Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

முடிந்தால் உயிரோடு
முடிந்தால் உயிரோடு
முடிந்தால் உயிரோடு
Ebook147 pages36 minutes

முடிந்தால் உயிரோடு

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாருதியை போர்டிகோவுக்குள் கொண்டு போய் அடக்கி கீழே இறங்கின மகளை ஆர்வமாய் எதிர்கொண்டார் சத்தியநாராயணன். பப்ளிமாஸ் நிற வழுக்கை மண்டைக்கு நடுவில் வெள்ளி இழைகளாய் நான்கைந்து நரைமுடிகள் திசைக் கொன்றாய் கோபித்துக் கொண்டு நிற்க தன் பெரிய சைஸ் மூக்கின் மேல் வெள்ளி பிரேமிட்ட கண்ணாடியை உட்கார்த்தி வைத்திருந்தார்.
“என்னம்மா வர்ணா... போன காரியம் என்னாச்சு...?”
“சக்சஸ்தாம்பா...?”
“எவ்வளவு வெச்சு பாக்டரியை எடுத்தே...?”
“இருபத்தஞ்சு லட்சம்...'
“மோசமில்லை. இன்னிக்கி இருக்கிற நிலவரப்படி அந்த ஏரியாவில் ஒரு செண்ட் அறுபதாயிரத்துக்கு போகும்... சீப்தான்...! மாப்பிள்ளை என்ன சொன்னார்.”
“உங்க மாப்பிள்ளைதானே... ரொம்ப கோபப்பட்டார். உன்னை இங்கே யார் வரச் சொன்னதுன்னு கத்தினார்... நான் வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டேன்... வரமாட்டேனுட்டார்...”
“சரி... உன்னோட அடுத்த ஸ்டெப் என்னம்மா வர்ணா...?” ஹாலில் நடந்து போய் சோபாவில் உட்கார்ந்து கொண்டே கேட்டார் சத்தியநாராயணன்.
“அடுத்த வாரத்துல ஏதாவது ஒருநாள். அந்த பாக்டரியை எம்பேர்க்கு மாத்தின டாக்குமென்டரியோட அவர் வீட்டுக்குப் போகப் போறேன். பல்லு பிடுங்கின சிங்கம் மாதிரி இருக்கிற அவரை என்னோட வழிக்கு கொண்டுட்டு வரப்போறேன்... நீங்க யு.எஸ்.ஏ. போயிட்டு திரும்பி வர்றப்போ... உங்க மாப்பிள்ளை என்கிட்டகையேந்திகிட்டு நின்னுட்டிருப்பார்... உங்க நெடுநாளைய ஆசைப்படி அவரை நம்ம பாக்டரிக்கு ஒரு ஜி.எம். போஸ்ட்டுக்கு இழுத்துக்கலாம்...”
“எனக்கென்னமோ நம்பிக்கையில்லேம்மா...”
“எனக்கிருக்கு...”
“அப்பாவும் மகளும் இப்படி நடந்துக்கிறது கொஞ்சம் கூட சரியில்லை. “பின்பக்கமாய் எழுந்த உஷ்ணமான குரலைக் கேட்டு இருவரும் திரும்பினார்கள்.
அம்மாக்காரி பூரணி கோப முலாம் அடித்த முகத்தோடு நின்றிருந்தாள். வர்ணா சிரித்தாள்.
“நீ சப்போர்ட் பண்ணி பேசற மாப்பிள்ளை இன்னிக்கு எங்கே உட்கார்ந்திருந்தார்ன்னு தெரியுமாம்மா...? பாக்டரி கேட்டுக்குப் பக்கத்துல டைம் ஆபீஸையொட்டின மாதிரி ஒரு நாற்காலியைப் போட்டுகிட்டு உட்கார்ந்திருந்தார். அவர் கண் முன்னாடியே பாக்டரியோட மானத்தை கொஞ்சம் கொஞ்சமா ஏலம் போட்டுகிட்டு இருந்தாங்க...”
“அவரை அந்த நிலைமைக்கு கொண்டு வந்ததே... நீயும் உங்கப்பாவும் தாண்டி. அந்த நல்ல மனுஷன் உன் கழுத்துல தாலி கட்டின பாவத்துக்காக நாய் படாத பாடு பட்டுட்டார். உங்க அப்பாவோட பாக்டரியையும் கம்பெனியையும் நிர்வாகம் பண்ண அவர் வர மறுத்துட்டார்ங்கிற ஒரேயொரு காரணத்துக்காக அவரை இப்படி நடுத்தெருவுக்கு கொண்டு வந்து மானத்தை வாங்கறது நியாயமா... வர்ணா...”
“அம்மா...”
“என்னடி...?”
“உன்னோட அழகான மாப்பிள்ளைக்கு நல்லது தானே பண்ணியிருக்கோம். ஏலத்துல யார் கைக்கோ போக இருந்த... அவரோட மெட்டல் பாக்டரியை மீட்டுகிட்டு வந்தது தப்புன்னு சொல்றியா?”“ஒரு ஆம்பிளையை இதைவிட அழகா அவமானப்படுத்தவே முடியாது வர்ணா. அவர் உனக்கு அடங்கிப் போகணும்ன்னு நீ நினைக்கிறியே... அது மகா தப்பு. உங்க அப்பா குடுக்கிற செல்லத்துல நீ ரொம்பவும் துள்ளறே... இந்த துள்ளலுக்கெல்லாம் எப்பவாவது ஒரு நாள் நீ அனுபவிக்கப் போறே...”
“அப்பா...”
“என்னம்மா...?”
“அம்மா... சாபம் தர்றா...”
“அவளுக்கு சொந்த ஊர் திருக்குவளை. புருஷன் காலடிபட்ட மண்ணை எடுத்து நெத்திக்கு இட்டுக்கிற கிராமத்து பஞ்சாங்கம்...”
பூரணி வெடித்தாள். “ஆமாங்க... நான் பஞ்சாங்கம்தான். அந்த பஞ்சாங்கத்துல என்னென்ன எழுதியிருக்கோ அதைத்தான் வெள்ளைக்காரனும், ஜப்பான்காரனும் இப்போ புதுசு புதுசா கண்டு பிடிச்சிட்டு வர்றான். ஆம்பிளையை எப்படி வேணும்ன்னாலும் வளர்த்து உட்டுடலாங்க... ஆனா பொண்ணை இப்படித்தான் வளர்க்கணும்ன்னு ஒரு வரைமுறை இருக்குங்க... அவளுக்கு கொம்பு சீவி மாப்பிள்ளை மேலேயே பாய விடறது உங்களுக்கு நியாயமா படுதா...?”
“வர்ணா... உங்கம்மா லெக்சர் அடிக்க ஆரம்பிச்சுட்டா. நீ சாவகாசமா உட்கார்ந்து கேளு... நான் கம்பெனிக்கு புறப்படறேன்... பாரின் டூர் கிளம்பறத்துக்குள்ளே சில பைல்ஸையெல்லாம் பார்க்கணும்...”
சொல்லிக் கொண்டே போர்டிகோவில் நின்றிருந்த காரை நோக்கிப் போனார் சத்திய நாராயணன். வர்ணா அலட்சியமாய் கூந்தலை கோதிக் கொண்டே தன் அறைக்கு போக முயன்றாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
முடிந்தால் உயிரோடு

