Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vizhi Vaasal Vasanthangal
Vizhi Vaasal Vasanthangal
Vizhi Vaasal Vasanthangal
Ebook67 pages27 minutes

Vizhi Vaasal Vasanthangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vizhi Vaasal Vasanthangal, Hamsa Dhanagopal, Tamil, Family, Novel, ebook
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114204118
Vizhi Vaasal Vasanthangal

Read more from Hamsa Dhanagopal

Related to Vizhi Vaasal Vasanthangal

Related ebooks

Reviews for Vizhi Vaasal Vasanthangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vizhi Vaasal Vasanthangal - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    விழி வாசல் வசந்தங்கள்

    Vizhi Vaasal Vasanthangal

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    1

    ஜனனி, பால் தம்ளருடன் உள்ளே நுழைகிறாள். ஒரு மாதத்திற்கு முன்பே மிஸஸ் மதுசூதன் ஆகிவிட்டபோதும் இன்றுதான் உண்மையில்...

    அலங்கரிக்கப்பட்ட கட்டிலிலிருந்து அவளருகே வருகிறான் மது. அவளை அணைத்துப் போய் அருகே உட்கார்த்திக் கொள்கிறான். அவள் தேகம் மெல்லிய பட்டிழையாய் நடுங்குகிறது. இதய இரைச்சல் வெளி தெரிந்துவிடுமோ என அஞ்சுகிறாள். அவள் தந்தையினால் தடைப்பட்ட முதலிரவு இன்று இவள் சங்கடம் புரியாமல் வந்தே விட்டது.

    ஜனனி, எங்கே என்னை நிமிர்ந்து பாரேன். என்ன வெட்கம். அட பாரு ஜனனி. என்னைப் பிடிச்சிருக்கா. டூ யூ லவ் மீ.

    உம்...

    இதென்ன அசட்டுத்தனம். ஊரையும் உறவையும் அழைக்காமலே மணமேடையில் மஞ்சளும் குங்குமமுமாய் ஒன்று சேர்ந்தபின்... காதலித்தால் என்ன காதலிக்காவிட்டால் என்ன.

    ஜனனி...

    அவன் குரலில் திடுக்கிட்டு அவனைப் பார்க்கிறாள். டூ யூ லவ் மீ...

    ஊம்...

    இங்கே பாரேன். நாம் உடலால் மட்டுமல்ல மனதாலும் ஒன்று சேர்ந்த தம்பதியா இருக்கணும். உன் மனசை எனக்குச் சொல்லணும். என் மனசை உனக்குச் சொல்றேன். அப்பதான் நாம ஒத்துமையான தம்பதியா வாழ முடியும்.

    அவள் திடுக்கிட்டுப் பார்க்கிறாள். அவன் அணைப்பு, பேச்சு, செயல்... எதுவும் பிடிக்கவில்லை. விடுபட்டு போக முடியாத விலங்காய் தோன்றுகிறது.

    இங்கே பார், என் காலேஜ் டேஸ்ல நாலைஞ்சு கர்ள்ஸை நான் லவ் செய்திருக்கிறேன். அதில் மாதவின்னு ஒரு பொண்ணு. நாங்க கல்யாணமே செய்துக்க இருந்தோம். ஆனா அவ அண்ணன் அவளை அழைச்சுட்டு பாம்பே போயிட்டான். அப்புறம் அவ என்ன ஆனாளோ என்னமோ தெரியாது. இப்ப என் மனசில உனக்கு மட்டும்தான் இடம், வேற யாருக்கும் நுழைஞ்சு பார்க்கக் கூட இடமில்லை. இப்ப நீ சொல்லு.

    ஐயோ... இதென்ன அசட்டுத்தனம். அதெல்லாம் சொல்ல முடியுமா. இவன் பட்டென்று சொல்லிவிட்டான். அதைக்கேட்டு அவள் பேசாமல் இருக்க வேண்டும். இதுதான் பெண்மை. இவள் மனம் சொன்னால் இவனால் தாங்கிக் கொள்ள முடியுமா.

    உம்... செத்துப் போன உங்கப்பா மேலே ஆணையா சொல்லு. நீ யாரையாவது லவ் பண்ணியா. சொல்லு ஜனனி. நான் தப்பா எடுத்துக்க மாட்டேன். இளமையில் இதெல்லாம் சகஜம். அப்படியில்லன்னாதான் ஏதோ உடம்பில் கோளாறுன்னு அர்த்தம். உண்மைய சொல்லணும். நான் கேட்டுட்டு இப்பவே மறந்துருவேன். அப்புறம்தான் நம்ம உறவு.

    ஜனனிக்குத் தொண்டை அடைக்கிறது. விழிகள் குற்றாலமாய் கொட்டுவோம் என பயமுறுத்துகின்றன.

    உம்...

    சொல்லு. என்னை உன் பிரண்டா நினைச்சு தைரியமாக சொல்லு. நமக்குள்ள எந்த திரையும் இருக்கக் கூடாது.

    அப்ப எங்கப்பா கொடைக்கானல்ல போஸ்ட் மாஸ்டரா இருந்தார். எங்க வீட்டுக்கு எதிர் பங்களால சுதாகர் இருந்தார். ஆரம்பத்திலே வெறும் நட்பாதான் ஆரம்பிச்சது. அப்புறம் ஒருத்தரை ஒருத்தர்னு...

    உம்... பயப்படாமே சொல்லு.

    அவள் சொல்லலானாள்.

    அவள் துக்கத்தை அடக்க முடியவில்லை. விம்முகிறாள். அவள் முதுகில் மிருதுவான அவன் கரம் படிகிறது.

    "ஓ...நோ... டேக் இட் ஈஸி. இதெல்லாம் சகஜம். பயணம்னா அதுல பல பேரைச்

    Enjoying the preview?
    Page 1 of 1