Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthiya Thoranangal
Puthiya Thoranangal
Puthiya Thoranangal
Ebook184 pages1 hour

Puthiya Thoranangal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Ajudhya Kanthan
Languageதமிழ்
Release dateNov 16, 2020
ISBN9781043466640
Puthiya Thoranangal

Related to Puthiya Thoranangal

Related ebooks

Reviews for Puthiya Thoranangal

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthiya Thoranangal - Ajudhya Kanthan

    25

    ஆசிரியர் அறை

    அண்மையில் ஒரு செய்தி படித்தேன். நியூயார்க் நகரில் நடிகர் ஹ்ருத்திக் ரோஷனை ரசித்ததற்காக மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றதோடு தானும் தற்கொலை செய்து கொண்டாராம் ஒரு கணவர். தன் மனைவி மீது அன்பு இருக்கலாம். அதேநேரம் அவளின் சுதந்திரத்தில் தலையிடுவதால் அந்த அன்பு அடிபட்டு விடுகிறது.

    ஒரு ஆண் யாரை வேண்டுமானாலும் ரசிக்கலாம், பழகலாம். தவறில்லை. என்பதுபோல் ஒரு பெண்ணும் ஒரு நடிகனையோ, ஒரு பிரபலத்தையோ மனதளவில் ரசிப்பது இயல்பு.

    எனக்கு ஒரு நடிகரைப் பிடிக்கும் (எனக்கு இப்ப... எந்த நடிகையையும் பிடிக்காது, அது வேற விஷயம்), அரசியல் தலைவர்களைப் பிடிக்கும், விளையாட்டு வீரரைப் (தோனி) பிடிக்கும், மல்யுத்த வீராங்கனை சுஜிதாவை (மகள் போல்) பிடிக்கும். இதை என் மனைவி தவறு என்று சொல்ல முடியுமா...? முடியாது.

    அதேபோல் என் வீட்டம்மாவுக்கு விஜய்யைப் பிடிக்கும், அஜீத்தைப் பிடிக்கும், பிக்பாஸ் கமலைக் காட்டி, ‘பாருங்க, இந்த வயதிலும் என்ன மிடுக்கு!’ என்பார். (கமல் மிடுக்கு பாண்டி என்றால் நான் லொடுக்கு பாண்டியா?) இது அவர்கள் ரசனை; சுதந்திரம். சொல்லப் போனால் என் மனைவியின் இந்தச் செயலை ரசிப்பேன்.

    பல கணவர்கள் வீட்டில் ‘கடுகடு’ என்று இருப்பார்கள். மனைவியிடமோ குழந்தைகளிடமோ கலகலப்பாகப் பேசாமல் ஐஏஎஸ் ஆபீசர் மாதிரி இருப்பார்கள். இதனால் குடும்பத்தில் ஒரு இறுக்கம் ஏற்படும். அதன் எதிரொலி- ஒரு போலித்தனம் உண்டாகும்.

    மிகுந்த பாசமும், அன்பும், நட்பும் வைத்திருக்கும் பெற்றோர்களிடம் அவர்களது குழந்தைகள் கூடியவரை ஏமாற்றுவது இல்லை.

    காதலிப்பது தப்பா சரியா என்பது இங்கு விவாதம் இல்லை. ‘பாத்திரம் அறிந்து பிச்சை போடு, கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு’ என்பது போல், தன் மகள் நல்ல இடத்தில் வாழ வேண்டும் என்ற நல்லெண்ணம்தான் காதலுக்கு எதிர்ப்பாக மாறி விடுகிறது.

    இன்று கலாச்சாரம் கெட்டுவிட்டது என்றாலும் எதார்த்த இளைய தலைமுறைகள் ஆண் - பெண் சகஜமாகப் பழகுகிறார்கள். அதற்காக அவர்களைத் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது.

    இன்றைய புதிய சட்டம் கணவன் - மனைவி உறவுக்கு அடுத்து ஆண் - பெண்களுடன் நண்பர்களாகப் பழகுவது தவறில்லை என உள்ளது. பெண்கள், ஆண் நண்பர்களை வைத்துக் கொள்வதில்லை.

    ஒருமுறை என் பெண்சினேகிதியின் மகன் பிறந்த நாளுக்கு அவர் வீட்டுக்குச் சென்றேன். என்னைப் பார்த்ததும் ஓடிவந்து ‘ஐ... அசோகன் சார்’ என ‘ஹக்’ செய்தார்.

