Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naanaliley Kaaleduthu...
Naanaliley Kaaleduthu...
Naanaliley Kaaleduthu...
Ebook218 pages1 hour

Naanaliley Kaaleduthu...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் கணவனின் அன்பை பெறுவதற்காக, வளர்ப்பு மகளுக்கு துரோகம் செய்த சித்தி. அவளையும் மாற்றி மன்னித்து ஏற்றுக்கொண்ட வளர்ப்பு மகள். சித்தி செய்த துரோகம் என்ன? வளர்ப்பு மகள் அதை எவ்வாறு சரி செய்தாள்? சித்திக்கு தன் கணவனின் அன்பு கிடைத்ததா? பார்ப்போம்...

Languageதமிழ்
Release dateFeb 17, 2024
ISBN6580106008796
Naanaliley Kaaleduthu...

Read more from Jaisakthi

Related to Naanaliley Kaaleduthu...

Related ebooks

Reviews for Naanaliley Kaaleduthu...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naanaliley Kaaleduthu... - Jaisakthi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நாணலிலே காலெடுத்து...

    Naanaliley Kaaleduthu...

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 1

    கார் விரைவாகப் போய்க் கொண்டிருந்தது. அப்பா, ஜனனியிடம் ‘ஏம்மா, கல்யாண நாள் நெருங்கிகிட்டே இருக்குது. கல்யாணத்துக்குன்னு நீ எதுவும் புதுசா நகை வாங்கிக்கலியே. இருக்கறதே போதும்ங்கறே... இண்ணைக்கு சாயங்காலம் போய் ஏதாவது வாங்கலாமா?’ என்றார்.

    ஜனனி அப்பாவைத் திரும்பிப் பார்த்து அன்பாகப் புன்னகைத்தாள்.

    ‘இருக்கறதே போதும்ப்பா...’ என்றாள்.

    ‘என்னம்மா நீ புரியாத பொண்ணா இருக்கறே! எல்லாப் பொண்ணுங்களும் கல்யாண சமயத்திலே எவ்வளவு முடியுமோ அவ்வளவு வசூல் செய்வாங்க. நீ என்னம்மா?’ என்றார்.

    டிரைவர் பாலையா சிரித்தார். வெகு நாட்களாக அவர்கள் வீட்டில் டிரைவராக இருக்கிறார்.

    ‘ஐயா... நம்ம ஜனனிம்மாவைப் பத்தித் தெரிஞ்சதுதானே? ஏம்மா ஐயாவோட ஆசைக்காவது ஏதாவது வாங்கிக்குங்க...’ என்றார்.

    ‘சரிப்பா... உங்க இஷ்டம்...’ என்றாள்.

    ‘நல்ல ஜாதி முத்திலே...’ ஒரு செட். செய்யச் சொல்லி ஏற்கனவே ஆர்டர் கொடுத்துவிட்டேன்’ என்று சிரித்தார், நாகமாணிக்கம்.

    ஜனனியும் சிரித்துக்கொண்டாள். ‘சரிம்மா... நீ ஆபிஸ்ல இறங்கிக்க... நான் முக்கியமான ரெண்டு மூணு பேருக்கு அழைப்பிதழ்கள் கொடுக்க வேண்டியிருக்கு, பார்த்துட்டு வந்தர்றேன். ஏதாவது பிராப்ளம்னா செல்லில காண்டாக்ட் செய்’ என்றார் சரிப்பா என்றாள்.

    ஜனனி கன்ஸ்ட்ரக்‌ஷ்ன்ஸ் என்ற பெயரில் கட்டிடம் கட்டிக்கொடுக்கும் நிறுவனம் நடத்திக்கொண்டிருந்தார்கள். தரமான பொருட்களை வைத்து நியாயமான லாபத்தில் கட்டிடம் கட்டிக் கொடுப்பதால் அவர்களுக்கு நல்ல பெயர் இருந்தது.

    என்னதான் பணப்புழக்கம் குறைந்து விட்டது என்ற போதிலும் கோயமுத்தூரில் அவர்களுக்கு தொடர்ந்து வேலைகள் இருந்து கொண்டுதான் இருந்தது.

