Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உயிர் எடுப்பான் தோழன்
உயிர் எடுப்பான் தோழன்
உயிர் எடுப்பான் தோழன்
Ebook72 pages23 minutes

உயிர் எடுப்பான் தோழன்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சேலம்.
 சொர்ணபுரி.
 ஏழாவது க்ராஸ் ரோட்டின் முதல் பங்களா.
 ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணிக்கு தூக்கம் கலைந்துபோன பத்மஜா மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தபோது... அவளுடைய அப்பா சுந்தரம் யாரோடோ டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தார்.
 "இதோ பார் ரங்கராஜா... அவங்க தங்கிட்டு ஒரு நாள்ல போயிடுவாங்க இல்லையா?"
 "....."
 "மொத்தம் எத்தினிபேரு... அஞ்சு பேரா...? ப்ரொட்யூசர், டைரக்டர், ரெண்டு நடிகைங்க... ஒரு நடிகரா...? சரி... சரி வரச்சொல்லு... ராத்திரி ஏற்காடு எக்ஸ்பிரசுக்கு நிச்சயம் போயிடுவாங்கன்னு சொல்றதுனால நான் ஒத்துக்கறேன்..."
 ரிசீவரை வைத்துவிட்டு சுந்தரம் நிமிர்ந்தபோது-
 பத்மஜா ஆர்வமாய் கேட்டாள்...
 "என்னப்பா சினிமா ஆக்டர், ஆக்ட்ரஸ் நம்ம வீட்டுக்கு வரப்போறாங்களா...?"
 "ஆமாம்மா... ரங்கராஜனுக்கு அந்த சினிமா ப்ரொட்யூசர் ரொம்பவும் ப்ரண்டாம்... ஏற்காடுல ஷூட்டிங்கை முடிச்சுக்கிட்டு கொஞ்ச நேரத்துல சேலம் வரப்போறாங்களாம். ஊர்ல இருக்கிற எல்லா நல்ல லாட்ஜும் புல்லாயிருச்சாம்... அவனோட பங்களாவில் ப்ளோரிங் வேலையும் மராமத்து வேலையும் நடந்துட்டிருக்காம். அதனால ஏற்காட்டிலிருந்து வர்ற அஞ்சு பேர்க்கு ராத்திரி பத்து மணி வரை நம்ம பங்களாவில் இடம் கொடுக்கச்சொல்றான்... இந்த சினிமாக்காரங்களை வீட்ல தங்க வெச்சுக்கணும்ன்னாலே... மனசுக்கு என்னமோ மாதிரி இருக்கம்மா..."
 பத்மஜா கோபப்பட்டாள்.
 "என்னப்பா... நீங்க... சினிமா நடிகர், நடிகைகிட்டே ஆட்டோகிராப் வாங்கி அதை பார்க்கிறதுல எத்தனை பேர்க்கு சந்தோஷம் தெரியுமா...? நம்ம வீட்டுக்கு எந்த நடிகர் நடிகை வரப்போராங்கப்பா?"
 "விஷ்ணுகுமார்...ன்னு ஒரு நடிகன், கல்பகா, தாரிணின்னு ரெண்டு நடிகைங்க. கமலக்கண்ணன் ஒரு டைரக்டர்... அப்புறம் ப்ரொட்யூசர்... மொத்தம் அஞ்சு பேர் வர்றாங்களாம்..."
 "விஷ்ணுகுமார்... கல்பகா நம்ம வீட்ல தங்கப் போறாங்களா...?" ஒரு சின்னக் குழந்தையின் சந்தோஷத்தோடு எம்பிக் குதித்தாள் பத்மஜா.
 "அப்பா அவங்க ரெண்டு பேரும்தான் இன்னிக்கு சினிபில்டுல டாப்... அவங்க ரெண்டுபெரையும் பார்க்கிறதுக்காக அவங்க வீட்டு வாசல்ல ஒரே டூரிஸ்ட் பஸ்சா காத்திருக்குமாம்"
 சுந்தரம் ஏரிச்சலானார். "நம்ம நாடு குட்டிச்சுவரா போனதுக்கு காரணமே... நம்ம ஜணங்களோட இப்பேர்ப்பட்ட மனப்பான்மைதாம்மா... வீட்ல இருக்கிற பெண்டாட்டிக்கு ஒரு முழம் பூ வாங்கி ஆசையா தர மாட்டான்... ஆனா... உயிரில்லாத நடிகனோட கட் அவுட்டுக்கு ஆளுயர மாலையைப் போட்டு சந்தோஷப்படுவான்... தேசம் எப்படிம்மா முன்னேறும்...?"
 சுந்தரம் சொன்னது பத்மஜாவின் காதுகளில் விழவே இல்லை... அவள் டெலிபோனை நோக்கி ஓடினாள். ரிசீவரைக் கையில் எடுத்துக்கொண்டு விமலாவுக்கும் ஜெயந்திக்கும் டயலைச் சுழற்றி அவர்கள் மறுமுனையில் கிடைத்ததும் 'விஷ்ணுகுமார், கல்பகா வரப்போகிற' விஷயத்தை ஆர்வமாய்ச் சொன்னாள்.
 அவளுடைய ஆர்வத்தைப் பார்த்து எரிச்சல் பட்டுக்கொண்டே உள்ளேயிருந்து வந்தாள் தனம். பத்மஜாவின் அம்மா.
 கணவரிடம் சீறினாள்.இவ ஏற்கனவே சினிமா பைத்தியம் வாரத்துக்கு ரெண்டு சினிமா பார்காட்டி மண்டையே இவளுக்கு வெடிச்சிடும்... போதாக்குறைக்கு சினிமாக்காரங்களும், நம்ம வீட்லேயே வந்து தங்கினா இவளுக்கு பைத்தியம் முத்திப்போயிடும்... அந்த ரங்கராஜன் சொன்னா நீங்க எப்படி ஒத்துக்கலாம்... அவர்க்கு வேற யாருமே ப்ரண்ட்ஸ் கிடையாதா...? நீங்க ஒருத்தர் மட்டுந்தான் இருக்கீங்களா...? அந்த ரங்கராஜனுக்கு போன் பண்ணி... அவங்க தங்கறதுக்கு வேற ஏதாவது இடம் பார்க்கச் சொல்லுங்க..."
 "சேச்சே! சொன்னா முன்னாடியே சொல்லியிருக்கணும்... வரச் சொன்ன பின்னாடி திரும்பவும் போன் பண்ணி வர வேண்டாம்னு சொல்றது சரியில்லை தனம்... இன்னிக்கு ஒருநாள்தானே... இருந்துட்டு போகட்டும்..."
 "விருந்து... கிருந்துன்னு எதையுமே என்னை பண்ணச் சொல்லாதிங்க... எல்லாத்தையும் ஹோட்டல்லயிருந்தே வாங்கிட்டு வந்து போடுங்க... வயசுப் பொண்ணு இருக்கிற வீட்ல சினிமாக்காரங்க வந்து தங்கினா... ஊர்ல நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க..."
 பத்மாஜா குறுக்கிட்டாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223362050
உயிர் எடுப்பான் தோழன்