    எனக்குப் பெரும் கூச்சம் ஏற்பட்டதோடு அவரிடம், ‘என்னங்க, இப்படி நாலு பேர் எதிரில்...’ என்றேன். அதற்கு அந்தப் பெண்மணி, ‘சார், யாரும் இல்லாதப்ப ‘ஹக்’ செய்வதுதான் தப்பு. இது தூய அன்பு’ என்றார்.

    அவர் என்ன சொன்னாலும் நான் அதுபோன்ற நிலையில் இருந்து விடுபட பல நாட்கள் ஆனது. காரணம் என் தந்தை என்னை அப்படி வளர்த்து விட்டார். அதேநேரம் ‘இன்றைய கலாச்சார உலகில் ஆண் - பெண் நட்பு சகஜமான ஒன்று’ என்று யதார்த்த வாழ்க்கைக்கு வந்துவிட்டேன்.

    அல்லாவை நம்புங்கள், அதேநேரம் ஒட்டகத்தைக் கட்டிப் போடுங்கள் என்பது போல்- நான் என் மகள்களை சுதந்திரமாக வைத்துள்ளேன். இருந்தாலும் ஒரு நல்ல வாட்ச்மேனாக இருந்து கொண்டுதான் இருக்கிறேன்.

    அதே லவ்வுடன்

    ஜி.அசோகன்

    அசோகன் ஆத்திச் சூடி

    ட்ரங்குப் பெட்டி

    அம்மாவின் சீதனப் பெட்டி

    ஆண்டுகளானாலும் அசையாப் பெட்டி

    இதுதான் அந்தக்காலப் பெட்டகம்

    ஈரம் பட்டாலும் துருவேறாத துத்தநாகம்

    உக்கார்ந்தாலும நசுங்காதது நல்ல பெட்டி

    ஊருக்குப் போக உன்னதப் பெட்டி

    எட்டுப் பேர் துணிக்கும் இடமுண்டு

    ஏனோ இன்று இல்லாமல் போனது

    ஐஸ்வர்யம் கொண்ட அதிர்ஷ்டப் பெட்டி

    ஒருபோதும் உடையாத பத்திரப் பெட்டி

    ஓகணம் வாழ உதவும் பெட்டி

    ஔசிரமாக உதவும் உத்தமப் பெட்டி

    ஃகடா என இருந்தாலும் அவசியப் பெட்டி

    [ ஒகணம்- மூட்டைப் பூச்சி. ஔசிரம்- இருக்கை, படுக்கை.]

    1

    மிகப் பெரிய நகரமும் இல்லாது கிராமமும் இல்லாத ஊர் ஜெயங்கொண்டம். அதில் உள்ள ஒரு பெரிய திருமண மண்டபத்தின் வாசலில் ‘அருண்குமார் வெட்ஸ் இன்னிலா’ என்ற பெரிய பேனர் வரவேற்க, கல்யாண மண்டபத்தின் உள்ளே மிகப் பெரிய கலவரமாய் இருந்தது.

    முந்தைய நாள் ரிசப்ஷன் முடிந்து போய் படுத்த மாப்பிள்ளையை இன்று காலை காணோம் என்றால் யாருக்குத் தான் கோபம் வராது. பெண்ணின் அப்பா பலராமன் அங்கு கத்திக் கொண்டு இருந்தார். என்னவே நினைச்சிட்டு இருக்கீரு...? உங்க பையனைக் காணோம்னு வந்து கூலாச் சொல்றீரு. இன்னைக்கு வேண்டாம்னு போன உம்ம பையன், பொண்ணு பார்க்க வந்தப்பவே வேண்டாம்னு சொல்லியிருந்தா எங்களுக்கு இவ்வளவு அவமானம் இல்லையே. லட்ச, லட்சமா செலவழிச்சு கல்யாணம் நின்னு போச்சுன்னா எங்களுக்கு அவமானம் மட்டும் இல்லை! என் பொண்ணோட வாழ்க்கை...? அதுக்கு இப்ப என்ன பதில் சொல்றீர்? என்று எகிறிக் கொண்டு இருக்க, அருகில் அவரது மனைவி பவானி அழுது கொண்டு இருந்தார்.

    அதற்குள் ஆளாளுக்கு நின்று பெண்ணைப் பற்றியும், மாப்பிள்ளை பற்றியும் தங்களுக்குள் விமர்சிக்க, சத்தம் கேட்டு வெளியே வந்த மணப்பெண் இன்னிலா அதிர்ந்து போய் நின்றாள்.

