Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

திக் திக் டிசம்பர்
திக் திக் டிசம்பர்
திக் திக் டிசம்பர்
Ebook161 pages39 minutes

திக் திக் டிசம்பர்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஹரீஷ் அதிர்ந்துபோய் டாக்டரை ஏறிட்டான். அவர் முகம் இறுகிப்போய் லேப் டெக்னீஷியனை எரிச்சலாய்ப் பார்த்தார். 'பேஷண்டுக்கு நினைவு திரும்பி விட்டதா இல்லையா என்பதைக்கூடக் கவனிக்காமல் இப்படியா உண்மையைப் போட்டு உடைப்பது?' கோபமாய் கண்களால் கேட்ட கேள்விக்கு லேப் டெக்னீஷியன் முகம் வெளுத்து. "ஸாரி" என்று முனகினார்.
ஹரீஷ் தடுமாற்றமாய் உடல் நடுங்க எழுந்து உட்கார்ந்தான். "டா... டாக்டர்...! எ... எனக்கு எ... எய்ட்ஸ் நோயா?"
டாக்டர் ஓர் இன்ஸ்டண்ட் புன்னகை பூத்தார். "நோ... நோ... அவர் சொன்னது உன்னைப்பத்தி அல்ல. யூ ஆர் நார்மல்."
"டாக்டர்... என்கிட்ட எதையும் மறைக்காதீங்க. இவர் என்பேரைச் சொன்னதை நான் கேட்டுட்டேன். எனக்கு எய்ட்ஸ் நோயா டாக்டர்?"
டாக்டர் பெருமூச்சொன்றை விட்டபடி. கவலை ஈஷிக்கொண்ட முகத்தோடு தலையாட்டினார்.
"எஸ்... இது எய்ட்ஸோட ஆரம்ப நிலை."
"டா... டாக்டர்... இது... எனக்கு எப்படி...?"
"அதை... நீதான் சொல்லணும் எய்ட்ஸ் ஒருத்தரைத் தாக்க எத்தனையோ வழிகள் இருக்கு. உனக்கு மோசமான பெண்கள்கிட்டே தொடர்பு இருக்கா?"
"இல்லை..."
"உனக்குக் கல்யாணம்...?"
"இன்னும் ஆகலை.எந்தப் பெண்ணோடவாவது சமீபத்துல...?"
"இல்லை."
"பொய் சொல்லக் கூடாது."
"சத்தியமா இல்லை டாக்டர் என்னோட அத்தை பொண்ணு மீராவைக்கூட நான் தொட்டுப் பேசினது இல்லை."
"சமீபத்துல உனக்கு யாராவது ரத்ததானம் பண்ணினாங்களா?"
"இல்லையே..."
"உன்னோட ரிலேடிவ் சர்க்கிளிலோ, ஃப்ரண்ட்ஸ் சர்க்கிளிலோ யாருக்காவது எய்ட்ஸ் நோய் இருந்ததா?"
"இல்லை."
"எய்ட்ஸ் தடுப்பு நோய் கேம்ப்கள் நடக்கிற இடங்களுக்குப் போய் வாலண்டியரா சர்வீஸ் பண்ணினது உண்டா?"
"இல்லை."
"எதுவுமே இல்லைன்னா எப்படி? சமீபத்துல உடம்புக்கு முடியாம ஏதாவது ஹாஸ்பிடல்ல படுத்துட்டிருந்தியா?"
"ஹாஸ்பிடல்ல படுக்கலை. ஆனா..."
"சொல்லு."
"போனமாசம் ஒரு நாள் சாயந்திரம் எனக்கு திடீர்னு காய்ச்சல் அடிச்சது. மாத்திரை சாப்பிட்டும் காய்ச்சல் கட்டுப்படலை. ரெண்டு தெரு தள்ளியிருந்த ஒரு டாக்டரோட க்ளினிக்குக்குப் போனேன். அந்த டாக்டர் எனக்கு இஞ்ஜெக்ஷன் பண்ணினார்."
"எந்த டாக்டர்?"
"டாக்டர் சர்வேஸ்வரன்.இஞ்ஜெக்ஷனை டாக்டர் போட்டாரா, இல்லை நர்ஸ் போட்டாளா?"
"டாக்டர்தான் போட்டார்."
"ஊசியை ஸ்டெரிலைஸ் பண்ணினாரா?"
"பண்ணலை."
"எப்படி அவ்வளவு நிச்சயமாச் சொல்றே?"
"நான் டாக்டர்கிட்டே போனபோது அவர் எங்கேயோ வெளியே கிளம்பிப் போகத் தயாராயிருந்தார். நான் போனதுமே டெம்பரேச்சர் பார்த்துட்டு. இன்ஜெக்ஷன் போடணும்னு சொன்னார். நர்ஸ் ஊசியை ஸ்டெரிலைஸ் பண்ணப் போகும்போது, "வேண்டாம்
அதுக்கெல்லாம் நேரமில்லை'ன்னு சொல்லி டாக்டர் ஊசி போட்டார்."
"சந்தேகமே இல்லை. ஸ்டெரிலைஸ் பண்ணாத அந்த ஊசி மூலமாத்தான் எய்ட்ஸ் ஹெச்.ஐ.வி. கிருமிகள் உன்னோட ரத்தத்தில் கலந்திருக்கு. சில டாக்டர்கள் ஊசியை ஸ்டெரிலைஸ் பண்ண சோம்பல் பட்டுக்கிட்டு ஊசியைப் போடறதனால ஏற்படுகிற விபரீதம் இது."
ஹரீஷின் உடம்புக்குள் பாய்ந்து கொண்டிருந்த ரத்தமெல்லாம் சட்டென்று வற்றிவிட்ட மாதிரியான உணர்வு. மண்டைக்குள் நட்சத்திரங்கள் வெடித்தன. 'ஸ்டெரிலைஸ் பண்ணாத அந்த ஊசி மூலமாத்தான் எய்ட்ஸ் ஹெச்.ஐ.வி. கிருமிகள் உன்னோட ரத்தத்தில் கலந்திருக்கு'. டாக்டர் சொன்ன இந்த வாசகம் ஹரீஷின் மனசுக்குள் பெரியதாய்க் கோஷமிட்டது.
டாக்டர் அவனுக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்ல வாயைத் திறந்த விநாடி. அவர் முதுகுக்குப் பின்னால் நடைச் சத்தம் கேட்டது.
திரும்பினார்.
கலவர முகமாய் நர்ஸ்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 8, 2024
திக் திக் டிசம்பர்