Read more from ராஜேஷ்குமார்

Related to முடிந்தால் உயிரோடு

Related ebooks

Related categories

Reviews for முடிந்தால் உயிரோடு

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    முடிந்தால் உயிரோடு - ராஜேஷ்குமார்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    "ஆரம்பிக்கலாமா... ஸார்...?"

    கழுத்தில் டையைக்கட்டி மெலிசாய் மீசை வைத்து அரசாங்க வாசனை அடிக்கும் அந்த இளைஞன் பவ்வயமாய் குனிந்து கை வைத்த நாற்காலியில் இறுக்கமாய் உட்கார்ந்திருந்த குருப்ரகாஷிடம் கேட்டான்.

    மௌனமாய் தலையாட்டினான் குருப்ரகாஷ். அவனுடைய வழக்கமான மாநிற முகம் இருட்டு நிறத்துக்கு போயிருந்தது. வழக்கமாய் ப்ரில் க்ரீமில் மினுமினுக்கும் அவனுடைய அடர்த்தியான தலைக் கேசம் அன்றைக்கு வறண்டு போயிருந்தது. உட்கார்ந்திருக்கும் போது வேகமாய் வலது காலை ஆட்டும் அந்த மேனரிஸமும் அன்றைக்கு நின்று போயிருந்தது.

    பாக்டரியின் வாசலில் டேபிள் போட்டு உட்கார்ந்திருந்த அமீனா – பக்கத்திலிருந்த அரசாங்க வக்கீலிடம் கேட்டார்.

    லாயர் ஸார்... பார்ட்டீஸ் பூராவும் வந்துட்டாங்களா?

    எல்லாரும் வந்துட்டாங்க...?

    ஏலத்தை ஆரம்பிச்சுடலாமா...

    ம்...

    கோர்ட் அமீனா நாற்காலியினின்றும் தன் தொப்பையைத் தூக்கிக் கொண்டு எழுந்தார். மரத்து நிழலில் ஏறக்குறைய இருபது நாற்காலிகளில் நேர்பார்வை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவர்களை ஏறிட்டார். தன் தாம்பாளக் குரலில் பேச ஆரம்பித்தார்.

