Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வெல்கம் டூ மார்ச்சுவரி
வெல்கம் டூ மார்ச்சுவரி
வெல்கம் டூ மார்ச்சுவரி
Ebook98 pages33 minutes

வெல்கம் டூ மார்ச்சுவரி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பம்பாய்.
விவேபார்லே - ஏரியாவின் கரம்சந்த் ரோடு, ஐந்தாம் எண்ணிட்ட பங்களாவுக்குள்ளே - டெலிபோனில் உற்சாகம் கொப்பளிக்க பேசிக் கொண்டிருந்தாள் மாயா. காலை ஏழுமணியாகியும் நைட் கவுனில் இருந்த மாயாவுக்கு - பம்பாய் மண்ணுக்கே உரித்தான டால்டா உடம்பு.
“சுனில்! ஜூஹீ பீச் அலுத்துப் போச்சு... இன்னிக்கு எலிபெண்டா கேவ்ஸ் போகலாமா...?”
“எலிபெண்டா கேவ்ஸ் மாத்திரம். என்னவாம்...? ஏழெட்டு தடவை போயிட்டோமே...?”
“சரி... இன்னிக்க கமலா பார்க்...”
“வேண்டாம்... அங்கே ரௌடீஸ் வந்து - மட்டமான பொண்ணுகளோடு படுத்துட்டு...”
“சொல்லாதே! வேற எங்கேதான் போறதாம்...?”
“நான் ஒரு இடம் சொல்வேன். நீ தட்டக்கூடாது.”
“சொல்லு?”
“நாரிமன் பாயிண்ட் போயிடலாம்.”
“அங்க... என்ன இருக்கு?”
“காட்டேஜஸ் இருக்கு. எல்லாமே கடலைப் பார்த்த மாதிரி வ்யூ. சுத்திலும் தென்னைமரக் கூட்டம்...”
“காட்டேஜெல்லாம் வேண்டாம்.”
“ஏன்...?”
“நீ சும்மா இருக்க மாட்டே?என்ன பண்ணுவேணாம்?”
“வயித்துல வாரிசோட உன் பக்கத்துல உட்கார்ந்து தாலியைக் கட்டிக்கும்படியா பண்ணிடுவே...”
“சேச்சே! நா... என்ன அவ்வளவு மட்டமானவனா?”
உன்னைப்பத்தி எனக்கு தெரியாதாக்கும்.”
“சரி யுவர் சாய்ஸ் ஈஸ்... ஓ.கே... எலிபெண்டா கேவ்ஸே போயிடலாம்... கேட் வே, ஆஃப் இண்டியாவுக்கு எத்தனை மணிக்கு வர்றே...?”
“ஷார்ப்பா நைன்... ஓ... கிளாக்...”
“உன்னுடைய மதிப்பிற்குரிய மாமா - கம் - கார்டியன் - கம் - லாயர் செல்வநாயகம் உன்னை வெளியே போக அலவ் பண்ணுவாரா...?”
“வழக்கம்போல ஒரு மகத்தான பொய்யைச் சொல்லிட வேண்டியது தான்...”
“லேட் பண்ணிடாதே...”
“8.55 க்கு இருப்பேன், போதுமா?”
“போதும்... போதும்...! ரிஸீவரை வெக்கிறதுக்கு முன்னாடி ப்ளீஸ் ஒரு கிஸ்.”
“இன்னும் பல் தேய்க்கலை.”
“பரவால்ல குடு...
இச்...”
“சே! ரிஸுவரே ஈரமாயிடுச்சு...”
“யூ... நாட்டி...” - ரிஸீவரை கவிழ்த்த மாயா அறைக்குள், மாமா தெய்வநாயகம் நுழைவதைப் பார்த்து - “குட்மார்னிங் அங்கிள்”
