Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ini Ellam Sugamey
Ini Ellam Sugamey
Ini Ellam Sugamey
Ebook156 pages59 minutes

Ini Ellam Sugamey

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் சிறுவயதிலேயே கணவனை இழந்து, ஒற்றைப் பெண்ணாக தன் மகனை வளர்க்கப் பாடுபடும் ஒரு பாசத்தின் போராட்டமே இந்தக் கதை. வாழ்க்கைப் போரில் சங்கரி வெற்றிப் பெற்று சுகம் கண்டாளா..? என்பதைக் காண இந்த நாவலுடன் இணைந்திருங்கள்.

Languageதமிழ்
Release dateJul 1, 2023
ISBN6580147310010
Ini Ellam Sugamey

Read more from Viji Muruganathan

Related to Ini Ellam Sugamey

Related ebooks

Reviews for Ini Ellam Sugamey

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ini Ellam Sugamey - Viji Muruganathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இனி எல்லாம் சுகமே

    Ini Ellam Sugamey

    Author:

    விஜி முருகநாதன்

    Viji Muruganathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/viji-muruganathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    சங்கரி... சங்கரி சைக்கிளை நிறுத்தியபடியே ராகவன் குரல் கொடுத்தான். கொடுத்த குரலுக்குப் பதிலாக, வந்துட்டேங்க என்றபடி புன்னகையுடன் வந்து நின்றாள் அவன் மனைவி.

    மாலை மணி ஆறுக்கும் மேலாகிவிட்டதால், கொஞ்சம் கொஞ்சமாக நீலத்திலிருந்து, கருநீலத்திற்கு மாறிக்கொண்டிருந்த வானெங்கும் விண்மீன்கள் கொட்டிக் கிடந்தன. பௌர்ணமி என்பதால் சந்திரன் தன் கிரகணங்களை நாலாபுறமும் ‌பாய்ச்சி தனிச்சோபையுடன் பளிச்சிட்டான்.

    வெளியே காய்ந்து கொண்டிருந்த பெளர்ணமி சந்திரனின் அத்தனை அழகும், அவளிடம் கொட்டிக் கிடந்ததுபோல் உணர்ந்தான் ராகவன். எப்போதும் மாலை அவன் வரும் நேரம், காலையில் இருந்து வேலை செய்து கசங்கியிருங்கும் சேலையை மாற்றிக்கொண்டு, தலை சீவி, பொட்டு வைத்து கொல்லைப்புறத் தோட்டத்தில் கொட்டிக்கிடக்கும் பிச்சிப்பூவை தலைநிறைய வைத்துக் காத்திருப்பாள்.

    என்னங்க... அப்படிப் பாக்குறீங்க...?!

    வெளியே இருக்கற நிலா எப்படி வீட்டுக்குள்ள வந்துச்சுன்னு பாக்குறேன்.

    அவன் பதிலில் நாணிச் சிவந்தவள், ஆமாம்... இப்பத்தான் கண்ணாலமான புதுமாப்பிள்ள மாதிரி பேச்சப் பாரு...! நமக்கு கண்ணாலமாகி பதினைஞ்சு வருஷமாகுது. பதிமூணு வயசுல பையன் இருக்கான்.

    இருந்தா என்ன...?! எப்பவும் எங்கண்ணுக்கு நீ கண்ணாலமான மொத நாள்ல இருந்த மாதிரிதான் தெரியற என்றபடியே சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தவும்,

    அப்பா என்று முகிலன் ஓடி வந்து கையைப் பிடிக்கவும் சரியாக இருந்தது.

    என்னடா கண்ணா... டியூஷன் போயிட்டு வர்றயா.

    ஆமாம்பா என்று பதிலளித்த முகிலன் அப்படியே அவன் ஜாடை. ராகவனுக்கு ஒரு கிரைண்டர் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் சின்னக் கம்பெனியில் வேலை. அவனுக்கென்று யாருமில்லை. சின்னவயதிலேயே பெற்றோர் இறந்துவிட, எப்படியோ உறவினர்கள் தயவில் பத்தாவது வரை படித்து, அதற்குமேல் முடியாமல் இந்தக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து படிப்படியாக முன்னேறி இன்று சூப்பர்வைசர் பதவி வரை உயர்ந்துவிட்டான்.

