Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ini Vazhkkai Inikkum!
Ini Vazhkkai Inikkum!
Ini Vazhkkai Inikkum!
Ebook122 pages47 minutes

Ini Vazhkkai Inikkum!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அகிலா மாணிக்கத்தை உயிருக்கு உயிராய் நேசித்தாள். இருவருக்கும் காதல் உண்டாகி அவள் கர்ப்பம் தரிக்கிறாள். மாணிக்கம் அவளை மணக்க முன்வரவில்லை காதல் துரோகம் செய்கிறான். அகிலாவுக்கு மகள் பிறக்கிறாள். அவள் பெயர் தீபிகா, அவள் ஏற்காட்டில் படித்து வருகிறாள், மற்ற பிள்ளைகளின் அப்பாக்களை பார்க்கும்போது அவளுக்கும் ஏக்கமாய் இருந்தது. முடிவாக அகிலா மாணிக்கத்தோடு சேர்ந்தாளா? தீபிகா தன் அப்பாவை பார்த்து மகிழ்ந்தாளா? வாசித்து தெரிந்து கொள்வோம்.

Languageதமிழ்
Release dateApr 15, 2023
ISBN6580146509751
Ini Vazhkkai Inikkum!

Read more from Kavimugil Suresh

Related to Ini Vazhkkai Inikkum!

Related ebooks

Reviews for Ini Vazhkkai Inikkum!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ini Vazhkkai Inikkum! - Kavimugil Suresh

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    இனி வாழ்க்கை இனிக்கும்!

    Ini Vazhkkai Inikkum!

    Author:

    கவிமுகில் சுரேஷ்

    Kavimugil Suresh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavimugil-suresh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 1

    அகிலா இருபத்தி ஒன்பது வயது உடையவள் மாநிறம் பார்க்க மகாலட்சுமியைபோல இருப்பவள் அவள் பெயரிலே டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் வைத்து நடத்தி கொண்டிருந்தாள்.

    அவளுடைய பெற்றோர்கள் கரகூர் எனும் கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர்.

    மாதந்தோறும் தன் வருமானத்தில் பெரும் பகுதியை ஒரு முதியோர் இல்லத்திற்கும், மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கும் கொடுத்து வந்தாள்.

    அவளுக்கு அந்த கரகூர் கிராமம் ஏனோ பிடிக்காமல் போய்விட்டது. அதற்காக கிராமத்தை குறை சொல்லிவிட முடியாது.

    அங்கே அவளுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்தான் அவளை அங்கே இருக்கவிடாமல் பட்டணத்தை நோக்கி துரத்தியது.

    இவள் இந்த பட்டணத்திற்கு குடியேறி இருக்கும் விஷயம் அவளின் கிராம மக்கள் எவருக்கும் தெரியாது. ஏன் அவளைப் பெற்றவர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும்கூட தெரியாது.

    இவளை பல இடங்களில் அவளின் பெற்றோர்கள் தேடி அலைந்து கடைசியில் அவர்கள் ஒரு முடிவுக்குள் வந்தார்கள் காணாமல் போன தன் மகளை குறித்து செத்துப்போய் இருப்பாள் என்பதே ஊர் மக்கள் வேறுவிதமாய் நினைத்துக்கொண்டு இருந்தார்கள். நம்ம ஊர்ல மாணிக்கம் ஆளே இல்ல. இப்ப இவளும் காணோம் அப்ப ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் செஞ்சு எங்காவது இருக்காங்களோ என ஊர் வாய்கள் பேசிக்கொண்டிருந்தது.

    அவளுக்கோ அந்த ஊரில் ஏற்பட்ட ஒரு அனுபவம் அந்த அனுபவத்தின் வலி, அந்த அனுபவத்தின் வடு இன்னும் அவளுக்குள் இருந்துக்கொண்டே இருக்கிறது. அவளின் மனதின் கசப்பான அந்த அனுபவ வடுக்கள் அகலவில்லை.

    ஊர் மக்கள் பலவிதமாய் வார்த்தைகளால் குத்திக்குத்தி ரணப்படுத்துவதை அவளின் பெற்றோர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

    வாழ்ந்தால் மெச்சிக்கொள்கிற இந்த உலகம் வீழ்ந்தால் மிதித்து துவச பேச்சுக்களால் கொக்கரிக்கிறது என்ன செய்ய உயிரையா மாய்த்துக்கொள்ள முடியும் வெந்ததை சாப்பிட்டு விதி வந்தால் சாவோம் என அந்த ஊரில் பொறுமையாக அகிலாவின் பெற்றோர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

    கடவுளே ஏன் இந்த பூமியில் நான் பிறந்தேன், எதற்காக வாழ்கிறேன், ஒன்றும் புரியாமல் பித்து பிடித்தவளைபோல் சில நேரங்களில் தன் படுக்கையில் பலவித யோசனையில் மனம் நொந்து சலிப்போடு காணப்படுவாள்.

    ஒரேடியாய் செத்துவிட்டால் பிரச்சனை இல்லை. அது ஒரே பிரச்சினையாய் முடிந்துவிடும் என அடிக்கடி யோசிப்பதும் உண்டு.

