Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சுடர் விளக்கு
சுடர் விளக்கு
சுடர் விளக்கு
Ebook152 pages55 minutes

சுடர் விளக்கு

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாராயணன் வீடு அவரது மனைவி பாக்கியம் பிறந்த வீடும் வசதியானது புகுந்த வீடும் வசதியாய் வாழ்ந்திட அகங்காரம் தலையில் ஏறி உட்கார்ந்துக் கொண்டது தன்னை போல் பணம் உள்ளவர்களிடம் மட்டுமே சினேகிதம் வைத்துக்கொள்வாள். பணத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அவர்களுக்கு சொந்தமான இரண்டு ஆயில்மில்களும் ஒரு பெரிய ஜவுளிகடையும் இருந்தது இதுபோதாதென நாராயணன் பெயரில் சிட்பண்ட் என்ற சீட்டு கம்பெனி நடத்தினர் அது நம்பர ஒன் கம்பெனியாக மக்களிடம் பரவி இருந்ததால் வாடிக்கையாளர்கள் பெருகிக் கொண்டிருந்தனர்.
 நாராயணன் வீட்டுக்கு ஒரே பையன் உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லை அது போன்றே பாக்கியமும் ஆனால் இவர்களுக்கு அர்ஜுனன் பரதன் என்று இரு பையன்களும் சுபாஷினி என்று ஒரு பொண்ணும் இருந்தனர். சுபாஷினி அவர்கள் வீட்டில் எல்லோருக்கும் செல்லப் பெண் அன்னை அண்ணன்கள் இருவருமே தங்கையின் மீது அதிகமாக பாசம் வைத்திருந்தனர் அதனாலேயே தன் தங்கையின் விருப்பப்படி மதுரை பாத்திமா கல்லூரியில் சேர்ந்து ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்தனர். அப்போதுதான் வெளி உலகம் பற்றி நன்கு தெரியும் என எண்ணினார்கள்.
 பையன்கள் இருவரும் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும் வேலைக்கு போகாது தங்கள் தொழிலையே அப்பாவுடன் செய்து பார்த்தனர் நாராயணனும் அவரது பிள்ளைகள் இரண்டு பேரும் அப்பாவைப் போல் பொறுப்பையும், நிதானமும் கொண்டு இருந்தனர். ஆனால் பாக்கியம் அவர்களை எல்லாம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். அதேபோன்று சுபாஷினியும் இருந்தாள். யாரையும் தூக்கி எறிந்து பேசும் குணம், அலட்சியம், பணத்திமிர் என்று இருந்தாள்.
 சுபாஷிணிக்கும், கல்லூரியில் மலர்விழியைத் தவிர மற்ற தோழிகள் எல்லாம் அவருடைய பணத்திற்காக அவளிடம் சினேகிதம் வைத்திருந்தனர். அவளை யாரும் கண்டிக்கவில்லை. இன்னும் இன்னும் கொஞ்சம்நாளில் சரியாகிவிடும் என்று பேசாத இருந்துவிட்டதால், அவளிடம் தன்னிடம் உள்ள குறை தெரியவில்லை ஆள் பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தாள். துருதுருவென கண்கள், செழுமையான கண்ணங்கள் ஆணவத்தை எடுத்துக்காட்டும் இதழ்கள் நடுத்தரமான உயரம் கொண்டு எதைப்பற்றியும் கவலைப்படாது அலட்சியமாக இருந்தாள்.
 நாட்கள் இயல்பாக கரைந்தன. அர்ஜுனனுக்கு வயதாகிக்கொண்டு வருவதால் பாக்கியம் அவனுக்காக பெண் தேடும் வேட்டையில் இறங்கினார். தன்னை விட அதிகமான வசதியாகவோ, வசதி குறைவாகவோ இல்லாது தனக்கு நிகரானவர்களாகத் தேடினாள்.
 பாக்கியம் தனது மகனுக்கு பெண் தேடும் விஷயம் தெரிந்து சில பணக்காரர்கள் வலியவே சென்று பேசி, தங்கள் பெண்ணை தருவதாக வந்தனர். அவர்களை எல்லாம் மறுத்துவிட்டார் பெண்பார்க்கும் விபரத்தை தங்கள் குடும்பத்தாருடன் தெரிவித்தபோது மற்ற விஷயங்களில் அடங்கிப் போனவார்கள் இதில் உடன்பாடில்லை.
 அர்ஜுனன் தெளிவாக சொல்லிவிட்டார். எனக்கும் பெண் பிடிக்கணும் அப்படி இருந்தால்தான், திருமணம் செய்வேன். உங்க ஆசைக்காகவும் கௌரவத்துக்காகவும், திருமணம் செய்யமாட்டேன் என்று உறுதியாக சொல்ல, அதை மற்ற இரு ஆண்களும் ஒத்துக்கொண்டனர்.
 இதனால், பாக்கியத்திற்கு உள்ளூர கோபம் வந்தாலும் இதை காட்ட சந்தர்ப்பம் சரி இல்லை என்பதை உணர்ந்து மௌனம் கடைபிடித்தவர். சில நிமிடங்கள் சென்று சரி, உங்கள் இஷ்டம் இன்றே தரகர் கந்தசாமிக்கு போன் பண்ணி சொல்றேன் என்று முற்றுப்புள்ளி கொண்டு வந்தாள்.
 சுபாஷினியுடன் படித்த மலர்விழிக்கு மதுரைக்கு அருகே உள்ள கிராமம். அவளுக்கு பெற்றோர்கள் இல்லை. ஒரு விபத்தில் பெற்றோர்கள் இறந்துவிட, தன் பெரியப்பாவின் ஆதரவில் வளர்ந்து வந்தார் பெரிய அம்மாவும் அவரது இரண்டு பிள்ளைகளும் மலர்விழி தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக பாவித்து வித்தியாசமாக வித்தியாசமில்லாமல் நடந்துக் கொண்டனர்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 16, 2023
ISBN9798223299325
சுடர் விளக்கு

