Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

திகில் காலம்
திகில் காலம்
திகில் காலம்
Ebook97 pages30 minutes

திகில் காலம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலை பதினோரு மணி.
 சென்டரல் ஜெயில் முகப்புக்கு முன்பாய் - மஞ்சளாய் பூத்துக் கொட்டியிருந்த மரத்துக்குக் கீழே தன் 118 NE பியட்டை நிறுத்தினார் டாக்டர் தயாபரன். காரின் நான்கு பக்க கண்ணாடிகளை ஏற்றிவிட்டு - வெளியே வந்து - லாக் செய்து கொண்டு - சென்ட்ரீஸ் காபினை நோக்கிப் போனார்.
 டாக்டர் தயாபரனுக்கு முப்பது வயது இருக்கலாம். அந்த இளம் வயதிலேயே முன் மண்டையில் இலையுதிர் காலம் - தெரிந்தது. அளவாய் சதை போட்ட உடம்பை பிஸ்கெட் நிற சஃபாரி கவ்வியிருக்க - கண்களில் ரேபான் குளிர் கண்ணாடி.
 செண்ட்ரி காபினை நெருங்கி தன்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்தார். "அயாம் டாக்டர் தயாபரன். ஜெயில் சூப்பிரண்ட் மிஸ்டர் பன்னீர் செல்வத்தைப் பார்க்கணும்..."
 "அவர் வரச் சொல்லியிருந்தாரா...?"
 "இல்லை..."
 "ஒரு நிமிஷம்..." பெரிதாய் மீசை வைத்து நெற்றியில் தழும்பு வாங்கியிருந்த அந்த செண்ட்ரி - மெஸேஜ் டெலிபோன் மூலம் ஜெயிலின் உட்பகுதியை தொடர்பு கொண்டு பேசினார்.
 "ஸார், நான் செண்ட்ரி. டாக்டர் 'தயாபரன்'னு ஒருத்தர் உங்களைப் பார்க்க வந்திருக்கார்."
 "டாக்டர் தயாபரன்...?"
 "எஸ்... ஸார்..."
 "ரிஸீவரை அவர்கிட்ட குடு."

செண்ட்ரி ரிஸீவரை டாக்டரிடம் நீட்ட - அவர் வாங்கி பேசினார். "மிஸ்டர் பன்னீர் செல்வம் என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கா...?"
 "இருக்கு... ரெண்டு வருஷத்துக்கு முந்தி ப்ளட்டோனர்ஸ் அஸ்ஸோசியேஷன் ஏற்பாடு பண்ணின ஒரு விழாவில் கலந்துகிட்டோம். மேடையில் நீங்க ஒரு ஓரத்துல... நான் ஒரு ஓரத்துல இருந்ததினால பேசிக்க முடியலை. ஹலோ சொல்லி கை குலுக்கிட்டதோடு சரி..."
 "என்னை ஞாபகம் வெச்சுக்கிட்டு இருக்கிறதை நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு."
 "ஏதாவது முக்கியமான விஷயமா...?"
 "ஆமா."
 "ப்ளீஸ் கம்..."
 தயாபரன் ரிஸீவரை செண்ட்ரியிடம் கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தார். ஜெயிலுக்குள்ளே மஹா நிசப்தம்.
 நடந்தார்.
 சூப்பிரண்டெண்ட் பன்னீர் செல்வம் - தன்னுடைய அறை வாசலிலேயே காத்திருந்து உள்ளே கூட்டிப்போனார். சன்னல் வெளியே தொலை தூர மைதானத்தில் - தவிக்கும் - வெய்யிலில் - கைதிகள் ஏதோ பணியில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. வார்டன்களின் விசில் சத்தம் காற்றைச் சீறியது.
 "உட்காருங்க டாக்டர்..."
 தயாபரன் உட்கார்ந்தார்.
 "அந்த ஃபங்ஷனுக்கு அப்புறம் உங்களை பார்க்கவே முடியலை."
 "ரெண்டு பேருமே வெவ்வேறு துறை... சந்திக்க வாய்ப்பு இல்லை. இப்போ ஒரு வாய்ப்பு வந்திருக்கு..."
 "நான் என்ன பண்ணனும் சொல்லுங்க டாக்டர்..."
 தயாபரன் தன் பர்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த அந்த பேப்பர் கட்டிங்கை எடுத்து - பன்னீர் செல்வத்திடம் நீட்டினார். அவர் வாங்கிப் பார்த்தார்அது ஒரு தமிழ் நாளிதழின் பேப்பர் கட்டிங். வாசகங்களின் மேல் பார்வை நிலைத்தது.
 ஒரு தூக்கு தண்டனைக் கைதியின் கோரிக்கை.
 தலைப்புச் செய்திக்கு கீழே - வாசகங்கள் ஓட அதை படித்தார்.
 சீனிவாசகுமார் வயது முப்பத்தி ஐந்து. அவர் ஒரு தூக்குத் தண்டனை கைதி. தூக்கில் போடும் தேதி இன்னும் முடிவாகாததால் அந்த தேதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். ஒரு வியாபாரத்தில் தன்னுடைய பார்ட்னர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்ற காரணத்திற்காக - அவர்களை கத்தியால் குத்தி கொலை செய்தார் இவர். இந்த சீனிவாசகுமார் நம் பத்திரிகை அலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் அவர் தான் தூக்கில் போடப்படுவதற்கு முன் - ஒரு சிறுநீரகத்தை யார்க்கேனும் தானமாக தர விரும்புவதாகவும் - அதேபோல் தான் தூக்கில் போடப்பட்ட பின் தன்னுடைய கண்களை தானமாய் தர விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும்..."
 பன்னீர் செல்வம் பேப்பர் கட்டிங்கை படித்தார். புன்னகையோடு நிமிர்ந்து ஏறிட்டார்.
 "அந்த சீனிவாசகுமாரை நீங்க இப்ப பார்க்க விரும்பறீங்க இல்லையா டாக்டர்...!"
 "ஆமா..."
 "யார்க்காவது உங்க பேஷண்ட்டுக்கு கிட்னி தேவைப்படுதா?"
 "எஸ்..."
 "பேஷண்ட் யார்...?"
 "என்னோட சிஸ்டர்..."
 பன்னீர் செல்வம் முகத்தில் கவலை காட்டினார். "மை குட்னஸ்."

