Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Thoppu Kuyilgal
Oru Thoppu Kuyilgal
Oru Thoppu Kuyilgal
Ebook129 pages50 minutes

Oru Thoppu Kuyilgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திலகாவும் தேவிகாவும் சிறுவயதில் விடுதியில் படிக்கும் போதிருந்தே உயிருக்கு உயிரான தோழிகள் திலகா தைரியமானவள் வாழ்க்கையில் வரும் எந்த சவால்களையும் எதிர்கொள்ளும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவள் தேவிகாவோ அப்படி அல்ல பயந்த சுபாவம் உடையவள் இருவரின் வாழ்வை குறித்த அற்புத கதை இதில் திலகா காலத்தின் கட்டாயம் பொதுவுடமைக் கட்சியில் எப்படி எம் எல் ஏ ஆகிறாள் பொதுப் பணியில் அவளுடைய சேவைகள் மக்கள் மத்தியில் எப்படி வரவேற்ப்பு பெற்றது என்பதைக் குறித்து அற்புதமான நாவல்

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580146510564
Oru Thoppu Kuyilgal

Read more from Kavimugil Suresh

Related to Oru Thoppu Kuyilgal

Related ebooks

Reviews for Oru Thoppu Kuyilgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Thoppu Kuyilgal - Kavimugil Suresh

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஒரு தோப்பு குயில்கள்

    Oru Thoppu Kuyilgal

    Author:

    கவிமுகில் சுரேஷ்

    Kavimugil Suresh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavimugil-suresh

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 1

    திலகா அழகு தேவதை சரியான உயரம் தேக்கு மரத்தில் செதுக்கி செய்யப்பட்டதை போன்ற உடல்வாகு முகம் மென்மையான ரோஜா மலர் கழுத்துக்கு கீழே வஞ்சனை இல்லாமல் வளர்ந்திருந்தாள்.

    அவள் சிரித்த முகம் கொண்டவள் சாதுவானவள் என்று அவ்வளவு சீக்கிரம் எளிதில் அவளிடம் நெருங்கி விட முடியாது.

    அவள் அப்பாவி அல்ல பேசின உடனே எவரையும் நம்பக் கூடிய ரகமும் இல்லை புதிதாய் பேசுகின்ற பழகுகின்ற ஒரு நபரை அவரின் அடிமனதின் ஆழம் வரை சென்று அவர் நல்லவரா கெட்டவரா என ஆராய்கிற குணத்தைக் கொண்டிருந்தாள் அதற்காக எல்லோரையும் வெறுக்கிற குணம் உடையவள் என்று நாம் கருதி விடவும் முடியாது.

    குறிப்பாக ஆண்களை அவ்வளவு சீக்கிரமாய் நம்பக் கூடிய ரகம் உடையவளாய் இல்லை ஏன் இந்த ஆண்கள் மேல் அவள் தொடர்ந்து கோபம் கொண்டு இருக்கிறாள் என்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது அதற்காக எல்லா ஆண்களையுமே அவள் அதே பார்வையில் பார்க்கிறாள் என்ற அர்த்தமில்லை.

    அவளின் நெருங்கிய தோழிகளின் வாழ்க்கையில் ஆண்களால் ஏற்பட்ட பல பிரச்சினைகளை கண்ணுற்று கேள்விப்பட்டு பல ஆண்களே மோசம் எனும் முடிவுக்குள் வந்து விட்டாள்.

    முதலில் இனிக்க இனிக்க சிரித்து பேசுவார்கள் கொஞ்சம் இடம் கொடுத்தால் நெருங்கி பழகி முள்ளாய் குத்துவார்கள்.

    இந்த ஆண்களுக்கு பெண்கள் போகப் பொருள்கள், பெண்கள் ஜடப்பொருள்கள் தேவையானபடி பயன்படுத்திக் கொள்ள பெண்களை அஃறிணையாக நினைக்கின்ற இந்த ஆண் சமுதாயத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன்னை யார் என்று இச்சமுதாயத்திற்கு தங்களை உயர்த்தி காட்ட வேண்டும் தங்களுக்கு என ஒரு லட்சியத்தை உடையவர்களாக, தனக்கான அடையாளத்தோடும் காணப்பட வேண்டும் என்பது அவளின் விருப்பமாக இருந்தது.

