Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbe, Kannaley Kollathey!
Anbe, Kannaley Kollathey!
Anbe, Kannaley Kollathey!
Ebook129 pages52 minutes

Anbe, Kannaley Kollathey!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்களின் பல்வேறு நிலையினைப் பல்வேறு நாவல்களில் படம்பிடித்து காட்டியுள்ளார். பிரதானமாய் சேலம் மாவட்ட கிராமங்களில் நடைபெறும் "பெண் சிசு கொலையினைப்" பின்னணியாய் கொண்டு பல்வேறு நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் புனைந்துள்ளார்.

இவர் கணவர் மின்வாாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த காரணத்தால் இவருக்கு அந்த அனுபவங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது, மனம் நெருட காலவோட்டத்தில் அதை நாவலாக்கினார்.

இவரது பல நாவல்கள் கல்லூரிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல மாணவ மாணவிகள் இவரின் நாவல்களை "எம்ஃபில்" படிப்பில் ஆய்வு செய்கின்றனர்.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580114202215
Anbe, Kannaley Kollathey!

Read more from Hamsa Dhanagopal

Related to Anbe, Kannaley Kollathey!

Related ebooks

Reviews for Anbe, Kannaley Kollathey!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbe, Kannaley Kollathey! - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    அன்பே, கண்ணாலே கொல்லாதே!

    Anbe, Kannaley Kollathey!

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    ***

    அன்பே,

    கண்ணாலே

    கொல்லாதே!

    ஹம்சாதனகோபால்

    1

    மாதம்மாவின் பார்வை கண்ணாடியில். முன்னும் பின்னும் திரும்பிப் பார்த்தாள். எத்தனை அழகி அவள். அதுதான் அவள் மாமன் மாதேஸ்வரன் அவளைக் கட்டிக் கொள்ள அலைந்து கொண்டிருக்கிறான். இந்த அம்மா தான் நாளும் கிழமையும் சொல்லி ஜோஸ்யம் ஜாதகம் என ஏதேதோ சொல்லி நாள் கழித்து வருகிறாள்.

    குயிலம்மாளின் சொந்தத் தம்பிதான் மாதேஸ்வரன். கணவனற்ற குயிலம்மாவின் வெளிவிவகாரத் துறைகளை அவன் தான் கவனித்து வருகிறான். விளைந்து வரும் குச்சிக் கிழங்குகளைச் சந்தையில் விற்பதும் கரும்புகளை ஏற்றிப் போய் மோகனூர் சுகர் பாக்டரியில் விற்று வருவதும் எல்லாம் அவன்தான். ஒரு புறம் புஞ்சை பத்து ஏக்கரா என்றால் மறுபுறம் நஞ்சை காவிரிப் பாசனம், மேட்டூரிலிருந்து கண்மாய்கள் திறந்து கொண்டால் இங்கே வயல்களெல்லாம் பசுமை உடுத்திக் கொள்ளும். மேட்டூர் அணை வறண்டு கோயிலையும் வறட்சியையும் காட்டிக் கொண்டிருந்தால் இவர்கள் கையிருப்பில் கை வைக்க வேண்டியது தான். விடிந்ததும் கர்நாடகக்காரனைத் திட்டித் தீர்க்க வேண்டியதுதான். இவள் கணவர் எத்தனையோ முறை கிணற்றை ஆழப்படுத்திப் பார்த்துவிட்டார். அப்படி ஒரு முறை மருந்து கெட்டித்து வெடி வைக்கையில்தான் இவளையும் இவள் மூன்று பெண் பிள்ளைகளையும் அனாதையாய் விட்டுச் சிதைந்து போனார். பாழும் கிணறு இவள் வாழ்வைப் பலிவாங்கிக் கூட அதிகமாய்ச் சுரக்கவில்லை.

