Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aavi I Love You!
Aavi I Love You!
Aavi I Love You!
Ebook104 pages39 minutes

Aavi I Love You!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114204254
Aavi I Love You!

Read more from Hamsa Dhanagopal

Related to Aavi I Love You!

Related ebooks

Reviews for Aavi I Love You!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aavi I Love You! - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    ஆவி ஐ லவ் யூ!

    Aavi I Love You!

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    ஹேய் புவனா, எங்கேப்பா கவனம்?

    ஊம். என் தேவதை எனக்குக் கிடைப்பாளா இல்ல இந்த நேசம் இப்படியே கலைஞ்சு போயிருமான்னு பயமா இருக்கு சரயூ.

    ச்சீ... சுத்த கோழைப்பா நீ. இதோ இங்கேருந்து தெரியறதே அந்த பாண்டவர் ரதம், அது எத்தனையோ உண்மையோ அந்த அளவு, இந்த சரயூ, என்னைக்கும் எப்பவும் இந்த புவனேந்தருக்குத்தான். அந்தக் கற்கோயில் இருக்கிற வரைக்கும் நாம் இருப்போம். நம்மை யாராலும் பிரிக்க முடியாது.

    ஹோட்டல் டெம்பிள் த்ரியின் அறைச் சன்னலில் நின்றவாறு தூரத்தில் கடலலைகள் சதா வந்து தழுவ, காலம் வென்று நிற்கும் கற்கோவில்களைப் பார்த்தபடி எங்கோ கவனம் வட்டமிட, சீரான குரலில் சொல்கிறாள் ப்ரதிமா சரயூ.

    புவனேந்தர், அலங்கார மேசை முன் உட்கார்ந்திருந்தவன் பிரஷ்ஷால் தன் மீசையை ஒழுங்குபடுத்தியபடி கண்ணாடியில் வெள்ளை சூரிதாரில் மெலிதான ரோஸ் வண்ண ஸல்வாரை இடத்தோளில் சுமந்து, முத்துக்கள் பதித்த வளையல்களும் முத்து மாலையுமாய்... வானுலக தேவதை இந்த நட்சத்திர ஹோட்டலுக்கு வழி தவறி வந்தாற்போல் நிற்கும் அவளைப் பார்க்கிறாள்.

    புவனா, அவனவன் பறப்பான். அதுவும் ஓர் இளம் பெண், அழகானவள் என்றால் சொல்ல வேணாம். ஆனா பத்து மணி நேரமா என்னோட இந்த ரூம்ல தனியா இருக்க. மைகாட், புவனா ரியலி யூ ஆர் ஓ.கே.

    ஜீன்ஸும் டைட் பனியனுமாய் எழுந்த புவனா மீசை விகசிக்க, மெல்லிய சிரிப்புடன் அவளருகே போய் நின்று அவள் விழி போகும் பாதையில் தன் விழியோட்டுகிறான்.

    புரியுது சரயூ. என் மனசு இதயம் முழுக்க நிறைஞ்சிருக்கற சரயூ, என் மனசிலே எப்பவோ என்னுடையவ ஆகிட்டா. உடம்பால... நோ... மேரேஜுக்கு அப்புறம் கூட எனக்கு அவ, அவ விரும்பினா தான். ஓகே. புரியுதா?

    தேங்க் யூ புவனா, இந்த நிதானம், இந்த அத்து மீறாத குணம் இதெல்லாம்தான் எனக்கு உன்கிட்ட பிடிச்சிருக்கு. வா. போய் ரூமை வெகேட் செய்துட்டு டிபன் சாப்பிட்டுப் புறப்படுவோம்.

    ஓ.கே.

