Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கண்ணிமைக்க நேரமில்லை
கண்ணிமைக்க நேரமில்லை
கண்ணிமைக்க நேரமில்லை
Ebook290 pages1 hour

கண்ணிமைக்க நேரமில்லை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நந்தா வீறிட்டாள்.
“அ... அண்ணா…!”
கார் கிறீச்சிட்டு நின்றது. உத்தம் நெற்றியைப் பிடித்துக் கொண்டு கலவரமானான்.
“இப்படி திடீர்ன்னு குறுக்கே ரோட்டை கடப்பாள்ன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கலை நந்தா…”
“வா… இறங்கிப் பார்க்கலாம்…”
“வேண்டாம் நந்தா…! போயிடலாம்… கார்மோதி தூக்கி எறிஞ்ச வேகததுல... அந்தப் பொண்ணு கண்டிப்பா செத்திருப்பா! இறங்கிப் பார்த்துட்டிருந்தா… பிரச்சினையில் மாட்டிக்குவோம்…”
“ஒரு வேளை... அந்தப் பொண்ணு உயிரோட இருந்துட்டா…?”
“நந்தா...! அவ உயிரோடு இருந்தா என்ன…? செத்துப் போயிருந்தாதான் என்ன…? இந்த விபத்தைப் பார்த்தவங்க யாரும் இல்லை... நாம இங்கிருந்து எவ்வளவு சீக்கிரத்தில் கிளம்பறமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது…’
“ஒரு நிமிஷம் இறங்கிப் பார்த்துடலாம்.”
“வேண்டாம் நந்தா...! நான் சொல்றதைக் கேளு, நாம பாட்டுக்கு போயிட்டே இருப்போம்…”
“எனக்கு மனசு கேக்கலை... அண்ணா...” நந்தா சொல்லிக்கொண்டே காரின் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினாள், நிசப்தமான இருட்டின் பின்னணியில் சில்வண்டுகள் விதவிதமாய் சுருதி சேர்த்துக் கொண்டிருக்க, நந்தா பத்தடி தள்ளி குப்புற விழுந்திருந்த அந்தப் பெண்ணை நெருங்கினாள்.குனிந்தாள்.
தலையில் இரத்தக்காயம் தெரிய – அந்தப் பெண்ணின் உடல் லேசாய்த் துடித்துக் கொண்டிருந்தது. சின்னதாய் முனகல் சத்தம். இரத்தப் பெருக்கை நிறுத்துவதற்காக சேலையைக் கிழித்து தலைக்குக் கட்டுப் போட்ட நந்தா திரும்பிப் பார்த்து குரல் கொடுத்தாள்.
“அண்ணா…!”
“என்ன…? போயிட்டாளா...?”
“தலையில் மட்டுந்தான்காயம். உயிர் இருக்கு…”
“இருந்தா இருக்கட்டும்… வந்து கார்ல ஏறு. நாம போய்க்கிட்டே இருப்போம்…”
“நீ முதல்ல இறங்கி வாண்ணா…”
“எதுக்கு?”
“வா… சொல்றேன்…”
“நந்தா...! நீ விபரீத்தை விலை கொடுத்து வாங்கிட்டிருக்கே… வேற ஏதாவது வாகனம் இந்த வழியா வர்றதுக்கு முந்தி வந்து கார்ல ஏறு…”
“நீ இப்போ… காரை விட்டு கீழே இறங்கி வரப் போறியா?
இல்லையா...?”
உத்தம் எரிச்சலோடு காரின் கதவை அறைந்து சாத்திவிட்டு வேக வேகமாய் நடந்து வந்து நந்தாவின் பக்கத்தில் நின்றான்.
“என்ன…?”
“ஒரு கை பிடி... இந்தப் பொண்ணை நம்ம காருக்கு கொண்டு போயிடலாம்...”
“நந்தா...! என்ன உளர்றே…?”“உளரலை அண்ணா... உயிரோடு இருக்கற பொண்ணை இப்படியே விட்டுட்டுப் போனா… கொஞ்ச நேரத்தில் செத்துடுவா… ஏதாவது மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்துட்டு போயிடுவோம்...”
உத்தம் கோபத்துக்குப் போனான். “நந்தா! நீ புரிஞ்சு பேசறியா…? இல்ல புரியாம பேசறியா…? இந்தப் பொண்ணை மருத்துவமனையில கொண்டு போய் சேர்த்தா… விபத்து எப்படி நடந்துசுன்னு டாக்டர் கேக்க மாட்டாங்களா?”
“கண்டிபப்பா கேப்பாங்க...”
“அப்படி கேட்டா என்ன பதில் சொல்றது…?”
“ஒரு பொய் தயாராயிருக்கு…”
“என்ன பொய்…?”
“நாங்க கார்ல வரும் போது ரோட்டோரமா இந்தப் பொண்ணு விழுந்துகிடந்தா… என்னாச்சுன்னு தெரியலை. உடம்பை சோதிச்சுப் பார்த்தோம். உயிர் இருக்கவே கொண்டு வந்துட்டோம்…”
ரோட்டின் மேல் வளைவில் ஏதோ ஒரு வாகனத்தின் முகப்பு விளக்கின் வெளிச்சம் தெரிந்து ஹாரன் சத்தம் கேட்டது.
“பீங்க்கக்க…’
“அண்ணா...! ஏதோ... வாகனம் வந்துட்டிருக்கு. யோசனை பண்ண நேரமில்லை. ஒரு கை பிடி. இவளை காருக்கு கொண்டு போயிடுவோம்…”
“நந்தா...! நான் சொல்றதைக் கொஞ்சம்…”
“அண்ணா…! வர்ற வாகனம் போலீஸ் ஜீப்பாக்கூட இருக்கலாம்… ம்… சீக்கரம்… இவளைத் தூக்கு…”
உத்தம் நந்தாவை முறைத்துப் பார்த்துக் கொண்டே கீழே குனிந்து அந்தப் பெண்ணின் உடலைத் தூக்கினான். கைகளில் இரத்தம் பிசுபிசுத்தது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 8, 2024
கண்ணிமைக்க நேரமில்லை

