Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை..!
கண்ணில் தெரியும் வண்ணப் பறவை..!
கண்ணில் தெரியும் வண்ணப் பறவை..!
Ebook126 pages44 minutes

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

யாரோ கதவைத் தட்டினார்கள்.
 கொல்லைப் பக்க மணத்தக்காளிக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவள், விரைந்தாள்.
 லேசாகப் பரபரத்தது மனது.
 கடைசியாக நூலகத்து ஹிண்டு பேப்பரைப் பார்த்து மூன்று கம்பெனிகளுக்கு வேலைக்கு மனுப் போட்டிருந்தாள் அவள்.
 ஒருவேளை யாராவது ஒருத்தர் இன்டர்வியூ கார்டு அனுப்பி இருப்பார்களோ?
 கதவைத் திறந்தாள்.
 கோமதி நின்று கொண்டிருந்தாள்.
 இவளைப் பார்த்ததும் புன்னகைக்க முயற்சி செய்து முடியாமல் முகத்தைக் குனிந்து கொண்டாள்.
 "வாங்கம்மா... உள்ளே வாங்க..." என்றாள் உதயா.
 கதவை முழுமையாகத் திறந்தாள்.
 "அப்பா இருக்காரா என்ன?" கோமதியின் விழிகள் உள்ளே சுழன்றன.
 "இல்லே, இப்பதான் வெளில போனார்... நீங்க தயங்காம உள்ள வாங்கம்மா..."
 கோமதி ஒரு சுவாரஸ்யமான பெண்மணி என்று எப்போதும் நினைத்துக் கொள்வாள் உதயா. அந்தணர் குலத்தில் பிறந்ததால் அவளுக்குச் செக்கச் செவேல் நிறம் வாய்த்திருந்தது. முகமும் லட்சணமாக அமைந்திருந்தது. நொடித்துப் போன குடும்பம்தான் என்றாலும் தாசில்தார் வீட்டுப் பெண்ணாக்கும் நான் என்று மெல்லிய கர்வத்துடன் இருந்திருக்கிறாள் அவள். ஆனால் ரியாலிட்டி என்று வந்தபோது கோவில் அர்ச்சகர் சபேசனைத்தான் மாலையிட வேண்டி வந்துவிட்டது. அதுவும் ஊரை விட்டுச் சற்றே தள்ளி இருக்கும் சிவன்கோவில். கூடுதல் வருமானத்திற்கும் வழியில்லை. சபேசனும் தன் தகுதிகளை வளர்த்துக் கொள்ளவில்லை என்று கோமதிக்குக் கழுத்து வரை வருத்தம். உதயாவிடம் தான் வயது வித்தியாசம்கூடப் பார்க்காமல் கொட்டி விட்டுப் போவாள்...
 "உக்காருங்கம்மா, என்ன குடிக்கறீங்க? மோரா, காபியா?"
 "அதெல்லாம் வேண்டாம் உதயா... ரெண்டு கிலோ அரிசி இருந்தா குடேன், வெக்கத்தை விட்டுக் கேக்கறேன்." கோமதிக்கு முகம் இருண்டு விட்டது.
 சுருக்கென்றது உதயாவுக்கு.
 கொஞ்ச நேரத்திற்கு முன்னால்தான் அரிசிப்பானையைத் திறந்து பார்த்திருந்தாள் அவள்.
 எண்ணி விடலாம் போல ஏழெட்டு அரிசிகள்தான் சிதறிக் கிடந்தன.
