Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சிறகடிக்க ஆசை!
சிறகடிக்க ஆசை!
சிறகடிக்க ஆசை!
Ebook132 pages32 minutes

சிறகடிக்க ஆசை!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

லேகா காலேஜ் முடிந்து வீடு திரும்பியபோது - சாயந்தரம் ஆறு மணி.
பாத்ரூம் ஷவரில் பதினைந்து நிமிஷங்கள் நனைந்து விட்டு ரோஜாப் பூ நிற நைட்டிக்குள் நுழைந்தாள் லேகா.
டொக்...
டொக்...
டொக்...
கதவுத் தட்டல் கேட்டதைத் தொடர்ந்து குரல் கொடுத்தாள்.
“யாரு...?”
“நான்தாம்மா...”
அறைக்கு வெளியே இருந்து வேலைக்காரி தங்கத்தின் குரல் கேட்டது.
“உள்ளே வா...”
ஆவி பறக்கும் டிகிரி காபியோடு உள்ளே வந்தாள் அவள்.
“இந்தாங்கம்மா காபி...”
“அப்படி டேபிள் மேல வெச்சிட்டுப் போ...”
வழியும் காபிக் கோப்பையை சிந்தாமல் கவனமாய் மேஜையின் மேல் வைத்துவிட்டு தயக்கமாய் நின்றிருந்தாள் தங்கம்மேஜைக்கருகே இருந்த பர்சனல் கம்ப்யூட்டரில் உறையை நீக்கிக் கொண்டே அவளைப் பார்த்தாள் லேகா.
“என்ன வேணும் தங்கம்...”
“அ... அய்யா கொஞ்ச நேரத்துக்கு முன்னால போன் பண்ணியிருந்தார் லேகாம்மா...”
“எதுக்கு...?”
“உங்களைத்தான் விசாரிச்சார்...”
“என்ன விசாரிச்சார்...?”
“நீங்க காலேஜிலிருந்து வந்தாச்சான்னு கேட்டார்... இல்லைன்னு சொன்னதும்... பதறிப் போய்ட்டார்...”
“எத்தனை மணிக்கு போன் பண்ணினார்…?”
“அஞ்சு மணிக்கு...”
“காலேஜ் நாலரை மணிக்கு முடியுது... டாண்ணு அஞ்சு மணிக்கு வீடு வந்து சேர முடியுமா...? லைப்ரரிக்குப் போக வேண்டியிருக்கும்... அல்லது ப்ரொபசர்கள்கிட்டே சந்தேகம் கேக்க வேண்டியிருக்கும்...”
“உங்க கவலை உங்களுக்கு... அவர் கவலை அவருக்கு… அவர் இருக்கறப்ப லேட் ஆனா பரவாயில்லை... அவர் வெளியூர் போயிருக்கிறப்ப நீங்க வீடு வந்து சேர லேட் ஆச்சுன்னா... அய்யா என்னை சத்தம் போடுவார்ம்மா...”
“அவரோட கவலையில் கொஞ்சம்கூட நியாயம் இல்லை தங்கம்... நான் ஒண்ணும் பச்சைக் குழந்தை இல்லை...”
“அவருக்கு நீங்க என்னிக்குமே குழந்தைதாம்மா... பெண்ணைப் பெத்தவங்களுக்கு அவளை ஒருத்தன்கிட்டே கட்டிக்குடுக்கற வரைக்கும் வயத்தில் நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கிற மாதிரிதான் இருக்கும்...”
“இட்ஸ் ஹைலி இடியாட்டிக்.”“என்னவோ இங்கிலீஷில் திட்டறீங்கன்னு தெரியுது. நாளைக்கு நீங்க ஒரு பொண்ணுக்கு அம்மா ஆனிங்கன்னா அப்போதுதான் உங்க அப்பாவோட கவலை என்னன்னு உங்களுக்கு நிஜமாவே புரியும். அதுவரைக்கும் அவர் மேல் உங்களுக்குக் கோபம்தான் வரும்...”
“கவலையானாலும் சரி... சந்தோஷமானாலும் சரி... அது நியாயமாவே இருந்தாலும் அளவோட இருக்கணும்... அளவுக்கு மீறி கவலைப்படக்கூடாது... இவர் அளவுக்கு மீறி கவலைப்படறார்... அவர் கவலைப்படறாரா... இல்லை நான் தப்பான பாதையில் போயிடுவேன்னு சந்தேகப்படறாரான்னு எனக்குப் புரியலை...”
“இல்லைம்மா...”
என்று வார்த்தைகளை ஆரம்பித்த தங்கத்தைப் பாதியில் மறித்தாள் லேகா.
“உன்னோட லெக்ச்சர் போதும்... மறுபடியும் அவர் போன் பண்ணினார்ன்னா. நான் பத்திரமா வீடு வந்து சேர்ந்தாச்சுன்னு சொல்லிடு...”
“சரிம்மா...”
தலையசைத்து விட்டுத் தங்கம் நகர்ந்த விநாடி -
டிரிங்...
டிரிங்...
டிரிங்...
டெலிபோன் வீறிட ஆரம்பித்தது.
“அய்யாவாகத்தான் இருக்கும்மா...” என்று சொல்லிவிட்டு தங்கம் அறையைக் கடந்தாள்.
ரிசீவரை எடுத்துக் காதில் பொருத்தி “ஹலோ...” என்றாள் லேகா.
தங்கம் சொன்ன மாதிரியே ராமகிருஷ்ணன்தான் பேசினார்.
“லேகா... வந்துட்டியாம்மா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் கூப்பிட்டேன்... நீ இன்னும் வீட்டுக்கு வரலைன்னு வேலைக்காரி சொன்னா...”“காலேஜில் ஒரு ப்ரொபசர்கிட்டே சந்தேகம் கேக்கப் போயிருந்தேன்...”
“அப்படி ஏதாவது இருந்தா... வீட்டுக்கு ஒரு போன் அடிச்சு சொல்லிடு லேகா... நான் வெளியூரிலிருந்தாலும் மனசெல்லாம் உன் மேலேயே இருக்கும்.”
“அப்பா... இட் ஈஸ் டூ மச்...”
“என்னோட கவலை உனக்குப் புரியாது...”
“நான் எங்கே போனாலும் பைக்கிலும் காரிலும் நீங்க அனுப்பற செக்யூரிட்டி ஆட்கள் நிழல் மாதிரி வர்றாங்களே… அவங்களுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்திட்டிங்கனா நான் எங்கே இருக்கேன்... என்ன பண்றேன்னு அவங்க மூலமாகவே தெரிஞ்சிக்கலாமே...?”
“லே… லேகா...”
“என்னப்பா அதிர்ச்சி ஆயிட்டிங்க..?”