Read more from ராஜேஷ்குமார்

Related to கண்ணிமைக்க நேரமில்லை

Related ebooks

Related categories

Reviews for கண்ணிமைக்க நேரமில்லை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கண்ணிமைக்க நேரமில்லை - ராஜேஷ்குமார்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    ஊட்டிமலைப்பாதை.

    நிலவைத் தெலைத்துவிட்ட வானம் சில நட்சத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு இரவைக் கரைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க – முகப்பு வெளிச்சத்தை பிரகாசமாய் உமிழ்ந்தபடி அந்தக் கருநீல வண்ண அம்பாசிடர் கார் மிதமான வேகத்தில் இறங்கிக் கொண்டிருந்தது.

    காரின் ஸ்டியரிங்கை உத்தம் கையாள, பக்கத்தில் அவனுடைய அழகான தங்கை நந்தா.

    நந்தா மூக்கை உறிஞ்சி சிணுங்கினாள்.

    அண்ணா...!

    ம்…

    எனக்கு பசிக்குது.

    ஒரு அரை மணி நேரம் பொறு நந்தா…! மேட்டுப்பாளையம் போய்ச் சேர்ந்ததும் ஒரு ஓட்டல்ல சாப்பிடுவோம்.

    இப்பவே மணி பத்து, மேட்டுப் பாளையம் போய் சேர்றதுக்குள்ளே பத்தரை மணியாயிடும். ஒரு ஓட்டலும் திறந்திருக்கப் போறதில்லை...

    கவலையே படாதே நந்தா! பஸ் நிலையத்துக்குப் பக்கத்துல இருபத்திநாலுமணி நேரமும் திறந்து இருக்கிற ஒரு ஒட்டல் இருக்கு, முட்டை புரோட்டாவும் கோழிக்கறியும் அங்கே பிரசித்தம், போய் ஒரு வெட்டு வெட்டலாம்.

    அதுவரைக்கும் என் வயிறு தாங்காது போலிருக்கே?

    பிஸ்கெட்டை எடுத்துக் கடி.

    அது எப்பவோ காலி.

    கொஞ்சம் பழங்கள் வாங்கி வச்சுக்கலாம்னு குன்னூர்ல சொன்னேன். நீ தான் கேட்கலை.

    தப்புதான்… தப்புதான்… நந்தா தன் தந்த நிற விரல்களால் கண்ணாடிக் கன்னத்தில் போட்டுக் கொண்டாள். வழியில ஏதாவது பெட்டிக்கடையோ டீக் கடையோ இருந்தால் ஒரு நிமிஷம் நிறுத்துண்ணா… எதையாவது வாங்கி வயித்துல போடலாம்…

    அதான் பார்த்துட்டு வர்றேன்.

    இனிமேல் வெளியூர் பயணம்ன்னு கிளம்பினா நிறைய நொறுக்குத் தீனி வாங்கி வச்சுக்கணும்…

    உத்தம் சிரித்தான்.

