Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthu Vidiyal Thedum Pullinangal
Puthu Vidiyal Thedum Pullinangal
Puthu Vidiyal Thedum Pullinangal
Ebook121 pages48 minutes

Puthu Vidiyal Thedum Pullinangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்களின் பல்வேறு நிலையினைப் பல்வேறு நாவல்களில் படம்பிடித்து காட்டியுள்ளார். பிரதானமாய் சேலம் மாவட்ட கிராமங்களில் நடைபெறும் "பெண் சிசு கொலையினைப்" பின்னணியாய் கொண்டு பல்வேறு நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் புனைந்துள்ளார்.

இவர் கணவர் மின்வாாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த காரணத்தால் இவருக்கு அந்த அனுபவங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது, மனம் நெருட காலவோட்டத்தில் அதை நாவலாக்கினார்.

இவரது பல நாவல்கள் கல்லூரிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல மாணவ மாணவிகள் இவரின் நாவல்களை "எம்ஃபில்" படிப்பில் ஆய்வு செய்கின்றனர்.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580114202219
Puthu Vidiyal Thedum Pullinangal

Read more from Hamsa Dhanagopal

Related to Puthu Vidiyal Thedum Pullinangal

Related ebooks

Reviews for Puthu Vidiyal Thedum Pullinangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthu Vidiyal Thedum Pullinangal - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    புது விடியல் தேடும் புள்ளினங்கள்

    Puthu Vidiyal Thedum Pullinangal

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    புது விடியல் தேடும் புள்ளினங்கள்

    ஹம்சா தனகோபால்

    1

    வள்ளியம்மை கைத்தறி அங்காடியைக் கடந்து சிறிது தூரம், செல்வபாரதியின் கைனடிக் ஹோண்டா ஒடுகிறது. பின் இதுவரை ஓடின களைப்பில் ஹாயாக நின்றுவிடுகிறது. அவள் பலமுறை அதை உயிர்ப்பித்தும் அது உடனுக்குடன் உயிர்கொண்டு உயிர்விடுகிறது.

    வான உச்சியில் தலைக்கு மேல் செங்கதிரோன் தீ விழி விழிக்க, வியர்வை உடலெங்கும் கசகசக்கிறது. மணி பதினொன்றைத் தாண்டி விட்டதால், பாந்தியன் சாலையின் பரபரப்பு அடங்கி நிற்கிறது.

    இவள் தன் வண்டியுடன் போராட்டத்தில் இறங்கியிருப்பது மற்ற வாகனங்களில் செல்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்கிறதே தவிர யாரும் முன்வந்து உதவவேண்டும் என்கிற எண்ணம் கொண்டவராய் தெரியவில்லை.

    வண்டியைச் சிறிது தூரம் தள்ளிப் பார்த்தாள். முடியவில்லை. போய்க்கொண்டிருந்த வாகன ஒட்டிகள் உதவும் மனம் இல்லாதவர்களாக இருந்தார்கள். அவள் அணிந்திருந்த சில்க் சூரிதாரும் சல்வா ரும் இப்போது வெயிலுக்குச் சிறைக்கம்பிகளாகத் தெரிந்தன. இப்படியே வெயிலிலேயே நின்றிருந்தால் வியர்வையில் உருகியே விடுவாள் போலிருக்கிறது.

    காற்றாக விரைந்து கொண்டிருந்த வாகனங்களிடையே அந்த ஒட்டைக் காயலான் கடை சைக்கிள் வாலிபன், இவளையே பார்த்தபடி வந்தது எரிச்சலைக் கொடுக்கிறது. யாரும் உதவ முன்வராவிட்டாலும் | இந்த விழுங்கிவிடும் பார்வையில் ஒன்றும் குறைச்சல் இல்லை.

    தருமமிகு சென்னையா இது. ஒரு இளம் பெண்" வண்டியுடன் நின்றால் ஏனென்று கேட்டுப்போக நாதியில்லை. இவள் கைத்துண்டு நனைந்து போகும்படி முகம் துடைக்கிறாள். அந்த காயலான் கடை சைக்கிள் வந்து இவள் அருகே கிறீச்சிட்டு நிற்கிறது. அதிலிருந்து ஆறடி உயரத்திற்கு முகம் மழிக்காத அந்த இளைஞன் இவளையே பார்த்தபடி இறங்கினபோது அவளுக்குள் கோபம் கூடு கட்டுகிறது.