    தப்புதான். எங்களை மன்னிச்சிருங்க. பையனை வளர்க்கத் தெரியாமல் வளர்த்துட்டேன்... என்று, கொஞ்சமும் யோசிக்காமல் எல்லார் முன்னாடியும் பெண்ணின் அப்பா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டவரை அதற்கு மேல் திட்ட என்ன இருக்கு என்பது போல் நின்ற பலராமன், தனது அறையை விட்டு வெளியே வந்து நிற்கும் தனது பெண்ணை பார்த்ததும் உடைந்து போய் அழ ஆரம்பித்தார். ஒரே பெண். பார்த்து, பார்த்து வளர்த்து அதற்கு கல்யாணம் என்றதும் தனது அத்தனை சேமிப்பையும் செலவழித்து ஏற்பாடு பண்ணிய இந்தத் திருமணம் நின்று போனதில் இன்னும் அவருக்கு நெஞ்சுவலி வராமல் இருந்தது தான் ஆச்சரியம்.

    அவர் தன் பெண்ணின் அருகில் வந்து அழவும், அவரது மனைவியும் இனி தங்கள் பெண்ணின் வாழ்க்கை என்னாகுமோ என்ற பயத்தில் அழ, அதை பார்த்த அனைவருக்கும் கண் கலங்கியது. அவர்களின் அழுகையை காண சகிக்காமல் தன்னருகில் நின்று கொண்டிருந்த நந்தகுமாரைப் பார்த்து ஏண்டா நீ அவன் பிரண்ட் தானே! உனக்கு தெரியாமல் அவன் எப்படி போனான்...? என்று கந்தையா உலுக்க...

    இல்லை. நானும், அவன் இப்படி செய்வான்னு எதிர்பார்க்கலை. ரிசப்ஷனுக்கு அவன் ஒத்துகிட்டு நின்னு போட்டோ எடுக்கவும், சரி இனி பேசாம இருப்பான்னு நினைச்சுட்டேன். அவன் இப்படி பண்ணுவான்னு நினைக்கலை... நண்பனைப் பற்றி பேசுகையிலே அவனுக்கு வெறுப்பு தோன்றியது.

    "நான் வீட்டுக்கு போயிட்டு காலையில வந்துடறேன்னு சொல்லிட்டு தான் போனேன். அதற்குள் அவன் இப்படி காணாம போயிடுவான்னு நினைக்கலை. மனசுக்குள் ‘நல்லவேளை தாலி கட்றதுக்கு முன்னாடி போனான். தாலியை கட்டிட்டு அப்புறம் வேண்டாம்னு போனா இன்னும் மோசமா போயிருக்கும் அந்த பொண்ணோட வாழ்க்கை...’ என்று மனசாட்சி நண்பனுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தது.

    நந்து நான் ஒண்ணு சொன்னா கேட்பியா...? என்ற பீடிகையுடன் கந்தையா ஆரம்பிக்க, ‘மகன் பெரிய கல்லா தூக்கி அவங்க தலையில போட்டான்.இவர் இன்னும் எந்தக் கல்லை தூக்கி யார் தலையில போடப் போறாரோ’ என்பது போல் பார்க்க... (ஆப்பு உனக்குத்தாண்டி... ஹி, ஹி என்று விதி சிரிக்க)

    எனக்கு தெரிஞ்சு நல்ல குடும்பம். பொண்ணு பி.இ படிச்சுட்டு பாங்க்ல மானேஜரா இருக்குது. பொண்ணோட அம்மா டீச்சர். அப்பாவும் பேங்க்தான். பேசாமல் நீ கட்டிக்கடா அந்தப் பொண்ணை, நான் பொண்ணோட அப்பாகிட்ட பேசறேன்... என்றவர் அவன் அனுமதி இன்றி பலராமனிடம் போய் நின்றார்.