    திலகா இதுவரை பெண்களின் உணர்வுகளையும் நிலைகளையும் அறிந்து புரிந்து பேசுகின்ற ஒரு நபரை சந்தித்ததில்லை.

    அவள் சந்தித்த அத்தனை ஆண்களும் பொய்யை பேசுகிறவர்களும் மாய்மாலமாய் நடந்து கொள்கிறவர்களுமாய் தான் இருந்திருக்கிறார்கள்.

    அவள் படித்த ஹாஸ்டலில் பெண் பிள்ளைகள் மட்டுமே இருந்து வந்தார்கள் சிறுவயதிலே அவளுடைய தாய்மாமன் மூலம் ஹாஸ்டலில் சேர்க்கப்பட்டாள்.

    அவளின் பெற்றோர்கள் அவளுக்கு ஐந்து வயது இருக்கும் பொழுது கட்டிட வேலை செய்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருக்கு சென்றார்கள் அவர்களுக்கு இவள் ஒரே மகள் சென்றவர்கள் திரும்பவே இல்லை.

    அவளுடைய தாய் மாமன் முத்து பல இடங்களில் பெங்களூரில் தேடிப் பார்த்தான் விசாரித்து பார்த்தான் தெரிந்தவர்களிடம் எல்லாம் அணுகியும் பார்த்தான் பிறகு விடுதியில் கொண்டு வந்து சேர்த்து விட்டான்.

    இப்பொழுது திலகாவிற்கு இருபத்தி மூன்று வயது ஆகிறது இதுவரை அவர்களை குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை அவர்களை கண்டுபிடிக்கவும் இயலவில்லை ஆகவே அப்படியே இருந்து விட்டாள்.

    திலகாவின் பெற்றோர்கள் லாரியிலோ பஸ்ஸிலோ அடிபட்டு இறந்து விட்டார்களா மோதி அல்லது ட்ரெயின் தண்டவாளத்தை கடக்கும்போது இருந்தார்களா அல்லது கட்டிட வேலை செய்யும் பொழுது ஏதாவது விபத்து ஏற்பட்டு இருக்குமா என பல்வேறு யூகங்கள் தான் செய்ய முடிந்தது அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் ஊருக்கு வந்திருப்பார்கள் தன் செல்ல மகளை பார்த்திருப்பார்கள் ஆனால் இதுவரை வந்ததில்லை.

    ஆகவே திலகாவை தொடர்ந்து தன் வீட்டில் வைத்திருக்க இயலாத ஏழ்மையான தாய் மாமனின் மனைவி கொடூரமானவள் கோபக்காரி.

    நம்ம பசங்க ரெண்டு பேர வளத்தறதே நம்மாள முடியல இவள வேற கொண்டுவந்து வீட்டில் வச்சிக்கிட்டு என்ன பண்றது ஏதாவது ஒரு விடுதியில கொண்டு போய் சேர்த்துடு இல்லாட்டி எனக்கு கெட்ட கோபம் வரும் என்றாள்.

    நீங்க போய் வேலை செய்ற அந்த தனியார் பள்ளியில என்ன பெரிய உத்தியோகமா பண்றீங்க பியூன் வேலை செய்றீங்க அவங்க மாச சம்பளம் கூட ஒழுங்கா தருவதில்லை வீட்ல அரிசி பருப்புக்கு திண்டாட்டம் இப்படி இருக்க இந்த சனியனை எதுக்கு கொண்டு வந்திங்க.

    சீக்கிரம் இவள வேற எங்காவது கொண்டு போய் சேர்த்திடுங்க என அவள் ஒவ்வொரு நாளும் நச்சரிப்பதை தாங்க முடியாமல் முத்து .

    சேலத்தில் இயங்கும் ஓர் தனியார் சமூக நிறுவனத்தின் விடுதியில் குழந்தைகள் காப்பகத்தில் கொண்டு போய் சேர்த்தான்.