    இருவரும் காபி பாரில் நிதானமாய்ச் சாப்பிட்டபடி பேசுகிறார்கள். ஆங்காங்கே ஒரு சிலர் மட்டுமே நாற்காலி நிறைத்து இழையாக ஓடி வரும் மேற்கத்திய சங்கீதத்தைப் புறக்கணித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

    இங்கே பார் சரயூ, இங்கே இப்ப நீ ஒரு நாளைக்கு ஆயிரத்து மேலே செலவு செய்திருக்க. என் சம்பளமே இரண்டாயிரத்துக்குள்ள தான். உன்னால அதுல குடும்பம் நடத்த முடியுமா? முடியாதுமா. வேணாம். இந்த உறவை இப்படியே பிரிச்சிருவோம். நீ யாரையாவது ஒரு கோடீஸ்வரனை உங்கப்பா பார்த்துச் சொல்றவனை...

    யூ... ஷட் அப்! எனக்குத் தெரியும். இதுக்கு மேலே பேசினா...

    கண்ணாடி தம்ளரிலிருந்த ஐஸ் நீரை அவன் ஜீன்ஸில் ஊற்றி விடுகிறாள் சரயூ. சில்லென்கிற நீரில் துடித்து, வெளியே எப்படிப் போவது என் உரக்கக் குரல் கொடுத்து விடுகிறான் அவன்.

    பேரர் ஓடி வருகிறார்.

    சாரிப்பா. கை ஸ்லிப்பாச்சு.

    இருவரும் கார் நிறுத்துமிடம் நடக்கிறார்கள். வெளி நாட்டு ஜோடிகள், நகரத்துப் பணக்கார இளசுகள் இவர்களை வேடிக்கை பார்ப்பதுடன், இவன் நனைந்த ஜீன்சை ஒரு மாதிரியாகப் பார்த்துப் பேசுகிறார்கள். புவனுக்குக் கூச்சம்.

    ஸாரி புவனா, நீ அப்படிச் சொன்னதும்...

    நமக்குப் பிடிக்கல என்கிறதுக்காக உண்மை பொய்யாகுமா சரயூ?

    ச்சூ, இதுக்கு மேலே பேசினா உன்னைவிட்டு நான் மட்டும் கார்லே போயிருவேன்.

    உனக்கு எதிலும் பிடிவாதம் அதிகம் சரயூ.

    சரயூ, வெள்ளை மாருதியைக் கிளப்பி, அவனருகே கொணர்ந்து சடக்கென பிரேக் போட, வண்டி குலுங்குகிறது.

    ஹலோ மிஸ் டேவிட் ஞானஷேகர், எங்கே இப்படி...

    கட்டை குட்டையாய்க் கோட்டும் சூட்டுமாய் இவளைப் பார்த்து கையாட்டி அருகில் வருகிறார் ஒரு நடுத்தர வயதைக் கடந்த மனிதர். அவர் விரல்களில் மின்னும் மோதிரங்கள்.

    குட் ஈவினிங் அங்கிள், மீட் மை ப்ரண்ட் மிஸ்டர் புவனேந்தர் எலக்ட்ரானிக் என்ஜீனியர். இவர் மிஸ்டர் ஜார்ஜ். அப்பா ப்ரண்ட். ஆன்ட்டி எப்படி இருக்காங்க அங்கிள்?

    நைஸ் அமெரிக்கால மக வீட்ல இருக்கா. டாடி எப்படி இருக்கார்? இப்ப எல்லாம் அவர் ஜிம்கானா கிளப்புக்கே வரதில்ல. விசாரிச்சதா சொல்லுமா. சர்ச்சிலேயும் பார்க்க முடியறதில்லை.

    ஸீ யூ அங்கிள்!

    வெள்ளை மாருதி, மகாபலிபுரத்திற்கு டாட்டா சொல்லிப் புறப்படுகிறது.

    அவர் எங்கப்பா ப்ரண்ட் மட்டுமல்ல. பிஸினஸ் பார்ட்னர்ஸா இருந்தாங்க. அப்புறம் பிரிஞ்சுட்டாங்க.

    நீ என்னை அறிமுகம் செய்தப்ப அவர் என்னை மதிக்கவே இல்லை. என் வணக்கத்தையும் கவனிச்சதா காட்டிக்கலை.

    "போகட்டும் விடு புவனா.

    Enjoying the preview?
    Page 1 of 1