Read more from Prema Rathnavel

Related to சுடர் விளக்கு

Related ebooks

Reviews for சுடர் விளக்கு

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சுடர் விளக்கு - Prema Rathnavel

    1

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர் ஆலவாய் நகர். என்றும் மீனாட்சி பட்டணம் என்றும் பலரால் பெருமை பேசப்படும், மதுரை மாநகரம் தூங்காநகரம் என்று பெயர் பெற்ற நகரம். அரசியல் வளர்ச்சியாலும் சினிமாத்துறை வளர்ச்சியாலும் பங்கு பெற்ற நகரம். புகழ் பெற்ற திருமலை நாயக்கர் மஹால் இங்கு உள்ளது. பெண்களும் அரசாட்சி புரியலாம் என்பதற்கேற்ப ராணி மங்கம்மாள் ஆண்ட ஊர். இவ்வூர் மக்கள், மிகவும் மரியாதை தருபவர்கள். மதுரை என்று சொல்லும் போது மனதில் ஓர் மகிழ்ச்சி உண்டாகும்.

    மதுரை முனியாண்டி விலாஸ் பிரியாணியும் ஜிகர்தண்டா அம்சவல்லி பவன் ரோஸ் மில்க் மதுரை பரோட்டாவும் மிகவும் புகள் வாய்ந்ததாக மதுரை மல்லிகைப்பூ மிகவும் பிரசித்தம் சென்னையைப் போன்று பூவை எல்லாம் அளந்து அளந்து தராசு எண்ணிக்கையில் நூறு இருநூறு என்னும் எண்ணிக்கைதான் கொடுப்பார்கள் மல்லிகை பூவை கட்டி வைத்திருக்கும் அழகு அதை பார்ப்பவர்களுக்கு வாங்கத் தூண்டும்.

    ஊருக்கே அருள்புரியும் மீனாட்சி அம்மன் கோவில் அதைச்சுற்றிலும் சித்திரை ஆடி ஆவணி மாசி போன்ற தமிழ் மாதங்களின் பெயர்களை விதிகள் என்று சிறப்பு வாய்ந்த நகரம் கற்புக்கரசி கண்ணகி கோபம் கொண்டு மதுரையை எரித்த வரலாறு உண்டு இந்த வரலாற்றின் மூலம் நீதிநெறி தவறாத மன்னர்கள் மதுரையை ஆண்டு வந்தார்கள் என தெரிந்துக் கொள்ளலாம் சிவபெருமானின் திருவிளையாடல்கள் நடைபெற்ற ஒரு திருவிளையாடல் ஒன்றான சிவன் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் இன்றும் புட்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    புட்டுத்தோப்பு ரோடு என்ற பெயர் கொண்ட இடத்தில் வந்து அம்மனுக்கு சிலை வைக்கப்பட்டு கோவில் திருவிழா கொண்டாடப்படுகிறது வண்டியூர் மாரியம்மன் கோவில் தை மாதம் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது அதுமட்டுமல்லாது குமரகுரு கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் பழமுதிர்சோலை இங்குதான் உள்ளது.

    இவ்வளவு புகழ் பெற்ற மதுரை நகரில் சோமசுந்தரம் காலனி சுருக்கமாக எஸ் எஸ் காலனி என்று அழைப்பர் இங்கு கோவில்களுக்கும் பஞ்சமில்லை வருடம் தோறும் இங்கு உள்ள தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெறும் இங்குள்ள ரயில்வே காலனியில் ஆரம்பத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் அமைப்பு ஓம் என்று எழுதி வடிவாக அமைந்திருக்கிறது என்பர்.

