Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஆச்சர்யம்! ஆனால்... உண்மை!
ஆச்சர்யம்! ஆனால்... உண்மை!
ஆச்சர்யம்! ஆனால்... உண்மை!
Ebook197 pages49 minutes

ஆச்சர்யம்! ஆனால்... உண்மை!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

போலீஸ் உத்யோக அட்டையைப் பார்த்ததும் அதற்குள் முகம், கழுத்து, பிடரி என்று அவசர அவசரமாய் வியர்த்தான் கௌதமன்.
“வா... வாட்... டு...யூ... வாண்ட்... ஸார்...”
“உங்க பேரென்ன?”
“கெளதமன்.”
“இந்த பாருக்கு அடிக்கடி வருவீங்களா?”
“நோ நோ அக்கேஷனல்.”
“பெர்மிட் வெச்சிருக்கீங்களா...?”
“ம்...”
“ஷோ... மீ...”
கோட்டின் இடது பக்க பாக்கெட்டில்வைத்திருந்த பெர்மிட் கார்டை எடுத்துக் காட்டினான். அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு - அவனிடமே கொடுத்தார்.
“ஸாரி ஃபார் த ட்ரபிள்... ப்ளீஸ் கேரி ஆன்...”
கௌதமனுக்கு மனதில் தைரியம் ஊறியது. கேட்டான்.
“ஸாரி... எதுக்காக இந்த என்கொய்ரின்னு தெரிஞ்சுக்கலாமா...?”
ஆபீஸர் புன்னகைத்தார்.“இந்த ‘பார்’க்குள்ளே சில பேர் போதை மருந்துகளைக் கொண்டு வந்து யூஸ் பண்றதா எங்களுக்கு தகவல் வந்தது. அதான் இந்த செக்கிங். வாரத்துல ரெண்டு தடவை இது மாதிரியான செக்கிங் வருவோம்...” சொல்லிக் கொண்டே பக்கத்து மேஜையிலிருந்த இளைஞர்களை நோக்கிப் போனார்.
கௌதமன் அவசர அவசரமாய் சிக்கனை விழுங்கினான். பேரர் அதற்குள் கொண்டுவந்திருந்த - செக்கண்ட் லார்ஜையும் மடமடவென்று உள்ளே தள்ளி - டம்ளரை கீழே வைத்தான். பேரரை கையசைத்துக் கூப்பிட்டு “பில்” என்றான்.
பில் வந்தது.! - அமௌண்ட் எவ்வளவு என்று பார்த்து ரூபாய் நோட்டுக்களைத் திணித்துவிட்டு எழுந்தான். இளைஞர்களிடம் பெர்மிட் கார்டு வாங்கி பார்த்துக் கொண்டிருந்த விஜிலென்ஸ் ஆபீஸரை கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே ‘விறுவிறு’வென்று நடந்து பாரை விட்டு வெளியே வந்தான்.
இப்போது மழை லேசாய் தூறிக் கொண்டிருந்தது. மழையில் நனைந்து கொண்டிருந்த கார்களின் மண்டைகள் குழல் விளக்குகளின் வெளிச்சத்தில் மின்னியது.
‘மிருதுளா அறைக்குள் பிணமாய் கிடப்பது எந்த நிமிஷமும் வெளிப்பட்டு விடலாம்...’
‘சீக்கிரம் ஹோட்டலை விட்டு வெளியேறி விடுவது உத்தமம்.’
பார்க்கிங்கைத் தொட்டு தன் கண்டேஸாவுக்குள் நுழைந்தான். இக்னீஷியனை உசுப்பி, காரை வெளியே கொண்டு வந்து விரட்டினான். கார் ட்ராஃபிக்கில் கலந்ததும் உற்சாகம் கொப்பளித்தது.
‘இனிமேல் கவலையில்லை...’
ஆக்ஸிலேட்டரை அவனுடைய வலது கால் அழுத்திப் பிடித்தது.
காலிங் பெல் வீறிட்டு அலறிய சத்தம் கேட்டு, மெடிசன் சம்பந்தப்பட்ட புத்தகமொன்றில் ஆழ்ந்திருந்த டாக்டர் அற்புதராஜ் எழுந்து போய் தாழ்ப்பாளை விலக்கினார்.
கதவுக்கு வெளியே –
கௌதமன்.அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி தன் பெரிய நெற்றியை மேலேற்றினார்.
“என்னாச்சு கெளதம்...?”
உள்ளே வந்தான் அவன்.
“மொதல்ல கதவைச் சாத்துங்க டாக்டர்...”
அவர் கதவை சாத்தி தாழிட்டு விட்டு வந்தார். ஆர்வம் தாளாமல் கௌதமனின் தோள்களைப் பற்றிக் கொண்டார்.
“என்ன...?”
“காரியத்தை முடிச்சுட்டேன்...”
“குட்... டைமண்ட் எங்கே...?” கோட் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து கர்ச்சீப்பில் சுற்றி வைத்திருந்த அந்த வைரத்தை எடுத்துக்காட்டினான். டாக்டர் அற்புதராஜ் கண்களை விரித்து, உதட்டை குவித்து சந்தோஷமாய் ஊளையிட்டார்.
“வீ காட் இட்! கெளதம் யூ ஹேவ் டன் ஏ மார்வலஸ் ஜாப். மிருதுளாவை முடிச்சுட்டு தானே கொண்டு வந்தே?”
“ஆமா...”
“யாரும் பார்த்துடலையே?”
“பார்க்கிற மாதிரியா காரியம் பண்ணுவேன்? எட்டே நிமிஷம். பார் பின்பக்க மாடிப்படி வழியா மிருதுளாவோட ரூமுக்குப் போய் அவளுக்கு ஒரு தோட்டாவை குடுத்துட்டு நான் இந்த ‘சூரஜ்’ஜை கொண்டு வந்துட்டேன்...”
“சரியா சுட்டியா?”
“தோட்டா சரியா மார்பில் பாய்ஞ்சிருச்சு.”
“செத்துட்டாளான்னு பார்த்தியா?”
“பார்க்கலை. ஆனா செத்துடுவா?”நீ பார்த்துட்டு வந்திருக்கணும். இல்லை ரெண்டாவது தடவையாவது சுட்டிருக்கணும். ஏன்னா கடைசி நேரத்துல இந்த மாதிரியான விஷயங்கள் காலை வாரும். தோட்டா சரியா மார்புல பாயாமே, அதுக்கு மேலேயோ, கீழேயோ, பாய்ஞ்சிருந்தா அரை மணி நேரத்திலிருந்து ரெண்டு மணி நேரம் வரைக்கும் உயிரோடு இருக்க வாய்ப்பிருக்கு. அந்த நேரத்துல அவ சுட்டது யார்னு போலீஸ்கிட்டே ஸ்டேட்மெண்ட் கொடுக்க வாய்ப்பிருக்கே?”
கௌதமனின் நெற்றி இப்போது வியர்த்து. மினுமினுத்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 8, 2024
ஆச்சர்யம்! ஆனால்... உண்மை!