    அவள் வாழ்க்கை துவர்ப்பாகவே இருக்கிறது சகித்துக்கொள்ள அவள் மனதுக்கு வேண்டிய வலிமை இல்லை.

    அவள் உயிருக்கு உயிராய் நேசித்த ஒரு மனிதன் அவளிடம் முகமூடி போட்டு நடத்தின நாடகம் அவள் மனதை சீர்குலைய செய்துவிட்டது. அது, அவள் நம்பிக்கையின் நங்கூரத்தை தகர்த்துவிட்டது. வாழ்வின் மீது இருந்த ஆசையை அபகரித்துவிட்டது.

    துரோகங்கள், துயரங்கள், பாடுகள், பிரச்சனைகள் இவைகளை அவள் நம்பி காதலித்த அவனால் பெற்ற வெகுமதிகள்.

    அவள், அவனிடம் விரும்பினது அவனது மனதை. அவன் விரும்பியதோ அவளின் அழகான வடிவமைப்புமிக்க உடலை. அவன் ஒரு காம பிசாசு என தெரிந்திருந்தால் அவள் ஆரம்பத்திலேயே விலகி இருந்திருப்பாள். அவனை முழுமையாய் நம்பி அவளை பறிகொடுத்ததுதான் மிச்சம்.

    பேனாவில் மை இருக்கும் வரைதான் அதற்கு மதிப்பு. அகிலா எனும் பேனாவை தனக்கு சாதகமாக்கிக் கொண்டான். காரியம் முடிந்த பிறகு ரீபில் தீர்ந்த பேனாவாய் அவளை ஒதுக்கி தள்ளிவிட்டான்.

    இந்த உலகத்தைவிட்டு அவள் ஒதுங்கிவிடலாம் என்று பல தடவை நினைத்து தன்னை மாய்த்துக்கொள்ள முயன்றாள். ஃபேனில் கயிறை தொங்கவிட்டு கயிற்று முடிச்சில் தலையை சொருகி வாழ்வை சுருக்கி கொள்ளலாமா நினைத்ததுண்டு.

    என்னோடு முடியட்டும் இந்த வாழ்வு. எதற்கு என் வயிற்றில் இருக்கும் குழந்தை பிறந்து, இந்த பூமியில் அவஸ்தைப்பட வேண்டும் என யோசித்து தூக்குக் கயிற்றில் மறிக்க முடிவு செய்து முயற்சி செய்தபோது அந்த நேரம் பார்த்து கொரியர்காரன் காலிங் பெல் அழுத்தி கண்ணாடி ஜன்னல் வழியாக அவள் தன்னை தூக்கிலிடுவதை கண்ணுற்று ஐயோ என கத்தி ஊரை கூட்டிவிட்டான் கண்ணாடி ஜன்னலை உடைத்து பக்கத்தில் அருகில் இருந்தோர் எல்லோரும் அவள் வீட்டிற்குள் புகுந்து நடு ஹாலில் டேபிள் மேல் நின்று கயிற்றுக்குள் தலையை விட்டுக்கொண்டிருந்த அவளை ஓடிவந்து தூக்கி காப்பாற்றினார்கள்.

    ‘வேண்டாமா, வேண்டாம்’ இந்த முயற்சி தப்பு என கத்தி கதவை உடைத்து அவளை காப்பாற்றிவிட்டார்கள்.

    பலர் அவளை பார்த்து, உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? வாழ வேண்டிய வயசுல அப்படி என்ன உனக்கு மனகஷ்டம் எல்லாத்துக்கும் தற்கொலைதான் முடிவா என ஆலோசனையை அள்ளி கொடுத்தார்கள்.

    மருந்து குடித்து சாகலாம் என்று நினைத்து உரக்கடைக்கு சென்று மருந்து கேட்டாள். அவன் ஒரு மாதிரியாக பார்த்தான். மருந்தெல்லாம் கொடுக்க முடியாது என்றான்.

    பிறகு மெடிக்கல் ஷாப்பில், அங்கே தூக்க மாத்திரையை கேட்டாள். தூக்க மாத்திரை என்றால் பிரச்சனை இல்லை. இரவு நேரத்தில் தூங்கும்போது ஒரு எட்டு மாத்திரை போட்டுக்கொண்டாள் நிம்மதியாய் போய்விடலாம் என முடிவு செய்தாள்.

    மெடிக்கல் ஷாப்பில் இருப்பவனோ, டாக்டருடைய அனுமதி சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை கொடுக்க முடியாது என்றான்.

    ஆக, கடவுளின் திட்டம் அவள் இந்த பூமியில் வாழ வேண்டும் என்பதே என முடிவாக உணர்ந்தவளாய் அப்படி என்றால் தன்னை சாக கடவுள் விடவில்லை என்பதை உணர்ந்தாள்.

    அடிக்கடி ஏன் மரணத்தை குறித்து நான் சிந்திக்கிறேன் வேண்டாம் எல்லோரும் ஒருநாள் மரிக்கத்தான் போகிறோம். சீக்கிரமாய் மரிக்க வேண்டிய அவசியம் ஏன்? பிரச்சனைகள்

    Enjoying the preview?
    Page 1 of 1