Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idly Athayum, Gngo Mamavum
Idly Athayum, Gngo Mamavum
Idly Athayum, Gngo Mamavum
Ebook197 pages2 hours

Idly Athayum, Gngo Mamavum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த சிறுகதைகள் குடும்பங்களில் ஏற்படும் அன்பு கோபம்,பாசம்,விட்டுக் கொடல் போன்ற உணர்வு பூர்வமான விஷயங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை.அத்துடன் பெண்ணியம், சமூகம் சார்ந்த விஷயங்களையும் பேசக் கூடியவையாகயும் இருக்கின்றன.

Languageதமிழ்
Release dateSep 13, 2021
ISBN6580147307398
Idly Athayum, Gngo Mamavum

Read more from Viji Muruganathan

Related to Idly Athayum, Gngo Mamavum

Related ebooks

Reviews for Idly Athayum, Gngo Mamavum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idly Athayum, Gngo Mamavum - Viji Muruganathan

    https://www.pustaka.co.in

    இட்லி அத்தையும், ங்கோ மாமாவும்

    Idly Athayum, Gngo Mamavum

    Author:

    விஜி முருகநாதன்

    Viji Muruganathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/viji-muruganathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இட்லி அத்தையும், ங்கோ மாமாவும்

    சீதா!

    உடுக்கை இழந்தவன்

    பூவும் பொட்டும்

    அ…ம்…மா!

    இல்லாதவர்கள்!

    நிறம்!

    வானம் தொட்டுவிடும் தூரம்தான்!

    போனால் போகட்டும் போடி

    யுக சந்திப்பு

    (அ) நியாய விலை

    அன்பின் முகவரி

    இவாஞ்சலின்

    ஒரு தவறு ஒரு நியாயம்

    தூரத்துப் பச்சை

    வேரின் வாசம்

    கமலா

    சரணும் சத்யாவும் பின்னே நானும்

    நித்திய சுமங்கலி

    மீனு

    வயலட் கலர் மாஸ்க்!

    ஆராயி

    'மூன்று நாட்களாக வீடு கனத்துக் கிடந்தது. ஒருவரும் கலகலப்பாகப் பேசிக்கொள்ளவில்லை. ஆராயியும் அப்படித்தான் மௌனமாகவே சுற்றிக் கொண்டிருந்தாள். ஆனால், அதையும் தாண்டிய சந்தோஷம் கண்ணில் மின்னியது.

    பின்னே ... அவ மதராஸுக்கு அல்ல போறா..!

    அவளுக்கு பிறந்த வீடு, புகுந்த வீடு எல்லாம் அதே ஊர்தான். மீறிப் போனா குதிரை வண்டியில நெசவாளர்கள் காலனியில் இருக்கும் தம்பி வீட்டுக்கு போய்ட்டு வருவா. அங்கேயும் அவளுக்கு இருப்புக் கொள்ளாது. என்னவோ நெருப்பு மீது உங்காந்துட்டு இருக்கற மாதிரி ஓடி வந்துருவா.

    ஆராயி... இப்பத்தானே வந்தே... அதுக்குள்ள கௌம்பற..? வண்டிச் சத்தத்துக்கு கூடக் கட்டாது...

    ஆமா அண்ணி... அதென்ன எப்ப வந்தாலும் காப்பித்தண்ணி குடிச்சுபுட்டு ஓடறது..? ஒரு நாத் தங்கிட்டு நாளைக்குத்தான் போங்களேன்...

    "ராத் தங்கறதா..? சீனு முழிச்சுட்டான்னா உடனே நா வேணும் அவனுக்கு. அம்மா எங்கேன்னுதான் மொதல்ல கேப்பான். கண்ணு முன்னாடி இல்லாட்டி கோபப்பட்டு கத்துவான்...''

    இப்படி ஆராயி சொல்ற சீனு என்கின்ற சீனிவாசனுக்கு கிட்டத்தட்ட ஐம்பது வயசாகப் போகுது. நான்கு வயது வந்த குழந்தைகளுக்கு அப்பா.

    ஆராயோட புருஷன் இரண்டு மகன்களையும், ஒரு மகளையும் கொடுத்துவிட்டு சின்ன வயதிலேயே காலமாகி விட்டார்.