Read more from ராஜேஷ்குமார்

Related to ஆச்சர்யம்! ஆனால்... உண்மை!

Related ebooks

Related categories

Reviews for ஆச்சர்யம்! ஆனால்... உண்மை!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஆச்சர்யம்! ஆனால்... உண்மை! - ராஜேஷ்குமார்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    கெளதமன், அந்த ஃபைவ்ஸ்டார் ஹோட்டலின் கார் பார்க்கிங்கில், தன்னுடைய க்ளாஸிக் கண்டேஸாவை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான். கதவை லாக் செய்து கொண்டு - கொஞ்சம் தொலைவில் ‘Bar’ என்று நியானில் மின்னிய கண்ணாடி ப்ளாக்கை நோக்கி நடந்தான். காலையிலிருந்து பெய்த மழை காற்றுக்கு ஏராளமான குளிரை கொடுத்திருக்க - அது ஊசியாய் வீசியது. கௌதமன் தன்கோட்டுக்குள் இரண்டு கைகளையும் நுழைத்துக் கொண்டு மெதுவாய் நடந்து Bar’ன், வாசற்படிகளின் சலவைக்கல் பரப்பில் ஏறினான்.

    குட் ஈவினிங்... ஸார்...

    பேரர் கண்ணாடிக் கதவை திறந்துவிட்டபடி பவ்யமாய் தலைகுனிந்தான். அவனை அலட்சியப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்தான் கௌதமன். ‘பார்’ வெறிச்சோடிப் போயிருந்தது. பிடரி வழிய முடி வைத்திருந்த ஒரு இளைஞன் மட்டும் தன் பெண் ஸ்நேகிதியின் கையிலிருந்த காலியான டம்ளரில் பீரை ஊற்றி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.

    ஒன் மோர் க்ளாஸ் ப்ளீஸ்... எனக்காக...

    போதும், போதும்.

    நோ, நோ...

