Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அன்பின் விழியே..!
அன்பின் விழியே..!
அன்பின் விழியே..!
Ebook121 pages45 minutes

அன்பின் விழியே..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கூடல்நகர் பட்டாளத்துக்காரர் வீடு என்று ஊரால் வழங்கப்படும் அந்த வீட்டின் எஜமானியம்மா, தன் கணவர் கண்ணுச்சாமி படத்தின் முன் நின்று கைகூப்பி வணங்கினார். தினசரி காலை எழுந்து குளித்துவிட்டு தன் கணவர் படத்தின் முன் நின்று கை தொழுதுவிட்டு பின் மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பிப்பார். மீனாட்சி அம்மாள் இவரின் கணவர் ராணுவத்தில் சேர்ந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் பணியாற்றிய பின் ஓய்வு பெற்று வந்து விவசாயத்தை கவனித்தவர்.
 கண்ணுச்சாமியின் அப்பா பெரிய நிலச்சுவான்தார். அவரை எல்லோரும் பண்ணையார் என்றே அழைப்பர். அவருக்கு பின் அவரது மகனையொட்டி பட்டாளத்துக்காரர் வீடு என்று பெயராயிற்று. அவர் இறந்து 20 வருடங்களுக்கு மேலாகியும் மீனாட்சி அம்மாள் அந்த பழக்கத்தை விடாது தொடர்ந்து வருகிறாள். மீனாட்சி அம்மாவுக்கு 75 வயது இருக்கும். ஆனாலும் இன்னும் மிடுக்கு குறையாது, சுறுசுறுப்புடன் எல்லோரையும் அதட்டி வேலை வாங்குபவர்.
 மகன் சிவநேசன், மருமகள் பவானி, பேரக் குழந்தைகளாக அரவிந்தன், சுதாகரன், கயல்விழியுடன் குடும்பம் நடத்தி வருபவர். சிவநேசன் மீனாட்சி அம்மாவின் ஒரே மகன். தன் அம்மாவின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாதவர். மருமகள் பவானியும் அப்படியே. மீனாட்சி அம்மா வெளிப் பார்வைக்கு சற்று கண்டிப்பானவராக தெரிந்தாலும், மனதளவில் மிகவும் கருணை நிறைந்தவர்.
 அங்கு வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் ரொம்ப காலமாக வேலை செய்பவர்கள். மீனாட்சி அம்மா தன் மருமகளை பவானி என்று உரக்க குரலில் கூப்பிட, "இதோ வந்துட்டேன் அத்தை" என்று மறுமொழி கூறியவாறே அவர் முன்னே வந்து நின்றாள்"இன்னிக்கு சாயங்காலம் 5 மணிக்கு அரவிந்தனுக்கு பொண்ணு பார்க்க போறது தெரியுமில்லே. மசமசன்னு நிக்காம சீக்கிரமா வேலையை முடிச்சுட்டு கிளம்பப் பாரு" என்றவர், அடுத்த வேலையை கவனிக்கச் சென்றார். அவர் சாதாரணமாக சொல்வது கூட கட்டளையிடுவது போல் தான் இருக்கும்.
 வீட்டின் பின்புறத்தில் கிணறும், அதைச்சுற்றி வாழை, தென்னை, மா, முருங்கை, கொய்யா, போன்ற மரங்களும், வீட்டின் முன்னே இரு திண்ணைகளும், அதனையொட்டி பெரிய வேப்ப மரமும் இருந்தது. பக்கவாட்டில் ஒரு பெரிய வராண்டா மாதிரி இருந்த இடத்தில் சில பசு மாடுகள் கட்டப்பட்டிருந்தன. எந்நேரமும் வேலை இருந்துகொண்டே தான் இருக்கும். அதற்கேற்ப வேலையாட்களும் இருந்தார்கள். இது போக வயக்காடுகளும், வாழை, தென்னை, மா போன்ற தோப்புகளும் என்று பஞ்சமில்லாமல் இருந்தது.
 "ஏலேய் ஏழுமலை, தென்னந்தோப்பிலிருந்து வெட்டி கொண்டு வந்த தேங்காய்களை வழக்கம்போல் தேங்காய் மண்டிக்காரர் குருசாமி கடைக்கு அனுப்பி வையுங்க. அப்டியே நம்ம வைரவன் கடைக்குப் போய் போன மாசம் வாழைக்காய் லோடு அனுப்பியதற்கான பணத்தை வாங்கிட்டு வீட்டுக்கு எதுவும் தேவையான்னு மருமககிட்டே கேட்டுட்டு போ" என்று சொல்ல, "ஆகட்டும்மா" என்றான் பவ்யமாய் ஏழுமலை.
 இதை கேட்டுக் கொண்டிருந்த மற்ற வேலைக்காரர்கள் பவானியிடம், "இந்த வயதிலும் உங்க அத்தைக்கு ஞாபகம் ஜாஸ்தி தான். அந்த பழைய மிடுக்கு குறையவில்லை. தான் ஒரு பட்டாளத்துக்காரர் மனைவின்னு சொல்லாம சொல்றாங்கன்"னு கூற பவானியும் பெருமையுடன் ஒத்துக் கொண்டாள்.
 சாயங்காலம் 5 மணி, குடும்பமே பெண் பார்க்க புறப்பட்டது. பவானியை பார்த்த மீனாட்சியம்மாள், "என்னடி இது பெண் பார்க்க இப்படியா போவது" என்றவர் தன் பீரோவைத் திறந்து கல் முகப்பு வைத்த 3 வடச்செயினை எடுத்து கொடுக்க, பவானி மறுக்காமல் வாங்கி போட்டுக் கொண்டாள்.
 எல்லீஸ் நகரில் இருந்த லட்சுமணப் பெருமாள் வீடு மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. மகள் காதம்பரியை இன்று பெண் பார்க்க வருகிறார்கள். மனைவியையும், மகளையும் சீக்கிரம் சீக்கிரம் என விரட்டிக் கொண்டிருந்தார். அவர்கள் எதிர்பார்த்த நேரத்திற்கு சரியாக மீனாட்சியம்மா குடும்பம் அங்கு சென்றது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798215764275
அன்பின் விழியே..!

