Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஒரு நாள் ராஜாக்கள்
ஒரு நாள் ராஜாக்கள்
ஒரு நாள் ராஜாக்கள்
Ebook126 pages30 minutes

ஒரு நாள் ராஜாக்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜோஸ்மினா யூனிவர்ஸிட்டி ஹாஸ்டல்.
இரவு மணி பத்தரை. அறை எண் 356ல் நான்கைந்து பெண்களின் சிரிப்புச் சத்தமும் தமிழ் பேச்சும் கேட்டுக்கொண்டிருந்தது.
“சூர்யா...! இன்னொரு சர்தார்ஜி ஜோக் ப்ளீஸ்...”
“என்கிட்ட ஸ்டாக் அவ்வளவுதான். வனிதாகிட்ட கேளு. அவ சொல்லுவா...”
வனிதா சிரித்தாள்.
“என்கிட்டேயும் ஸ்டாக் ஒவர். இளம்பிறைகிட்டே கேளு. அவ சொல்லுவா. அவதான் இந்த மாதிரியான ஜோக்குக்கெல்லாம் ஹோல் ஸேல் டீலர்”
“என்கிட்டேயும் ஆல்மோஸ்ட் முடிஞ்சுது. ஊர்க்கு லெட்டர் எழுதி அக்காகிட்ட கேட்கணும்.”
“தேடிப்பாரு... கிடைக்கும்...”
“சரி... ஒரேயொரு ஜோக் மட்டும் இருக்கு. கொஞ்சம் பழசு. பரவாயில்லையா...?”
“பரவாயில்லை. தூசு தட்டிட்டு சொல்லு...”
இளம்பிறை சொன்னாள்.
“ஒரு சர்தார்ஜி ஷெல்ப் ட்ரைவ் பண்ணிக்கிட்டு வேகமா போயிட்டிருந்தார். வழியில் School Zone. Go Slow' என்கிற போர்டை பார்க்க நேர்ந்தது. உடனே காரின்
வேகத்தைக் குறைத்து காரை மெதுவாய் ஓட்ட ஆரம்பித்தார். அப்போது நேரம் இரவு பதினோரு மணி.தும்பினாள் சூர்யா. “அம்மாடி! ரொம்ப தூசு. இவ்வளவு அரத பழசெல்லாம் வேண்டாம்... எனக்கு ஏற்கெனவே சைனஸ் ப்ராப்ளம்... இந்த தூசி தட்டற ஜோக்கெல்லாம் இனிமே வேண்டாம்.” வராந்தாவில் நடைச் சத்தம் கேட்டது.
“வனிதா...! யார்ன்னு பாரு...?”
வனிதா போய் எட்டிப் பார்த்துவிட்டு கையை உதறிக்கொண்டு உள்ளே வந்தாள்.
“அய்யய்யோ...”
“என்னடி...?”
“வார்டன்...”
“வார்டனா...? இந்நேரத்துக்கு வரமாட்டாங்களே? இந்தியாவிலிருந்து யார்க்காவது ஏதாவது மெஸேஜ் வந்திருக்கலாம்?”
வார்டன் க்யூரி தன் இரட்டை நாடி உடம்போடு அறை வாசலில் வந்து நின்றாள்.
“இளம்பிறை...!”
“மேடம்...!”
“என்னோடுவா...”
இளம்பிறை குழப்பமாய் எழுந்தாள்.
“என்னவிஷயம் மேடம்...?”
“இங்கே எதுவும் கேட்காதே... வா என்னோடு...”
வார்டன் க்யூரி நடக்க ஆரம்பித்துவிட, இளம்பிறை தொடர்ந்தாள். பாதி வராந்தாவைக் கடந்திருந்தபோது மறுபடியும் கேட்டாள்.
“மேடம்! உங்கள் முகம் சரியில்லை. இந்தியாவிலிருந்து எனக்கு ஏதாவது கவலை தரும் செய்தியா?நான் இப்போது எதையும் பேசக்கூடிய நிலைமையில் இல்லை. உனக்காக போலீஸ் அதிகாரி ஒருவர் ஆபீஸ் அறையில் வந்து காத்துக் கொண்டிருக்கிறார்...”
“போலீஸா...?”
“எஸ்...”
“எதற்கு...?”
“போனால் தெரிந்துவிடும்...”
“மேடம்...! எனக்கு பயமாய் இருக்கிறது.”
“எதற்கு பயம்...? இது ஒரு விசாரணைதான்”
இளம்பிறைக்கு வியர்த்துக் கொட்டியது.
'போலீஸ் எதற்காக என்னை விசாரிக்க வேண்டும்...?’
ஆபீஸ் அறை வந்தது. கருநீல யூனிஃபார்ம் அணிந்த அந்த ந்யூயார்க் போலீஸ் அதிகாரி காரட் நிற முகத்தோடு நாற்காலிக்கு சாய்ந்திருந்தார். இளம்பிறையைப் பார்த்ததும் கலைந்தார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
ஒரு நாள் ராஜாக்கள்