“குட்மார்னிங் மை பேபி...”கட்டிலின் நுனியில் உட்கார்ந்த தெய்வநாயகத்திற்கு ஐம்பது வயது உடம்பு மீசையும் காதோற கிருதாக்களும் அவசரமாய் நரைத்திருக்க - தலையில் பாதி முடி இன்னமும் இருந்தது. உடம்பில் சதை தளராமல் இறுக்கமாய் தெரிந்தது. இந்த நிமிஷம் ஜாக்கிங் ட்ரஸ்ஸில் இருந்தார்.
“என்ன அங்கிள்... இவ்வளவு லேட்டா ஜாக்கிங் போறீங்க...?”
“ராத்திரி லேட் நைட் பெட். எந்திரிக்க நேரமாயிடுச்சு...”
“பம்பாய் சூரியன் இந்நேரத்துக்கு சுள்ளுனு இருப்பானே...? ஜாக்கிங் வேண்டாமே அங்கிள்...”
“இல்ல… பேபி... நான். வெளியே போகலை. தோட்டத்தைச் சுத்தித்தான் ஓடப்போறேன்...”
“அப்படீன்னா சரிதான்...”
ஆமா... போன்ல யார் கூட பேசிட்டிருந்தே...?”
“சாராகிட்டே...”
“விடிஞ்சா போதும்... அந்த சாரா டயலைச் சுத்திடுவாள...”
“அங்கிள்! சாராவோட்ட அக்காவுக்கு இன்னிக்கு பர்த்டேயாம். ஒன்பது மணிக்கு சின்ன பார்ட்டியாம். வரச் சொல்றா…”
“காலேஜ் இன்னிக்கு லீவ்தானே?”
“ஆமா...”
“போய்ட்டு வா...”
“மத்தியானம் லஞ்ச்சும், அவங்க வீட்ல தான்...”
“அப்படின்னா... சாயந்தரம் தான் வருவே?”
“ஆமா அங்கிள்...சரி, நான் தோட்டத்தைச் சுத்தறேன். நீ குளிக்க கிளம்பு உங்கப்பா உயிரோடு இருந்த காலத்துல... ஏழுமணிக்கு மேல பெட்ல, யாராவது படுத்திருந்தா அவருக்கு துர்வாச கோபம் வந்துடும். அவ்வளவு பெரிய மனுவன் வாயிலிருந்து - பேட்டை ரெளடி மாதிரி கெட்ட வார்த்தையா கொட்டும்...” சொல்லிக்கொண்டே எழுந்து போனார் தெய்வநாயகம்...
மாயா குளியலறைக்குள் புகுந்தாள்முழுசாய் அரை மணி நேரத்திற்குப் பிறகு,
குளித்து முடித்து - டவலை மார்புக்கு மேல் முடிச்சிட்டுக் கொண்டு குளியலறையினின்றும் வெளிப்பட்டு - அறைக்கதவைச் சாத்தி தாழிட்டு விட்டு - ட்ரஸ்ஸிங் டேபிளுக்கு முன்னால் வந்து நின்றாள்
இன்றைக்கு எதற்குள் நுழையலாம்...?
சுடிதார்...? சல்வார் கம்மீஸ்...?
“சுனிலுக்கு ஸாரிதான் பிடிக்கும். போன மாதம் எடுத்த அந்த வெளிர் மஞ்சள் நிற மைசூர் சஜ்ஜி சில்க் சேலையைக் கட்டிக்கொள்ளலாமா…?
“சுவர் பீரோவைத் திறந்து - சேலை பெட்டி கோட், பிரா, ஜாக்கெட் என்று வரிசையாய் பொறுக்கிக் கொண்டு
கண்ணாடி முன்பாக வந்து நின்றான். மார்புக்கு கட்டியிருந்த டவலின் முடிச்சை தளர்த்தி - பிராவை எடுத்து அணிய ஆரம்பித்தவளின் பார்வை ஏதேச்சையாய் கண்ணாடிக்குப் போனதும் - முகம் மாறினாள்.!