Read more from Prema Rathnavel

Related to அன்பின் விழியே..!

Related ebooks

Related categories

Reviews for அன்பின் விழியே..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அன்பின் விழியே..! - Prema Rathnavel

    1

    நான்மாடக்கூடல், தூங்கா நகரம் எனப் பெயர் பெற்ற மதுரை மீனாட்சி கல்லூரியில் விதவிதமான உடைகளுடன் மாணவிகள் நடந்து செல்வதை பார்க்கும்போது உள்ளம் பரவசமடைகிறது. கல்லூரி முடிவதற்கு இன்னும் கொஞ்ச நாட்களே இருந்த நிலையில் ஆங்காங்கே மாணவிகள் தன் சிநேகிதிகளுடன் கூட்டம் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

    அதில் மேனகா, மாளவிகா, மாயா, சாந்தினி, ஆஷிகா இவர்கள் ஐந்து பேரும் தோழிகள். கல்லூரி முடியப் போகிறது. நாம் இனிமேல் இப்படி சந்திக்க முடியாது என வருத்தத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

    எல்லாருமே நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். மேற்கொண்டு, என்ன செய்வது என்பது பற்றி பலவிதமாக பேசிக் கொண்டிருந்தார்கள். கடைசியில் திருமணம் பற்றி பேச்சு வந்தது.

    தோழிகளில் மாளவிகா எப்போதுமே தன் அண்ணன், அண்ணியைப் பற்றி உண்மையாகவும், பெருமையாகவும் பேசுவாள். எங்கண்ணன் இதை வாங்கி தந்தார், அண்ணி எனக்கு பிடிக்கும்னு இதை செய்து தந்தார்கள் என கூறுவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் சாந்தினிக்கு மட்டும் ஏக்கமாகவே இருந்தது. அவள் வீட்டுக்கு ஒரே செல்லப் பெண். உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லாதது அவளுக்கு மிக்க வருத்தமாகவும், ஏக்கமாகவும் இருக்கும். இன்னொரு மாணவியான மாயா, ஏய் மாளவிகா, உங்க வீட்டிலுள்ள அண்ணன், அண்ணிகள் மாதிரி எல்லோருக்கும் இருந்து விட்டால் பிரச்சினையில்லை. என் வீட்டில் என் அண்ணன் கல்யாணம் முடிந்த மறு மாதமே எங்களை பற்றி நினைக்காமல் தனிக்குடித்தனம் போயிட்டான். என் பெற்றோர்கள் என்னையும், தம்பியையும் கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர் என்று கூறி ஆதங்கப்பட்டாள்.

