Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meendum Pookkum!
Meendum Pookkum!
Meendum Pookkum!
Ebook163 pages40 minutes

Meendum Pookkum!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுப்ரமணியம், வைதேகி என்ற வயதான தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். இதில் மூன்றாவது மகனான குகன் திடீர் என்று இறந்து விடுகிறார். பிறகு அந்த வயதானவர்களுடன், வீட்டில் இருப்பவர்கள் ஒத்துழைக்காததால், பிளவு ஏற்ப்பட்டு குடும்பம் உடைகிறது. பின் அந்த முதியோர்கள், வேறு இடத்தில் இடம்பெயருகிறார்கள். சில காலங்களில் அவர்களுக்கு அங்கேயும் ஒரு அதிர்ச்சி ஏற்படுகிறது. அது எவ்விதமான அதிர்ச்சி, அதனால் முதியோர்களின் நிலை என்ன? பார்ப்போம்...

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580137807197
Meendum Pookkum!

Read more from Parimala Rajendran

Related to Meendum Pookkum!

Related ebooks

Reviews for Meendum Pookkum!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meendum Pookkum! - Parimala Rajendran

    https://www.pustaka.co.in

    மீண்டும் பூக்கும்!

    Meendum Pookkum!

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    வைஷ்ணவி அபார்ட்மெண்டின் கீழ் தளத்தில் இருந்த வீட்டில் சாமான்கள் இறக்கி வைக்கப்பட்டு கொண்டிருந்தன. கோயமுத்தூரை சேர்ந்தவர்கள் அந்த வீட்டை விலைக்கு வாங்கியிருப்பது மட்டுமே மைதிலிக்கு தெரியும். மைதிலி மணியாச்சும்மா சாப்பாடு கட்டிவை. நான் குளிக்கப்போறேன் பாத்ரூமில் நுழைந்தான். சுந்தரம்.

    ஜன்னல் திரையை விலக்கி வேடிக்கை பார்த்தவள் உள்ளே வந்தாள். லெமன் சாதம், உருளைக் கிழங்கு கார வறுவல். இந்த காமினேஷன் சுந்தரத்திற்கும், பரத்திற்கும் ரொம்ப பிடிக்கும். இரண்டு டிபன் பாக்ஸ்களிலும். எடுத்து வைத்தாள். பரத் 'ஜிம்'மிற்கு போயிருக்கிறான்.

    வந்ததும், அப்பாவிற்கு மேல் அவசரப்படுத்துவான்.

    சாப்ட்வேர் கம்பெனியில் டீம் லீடர். கை நிறைய சம்பளம். கல்யாண கனவுகளில் மிதந்து கொண்டிருப்பவன். பெண் பார்க்க வேண்டும்.

    அடுத்து அனுஷா இப்போது தான் ‘டென்த்’ படிக்கிறாள். ரிவிஷன் ஹாலிடேஸ் என்பதால் உள்ளே ரூமில் படித்துக் கொண்டிருக்கிறாள்.

    எதிர் ப்ளாட்டிற்கு யார் வருகிறார்கள் என்பது தெரியவில்லை சாமான்கள் வந்து இறங்கிவிட்டது.

    அம்மா... வெளியே என்னம்மா சப்தம்

    எதிர் பிளாட்டிற்கு யாரோ குடி வரப்போறாங்க. சாமான்கள் இறங்குது அனு. நீ சாப்பிட வர்றியா

    இல்லம்மா இன்னும் ‘ஒன் அவர்’ என்னை டிஸ்டப் பண்ணாதே இட்லியையும், தக்காளி சட்னியையும் டேபிளில் வைக்கிறாள்.

    காலை நேர வேலைகள் ஓரளவு முடிவுக்கு வந்து விட்டது.

    இனி பத்து மணிக்கு மேல் வேலைக்காரி கற்பகம் வந்ததும் அடுத்த கட்ட வேலைகள் ஆரம்பிக்கும்.

    வாஷிங்மெஷின் போடுவது, கிச்சனில் பாத்திரங்களை ஒழித்து போடுவது என்று கற்பகத்துடன் பேசிக்கொண்டே பொழுது போகும்.

    கற்பகம் நல்ல வேலைக்காரி. மைதிலியின் குணமறிந்து நடந்து கொள்வாள். எந்த வேலை சொன்னாலும் தட்டாமல் செய்வாள். வேலையும் படுசுத்தமாக இருக்கும். குடிகார புருஷனை நம்பி பயனில்லை என்று சுயமாக சம்பாதிப்பவள். படிப்பறிவு இல்லாவிட்டாலும் உலக நடப்பு புரிந்தவள்.

    சம்பாதிக்க வேண்டியது... பொழுது போனா குடிக்க வேண்டியது... இவனையெல்லாம் திருத்த முடியாதும்மா...