    ‘என்னது. நானா...?’ என்று மனதுக்குள் அலறியவன், அதை சொல்லுமுன்பே பலராமனிடம் அவர் பேச ஆரம்பித்து இருந்தார். (இதைத்தான் நேரம்னு பெரிசுக சொல்லுது தம்பி)

    பலராமன்... என்று அவர் அழைக்க, என்னவென்று பார்த்த அவரிடம், "நான் ஒண்ணு சொல்றேன். நீங்க கோவிச்சுக்கப் படாது. என்னடா இவன் பெரிசா நியாயம் பேச வந்துட்டான்னு நினைக்காம இப்ப இருக்கிற சூழ்நிலையை சமாளிக்க ஒரு வழி சொல்றேன். எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான். தங்கமான பையன். சொந்தமா ஒரு மெக்கானிக் செட் வச்சிருக்கான். டிப்ளமோ இன் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிச்சிருக்கான். அப்பா கிடையாது. கொஞ்சம் கோபக்காரன். ஆனால் நல்லவன். குடும்பத்தை அவன்தான் பார்த்துக்கிறான். அம்மாவும், தங்கச்சியும். தங்கச்சி உள்ளூர் காலேஜிலதான் படிக்குது. நீங்க சரின்னு சொன்னா, அவனை உங்க பொண்ணு கழுத்தில தாலி கட்ட சொல்றேன். பையனுக்கு நான் கேரண்டி. (என்னடா. ப்ரீத்திக்கு நான் கேரண்டிங்கிற விளம்பரம் மாதிரி இருக்குன்னு நினைக்கிறீங்களா? இப்படி சொல்லி சொல்லித்தானே அந்தக் காலத்துல எல்லா பெரியவங்களும் தங்களுக்கு தெரிஞ்ச குடும்பத்தை கோத்து விட்டாங்க. அதுக்கப்புறம் பிரச்சினை வந்தால், ஹி ஹி...எஸ்கேப்.)

    என்ன செய்வது என்பது போல் மனைவியை பார்க்க, அவர் மகளைப் பார்த்தார். பெற்றவர்களின் பார்வையில் ‘எப்படியாவது எங்களை இந்த சூழலில் இருந்து காப்பாற்றேன்’ என்று இறைவனிடம் வேண்டுவது புரிய ஒரு நொடி அந்தப் பெரியவர் சொன்ன மாப்பிள்ளை யார் என்பது போல பார்த்தாள்.

    நல்ல நிறம் என்று சொல்ல முடியாமல் வெயிலில் நின்று வேலை செய்வதால் மேனி கறுத்து மாநிறமாய் தெரிய, ஆனால் தீர்க்கமான கண்களும் முகவாயும் ஆறடிக்கு மேல் உயரமும் அதற்கேற்ற உடலமைப்பும் கொண்ட ஒரு வாலிபனாக தெரிய, ஆனால் அவன் முகத்தில் குழப்பம் விரவிக் கிடப்பதை பார்த்தவள் அப்பா எனக்கு சம்மதம். ஆனால் அதுக்கு முன்னாடி அவருக்கு சம்மதமான்னு வாய் மொழியா கேட்டுட்டு, சம்மதம்னா சொல்லுங்க. அல்லது வீட்டுக்கு கிளம்பணும்னாலும் சொல்லுங்க. ஆனால் எக்காரணம் கொண்டும் இடிஞ்சு போயிராதீங்கப்பா. வாழ்க்கையில ஆயிரம் பிரச்சனை வந்தாலும் அதை எதிர்த்து போராடணும்னு நீங்களும், அம்மாவும்தான் எனக்கு சொல்லிக் கொடுத்து இருக்கீங்க. அதை நீங்களும் இப்ப ஞாபகப்படுத்தி கிட்டா நல்லது... என்று சொல்லி விட்டு உள்ளே போய் விட, அடுத்த அரை மணி நேரத்தில் நந்தா என்ற நந்தகுமார் இன்னிலாவின் கழுத்தில் தாலியைக் கட்டி அவளை தனது மனைவியாக்கிக் கொண்டான்.

    2

    தன் வீட்டு வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த பூரணி அதில் இருந்து மாலையும் கழுத்துமாய் இறங்கிய மகனையும், புதுப் பெண்ணையும் பார்த்து இடிந்து போய் நிற்க, பின்னால் இருந்த காரில் இருந்து இறங்கிய கந்தையா அம்மா, நந்தாவை தப்ப நினைக்காதீங்க. இந்தக் கல்யாணத்துக்கு நான் தான் காரணம். வாங்க உள்ள போய் பேசலாம்... என்று சொல்ல- ஒன்றுமே சொல்லாமல், உள்ளே நுழைந்த மகனையும், புது பெண்ணையும் முதலில் உள்ளே

    Enjoying the preview?
    Page 1 of 1