Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நிலவும் வரும் உன்னோடு..!
நிலவும் வரும் உன்னோடு..!
நிலவும் வரும் உன்னோடு..!
Ebook134 pages46 minutes

நிலவும் வரும் உன்னோடு..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வேலம்மா தயாரித்துக் கொடுத்த வெண் பொங்கல் இன்னும் நாவிலேயே இருந்தது.
 என்ன ருசி அது!
 கைமணம் என்று சொல்வதெல்லாம் நிஜம் தானா? சரியான விகிதத்தில் அரிசி பருப்பு சேர்ந்து பதமாக வெந்தெடுத்து அளவாக இஞ்சி, மிளகு, சீரகம் தாளித்துக் கொட்டி நெய் மினுங்க தட்டில் வைத்து நீட்டியபோது எங்கிருந்தோ பசி வந்து கபகபவென்று வயிற்றைத் தூண்டி விட்டது.
 தேவாவின் நினைவில் ஒரு கணம் மெல்லிய ஈரம் படர்ந்த விழிகளை அவள் படபடத்தாள்.
 "என்னம்மா தயாம்மா இது? புருஷன் நினைவா? சரியான பத்தாம்பசலிம்மா நீ... சாப்பிடும்மா மொதல்ல..." என்று வேலம்மா அன்புக்கட்டளை இட்டாள்.
 "பாவம் வேலம்மா தேவா... சாப்பாட்டுல அப்படி ரசனை பாக்கற மனுஷன்... அளவா சாப்பிட்டாலும் அழகா சாப்பிடத் துடிக்கிற ஆள்... சப்பாத்தி, தந்தூரி, செட்டிநாடு இப்படி நான் வெரைட்டி சமையல் கத்துக்கிட்டதே அவருக்காகத்தான்... புகழ்ந்துகிட்டே சாப்பிடுவாரு... இப்ப என்னடான்னா வேகாத இட்லியும் மசியாத சட்னியும் சாப்பிட்டு நொந்து போய் இருக்கிறாரு..." என்றாள் அவள் வருத்தத்துடன்.
 "எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தானேம்மா? இங்க வந்துட்டாருன்னா அப்புறம் என்ன? குழந்தைய கவனிக்கிற மாதிரி நீங்க பாத்து பாத்து செய்யப் போறீங்க..." என்றவள் நெருங்கி வந்து மெல்லிய குரலில் கேட்டாள். "நானே விசாரிக்கணும்னு இருந்தேம்மா... கன்னமெல்லாம் பளபளப்பா இருக்கு... மொகத்துல தனி களை தெரியுது... எதுனா விசேஷமா தயாம்மா?"

ஆமாம், அப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல நினைத்ததை அவள் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள். தேவாவிடம் சொல்லாமல் எப்படி? வேலம்மா வந்தவள்தான். இருந்தாலும் முதலில் தெரிந்து கொள்ளும் உரிமை தேவாவுக்குதானே?
 "நல்ல கற்பனை வேலம்மா உனக்கு... சரி, எப்படி இவ்வளவு பிரமாதமா பொங்கல் செய்யறே? பெருமாள் கோவில் பிரசாதம் மாதிரி... கிரேட்தான் போ..." என்று பேச்சை மாற்றினாலும் வேலம்மா முணுமுணுத்தபடிதான் இருந்தாள்.
 "எல்லாம் காலாகாலத்துல நடந்தாத்தான் அழகு... அப்புறம் வான்னாலும் வராது, போன்னாலும் போகாது... அய்யா வரட்டும்... அவர் காதுலயும் போட்டு வெக்கிறேன்..." என்ற - வேலம்மாவின் பேச்சை காதில் வாங்காதவள் போல அலுவலகம் கிளம்பி வந்து விட்டிருந்தாள் அவள்.
 மணி பதினொன்று அடித்தது.
 திரும்பிப் பார்த்தாள்.
 கயல்விழியின் இருக்கை காலியாக இருந்தது.
 இன்னுமா அவள் வரவில்லை?
 கட்டாயம் வந்து விடுவதாகத்தான் சொன்னாள். அதுவும் அவள் முடிக்க வேண்டிய லோன் டாக்யுமென்ட்ஸ் மூன்றுக்கு மேல் இருந்தன. அத்தனையும் வெளிநாட்டு எல்.சி.க்கள். என்ன ஆயிற்று?
 தன் கவுன்ட்டரில் வாடிக்கையாளர்கள் கூட்டம் குறையட்டும், பிறகு அவள் இருக்கைக்குச் சென்று வேலையைத் தொடங்கி வைக்கலாம் என்று முடிவு செய்து கொண்டாள். தன் வேலைகளை விரைவாக முடித்தாள். எழுந்தபோது எதிரில் நிழலாடியது.
 "யெஸ் சார், வித்ட்ராவலா?" என்று கேட்டபோது தான் கவனித்தாள்.
 கோகுல் நின்றிருந்தான்.
 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223852971
நிலவும் வரும் உன்னோடு..!