    பெரிய மகள் மாதம்மா வயதுக்கு வந்து கூட எட்டு வருடங்கள் அதோ இதோ என ஓடிப் போய்க் கொண்டிருக்கிறது. மோகனூர் காளியாத்தா கோவில் சாமியாடி கறாராய் சொல்லிவிட்டான். ஆத்தா. இன்னும் ரெண்டு வருசம் போவட்டும். அப்பதான் புள்ளைக்கு நல்ல காலம் பொறக்கும். போற எடம் வெளங்கும். நீயும் நிம்மதியா மத்த பொண்டுகளைப் பார்க்கலாம் உடுக்கை அடித்து சாமியாடி சொன்னபோது இந்த மாதம்மாளும் கூட இருக்கத்தான் செய்தாள். அவளுக்கு அப்படியே பாய்ந்து அந்த உடுக்கடிப்பவனின் கழுத்தை நெறித்துவிட வேண்டும் போல வெறி தோன்றிற்று. பிறந்தது முதல் சேர்த்து பேசப்பட்ட மாமனையும் இவளையும் பிரித்துப் பேச இவன் யார்? இந்த அம்மாவிற்கு வேறு வேலை கிடையாது.

    என்ன ஜோஸ்யம் வேண்டிக் கிடக்கிறது? மாதேஸ்வரன் பார்க்க சினிமா கதாநாயகன் போல இருப்பான். அவன் வெள்ளை வேட்டி சட்டையில் ஒரு துளி அழுக்கைப் பார்க்க முடியாது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வயல்வரப்பில் அவன் இறங்கி விட்டால் பத்து ஏக்கரா நெல்லும் அறுபட்டு களத்திற்கு வந்து சேர்ந்துவிடும். கூலியாட்களுக்கு அவனைக் கண்டாலே வேகம் பற்றிக் கொள்ளும். மரத்தடியில் மாராப்பை விலக்கி பால் புகட்டிக் கொண்டிருக்கும் பெண் கூட குழந்தையை மரத்தடியில் விட்டு ஓடி வந்துவிடுவாள். அறுபடும் சத்தம் மட்டுமே காற்றில் கலந்திருக்கும். கூலி ஆட்கள் வேலை முடிந்து போகும் போது கூலிப் பணத்தோடு விளை நெல்லையும் எடுத்துப் போவார்கள். வேலை வாங்குவதில் எப்படி மாதேஸ்வரன் கறாரோ அப்படியே தாராளமாய் கூலியையும் கொடுத்து அனுப்புவான்.

    நல்ல உயரம் அவள் மாமன். சதுர முகம் கோதுமை நிறம். இளசுகள் அவனைக் கடைக்கண்ணால் பார்வையால் அளக்கும்போதே மாதம்மாளுக்குப் பற்றிக் கொள்ளும். ‘அடியேய் என் முறைமாமன்…! பார்வை விலக்கு’ சொல்லத் தோன்றும்.

    உக்கும்… கட்டிக்கிடறதுக்கு முந்தியே இப்படி அதிகாரம் கொடி கட்டுதே. பொறவு… சொற்களை வீசிவிட்டு அந்த இளசுகள் வயலில் இறங்கிவிடுவார்கள். பரமத்தி வேலூர் தான் அவள் பாட்டி வீடு. தாய் குயிலம்மாளின் தாய் இன்னும் உயிரோடு இருக்கிறாள். வயது எழுபதுக்கு மேல் ஆகிவிட்டபோதும் பின்னம் கொசுவ சேலையை இழுத்துச் செருகிக் கொண்டு களத்து மேட்டிலும் வயல் வரப்பில் வேகமாய் வேலை செய்ய ஆரம்பித்து விடுவாள். இவளைப் பார்த்தால் போதும். ‘எப்படி என் வூட்டு மருமவளா வரப்போறே? பேத்தியின்னா செல்லம் குடுக்கணும். மருமவளா வந்தா இடுப்பொடிய வேலை வாங்கலாம் இல்ல?’ பேத்தியைச் சீண்டுவதில் கிழவிக்கு ஆனந்தம்.