    ஏற்கெனவே போதையில் இருந்த அவன், ‘நான் எந்தவிதமான கெட்ட காரியத்துக்கும் தயார்’ என்று கண்களில் போர்டு எழுதி மாட்டியிருந்தான்.

    கௌதமன் அறையின் கார்னரில் இருந்த பதினோறாம் எண் மேஜைக்கு போய் உட்கார்ந்தான். ப்ளேவர் ஏ.ஸி. நறுமணமாய் இருந்தது. அறையின் ஃபால்ஸ் ரூஃப்பில் ஒளிந்திருந்த ம்யூஸிக் சேனல் ட்ரம்ஸ் ஒத்தையடியாய் ஒலித்துக் கொண்டிருக்க, நடுநடுவே சாஸ் போன் ஊளையிட்டது.

    கௌதமன் சிகரெட் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை உருவி உதட்டில் பொருந்திய விநாடி - புதிதாய் கல்யாணமான கிராமத்துப் பெண்ணைப் போல் - அந்த பேரர் பவ்யமாய் - பயமாய் வந்து நின்றான். ஒன் லார்ஜ் என்றான் கௌதமன்.

    ஸ்காட்ச்?

    ம்...

    அவன் நகர்ந்தான். லைட்டரைத் தட்டிவிட்டு அது உமிழ்ந்த சுடலில் - சிகரெட்டின் தலையை நனைத்து - சிவப்பாக்கிக் கொண்டு முதல் புகையை விட்டான். சிகரெட் பாதி கரைந்திருந்த போது - ஸ்காட்ச் வந்தது.

    கண்ணாடி டம்ளர்க்கு அடியில் பொன்னிறமாய் ஸ்காட்ச் அசைந்தது.

    ஸார், சோடா.

    ம்.

    பேரர் ஸ்காட்ச்சுக்கும் சோடாவுக்கும்... கல்யாணத்தை செய்து வைத்துவிட்டு ஒதுங்க - இடது கையால் டம்ளரை எடுத்துக் கொண்டு, ஒரு வாய் சப்ப அதன் கசப்பை கண்களை மூடி தொண்டைக்குள் இறக்கினான். ரத்த நாளங்களிலும், நரம்புகளிலும் நெருப்பு பரவியது.

    ஸ்காட்ச் பாதி டம்ளராக குறைந்திருந்த போது - பேரர் வந்து பக்கத்தில் நின்றான்.

    ஸார். எனி சைட்டிஷ்?

    ஏதாவது சிக்கன் அயிட்டம் கொண்டா?

    லாலி பப் சிக்கன் ஸார்.

    ம்...

    நகர முயன்ற வெயிட்டரை தன் குரலால் நிறுத்தினான்.

    பேரர்...

    ஸார்...

    கோட்ல, ஜா பட்டுடுச்சு. வாஷ் பண்ணனும். பாத்ரூம் எந்த சைட்ல இருக்கு?

    பின்னாடி ஸார்...

    என்னோட ப்ரீப்கேஸ் இங்கேயே இருக்கட்டும். நான் போய் வாஷ் பண்ணிட்டு வந்துடறேன்.

    போய்ட்டு வாங்க ஸார். நான் பார்த்துக்கிறேன். அதுல கேஷ் ஒண்ணும் இல்லையே?

    இல்ல...

    அப்ப... போய்ட்டு வாங்க சார்.

    கௌதமன் எழுந்து - பாரின் பின்பக்கம் இருந்த டாய்லெட்டை நோக்கிப்போனான். ஒதுக்குப்புறமாய் இருந்த அந்த டாய்லெட் ஏரியா நிசப்தமாய் இருக்க, கெளதமன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு - டாய்லெட்டைக் கடந்து - சிறிது தூரத்தில் - பக்க வாட்டில் தெரிந்த இருட்டான படிகளில் தாவி, ஏறினான். ஹோட்டல் அறைகளுக்கு செல்வதற்காக மாடிப் படி வழி அது. வேகமாய் தாவித் தாவி ஏறினான். இரண்டாவது மாடி வந்ததும் நின்றான்.

    இரண்டு பக்கமும் வரிசையாய் அறைகள். எண்களைப் பார்த்துக் கொண்டே வேகமாய் நடந்தவன் 222 எண்ணிட்ட அறை பார்வைக்கு தட்டுப்பட்டதும் நின்றான். மாடி வராந்தாவில் ‘ஹோ’ வென்ற நிசப்தம். கதவின் இடது பக்க சுவரில் இருந்த காலிங் பெல் பொத்தானை அழுத்தினான். உள்ளே அது ‘டிடிங் டிடிங்’ என்றது.

