Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மன்னிக்கப்பட்ட மரணம்
மன்னிக்கப்பட்ட மரணம்
மன்னிக்கப்பட்ட மரணம்
Ebook90 pages26 minutes

மன்னிக்கப்பட்ட மரணம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பீட்டர் திண்ணையில் சைக்கிளை சாய்த்து நிறுத்திவிட்டு - வீட்டுக்குள் நுழைந்தான். கண்களிலும்- மீசையிலும் நடிகர் பிரதாப்பை நினைவுக்குக் கொண்டு வந்தான். சிவில் எஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு பக்கத்து டவுனில் சொந்தமாக சிவில் கன்சல்டன்ஸி அலுவலகம் நடத்தி வருபவன். பிஸ்னெஸ் சூடுபிடித்து விட்டதால் இன்னும் சில வாரங்களில் சைக்கிளை உதறிவிட்டு ஒரு ஹிண்ட்-சூசூகி வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.
ஈஸி சேரில் உட்கார்ந்து - யோவானின் நல்வழி புத்தகம் ஒன்றில் மூழ்கியிருந்த பீட்டரின் அப்பா ஸ்டேன்லி அவனுடைய வரவால் கலைந்து போய் நிமிர்ந்தார்.
“என்ன பீட்டர் இன்னிக்கு லேட் போலிருக்கு?”
“இன்னிக்கு செவ்வாய். அந்தோணியார் கோயிலுக்கு போய்ட்டு வந்தேன்”
ஸ்டேன்லி பீட்டரின் அப்பா. பாங்க் ஒன்றில் வேலையிலிருந்த ஸ்டேன்லி ரெண்டு வருஷத்திற்கு முன்னால் வாலண்டியர் ரிடையர்மெண்ட் வாங்கிக் கொண்டவர். இப்போது ரிடையராகிற வயது. சுத்தமாய் தலை, தாடிப் பிரதேசங்களில் நிறமிழந்திருந்தார். படிக்க கண்ணாடியின் துணை அவசியமாயிருந்தது. மார்பில் நிளமாய் தொங்கிய செயினின் முடிவில் ஒரு வெள்ளி சிலுவை புரண்டது.
பீட்டர் ஷர்ட்டைக் கழற்றி சுவர் ஆணியில் மாட்டிவிட்டு பின்பக்கம் போய் கை, கால், முகம் கழுவிவிட்டு துண்டால் முகத்தை ஒற்றியபடியே திரும்பி வந்தான்.
“ஏன் பீட்டர்...”
“சொல்லுங்கப்பா...”
“கவர்ன்மெண்ட் வொர்க் ஒண்ணை கான்ட்ராக்ட் எடுத்திருந்தியே...?நான் எடுக்கலைப்பா... கருணாம்பிகா மெஷின் வொர்க்ஸ் லிமிடெட் டைரக்டர் மருதநாயகம் எடுத்த கான்ட்ராக்ட் அது... அதுக்காக என்னை வேலை பார்க்க சொன்னார்...”
“அதுல என்னவோ ப்ராப்ளம்னியே, சரியாயிடுச்சா?”
“இல்லைப்பா.... பாதியில நான் வொர்க்கை பார்க்க முடியாதுன்னுட்டேன்... அவனெல்லாம் ஒரு பெரிய மனுஷன்... கவர்ன்மென்ட் பணத்தை திங்கறதுலயே குறியா இருக்கான்... மனசாட்சி உள்ளவன் அந்த ஆளோட சேர்ந்து வேலை செய்ய மாட்டான்...”
“ஸோ, வொர்க் - வேண்டாம்னுட்டே....?”
“இன்னிக்குதான் சொன்னேன்... சொன்னதோடு மட்டும் நிக்கப் போறதில்லை கவர்ன்மென்ட் ஆஃபிசர்ஸ்கிட்டே அந்த மருதநாயகத்தோட ஊழலை பத்தி சொல்லப் போறேன்...”
“சில பெரிய மனுஷங்க அப்படிதான் இருப்பாங்க பீட்டர்.... நமக்கு பிடிக்கலைன்னா ஒதுங்கிக்க வேண்டியது தான்... அதுக்காக அங்கேயும் இங்கேயும் அவங்களைப் பத்தி சொல்லி வீண் பகையை வளர்த்துக்க வேண்டாம். அந்த ஆளோட வொர்க்கை செய்ய மாட்டேன்னு சொல்லிட்டியில்லே? விடு பிரச்னையை...”
“ந்நோ... இப்படி எல்லாரும் பயந்துகிட்டிருந்தா கவர்ன்மென்ட் பணத்தைத் திங்கறவன் தின்னுட்டேதான் இருப்பான்... இவனை மாதிரி நாலு பெரிய மனுஷங்க மாட்டிகிட்டா எல்லாருக்கும் கொஞ்சம் பயம் வரும்...”
“நீ சொன்னா கேக்க மாட்டே பீட்டர்...!”
ஸ்டேன்லி மறுபடியும் அந்த நல்வழி புத்தகத்துக்குள் மூழ்கினார்.
பீட்டர் கண்ணாடி முன்பாக நின்று தலை வாரி- பவுடரை ஒரு கோட்டி முகத்துக்குக் கொடுத்துவிட்டு மறுபடியும் சர்ட்டுக்குள் நுழைந்தான்.
“அப்பா... நான் சர்ச்சுக்கு போய்ட்டு வர்றேன்...”
பீட்டர் வெளியே வந்தான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
மன்னிக்கப்பட்ட மரணம்