Read more from V.Usha

Related to நிலவும் வரும் உன்னோடு..!

Related ebooks

Related categories

Reviews for நிலவும் வரும் உன்னோடு..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நிலவும் வரும் உன்னோடு..! - V.Usha

    1

    இதுதான் அதுவா?

    அதுதான் இதுவா?

    தயாவுக்குக் குழப்பமாக இருந்தது.

    இன்பமான குழப்பம். புதிய மனநிலை.

    இடது கை விரல்களால் வயிற்றை மெல்ல வருடினாள். ஒரு வித்தியாசமும் இல்லை. எப்போதும் போன்ற வாழையிலை வழுவழுப்புடன் மென்மையான அதே வயிறுதான்.

    ஆனால் உள்ளுக்குள்ளே விசேஷம் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டதா? இப்படி நான்கு நாட்கள் தாண்டியதே இல்லையே இதுவரை. மனித கடிகாரம் என்பது போல மனித காலண்டர் அல்லவா அவள் உடலுக்குள்ளே மானசீகமாக இடம் பெற்றிருந்தது? மிக துல்லியமாக ஒவ்வொரு இருபத்தொன்பதாவது நாள் காலையிலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு அசட்டுச் சிரிப்புச் சிரிக்குமே அவளைப் பார்த்து, எங்கேதான் போனது அது நான்கு நாட்களாக? கண்ணாடியைப் பார்த்தாள். ஜிவுஜிவுவென்று முகத்தில் புது பளபளப்பு கூடிப்போன மாதிரி தெரிந்தது. பிரமை என்று ஒதுக்க முடியாது. தன் முகத்தின் ஒவ்வொரு தசையும் கோணமும் அத்துப்படி அவளுக்கு. இது என்றில்லை. எந்த விஷயத்தைப் பார்த்தாலும் அப்படித்தான். ஒரு தடவை பார்த்தால் போதும். அப்படியே மின் காப்பி எடுத்தது போல் நெஞ்சில் பதிந்து விடும். ஓடுகிற ரெயிலில் பார்க்கும் காட்சியிலிருந்து அலுவலகத்தில் எதிரே வந்து நிற்கிற வாடிக்கையாளரின் கையெழுத்து வரை...

    முகம் பிரத்யேக களையைச் சுமந்து கொண்டுதான் இருக்கிறது. காலை எழுந்திருக்கும்போது மிக லேசாக யாரோ தள்ளிவிட்ட மாதிரி உணர்வு கூட இருந்தது. நான்கு நாட்களாக எதிர்பார்த்தது வேறு வரவே இல்லை. அதற்கான கட்டியக்காரன் போன்ற இடுப்பு வலியும் இல்லை.

    ஸோ...

    அதுதானோ இது?

    இதுதானோ அது?

    பரபரப்பானாள் அவள்.

    தேவாவிடம் உடனே சொல்ல வேண்டும் என்று தவித்த நெஞ்சத்தை உடனடியாக அடக்கி விட்டாள்.

    பொறு மனமே, பொறு.

