால் திடீரென்று இரு தமிழ்க் குரல்கள் கிளம்பியது.
 "சே! என்னமா இருக்காடா...?"
 "கன்னடப் பொண்ணுகளுக்குத்தான் இந்த உடம்புவாகு இருக்கும்.''
 "மச்சி! இடுப்பைப் பாரு... கிள்ளலாம் போலிருக்கு..."
 "டேய் மொள்ளமா பேசுடா... அவளுக்கு தமிழ் தெரிஞ்சிருக்கப் போகுது."
 ''முகரையைப் பார்த்தா... தமிழ் பேசற மாதிரி தெரியலை..."
 வசந்தி தலையை திருப்பாமல் கடைக் கண்ணால் அவர்களைப் பார்த்தாள். கல்லூரி மாணவர்கள் மாதிரி தோற்றம் காட்டினார்கள். இரண்டு பேர்களின் உதடுகளிலும் சிகரெட் தொற்றியிருந்தன.
 "மச்சி...! யார்க்கோ வெயிட் பண்றா போலிருக்கு."
 "கழுத்துல தாலி மிஸ்ஸிங்...''
 "அப்போ... இது பச்சைக் கடலைதான்னு சொல்லு..."
 "இவளைக் கட்டிக்க எவனுக்கு கொடுத்து வெச்சிருக்கோ தெரியலை...''
 ''தெரிஞ்சா என்ன பண்ணுவே...?''
 "அவனைக் கட்டிப் பிடிச்சு முத்தம் குடுப்பேன்...''
 சொன்னவன் தன் தோளை யாரோ தட்டுவதை உணர்ந்து திரும்பினான்.
 ஸ்கூட்டரோடு அரவிந்தன் நின்றிருந்தான். அவன் குழப்பமாய் கேட்டான்.'என்ன ஸார்...? எதுக்காக என் தோளைத் தட்டினீங்க...?"
 ''உன்னோட முத்தத்தை வாங்கிக்க நான் தயார். அப்படி ஓரமா போயிடலாமா...?"
 அவன் முகம் வெளுத்தான்.
 ''ஸ... ஸார்..."
 ''வர்ற இருபத்தி மூணாம் தேதி புதன் கிழமை அவ கழுத்துல நான் தாலி கட்டப் போறேன். என்னைக் கட்டிப் பிடிச்சு இங்கேயே முத்தம் குடுக்கப் போறியா...? இல்லே கல்யாண மண்டபத்துக்கு வரப் போறியா...?"
 ''ஸ... ஸார்..."
 ''மத்த ஸ்டேட்ல வந்து தமிழ்நாட்டு பேரை ஏண்டா கெடுக்கறீங்க...? எந்தப் பொண்ணாவது அழகா இருந்தா கண்டபடி பேசச் சொல்லுதோ...?"
 ''ஸ... ஸாரி... ஸார்... நாங்க தெரியாமே...''
 "மத்த பொண்ணுகளை கொச்சையா வர்ணிக்கும் போது வீட்ல இருக்கிற உங்க அக்கா தங்கச்சி ஞாபகமே வராதா...?''
 "ஸ... ஸார்...''
 வசந்தி அரவிந்தனை நெருங்கினாள்.
 ''இதெல்லாம் திருந்தாதுங்க... எலட்ரிக் போஸ்டைச் கண்டா... நின்னு காலைத் தூக்கற நாய்க மாதிரி பொண்ணுகளைப் பார்த்தா... பேசத்தான் செய்வாங்க...? நீங்க ஸ்கூட்டரை உதைங்க... நாம வீடு போய்ச் சேரலாம்..."
 "கெட் லாஸ்ட் ஃப்ரம் ஹியர்" ஸ்கூட்டரின் கிக்கரை உதைத்துக் கொண்டே அரவிந்தன் உறும -
 இருவரும் அரண்டு போய் ஓடினார்கள். வசந்தி சிரித்துக் கொண்டே பில்லியினில் ஏறி உட்கார்ந்தாள். ஸ்கூட்டர் தியேட்டர் காம்பெளண்டைத் தாண்டியது.
 அரவிந்தன் சொன்னான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 9, 2023
ISBN9798223544098
கவனம் விவேக்!

Read more from Rajeshkumar

Related to கவனம் விவேக்!

Related ebooks

Related categories

Reviews for கவனம் விவேக்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கவனம் விவேக்! - Rajeshkumar

    1

    சந்தோஷம் முகத்தில் தத்தளிக்க யமஹாவினின்றும் கீழே உதிர்ந்து வீட்டிற்குள் நுழைந்த விவேக்கை ரூபலா புன்னகையோடு எதிர்கொண்டாள். மார்புக்கு குறுக்கே கைகளை கோர்த்தபடி கேட்டாள்.