Read more from ராஜேஷ்குமார்

Related to மன்னிக்கப்பட்ட மரணம்

Related ebooks

Related categories

Reviews for மன்னிக்கப்பட்ட மரணம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மன்னிக்கப்பட்ட மரணம் - ராஜேஷ்குமார்

    1

    பாஸ்கர் சந்தோஷமாய் புன்னகைக்கிறபோது இந்த நாவல் ஆரம்பமாகிறது. அந்த கிராமத்தின் ஒரு ஓடு வேய்ந்த வீட்டுக்குள் மாயாண்டியின் எதிரே இருந்தான் பாஸ்கர். அவர் இருவருக்கும் இடையில் நிறைய கரன்சித்தாள்கள்.

    இந்த பணம் பூராவும் உனக்குதான் பாஸ்கர்...

    பாஸ்கர் இன்னும் புன்னகையிலிருந்து விலகாமலிருந்தான். திக்கான ராபின் ப்ளு நிறத்தில் இறுக்கமாய் பேண்ட் சர்ட் போட்டிருந்தான். எந்நேரமும் ஒரு திமிர்தனம் முகத்தில் உறைந்து போயிருந்தது. எந்த காரியத்தையும் செய்யத் தயங்கமாட்டான் என்பது இவனைத் தெரிந்த சில பேருக்கு மட்டுமே தெரியும்.

    அந்த சிலபேரில் ஒருத்தன் மாயாண்டி ஆசாமி கரடுமுரடாக இருந்தாலும் நேரடியாக எந்த விஷயத்திலும் மாட்டிக்கொள்ள பயப்படுபவன். தேவைப்படுகிறபோதெல்லாம் பாஸ்கரை முழுக்க முழுக்க பயன்படுத்திக் கொள்கிறவன். இந்த நிமிஷமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.

    பாஸ்கர் கேட்டான்.

    நான் என்ன செய்யனும் மாயாண்டி?

    ஒரு உயிர்க்கு விடுதலை கொடுக்கணும்...

    பாஸ்கர் அலட்சியமாய் மாயாண்டியைப் பார்த்தான்.

    யாரோட உயிர்க்கு?

    சின்ன மேட்டு வீதியில பீட்டர் தெரியுமா...?

    அவனையா..?

    - பாஸ்கர் நிமிர்ந்தான்.

    ஏன் பாஸ்கர்... அவனையான்னு ரொம்ப பயமா கேக்கறே..?

    பயமா கேக்கலை... என் கூட படிச்சவனாச்சே அவன்...

    மாயாண்டி சிரித்தான்.

    நீ படிச்சிருக்கியா?

    ஏழாவது வரைக்கும் படிச்சிருக்கேன்... ஏழு வருஷமும் எனக்கு பின்னாடி பெஞ்ச்ல அந்த பீட்டர் உக்காந்திருப்பான்...

    அதனாலென்ன?

    லேசா ஒரு பரிதாபம்...

    பரிதாபத்தைப் பார்த்தா... பணம் கிடைக்காது பாஸ்கர்...

    வாஸ்தவமான பேச்சு...?