    ஊட்டியில் உன் தோழி இருந்திருந்தா நமக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

    கடன்காரி! நாம கல்யாண பத்திரிகை கொடுக்கப் போகும் போதுதானா அவள் பிறந்த ஊருக்கு புறப்பட்டு போகணும்?

    பாவம்! அவளை ஏன் திட்டறே? நாம வரப் போறது தெரிஞ்சிருந்தா ஊருக்குப் போயிருக்க மாட்டாள்.

    நந்தா சட்டென்று உத்தமின் தோளைத் தொட்டு உசுப்பினாள். அண்ணா! காரை ஸ்லோ பண்ணு.

    ஏன்?

    ரோட்டோட அடுத்தா வளைவு ஆரம்பத்துல ஏதோ விளக்கு வெளிச்சம் தெரியுது.

    உத்தம் பார்த்தான்.

    நந்தா சொன்னது சரிதான். பாதையின் அடுத்த வளைவில் ஒரு வெளிச்சம் ‘மினுக்...மினுக்…’ கென்று ஒரு விநாடி தெரிந்து மறுவிநாடி மறைந்து அடுத்த விநாடி தெரிந்தது.

    நந்தா! அநேகமா அது ஒரு பெட்டிக்கடையா இருக்கலாம்ன்னு நினைக்கிறேன்.

    அய்யோ அண்ணா...! அதை பெட்டிக்கடைன்னு சொல்லாதே… சொர்க்கம்னு சொல்லு. இப்போதைய பசிக்கு ரெண்டு வாழைப்பழம் கிடைச்சாக்கூட போதும்! கடவுளே! அது ஒரு பெட்டிக்கடையாவோ, டீக்கடையாவோ இருக்கணும்…

    கார் வளைவை நெருங்கியது.

    நந்தா...!

    என்னன்ணா?

    அந்த வெளிச்சம் ஒரு அரிக்கேன் விளக்கு வெளிச்சம். அது ஒரு மரத்தோட கிளையில் இருந்து தொங்கிட்டிருக்கு. கீழே நாலஞ்சு ஆட்கள் நிக்கிறாங்க. நீ நினைச்சமாதிரி அது ஒரு பெட்டிக்கடையோ, டீக்கடையோ இல்லை.

    அப்படீன்னா காரை நிறுத்தாதேண்ணா… அது திருட்டுக் கும்பலா இருக்கப் போகுது.

    உத்தம் பாதையின் வளைவுக்கு வந்து காரைத் திருப்பினான். அவன் பார்வை அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் இருந்த நபர்களுக்கு போயிற்று.

    போலீஸ்.

    ஒரு கான்ஸ்டபிள் ரோட்டின் குறுக்கே வந்து காரை நிறுத்தும்படி சைகை காட்ட உத்தம் கார் பிரேக்கை அழுத்தினான். கார் ரோட்டோரமாய்க் கிறீச்சிட்டு நின்றது.

    ஒரு டார்ச் விளக்கு சட்டென்று உயிர்பிடித்துக் கொள்ள இன்ஸ்பெக்டர் ஒருவர் பக்கத்தில் வந்தார். உத்தம் முகத்திலும் நந்தாவின் முகத்திலும் டார்ச் வெளிச்சம் விழுந்து அவர்களை அலம்பியது. இன்ஸ்பெக்டர் குனிந்து கேட்டார். வாயில் பனிப்புகை பறந்தது.

    உங்க பேர்?

    உத்தம்.

    இவங்க உங்க…?

    தங்கை...

    எங்கிருந்து வர்றீங்க.?

    ஊட்டியிலிருந்து.

    போயிட்டிருக்கிறது…?

    கோயமுத்தூர்.

    சொந்த ஊர்?

    கோயமுத்தூர்தான் சார். என்னோட தங்கை நந்தாவுக்கு பதினஞ்சு நாள்ல கல்யாணம். ஊட்டியில் இருக்கிற தோழி ஒருத்திக்கு அழைப்பிதழ் கொடுக்கிறதுக்காக போயிருந்தோம். இப்போ ஊர் திரும்பிட்டிருக்கோம்.

    உங்க காரோட ஆர்.சி. புக் கொடுங்க.

    உத்தம் காரின் டாஷ் போர்டைத் திறந்து ஆர்.சி புத்தகத்தை எடுத்துக் கொடுக்க, இன்ஸ்பெக்டர் வாங்கிப் பார்த்துவிட்டு அதைத் திரும்பவும் நீட்டினார்.

    நீங்க போகலாம், தொந்தரவுக்கு மன்னிக்கணும்.

    உத்தம் கேட்டான்.

    இன்ஸ்பெக்டர்! எதுக்காக இந்த சோதனைன்னு தெரிஞ்சுக்கலாமா?