    இங்குள்ள எஸ்டஸ் காலனியில் உள்ள குருமூர்த்தியின் வீடு இவர் தென்காசி ரயில்வே வெயில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் அவரது மனைவி நர்மதா பெரிய அளவில் இருந்தாலும் ஏனோ பணிக்கு செல்லவில்லை. அவர்களது மகன் கண்ணன் எம்.டெக் முடித்து சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார் இவர்களது மகள் தேவதர்ஷினி பிஎட் முடித்துள்ள இவள் அங்குள்ள S.B.B.A பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார் சிறு குடும்ப சீரான வாழ்வு என வாழ்ந்து கொண்டிருந்தனர்.

    இதுவரை கோயம்புத்தூரில் பணிபுரிந்துக் கொண்டிருந்த குருமூர்த்தி மூன்று மாதத்திற்கு முன் தான் மதுரைக்கு மாற்றலாகி வாழ்ந்து வந்தார் அன்று ஞாயிற்றுக்கிழமை குருமூர்த்தி ஓய்வு. ஓய்வாக அமர்ந்து செய்தித்தாளை வாசித்துக்கொண்டிருந்த அவரது மனைவி கையில் காபியை ஆற்றிக்கொண்டு பணிவாய் அவர் அருகில் வந்தமர்ந்தார்.

    தன் மனைவியை தன் அருகே வந்து அமர்ந்தாள் ஏதோ பெரிய விஷயம் பேசப் போகிறார் என்பதை தன்னுடைய அனுபவத்தை தெரிந்துக் கொண்டவர் காபியை வாங்கி பருகியவர் தன் மனைவியை பார்த்தால் அவர் காபி குடிக்கும் வரை அமைதியாக இருந்து தன் மனைவியிடம் காபி குடித்து விட்டு மீதியை அவளிடம் நீட்டினான் மனைவியும் அதே மகிழ்ச்சியுடன் வாங்கிப் பருகினார் இது அவர்களுக்கிடையே ஆரம்பம் தொட்டு வரும் பழக்கம் இருந்தது குருமூர்த்தி சிரித்துக்கொண்டே -

    உம். சொல்லு என்ன விஷயம்?

    உம் நானென்ன புதுசா விஷயம் சொல்லப் போறேன் என்றவர்.

    நம்ம பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணனும் தரகர்கிட்டே சொல்லி இருக்கேன் இன்றைக்கு மாலை வருவதாக சொல்லி இருக்கிறார் நீங்கள் எங்கேயும் வெளியே போகாமல் வீட்டிலேயே இருங்கள் என்றார்.

    அப்படியா சந்தோஷம், அவர் வரட்டும் பார்க்கலாம்!

    இந்த பேச்சு பக்கத்து அறையில் படுத்து இருந்த மகள் தேவதர்ஷனி காதுகளிலும் விழுந்தன தேவதர்ஷினியை இனி சுருக்கமாக தேவி என்று அழைக்கலாம் அன்று பள்ளி விடுமுறை அதனால் சற்று தாமதமாக எழுலாம் என்று படுத்திருந்தாள் தன் பெற்றோர்கள் பேசியதைக் கேட்ட தேவி இந்த அம்மாவுக்கு வேறு வேலையே கிடையாதா! எப்ப பாரு. கல்யாணம் பேச்சையே பேசிக்கொண்டு ஏன்தான் அவசரமோ என்னை வெளியே அனுப்பு என யோசித்தாள்.

    தேவி பெயருக்கு ஏற்றால் போல் மூன்று தேவியருள் ஒன்றான லட்சுமி தேவி போன்று இருந்தாள். அவளை பார்த்தால் எல்லோரும் எல்லோருக்குமே பிடிக்கும். தன்னுடைய 25 வயதில் அடி எடுத்து வைத்திருந்தால் அவளுக்கு தன் கணவனாக வரப்போகிறவரைப் பற்றி பெரிய கனவெல்லாம் இல்லை நல்ல படிப்பு வேலை குணம். இவை இருந்தால் போதுமானது என்றே நினைத்தாள். அது தவிர இப்ப என்ன அவசரம். இன்னும் ஒரு வருடமாவது போகட்டும் என்று நினைத்தாள். பெற்றோர்களிடம் கண்டிப்புடன் சொல்லிடணும்னு எண்ணிக்கொண்டே படுக்கையிலிருந்து எழுந்தாள்.

