Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மதுமிதாவின் மஞ்சள் பக்கங்கள்
மதுமிதாவின் மஞ்சள் பக்கங்கள்
மதுமிதாவின் மஞ்சள் பக்கங்கள்
Ebook110 pages37 minutes

மதுமிதாவின் மஞ்சள் பக்கங்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஏ... ஏய்... என்ன... இது...?" நாயக் வீறிட்டார். ஜாபர் சிரிக்காமல், இறுகிய முகத்தோடு சொன்னான். "பிஸ்டல். இது... இட்டாலியன் ரிக் பிஸ்டல்... மார்க் தேர்ட். வித் சைலன்ஸர். தோட்டா சேம்பர் இந்த நிமிஷம் நிறை கர்ப்பம். மொத்தம் - ஆறு தோட்டா பாய்சன் டிப்ட்... உடம்புல பாய்ஞ்சு... ரத்தத்தை தொடர விநாடி மரணம், இன்னும் ஏதாவது விபரம் விட்டு போச்சா... மதுமிதா...?"
 மதுமிதா சிரித்தாள்.
 "எல்லா பாயிண்ட்ஸையும் கரெக்டா... சொல்லிட்டே ஜாபர்."
 நாயக் சீறினார். "என்ன துப்பாக்கியைக் காட்டி மிரட்டறீங்களா...? அரசாங்க அதிகாரிகளை கடமையைச் செய்ய விடாமே தடுக்கிறதும், ஆயுதங்களைக் காட்டி மிரட்டறதும் எவ்வளவு பெரிய கிரிமினல் குற்றம் தெரியுமா?"
 "ஆயுதத்தைக் காட்டி மிரட்டறதே பெரிய கிரிமினல் குற்றம்ன்னா ஐ.டி. சீனியர் ஆபீஸரான உங்களை சுட்டுக் கொன்னா அது எவ்வளவு பெரிய கிரிமினல் குற்றம் ஸார், மதுமிதா இருக்கிற ஸ்டேட்டஸுக்கு... சின்னச் சின்ன கிரிமினல் குற்றங்களையெல்லாம் பண்ணக்கூடாது. மதுமிதாவோட தலைமையில் - என்னுடைய முன்னிலையில் இந்த இட்டாலியன் ரிக் பிஸ்டலோட முதல் தோட்டா உங்களுக்கு..."
 சொல்லிக் கொண்டே சுட்டான் ஜாபர்.
 இடது மார்பில் தோட்டா வாங்கி, கண நேரம் விழிகள் விரிய ஸ்தம்பித்து - ஸ்லோமோஷனில் முழந்தாளிட்டு - வலது பக்கமாய் சத்தமில்லாமல் சரிந்தார் நாயக்.
 மற்ற மூன்று அதிகாரிகளும் - நடந்த பயங்கரத்தின் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருக்க - ஜாபர் மதுமிதாவிடம் திரும்பினான்"அமரர் நாயக்குக்கு அடுத்த ரேங்க் அதிகாரி யார்ன்னு சொன்னே மதுமிதா?"
 "மிஸ்டர் கெளரவ்?"
 "ஜாபரின் கையிலிருந்த பிஸ்டல் அவரை நோக்கி திரும்பியது. அவரையே குறி பார்த்தது."
 "நோ..." - அவர் மிரட்சியாய் பின் வாங்க - ஜாபர் ட்ரிக்கரை சுண்டினான்.!
 தோட்டா கெளரவ்வின் அடிவயிற்றை ரத்த நாசம் செய்ய - அவர் பிடிப்பில்லாமல் குப்புற விழுந்து - நிசப்தமானார்.
 மீதி இருந்த இரண்டு அதிகாரிகளும் - வியர்த்து வழிந்து கொண்டு கும்பிட்டார்கள். "நாங்க ரெய்ட் வேண்டாம்ன்னு சொன்னோம். இந்த சீனியர் ஆபீஸர்கள் ரெண்டு பேருமே கேட்கலை."