    ஒரு திருமணத்தில் சங்கரியைப் பார்த்து, பார்த்த கணத்தில் பிடித்துப் போய், விசாரித்து திருமணம் செய்ய, போய்க் கேட்டான். சங்கரிக்கு அப்பா மட்டும் தான். பெற்றவள் இவள் பிறந்தவுடன் போய்விட, விதவையான அத்தை மரகதம் அம்மாவாகி வளர்த்து வந்தாள். அப்பா... ‘பவழத்தான்...’ மரம் இழைக்கும் ஆலையில் வேலை பார்த்து வந்தார். எட்டாவது வரை படித்துவிட்டு, அதற்குமேல் படிக்க வேறு ஊர் போக வேண்டும் என்பதால் வீட்டிலேயே அக்கம்பக்கம் இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்தாள்.

    முதலில் ராகவனுக்கென்று யாரும் இல்லை என்று மறுத்தவர்களை, அவன் வேலை பார்த்த கம்பெனியின் முதலாளி அவனைப் பற்றி எடுத்துச் சொல்லி திருமணம் செய்து வைத்தார். இதோ ஆகிவிட்டது பதினைந்து வருடக் குடித்தனம். கல்யாணமான ஒரு வருடம் கழித்து, முகிலனும் பிறந்துவிட்டான். சந்தோஷத்தோடு பேரனை வந்து பார்த்து, வாழ்த்தி விட்டுப்போன பவழத்தான் ஆறுமாதங்களிலேயே கடமை முடிந்தது என்பதுபோல இறைவன் திருவடி சேர, அத்தை மரகதம் போற உசுரு காசில போகட்டும் புள்ள என்ர புகுந்த வூட்டு ஒறவு மொறைல ஒருத்தரு அங்க ஆசிரமம் நடத்தறாங்க‌ அங்க போயி வுழுந்துக்கறேன் என்றபடி கிளம்பிவிட்டாள்.

    அப்பாவும், அத்தையும் இல்லாத குறையே தெரியாதபடி ராகவன் அவளைத் தாங்கினான். இன்னொரு குழந்தை வேண்டும் என்று இருவருமே ஆசைப்பட்டாலும், ஏனோ முகிலனுக்குப் பிறகு கரு தங்கவே இல்லை. அவன் கொண்டு வரும் சம்பளத்தில் கட்டும் செட்டுமாக குடித்தனம் நடத்தி வந்தாள் சங்கரி. கடன் என்று எதுவுமில்லை. ராகவன் குடியிருந்த வீடு ஒற்றை அறையும், ஹாலும் அதன் ஓரத்திலேயே பாதிச்சுவர் வைத்துத் தடுத்த சமையலறையும் கொல்லைப்புறத்தில் கிணறும் கழிப்பறையும் என்று வசதியாக இருக்கவே, எலி வளையானாலும் தனி வளை என்று அதிலேயே இருந்தனர்.

    சங்கரியுடன் திருமணம் முடிந்து வந்தபோது, வீட்டுக்காரர் ராகவா... நா பட்டணத்துல போயி பையங் கூடவே தங்கிரலாமுன்னு இருக்கேன். இந்த வூடு நாங் கல்யாணமாகி வந்தப்ப எங்கூட்டு அம்மாவுக்கு சீதனமாக் கொடுத்தது. அவ நெனவா வெச்சிருந்தேன். அவளும் போயி பல வருஷமாச்சு. எனக்கும் எப்ப ஓல வரும்னு தெரியல. இந்த வீட்ட வேற யாருக்கும் விக்க மனசில்லை. உன் நெலம எனக்குத் தெரியும். ஏதோ உன்னால முடிஞ்சத கொடுத்துட்டு நீயே வச்சுக்க... நா சொல்றத சொல்லிட்டேன். இன்னும் ஒரு மாசத்துல கெளம்பிருவேன். உம் முடிவுதான் இனி என்றுவிட்டு, காப்பி நல்லாருந்துதம்மா... யோசிச்சு சொல்லுங்க என்று சங்கரியிடமும் விடைபெற்றார்.

    என்னங்க செய்யறது... அவ்வளவு தொகக்கு நாம எங்க போறது என்ற சங்கரியிடம், பாக்கலாம்மா என்றுவிட்டு முதலாளியிடம் போய் வீட்டுக்காரர் சொன்னதைக் சொல்ல,

    இதுக்கேப்பா கவலப்படற... இத்தன நாளு உன்னோட சம்பளத்துல புடித்தம் பண்ணுன தொக இருக்கு. அதுகூட கொஞ்சம் பணம் தரச் சொல்றேன். கொடுத்து வீட்ட முடிச்சுரு. நல்ல அம்சமான வீடு... கொடுக்கற தொகைய கொஞ்ச கொஞ்சமா உஞ் சம்பளத்துல கட்டிரு என்ற பெரியவரைப் பார்த்து கண்ணீருடன் கை கூப்பத்தான் முடிந்தது ராகவனால்...

