Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கல்யாண வானம்
கல்யாண வானம்
கல்யாண வானம்
Ebook123 pages41 minutes

கல்யாண வானம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது. நந்தினி, கடைகளை ஒரு கலக்கு கலக்கிவிட்டாள்.
 ஆறு சேலை எடுப்பதுக்குள் ஆறாயிரம் சேலைகள் பார்த்திருப்பாள். "இது உழைக்குமா?" "இந்த நிறம் எடுக்குமா?", "இது, புகைப்படத்துக்கு சரியாக வருமா?" "இது அவருக்குப் பிடிக்குமா?" என்று நொடிக்கொரு தடவை கேட்டாள். மலர்விழியும் மலர்ந்த முகத்தோடுதான் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனாலும் மலர்விழிக்கும் ஒரு நெருடல் இருக்கத்தான் செய்தது.
 திருமணம் என்பது என்ன?
 இரண்டு மனங்களின் சேர்க்கைதானே? உனக்கு நானும் எனக்கு நீயும் உறுதுணையாக இருந்து, கடைசிவரை இணைந்து வாழ்வோம் என்ற இலட்சியக் கோட்பாடுதானே? இவ்வளவு ஆடம்பரமும் பாசாங்கு நெறிகளுமாக யார் இதை மாற்றினார்கள்? ஊரைக் கூட்டி, காசை இறைத்து வாணவேடிக்கை விட்டால்தான் அது திருமணம் என்று ஆக்கி வைத்திருக்கும் மோசடிக்கு யார் பொறுப்பு?
 நந்தினி படித்தவள்தான். பெற்றோர் அவ்வளவு வசதி வாய்ப்பு இல்லாதவர்கள். அவள் தந்தை, குருவி சேர்ப்பது போல சிறுக, சிறுக சேர்த்தார். மகளுக்கு வரன் பார்க்க ஏற்பாடு செய்தார். தனபால் என்ற இளநிலை அரசு அதிகாரியைப் பிடித்துப் போகவே திருமணத் தேதியை முடிவு செய்து விட்டார்.
 அம்மா தன் பங்குக்கு அஞ்சறைப் பெட்டியிலும், புளி டப்பாவிலும் சேர்த்து வைத்தப் பணத்தை மகளுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டாள்.
 இதோ நந்தினி, சேலைக் கடை - நகைக் கடை என்று சுற்றி விட்டு கையில் பார்சல்களுடன் முகம் பிரகாசிக்க வருகிறாள்.
 "என்னம்மா, மனசு வந்ததா கடைகளை விட்டு வெளியே வருவதற்கு? கிளம்பலாமா?""போ மலர்விழி... எப்போதும் உனக்கு கிண்டல்தான். உன்னை மாதிரி நிறமாக, வடிவாக, ஒயிலாக பிறந்திருந்தால் இவ்வளவு அலங்காரங்கள் தேவைப்பட்டிருக்காது. எனக்கு, என்ன செய்ய? கறுப்பாகப் பிறந்து தொலைத்துவிட்டேனே?"
 "கறுப்பும் ஒருவித அழகுதான், தெரியுமா உனக்கு? ஏன் இப்படி தாழ்வு மனப்பான்மை? மாற்றிக்கொள், நந்தினி ஆரோக்கியமான, அழகானத் தோல்தான் முக்கியமே தவிர, நிறம் அல்ல. சரி, கிளம்பலாமா?"
 ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்தபடி ஆட்டோ இளைஞன் காத்திருந்தான். இவர்களைப் பார்த்ததும் புத்தகத்தை மூடிவிட்டு வண்டியை எடுத்தான்.
 "மன்னிக்கணும், தாமதத்துக்கு" என்று விசனப்பட்டாள். மலர்விழி. "கல்யாணத்துக்கு என்பதால் நிறைய கடைகள் பார்க்க வேண்டியதாகிவிட்டது... அதென்ன புத்தகம்?"
 "பிளஸ் 2 கணக்குப் புத்தகம் மேடம்... சும்மா பார்த்துக் கொண்டிருந்தேன்" என்றான், சாலையில் கண் வைத்தவனாக.
 மலர்விழி வியப்புடன் "பிளஸ் 2 புத்தகமா? படிப்பதற்கு ஏதும் காரணம் உண்டா?"
 "டியூசன் எடுக்கிறேன் மேடம்" என்று புன்னகைத்தான். "ஏழைக் குழந்தைகளுக்கு... இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், தாய் - தகப்பன் ஜெயிலில் இருக்க, சுற்றத்தாரின் இடிசோற்றில் படித்துக் கொண்டிருக்கும் பரிதாப பிறவிகளுக்கு 'டியூசன் எடுக்கிறேன்."
 "பிரமாதம் சார்" என்றாள் அவள்; மிக மலர்ச்சியாக "ஆட்டோ ஓட்டுகிறீர்கள்... விவேகானந்தரின் தத்துவத்தை வரி விடாமல் சொல்லுகிறீர்கள்... இலவச 'டியூசன் எடுக்கிறீர்கள்... காத்திருக்கும் நேரத்தில் பாடத்தை கூர் தீட்டிக் கொள்ளுகிறீர்கள்... மிக வித்தியாசமான ஆள்தான்" என்றவள் - "இந்த இடம்தான். இதற்குமேல் ஆட்டோ போகாது. பாதையை வெட்டிப் போட்டிருக்கிறார்கள். தொலைபேசி ஆட்கள். நிறுத்தி விடுங்கள்."
 நிறுத்தினான்நியாயமான கட்டணம் வாங்கிக்கொண்டு புன்னகைத்தான். 'வருகிறேன்... சந்திக்க முடிந்தால் மீண்டும் சந்திப்போம்' என்று நகர்ந்தான்.
 ஆட்டோ, சீராக விரைந்தது.
 "ஆட்டோக்களில் கூட இப்படி வித்தியாசமானவர்கள் இருக்கிறார்களே... ஆச்சரியம்தான்..." என்றபடி நந்தினி நடந்தாள்.
 அவளிடமிருந்து பெரிய 'பார்சல்' ஒன்றை வாங்கிக் கொண்டாள், மலர்விழி.
 "நிறைய பேர் வித்தியாசமாக இருக்க முயற்சிக்கிறார்கள், நந்தினி. அன்றைக்குக்கூட பார்த்தேன். சாதாரணமாக 'வளைவுகளில் முந்தாதீர்கள்' என்றுதானே வாகனங்களில் எழுதுவார்கள். 'வளைவுகளில் முந்தாதே, வளைவுகளுக்காகப் பிந்தாதே' என்று ஒரு ஆட்டோவில் எழுதி இருந்தது. ரசனையாக..." மலர்விழி புன்னகைத்தாள்.
 இருவரும் நடந்தார்கள் கல்லும் மண்ணுமாகக் கிடந்தது. மின்சாரத்துறையினர் தெருக்களை கிளறி இருந்தார்கள்.
 "ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லணும்..." நந்தினி இழுத்தாள்.
 முகம் சிவந்திருந்தாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223687238
கல்யாண வானம்