 சரி, இன்றைக்குப் பாட்டுக் குழந்தைகள் மாலை வரும்போது பணம் கொண்டு வந்து கொடுத்து விடும் என்று நினைத்துக்கொண்டு, இருந்த கோதுமை மாவை உருட்டித் திரட்டிப் பிசைந்து சப்பாத்திகளாக இட்டிருந்தாள். முக்கால் கரண்டி பயத்தம்பருப்பு இருந்ததுடன், கொல்லைப்புறக் கீரையைச் சேர்த்துக் கூட்டாகச் செய்து அப்பாவுக்குத் தொட்டுக் கொள்ளக் கொடுத்துவிட்டாள்.
 "ஸாரிம்மா..." என்கையில் உதயாவின் மெல்லிய குரல் இறங்கிவிட்டது. "மணி அரிசின்னா மணி அரிசி கூட இல்லேம்மா... அப்பாக்கு... கூட சுக்கா ரொட்டியாத்தான் செஞ்சி கொடுத்தேன்... வெரி ஸாரிம்மா..." என்றவள் உடனே மலர்ந்தவளாக, "ஒரு டம்ளர் அரிசி ரவை வேணும்னா தரட்டுமா? எப்பவோ ஒடைச்சது அப்படியே இருக்கு... அரிசி ரவை உப்புமா அப்பாக்கு ஜீரணம் ஆகிறதில்லேன்னு பண்றதே இல்லே..." என்று பரபரத்தாள்.
 "சரி... குடு..." என்று அலுத்துக்கொண்டு கோமதி பெருமூச்சு விட்டாள்.
 நிமிடத்தில் அவள் அடுக்களைக்குள் புகுந்து ரவையை ஒரு டப்பாவில் கொட்டினாள். காய்கறிக் கூடையில் கிடந்த நான்கைந்து பச்சை மிளகாய், இரண்டு வெங்காயம், கொஞ்சம் கருவேப்பிலை என்று சேர்த்துப் போட்டாள்."இந்தாங்கம்மா..." என்று நீட்டினாள்.
 "ரொம்ப தாங்க்ஸ் உதயா... கேட்டதும் இப்படி நீட்டறியே... எவ்வளவு நல்ல மனசு உனக்கு... அந்தப் பகவான் எப்படி வெச்சிருக்கணும். உன்னை, ராணி மாதிரி...! காலி அரிசிப் பானையும் கவலையுமா வெச்சிருக்கானே உதயா. அந்த ஸ்வாமிக்குப் போய் அர்ச்சனை பண்ணிண்டிருக்காரே எங்க ஆத்துக்காரர்... பிடிக்கலேடி உதயா! எதுவுமே பிடிக்கலே!" கோமதிக்குத் தொண்டை பிசுபிசுத்து விட்டது.
 "மாசா மாசம் வந்திட்டிருக்கிற பிரச்சினைதானேம்மா இது! மாசக் கடைசின்னா காலிப்பானையும் காய்ந்த அடுப்பும்தான்னு இத்தனை வருஷமா தெரியாதா? அதனால என்ன? இதோ சாயங்காலமே சம்பளப் பணம் வந்துடப் போகுது, அப்பாவோட பாட்டுக் குழந்தைகள், என்னோட ட்யூஷன் குழந்தைகள்னு ஒண்ணாம் தேதி பொறந்ததுமே பண வரவுதானேம்மா! அப்பாவோட மருந்துக்காகக் கொஞ்சம் கூடுதலா செலவானதால இந்த மாசம் அரிசி, பருப்பு ரெண்டுமே குறைச்சலா வாங்கும்படி ஆகிப்போச்சு, அவ்வளவுதான்... சரியா உக்காருங்களேம்மா, காலை நீட்டிகிட்டு..."
 "நெஜமாகவே உனக்குக் கோபம் வரலியா, அந்த ஸ்வாமி மேல, சொல்லுடி உதயா..." கோமதி ஆதங்கத்துடன் கேட்டாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223359487
கண்ணில் தெரியும் வண்ணப் பறவை..!