    அது மட்டுமல்ல... அவரே வீட்டுக்காரரிடம் பேசி முடித்துக் கொடுத்து கணபதி ஹோமமும் பண்ண வைத்தார்.

    என்னங்க... என்ன ரோசன... மொகங் கை கால் கழுவாம அப்படியே நிக்கறீங்க. கழுவிட்டு வாங்க. சூடா ராய் வட சுட்டு வச்சிருக்கேன். சாப்பிட்டு காப்பித் தண்ணி குடிப்பீங்களாம்!

    அப்போதுதான் ஏதோ நினைவில் அப்படியே நிற்பது புரிந்து, ஒண்ணுமில்ல. ஏதோ நெனப்பு என்றபடி கொடியில் காய்ந்து கொண்டிருந்த துண்டையும், லுங்கியையும் எடுத்துக்கொண்டு போனவனுக்கு மெல்லிய பெருமூச்சு வராமல் இல்லை. பெரியவர் இறந்து வருஷம் நாலாகிவிட்டது. மகன் ராஜகோபால் பொறுப்பெடுத்துக் கொண்டவுடன் இவன் கணக்கைப் பார்த்து விசாரித்தாலும், அந்த ஏற்பாட்டில் கை வைக்கவில்லை. நல்ல உழைப்பாளி என்பதோடு, அப்பா அபிமானம் வைத்திருந்தவர் என்பதால், ‘இருந்துட்டுப் போகட்டும்’ என்பதுபோல விட்டுவிட்டார்.

    ஆனால் பெரியவர்போல, தீபாவளி, பொங்கல் போனஸ் போக... துணிமணி எடுத்துக் கொடுத்து முகிலனுக்கு பட்டாசு, இனிப்பு வகைகள் என்பதெல்லாம் போய்விட்டது. ஏதோ இந்த அளவிற்கு காருண்யம் காண்பித்ததே பெரிசு என்பதுபோல, சங்கரியும், ராகவனும் கடவுளுக்கும், முதலாளிக்கும் மனதிற்குள் நன்றி சொன்னார்கள்.

    முகம் கை, கால் கழுவிக்கொண்டு வந்தவன் எதிரில் பக்கோடாவை கொண்டுவந்து வைத்தவள், இன்னும் அவன் முகம் தெளியாததைக் கண்டு, என்னங்க என்றாள் சங்கரி.

    முகிலனைத் தன் மடியில் வைத்துக்கொண்டு அவனுக்கு பக்கோடாவை பிட்டு ஊட்டியபடி, ஒண்ணுமில்ல சங்கரி... மொதலாளி நெனப்பு வந்துருச்சு. அவருக்கு கடவுள் ஆயுச எட்டப் போட்டிருக்கக் கூடாதா...? அவரு மட்டும் உசுரோட இருந்திருந்தா...?

    நீங்க சொல்றது சரிதாங்க. நமக்கு பெத்தவங்க இல்லாத கொறயே தெரியாம பாத்துகிட்டாரு. எமன் எப்பவும் தம்மேல பழியப் போட்டுக்க மாட்டாங்கற மாதிரி... பாழாப்போன நெஞ்சுவலிய வர வச்சு கொண்டு போயிட்டான்... என்ன பண்றது நா தழுதழுக்கச் சொன்னவள் கலங்கிய கண்களை முந்தானையால் துடைத்துக்கொண்டே, யாரு சாவு யாரு கையில எல்லாம் அந்தச் சிவன் சாமி போடற கணக்கு... அதயே நெனக்காம சாப்பிடுங்க. புள்ள திருதிருன்னு விழிக்குது பாருங்க.

    அவள் சொன்னது மனதில்பட்டாலும், சங்கரி... நாம ரெண்டு பேருந்தான் படிக்கல. முகிலனையாவது நல்லாப் படிக்க வைக்கோணும். என்றான் முகிலனின் முடிக்கற்றையை அளைந்தபடி...

    கேக்கணுமாங்க. அவனுக்காகத்தானே நாம உசுரோட இருக்கறதே. மனசப் போட்டுக் கொழப்பிக்காம இருங்க சொல்லியபடி காப்பி வைக்க சமையலறைக்குள் போன சங்கரிக்கோ, ராகி பக்கோடாவை ருசித்து சாப்பிட்டு, தன் மகனுக்கும் ஊட்டிவிட்டு, தன் முதலாளி இறந்ததற்காக, வருத்தப்பட்டுக் கொண்டிருந்த ராகவனுக்கோ தெரியுமா விதி போடும் கணக்கு...?!

    ஆம்... அடுத்த ஒரு வாரத்தில் ராகவன்

    Enjoying the preview?
    Page 1 of 1