    தாராளமா! ஊட்டியில் கார் திருட்டுக்கள் அதிகம். கடந்த ஒரு மாத காலத்துக்குள்ளே ஆறு கார்கள் திருட்டு போயிருக்கு. கார்களைத் திருடற அந்தக் கும்பலைக் கண்டு பிடிக்கிறதுக்காகத்தான் இப்படியொரு அதிரடி சோதனை. நீங்க புறப்படுங்க மிஸ்டர் உத்தம்.

    உத்தம் புன்னகையோடு தலையசைத்துவிட்டு காரின் எந்திரத்தை உறும வைத்து நகர்த்தினான்.

    கார் சிறிது தூரம் போனதும் நந்தா நெஞ்சை நீவிக் கொண்டு பெருமூச்சுவிட்டாள்.

    அண்ணா! ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்.

    எதுக்கு பயம்?

    தீடீர்னு போலீஸ் காரை நிறுத்தச் சொன்னா பயம் வராதா? இன்னும் கூட நெஞ்சு ‘திக்தக்’ன்னு அடிச்சுக்குது…

    தப்பு பண்ணினவங்கதான் போலீசைப் பார்த்து பயப்படணும்.

    இருந்தாலும்... அந்த காக்கி உடையையும் தொப்பியையும் பார்த்தாலே வயித்துக்குள்ளே ஐஸ் வாட்டர் இறங்கின மாதிரி ‘சிலீர்’ன்னு இருக்குண்ணா.

    உத்தம் சிரித்தான். போலீசைப் பார்த்து யார் பயப்படணுமோ அவங்க பயப்படறதில்லை.

    போலீசைப் பார்த்த அதிர்ச்சியில் கொஞ்ச நேரத்துக்கு முந்தி என்னைப் பாடாப்படுத்திட்டிருந்த பசி கூட காணாமே போயிடுச்சு. அது மறுபடியும் தலை காட்டறதுக்குள்ளே காரை கொஞ்சம் வேகமா விரட்டி மேட்டுப் பாளையம் போய் சேர்ந்துடலாம்.

    உத்தம் ஆக்சிலேட்டரில் காலை வைத்து அழுத்த, கார் இறக்கைகளைக் கட்டிக் கொண்ட மாதிரி பறந்தது.

    நல்ல வேகம்.

    ஐந்தே நிமிடத்தில் பர்லியார் வந்தது.

    நந்தா…!

    என்னண்ணா?

    இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு நீ மறுபடியும் ஊட்டிக்கு வர வேண்டியிருக்கு...

    எதுக்கு?

    தெரியாத மாதிரி கேக்காதே.

    உண்மையா தெரியல்லே அண்ணா...

    சொன்னா… என்னை அடிக்கக்கூடாது…

    மாட்டேன். சொல்லு.

    உத்தம் நத்தாவின் பக்கமாய்த் திரும்பி கண்ணைச் சிமிட்டிக் கொண்டே சொன்னான் – கல்யாணம் முடிஞ்சதும் உன்வீட்டுக்காரர் தேன்நிலவுக்கு ஊட்டிக்கு கூப்பிட்டா நீ போகமாட்டியா என்ன?

    நந்தா பொய்க் கோபத்தை முகத்தில் ஒட்ட வைத்துக் கொண்டு அண்ணன் உத்தமின் முன் கிராப் முடியைக் கொத்தாய்ப் பிடித்து உலுக்கினாள்.

    அய்யோ… நந்தா… விடு வலிக்குது...

    வலிக்கட்டும்… நல்லா வலிக்கட்டும்.

    பிளீஸ் நந்தா… விடு உத்தம் அவளிடமிருந்து விடுபட திமிறிக் கொண்டிருக்கும் போதே எதிரே –நூறு மீட்டர் தொலைவில்…

    காட்டுச் செடிகள் மண்டிய சாலையின் ஓரத்தில் அந்த இளம்பெண் தெரிந்தாள். தலைமுடியும் சேலைத் தலைப்பும் காற்றில் பறக்க –

    யாருக்கோ பயந்தபடி – திரும்பித் திரும்பிப் பாத்தபடி வேகநடை போட்டுக் கொண்டிருந்தாள். உத்தம் காரின் வேகத்தைக் குறைத்தான்.

    நந்தா…! அங்கே பார்த்தியா?

    யாரோ ஒரு பொண்ணு...

    அவளுக்கு ஏதோ ஆபத்துன்னு நினைக்கிறேன். இல்லேன்னா… இப்படித் திரும்பி திரும்பிப் பார்த்துக்கிட்டு பயந்து பயந்து ஓடிட்டிருக்க மாட்டா…

    ஆமா, அப்படித்தான் தெரியுது.