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 4, 2024
ISBN9798224394227
திகில் காலம்

Read more from Rajeshkumar

Related to திகில் காலம்

Related ebooks

Related categories

Reviews for திகில் காலம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    திகில் காலம் - Rajeshkumar

    1

    சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திற்குள் அந்த விரைவுப் பேருந்து - நுழைந்தபோது நள்ளிரவு நேரம் 1.05. பஸ் நிலையம் வெறிச்சோடிப் போயிருந்தது. புக் ஸ்டாலும், பால் விற்பனைக் கூடமும் பலகைகளால் சாத்தப்பட்டு தெரிய - அதன் வாசல்களில் நான்கைந்து பேர் லுங்கிகளை போர்த்திக் கொண்டு - ஒருக்களித்து படுத்திருந்தார்கள். டிக்கெட் கெளண்டரில் டியூப் லைட் வெளிச்சம் தெரிந்தது. சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த ஒருவன் உட்புறம் பார்த்து குரல் கொடுத்தான்.

    மூர்த்தி! திருச்சி வந்துட்டான்...

    பாஸஞ்சர்ஸ் எப்படி...?

    பாதி வண்டி காலி... ஆனா, டாப் காரியர்ல செம லக்கேஜ்...

    ஓவர் லக்கேஜ் போட்டுகிட்டு வர வேண்டாம்ன்னு எத்தனையோ தடவை மெமோ கொடுத்தாச்சு... ட்ரைவர் சண்முகமும் சரி, அந்த கண்டக்டர் இராஜேந்திரனும் சரி காதுலேயே போட்டுக்கிறதில்லை...

    ரெண்டு தடியன்களும் வர்றானுக... மெதுவா பேசு...

    ஏன் மெதுவா பேசணும்? எதுக்காக பயம்? நான் ரூல்ஸ் படி பேசிட்டிருக்கேன்!

    சண்முகம் - ராஜேந்திரன் உள்ளே வந்தார்கள்.

    பேஜார் ட்ரிப்...

    என்ன ராஜேந்திரன்...? இது கல்யாண சீஸன். வண்டியில் கும்பலையே காணோம்...?

    அதான் எனக்கும் புரியலை...

    ஆமா... எதுக்கு இவ்வளவு லக்கேஜை அலவ் பண்ணியிருக்கே?

    அலவ் பண்ணலைன்னா... முதுகு டின் கழண்டுடும்.

    என்ன சொல்றே...?

    அத்தனையும் எம்.எல்.ஏ. கோகுல்வாசனோட வீட்டுச் சாமான்...! ரெண்டு நாளைக்கு லாரியெல்லாம் ஸ்ட்ரைக்காமே...? லாரியில எதையும் புக் பண்ண முடியாதுன்னு... எம்.எல்.ஏ.வோட ஆட்கள் திருச்சி பஸ் ஸ்டாண்ட்லேயே வெச்சு ஏத்தி உட்டுட்டானுங்க... எதிர்த்து பேச முடியுமா...? கையும், காலும் ஒழுங்கா இருக்க வேண்டாம்? வாயையும் பின் பக்கத்தையும் மூடிக்கிட்டு கம்ன்னு இருந்துட்டோம்...

    அறை வாசலில் அந்தக் குரல் கேட்டது.

    ட்ரைவர் அண்ணே...!

    ராஜேந்திரன் திரும்பினான்.