Read more from ராஜேஷ்குமார்

Related to திக் திக் டிசம்பர்

Related ebooks

Related categories

Reviews for திக் திக் டிசம்பர்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    திக் திக் டிசம்பர் - ராஜேஷ்குமார்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    அம்மா!

    பால் குக்கர் விசிலடிப்பதற்காக காஸ்ஸ்டவ் அருகே காத்திருந்த சொர்ணம், சமையலறை வாசலில் எழுந்த குரலைக் கேட்டுத் திரும்பினாள்.

    மகன் ஹரீஷ் நின்றிருந்தான். கையில் நீளமாய் ஒரு ப்ரெளன் கவர். முகம் முழுக்க சந்தோஷம், பவுடர் பூசியது மாதிரித் தெரிந்தது.

    என்ன ஹரீஷ்... லைப்ரரிக்குப் போய்ட்டு வர்றேன்னு கிளம்பினே! கையில ஏதோ கவரோடு வந்து நிக்கறே? என்ன கவர் அது?

    அம்மா...! இப்ப எதுவும் கேக்காதே! மொதல்ல கிழக்குப் பார்த்து நில்லு.

    எதுக்குடா?

    நில்லு சொல்றேன்.

    பால் குக்கர் இப்போ விசில் குடுத்துடும்.

    குடுக்கட்டும். நில்லும்மா.

    இவன் ஒருத்தன் நேரம் காலம் தெரியாமே...