Read more from V.Usha

Related to கல்யாண வானம்

Related ebooks

Reviews for கல்யாண வானம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கல்யாண வானம் - V.Usha

    1

    மலர்விழிக்கு தான் வந்த வேலை முடிந்ததில் மகிழ்ச்சி. வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அவள் வந்திருந்தாள்.

    நான்கு பேருக்கு ‘எல்’ லைசென்சு வாங்கவேண்டும். பழவந்தாங்கல் அலுவலகத்திலிருந்து இந்த வடபழனி அலுவலகத்துக்கு ஒரு நிரந்தர லைசென்சை மாற்றம் செய்ய வேண்டியிருந்தது.

    நல்ல வேளையாக, ரொம்ப காத்திருக்க வைக்காமல் வேலையை முடித்துக் கொடுத்துவிட்டார்கள்.

    அதுவும் இந்த ஆர்.டி.ஓ. தியாகராஜன் நல்ல நேர்மையான அதிகாரி. மேசைக்குக் கீழே கைநீட்டும் பழக்கம் இல்லாதவர் எல்லா ஆவணங்களும் சந்தேகத்துக்கு இடமின்றி இருக்கிற பட்சத்தில் மனப்பூர்வமாகக் கையெழுத்து போட்டுவிடுவார். அதுவும், மலர்விழி ஓட்டுநர் பயிற்சி பள்ளி, என்ற பெயரைப் பார்த்தால், உற்சாகத்துடன் கையெழுத்து போடுவார்.

    கஷ்டப்பட்டு அவள் சம்பாதித்த பெருமை, அது. இன்றைய உலகில் எதிர்பார்க்கப்படுகிற வளைந்து போதல், விட்டுக் கொடுத்தல், குறுக்கு வழி போன்ற எந்த அதர்மமும் அவளுக்குப் பிடிக்காது. நல்ல பாதையில், சீராக நடக்க விரும்புகிற அவளை, அவருக்கு மிகவும் பிடிக்கும்.