    ஊர் விட்டு ஊர் போய், அதிகாரி என்னும் முள் கிரீடச் சுமையுடன் சரியான சோறு தண்ணீர் இல்லாமல் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறான் அவன். சென்னைக்கு மாற்றல் உத்தரவு வந்தும் கூட ரிலீவர் வராத காரணத்தால் அந்த செங்கல்பட்டு குக்கிராமத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறான். இன்னும் இரண்டே நாட்கள். சனிக்கிழமை வந்து விடும். தேவாவும் ஓடி வந்து விடுவான். யோசித்து, பூடகமாக பேசி, கொஞ்சத்தில் விஷயம் சொல்லாமல் அலைக்கழித்து, பிறகு சடாரென்று சொல்லிவிட வேண்டும்.

    ‘என்னது?’ என்று திரைப்பட கதாநாயகன் போலத்தான் அதிர்ச்சி அடைவான் அவன்.

    பின்னே?

    மூன்று வருடங்களாக எதிர்பார்க்கிற விஷயமல்லவா இது? முதலில் வேண்டாம் என்று அவர்களாக ஒரு வருஷம் தள்ளி வைத்தார்கள். அடுத்த வருஷம் முழுக்க மாமியார் அன்னத்தின் ரத்தப் புற்றுநோயுடன் போராடவே சரியாகப் போய்விட்டது. அன்னம் போய்ச் சேர்ந்த கையோடு அவனுக்கு பதவி உயர்வுடன் கூடிய மாற்றல் உத்தரவு வந்து விட்டது. அதுவும் அனுமன்மலை என்கிற குக்கிராமத்தின் ரூரல் கிளைக்கு. அவள் அலுவலகத்தில் அழுத்திக் கேட்டால் இப்போது மாற்றல் கிடைக்கும்தான். அதுவும் செங்கல்பட்டு டவுனில் இருக்கும் கிளைக்குத்தான். அங்கிருந்து அனுமன்மலை நாற்பது கிலோ மீட்டர் தூரம். தினம் தினம் எண்பது கிலோ மீட்டர் பயணத்தை உடல் தாங்குமா? தவிர, ரூரல் சர்வீஸ் முடிந்து அவன் சென்னைக்குத் திரும்பி வருகிற சமயத்தில், அவளுக்கும் மாற்றல் உத்தரவு கொடுத்து விடுவார்கள் என்பதற்கு ஒரு சதவிகித உத்தரவாதம் கூட இல்லை பதினைந்தாயிரம் சம்பளம் பெற்றுத் தரும் வேலையை உதறிவிட்டுப் போவதில் எந்தவித புத்திசாலித்தனமும் இல்லை.

    யோசித்தார்கள்.

    சொந்த வீட்டிலேயே, வேலம்மா துணையுடன் அவள் தங்கிக்கொள்வது. பத்து நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு ஒரு முறை என்று அவன் வந்து போவது.

    நடைமுறையில் சாத்தியமாகியும் விட்டது.

    இப்படிப்பட்ட நிலைமையில் இந்த புது சமாச்சாரம் இன்ப அதிர்ச்சிதான். தேவாவின் முகத்தை உயர்த்தி கண்களை மலர்த்தி புருவம் தூக்கி ‘ஆ’ என்று மெலிதாக அலறுகிற அளவுக்கு எதிர்பாராத மகிழ்ச்சிதான்.

    தயா மறுபடி வயிற்றை வருடினாள்.

    கருவே!

    என் கட்டிக் கண்மணியே!

    வா!

    எங்கள் இனிய சாம்ராஜ்யத்திற்கு

    இந்த அழகிய உலகத்திற்கு

    அன்பில் செழித்திடும் வையத்திற்கு

    வா!

    உப்பு உதிரம் நீர் காற்று

    சகலமும் பெற்றுக்கொள்

    என்னிலிருந்து!

    அழகாக வா!

    அறிவாக வா!

    அன்பாக வா!

    ஆணோ பெண்ணோ

    எப்படி இருந்தாலும்!

    தொலைபேசி அழைத்தது.

    எழுந்தபோது மறுபடி லேசாக தலை சுற்றுவது போலிருந்தது.