    செயற்கையாய் சலித்துக் கொண்டே கிழக்கு பார்த்து நின்றாள்.

    நின்னுட்டேன் என்னடா...?

    என்னை ஆசிர்வாதம் பண்ணும்மா. சொன்ன அந்த இருபத்தைந்து வயது அழகான ஹரீஷ் நெடுஞ்சாண்கிடையாக சொர்ணத்தின் கால்களில் விழுந்தான்.

    நல்லாயிரு! ஹரீஷின் தலையைத் தொட்ட சொர்ணம், சிரிப்போடு கேட்டாள், எதுக்காகடா இந்த அர்ஜெண்ட் ஆசீர்வாதம்?

    உன் மகனுக்கு வேலை கிடைச்சாச்சும்மா. இதோ அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர்.

    சொர்ணத்தின் கண்களில் நீர் முட்டிக் கொண்டது.

    என் ராஜா... நிஜமாவாடா சொல்றே? எந்த ஊர்ல வேலை கிடைச்சிருக்கு?

    "ஆமதாபாத்தில் இருக்கிற சிஸ்டம்ஸ் அண்ட் கண்ட்ரோல்ஸ் கம்பெனியில் அஸிஸ்டெண்ட் எலக்ட்ரானிக் எஞ்ஜினீயரா போஸ்டிங். அடுத்த வாரத்துக்குள்ளே வந்து ட்யூட்டியில் ஜாய்ன் பண்ணும்படியா ஆர்டர்ல இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்திருக்காங்க.

    சம்பளம் எவ்வளவு தெரியுமாம்மா?"

    எ... எவ்வளவு?

    எவ்வளவு இருக்கும்னு நினைக்கிறே?

    மூவாயிரம்...?

    ஏம்மா, நான் படிச்சிருக்கிறது எம்.ஈ. எலெக்ட்ரானிக்ஸ். வேலை பார்க்கப் போறதோ இந்தியாவில் இருக்கிற பெரிய கம்பெனிகளில் ஒன்றான சிஸ்டம்ஸ் அண்ட் கண்ட ரோல்ஸ்ல, சம்பளத்தை இப்படியா குறைச்சுச் சொல்றது?

    எனக்கென்னடா தெரியும்?

    சரி... சொல்றேன், கேட்டுக்க, மாசச் சம்பளம் எனக்குப் பன்னிரண்டாயிரம் ரூபாய். அலவன்ஸ் தனி. குடியிருக்கத் தனி க்வார்ட்டர்ஸ். கம்பெனிக்குப் போக வர கார்...

    சொர்ணம் கண்களை அகல விரித்துக் கொண்டு பிரமித்துப் போய் மகனைப் பார்த்தாள்.

    இப்படியொரு ராஜ வாழ்க்கைக்காகத்தானே இருந்த ஒரு வீட்டையும் விற்று ஹரீஷைப் படிக்க வைத்தாள்!

    ஹரீஸ் அவளுடைய கன்னங்களைத் தட்டினான்.

    என்னம்மா அப்படிப் பார்க்கிறே?

    இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்துக்க உங்க அப்பா உயிரோடு இல்லையேன்னு நினைச்சேன்.

    அம்மா! இந்த சந்தோஷ நேரத்துல அப்பாவை நினைச்சுட்டு அழ ஆரம்பிச்சுடாதே.

    ஆர்டர் தபால்லதானே வந்தது?

    ஆமாம்மா

    போஸ்ட்மேனுக்கு எதாவது குடுத்தியா?

    ம், குடுத்தேனே... ஒரு முத்தமும் பத்து ரூபாயும்.

    சொர்ணம் கண்ணீர் பொங்கச் சிரித்து, ஹரீஷின் முன்னுச்சி தலைமுடியைப் பிடித்து ஆட்டினாள்.

    சரி, நீ இப்போ உடனடியா ஒரு காரியம் பண்ணுனும்.

    என்ன?