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 8, 2024
வெல்கம் டூ மார்ச்சுவரி

Read more from ராஜேஷ்குமார்

Related to வெல்கம் டூ மார்ச்சுவரி

Related ebooks

Related categories

Reviews for வெல்கம் டூ மார்ச்சுவரி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வெல்கம் டூ மார்ச்சுவரி - ராஜேஷ்குமார்

    1

    அதிகாலை நேர பாண்டிச்சேரி. காற்றில் சிலு சிலு, நேற்றைய பெளர்ணமிச் சந்திரனின் மிச்சம் வெளிறிக் கொண்டிருந்தது. வசதி படைத்தவர்கள் வாக்கிங்கிலும் ஜாக்கிங்கிலும் இருந்தார்கள். நடைபாதை வாசிகள் இன்னமும் தூக்கத்தில் இருந்தார்கள்.

    ரயில்வே ஸ்டேஷனை விட்டு - வெளியே வந்த பயணிகளில் அந்தப் பெண் மட்டும் வெளிச்சமாய் தெரிந்தாள். மெலிதான ஆரஞ்சு நிற மெட்டல் ஷிபான் சேலைக்குள் - உடம்பின் முக்கியமான இடங்களில் ‘புஷ்டி’ காட்டினாள். கழுத்தில் மெல்லிய செயின். இடது பக்க மூக்கில் துளியூண்டு தங்கம், மூக்குத்தியாய் மாறியிருந்தது.

    கையில் சின்னதாய் ஒரு சூட்கேஸ்.

    அம்மா! ஆட்டோ வேணுமா...? எங்கேம்மா போகணும்? மீட்டர் போட்டு ஓட்டறேன்ம்மா... பக்கவாட்டிலும் பின்பக்கமும் தொடர்ந்து கொண்டே வந்த ஆட்டோ டிரைவர்களை புறக்கணித்துவிட்டு - அவள் டாக்ஸியை நோக்கிப் போனாள்...

    டாக்ஸி டிரைவர் பவ்யமாய் எதிர்கொண்டான். அவள் சொன்னாள், ஹோட்டல் அஜந்தா இன்டர்நேஷனல் போகணும்...

    உட்கார்ங்கம்மா... டிரைவர் கதவைத் திறந்துவிட்டு அவள் உள்ளே போனதும் சாத்திவிட்டு - டிரைவிங் ஸீட்டுக்கு வந்து –

    ஸ்டியரிங் கைப் பிடித்தான். இக்னீஷியனை உசுப்பி விட்டு - அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்த்தான்.

    என்ன...?

    அவன் காது வரைக்கும் சிரித்து - தலையைச் சொறிந்து அம்பது ரூபாய் ஆகும்மா என்றாள்.

    அவள் மூக்கு நுனி லேசாய் சிவந்தது.

    நான் உன்கிட்டே ஏதாவது பேரம் பேசினேனா...? நீ கேட்டதையே வாங்கிக்க காரைக் கிளப்பு...

    அவன் கிளப்பினான்.

    இன்னும் விடியாத பாண்டிச்சேரி தெருக்களில் - ப்ளோரஸெண்ட் விளக்குகள் உயிரோடு இருந்தன.

    பாண்டிச்சேரிக்கு வருவது இது இரண்டாவது தடவை, முதல் தடவை - ஐந்து வருஷத்திற்கு முன்னால் அப்பாவோடு, வந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. அரவிந்தா ஆசிரமம், கடற்கரை என்று - ஜாலியாய் சுற்றியது நினைவில், அடித்தது.

    கண்களை மூடி - நினைவுகளின் பிடியில் சிக்கியிருந்தவள் அம்மா என்கிற டிரைவரின் குரல் கேட்டு உணர்வுக்கு வந்தாள்.

    ம்... என்ன?

    பாண்டிச்சேரிக்கு ஸைட் ஸீயிங் பார்க்க வந்திருந்தீங்கன்னா... நம்ம டாக்ஸியையே உபயோகம் பண்ணிக்கலாம்...

    பத்து மணிக்கு மேல் அரவிந்தா ஆஸ்ரமம் போகணும்...

    போலாம்மா...! அப்புறம்...?

    வேற எங்கேயும் வேண்டாம்...

    அங்கே பாக்கிறதுக்க நிறைய இடம் இருக்கும்... வார்மெமோரியல், ஆனந்தா ஆசிரமம், பொட்டானிகல் கார்டன், கவர்மெண்ட் பார்க், அக்வேரியம், மனகுல விநாயகர் டெம்பிள், கதீட்ரல் சர்ச்.

    அதெல்லாம் வேண்டாம்.