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 8, 2024
சிறகடிக்க ஆசை!

Read more from ராஜேஷ்குமார்

Related to சிறகடிக்க ஆசை!

Related ebooks

Related categories

Reviews for சிறகடிக்க ஆசை!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சிறகடிக்க ஆசை! - ராஜேஷ்குமார்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    லேகா மாடிப்படிகளில் சரசரவென்று உயரம் குறைந்து கீழே வந்தாள்.

    இருபதை நெருங்கிக் கொண்டிருக்கும் லேகா ஆல்பங்களில் பார்க்கும் பாப் நட்சத்திரங்களைப் போல் பளிச்சென்று இருந்தாள். கூந்தல் பளபளவெனத் தோளில் புரண்டது. வாட்டர் ப்ளூ நிறத்தில் இறுக்கமான ஜீன்ஸும், தொளதொளவென்று டிடர்ஜெண்ட் வெள்ளை டீ சர்ட்டும் அணிந்திருந்தாள்.

    கடைசிப் படியைத் தொட்ட போது - பக்கத்து அறையில் இருந்து வேலைக்காரி வெளிப்பட்டாள்.

    காலேஜுக்கு கிளம்பிட்டிங்களாம்மா…?

    ஆமா தங்கம்...

    அய்யா உங்களைப் பார்க்கணும்ன்னு சொன்னாங்க...

    எங்கே இருக்கார்...?

    குளிச்சிட்டிருக்கார்... குளிக்கப் போறதுக்கு முன்னால என்கிட்டே சொல்லிட்டுப் போனார்...

    என்ன விஷயமாம்...?

    தெரியலைம்மா...?

    புத்தகங்களை டீபாய் மேல் போட்டு விட்டு - சோபாவில் புதைந்தாள் லேகா.

    டீபாய் மேல் கிடந்த ரிமோட் கண்ட்ரோலை அழுத்தி டி.வி. பெட்டிக்கு உயிர் கொடுத்தாள்.

    திரையில் தோன்றிய தமிழ் சினிமாவில் கதாநாயகனும், கதாநாயகியும் பார்க்காமலே.... பேசாமலே.... சொல்லாமலே... காதலித்துக் கொண்டிருந்தார்கள்.

    சொற்ப நிமிஷங்களில் ஈரத் தலையை டவலால் துவட்டிக் கொண்டே - ராமகிருஷ்ணன் வந்தார்.

    லேகா டி.வி. திரையை வெறுமையாக்கி விட்டு - அவரை ஏறிட்டுக் கேட்டாள்.

    என்னைப் பார்க்கணும்ன்னு சொன்னீங்களாப்பா...?