    தாலி கட்டிட்டானே... அந்த பாவத்துக்காக நான் உழைச்சு சோறு போடறேன். இவனால குடும்பத்துக்கு எந்த பிரயோசனமுமில்லை புலம்புவாள்.

    இரண்டு பெண்கள் ஐந்து வயதிலும், ஏழு வயதிலும் நகராட்சி பள்ளியில் படிக்கிறார்கள்.

    நான் தான் படிப்பறிவில்லாதவள். இப்படியொரு குடிகார புருஷனை கட்டிக்கிட்டு அல்லாடுறேன். அதுங்களாவது படிச்சுட்டு நல்லா இருக்கட்டும் வேலைகளுக்கிடையே அவளுடைய குடும்ப கதைகளும் தொடரும். புருஷனிடம் அடிவாங்கி கன்னம் சிவந்து வரும் நாளில் சூடாக மைதிலி தரும் காபியும், அவள் வார்த்தைகளும் தான் கற்பகத்திற்கு ஆறுதல்.

    இந்த பொம்பள புள்ளைங்களுக்காக பார்க்கிறேன். இல்லாட்டி நீயுமாச்சு... நீ கட்டின தாலியுமாச்சுன்னு வந்துடுவேன்

    வேண்டாம் கற்பகம். இப்படி பேசாதே. உன் புருஷன் குடிகாரனாக இருக்கலாம். நல்லவன். நீ காய்ச்சலில் பத்து நாள் கண் திறக்காம இருந்தப்ப பக்கத்திலேயே இருந்து கஞ்சி காய்ச்சி கொடுத்தான்னு நீ தானே சொல்வே. திருத்தப்பாரு. அவன் மேல் கோபத்தை வளர்த்துக்காதே

    என்னவோ போ நீ படிச்சவம்மா நல்லது தான் சொல்வே. பார்ப்போம்

    கண்ணை முந்தானையில் துடைத்துக் கொண்டு வேலையில் ஈடுபடுவாள்.

    பரத்தும், சுந்தரமும் கிளம்பி போயிருக்க அப்போது தான் உள்ளே நுழைந்த கற்பகத்துக்கு வேலைகளை சொல்லிவிட்டு ஹாலுக்கு வருகிறாள்.

    காலிங்பெல் இனிய நாதமாக ஒலிக்க,

    கதவை திறக்கிறாள்.

    அறுபதை தாண்டிய வயதில் நெற்றியில் குங்குமம் பளிச்சிட எதிரில் மங்களகரமான தோற்றத்துடன் நிற்பவளை பார்க்கிறாள்.

    அம்மா... நீங்க...

    எதிர்வீட்டிற்கு குடித்தனம் வந்திருக்கோம்மா

    மைதிலி முகத்தில் புன்னகை.

    உள்ளே வாங்கம்மா"

    இருக்கட்டும். ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா

    என்னம்மா சொல்லுங்க

    சாமானெல்லாம் வந்து இறங்கியாச்சு. இன்னும் பிரிக்கலை. எதில் என்ன இருக்குன்னு புரிபடலை. பால் காய்ச்சணும். ஒரு பாத்திரமும் இரண்டு டம்ளரும் தர முடியுமா?

    இதோ வரேன். உள்ளே வந்து உட்காருங்கம்மா உள்ளே போனவள்.

    பாத்திரங்களுடன் வருகிறாள்.

    வாங்குவதற்கு கை நீட்ட…

    இருக்கட்டும் நீங்க வாங்கம்மா நானே கொண்டு வந்து தரேன் உரிமையுடன் எதிரில் கதவு திறந்திருக்க உள்ளே போகிறாள். கிச்சனில் நிற்கும் பெரியவர்

    மனைவியை பார்க்க

    எதிர் வீட்டு பொண்ணு... பாத்திரம் கேட்டேன். உதவிக்கு கூடவே வந்திடுச்சு

    ரொம்ப நன்றிம்மா

    இருக்கட்டும்பா... நீங்க நகருங்க. நானே பாலை ஊத்தி வைக்கிறேன்

    பால் பாக்கெட்டை வெட்டி, பாலை டபராவில் ஊற்றி அடுப்பில் வைக்கிறாள் மைதிலி.

    அடுப்படி அலமாரியில் பிள்ளையார் படத்தை கொண்டு வந்து சுப்ரமணியம் வைக்க, வைதேகி விளக்கில் திரி போட்டு ஏற்றுகிறாள்.

    புது குடித்தனம். பிள்ளையாருக்கு ஒரு டம்ளர் பால் அவ்வளவு தான். இனி எங்க வாழ்க்கை இங்கே ஆரம்பமாகப் போகுது சொல்கிறாள் வைதேகி.