    சில விநாடிகளுக்குப்பின் - கதவு திறக்க - திறந்த கதவுக்குப் பின்னால் அந்த இளம் பெண் நின்றிருந்தாள். மலர்ந்தாள்.

    ஓ...! கெளதம், நீங்களா? வாங்க, வாங்க.

    கெளதம் புன்னகைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான்.

    ஃப்ளைட் ஜர்னி எப்படியிருந்தது. மிருதுளா?

    ஃபைன்...

    நான் ஏர்போர்ட்டுக்கு வரலாம்னுதான் இருந்தேன். மத்தியான சாப்பாடு பலம்... சாப்பிட்டு சாய்ஞ்சேன். தூங்கிட்டேன். என்னோட ஒய்ஃப்பும் எழுப்ப மறந்துட்டா.

    ஸோ வாட். கதவைச் சாத்தி தாழிட்டாள்.

    உட்கார்ங்க.

    கெளதம் கட்டிலில் உட்கார்ந்து கொண்டே கேட்டான்.

    பம்பாய் டயமண்ட் மார்க்கெட் எப்படி இருக்கு?

    அமோகம்.

    சூரஜ் டயமண்ட் கொண்டு வந்திருக்கியா?

    ம்.

    காட்டு பார்க்கலாம்.

    ஏன் இன்னிக்கு... இவ்வளவு அவசரப்படறீங்க.

    ஒரு பார்ட்டிக்கு விலை பேசிட்டேன். பிசினஸை முடிக்க வேண்டாமா?

    பார்ட்டி யாரு?

    கன்யாலால் முந்திடா.

    ரேட்?

    நீ டெலிபோன்ல சொன்ன அதே ரேட்.

    அம்பது லட்சம்?

    ஆமா.

    டயமண்ட்டை பார்க்காமலேயே கன்யாலால் எப்படி அந்த ரேட்டுக்கு ஒத்துக்கிட்டார்?

    அந்த சூரஜ் டயமண்டைப் பத்தி ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்காராம். ‘பார்கெய்ன்’ பண்ணாமே - சொன்ன ரேட்டுக்கு ஒத்துக்கிட்டார். அந்த நிமிஷத்திலிருந்தே எனக்கு சூரஜ் டயமண்ட்டை பார்க்கணும்ங்கிற ஆர்வம் வந்துடுச்சு.

    மிருதுளா சிரித்தாள்.

    உண்மையிலேயே சூரஜ் ஒரு அற்புதமான வைரம்தான். நேபாள பிரின்ஸ் ஒருத்தர் வெச்சிருந்தாராம். பல கைமாறி இப்ப அது என்னோட கைக்கு வந்திருக்கு.

    காட்டு பார்க்கலாம்.

    மிருதுளா கட்டிலுக்குக் கீழே இருந்த தன் சூட்கேஸை இழுத்து டீபாயின் மேல் வைத்துக் கொண்டு திறந்தாள். நீல நிற வெல்வெட் பாக்ஸை எடுத்து பிரித்தாள்.

    கெளதம்! உங்க வலது உள்ளங்கையை நீட்டுங்க.

    நீட்டினான். பாக்ஸை கவிழ்த்தாள் மிருதுளா. கெளதமனின் உள்ளங்கையில் மொச்சைக் கொட்டை அளவுக்கு தகதகவென்று மின்னிக் கொண்டு ஒரு வைரம் உருண்டது. அறை முழுக்க - வெளிச்சச் சிதறல்கள்... கௌதமன் பிரமித்தான்.

    அற்புதம்.

    கரண்ட் பெயிலியராயிட்டா, வீட்ல கவலையே பட வேண்டாம். இந்த வைரத்தை எடுத்து டேபிள் மேல் வெச்சுட்டா போதும். ஜீரோ வாட்ஸ் வெளிச்சம் கிடைக்கும்.

    ரியலி?

    ம்.

    மிருதுளா?

    என்ன... கெளதம்?

    இந்த சூரஜ் வைரத்தை நானே விலைக்கு வாங்கிக்கலாம்ன்னு இருக்கேன்.

    என்ன விளையாடறீங்களா? விலை அம்பது லட்சமாக்கும்.

    தந்துட்டா போகுது.

    ஆர்... யூ... ஜோக்கிங்?

    "ஜோக்கில்லை நிஜம்தான். பிஸினஸை இப்பவே

    Enjoying the preview?
    Page 1 of 1