Read more from ராஜேஷ்குமார்

Related to ஒரு நாள் ராஜாக்கள்

Related ebooks

Related categories

Reviews for ஒரு நாள் ராஜாக்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஒரு நாள் ராஜாக்கள் - ராஜேஷ்குமார்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    நியூயார்க் நகரின் ப்ளேஸர் ஸ்கொயர் 41-வது சாலையில் சூடான பாப்கார்னை கொறித்துக் கொண்டே பேவ்மெண்டில் நடைபோட்டுக் கொண்டிருந்தார்கள் அபிராமியும் கதிரவனும்...

    பனி லேசாய் பெய்து கொண்டிருந்த மாலை நேரம். கார்கள் சாலையில் துப்பாக்கித் தோட்டாக்களாய் பாய்ந்து கொண்டிருக்க, ஹோட்டல் முகப்புகளில் நியான் விளக்குகள் உயிர் பெற்றுக் கூப்பிட்டன.

    அபி...!

    ம்...

    இன்னிக்கு பிக்சர் ஏதாவது போலாமா?

    வேண்டாம்...

    ஏன்...?

    இங்கே ஓடற எந்தப் படமுமே சரியில்லை.

    உனக்கு எப்படி தெரியும்...?

    டி.வி.யில் தான் ரெவ்யூ காட்டுறாங்களே?

    தி இமேஜ்ன்னு ஒரு படம். நல்லாயிருக்குன்னு ரிப்போர்ட். போலாமா...?

    வேண்டாம். ஒவர் செக்ஸ்.

    சரி... மெளஸ்ஹண்ட் போலாமா?

    ஸாரி கதிர்...! அந்த படத்துல ஓவர் க்ராஃபிக்ஸ்... நம்ம ஊர் விட்டலாச்சார்யா முப்பது வருஷங்களுக்கு முன்னாடியே அந்த கிராஃபிக்ஸ் வேலையெல்லாம் பண்ணிட்டார்...

    சரி... என்னதான் பண்ணலாம்? முழுசா மூணுமணி நேரம் இருக்கு...

    இப்படியே நடந்துகிட்டு இருப்போம்...! பசி எடுக்கும்போது மேட்லி ஸ்ட்ரீட்டில் இருக்கிற இண்டியன் ரெஸ்டாரெண்ட்டுக்குப் போய் மினி டின்னர் எடுத்துக்குவோம்.

    இன்னிக்காவது நான்-வெஜ் சாப்பிடலாமா?

    நோ... நோ...

    ஏன்...?

    இன்னிக்கு அமாவாசை...

    அமெரிக்காவுக்கு வந்துமா அமாவாசை...?

    அமெரிக்கா இந்த உலகத்துலதானே இருக்கு...?

    அபி...! உன்னை நினைக்கிறப்ப எனக்கு ஆச்சர்யமாயிருக்கு...!

    என்ன ஆச்சர்யம்...?

    கம்ப்யூட்டர் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட ஒரு பெரிய படிப்பை படிக்கிறதுக்காக இங்கே வந்திருக்கே... எல்லாமே சயின்ஸ்ன்னு சொல்ற நீ இந்த அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை, ஆடி வெள்ளிக்கிழமை இதுக்கெல்லாம் இம்பார்ட்டன்ஸ் தரலாமா...?