    உக்கும்… போ பாட்டி. காட்டு வேலைப் பார்க்கத்தான் என்னிய கட்டிக்கப் போறாராக்கும் மாமன். வூட்டு வேலையை யார் பாப்பாங்களாம்

    ‘அதுக்கேண்டி நீ கஷ்டப்படறே? ஒரு சக்களத்திய வச்சுக்கிட மாட்டானா எம்மவன்? அவனுக்கென்ன ராசாக் கணக்கில இருக்கான். ஒருத்தியென்ன உங்க மூணு பேத்தையும் அவனுக்கே கூட கட்டி வச்சிரலாம். கிழவி இதை வேடிக்கையாய் சொல்லிப் போக, அங்கே திண்ணையில் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டிருப்பாள் மாதம்மா. அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியாது. மாதேஸ்வரன் தோளில் மற்ற எந்தப் பெண்ணின் மூச்சுக் காற்றுக் கூட படக் கூடாது. அது எவளாய் இருந்தாலும் சரி. மாதேஸ்வரன் வந்து அவளைச் சமாதானப்படுத்துவான்.

    அடச் சீ கழுதை. கெழவி என்னவோ சொல்லிப்போட்டுப் போறா. நீ என்னத்துக்குப்புள்ள இந்த அழுவாச்சி அழறே. நேரத்தோட பஸ் ஏறி வூடு போய்ச் சேரு. அக்கா பாவம் தனியா கயிட்டப்படும்.

    இவள் கண்களைத் துடைத்தபடி பல் வரிசை மின்ன சிரிப்பாள். "உம்… நான் இங்கிட்டு வந்துட்டா அப்புறம் ஒங்கக்கா என்னத்த செய்யுமாம்?

    ‘வா… உள்ளே வந்து நின்னு கேள். சொல்றேன்.’ இது அவன் சாகசம். புரியும். வேண்டும் என்றே எழுந்து போவாள் அவள். இருட்டறையில் நெல் மூட்டைகளில் புழுக்கத்தில் அவன் அவளை இறுக அணைத்துக் கொள்வான். அவன் இதழ்கள் அவள் கன்னத்தில். அவள் தலையைத் திருப்பிக் கொள்வாள்.

    என்றோ அறியாத பருவத்தில் அங்கே பார்த்தது நெஞ்சில் எழும். உடம்பெல்லாம் அந்த மூர்க்கம் பற்றிக் கொள்ளும். அவனைப் பிடித்துத் தள்ளி விடுவாள். வெளியே ஒடி வந்துவிடுவாள். அவன் தவித்துப் போய் தொண்டை அடைக்க வெளி வருவான். அவளைப் பரிதாபமாய்ப் பார்ப்பான்.

    ‘என்ன புள்ள, இப்படிச் செய்யறே? உக்கும். நாளைக் காலையிலே நம்ம கண்ணாலம் வச்சாலும் சரி. ஆனா அக்கா தான் அதையும் இதையும் சொல்லி நம்மைப் பிரிச்சு வச்சிருக்காளே.’ தவிப்புடன் பார்வை அவள் மேனியில் அலையும். மூச்சு பெரிதாய் இரைக்கும். ஆனால் திண்ணைக்கும் வெளியே களத்து மேட்டில் அவன் எங்கே திரும்ப அணைக்க வந்துவிடுவானோ என்ற பயத்தில் மற்றவர் பார்வை படிய வந்து நிற்கும் மாதம்மா நடுங்கிக் கொண்டிருப்பாள். எத்தனைக் கெத்தனை மாமன் மீது அவள் மனம் நாடிற்றோ அத்தனைக்கத்தனை அவன் அருகாமையும் அவன் அணைப்பும் பிடிக்கவில்லை. பயம் வந்து நெஞ்சை இறுக்கியது. உடம்பெங்கும் ஒரு அவஸ்தை. இனம் புரியாத ஒரு உணர்வு எழுந்து அவளை விரட்டும்.

    பற்பல எண்ணங்கள் அவள் மனதில்

    Enjoying the preview?
    Page 1 of 1