Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மனோரதம்
மனோரதம்
மனோரதம்
Ebook102 pages35 minutes

மனோரதம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்றைக்கு வகுப்பு இல்லை. பேச்சுப் போட்டி முடிந்ததும் அனைவரும் கலைந்தனர். மறுபடி மதியம் பாட்டுப் போட்டி இருந்தது. அதனால் மாணவிகள் படிப்பைப் பற்றி கவலைப்படாமல் அரட்டையடித்துக் கொண்டும், போட்டிக்கு பயிற்சி எடுத்துக் கொண்டும் இருந்தனர்.
 சகுந்தலா கண்ணில் படுகிறாளா என பார்த்துக் கொண்டே வந்தவன் மென்மையாக அதிர்ந்தான்.
 எதிரே நெஞ்சோடு புத்தகங்களை அணைத்தபடி வந்து கொண்டிருந்தாள் சகுந்தலா.
 புன்னகையுடன் அவளை எதிர்கொண்டான் பொன்முடி.
 "வாழ்த்துக்கள் சகுந்தலா."
 நிமிர்ந்தாள். சிரித்தாள்.
 "நான் எந்த பரிசும் வாங்கலையே... எனக்கெதுக்கு வாழ்த்துக்கள்?" என்று சிரித்தாள் சகுந்தலா. புன்னகையில் வெண்முத்துக்களைக் காட்டினாள்.
 "பரிசு வாங்க காரணமா இருந்தவங்களையும் பாராட்ட வேண்டாமா? 'கொங்கு தேர் வாழ்க்கை' பாட்டுக்கு தருமிக்கு பரிசு கிடைச்சாலும், எழுதின இறையனாருக்குத்தானே பெருமை?"
 அவள் சிரித்தாள்.
 "விஷ்ணுப்பிரியா பேசினதெல்லாம் நீங்க எழுதிக் கொடுத்ததுதானே?"
 "ஆமா."
 "எண்ணங்கள் வெறும் எழுத்தோட மட்டும்தானா? இல்ல வாழ்க்கையிலும் உண்டா?"
 அவன் அப்படிக் கேட்டதும் சட்டென நிமிர்ந்துப் பார்த்தாள் அவள்.
 "விதவைத் திருமணம் வேண்டும். அதுக்கு ஆடவர்கள் முன் வரவேண்டும்னு எழுதியிருக்கீங்களே... நீங்க எப்ப இன்னொரு கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க?"
 சட்டென அவளுடைய மேனி முழுவதும் அதிர்ச்சிப் பரவுவதைக் கண்டான் பொன்முடி

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 7, 2023
ISBN9798223694014
மனோரதம்

Read more from R.Sumathi

Related to மனோரதம்

Related ebooks

Related categories

Reviews for மனோரதம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மனோரதம் - R.Sumathi

    1

    மனிதன் எண்ணங்களால் ஆக்கப்பட்டவன். அவன் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ உருவாக்கப்பட காரணம் அவனுடைய எண்ணங்களே.

    சில எண்ணங்கள் இளம் வயது முதல் விதையாக இதய நிலத்தில் விதைக்கப்பட்டு அவை லட்சியமாகின்றன. படிப்பு, வேலை என்பது விதைக்கப்பட்ட லட்சிய எண்ணங்களினால் விளைவதாக இருக்கின்றது.

    ஆனால் –

    வாழ்க்கை என்பது ஒரு சில சந்தர்ப்பங்களின்போது, சில சூழ்நிலைகளின்போது உண்டாகும் திடீர் எண்ணங்களினால் பெரும்பாலும் அமைந்துவிடுகிறது. இன்னும் சொல்லப் போனால் கண்சிமிட்டும் நேரத்திலோ, கை சொடுக்கும் நேரத்திலோ கூட மனதில் எண்ணங்கள் தோன்றி அவை ஆழமாக மனிதனைப் பிடித்துக் கொள்வதும் உண்டு.

    பொன்முடியின் இதயத்தில் அதைப்போல் ஏதோ ஒரு கணத்தில் உண்டான எண்ணம்தான் சகுந்தலாவை திருமணம் செய்து கொண்டால் என்ன என்ற எண்ணம். சகுந்தலா அவனோடு வேலை பார்க்கும் சக ஆசிரியை. அவன் கண்ணெதிரே வேலைக்கு சேர்ந்தவள். அடுத்த வருடமே திருமணம் செய்துக் கொண்டு அதற்கடுத்த சில மாதங்களில் கர்ப்பிணியாய் வளைய வந்து குழந்தையைப் பெற்றெடுத்த மறுமாதமே கணவனை விபத்தொன்றில் வாரிகொடுத்து விட்டு நிற்பவள்.

    அவளுடைய வாழ்க்கை, கணவன் சென்ற பிறகு பாலைவனமானது.

    விதவைக் கோலத்தில் அவள் பள்ளியில் வளைய வருவதைப் பார்க்கும் போது யாருக்குமே நெஞ்சில் ஒரு வேதனை ஓடும். தான் ஆண் என்ற ஒரு தகுதியை மட்டுமே வைத்துக் கொண்டு, பள்ளியின் பணியாள் கூட அவளிடம் பலமுறை பல்லிளித்து பேச முயல்வதை அவன் பார்த்திருக்கிறான்.