    மலர்விழி வெளியே வந்தாள்.

    நேரம் பார்த்தாள்.

    மணி, பன்னிரண்டரை ஆகி இருந்தது.

    உச்சிவெயில் எகிறியது. சூரியன், தலைக்கு மேல் செங்குத்தாய் நின்றான். நிழல், தரையில் படாமல் உடலுக்குள் கரைந்து கிடந்தது.

    இன்னும் நந்தினியைக் காணவில்லை.

    பன்னிரண்டுக்கெல்லாம் இருப்பதாகச் சொன்னாளே.

    கைக்கடிகாரத்தை இன்னொரு தடவை நோட்டம் விட்டு, தெருக்கோடியைப் பார்த்தாள்.

    இல்லை! தோழியின் உருவமே தெரியவில்லை.

    மலர்விழிம்மா... என்ற குரல் கேட்டது.

    திரும்பினாள்.

    முத்தையா நின்றிருந்தார்.

    அவள் நடத்தும் ஓட்டுநர் பள்ளியில் ஆண்களுக்கு பயிற்சி அளிப்பவர். அவர்.

    என்ன சார்? இன்னும் கிளம்பலியா? என்றாள் வியப்புடன்.

    ஒரு சின்ன வேலைம்மா... அந்த புதுப்பையன் கிருபாகரன் இருக்கானே? ‘பத்து நாள் பயிற்சி போதும் சார்’ன்னு சொன்னான். ஓட்டச் சொல்லி பார்த்துட்டேன், நல்லாத்தான் ஓட்டுறான். ஆனா, கொஞ்சம் பிரச்சினை இருக்கும் போல தெரியுது என்று இழுத்தார்.

    சரி, சொல்லுங்க...

    ஒண்ணாந்தேதியில இருந்து அவனை டிரைவர் வேலைக்கு வரச்சொல்லி இருக்காங்களாம். ‘கொஞ்சம் கூடுதலா பயிற்சி எடுத்தா, முழுசா கத்துக்குவேன் சார். இல்லேன்னா வேலையை வேறு யாருக்காச்சும் கொடுத்துடுவாங்க சார்’ன்னு கெஞ்சுகிறான்ம்மா... நீங்க சரின்னா இதோ இப்படியே காரை எடுத்துக்கிட்டு போயிடுவேன்... அவனைப் பாருங்க, கையை கட்டிக்கிட்டு நிக்கிறான், ஓரமா.

    திரும்பிப் பார்த்தாள்.

    வலப்பக்க வேலி ஓரமாக நின்று இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த அந்த இளைஞன் உடனே வணக்கம் சொன்னான். பழைய, கசங்கிய சட்டையும் பேண்ட்டும் அணிந்திருந்தான். ஒட்டி உலர்ந்திருந்த உடலில் முகம் மட்டும் ஆர்வமாகப் பளிச்சிட்டது.

    முத்தையா சார்! காரை உங்ககிட்ட கொடுத்துட்டு நான் ஆட்டோ பிடிச்சு போறதுல ஒண்ணும் ஆட்சேபனை இல்லே... நந்தினி வருவா, அவ கல்யாண தேதி நெருங்கிட்டதால பொருட்கள் வாங்கப் போய்க்கிட்டிருக்கோம்... ஆட்டோவில் போறதுதான் வசதி, ஆனா... என்றாள், வியர்வையைத் துடைத்தபடி.

    சொல்லுங்கம்மா என்றார்.

    வெறும் லாப நோக்கத்துல நடக்கிற தொழில் இல்லே, நம்மது. டிரைவர் வேலைன்னா எவ்வளவு பொறுப்பு இருக்கும்? பெரிய பெரிய ஆளுங்களை வைச்சுக்கிட்டு ஓட்டணும். பயிற்சி போதுமா அந்த கிருபாகரனுக்கு?

    முத்தையா உறுதியான குரலில் நல்லாவே ஓட்டறான்ம்மா கொஞ்சம் பயப்படுறான். தவிர, திறமையான பையன்ம்மா... நாலே நாளில் கத்துக்குவான். பாவம்மா... ரெண்டு தங்கச்சிங்க, ஆஸ்துமா அம்மான்னு நிஜமாவே வறுமைப்பட்ட குடும்பம் என்றார். கடைசியில் இளகியபடி.

    சரி, முத்தையா சார்... உங்களுக்கு தெரியாதா என்ன? உங்களையும் நம்பித்தானே இந்தப் பயிற்சி பள்ளியை நடத்திகிட்டிருக்கேன்? என்று புன்னகைத்தபடி காரின் சாவியை நீட்டினாள் அவள்.