Read more from Rajeshkumar

Related to உயிர் எடுப்பான் தோழன்

Related ebooks

Related categories

Reviews for உயிர் எடுப்பான் தோழன்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உயிர் எடுப்பான் தோழன் - Rajeshkumar

    1

    விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது அந்த வியாழக்கிழமையின் இரவு.

    ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்த அந்த ராமகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் உடம்பு பூராவும், சரம்சரமாய் ஆர்வோ நிறங்களில் சீரியல் பல்புகள் மின்சாரத்தைத் தின்று ஒளிர்ந்து கொண்டிருக்க... சாரங்கி ராகத்தில் உள்ளேயிருந்து நாதஸ்வரம் வழிந்து கொண்டிருந்தது...

    மண்டபத்தின் முன்புறமாய் இருந்த அகலமான ரோட்டில்... சொற்பமாய்ச் சில கார்களும், ஏராளமான ஸ்கூட்டர்களும் மொய்த்திருந்தன.

    நீட்டிய சந்தனப் பேலாவில்... கைவிரல்களை நனைத்து... ஒரு சின்னத் தூறலாய் பன்னீர் தெளிப்பு மேலே வந்து விழ... ஆண்களும் பெண்களுமாய் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். வரிசையாய்ப் போடப்பட்டிருந்த நாற்காலிகளிலெல்லாம் கூட்டம் நிரம்பியிருக்க, இடம் கிடைக்காதவர்கள் மண்டபத்து ஓரமாய் நின்றபடி கதையளந்து கொண்டிருந்தார்கள்.