    என்ன அய்யா இன்னிக்கு அகில இந்திய சந்தோஷத்துல இருக்காரு...? கமிஷனரோ. ஐ.ஜியோ ஏதாவது ஐஸ் வெச்சு பேசினாங்களோ?

    நோ...

    ‘‘பின்னே...?"

    நீ கெஸ் பண்ணு பார்க்கலாம்... சொல்லி, சோபாவில் சாய்ந்தான்.

    லாட்டரி சீட்டு வாங்கி கடைசி ஒரு நம்பர்ல அஞ்சு ரூபாய், பத்து ரூபாய்ன்னு ஏதாவது அடிச்சீங்களா...? ரூபலா அவனை நெருங்கி கிராப்பை அளைந்து கொண்டே கேட்டாள்.

    இந்த கிண்டல்தானே வேண்டாம்ங்கிறது...?

    ‘‘உங்களுக்கு ஏதாவது பிரமோஷன்...?"

    "நோ...’’

    "என்னோட அப்பாவும் அம்மாவும் ஏதாவது லெட்டர் போட்டிருக்காங்களா?’’

    ‘‘சந்தோஷமான விஷயம்ன்னு நான்தான் சொல்லிட்டேனே. அதைப் பத்தி நினைப்பியா...?"

    ரூபலா தன் பெரிய கண்களினால் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு நாம் கார் வாங்கப் போறோமா...? என்றாள்.

    நோ...

    போதும் சஸ்பென்ஸ். என்னால தாங்க முடியாது. விஷயத்தை ‘கபால்’ன்னு சொல்லிடுங்க...

    "நாம மைசூர் போறோம்.

    ஹைய்யா! எப்போ? ரூபலா துள்ளினாள்.

    ‘‘அடுத்த ஞாயித்துக்கிழமை."

    என்ன... ஏதாவது கேஸ் விஷயமா...?

    நோ... நோ... இந்த லெட்டரைப் படிச்சுக்கிட்டிரு... நான் போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்துடறேன்... தன் சட்டைப் பையில் இருந்த இண்லேண்ட் கவரை எடுத்து அவள் கையில் திணித்துவிட்டு நகர்ந்தான் விவேக்.

    ரூபலா கடிதத்தைப் பிரித்தாள். அடித்தல் திருத்தல் இல்லாத வாக்கிய வரிகள் கண்ணில் பட்டன.

    என் இனிய விவேக்! நான் அரவிந்தன். நிறைய நாட்களுக்குப் பிறகு நான் எழுதும் இந்தக் கடிதம் உனக்கொரு சந்தோஷமான சமாச்சாரத்தை சுமந்து கொண்டு வருகிறது. எனக்கு வருகிற இருபத்தி மூன்றாம் தேதி புதன்கிழமை கல்யாணம். மைசூரில் நடக்கப் போகும் இந்த கல்யாணத்திற்கு நீயும் உன் மனைவியும் அவசியம் வர வேண்டும். உன் கல்யாணத்திற்கு நான் வராத காரணத்திற்காக நீயும் வராமல் இருந்து பழி வாங்கிவிட வேண்டாம். உன் கல்யாணத்தின் போது டெல்லியில் நடந்த ஒரு போலீஸ் ட்ரெய்னிங்கிற்காக நான் போக வேண்டி வந்தது உனக்கு ஞாபகம் இருக்கலாம். இன்னும் இரண்டு நாட்களில் அழைப்பிதழை அனுப்புகிறேன். இது ஒரு காதல் கல்யாணம். மற்றவை நேரில்.

    ஞாயிற்றுக்கிழமையன்றே உன்னை எதிர்பார்க்கும்

    நண்பன்

    அரவிந்தன்

    டவலால் முகத்தை ஒற்றியபடி பாத்ரூமினின்றும் வெளிப்பட்ட விவேக்கை நெருங்கிக் கேட்டாள் ரூபலா

    "யார்ங்க இந்த அரவிந்தன்...?’’

    "ஐ.பி.எஸ் ட்ரெய்னிங்க்ல என்னோட ரூம் மேட். அற்புதமான ஹாக்கி ப்ளேயர். பொம்பளைகளை பிசாசுன்னு திட்டுவான். இப்ப என்னடான்னா... ஒரு பொண்ணை காதலிச்சிருக்கான். எந்தப் பிசாசு அவனுக்கு தேவதை மாதிரி தெரிஞ்சுதோ...?’’

    ‘‘என்னங்க...?’’

    ‘‘மைசூர்ல கல்யாணம் முடிஞ்சதும் அப்படியே பெங்களூர்க்கு வந்து எங்கம்மா வீட்ல ஒரு நாலுநாள் இருந்துட்டு...’’