    ஆமாண்டி வீட்டுக்கு வீடு மனிதர்கள் வேறுபட்டு இருக்கிறார்கள் என்றனர். அதை கேட்டுக் கொண்டிருந்த மேனகா, பேச ஆரம்பித்தாள். இந்த மேனகா இருக்காளே, தன்னை ஒரு அறிவு ஜீவியாக காட்டிக் கொள்ள முனைவாள். அதனாலே, அவளை எல்லோரும் நூத்துக் கிழவின்னு கேலி பண்ணுவார்கள். அடிக்கடி, ஒரு பழமொழியோ, கதையோ கூறி விளக்கம் அளிப்பாள். அதனால் சமயங்களில் அடி வாங்குவதுமுண்டு.

    அன்றும் அவள் பேச ஆரம்பிக்க, ஏய் சும்மாயிருங்கடி, நம்ம நூத்துக் கிழவி என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம் என்று மற்றவர்கள் கூறினர்.

    யாரை மறந்தாலும் உன்னை மட்டும் மறக்கவே முடியாதுடி என்றனர்.

    ஏய் இதுதானே வேண்டாங்கிறது என்று கூற, போகட்டும், நீ என்ன சொல்ல வந்தேன்னு சொல்லு என்று கேட்க, சொல்லுவேன். யாரும் அடிக்க வரக்கூடாது என்றாள்.

    நாங்கள் அடிப்பதும், அடிக்காமல் இருப்பதும் நீ சொல்ற விஷயத்தை பொறுத்திருக்கு என்றனர்.

    நீங்க பேசினதையெல்லாம் கேட்ட பின்பு எனக்கொண்ணு தோணுதுடி என்றவள், ஐந்து விரலும் ஒரே மாதிரியா இருக்கு என ஆரம்பிக்க...

    ஆகா, இது யாருக்காவது தெரியுமா? அடிங்கடி அவளை என கோரஸாக கூறினர்.

    நான் சொல்றத முழுசா கேளுங்கடி, ஒரே மாதிரி இல்லாத ஐந்து விரல்களும் கூடினால்தான் நம்மால் எந்த வேலையும் செய்ய முடியும். ஏன் சாப்பிடக்கூட முடியும். ஒரு விரலில் அடிபட்டால் கூட, நமக்கு எவ்வளவு சிரமமாக இருக்கு. அது போலத்தான் வீட்டில் பல பேர் பல சிந்தனையிருந்தாலும் ஒற்றுமை என்னும் பண்பு இருந்தால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் என்றவள் தொடர்ந்து பேசினாள்.

    எப்படியிருந்தாலும் நாம் திருமணம் செய்து கொள்ளத்தான் போகிறோம். நாம் போகும் குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்க நாம் ஏன் முயற்சிக்க கூடாது? என்றாள்.

    இதைக் கேட்ட மற்றவர்கள், நீ சொல்றது கேட்க நல்லாருக்குடி, ஆனால் நடைமுறைக்கு ஒத்து வருமா?

    ஏன் வராது? எல்லாத்துக்கும் மனசுதான் காரணம். நாமெல்லாம் படித்தவர்கள், சந்தர்ப்பத்திற்கேற்றவாறு புத்திசாலித்தனமாகவும், விட்டுக் கொடுத்தும், அனுசரித்தும் போனால் எல்லாம் நன்றாகத்தான் இருக்கும்.

    ஆமாம்டி நாம் மட்டும் போனால் சரியாக வருமா? குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் புரிந்து கொண்டு நடக்கணுமே என்று ஆஷிகா கேட்டாள்.