    மாசத்துக்கு ஒரு தடவை வந்து உன்னை பார்ப்பேன் என்று திலகாவிடம் சொன்னான்.

    ஒவ்வொரு மாதமும் அவரவர்களின் குழந்தைகளை பார்க்க பெற்றோர்களோ உறவினர்களோ வந்து பார்த்து தின்பண்டங்களை கையில் கொடுத்து அவர்களை அரவணைத்து முத்தமிட்டு செல்வது அங்கே வழக்கமாய் இருந்தது.

    இவளும் ஆவலோடு ஒவ்வொரு மாதமும் ஒன்னாம் தேதி ஆனதும் தன்னைப் பார்க்க தன் தாய் மாமன் வருவார் கையில் தனக்கு தேவையான தின்பண்டங்களை எல்லாம் வாங்கி வருவார் என எதிர்பார்த்து நொந்து போய் அழுது தனிமையில் கண்ணீர் சிந்தியதுதான் மிச்சம்.

    எதற்கு மாமா மாசமானால் வந்து உன்னை பார்ப்பேன் என பொய் சொன்னார் அவர் மீது அவளுக்கு கோபம் பற்றிக் கொண்டது.

    தன் பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள் எல்லாம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    சிறுவயதிலிருந்தே அவள் தான் வாழும் வாழ்க்கையின் மீது சலிப்பையும் விரக்தியையும் கொண்டிருந்தாள்.

    திலகாவுக்கு எங்கும் எதுவும் யாரையும் பிடிக்கவில்லை வேறு வழி இல்லாமல் அந்த ஹாஸ்டலிலே உப்பு சப்பில்லாமல் போடும் உப்புமாவையும் சாப்பாட்டையும் சாப்பிட்டு காலத்தை கரைத்துக் கொண்டிருந்தாள்.

    அந்த ஹாஸ்டலில் பெண் பிள்ளைகளை பராமரிப்பதற்கு ஆண்கள் பெண்கள் என பாரபட்சம் இன்றி வார்டன்கள் இயங்கி வந்தார்கள்.

    அந்த வார்டன்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று சொல்லிவிட முடியாது சிலர் கோபக்காரர்களாக சிலர் மோசமான நடத்தை உள்ளவர்களாக காணப்பட்டார்கள்.

    எப்படியோ கஷ்டப்பட்டு அந்த ஹாஸ்டலிலே அவள் வளர்ந்தாள் அந்த விடுதியை நடத்தி வரும் ஸ்தாபகர் தங்கமானவர்.

    விடுதிக்கு வரும் உதவிப் பணம் குறைந்து போனதால் தான் உணவு வகைகளிலே சில மாற்றங்கள் அங்கே ஏற்பட்டது தரமான உணவை கொடுத்து வந்தவர்கள் வரும் நாட்களில் தரம் குறைந்த உணவுகளை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள்.

    காரணம் அவர்களுக்கு வரும் உதவிகள் பல நிறுத்தப்பட்டது இருந்தாலும் சேவை மனப்பான்மை கொண்ட ஸ்தாபகர் விடாமல் தொடர்ந்து அந்த விடுதியை நடத்தி வந்தார்.

    இதுவரை அந்த விடுதியை குறித்து வெளியே எந்த கெட்ட பெயரும் இல்லை இருந்தாலும் உள்ளே இருக்கும் சில ஆண் வார்டன்களின் செயல்பாடுகள் மோசமாய் இருப்பதை உள்ளே இருப்பவர்கள் அறிந்திருந்தார்கள்.

    அது மேலிடத்திற்கு செல்ல அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

    திலகாவுக்கு அந்த ஹாஸ்டலிலே நெருக்கமாய் இனிமையாய் பேசக்கூடிய தோழி ஒருவள் இருந்தாள் அவள் பெயர் தேவி.

    அந்த தேவிக்கு ஏற்பட்ட அந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கும் பொழுது அவன் மீது கோபம் உண்டாயிற்று அதே நேரத்தில் அவன்

    Enjoying the preview?
    Page 1 of 1