    நினைச்சேன்... நீ இதை சொல்லுவேன்னு நினைச்சேன். மைசூர்க்கு மட்டுந்தான் போறோம். கல்யாணத்தை அட்டெண்ட் பண்றோம். பிருந்தாவனத்துக்குப் போறோம். சாமுண்டீஸ்வரி ஹில்ஸ்க்கு போறோம். உடனே மெட்ராஸ் திரும்பறோம். உங்க அம்மா வீடு, தாத்தா வீடெல்லாம் இந்த டூர்ல கிடையாது.

    ரூபலா அவனை நெருங்கி தன் இரண்டு கைகளையும் கழுத்தில் மாலையாய் போட்டு தன் வெண்ணெய் கன்னத்தை அவன் கன்னத்தோடு சேர்த்து இழைத்தாள்.

    "என் ராஜா... இல்ல...’’

    நான் ராஜாவும் கிடையாது. மந்திரியும் கிடையாது.

    பிரியமான பெண்டாட்டி சொன்னா கேக்கணும்...

    இந்த சரஸமெல்லாம் என்கிட்ட வேண்டாம்...! மைசூர்க்கு போய்ட்டு, நேரா மெட்ராஸ் வர்றோம். உங்க அம்மா வீடு நஹி!

    மைசூரிலிருந்து பெங்களூர் நூத்தி நாப்பது கிலோ மீட்டர் தானே?

    "நாலு கிலோ மீட்டரா இருந்தாலும் சரி...’’

    "ஸார்... போஸ்ட்...’’ கதவருகே சத்தம் கேட்டதும்

    விவேக்கின் உடம்பினின்றும் சரேலென விலகி வாசலை நோக்கிப் போய் போஸ்ட் மேன் நீட்டிய லெட்டரை வாங்கிக் கொண்டு வந்தாள்.

    ‘‘லெட்டர் யார்க்கு?"

    எனக்குத்தான் - சொல்லிக் கொண்டே கவரின் வாயைக் கிழித்து கடிதத்தை உருவி படிக்க ஆரம்பித்தவள் அந்த நிமிஷம் முடிவதற்குள் ஆச்சர்யமாகிப் போனாள்.

    "என்ன ரூபி... மூஞ்சியில நவரசத்தையும் காட்டறே...?’’

    ‘‘இந்த லெட்டரை படிச்சுப் பாருங்களேன்.’’

    விவேக் வாங்கிப் படித்தான்.

    என் அன்பான ரூபலாவுக்கு,

    உன் ப்ரிய தோழி நந்திதாவின் கடிதம். நான் பெங்களூரிலிருந்து மைசூர்க்கு குடி போன புதிதில் உனக்கொரு கடிதம் எழுதினேன். அதற்கு உன்னிடமிருந்து பதில் வராததால் கோபமாக இருந்தேன். இனிமேல் உனக்கு கடிதம் எழுதக்கூடாது என்று தீர்மானமாக இருந்த நான் இன்று கடிதம் எழுத வேண்டிய கட்டாயம். காரணம், என் அக்கா வசந்திக்கு கல்யாணம். வருகிற இருபத்தி மூன்றாம் தேதி புதன்கிழமை மைசூர் காயத்ரிபுரம் சாமுண்டீஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடக்கப் போகிறது. மாப்பிள்ளை பெயர் அரவிந்தன். இண்டியன் போலீஸ் சர்வீஸில் ஆபீஸராக உத்யோகம். அநேகமாய் உன் கணவர்க்கு அவர் நண்பராயிருக்கலாம். நீயும் உன் கணவரும் அவசியம் கல்யாணத்திற்கு வரவேண்டும். விரைவில் உனக்கு... அழைப்பிதழை அனுப்பி வைக்கிறேன்.

    அப்புறம்? ஒரு முக்கியமான விஷயம் கேட்க வேண்டும். உனக்கு கல்யாணமாகி இரண்டு வருஷங்கள் ஆகப் போகிறது. அம்மா ‘ஆகும்’ ஸ்டேஜில் இருக்கிறாயா...?

    அன்புடன்

    நந்திதா.

    விவேக் சிரித்தான்.

    ‘‘பொண்ணு வீட்டிலிருந்தும் அழைப்பு மாப்பிள்ளை வீட்டிலிருந்தும் அழைப்பு. யார்க்கு கிடைக்கும் இந்த பாக்யம்... ஆமா... உம் பிரண்ட்டோட அக்காக்காரி வசந்தி எப்படியிருப்பா...? நல்லாயிருப்பாளா...?"

    ‘‘அமர்க்களமாயிருப்பா...’’

    "அதான் அரவிந்தன் சொக்கியிருக்கான்.’’

    விவேக் சொல்லிக்

    Enjoying the preview?
    Page 1 of 1