Read more from V.Usha

Related to கண்ணில் தெரியும் வண்ணப் பறவை..!

Related ebooks

Related categories

Reviews for கண்ணில் தெரியும் வண்ணப் பறவை..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கண்ணில் தெரியும் வண்ணப் பறவை..! - V.Usha

    1

    ஆகஸ்டு மாதத்திற்கே உரிய இதமான விடிகாலை.

    மிரட்டும் வெயில் இல்லை. அடிக்கும் குளிர் இல்லை. கொட்டும் மழை இல்லை.

    பக்குவமும் பொறுமையும் சேர்ந்த நடுத்தர வயது மனிதனைப் போல அழகிய மவுனத்தைச் சுமந்து கொண்டு பதமாக வெளுக்கத் தொடங்கியிருந்த வானத்தைப் பார்த்தபடி உதயா ஜன்னல் கம்பிகளைப் பற்றியபடி நின்றாள்.

    மெல்லிய புன்னகை படர்ந்து கொண்டிருந்தது அவள் இதழ்களில்.

    கதிரவன் ஒரு இளம் கணவனைப் போன்ற உற்சாகத்துடன் பூமிப் பெண்டாட்டியைப் பார்ப்பதற்குக் கிளம்பிக் கொண்டிருந்த காட்சியைப் பார்த்தாள். ‘சே, ஒரு ஓவியனாக இல்லாமல் போய்விட்டோமே!’ என்று நினைத்துக் கொண்டாள்.

    முதல் வெப்பக் கதிர் பட்ட மாத்திரத்தில் தொட்டிச் செடியின் ரோஜா மொட்டு மெல்லச் சிலிர்ப்பது அவள் கண்களில் பட்டது.

    கண்ணில் தெரியும் வண்ணப் பறவை

    காற்றின் உதவியே இல்லாமல் அதன் மென்னுடல் மெல்ல அசைந்தது. மாயாஜாலம் போல அதன் அடிப்புற இதழ்கள் விரிந்து கொடுத்தன.

    ‘ஓ. ஒரு கவிஞனாக இல்லாமல் போய்விட்டோமே!’ என்று உதயா உடனே இன்பமாகக் கவலைப்பட்டுக் கொண்டாள்.

    நன்றாகப் பொழுது விடியத் தொடங்கிவிட்டது. காலைக் கடமைகளை முடித்துக்கொண்டு பால், காபி வேலைகளை ஆரம்பித்து, தினசரியை அக்கறையுடன் பிரித்துப் படித்தபடி இருந்தபோது அப்பா எழுந்து வந்து விட்டார்.

    என்னம்மா உதயா, ஏழு மணியாச்சு போலிருக்கே... எழுப்பக்கூடாதா? என்றார், துண்டால் முகத்தைத் துடைத்தபடி.

    ஏழுதானேப்பா?... கொஞ்சம் தூங்கட்டுமேன்னுதான் எழுப்பலேப்பா... இந்தாங்க காஃபி, என்றபடி கோப்பையை நீட்டினாள் அவள், புன்னகையுடன்,

    ஏழரைக்கெல்லாம் குழந்தைகள் வந்துடுமே, அம்மா... அதுக்காகச் சொன்னேன்.

    கொஞ்ச நேரம் காத்துக் கொண்டிருந்தால் தப்பில்லையே, அப்பா.

    நீயா இப்படிச் சொல்றே? வியப்புடன் மகளைப் பார்த்தபடி காலிக் கோப்பையை நீட்டினார் அவர். எப்பவும் கடமை தவறக்கூடாது, பங்சுவாலிட்டி தவறக்கூடாதுன்னு சொல்ற நீயா? என்னம்மா இது, உதயா?

    உண்மைதாம்பா... வாழ்க்கை என்கிறதே கடமைகளால் நிறைஞ்சதுதானே? அதைத்தான் புனிதமா நினைக்கணும் என்கிறதுல இரண்டாவது கருத்தே இல்லப்பா. ஆனா நீங்க ஒரு - அசாதாரணமான மனுஷர் இல்லையா? கொள்கைகளுக்காக உயிரைக் கொடுக்கத் தயங்காத லட்சியவாதி இல்லையா? அரை மணி நேரம் கூடுதலா தூங்கறதுல தப்பே இல்லப்பா... உயர்ந்த மனிதர்களுக்காக இயற்கை கொடுக்கிற நன்கொடை அப்பா இது.