    போகும்போதே பார்க்கும் வேடிக்கை போதாதா. அருகே நின்று வேறு பார்க்க வேண்டுமோ?

    மேடம், வண்டி ரிப்பேரா. நான் வேணா பார்க்கட்டுமா?

    அவன் ஏழ்மையான அழுக்கான பேண்ட்டும் ஷர்ட்டும் இப்படிப்பட்ட வண்டிகளையே தொட்டிராதவன்போல் காட்டுகிறது. இவனாவது பழுது பார்ப்பதாவது ஒரு இளம் பெண் நின்றிருக்கிறாள் என்றால்.

    உங்களால் முடியாது. ஆனா ஒரு ஹெல்ப் செய்ய முடியுமா?

    என்ன மேடம்?

    இதை கன்னிமாரா லைப்ரரி வரை தள்ளிட்டு வரீங்களா. உங்க சைக்கிளை அப்படி ஃபவுண்டன் பிளாசா ஷாப்பிங் காம்பளக்ஸில் வேணா நிறுத்திட்டு வந்துருங்க.

    நீங்க அந்த புளிய மரத்தடியில நிழல்ல நில்லுங்க, நான் பார்க்கறேன். முடியலன்னா நீங்க சொன்னதுபோல செய்யறேன்.

    ஏதோ இந்த அளவாவது உதவிக்கு வந்திருக்கிறானே...

    உம்... ந்ல்லா ஒடிட்டிருந்தது. உங்களால் முடியும்னு தோணலை. நீங்க வண்டிய தள்ளி...

    இருக்கட்டும் மேடம் நான் பார்க்கிறேன்.

    அவள் தன் நிலா முகம், வெயிலில் கனிந்து சிவக்க மர நிழலில் போய் நிற்கிறாள். வியர்வையை வழித்தெறிந்து முகம் துடைக்கிறாள். தொண்டை வரண்டு தாகமெடுக்கிறது.

    அந்த வாலிபனின் கருத்த துருப்பிடித்த சைக்கிள் பரிதாபமாய் நிற்க, இவளது புதிய கைனடிக் ஹோண்டா புதுமணப்பெண்ணாய்... அவன் அதன் கதவுகளைத் திறந்து பெட்ரோல் டாங்க் திறந்து...

    வண்டிக்குள் இருக்கும் டூல் பாக்ஸ் எடுத்து ஏதேதோ செய்கிறான். அவன் கையெல்லாம் பெட்ரோல், கரும்புகை, மசி. அவனுடைய பதினைந்து நிமிட உழைப்புக்குப் பின் ஹோண்டா கோபத்துடன் உறுமிப் புகைக்கிறது.

    இவள் சந்தோஷத்துடன் வண்டி அருகே போக இரண்டடி எடுத்து வைக்கும்போதே, எதிர்பாராமல் அது நடக்கிறது. அந்த உயரமான வாலிபன் வண்டியில் இளவரசனாய் ஆரோகணிக்க இவள் வண்டி காற்றாய் விரைந்து மறைகிறது.

    இவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இவள் வண்டியைத் திருடிப்போய்விட்டானா? அப்போதே அவன் அழுக்குச் சட்டையையும், உருவத்தையும் பார்க்கும்போதே ஏதோ இவள் நெஞ்சுக்குள் உறுத்திற்று.

    இவள் 'ஹெல்ப்…ஹெல்ப்…’ என கத்த வாய் திறக்கையில் பாந்தியன் சாலையின் மூலைக்குப் போய் திரும்பவும் துப்பாக்கியிலிருந்து விடுபட்ட புல்லட்டாய் அந்த வாலிபன் வண்டியில் திரும்ப வருகிறான்.

    விரையும் வாகனங்களிடையே நீந்தி இவளருகே வந்து மூச்சு வாங் நின்று மெளனிக்கிறது இவளது கைனடிக் ஹோண்டா.