    நீ சொல்றதும் சரிதான் என்றாள் மாயா.

    உடனே மேனகா, எதுவுமே எடுத்தவுடனே நடந்துவிடாது. கொஞ்ச காலம் போய் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டும், நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் நடந்தால் நிச்சயம் நடக்கும் என்றாள்.

    சில குடும்பங்களில் அமைதியாக போகிறவர்களை ஆட்டி படைக்கிறார்களே. அதற்கு என்ன செய்வது? என்று சாந்தினி கேட்டாள்.

    அதற்குத்தான் பொறுமையும், நம்பிக்கையும் தேவை என்றாள். இரு கை தட்டினால் ஓசை, ஆனால் இரண்டு கைகள் குலுக்கினால் அங்கே நட்போ, அன்போ மலரும்.

    சரி நமக்குள் ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம். நாம் திருமணமாகி போகிற குடும்பத்தில் நம்மால் குடும்பத்தில் பிளவு ஏற்படாதவாறு கவனமாக நடப்பதுடன் ஒற்றுமையாக இருப்பதற்கும் முயற்சி பண்ணுவோம் என்றாள் மேனகா.

    நாம் பிறரிடம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதையே நாம் பிறருக்கு கொடுக்கும்போது அங்கு நட்பு தானாக மலரும் என்றாள் மாளவிகா.

    எல்லோரும் இதை ஒத்துக் கொண்டனர். பின் பல விஷயங்களை பேசி கலைந்தனர்.

    2

    கூடல்நகர் பட்டாளத்துக்காரர் வீடு என்று ஊரால் வழங்கப்படும் அந்த வீட்டின் எஜமானியம்மா, தன் கணவர் கண்ணுச்சாமி படத்தின் முன் நின்று கைகூப்பி வணங்கினார். தினசரி காலை எழுந்து குளித்துவிட்டு தன் கணவர் படத்தின் முன் நின்று கை தொழுதுவிட்டு பின் மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பிப்பார். மீனாட்சி அம்மாள் இவரின் கணவர் ராணுவத்தில் சேர்ந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் பணியாற்றிய பின் ஓய்வு பெற்று வந்து விவசாயத்தை கவனித்தவர்.

    கண்ணுச்சாமியின் அப்பா பெரிய நிலச்சுவான்தார். அவரை எல்லோரும் பண்ணையார் என்றே அழைப்பர். அவருக்கு பின் அவரது மகனையொட்டி பட்டாளத்துக்காரர் வீடு என்று பெயராயிற்று. அவர் இறந்து 20 வருடங்களுக்கு மேலாகியும் மீனாட்சி அம்மாள் அந்த பழக்கத்தை விடாது தொடர்ந்து வருகிறாள். மீனாட்சி அம்மாவுக்கு 75 வயது இருக்கும். ஆனாலும் இன்னும் மிடுக்கு குறையாது, சுறுசுறுப்புடன் எல்லோரையும் அதட்டி வேலை வாங்குபவர்.

    மகன் சிவநேசன், மருமகள் பவானி, பேரக் குழந்தைகளாக அரவிந்தன், சுதாகரன், கயல்விழியுடன் குடும்பம் நடத்தி வருபவர். சிவநேசன் மீனாட்சி அம்மாவின் ஒரே மகன். தன் அம்மாவின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாதவர். மருமகள் பவானியும் அப்படியே. மீனாட்சி அம்மா வெளிப் பார்வைக்கு சற்று கண்டிப்பானவராக தெரிந்தாலும், மனதளவில் மிகவும் கருணை நிறைந்தவர்.

    அங்கு வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் ரொம்ப காலமாக வேலை செய்பவர்கள். மீனாட்சி அம்மா தன் மருமகளை பவானி என்று உரக்க குரலில் கூப்பிட, இதோ வந்துட்டேன் அத்தை என்று மறுமொழி கூறியவாறே அவர் முன்னே வந்து நின்றாள்.

    "இன்னிக்கு சாயங்காலம் 5 மணிக்கு அரவிந்தனுக்கு பொண்ணு பார்க்க

    Enjoying the preview?
    Page 1 of 1