    அப்போது இருபது வயது தான் அவளுக்கு. கடைசி பெண் குழந்தைக்கு நான்கு வயது. இருந்தாலும் தளர்ந்து போகாம சமாளிச்சா. கூடவே மாமியார் கிழவியும் இருந்ததால் நல்லாவே பாடுபட்டா. தறி ஓட்டுவா. பாவு புனைவா. கூளம் பொறுக்கி விற்பா. எப்படியோ கஷ்டமான கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்தா . மூத்தவன் தலையெடுக்க கொஞ்சம் ஆசுவாசப்படுத்திகிட்டா.

    மூத்தவன் அம்மா போன அதே தறி ஓட்டற வேலைக்குத்தான் போனான். எல்லா கொழந்தைங்க மேலேயும் பிரியம்னாலும் மூத்த மகன் மேல ஒரு இணுக்கு பாசம் ஜாஸ்தி. அதுவும் இத்துணூண்டு கஷ்டப்படுதுன்னு ராவானா படுக்க வச்சுட்டு கால அமுத்திக் கொடுக்கறது... கைய அமுத்திக் கொடுக்கறதுன்னுதான் கெடப்பா. அவனும் அவ மேல ரொம்பப் பிரியமாத்தான் இருந்தான்.

    இருபத்தி மூணு வயசிலேயே மூத்த மகனுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டா.

    அம்மா... எனக்கென்னமா அவசரம்? தங்கச்சிக்கு மொதல்ல கண்ணாலம் பண்ணலாம். தம்பி படிப்பு முடியட்டும்னு சீனு தள்ளிப் போட்டுட்டே வந்தான். ஆனாலும் அடுத்த வருசமே சொந்தத்திலேயே மீனாட்சிய கேட்டு வர உள்ளூரு, நல்ல பையன்னு முடிச்சுட்டா. அடுத்த வருஷமே ஒரே பிடிவாதமா பொன்னம்மாவ கொண்டாந்துட்டா ஆராயி.

    ஆரம்பத்துல மாமியார் மெச்சின மருமகளாத்தான் இருந்தா பொன்னம்மாவும். அப்புறம் அவளுக்கு ரெண்டு கொழந்தைங்க பொறக்கவும், மாமியாரான ஆராயி கூட மல்லுக்கட்ட ஆரம்பிச்சுட்டா.

    சீனு வீட்டுல சொந்தத்துல தறி போடற அளவுக்கு முன்னுக்கு வந்துட்டான். அதனால ஆராயிக்கு முன்னப்போல பெரிசான வேலை எதுவும் இல்லை . இதனாலயே தம்மருமக செய்யற வேலைல குத்தம் கண்டுபிடிக்க ஆரம்பிச்சா.

    முதல்ல அம்மா சொல்றதக் கேட்டு பொண்டாட்டிய திட்டுன சீனு, நாள் போகப்போக ரெண்டு பேரையும் சேர்த்து நீங்களெல்லாம் பொம்பளைங்க தானா...ன்னு திட்ட ஆரம்பிக்கவே ரெண்டு பேரும் அவன் முன்னாடி சண்ட போடறதை நிறுத்திட்டாங்க.

    சீனு வீட்டுக் கழிப்பறைல ஒதுங்க மாட்டான். தெனமும் வேப்பமரக்குச்சிய வாயில வைச்சுகிட்டு சொம்பத் தூக்கிட்டு மலையடிவாரம் போயிருவான். அப்ப ஆரம்பிக்கும் மாமியா மருமக சண்டை .

    "ஏண்டி பொன்னா... என்ன கொழம்பு வெக்கறன்னு...'' மெதுவா சமையல் உள்ள போவா ஆராயி.

    தக்காளிக் கொழம்புதான் அத்தே...ம்பா பொன்னம்மா.

    உனக்கு இந்தத் தக்காளிக் கொழம்ப வுட்டா வேற தெரியாதா..? உங்கம்மாக்காரி வேற எதையுமே சொல்லிக் கொடுக்க' லையானு ஆராயி ஆரம்பிப்பா.

    இப்படி ஆரம்பிக்கற சண்ட கெட்ட வார்த்தை வரைக்கும் தொடரும். ஆனா, அதெல்லாம் சீனுவோட செருப்பு சத்தம் நடை வாசல்ல கேக்கற வரைக்கும் தான். அப்புறம் பூனைக்குட்டியாட்டம் பதுங்கிருவாங்க.

    அப்படியும் சீனுவுக்கு சத்தம் கேட்டுரும். வீட்டுப் பொம்பளைங்களாட்டமா பேசறீங்க..?ன்னு திட்டிக்கிட்டே வருவான்.