    ஜனனி சிவில் என்ஜினியரிங் படிப்பு முடித்திருந்தாள், நாகமாணிக்கத்துக்கு ஒரே பெண்.

    ஆனால், மனைவி இளம் வயதிலேயே இறந்து விட்டாள். அக்கா பெண். திருமணத்தின் போதே ஏதோ உடல் நலக் குறைவு. இருந்த போதிலும் அவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஜனனி பிறந்ததற்கு பிறகு உடல்நலம் தேய்ந்து கொண்டே வந்து அவளுக்கு பத்து வயது இருக்கும்போதே இறந்துபோனாள்.

    அப்போது நாகமாணிக்கத்திற்கு 35 வயதுதான். மனைவி மரகதத்துடன் ஒன்றும் சுகமான வாழ்க்கை வாழ்ந்துவிடவில்லை என்பதும், ‘அவர் செய்ததும் தியாகம்தான்’ என்று உணர்ந்த தாயார் கோமதியம்மாள் அவருக்கு மறுதிருமணம் செய்து வைக்க வெகுவாக ஆசைப்பட்டார். நாகமாணிக்கம் மறுத்துவிட்டார். ஆனால் கோமதியம்மாள் சளைக்காமல், தேடிப் பிடித்து உறவில் ஒரு பெண்ணைக் கண்டுபிடித்தார்.

    தாய் தந்தையர் இல்லை. அவளுக்கும் ஏதோ காரணத்தால் குழந்தை பிறக்காது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள ஒரே மகள். முப்பது வயதாகியும் திருமணமாகாமல் இருந்தாள். ஜெகதாம்பாள் என்று பெயர். கோமதி பாலையா எல்லாரும் வற்புறுத்திப் பேசி அவரைச் சம்மதிக்க வைத்தார்கள்.

    ‘அம்மா என்றுதான் ஜனனியும் அழைத்தாள். ஜகதாவும் யாருக்கும் ஒன்றும் குறை வைக்கவில்லை. வீட்டில் முழு நிர்வாகமும் கோமதியம்மாளின் கையில் இருந்ததால் எந்த இடைஞ்சலுக்கும் வழியும் இருக்கவில்லை.’

    வாழ்க்கை லகுவாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. இந்த மாப்பிள்ளை நீலகண்டனைக் கூட ஜெகதாதான் தேர்ந்தெடுத்தார்.

    நடுத்தரக் குடும்பம்... நம்ம கட்டுக்குள்ள இருப்பாங்க... என்று கணவனிடம் பேசிச் சம்மதம் வாங்கினார்.

    ஜனனியிடம் கேட்டபோது ஜனனி ‘அப்பா... அம்மாவும் நீங்களும் எப்படிச் சொன்னாலும் சரி’ என்று சொல்லி விட்டாள். ‘ஆனால் பேர்தான் என்னமோ கர்நாடகமா இருக்கு’ என்றாள் ஜனனி.

    பேர்ல என்னம்மா இருக்கு... வாழப்போற வாழ்க்கையிலதானே இருக்கு... என்று ஜெகதா சொன்னார்.

    ‘ஐயோ சூப்பர் தத்துவம்மா... இது’ என்று கிண்டல் செய்து சிரித்தாள்... ஜெகதாவும் புன்னகைத்துக் கொண்டாள்.

    ஒரு நிமிடம் தீவிரமாக சிந்திப்பவள் போல் நடித்துவிட்டு. ‘ஆமா... இப்ப என்ன நம்ம வீட்டுல நீயும் அப்பாவும் ‘ஓ... நாகா...!’ ‘ஓ... ஜெகதான்னா’ கூப்பிடுறீங்க’ என்று கலகலவெனச் சிரித்தாள்.

    கோமதியம்மாள் ‘பேசாம சாப்பிடுறி!’ என்று ஒரு தட்டுத்தட்டினார். அப்பா மகளின் குறும்பை ரசித்துக்கொண்டார்.

    ஜெகதா கொஞ்சம் அழுத்தமாகவே இருப்பாள். லேசான புன்னகைதான் எதற்கும் பதில். முகத்தை வைத்து எதையுமே கண்டுபிடிக்க முடியாது.