    பொன்முடி, பகுத்தறிவுவாதி என தன்னை பறைசாற்றிக் கொள்பவனோ, சீர்திருத்த எண்ணம் கொண்டவன் என்று சொல்லிக் கொள்பவனோ அல்ல. ஏதாவது ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்று ஏங்கினானே தவிர, இன்ன வேலைதான் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. ஒரு வேலை கிடைக்க வேண்டும், குடும்பத்தில் தண்டச் சோறு என்ற திட்டு வாங்காமல் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.

    பொன்முடி வாழ்க்கையில் எதற்காகவும் காத்திருக்க தயாராக இல்லை. கிடைத்த வேலையை செய்தான். அப்படி செய்து கொண்டிருந்தபோதுதான் வேதாரண்யத்தில் ஒரு பள்ளியிலிருந்து நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்தது.

    கிடைக்கும் என்று எதிர்பார்த்தோ, கிடைக்காது என்று கவலைப்பட்டோ அவன் இங்கு வரவில்லை. அது இல்லாவிட்டால் இன்னொன்று. வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில் என்ற கொள்கை உடையவன் அவன். அந்த மாதிரியானதொரு மனநிலையில்தான் வந்தான்.

    ஆனால்... வேலையில் சேர்ந்து விளையாட்டாய் நான்கு வருடங்கள் ஓடி விட்டன. மூன்று வருடமாய் நெஞ்சில் முளைவிட்ட எண்ணம்... சகுந்தலாவை கைப்பிடிக்க வேண்டும். தனிமரமாய் நிற்கும் அவளுக்கு துணையாய் ஆகவேண்டும். தகப்பனற்ற குழந்தைக்கு தகப்பனாக வேண்டும். அவளிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணி எண்ணி தயக்கம் தடைப்போட்டதால் இன்று வரை மௌனம் காத்தான்.

    கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஆகிவிட்டிருந்தது. இப்படித்தான் தினமும் நேரம் ஆகிவிடுகின்றது. கடைசி நேரத்தில் பரபரப்புடன் ஓட வேண்டும். இங்கு தனியாக அறை எடுத்து தங்கியுள்ளான். தனி ஆள். வீட்டில் ஒரு வேலையும் கிடையாது.

    ஆனாலும் தினமும் நேரமாகி விடுகிறது. காரணம் சிந்தனை.

    அவனுடைய சிந்தனையே அவனுடைய நேரங்களை விழுங்கிவிடுகிறது. சகுந்தலாவைப் பற்றிய சிந்தனை. அழகான சிந்தனை. அவளுக்கு வாழ்க்கை தரவேண்டும் என்ற சிந்தனை. ஒரு சராசரி மனிதனாக இருந்த அவன் மனதில் இப்படி ஒரு பரந்த எண்ணம் எப்படி உண்டானது என்பது அவனுக்கே ஆச்சரியம்!

    ஏதோ ஒரு கணத்தில் ஏற்பட்டுவிட்டது. இனிமேலும் தாமதப்படுத்தக் கூடாது. எப்படியாவது சகுந்தலாவிடம் சொல்ல வேண்டும். உறுதியாய் உள்ளத்தில் எண்ணிக் கொண்டான். கண்ணாடி எதிரே அவசரமாக வந்து நின்ற தன்னை சரிபார்த்துக் கொண்டான். வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டி.வி.எஸ்.50-யை இயக்கி ஏறியமர்ந்து பள்ளியை நோக்கிப் பறந்தான்.

    மனம் சகுந்தலாவை நோக்கிப் பறந்தது.

    2

    கணீரென்ற குரலில் அரங்கம் நிறைந்த கூட்டத்தை அப்படியே கட்டிப் போட்டதைப்போல் பேசிக் கொண்டிருந்தாள் விஷ்ணுப்பிரியா.

    எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி. பேச்சுப் போட்டியென்றால் அவளுக்குத்தான் முதல் பரிசு என்பதைப் போல் பேசுவாள். அதிலும் இன்றைக்கு வெளுத்து வாங்கினாள்.

    ‘கற்பு நிலையென்று சொல்ல வந்தார். இரு கட்சிகளும் அஃது பொதுவில் வைப்போம் என்று மகாகவி சொன்னான். மனைவியை இழந்துவிட்டால் கணவன் மணவாளனாகிறான். புது திருமணம் புதுவாழ்க்கை. ஆனால் பெண் என்பவள் மட்டும் விதவை என்ற பட்டத்தை சுமந்துக் கொண்டு கண்ணீரே கதி என வாழ வேண்டுமா?

    பெண்ணுரிமை பெற்ற நூற்றாண்டு இது. பெண்கள் சாதிக்கும் யுகம் இது! பெண் மூடப்பழக்கங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு வீரநடைப் போட்டுக் கொண்டிருக்கிறாள். வாழ்விழந்த பெண்கள் அச்சம் கொண்டு அவமானம் என்று கருதி தனிமரமாய் நிற்கக்கூடாது. மறுமணம் செய்து கொள்ள முன் வரவேண்டும். ஆண்கள் முழு மனதுடன் அவர்களை ஆதரித்தால்தான் பெண்களின் வாழ்வு வளம் பெறும். இதைத்தான் பாரதி,

    ‘பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரந்தான்

    பேணுமாயின் பிறகொரு தாழ்வில்லை’ என்றார்.

    ஆடவர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக

    வரவேண்டும்.

    ‘மாலையிட்ட மணவாளன் இறந்துவிட்டால்

    மங்கை நல்லாள் என்ன செய்வாள்? அவளை நீங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1