    நாள் போகப்போக பெரிய மருமவ கூட சண்டை போட்டு ஆராயிக்கு அலுத்துப் போச்சு.

    பொன்னம்மாவும் நாலு கொழந்தைங்க வரிசையாப் பொறக்கவும் ரொம்ப நைந்து போயிட்டா. கெழவி இல்லாம ஒண்ணும் முடியாதுங்கறதுனால அடக்கி வாசிக்க ஆரம்பிச்சிட்டா .

    சீனுக்கு பார்த்த மாதிரி சின்னப் பையன் முத்துவுக்கு பார்க்க முடியாதுன்னு படிச்ச பொண்ணா பார்க்க ஆரம்பிச்சா ஆராயி, சீனு எப்படியோ திக்கித் திணறி அவனை பட்டப்படிப்பு படிக்க வச்சுட்டான். அவனும் நல்லபடியா படிச்சான். பெரிய மனுசங்க கைல காலுல வுழுந்து தம்பிக்கு கவர் மெண்ட் வேலையும் வாங்கிக் கொடுத்துட்டான். அங்கதான் புடிச்சது சனி.

    வேலைக்குப் போயி கொஞ்ச நாள்லேயே அம்மா ... அண்ணா ... நான் கூட வேல செய்யற பொண்ண விரும்பறேன்னு வந்து நின்னான்.

    நாங்க பாக்கறத விட நீயா பாத்துக்கறது தான் தோதுப் படும்னு பெருந்தன்மையா சீனுவும் சொன்னான்.

    ஆராயிக்கு மனசுக்குள்ள விருப்பம் இல்லைன்னாலும் சீனுகிட்ட இருந்த பயத்துனால எதுவும் சொல்லல.

    யார்டா பொண்ணு... அப்பனாத்தா என்ன பண்றாங்க?ன்னு விசாரிச்சான் சீனு.

    ஒரே பொண்ணுதாண்ணா ... அப்பா மளிகை வியாபாரம்...ன்னான் முத்து.

    நம்ம சனத்துல யார்டா மளிகைக்கடை வச்சுருக்கவங்கனு . சீனு யோசிக்கத் தொடங்கவும், முத்து மெல்ல சொன்னான்.

    ண்ணா ... அவங்க நம்மாளுங்க இல்லை ...

    ஆராயிக்கு வந்ததே கோபம். அந்தக் கோபத்துல சீனு இருக்கறாங்கறது கூட மறந்து போச்சு அவளுக்கு. எம் பொணத்த தாண்டித் தான் நீ கண்ணாலம் கட்ட முடியும்னு கத்த ஆரம்பிச்சா. "என்ன தம்பி இப்படிச் சொல்றீங்க... எம் பொறந்த வூட்டு சனத்துக்கு தெரிஞ்சா காறித்துப்பு வாங்க''ன்னா பொன்னம்மா.

    ஆராயி கத்தறதோ பொன்னம்மா சொன்னதோ காதுல வுழுகாத அளவுக்கு திக்பிரமை பிடிச்சு நின்னான் சீனு.

    யார் என்ன சொன்னாலும் செஞ்சாலும் நாங் கட்டப் போறது அவளத்தான்னு தீர்மானமா நின்னான் முத்து.

    சீனு சுதாரிச்சுகிட்டு சரிடா... உம் விருப்பம் போலவே கட்டி வச்சுர்ரேன்'னு சொல்லிட்டான். மறுபடி கத்த ஆரம்பிச்ச ஆராயிகிட்ட நீ மூணு கொழந்தைகள வச்சுகிட்டு நாதியத்து நின்னப்ப எந்த ஊர்க்காரன் காப்பாத்துனான்னு ஒரே வார்த்தையா சொல்லி அடக்கிட்டான்.

    அதே போல பொண்ணு வூட்ல போயி பேசி பத்திரிகை அடிச்சு அடுத்த ஐப்பசிலேயே கண்ணாலமும் பண்ணி வச்சுட்டான். சீனுக்கு பயந்து ஊர்க்காரங்களும் ஒண்ணும் பேசாம வட பாயாசத்தோட விருந்து சாப்பிட்டு வாழ்த்திட்டுப் போயிட்டாங்க.

    ஆனா பாவம்... அராயியால தான் இந்த மருமவ கூட மல்லுக் கட்டவே முடியலை. ஆராயிய மட்டுமல்ல... புகுந்த வீட்டு சனத்தை மனுஷங்களாகவே புதுசா வந்த சாவித்திரி மதிக்கல.