    பதில் சொல்லாமல் அவர் தலை குனிந்து கொண்டார். லேசாக உணர்ச்சி வசப்பட்ட நிலைக்குப் போய்விட்டார் என்பது புரிய -

    அவள் உடனே தினசரியை நீட்டினாள்.

    நான் பாத்தாச்சுப்பா... இந்தாங்க... காய் நறுக்குற வேலை இருக்கு.

    அதற்கும் எதுவும் சொல்லாமல் கையை மட்டும் நீட்டி வாங்கிக்கொண்டார். தலையை நிமிர்த்தாமலேயே செய்திகளை வாசிக்கத் தொடங்கினார்.

    ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது புரிந்தது அவளுக்கு. மனம் சஞ்சலத்திற்கு உட்பட்டது.

    குத்தாலத்துல சீஸன் ரொம்ப களைகட்டி இருக்காம்பா... மெயின் ஃபால்ஸ், ஐந்தருவி ரெண்டுலயும் ஜோரா கொட்டுதாம் தண்ணி... கலர் ஃபோட்டோ போட்டிருக்கான் பாருங்க நாலாவது பக்கத்துல, என்றாள். சகஜமான குரலை உண்டாக்கிக் கொண்டாள்.

    நிதானமாக அவர் விரல்கள் தினசரியைப் புரட்டின.

    நான்காவது பக்கத்திற்கு வந்து நின்றன.

    அட்டகாசமா இருக்கில்லேப்பா? இயற்கை தன் உற்சாகத்தை வெளிப்படுத்தற விதம் இதுன்னு தோணுது எனக்கு... சரியாப்பா? என்றாள் சிரித்து.

    மெல்ல நிமிர்ந்தார்.

    அவளையே பார்த்தார்.

    உதயா... என்றார்.

    என்னப்பா?

    வருத்தமே இல்லையாம்மா உனக்கு?

    வருத்தமா? என்ன வருத்தம்? எதுக்கு வருத்தம்? என்றாள் திகைப்பாக.

    தெரியாத மாதிரி ஏம்மா கேக்கறே? மனசைத் தொட்டுச் சொல்லு உதயா... கவலையே இல்லையா உனக்கு?

    இருக்கே... கவலை... நிறைய... என்று பாலசந்தர் படக் கதாநாயகி போலத் தலையைச் சாய்த்தபடி அவள் தீவிரமான முகபாவத்துடன் சொன்னாள். ஓவியராப் பிறக்கலையே, பாடகரா இல்லையே, கவிதை எழுதத் தெரியலையே, சிற்பியா பொறக்காமப் போயிட்டோமேன்னு நிறையக் கவலை இருக்குப்பா...

    கலகலவென்று வெகுளித்தனமாகச் சிரிக்கும் மகளைப் பார்த்தபடி அப்பா கரகரத்தார்.

    விளையாட்டுப் பொண்ணா இருக்கியேம்மா... என்மேல வருத்தம் இல்லையா உனக்கு? என்மேல கோபம் இல்லையா உனக்கு? அதைத்தாம்மா கேக்கறேன்...

    அவள் விழிகள் கனிவுடன் தந்தையைப் பார்த்தன.

    மறுபடி அவர் கேட்டார்.