    காரை நிறுத்தி விசாரிக்கலாமா?

    வேண்டாம்ண்ணா.

    ஏன்?

    எனக்கென்னமோ விபரீதமாப் படுது. அந்தப் பொண்ணு யாரோ? எப்படிப்பட்டவளோ…? ஆழம் தெரியாம காலை விடக்கூடாது…

    அப்படீன்னா கண்டுக்க வேண்டாம்ங்கிறியா?

    வேண்டாம்...

    மனசு கேக்கலை நந்தா. உண்மையிலேயே அந்தப் பொண்ணு ஏதாவது ஒரு ஆபத்துல மாட்டிக்கிட்டவளா இருந்தா…?

    அண்ணா! உன்னோட இரக்க சுபாவத்தை மூட்டை கட்டி வச்சுட்டு காரை விரட்டு.

    நந்தா… நான் என்ன சொல்றேன்னா…

    வேண்டாம்! காரை நிறுத்தக்கூடாது.

    சரி... அதுக்கப்புறம் நாம கோயமுத்தூர் போய் வீடு சேர்ந்ததும் அந்தப் பொண்ணுக்கு உதவி பண்ணாமே வந்துட்டோமேன்னு நீ புலம்பக் கூடாது…

    புலம்பமாட்டேன்.

    அந்த உத்தரவாதம் கொடுத்தால் சரிதான்…

    சொன்ன உத்தம் காரின் வேகத்தை மறுபடியும் அதிகப்படுத்தினான். கார் காற்றை அறுத்துக்காண்டு பாய்ந்தது.

    காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் அந்தப் பெண் இப்போது பார்வைக்கு முழுமையாகக் கிடைத்தாள்.

    பணக்காரப் பெண் மாதிரியான தோற்றம். மெலிதான மஞ்சள் நிறத்தில் சேலை. முதுகுக்குப் பின்னால் கூந்தல் அவிழ்ந்து கிடந்தது. வேகமாய் அவள் நடந்து கொண்டிருந்தாலும் அந்த நடையில் ஒரு தடுமாற்றம் தெரிந்தது.

    நந்தா...! எனக்கு மனசு கேக்கலை. காரை நிறுத்தி அந்தப் பொண்ணு யாருன்னு விசாரிச்சுட்டு போயிடுவோமா?

    வே...ண்...டா...ம்…

    உனக்கு இரக்கமே இல்லையா?

    இல்லை! காரை வேகமா ஒட்டு. அவள் நிறுத்தச் சொல்லி கையாட்டினாக்கூட நிறுத்தாதே. நீ உன்பாட்டுக்கு போயிட்டேயிரு.

    உத்தம் ஆக்சிலேட்டரை அழுத்தி – காரின் வேகத்தை அதிகப்படுத்திய விநாடி.-

    ரோட்டோடாரமாய் போய்க் கொண்டிருந்த அந்தப் பெண். காரின் சத்தத்தால் திடுக்கிட்டுப் போய் ரோட்டின் அடுத்த பக்கத்திற்குப் போவதற்காக – எதிர்பாராத ஒரு விநாடியில் –

    குறுக்கே பாய்ந்தாள்.

    உத்தம் விபரீதத்தை உணர்ந்து பிரேக்கை அழுத்துவதற்குள் காரின் முன்பக்க பம்பர் அவள் மீது மோதியது

    ‘த்தட்…’

    அந்தப் பெண் பெரிய அலறலோடு இரத்தமாய் எகிறிப்போய் விழுந்தாள். மழைத்துளிகள் விழுந்த தினுசில் இரத்தத் துளிகள்.

    2

    நந்தா வீறிட்டாள்.

    அ... அண்ணா…!

    கார் கிறீச்சிட்டு நின்றது. உத்தம் நெற்றியைப் பிடித்துக் கொண்டு கலவரமானான்.

    இப்படி திடீர்ன்னு குறுக்கே ரோட்டை கடப்பாள்ன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கலை நந்தா…

    வா… இறங்கிப் பார்க்கலாம்…

    வேண்டாம் நந்தா…! போயிடலாம்… கார்மோதி தூக்கி எறிஞ்ச வேகததுல... அந்தப் பொண்ணு கண்டிப்பா செத்திருப்பா! இறங்கிப் பார்த்துட்டிருந்தா… பிரச்சினையில் மாட்டிக்குவோம்…

    "ஒரு வேளை... அந்தப்

    Enjoying the preview?
    Page 1 of 1