    முத்துவும் சாவி... சாவின்னு அவ பின்னாடியே பூட்டு திறக்கறவன் மாதிரி போயிட்டே இருந்தான். மொதல்ல ஈரோட்டுல தனிக்குடித்தனம் இருந்தான். கண்ணாலம் ஆகி மொத ராத்திரிக்கு ஆராயி வூட்டுக்கு வந்தவதான் அதுக்கப்புறம் சாவித்திரி திரும்பிக் கூடப் பார்க்கல. முத்து மட்டும் எப்பனாச்சும் வந்து தலையக் காட்டிட்டு அவளுக்கு எங்கம்மா... லீவே கெடைக்க மாட்டேங்குதுன்னு மோட்டு வளையப் பார்த்து கிட்டே சொல்லிட்டு ஒரு வா காப்பித்தண்ணியக் குடிச்சுபுட்டு கௌம்பிருவான்.

    மனசு அடிச்சுகிட்டாலும் தம்பிய வுட்டே கொடுக்க மாட்டான் சீனு. ஏண்டா இப்புடி எளச்சுக் கெடக்கற...ன்னுதான் வருத்தப்படுவான். "ஆமா... அழிச்சா ரெண்டு ஊரு செய்யலாம். எளச்சுக் கெடக்கானாம்... எளச்சு. நல்லா மாமனார் வூட்டு சோத்ததின்னு புட்டு செனப்பன்னியாட்டம் இருக்கான்னு மனசுக்குள் திட்டினாலும் வெளியே வாயே தெறக்க மாட்டா ஆராயி.

    அப்பதான் கொஞ்ச நா கழிச்சு... அண்ணா எனக்கு மெட்ராஸுக்கு மாத்தலாயிடுச்சுன்னு வந்து நின்னான் முத்து.

    ஏண்டா ... தம்பி... இத்தன நாளு எதோ கூப்பிடற தொலவுல இருந்தேன்னு மனச சமாதானப்படுத்திட்டிருந்தேன். இப்ப தொலதூரம் போறேங்கறியேனு துடிச்சுப் போயி சொன்னான் சீனு.

    தொலதூரம் என்னண்ணா ... ராவுக்கு ரயிலேறினா விடியல்ல கொண்டாந்து வுட்டுர்ரான்...

    உம் பொண்டாட்டியும் வர்றாளா இல்ல அப்பனூட்டோட தானா...னு ஆராயி கேட்டா.

    அவ இல்லாம எப்படிமா..? சோத்துக்கென்ன பண்றது..?

    அத்தெந்தொலவு போறப்ப கூட ஒருவார்த்தை மாமியாக்காரி கிட்ட சொல்லணும்னு தோணல பாரு எம் மருமவளுக்கு...ன்னு ஆராயி பொலம்பினா, சரிம்மா ... நாள கழிச்சு மறுநா கௌம்பறோம்னு சொல்லிட்டு நூறு ரூபாய் நோட்ட எடுத்து வச்சுக்கம்மா...ன்னு நீட்டினான் முத்து.

    எனக்கெதுக்குடா ரூபாயெல் லாம்... அதான் காலத்துக்கும் கஞ்சி ஊத்த உங்கண்ணன் இருக்கானே... சுருக்குன்னு சொல்லிட்டா ஆராயி.

    சரிண்ணா ... மீனாட்சிகிட்ட போறப்ப அப்படியே சொல்லிக்கிறேன்... ஆமா... தங்கச்சின்னு ஒரு வெள்ளிப்பணம் கொடுக்கலைன்னாலும் பவிசுக்கொண்ணும் கொறச்சலில்லை ...ன்னு முணு முணுத்தா ஆராயி.

    போய்ச் சேந்தேன்னு ஒரு கடுதாசி போட்டதுதான். அதுக்கப்புறம் மூணு மாசமாகியும் முத்துகிட்ட இருந்து ஒரு தகவலும் இல்ல. ஒரு நா அந்தி சாயற நேரம் வாசல்ல வந்து நின்ன தம்பியப் பார்த்து டேய்தம்பி... முத்து...னு ஓடிப்போய் கட்டிகிட்டான் சீனு.

    என்னதான் ஒவ்வாமை மனசுக்குள்ள இருந்தாலும் மகன்ங்கிற பாசம் போகாம

    Enjoying the preview?
    Page 1 of 1