    அதையும் ஜனனி கிண்டல் செய்து சிரிப்பாள். அதற்கும் மர்மப்புன்னகைதான் பதிலாக வரும். ஆனால். ஒருபோதும் ஜனனியின் சுதந்திரத்தில் தலையிட்டதில்லை. அவளுக்கும் அம்மாவிடம் அதுவேண்டும் இதுவேண்டும் என்று கேட்க அவசியமிருக்கவில்லை.

    எது வேண்டுமானாலும் பாட்டியிடம்தான் கேட்பாள். ஆனால் கோமதியம்மாள் பேத்தியைக் கண்டிக்க வேண்டிய சமயங்களில் கண்டித்து நல்ல விதமாகவே வழிகாட்டினார்.

    ஜனனி வளர்ந்த பிறகு யோசித்துப் பார்த்து ‘ஏன் அம்மா தன்னிடம் முழுமையான சுதந்திரம் எடுத்துக்கொள்ள மாட்டேன்’ என்கிறாள் என்று ஒருநாள் பாட்டியிடம் கேட்டாள். பாட்டியம்மாள், ‘அது... அவ ரொம்ப வசதியில்லாத குடும்பத்திலே இருந்து வந்தவ. அந்தக்காலப் பெண். ஆனா நீ அவகிட்டே மரியாதையா... அன்பா ஒரு மகளாகத்தான் நடந்துக்கணும். அவளுக்கும் நம்மளை விட்டா வேறு யாரிருக்கா...?’ என்பார்.

    கார் ஆபிசை அடைந்தது... இறங்குவதற்கு முன்பு ஜனனி அப்பாவிடம் ‘அப்பா அம்மாவிற்கும் ஒரு செட் ஆர்டர் செய்ங்க’ என்றாள். இறங்கினாள்.

    நாகமாணிக்கம் அவளைப் பார்த்து வாஞ்சையாய்ப் புன்னகைத்தார் ‘சரிம்மா என்றார்.’

    கார் நகர்ந்தது.

    நம்ம சின்னம்மா ரொம்ப பெருந்தன்மையான பெண்ணுங்க... என்றார் பாலையா.

    அப்பாவுக்குப் பெருமையாய் இருந்தது.

    அலுவலகத்தில் நுழைந்த உடன் அவளுக்கு வேலை சரியாக இருந்தது.

    காந்திபுரத்தில் ஒரு பெரிய காம்ப்ளெக்ஸ் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

    மணல் லோடு வரவில்லை என்று சூப்பர்வைசரிடமிருந்து போன். ஏற்பாடு செய்தாள்.

    அலுவலகம் பெரிய அலுவலகம். 25 பேருக்கு மேல் வேலை செய்தார்கள். அன்றைக்கு முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு ரிலாக்ஸ்டாக அமர்ந்தபோது டைபிஸ்ட் யசோதா வந்து,

    ‘அம்மா... யாரோ அன்பழகனாம். உங்களை பார்க்கணுமாம்...’ என்றாள்.

    ‘வரச்சொல்லுங்க’ என்றாள்.

    அவன் வந்தான்.

    வணக்கம் சொன்னான்.

    அழகிய தோற்றம், அடர்ந்த தலைமுடி. கம்பீரமான, அளவான நடுத்தர உயரம். ஆனால், எளிமையான உடை என்று நின்ற அவனை ஜனனி ஒரு கணம் தன்னை மறந்து பார்த்தாள்.

    இப்படி ஒரு இளைஞன் எதற்காக தன்னைப் பார்க்க வர வேண்டும். சித்தியின் உறவுக்காரத் திருமணங்களில் ஒன்றிரண்டு முறை பார்த்த நினைவு வந்தது.

    ஜனனியும் வணக்கம் சொன்னாள்.

    ‘உட்காருங்க’ என்றாள்.

    ‘நான் அன்பழகன் பி.ஈ. எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ்’ என்றான்.

    ‘ஓ, என்றாள், நாங்க கூட ஒரு என்ஜினியர் வேணும்னு அட்வர்டைஸ்மென்ட் செய்திருந்தோமே, அப்ளை செய்திருக்கலாமே...’ என்றாள்.