    ஆனந்தத்துடன் அவர் வாங்கிக் கொள்ள அந்தக் கிருபாகரன் முகத்தில் பிரகாசம் தெரிவதைக் கவனித்தான்.

    மன்னிச்சுக்க மலர். கொஞ்சம் தாமதமாகிப் போச்சு...

    நந்தினி, வியர்வையில் நனைந்தவளாக படபடப்புடன் வந்து நின்றாள். பளிச்சென்ற முகம். புத்தம் புது சில்க் சேலை. மை தீட்டிய புருவங்களுக்குக் கீழே கெண்டை விழிகள், புதிதாக அதில் ஏறியிருந்த குறுகுறுப்பு.

    என்ன மலர், அப்படி பார்க்கிறே? சாரி! காக்க வைச்சுட்டேன்ல? கோபமா? என்றாள் நந்தினி, செல்லமாக கொஞ்சியபடி.

    கல்யாணப் பொண்ணுகிட்ட கோபமா? இல்ல, அது செல்லுமா? மலர்விழி சிரித்தாள். கால் எங்கே தரையிலேயா இருக்கு, உனக்கு? எங்கேயோ செவ்வாகிரகத்தில் பறந்துகிட்டிருக்கு? சரி... வா, ஆட்டோவில் போகலாம்.

    ஆட்டோவிலா? உன் கார் என்னாச்சு?

    அதோ, பயிற்சிக்குப்போகுது என்ற மலர்விழி, எதிரே வந்த ஆட்டோவை நிறுத்தினாள்.

    தி.நகர் வரைப் போகணும்... வரமுடியுமா? என்றாள்.

    கண்டிப்பா... வரத்தானே இருக்கோம்? ஏன் மேடம் சந்தேகம்? என்றான், அந்த டிரைவர் புன்னகைத்தபடி.

    புதுசா ஆட்டோ ஓட்டுறீங்களோ நீங்க? என்று கேட்டபடியே ஏறி உட்கார்ந்த அவளும் புன்னகைத்தாள். பஸ்சுக்கும் ஆட்டோவுக்கும் ஒரே வித்தியாசம்தான்... இங்கே இருந்து இங்கே போகிற பஸ்ன்னு எழுதி இருக்கும்... ஆட்டோவில் எழுதி இருக்காது... அவ்வளவுதான். ஆனாலும், தடம்மாறிப் போகாத ஆட்டோக்கள் என்றாள்.

    அவன் வாய்விட்டு விரித்தான். பல்வரிசை மிக வசீகரமாக இருந்தது. முகத்தில் தனி பொலிவுகூட தெரிந்தது.

    ‘கியர்’ மாற்றுகிறதே தெரியாமல் சீராக வண்டி ஓடத் தொடங்க, பெண்கள் சாய்ந்து உட்கார்ந்தார்கள்.

    மொதல்ல எந்தக் கடை நந்தினி? சேலையா, நகையா?

    அதுக்கு முன்னால் கோவிலுக்குப் போயிட்டு வரணும், மலர்விழி. இன்னிக்கு கிருத்திகை. முருகன் கோயிலில் விசேஷமா இருக்கும். என்ன போகலாமா? நந்தினி கேட்டாள்.

    கோவிலா? என்று மலர்விழி இழுத்தாள். இந்த வெயில்ல, பக்தர்கள் கூட்டத்துல நெரிபட்டுகிட்டு போய்த்தான் ஆகணுமா, நந்தினி?

    அட, எப்ப நீ நாத்திகவாதியா மாறினே, இப்படி பேசுறே? நந்தினி ஆச்சரியப்பட்டாள்.

    எப்பவும் நான் ஒரே மாதிரிதான். மதம், கோவில் இதையெல்லாம் விட மனசு சுத்தம்தான் முக்கியம். தவிர இப்போ மதமும், கடவுளும்தான் நல்ல தொழில் முதலீடாக இருக்கு. ரொம்ப யோசிச்சா, இதுல பிடிப்பே வராதுன்னு தோணுது. விவேகானந்தர் சொன்ன மாதிரி என்று நிறுத்தினாள்.

    என்ன சொன்னார் விவேகானந்தர்? நந்தினி ஆர்வமாகக் கேட்டாள்.

    மதம், கடவுள் பற்றி அவர் ரொம்ப அழகா சொன்னது... சொன்னது... என்று அவள் கண்களை மூடிக்கொண்டு சிந்தித்தாள். மனதில் இருந்தது. தொண்டை வரை வந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1