    உயர்ந்த மனிதன், லட்சியவாதின்னெல்லாம் சொன்னியேம்மா... என்னம்மா பெரிய மனிதன் நான்? பொழைக்கத் தெரியாத முட்டாளுக்கு லட்சியவாதிப் பட்டம்... சாமர்த்தியமா நடந்துக்கத் தெரியாதவனுக்கு உயர்ந்த மனிதன் பதவி... உதயா! குத்தாலம், அருவின்னு இவ்வளவு ஆசையா பேசறியேம்மா! ஒரு தடவை, ஒரே ஒரு தடவையாவது அந்த அருவியை உனக்குக் காட்டினது இல்லையேம்மா இந்தத் தகப்பன்! உன்னோட இந்த இருபத்து மூணு வயசு வரைக்கும் தாம்பரம் தாண்டி ஒரு உலகம் இருக்குன்னு உனக்கு அறிமுகப்படுத்தலையே நான்! வக்கில்லாத ஏழைத் தகப்பனார், ஆர்மோனியத்தை உருட்டிக்கிட்டு வாழ்க்கையைத் தள்ளிட்டிருக்கேன். என்னைப் போய்த் தூக்கி, இமயமலைல வெச்சுப் பேசறியேம்மா... உதயா.

    சிறுவனைப் போல சடாரென்று கண்கலங்கி விட்ட அப்பாவின் முதுகில் மெல்லக் கரம் வைத்தாள் அவள்.

    "எது அப்பா பலம்? எது பலம்? நாலெட்ஜ்! நாலெட்ஜ் இஸ் பவர்! எனக்கு அறிவுத் தாகத்தை உண்டாக்கி வெச்சது நீங்கப்பா! ரசனையை ஏற்படுத்தினது நீங்க! இப்படித்தான் வாழணும்னு பிரின்ஸிபல்ஸ் சொல்லிக் கொடுத்தது நீங்க! எந்தச் செயலையும் அழகுணர்ச்சியோடு பாக்கவும் செய்யவும் பழக்கி வெச்சது நீங்க! அடிப்படைல நீங்க ஒரு முழுமையான மனிதரா இருக்கறதாலதானேப்பா என்னை உருவாக்கவும் முயற்சி பண்ண முடிஞ்சது? மனசு விட்டுச் சொல்றேம்பா... நீங்க ஒரு லட்சிய மனிதர்ப்பா... எந்தப் பகட்டுக்கும் மயங்காத உயர்ந்த மனிதர்... உங்களோட மகள் நான் என்கிறதுல எப்பவும் பெருமைப்படறவப்பா நான்...

    நிஜ... நிஜமாவா சொல்றே உதயா?

    எப்பவும் நிஜம்தானேப்பா பேசுவேன்!

    ராகவன்ல இருந்து ராமசுப்பன் வரைக்கும் என்னைப் பிழைக்கத் தெரியாதவன்னு சொல்றாங்களேம்மா...

    பிழைப்பு வேற, வாழ்க்கை வேறேன்னு, பாவம்! அவங்களுக்குத் தெரியாதுப்பா...

    உன் அம்மாகூட என்னைச் சாமர்த்தியம் இல்லாதவன்னுதாம்மா நெனைச்சா, கடைசி வரைக்கும்...

    அம்மா மட்டுமில்லப்பா, எல்லா மனைவிகளும் தன் கணவனைப்பத்தி அப்படித்தான் நெனைப்பாங்களாம்... சசி சொல்லியிருக்காப்பா! அவள் சிரித்தாள்.

    அப்படின்னா என் மேல வருத்தமே இல்லையா உனக்கு? ஐயோ உதயா, என் தங்கமே, நிஜமா நம்ப முடியலம்மா...

    அப்பா மறுபடி உணர்ச்சி வசப்பட்டார்.

    இப்பதான் வருத்தம் வருதுப்பா... இப்படி இமோஷனல் ஆகக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரா இல்லையா? பிளட் பிரஷர் கன்ட்ரோல் மாறிடுமேப்பா... ப்ளீஸ்... எப்பவும் போல அமைதியா இருங்களேன்... எனக்காக...

    "இதோ இதோ... பார்... எப்படிப் புன்னகை செய்யறேன்னு... அப்படியே புத்தர் மாதிரி

    Enjoying the preview?
    Page 1 of 1