    எனக்கு வெயிட்டிங் சார்ஜ் கூட வேண்டாம்மா... எவ்வளவு நேரம் வேணும்னாலும்...

    இதோ பார்... பாண்டிச்சேரி எனக்குப் புதுசில்லை. நான் சொன்ன இடத்துக்கு நீ வந்தா போதும்

    டிரைவர் மிரண்டு, சரிங்கம்மா... என்ற தலையாட்டினான்.

    அடுத்த மெளனமான ஐந்து நிமிஷத்தில் – டாக்ஸி ஹோட்டலின் முகப்பில் வந்து நின்றது. பணத்தைக் கொடுத்து டாக்ஸியை - அனுப்பிவிட்டு - ரிசப்ஷன் கெளண்டரை நோக்கிப் போனாள்.

    கெளண்டரில் - அந்த ஆங்கிலோ இந்தியப் பெண் லிப்ஸ்டிக் பூசிய தன் உதடுகளை பிரித்தாள்.

    குட்மார்னிங் மேடம்...

    அவள் குட்மார்னிங்கை... அலட்சியப்படுத்திவிட்டு

    எனக்கு ஒரு சிங்கிள் ரூம் வேண்டும் என்று சொன்னாள்.

    ஏஸி... ஆர். நான் ஏஸி...

    நான் ஏஸி. எனப்...

    ரிசப்ஷனிஸ்ட் லெட்ஐரைப் பிரித்து வைத்துக் கொண்டாள்.

    "யுவர் குட் நேம் ப்ளீஸ்...

    கனகதாரா...

    அட்ரஸ்...?

    நெம்பர் ஸெவன்டி ஸெவன்... ஹார்ட்லி ரோட் மெட்ராஸ் டென்.

    எத்தனை நாள் தங்கப் போகிறீர்கள்...?

    ஒரு நாள்...

    ரூம் ரெஸ்ட் த்ரீ ட்வென்டி... அதர் தேன்... எல்...நோ... பிராப்ளம்.…

    அட்வான்ஸ் தெளஸண்ட் ரூபீஸ்...

    கனகதாரா - தன் தோளில் தொங்கிய - டம்பப் பையின் ஜிப்பைப் பிரித்து இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டினாள். ரிசப்ஷனிஸ்ட் அட்வான்ஸ் ரசீதை எழுதிக் கொண்டிருக்கும்போதே, கனகதாரா கேட்டாள்.

    நான் ஒரு போன் பண்ணிக்கலாமா...?

    "பை... ஆல்... மீன்ஸ்... - அவள் டெலிபோனை நகர்த்தி வைக்க -- கனகதாரா ரிஸீவரை எடுத்துக்கொண்டு - டயலைச் சுழற்றினாள். மறுமுனையில் ரிஸீவர் எடுக்கப்பட்டதும் கேட்டாள்.

    மிஸ்டர் பூபால் ப்ளீஸ்...

    அவரு... இல்லீங்களே... என்றது பாமரத்தனமான ஒரு ஆண் குரல்...

    நீங்க...?

    நான் குவார்ட்டர்ஸ் வேலைக்காரன்...

    பூபால் எங்கே போயிருக்கார்...?

    வெளியூர்...

    எந்த ஊர்க்கு...?

    தெரியலேம்மா

    எப்பப் போனார்...?

    ரெண்டு நாளாச்சு...

    என்னிக்கு வருவார்...

    என்கிட்டே ஒண்ணும் சொல்லிவிட்டு போகலேம்மா...! ஆமா நீங்க. யாரு...?

    "டொக் கென்று ரிஸீவரை வைத்துவிட்டாள் கனகதாரா.

    யுவர் ரூம் நெம்பர் எஸ் ஃபேர், டபுள் பைவ்... ரூம் பேரர் கையில் சாவியோடும் - கனகதாராவின் சூட்கேஸோடும் - லிஃப்ட்டை நோக்கிப் போக - அவளும் தொடர்ந்தாள்.

    லிஃப்ட் மாடிக்கு உயர்ந்ததும் -

    ரிசப்ஷன் ஹால் சோபாவில் பேப்பர் படிப்பவனை போல் பாவ்லா செய்து

    Enjoying the preview?
    Page 1 of 1