    ‘இல்லை, உறவுக்காரங்க நிறுவனத்துல வேலை செய்தா சரிவராது. அதுவுமில்லாம இப்பத்தான் பி.ஈ. நான் பார்ட் டைமாத்தான் செய்து முடித்தேன்.’

    ‘இன்னும் சர்டிபிகேட்ஸ் வர்ல.’ என்றான். ஒரு நிமிடம் மவுனம் சாதித்துவிட்டு ‘ஓ! உறவுன்னா?...’ என்றாள்.

    ‘ஜெகதாக்கா எனக்கு ஒரு வகையில் அக்காவாகணும். எங்க மதரோட பெரியம்மா பேத்தி அவங்க’ என்றான்.

    பேசிக்கொண்டே அவள் கண்ணசைத்து விட்டதில் காபி வந்தது.

    ‘சாப்பிடுங்க...’ என்றாள்.

    ‘இல்லை நான் பேச வந்த விஷயம் நீங்க காப்பி குடுத்து உபசரிக்கிற மாதிரி விஷயம் இல்லை...’ என்றான்.

    அவள் சிரித்தாள்.

    ‘அப்ப முதல்லே... காபி சாப்பிட்டுடுங்க. அப்புறம் பேசலாம்,’ என்றாள்.

    அவன் புன்னகைத்தான். சித்தியை போலவே பெரிய அழகான கண்கள் என்று சொல்லிக் கொண்டாள்.

    அவன் மௌனமாக காப்பி குடித்து முடிக்கிற வரை அவள் இரண்டு மூன்று போன் கால்கள் பேசி முடித்தாள்.

    பிறகு ‘சொல்லுங்க சார்...’ என்றாள்.

    அவன் சொன்னான். அவள் அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தாள்.

    ‘வ்வாட்?’ என்றாள்.

    ஆனா காரணம் கேட்காதீங்க ‘ப்ளீஸ்... உங்க நலனுக்காகச் சொல்றேன்’ என்றான்.

    கடந்த இரண்டு வருடங்களில் அலுவலகத்தில் அமர்ந்து பல்வேறு தரமான மனிதர்களைச் சந்தித்துப் பழகி வந்ததாலோ என்னவோ அவள் உணர்வுகளை சட்டென்று மறைத்துக் கொண்டாள்.

    ஒரு நிமிடம் மேஜையைப் பார்த்தவாறு டேபிள் வெயிட்டை உருட்டிக் கொண்டிருந்தாள். பிறகு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

    ‘மிஸ்டர் அன்பழகன், நீங்க சொன்னது எவ்வளவு பெரிய விஷயம்னு உங்களுக்குப் புரியுதா...?’ என்றாள்.

    அவன் சளைக்காமல் அவளைப் பார்த்தான். ‘தெரியும். ஆனா கடைசி முயற்சியாகத்தான் இங்க வர்றேன். பாட்டியம்மாகிட்டே சொன்னேன். அவங்க புரிஞ்சுக்கல. உங்க அப்பாகிட்டே பேச தைரியம் இல்லை. ஆனால், இந்த முயற்சி தொடர்ந்தால் உங்களுக்கு ஒரு அவமானம் காத்திருக்கு’ என்றான்.

    ‘ஓ...!’ என்றாள்.

    கண்களில் கவலையுடன் அவன் சொல்வதைக் கேட்கும்போது அவளுக்கு நம்பாமலும் இருக்க முடியவில்லை.

    ‘எனக்கு இதுல எந்த லாபமும் இல்லை... இன்ஃபாக்ட்... நாங்க சாதாரணமான குடும்பம். நான் வேலை செய்ற கடை முதலாளிகிட்டே இந்த ஒரு மணிநேரம் பர்மிஷன் வாங்கறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு. ஆனால் என்னால வேடிக்கை பார்த்துட்டு சும்மாவும் இருக்க முடியலே’ என்றான்.

    அவள் ஆழ்ந்த ஒரு பெருமுச்சு விட்டாள்.

    ‘சார்... பெரியவங்களோட முடிவுல தலையிடணும்னா அதற்கு ஒரு அழுத்தமான காரணம் இருக்கணுமில்ல...’ என்றாள்.