    இங்கே வந்திருக்கிற அனைவர்க்கும் தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் கோர்ட் ஆர்டர்படி மறுபடியும் விஷயத்தை சொல்றேன். வுட்ஸ் க்ரூக்கள், ஒயர் நைல்ஸ், தயாரிக்கும் கம்பெனியான 'குருப்ரகாஷ் மெட்டல்ஸ்' கம்பெனி முப்பது வயதான குருப்ரகாஷுக்கு சொந்தமானது. இவருடன் ஆரம்ப காலத்தில் இருந்த மற்ற பார்ட்னர்கள் போன வருடம் விலகிய பின் இவர் மட்டுமே இந்த கம்பெனிக்கு ஸோல் ப்ரொப்ரைட்டராக இருந்து வந்திருக்கிறார். நிர்வாகமும் செய்திருக்கிறார். கடந்த ஆறு வார காலத்தில் கம்பெனி கடனில் மூழ்கியதால் கடனைக் கொடுத்த நபர்கள், பாங்க் நிர்வாகம், விற்பனை வரித்துறை ஆகியோர் திரு. குருப்ரகாஷ் மீது வழக்கு தொடுத்ததின் காரணமாக கோர்ட் இதில் தலையிட்டு தன் தீர்ப்பாக குருப்ரகாஷுக்கு சொந்தமான இந்த கம்பெனியை ஏலத்தில் விட்டு வரும் தொகையை முன்னுரிமை அடிப்படைப்படி வழக்கு தொடுத்த அனைவரும் விகிதாச்சாரப்படி பிரித்துக் கொள்ள வேண்டியது.

    அமீனா சத்தம் போட்டு குருப்ரகாஷின் மானத்தை வாங்கிக் கொண்டிருக்க குருப்ரகாஷ் தலைகுனிந்து மோவாயைச் சொறிந்து கொண்டிருந்தான். வயிற்றுக்குள் அமிலம் சுரந்து கொண்டிருந்தது.

    அமீனா தொடர்ந்தார். இந்த பாக்டரியின் மொத்த விஸ்தீர்ணம் ஐம்பது செண்ட்ஸ். கருங்கல் கட்டிடத்தால் ஆன இந்த பாக்டரி... ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி மூன்றில் கட்டப்பட்டது. பாக்டரிக்குள் இருந்த எந்திர சாதனங்களை ஏற்கனவே தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் தன் கடனுக்காக எடுத்துக் கொண்டு விட்ட படியால் இப்போது இருப்பது கட்டிடம் மட்டுமே. பாக்டரி கட்டிடததை ஏலத்தில் எடுக்க விரும்புகிறவர்களுக்காக நேற்றைய தினம் பாக்டரியின் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. ஏலம் கோர வந்த அனைவரும் கட்டிடத்தை பார்வையிட்டிருப்பீர்கள் எனும் நம்பிக்கையில் இந்த ஏலம் ஆரம்பிக்கப்படுகிறது... என்று சொல்லிவிட்டு மேஜையின் மேலிருந்த மணியை அடித்தார் அமீனா.

    ஏலத்தொகை ஒரு லட்சத்தில் ஆரம்பமாகிறது...

    ஒரு லட்சம்...

    உடனே முன் வரிசையில் இருந்த ஒருவர் கத்தினார்.

    "ஐந்து லட்சம்...

    பின் வரிசை வழுக்கையொன்று ஏழு. என்றது.

    தொடர்ந்து பத்து...

    பனிரெண்டு...

    பதினஞ்சு...

    நாற்காலியில் உட்கார்ந்திருந்த குருப்ரகாஷ் தன் தாடைப் பிரதேசத்தை வலது கை விரல்களால் வழுவிக் கொண்டே எதிரே வேப்ப மரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு ஒற்றை காக்கையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    பதினாறு லட்சம். சில விநாடி மௌனம்.

    பதினாறு லட்சம்... ஒரு தரம்...

    பதினேழு லட்சம்...

    பதினெட்டு.

    ஏலம் மும்முரமாய் நடந்து கொண்டிருந்த அதே நிமிஷம் ரத்த நிறத்தில் மினுமினுத்த அந்த மாருதி கார் வேகமாய் பீறிட்டு வந்து வாசலில் நின்று டயர்களைத் தேய்த்தது. காரின் கதவு 'பளக்' என்று விலகிக் கொள்ள அவள் இறங்கினாள். காற்றில் 'கோல்ட் ப்ளேம்' செண்ட் தவழ்ந்தது.

    ஏலம் ஒரு சில விநாடிகள் ஸ்தம்பித்தது தொடர்ந்தது.

    காரினின்றும் இறங்கியவள் பட்டுப்புடவையில் இருந்தாள். வெளிச்ச நிறம். கண்களுக்கு குளிர் கண்ணாடியைக் கொடுத்திருந்தாள். காலியாய் இருந்த ஒரு நாற்காலியை போய் நிரப்பினாள். பதினெட்டு லட்சம்... அமீனா கத்த அவள் குறுக்கிட்டாள். இருபது லட்சம்...

    நாற்காலியின் இரண்டு வரிசைகளில் உட்கார்ந்திருந்தவர்கள் மொத்த பேரும் அவளைத் திரும்பிப் பார்க்க அவள் லிப்ஸ்டிக் பூசின உதடுகளால் புன்னகைத்தாள். கண்களைக் கவ்வியிருந்த குளிர் கண்ணாடியைக் கழற்றி பட்டுச் சேலையின் தலைப்பில் நாசூக்காய் தேய்த்து மறுபடியும் கண்களுக்கு கொடுத்தாள். அமீனா

    Enjoying the preview?
    Page 1 of 1