    எடுத்தாள்.

    தயா ஹியர்... யாரு?

    கயல்விழி பேசறேன் தயா... என்று எதிர்முனைக் குரல் சற்றே வாட்டத்துடன் ஒலித்தது.

    குட் மார்னிங் கயல்... சொல்லு... என்றாள் அவள் உற்சாகமாக.

    ரெண்டு மணி நேரம் பர்மிஷன் வேணும் தயா... ஏ.எம். கிட்ட சொல்லிடறியா? புதூர் கோவில் வரைக்கும் போயிட்டு வரேன்.

    அதுக்கென்ன? தாராளமா சொல்றேன். ஆமா, அதென்ன புதூர் கோவில்? என்ன விசேஷம்?

    செஞ்சி போற வழில இருக்குதாம் தயா... ஒரு அரசமரம் இருக்காம். ரொம்ப சக்தியாம். தொட்டில் வாங்கிக் கட்டிட்டு நேர்ந்துகிட்டு வந்தா போதுமாம்... எதிர் வீட்டு மாமி சொன்னாங்க. பதினெட்டு வருஷம் கழிச்சுகூட பிள்ளை பொறந்திருக்காம் ஒருத்திக்கு தொட்டில் கட்டின பிறகு... அதுதான் தயா...

    சரி கயல் போயிட்டு வா...

    தாங்க் யூ... வெச்சுடறேன்.

    பெருமூச்சுடன் அவள் தொலைபேசியை வைத்தாள்.

    கயல்விழி... கோகுல்... இருவருமே நல்ல மனசுக்காரர்கள். அவளும் கயல்விழியும் ஆர்ட்ஸ் கல்லூரியில் எகனாமிக்ஸ் படித்தபோதுதான் கோகுல் போஸ்ட் கிராஜுவேஷன் செய்து கொண்டிருந்தான். கயல் விழிக்கு அவன் மேல் அப்படியொரு ஆர்வம். ஒரே ஊர்க்காரர்கள் என்கிற உணர்வு வேறு அவளை ரசவாதம் செய்து கொண்டிருந்தது. கவிதை எழுதும் மனதும் கல்வியில் நல்ல திறமையுமாக அமைதியுடன் வளைய வந்த அவனை அவள் விழுந்து விழுந்து நேசித்தாள். முதலில் விலகிப்போன அவனும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து விட்டான். பெரியவர்கள் பேசி நிச்சயித்து அழகாகத் திருமணமும் நடந்து விட்டது.

    ஆனால் கண் பட்டது போல - திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் கயல்விழியின் மடி திறக்கவில்லை. காத்திருந்து காத்திருந்து அவள் கரைந்தே போனாள். மிகப் பிரபலமான மகப்பேறு நிபுணரிடம் இருவருமே பரிசோதித்துக் கொண்டார்கள். முதலில் இருந்த சிறுசிறு பிரச்சினைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவளுடைய மாதாந்திர வட்டம் சீராக்கப்பட்டது. கர்ப்பப்பையின் தாங்கும் சக்தி அதிகரிக்கப்பட்டது. அவனுக்கும் வலிமைக்கான மாத்திரை, மருந்துகள் கொடுத்தார்கள். கரு உண்டாகாது என்று சொல்வதற்கான சாத்தியக்கூறு இல்லை. ஆனால் கரு உண்டாவது எப்போதும் நம் கையில் மட்டும் இல்லை என்பதுதான் கடைசியாக மருத்துவர் சொன்ன முடிவு.

    இதுவரை எந்தப் பலனும் இல்லை.

    தயாவுக்கு மறுபடி ஒரு பெருமூச்சுதான் வந்தது. நல்லவர்களை சோதித்துப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவது யாராக இருந்தாலும் அது ஒரு மோசமான மனநிலை என்று தோன்றியது.

    2

    வேலம்மா தயாரித்துக் கொடுத்த வெண் பொங்கல் இன்னும் நாவிலேயே இருந்தது.

    என்ன ருசி

    Enjoying the preview?
    Page 1 of 1