    கலாஸி ஆட்கள் நான்கு பேர் நின்றிருந்தார்கள்.

    என்ன...?

    டாப் காரியர்ல எக்கச்சக்கமா சாமான் குவிஞ்சிருக்கு. பாஸஞ்சர்செல்லாம் இறங்கி போயிட்டாங்க... லக்கேஜ் யாரோடது...?

    இதெல்லாம் எம்.எல்.ஏ. வீட்டு - லக்கேஜ்...

    எறக்கி வெக்கவா...?

    ம்... எறக்குங்க... சொன்ன ராஜேந்திரன் தன் கையில் வைத்திருந்த ஒரு துண்டுச் சீட்டை கெளண்டர் ஆசாமியிடம் கொடுத்தான்.

    என்ன இது...?

    இது எம்.எல்.ஏ. வீட்டு டெலிபோன் நம்பர். போன் பண்ணி திங்க்ஸ் வந்து சேர்ந்துடுச்சுன்னு சொல்லிடு...! திருச்சி பஸ் ஸ்டாண்ட்ல சரக்கை ஏத்திட்டு ஒரு ஆள் இந்த நம்பரைக் குடுத்தான்...

    இந்தக் கட்சிக்காரங்களுக்கு ரொம்பவும் தினாவெட்டு... ரெண்டு முழ நீளத்துக்கு ஒரு துண்டை போட்டுக்க வேண்டியது. உழைக்காமே ஊரையே ஏய்ச்சுக்கிட்டு திரிய வேண்டியது... இவனுகளையெல்லாம் காயடிச்சு காங்கோ தேசத்துக்கு அனுப்பி வெச்சிடணும்... கௌண்டர் ஆசாமி திட்டிக் கொண்டே பக்கத்தில் இருந்த டெலிபோனை நகர்த்தி வைத்துக் கொண்டு ரிஸீவரை எடுத்தான். டயலில் எண்களைச் சுழற்றிவிட்டு - ரிங் போய் மறுமுனையில் ரிஸீவர் எடுக்கப்பட்டதும் கேட்டான்.

    அது எம்.எல்.ஏ. வீடுங்களா...?

    ஆமா... ஒரு பெண் குரல்.

    இங்கே நாங்க கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து பேசறோம்.

    குரல் குறுக்கிட்டு கேட்டது.

    திருச்சியிலிருந்து - லக்கேஜ் வந்திருக்கா?

    ஆமா...

    இறக்கி வெச்சுட்டீங்களா...?

    வெச்சிட்டிருக்கோம்...

    இறக்கி வையுங்க... எங்க வீட்டு வேலைக்காரங்களை டெம்போ வேன்ல அனுப்பி வெக்கறேன்...

    அம்மா... நீங்க யாருன்னு...?

    அவரோட சம்சாரம்... திருச்சியிலிருந்து கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் அய்யா போன் பண்ணியிருந்தார். எல்லாம் புது சாமான். சாமான்ல காயம்படாமே இருக்கிறதுக்காக - ஒவ்வொண்ணையும் கோணிப் பையில் போட்டு கட்டியிருக்கு. பஸ்ஸிலிருந்து இறக்கும்போது பார்த்து இறக்கணும்.

    வீட்டை ஷிஃப்ட் பண்றீங்களாம்மா?

    ஆமா... நாளைக்கு புது வீடு கிரஹப் பிரவேசம். லாரி ஸ்ட்ரைக்ல எந்த சாமானையும் கொண்டு வந்து சேர்க்க முடியலை...

    உங்க ஆளுங்களை ‘டெம்போ வேன்’ல அனுப்புங்கம்மா. நாங்க கூட இருந்து லக்கேஜை ஏத்தி அனுப்பி வெக்கறோம்...

    பேசிவிட்டு ரிஸீவரை வைத்த சிப்பந்தியைப் பார்த்து சண்முகமும் ராஜேந்திரனும் சிரித்தார்கள்.

    என்ன நாராயணன்...! மறுமுனையில் பெண்பாலா...?

    ம்... எம்.எல்.ஏ.வோட சம்சாரம்...

    அதான்... இந்த குழை குழையறே...?

    சண்முகம்...

    ம்...

    எம்.எல்.ஏ. காரணமில்லாமே லக்கேஜ்ஜை ஏத்தி அனுப்பலை. நாளைக்கு இங்கே புது வீடு கிரஹப்பிரவேசமாம்...

    எம்.எல்.ஏ.வாகி பத்து மாசம் கூட ஆகலை... புது வீடு கட்டியிருக்கான். பத்து வருஷம் அவனே எம்.எல்.ஏ.வா இருந்தா பாதி சென்னையை விலைக்கு வாங்கிடுவான்...

    சிரித்தார்கள்.

    "ப்ளாஸ்க்ல டீ வெச்சிருக்கியா

    Enjoying the preview?
    Page 1 of 1