    அன்பழகன் அவளை வியப்பாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்று அதிர்ச்சியடைவாள் அல்லது ஆத்திரப்படுவாள் என்று நினைத்து வந்தான். நேர்மாறாக விஷயத்தை அமைதியாக வாங்கிக் கொண்டு அவள் அலசுகிற விதம் பார்த்து அதிசயித்துப் போனான்.

    ‘மேடம்! உங்களுக்குப் பர்சனலா இந்த முடிவுல பெரிய இன்ட்ரஸ்ட் இல்லேங்கறது நான் ஜட்ஜ் பண்ணினதுதான். ஆனால், வாழ்க்கை உங்களுது மேடம், யோசிச்சுக்குங்க’ என்றான். எழுந்தான். வணக்கம் சொல்லி லேசாகத் தலையசைத்து விட்டு போய் விட்டான்.

    அவன் போனதற்குப் பிறகு தள்ளுகதவு ஆடுவதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள். அவன் சொல்ல வந்த விஷயம் முழுமையாக அவளுக்கு உறைத்தது. ஆனால், மொட்டைத் தாத்தன் குட்டையில் விழுந்த மாதிரி இப்படி சொல்லிவிட்டு போகிறான். இதை எப்படி யாரிடம் பேசுவது என்று நினைத்து உட்கார்ந்து விட்டாள்.

    அத்தியாயம் - 2

    அன்றிரவு!

    எட்டு மணி வாக்கில் பாட்டியின் அறைக்குப் போனாள். சற்று நேரம் செல்லம் கொஞ்சிக் கொண்டு பேசி கொண்டிருந்தாள். பிறகு மெதுவாக சன்னமான குரலில்.

    ‘பாட்டி’ என்றாள்.

    ‘என்னம்மா...’ என்றார்.

    ‘பாட்டி! அன்பழகன்னு ஒருத்தர் இன்னைக்கு என்னைப் பார்க்க வந்திருந்தார்...’ என்றாள். பாட்டி திகைத்துப் போய்ப் பார்த்தார்.

    ‘என்ன சொன்னான்?’ என்றார்.

    சொன்னாள்.

    பாட்டி சற்று நேரம் ஒன்றும் பேசவில்லை.

    ‘ஆமா இங்கயும், வந்து என்னைப் பார்த்தான். ஜெகதாவுக்குத் தெரிய வேண்டாம்னு சொல்லிவிட்டு உன்கிட்ட சொன்ன மாதிரியேதான் எங்கிட்டேயும் சொன்னான்.’ என்றார்.

    மறுபடியும் ஒரு மௌனம். ‘அவர் சொல்றதைப் பார்த்தால் கவலையா இருக்கு. ஆனா காரணம் சொல்ல மாட்டேங்கறாரே?’

    என்னன்னு உங்கப்பாகிட்டே சொல்றது. உங்கப்பாவோட கோபம் உனக்குத் தெரிஞ்சதுதானே என்றார்.

    ஜனனியும் ஏற்றுக் கொண்டாள். உண்மைதான். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்கிற ரகம். லாஜிக்கலாக சொல்லத் தெரிய வேண்டும். இல்லையென்றால் ஏற்றுக் கொள்ளமாட்டார். பாட்டியே தொடர்ந்தார்.

    ‘அதிலேயும் ஜெகதா என்னமோ இந்தக் கல்யாணத்துல ரொம்ப ஆர்வமாக செய்யறா... இப்ப போயி இடைஞ்சல செய்தா... அவங்களுக்குள்ள ஏதாவது பிரச்சினை ஆனா... என்ன செய்றது? குடும்பத்தோட அமைதியே போயிடுமே...’ என்றார்.

    ‘ஆ...ம்...மா’ என்றாள் ஜனனி. பாட்டி மேலும் தொடர்ந்தார். பெருசா என்ன ஆயிரும் ஜனனி? கல்யாணத்துக்கப்புறம் உனக்கு அங்க வசதி பத்தலேன்னா இங்க கொண்டு வந்தரலாம்னுதான் நானும் துணிஞ்சிட்டேன்’ என்றார் பாட்டி.

    ஜனனி, பாட்டி இதைப் பற்றி வெகுவாக யோசித்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டாள். பாட்டிக்கு இல்லாத அனுபவ அறிவா என்று

    Enjoying the preview?
    Page 1 of 1