    காய்ச்சிய பாலில் சீனியை போட்டு டம்ளரில் ஊற்றி வைதேகியிடம் கொடுக்க,

    பெத்த மகள் போல கூடயிருந்து உதவறே. உன் பேர் என்னம்மா

    மைதிலி. சரிம்மா நான் வரேன். நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா

    வேண்டாம்மா நாங்க வரும்போதே சாப்பிட்டோம். மதியம் சாப்பாடு மட்டும் இங்கே பக்கத்தில் மெஸ் இருந்தா வாங்கிட்டு வந்துடறோம். உனக்கு சிரமம் வேண்டாம்

    என்னம்மா இது பெத்த மகள் மாதிரின்னு சொல்லிட்டு பிரிச்சு பேசறீங்க

    "அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தான் முதல் உறவு. மதிய சாப்பாடு எங்க வீட்டில் தான்

    கொண்டு வந்த சாமான்கள் மூட்டைகளில் அப்படியே இருக்கே. உதவிக்கு யாரும் வருவாங்களா"

    வைதேகியும், சுப்பிரமணியமும் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள்.

    யாருமில்லம்மா. நாங்க தான் செய்யணும். யாரும் நல்ல ஆளா வேலைக்கு இருந்தா சொல்லும்மா

    ஒரு நிமிஷம் இருங்க

    வாசலில் வந்து

    கற்பகம் கற்பகம்

    கூப்பிட அங்கு தூக்கி செருகிய சேலையுடன் வருகிறாள் கற்பகம்.

    என்னம்மா எதிர் வீட்டில் நிக்கிற. குடித்தனம் வந்துட்டாங்களா

    மைதிலிக்கு பின்னால் நிற்பவர்களை பார்க்கிறாள்.

    பெரியவரும் பெரியம்மாவும் தான் வந்திருக்கிறாங்களா வணங்கம்ங்க

    கற்பகம் நம்ம வீட்டு வேலை அப்பறம் பார்க்கலாம். இவங்களுக்கு உதவிக்கு யாருமில்லை. கொஞ்சம் சாமான்களை எடுத்து வைக்கணும் கற்பகம் இன்னொரு வீடு வேலைக்கு சேரணும்னு சொன்னியே இவங்களுக்கும் ஆள் வேணுமாம் இங்கேயே நீ பார்க்கலாம்

    ரொம்ப நல்லாதா போச்சு நீ போம்மா. தங்கச்சி அம்மா எங்கேங்கன்னு கேட்குது. நான் பார்த்துக்கிறேன்

    சொன்னவள்

    ஐயாவும் நீங்களும் அப்படி உட்காருங்க. எந்த மூட்டையை பிரிச்சு எங்கே அடுக்கணும்னு மட்டும் சொல்லுங்க... நிமிஷமாய் முடிச்சு தரேன்

    கற்பகம் உள்ளே போக

    சரிம்மா... நீங்க பாருங்க. நான் சாப்பாடு ரெடி பண்றேன். நம்ப வீட்டில் சாப்பிடலாம்

    மைதிலி வெளியே வர

    உள்ளே வந்து... ஒரு வாய் பால் குடிச்சுட்டு போம்மா... அந்த கடவுள் தான் கடைசி காலத்தில் கருணை உள்ளவங்க பக்கத்தில் எங்களை அனுப்பி வச்சிருக்காரு

    கண்கலங்க சொல்கிறாள் வைதேகி.

    ஒரு மணி நேரம் பம்பரமாக சுழல்கிறாள் கற்பகம். அடுப்படி சாமான்ங்கள், பெட்ரூம், ஹால் என்று எல்லாம் ஒழுங்காக எடுத்து வைக்கப்பட்டு,

    வீட்டை சுத்தமாக கூட்டி துடைத்து... ஜன்னல் திரைகளை மாட்டி... வீடு கச்சிதமாக காட்சி தருகிறது.

    ரொம்ப நன்றி கற்பகம்

    பெரியம்மா... இந்த நன்றியெல்லாம் கற்பகத்துக்கு வேண்டாம். மைதிலியம்மா நல்ல மனுஷி... அவங்களை அண்டி இருக்கற நான் இப்ப நீயும் வந்துட்டே... நீங்க சொல்ற வேலைகளை கருத்தோடு செய்தா... சம்பளம் தரப்போற... எதுக்கும்மா நன்றியெல்லாம்...

    முகத்தில் வழியும் வியர்வையை துடைக்கிறாள்.

    நீங்களும் ஐயாவும் குளிச்சிட்டு சாப்பிட வாங்க. நான் போய் மைதிலி அம்மாவுக்கு உதவறேன். கதவை தாழ் போட்டுக்குங்க

    2

    ஐந்தாவது மாடியில் இருக்கும் ஆபீஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1