 ஜாபர் அவர்களை நெருங்கினான்.
 "அப்படீன்னா... நீங்க ரெண்டு பேரும்... இஷ்டமில்லாமே அவங்க வார்த்தைக்கு கட்டுப்பட்டுத்தான் வந்திருக்கீங்க...?"
 "ஆமா..."
 "உங்க பேரென்ன?"
 "யஷ்பால்."
 அடுத்தவரை ஏறிட்டான். "உங்க பேரு..."
 "மோதி."
 "மிஸ்டர் யஷ்பால்! அண்ட் மிஸ்டர் மோதி! நான் இப்போ கேக்கப் போகிற கேள்விகளுக்கு நீங்க உண்மையான பதில்களைச் சொன்னா உங்க உயிர் உங்களுக்கு. இல்லேன்னா... இந்த பிஸ்டலில் இருக்கிற ரெண்டு தோட்டாக்களுக்கு...."
 "நீ... நீங்க என்ன கேட்டாலும் சொல்றோம்..."
 "இந்த பங்களாவை ரெய்ட் பண்ணச் சொல்லி உத்தரவு போட்டது யாரு..."யாரும் உத்தரவு போடலை...! - நாயக் திடீர்ன்னு எடுத்த முடிவுதான் இது... கெளரவ்வும் இதுக்கு சப்போர்ட் பண்ணினார்."
 "உங்ககிட்டே நாயக் என்ன சொன்னார்?"
 "மதுமிதா பங்களாவை ரெய்டுக்கு உட்படுத்தி - இன்னிக்கு முக்கியமான சில தஸ்தாவேஜுகளை கைப்பற்றப் போறோம். கைக்கு கிடைக்கப் போகிற அந்த தஸ்தாவேஜுகள் நம்ம நாட்டு அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது ஒரு ரகசியமான ஏற்பாடு. எனக்கு நம்பகமாக கிடைச்ச ஒரு தகவலின் பேரில்தான் புறப்பட்டு போறோம்ன்னு சொன்னார்..."
 "அவர்க்கு கிடைச்ச நம்பகமான தகவல்! எதுன்னு தெரியுமா?"
 "தெரியாது."
 "தகவல் கொடுத்த நபர் யார்ன்னு சொல்ல முடியுமா?"
 "தெரியாது..."
 "ராணுவ மந்திரி குப்தா தத்துக்கும், மதுமிதாவுக்கும் ஒரு தொடர்பு இருக்கிற விஷயம் உங்க - நாலு பேர்க்கும் தெரியுமா?"
 "....."
 "சொல்லுங்க தெரியுமா?"
 "தெ... தெரியும்..."
 "எதிர்கட்சித் தலைவர்களை... நாயக்... சந்திச்சு பேசுவாரா?"
 "நேர்ல பேசமாட்டார். போன்ல பேசுவார்."
 "எங்ககிட்டே என்ன மாதிரியான தஸ்தாவேஜுகளை எதிர்பார்த்துட்டு வந்தீங்க?"
 "வந்து... வந்து..."
 "உண்மையைச் சொன்னா உயிர் உங்களுக்கு. இல்லேன்னா இந்த பிஸ்டல் தோட்டாக்களுக்கு...ஆர்மீ ஸீக்ரெட்ஸ் சம்பந்தப்பட்ட சில முக்கியமான தஸ்தாவேஜுகள்... - இந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா... நாயக் சொன்னார்..."
 ஜாபரும் மதுமிதாவும் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டார்கள். மதுமிதா மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு எழுந்தாள். யஷ்பாலை நோக்கிப் போனாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 18, 2023
ISBN9798223568216
மதுமிதாவின் மஞ்சள் பக்கங்கள்