    இப்போ மணி அஞ்சரை... ஆறரை மணிக்குத்தான் முகூர்த்தம்... இருந்தாலும் கூட்டத்தைப் பார்த்தீங்களா...? இந்நேரத்துக்கே மொலு மொலுன்னு வந்துடுச்சு... தோளில் துண்டு போட்டிருத்த ஒருத்தர், வழுக்கைத்தலைக்காரரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

    மாப்பிள்ளையோட அப்பா சிவராமனுக்கு உறவுக்காரங்களைக் காட்டிலும் சிநேகிதக்காரங்கதான் ஜாஸ்தி... அதான் கூட்டம் ரொம்பி வழியுது…

    மாப்பிள்ளை பையன் கிருஷ்ணா ஒரு டாக்டர்... நிறைய குடும்பத்துக்கு அவரும் பரிச்சயமாகியிருப்பார்... அந்தக் கூட்டமும் சேர்ந்துடுச்சு... இப்பவே இப்படீன்னா இனி ஆறரை மணிக்கு மண்டபத்துக்குள்ளே யாரும் வர முடியாது போலிருக்கே...

    பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு இதே ஊர்தானா...?

    இல்ல... அவங்க சேலம்... வசதியான குடும்பம்... நீங்க இன்னும் பொண்ணைப் பார்க்கலையே...? அம்சம்ன்னா அம்சம்... அப்படியொரு அம்சம்... மாப்பிள்ளை கிருஷ்ணாவுக்கும் அந்தப் பொண்ணு பத்மஜாவுக்கும் செம பொருத்தம்... ஆயிரத்துலே ஒரு ஜோடிதான் இப்படி அமையும்...

    கும்பலில் பேச்சுக்கள் விதவிதமாய்க் கிளம்பிக்கொண்டிருந்த அதே வினாடிகள்...

    மண்டத்தின் வாசலில்... அந்த ஆட்டோ வந்து நின்றது.

    ஒரு சின்னப்ரிப்கேஸை எடுத்துக்கொண்டு உயரமாய் அவன் இறங்கினான். அந்நேரத்துக்கே தேவையில்லாமல் - கண்களுக்கு கூலிங்கிளாஸ் கொடுத்திருந்தான். தாடைப்பிரதேசம் பூராவும் தாடிப்பயிர் தெரிந்தது. மேலுதட்டுப்பரப்பில் சுண்டு விரல் பருமனில் மீசை. பட்டன்கள் கழண்டிருந்தஸ்டோன் வாஷ்சர்ட் மார்பைக் காட்ட மார்புரோமத்தில் ஸ்வஸ்திக் டாலர் வைத்த தங்கச் சங்கிலி புரண்டது.

    வாசலில் சந்தனப் பேலாவும் பன்னீர்ச் சொம்புமாய் நின்றிருந்தவர்களை நெருங்கி மெல்லிய குரலில் கேட்டான்.

    டாக்டர் கிருஷ்ணாவோட மேரேஜ் இந்த மண்டபந்தானே?

    ஆமா...

    நான் அவரோட ப்ரெண்ட், மெட்ராஸிலிருந்து வர்றேன்... அவர் எந்தரூம்ல இருக்கார்ன்னு சொல்ல முடியுமா...? அவன் கேட்க சந்தனப் பேலாவோடு நின்றிருந்தவர், தன்னருகே நின்ற பையனிடம் சொன்னார்.

    டேய்... தாமு... சாரை மாப்பிள்ளையோட ரூமுக்கு கூட்டிப் போய் விட்டுட்டு வா... என்றார்.

    வாங்க ஸார்...

    அந்தப் பையன்- கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னால் போக...

    அவன் தொடர்ந்தான்.

    எஸ்மாதிரி வளைந்து போன மாடிப்படிகளில் ஏறி வராந்தாவைத் தொட்டு கடைசி அறையைக் காட்டினான் பையன்.

    அதோ... அந்த ரூம்தான் ஸார்...

    தேங்க்ஸ் தம்பி...

    பையனின் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டு சாத்தியிருந்த அறைக்கதவைத் தள்ளினான்.

    கதவு சுலபமாய் உள்ளே போயிற்று.

    கண்ணாடி முன் நின்று வேஷ்டிச் சட்டை சரிபார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணா, கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டுத் திரும்பினான்.

    கிருஷ்ணாவுக்கு சராசரி உயரம். மாநிறம். எம்.பி.பி.எஸ். பட்டம் வாங்குவதற்குள்... தலையின் பின்பக்கம் லேசாய் செல்லமாய் ஒரு இளவழுக்கை வாங்கியிருந்தான். முகம் படிப்பு வாசனையோடு தெரிந்தது.

    அறைக்கதவை திறந்து கொண்டு... உள்ளே வந்தவனை சில வினாடிகள் இமைக்காமல் உற்றுப்பார்த்தான் கிருஷ்ணா.

    யா... நீங்க...?

    வந்தவன் தாடி மீசைக்கு மத்தியில்... பல்வரிசை

    Enjoying the preview?
    Page 1 of 1