    உனக்கு எப்போ வேலை கிடைக்கும்... தாலிக்காக எப்போ கழுத்தை நீட்டலாம்ன்னு காத்திட்டிருக்கிற மீராவுக்கு ஃபோன் பண்ணி மொதல்ல விஷயத்தைச் சொல்லு. விஷயத்தைக் கேட்டதும் சந்தோஷத்துல அவளுக்கு இறக்கையே முளைச்சிடும்.

    பால்குக்கர் விசிலடிக்க...

    இதோ... என்று பாய்ந்தான் ஹரீஷ், சந்தோஷம் மனசுக்குள் கன்றுக்குட்டியாய்த் துள்ளியது. இப்படியொரு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வாங்க எத்தனை இரவுத் தூக்கங்களைத் தியாகம் செய்திருப்பேன்? சினிமாவுக்குப் போகாமல், டீ.வி. பார்க்காமல், லைப்ரரிக்குப் போய் பாட சம்பந்தப்பட்ட புத்தகங்களைத் தேடிப்பிடித்து படித்து... அதன் சாராம்சங்களை மூளையின் ஸெல்களுக்குத் திணித்து பரீட்சைத் தாள்களில் கொட்டியது இப்படிப்பட்ட ஓர் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை ஸ்பரிசிக்கத்தானே?

    தெருவின் கோடியில் இருந்த டெலிஃபோன் பூத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த ஹரீஷுக்கு அந்தக் காலை நேர அழகான தெரு ஒரு சொர்க்கம் போல் காட்சியளித்தது. ஜனங்கள் எல்லோரும் கிரீடம் வைக்காத தேவர்கள் மாதிரித் தெரிந்தார்கள். வேக நடை போட்டு டெலிஃபோன் பூத்தை நெருங்கினான்.

    உடல் ஊனமுற்றோருக்கான டெலிஃபோன் பூத் அது. விரல்கள் சூம்பிப் போயிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்து சிநேகமாய்ச் சிரித்தான் ஹரீஷ். கமலா... ஒரு ஃபோன் பண்ணிக்கிறேன்.

    பண்ணிக்குங்க ஸார்.

    ஹரீஷ் பக்கத்தில் இருந்த கண்ணாடி பூத்துக்குள் நுழைந்து டெலிஃபோனைத் தொட்டு ரிஸீவரை எடுத்துக் கொண்டான். மீராவின் வீட்டு டெலிஃபோன் எண்களை மனதின் மையத்துக்குக் கொண்டு வந்து டயலில் தட்டினான்.

    மறு முனையில் ரிங் போயிற்று. உடனே ரிஸீவர் எடுக்கப்பட்டது.

    ஹலோ! அத்தையின் குரல் கேட்டது.

    அத்தே...! நான் ஹரீஷ் பேசறேன். அங்கே மீரா இல்லையா?

    இருக்காளே.

    கொஞ்சம் கூப்பிடுங்க அத்தே.

    என்ன ஹரீஷ்... அத்தைகிட்டே இரண்டு நிமிஷம் பேசக் கூடாதா?

    சாவகாசமா வீட்டுக்கு வந்து பேசறேன். இப்போ மீராவைக் கூப்பிடறீங்களா?

    இதோ... அவளே வந்துட்டா.

    அடுத்த சில வினாடிகளில் மீராவின் குரல் கேட்டது.

    ஹலோ ஹரீஷ்... வீணைத் தந்திகளின் மேல் தவறிப் போய் கைவிரல்கள் பட்டுவிட்ட மாதிரியான ஒரு சிலிர்ப்பு மீராவின் குரலில் பரவியிருந்தது.

    மீரா...!

    ம்...

    "அர்ஜெண்டா ஒரு முத்தம் கொடு.

    எதுக்கு?

    சொல்றேன், கொடு.

    அம்மா சோபாவில் உட்கார்ந்துட்டு என்னயே பார்த்துட்டு இருக்கா

    திரும்பி நின்னுக்கிட்டு கொடு.

    "சரி, இந்தாங்க,

    Enjoying the preview?
    Page 1 of 1