Read more from Rajeshkumar

Related to மதுமிதாவின் மஞ்சள் பக்கங்கள்

Related ebooks

Related categories

Reviews for மதுமிதாவின் மஞ்சள் பக்கங்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மதுமிதாவின் மஞ்சள் பக்கங்கள் - Rajeshkumar

    1

    இந்த முதல் அத்தியாயத்திற்குள் நீங்கள் - நுழையும் போது - மதுமிதா - குளித்துக் கொண்டிருந்தாள். குளிக்கும் போது ஒரு பெண்ணை வர்ணிப்பது - இந்து தர்ம சாஸ்திரப்படி தப்பு என்பதாலும், நான் ஏற்கெனவே மதுமிதாவை பார்த்திருக்கிறேன் என்ற காரணத்தினாலும் அடுத்த பேராவில் அவளைப் பற்றி சொல்லியிருக்கிறேன்.

    மதுமிதாவுக்கு கேரளா பூர்வீகம். வடக்கன் தாரா என்கிற ஒரு அழகான மலையாள கிராமத்தில் ஜனித்தவள். ஜாதியெல்லாம் நமக்கு வேண்டாம். பிரம்மனுக்கும், அவளுக்கும் அப்படி என்னதான் உடன்பாடோ தெரியவில்லை. மதுமிதா பத்தாவது படிக்கும் போதே - கெட்டியான வெண்ணெய்ச் சிலை. பள்ளிக் கூடத்தில் பாடம் நடத்த வந்த ஆசிரியர்கள். அவளைப் பார்த்து அடிக்கடி எச்சில் விழுங்கிக்கொண்டார்கள். கட்டின மனைவிகளுக்கு மனசளவில் துரோகம் செய்தார்கள். பெண் ஆசிரியைகள் பொறாமைத் தீயில் வெந்தார்கள். ‘ஈ பெண் - குட்டிக்கு - எந்தா... ஒரு... அபரிமித செளந்தர்யம்’ - என்று பெருமூச்சு விட்டு பேசிக்கொண்டார்கள். ஊரில் இருக்கிற இளைஞர்களின் ராத்திரி கனவுகளில் - மதுமிதா விதவிதமாய் கற்பழிக்கப்பட்டாள்.

    அவள் ஸ்கூல் பைனலை முடிப்பதற்குள் ஹெட்மாஸ்டர் உன்னி கிருஷ்ணன் தன் ஐம்பது வயது இளமையோடு - மதுமிதாவிடம் இரண்டு முறை தப்பாக நடக்க முயன்றதால் - அவளுடைய அப்பாவும் அம்மாவும் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார்கள். படிப்பை நிறுத்திய மறு மாதமே... மதுமிதாவின் அம்மா கால்வாய்க்கு குளிக்கப் போனவள் அங்கேயே ஜலமோட்சம் பெற்றுவிட - அதற்கடுத்த மாதம் மதுமிதாவின் அப்பா தங்கப்பன் - இரண்டாம் தாரமாய் கலாவதி என்கிற ஒரு நாடக நடிகைக்கு மனைவி ஸ்தானத்தை கொடுக்க - மதுமிதாவின் வாழ்க்கையில் விதி தன் கடைவாய்ப் பற்கள், சொத்தைப் பற்கள் தெரிய சிரித்தது. ஆறே மாதம்தான். தங்கப்பன் பக்கவாதத்தில் கயிற்றுக் கட்டிலோடு முடங்கிக் கொள்ள - ஆட்சி கலாவதியின் கைக்கு வந்தது, திருச்சூரில் இருக்கும் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் - காபரே ஆடுவதற்கு ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸை வாங்கிக் கொண்டு - மதுமிதாவை அங்கே அனுப்பி வைத்தாள்.

    ஆரம்பத்தில் மதுமிதா முரண்டு பிடித்தாள். ஆடமாட்டேன் என்று பிடிவாதம் காட்டினாள். ஆனால் போகப் போக மசிந்தாள். பணம் கொடுத்த சுகத்தில், கற்பு என்கிற விஷயம் மரத்துப் போக ஆரம்பித்தது. மகளை தப்பான வழிக்கு திருப்பிவிட்ட கலாவதியை - ஒருநாள் ராத்திரி தங்கப்பன் நன்றாக இழுத்து இடது கையின் உதவியோடு அரிவாளால் வெட்டி வீழ்த்திவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டான்.

    மதுமிதா இப்போது 100% அநாதை. பழகிப்போன காபரே வாழ்க்கையை தீவிரமாக்கினாள். பம்பாய், டில்லி, ஸ்டார் ஹோட்டல்களுக்கு விமானத்தில் போய் உடலைக் காட்டிவிட்டு வந்தாள். தன் இருபத்தியோராவது வயதில் - இந்த விமான அலைச்சல் பிடிக்காமல் போகவே... டெல்லி ‘ஜோதி பாக்’கில் ஒரு பங்களாவை வாங்கிக் கொண்டு – அங்கேயே செட்டிலாகி விட்டாள். இந்த பங்களாவில்தான் இப்போது அவள் குளித்துக் கொண்டிருக்கிறாள்.

    குளியலறையின் கார்னரில் இருந்த - இன்டர்காம் ரிஸீவர் துடித்தது - சோப் நுரை ததும்பிய பாத் டப்புக்குள் மல்லாந்து படுத்திருந்த மதுமிதா - லேசாய் எரிச்சலாகி - பாத் டப்பினின்றும் எழுந்தாள்.