    பாப்கார்ன் தீர்ந்து போயிருக்க காலி பாலிதீன் பேப்பரை சுருட்டி ப்ளாட்பார ஓரத்தில் இருந்த வேஸ்ட் பின்னில் போட்டாள் அபிராமி.

    படிப்பு வேற... கலாச்சாரம் வேற. ஒரு இந்தியப் பெண் தன்னோட கற்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பாள்னு உங்களுக்கே தெரியும். உயிரைக் காட்டிலும் கற்பைப் பெரிசா நினைப்பா. பட் ஒரு அமெரிக்க பெண்ணுக்கு அது இரண்டாம் பட்சம்... இன்னும் சில நாடுகள்ல அது அவங்களுக்கு கடைசி பட்சம் கூட...! ஒரு இந்தியப் பொண்ணைப் பொறுத்த வரையிலும் அவ எந்த வெளிநாட்டுக்கு போனாலும் சரி இந்தியக் கலாச்சாரமும் அவகூட ஒட்டிக்கிட்டே வரும்...

    சரி... சரி... கையில சப்ளா கட்டைகளை எடுத்துக்கிட்டு கதாகாலட்சேபம் பண்ண ஆரம்பிச்சுடாதே... கோக் சாப்பிடறியா...?

    ம்...

    கதிரவன் ரோட்டோர குளிர்பான ஸ்டாலுக்கு போய் தானியங்கி மெஷினில் காசைப் போட்டு இரண்டு அட்டை டம்ளர்களில் கோக் பானத்தை நிரப்பிக் கொண்டு வந்தான். அபிராமி அட்டை டம்ளரை வாங்கிக் கொண்டாள்.

    மெர்ஸன் பார்க் பக்கம் போயிடலாமா?

    ம்... போயிடலாம்... இன்னிக்கு அங்கே ம்யூஸிகல் ஃபவுண்டன்கூட இருக்கும்... நடந்தார்கள். 42-வது தெருவுக்குள் நுழைந்து மெர்ஸன் பார்க்கை நோக்கி நடைபோட்டார்கள்.

    நிசப்தமான அந்தத் தெருவின் பாதி தூரத்தைக் கடந்து இருந்த போது பைக் ஒன்று படபடத்தபடி பக்கத்தில் வந்து நின்றது.

    அபிராமியும் கதிரவனும் திரும்பினார்கள். போலிஸ் பைக். பைக்கின் இயக்கத்தை நிறுத்திவிட்டு அந்த போலீஸ் சார்ஜெண்ட் கீழே இறங்கினார். நீக்ரோ முகம். இரண்டு பேர்களையும் பார்வையில் நனைத்துவிட்டு கேட்டார்.

    இண்டியன்ஸ்...?

    எஸ்...

    ஸோ... மீ...யுவர் ஐ.சி.

    அபிராமியும் கதிரவனும் அடையாள அட்டைகளை எடுத்துக் காட்டினார்கள். அவர் ஐ.சி. அட்டைகளை வாங்கிப் பார்த்துவிட்டு பின் பார்வையை அபிராமியின் மேல் நிறுத்தினார். வேகமான ஆங்கிலத்தில் பேசினார்.

    தொந்தரவுக்கு மன்னிக்க வேண்டும். நியூயார்க்கில் உள்ள இந்தியர்களைப் பற்றிய ஒருவிசாரணை தற்போது ஒருவார காலமாக போலீஸ் துறை மட்டத்தில் நடை பெற்று வருகிறது. உங்களைப் பற்றிய விபரங்களும் வேண்டும். உங்கள் பெயர் ஆபிராமியா...?

    நோ... அபிராமி...

    ந்யூயார்க்கில் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?

    ஜோஸ்மினா யுனிவர்ஸிட்டிக்கு சொந்தமான ஹாஸ்டலில்...

    படிக்க வந்திருக்கிறீர்களா...?

    ஆமாம்...

    என்ன படிப்பு...?

    கம்ப்யூட்டர் டெக்னாலஜி...

    இங்கே வந்து எவ்வளவு மாதங்கள் ஆயிற்று...?

    ஆறுமாதம்...

    இன்னும் எவ்வளவு நாட்கள் இங்கே தங்கி படிப்பைத் தொடரவேண்டும்...?

    ஒன்றரை வருடம்...

    "இந்தியாவில் உங்களுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1