    2

    விருதுநகர்: நாராயணன் வீடு அவரது மனைவி பாக்கியம் பிறந்த வீடும் வசதியானது புகுந்த வீடும் வசதியாய் வாழ்ந்திட அகங்காரம் தலையில் ஏறி உட்கார்ந்துக் கொண்டது தன்னை போல் பணம் உள்ளவர்களிடம் மட்டுமே சினேகிதம் வைத்துக்கொள்வாள். பணத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அவர்களுக்கு சொந்தமான இரண்டு ஆயில்மில்களும் ஒரு பெரிய ஜவுளிகடையும் இருந்தது இதுபோதாதென நாராயணன் பெயரில் சிட்பண்ட் என்ற சீட்டு கம்பெனி நடத்தினர் அது நம்பர ஒன் கம்பெனியாக மக்களிடம் பரவி இருந்ததால் வாடிக்கையாளர்கள் பெருகிக் கொண்டிருந்தனர்.

    நாராயணன் வீட்டுக்கு ஒரே பையன் உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லை அது போன்றே பாக்கியமும் ஆனால் இவர்களுக்கு அர்ஜுனன் பரதன் என்று இரு பையன்களும் சுபாஷினி என்று ஒரு பொண்ணும் இருந்தனர். சுபாஷினி அவர்கள் வீட்டில் எல்லோருக்கும் செல்லப் பெண் அன்னை அண்ணன்கள் இருவருமே தங்கையின் மீது அதிகமாக பாசம் வைத்திருந்தனர் அதனாலேயே தன் தங்கையின் விருப்பப்படி மதுரை பாத்திமா கல்லூரியில் சேர்ந்து ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்தனர். அப்போதுதான் வெளி உலகம் பற்றி நன்கு தெரியும் என எண்ணினார்கள்.

    பையன்கள் இருவரும் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும் வேலைக்கு போகாது தங்கள் தொழிலையே அப்பாவுடன் செய்து பார்த்தனர் நாராயணனும் அவரது பிள்ளைகள் இரண்டு பேரும் அப்பாவைப் போல் பொறுப்பையும், நிதானமும் கொண்டு இருந்தனர். ஆனால் பாக்கியம் அவர்களை எல்லாம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். அதேபோன்று சுபாஷினியும் இருந்தாள். யாரையும் தூக்கி எறிந்து பேசும் குணம், அலட்சியம், பணத்திமிர் என்று இருந்தாள்.

    சுபாஷிணிக்கும், கல்லூரியில் மலர்விழியைத் தவிர மற்ற தோழிகள் எல்லாம் அவருடைய பணத்திற்காக அவளிடம் சினேகிதம் வைத்திருந்தனர். அவளை யாரும் கண்டிக்கவில்லை. இன்னும் இன்னும் கொஞ்சம் நாளில் சரியாகிவிடும் என்று பேசாத இருந்துவிட்டதால், அவளிடம் தன்னிடம் உள்ள குறை தெரியவில்லை ஆள் பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தாள். துருதுருவென கண்கள், செழுமையான கண்ணங்கள் ஆணவத்தை எடுத்துக்காட்டும் இதழ்கள் நடுத்தரமான உயரம் கொண்டு எதைப்பற்றியும் கவலைப்படாது அலட்சியமாக இருந்தாள்.

    நாட்கள் இயல்பாக கரைந்தன. அர்ஜுனனுக்கு வயதாகிக்கொண்டு வருவதால் பாக்கியம் அவனுக்காக பெண் தேடும் வேட்டையில் இறங்கினார். தன்னை விட அதிகமான வசதியாகவோ, வசதி குறைவாகவோ இல்லாது தனக்கு நிகரானவர்களாகத் தேடினாள்.

    பாக்கியம் தனது மகனுக்கு பெண் தேடும் விஷயம் தெரிந்து சில பணக்காரர்கள் வலியவே சென்று பேசி, தங்கள் பெண்ணை தருவதாக வந்தனர். அவர்களை எல்லாம் மறுத்துவிட்டார் பெண்பார்க்கும் விபரத்தை தங்கள் குடும்பத்தாருடன் தெரிவித்தபோது மற்ற விஷயங்களில் அடங்கிப் போனவார்கள் இதில் உடன்பாடில்லை.

    அர்ஜுனன் தெளிவாக சொல்லிவிட்டார். எனக்கும் பெண் பிடிக்கணும் அப்படி இருந்தால்தான், திருமணம் செய்வேன். உங்க ஆசைக்காகவும் கௌரவத்துக்காகவும், திருமணம் செய்யமாட்டேன் என்று உறுதியாக சொல்ல, அதை மற்ற இரு ஆண்களும் ஒத்துக்கொண்டனர்.

    இதனால், பாக்கியத்திற்கு உள்ளூர கோபம் வந்தாலும் இதை காட்ட சந்தர்ப்பம் சரி

    Enjoying the preview?
    Page 1 of 1