    ஆமா லேகா...

    என்ன விஷயம்...?

    இன்னிக்கு உனக்கு காலேஜ் இருக்கா...?

    ஆமா

    செமஸ்டர் ஹாலிடேஸ் வரப் போகிறதுன்னு சொன்னியே...?

    இன்னும் ஒரு வாரம் கழிச்சுத்தான் செமஸ்டர் ஹாலிடேஸ் ஆரம்பமாகிறது...

    நான் இன்னிக்கு வெளியூர் கிளம்பிப் போறேன்...

    சரிப்பா...

    திரும்பி வரப் பத்து நாள் இருபது நாள் ஆகும்...

    போய்ட்டு வாங்க...

    டாட்டா எஸ்டேட் காரை நான் எடுத்துக்கிறேன்... டிரைவர் என்கூட வந்துடுவான்... நீ மாருதியை செல்ஃப் டிரைவ் பண்ணிக்க...

    கார்லயே போறீங்களா...? எந்த ஊருக்கு...?

    பெங்களூர் வரைக்கும் கார்... அங்கிருந்து ஃப்ளைட் பிடிச்சு மும்பை... மும்பையிலிருந்து நியூயார்க்... மூணு வாரம் கழிச்சுத்தான் திரும்பி வருவேன்.

    டிரைவர் பெங்களூரிலிருந்து காரை எடுத்துட்டு வந்துடுவாரா...?

    ஆமா... நாளன்னிக்கு வந்துடுவான்...

    சரிப்பா... வேற ஒண்ணும் விஷயம் இல்லையே...? நான் காலேஜ் கிளம்பட்டுமா...?

    பார்த்து ஜாக்கிரதையா இரும்மா...

    நான் என்ன சின்னக் குழந்தையா...? என்னை யாரும் கடிச்சுத் தின்னுடமாட்டாங்க...

    என்னைப் பொறுத்த வரைக்கும் எப்பவுமே நீ சின்னக் குழந்தைதான் லேகா...

    காலேஜுக்கு டயமாச்சு... போய்ட்டு வர்றேன்...

    அவரிடம் விடை பெற்றுக்கொண்டு டீபாய் மேல் கிடந்த புத்தகங்களை அள்ளினாள். போர்டிகோ படிகளில் தடதடவென இறங்கியபோது - கார் டிரைவர் எதிர்ப்பட்டார்.

    லேகாம்மா... நான் இன்னிக்கு அய்யா கூட...

    புன்னகையோடு அவரைப் பாதியில் மறித்தாள்.

    வெளியூர் போறீங்க... அதனால நான் மாருதி எடுத்துக்கணும்...

    ஆமாங்க...

    சொல்லிக்கொண்டே அவர் மாருதி காரின் சாவியை நீட்டினார். அதைப் பெற்றுக் கொண்டு - போர்டிகோவுக்கு வெளியே பளீரென்று வாட்டர் சர்வீஸ் செய்து நிறுத்தப்பட்டிருந்த காரை அடைந்தாள்.

    கதவை இறக்கை விரித்துத் திறந்து - டிரைவிங் இருக்கையை ஆக்ரமித்தாள்.

    சாவியை இக்னீஷியன் துவாரத்திற்குள் நுழைத்துத் திருக - மெல்லிய கனைப்புடன் கார் ஸ்டார்ட் ஆகிக் கொண்டது.

    ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்தத் தெருவை கடந்து மெயின் ரோட்டை எட்டிப் பிடித்தாள்.

    மிதமான வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டே எதேச்சையாய் ரிவர் வியூ கண்ணாடியைப் பார்த்தாள்.

    அவள் புருவங்கள் சுருங்கின.

    சற்றே இடைவெளி விட்டு வந்து கொண்டிருந்த அந்த புல்லட்டில் ஆஜானுபாகுவாய் ஆரோகணித்திருந்த ஆசாமி இவள் காரையே கவனமாகப் பார்த்துக் கொண்டு பின் தொடர்ந்து கொண்டிருந்தான்.

    அவளுடைய கார் திரும்பிய வளைவுகளில் எல்லாம் பைக்கைத் திருப்பினான்.

    சற்று நேரத்தில் கார் காலேஜ் வாயிலில் நுழைந்து பார்க்கிங் பகுதியில் ஒதுங்கி நின்றது.

    புத்தகங்களை எடுத்துக் கொண்டு திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடந்தாள் லேகா.

    தொலைவில் காலேஜ் காம்பவுண்டுக்கு வெளியே - அவன் தெரிந்தான். பைக்கை ஸ்டாண்டில் நிறுத்தி

    Enjoying the preview?
    Page 1 of 1