    - என்றபடியே அந்த சலவைத் தாள்களை அள்ளி தன் பாண்ட் பாக்கெட்டுக்குள் திணித்தாண் பாஸ்கர். திணித்தபடியே கேட்டான்.

    ஆமா... அந்த பீட்டர் ரொம்ப நல்லவனாச்சே! அவனை எதுக்காக கொல்லணும்...?

    "அவன் நல்லவனா இருக்கறதால்தான்!"

    சொல்லிச் சிரித்த மாயாண்டியே மறுபடியும் சொன்னான்.

    அவனை எதுக்காக கொலை செய்ய போறோம்ங்கிற விபரமெல்லாம் உனக்கும் எனக்கும் தேவையில்லாத விஷயம் பாஸ்கர்... நம்ம தலைவரைப் பகைச்சுகிட்டவன் எவன்தான் உயிரோட இருக்க முடியும் சொல்லு...

    நானும் இதுவரைக்கும் உனக்காக ஏழெட்டு காரியங்க செஞ்சாச்சு... இன்னும் உன்னோட தலைவர் யாருன்னு எனக்குத் தெரியலை....

    மாயாண்டி அதற்கும் சிரித்தான்.

    தெரியாம இருக்கறதுதான் நல்லது! சரி பீட்டரை எப்படி முடிக்கறே?

    என்கிட்ட சொல்லிட்டேயில்ல...?

    ம்

    நாளைக்கு இந்நேரம் பீட்டர் அவனோட பிதாகிட்டே பரம மண்டலம் போயிருப்பான்...

    உதடுகளில் புகையும் சிகரெட்டோடு பாஸ்கரன் மாயாண்டியின் வீட்டினின்றும் வெளியே வந்தான்.

    2

    பீட்டர் திண்ணையில் சைக்கிளை சாய்த்து நிறுத்திவிட்டு - வீட்டுக்குள் நுழைந்தான். கண்களிலும்- மீசையிலும் நடிகர் பிரதாப்பை நினைவுக்குக் கொண்டு வந்தான். சிவில் எஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு பக்கத்து டவுனில் சொந்தமாக சிவில் கன்சல்டன்ஸி அலுவலகம் நடத்தி வருபவன். பிஸ்னெஸ் சூடுபிடித்து விட்டதால் இன்னும் சில வாரங்களில் சைக்கிளை உதறிவிட்டு ஒரு ஹிண்ட்-சூசூகி வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.

    ஈஸி சேரில் உட்கார்ந்து - யோவானின் நல்வழி புத்தகம் ஒன்றில் மூழ்கியிருந்த பீட்டரின் அப்பா ஸ்டேன்லி அவனுடைய வரவால் கலைந்து போய் நிமிர்ந்தார்.

    என்ன பீட்டர் இன்னிக்கு லேட் போலிருக்கு?

    இன்னிக்கு செவ்வாய். அந்தோணியார் கோயிலுக்கு போய்ட்டு வந்தேன்

    ஸ்டேன்லி பீட்டரின் அப்பா. பாங்க் ஒன்றில் வேலையிலிருந்த ஸ்டேன்லி ரெண்டு வருஷத்திற்கு முன்னால் வாலண்டியர் ரிடையர்மெண்ட் வாங்கிக் கொண்டவர். இப்போது ரிடையராகிற வயது. சுத்தமாய் தலை, தாடிப் பிரதேசங்களில் நிறமிழந்திருந்தார். படிக்க கண்ணாடியின் துணை அவசியமாயிருந்தது. மார்பில் நிளமாய் தொங்கிய செயினின் முடிவில் ஒரு வெள்ளி சிலுவை புரண்டது.

    பீட்டர் ஷர்ட்டைக் கழற்றி சுவர் ஆணியில் மாட்டிவிட்டு பின்பக்கம் போய் கை, கால், முகம் கழுவிவிட்டு துண்டால் முகத்தை ஒற்றியபடியே திரும்பி வந்தான்.

    ஏன் பீட்டர்...

    சொல்லுங்கப்பா...

    கவர்ன்மெண்ட் வொர்க் ஒண்ணை கான்ட்ராக்ட் எடுத்திருந்தியே...?

    "நான் எடுக்கலைப்பா... கருணாம்பிகா மெஷின் வொர்க்ஸ் லிமிடெட் டைரக்டர் மருதநாயகம்

    Enjoying the preview?
    Page 1 of 1