    உடம்பினின்றும் நீர் சொட்ட ஏவாளாய் நடந்து போய் - இண்டர்காமின ரிஸீவரை எடுத்தாள்.

    அவளுடைய பாடிகார்ட், பர்சனல் செக்ட்ரட்ரி, மானேஜர் என்றெல்லாம் வெளி வட்டாரத்தில் பலவிதமாக அழைக்கப்படுகிற ஜாபர் பேசினான்.

    மதுமிதா! நீ குளிச்சிட்டியா?

    குளிச்சிட்டிருக்கேன்.

    சீக்கிரமா குளிச்சுட்டு வா...

    ஏன் என்ன விஷயம்?

    இன்கம்டாக்ஸ் ஆபீஸிலிருந்து ஆபீஸர்ஸ் வந்திருக்காங்க.

    ரெய்டா...

    ஆமாம்...

    ராத்திரி எட்டுமணிக்கு ரெய்டா...? எத்தனை பேர் வந்திருக்காங்க...

    நாலுபேர்...

    சரி... நம்ம ஆடிட்டர்க்கு போன் பண்ணு...

    ஆடிட்டர்தான் ஊர்ல இல்லையே...! கல்யாணத்துக்காக க்வாலியர் போயிருக்கிறவர் அடுத்த வாரம்தானே வருவார்

    வந்திருக்கிறவங்க சீனியர் ஆபீஸர்ஸா...?

    ஆமா...

    சரி... கூல்ட்ரிங்க் குடுத்து... பேசிட்டிரு... வந்துடறேன்...

    மதுமிதா ரிஸீவரை வைத்துவிட்டு - நிதான நடையோடு - பாத் டப்புக்கு போய் - சோப்பு நீரில் அமிழ்ந்து ஸ்பான்ச்சில் தேய்த்துக் குளித்து - தேங்காய்ப்பூ துவடால் உடம்பில் ஈரத்தை ஒற்றியெடுத்துவிட்டு சூடிதாரிக்குள் நுழைந்து - அக்குள்களில் சென்ட்டை பீய்ச்சிக் கொண்டு - வெளியே வந்தாள்.

    ஹால் வராந்தா சோபாக்களில் - அந்த வழுக்கைத் தலை அதிகாரிகள் இறுகின முகங்களோடு காத்திருந்தார்கள். மதுமிதா அவர்களை புன்னகையோடு நெருங்கினாள்.

    கூல்ட்ரிங்க் சாப்பிட்டீங்களா...?

    அதிகாரி ஒருவர் எழுந்தார். சட்டைப் பைக்கு மேல் - நேம் பேட்ச் ஜே.எம். நாயக். சீனியர் ஐ.டி. ஆபீஸர், என்று சொன்னது.

    இதோ பாருங்கள். மிஸ் மதுமிதா... எங்களுக்கு எந்த உபச்சாரமும் வேண்டியதில்லை. நாங்கள் ஐ.டி. பீப்பிள். இந்த வீட்டை சோதனை போடுவதற்காக வந்திருக்கிறோம்.

    நான் ஒரு பார்ட்டிக்கு கிளம்பிட்டிருக்கேன்...! இந்த நேரத்துல வந்து தொந்தரவு பண்றீங்களே ஸார்...

    எங்களுக்கு எந்த நேரமும் ஒண்ணுதான்... பங்களாவில் இருக்கிற அத்தனை லாக்கர்களோட ‘கீ’ பன்ச்சை தர்றீங்களா?

    சாவிக் கொத்தை தர்றதுக்கு முன்னாடி ஒரு கேள்வி.

    என்ன...?

    இந்த பங்காளவை ரெய்ட் பண்றதுக்கான உத்தரவு உங்ககிட்டே இருக்கா...?"

    இது ‘இன் காமிரா’ ஆர்டர். உத்தரவு எழுத்து வடிவில் இருந்திருந்தா... விஷயம் இந்நேரம்... உங்களுக்கு... கசிஞ்சிருக்கும். நீங்களும் உஷாராகியிருப்பீங்க.

    சோபாவுக்கு கொஞ்சம் தள்ளி - நின்றிருந்த ஜாபர் மெதுவாய் நடந்து முன்னால் வந்தான். "மதுமிதாவைப் பத்தி தீர

    Enjoying the preview?
    Page 1 of 1