    மேடம், இன்னும் ரெண்டு மாசத்துக்கு வண்டில ரிப்பேரே இருக்காது.

    வண்டியைத் திருடிப் போய்விட்டான் என நினைத்ததற்காக வெட்கப்பட்டபடி அவனைப் பார்த்து மென்மையாய் முதல் முறையாய் சிரிக்கிறாள் பாரதி.

    வெயிலுக்குப் பனிமலையே அருகில் வந்ததுபோல அந்த வாலிபன் சந்தோஷிக்கிறான்.

    தேங்க்யூ வெரி மச். இந்தாங்க.

    தன் பர்ஸிலிருந்து ஒரு புது நூறு ரூபாய் நோட் எடுத்து அவனிடம் நீட்டுகிறாள்.

    நூறு ரூபாய்க்கெல்லாம் என்கிட்ட சில்லறை இல்லீங்க.

    சில்லறை வேணாம். நீங்க ரிப்பேர் செய்ததுக்குத்தான்.

    ஸாரிங்க, மேடம். நீங்க பணம் குடுப்பீங்கன்னு நான் ரிப்பேர் செய்யலீங்க. வெயில்ல தனியா கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தீங்க. அதான். வேணாங்க.

    அவள் நெகிழ்ந்து போகிறாள். இவனை எத்தனை அற்பமாய் நினைத்தோம்.

    மிஸ்டர், உங்களுக்கு அவசர வேலை இல்லைனா என்னோடவந்து கூல்டிரிங் குடிக்க முடியுமா?

    எஸ். வாங்க எதிர்ல ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் ஒரு கடை இருக்கு.

    நோ... நான் அங்கெல்லாம் வரமாட்டேன். ஹோட்டல் அஷோக்காக்குப் போகலாம் வாங்க.

    ஐயோ. பில் ஏகமா ஆகும்ங்க. நான் அங்கே போனதேயில்லை.

    பரவாயில்லை வாங்க.

    அவள் முன்னால் விர்ரென்று தன் ஹோண்டாவில் போக, அவள் பின்னால் அந்த காயலான் கடை சைக்கிள் கிறீச் கிறீச் என அலற இவன் வேகமாய் அவளைப் பின் தொடர்கிறான்.

    இவன் ஹோட்டலுக்குள் நுழைகையில் வாயிலில் நிற்கும் கூர்க்கா ஒரு மாதிரியாய் பார்க்கிறான். அவன் பார்வையை எடுத்து வீசிவிட்டு, அவள் வண்டி நிறுத்தின இடத்தில் தன் டப்பாவையும் நிறுத்திவிட்டு ஹோட்டலுக்குள் நுழைகிறான்.

    வெயிலில் வறுபட்டதற்கு குளிர்சாதனம் பொருத்தப்பட்ட, லேசாய் இருண்ட அந்த இடம் சொர்க்கமாய் தெரிகிறது. வாஷ்பேஸினில் சோப்புபோட்டு கை கழுவி துடைத்தபடி கண்ணுக்குப் பழகின இருளில் அவளைத் தேடுகிறான்.

    கூட்டமில்லை. ஒரிருவர் மட்டுமே இருக்க ,சுவரோர மேஜையருகில், அவள் நீர் அருந்தியபடி இவனைத் தலையசைத்து அழைக்கிறாள்.

    அவன் போய் மேஜையின் எதிர்ப்புறம் உட்காருகிறான்.

    ஆப்பிள் ஜூஸா, கிரேப் ஜூஸா.

    ஸாரி மேடம், பசிக்குது.

    ஒ... அப்ப என்ன சொல்லட்டும்.

    உங்களுக்குப் பிடிச்சது.

    சாப்பிடப் போறது நீங்க. நான் சொல்லணுமா? அவள் சிரிக்கிறாள்.

    அவன் வெட்கப்பார்வையுடன் தண்ணீர் தம்ளரை எடுக்கிறான்.

    அவன் சாப்பிடுவது

    Enjoying the preview?
    Page 1 of 1