Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sonthamadi Nee Enakku!
Sonthamadi Nee Enakku!
Sonthamadi Nee Enakku!
Ebook316 pages2 hours

Sonthamadi Nee Enakku!

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

என் பக்கம்

பெண் என்று பிறந்து விட்டால் ஒரு நாள் கணவன் வீட்டுக்குச் செல்லத்தான் வேண்டும்... ஆனால் திருமணம் என்ற வார்த்தையே இந்தக் கதையின் நாயகிக்கு கசப்பைத் தந்தது...

பெற்றெடுத்து... சீராட்டி வளர்த்த பெற்றோர்கள்... பாசமிக்க உடன் பிறந்தவர்கள் இவர்களையெல்லாம் உதறிவிட்டு யாரோ ஒருவனுடன் போய் வாழ்வதாம்... அது ஒரு வாழ்க்கையா என்ன... ஊகூம்... நான் கற்ற கல்வி... என் பாசத்துடன் கூடிய அக்கறை... எல்லாமே என் குடும்பத்தினருக்கு மட்டும் தான் என வீராப்பாய் இருக்கும் நேத்ரா...

தனக்கு தாலி கட்டியவன் பின்னே துள்ளலுடன் சென்றது ஆச்சர்யம் தான். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். அடுத்த நாவலில் உங்களைச் சந்திக்கிறேன்.

உங்கள்
அருணா நந்தினி

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580104904487
Sonthamadi Nee Enakku!

Read more from Arunaa Nandhini

Related authors

Related to Sonthamadi Nee Enakku!

Related ebooks

Reviews for Sonthamadi Nee Enakku!

Rating: 4 out of 5 stars
4/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sonthamadi Nee Enakku! - Arunaa Nandhini

    http://www.pustaka.co.in

    சொந்தமடி நீ எனக்கு!

    Sonthamadi Nee Enakku!

    Author:

    அருணா நந்தினி

    Arunaa Nandhini

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arunaa-nandhini-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    என் பக்கம்

    பெண் என்று பிறந்து விட்டால் ஒரு நாள் கணவன் வீட்டுக்குச் செல்லத்தான் வேண்டும்... ஆனால் திருமணம் என்ற வார்த்தையே இந்தக் கதையின் நாயகிக்கு கசப்பைத் தந்தது...

    பெற்றெடுத்து... சீராட்டி வளர்த்த பெற்றோர்கள்... பாசமிக்க உடன் பிறந்தவர்கள் இவர்களையெல்லாம் உதறிவிட்டு யாரோ ஒருவனுடன் போய் வாழ்வதாம்... அது ஒரு வாழ்க்கையா என்ன... ஊகூம்... நான் கற்ற கல்வி... என் பாசத்துடன் கூடிய அக்கறை... எல்லாமே என் குடும்பத்தினருக்கு மட்டும் தான் என வீராப்பாய் இருக்கும் நேத்ரா...

    தனக்கு தாலி கட்டியவன் பின்னே துள்ளலுடன் சென்றது ஆச்சர்யம் தான். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். அடுத்த நாவலில் உங்களைச் சந்திக்கிறேன்.

    உங்கள்

    அருணா நந்தினி

    1

    வாணலியை 'ஸ்டவ்' மீது வைத்து அதில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றினாள் நேத்ரா... அதில் கடுகைப் போட்டு தாளித்தாள். தோல் உரித்து வைத்திருந்த உருளைக்கிழங்குத் துண்டுகளை வாணலியில் போட்டு... உலையை மிதமாய் வைத்தாள்..

    பொன் வறுவலாய் வறுத்தால் ருசியாக இருக்கும்.

    உருளைக்கிழங்கா.. ஊகூம்.. வாயு பதார்த்தம்மா என்று ஒதுக்கும் டாடியும் விரும்பி அதைச் சாப்பிடுவார்.

    பாவம் டாட்.. பெரிய டாக்டர் என்ற பெயர்தான்.. அவரையும் இந்த வாயுத் தொல்லையும். வயிற்று உப்பசமும் விட்டு வைக்கவில்லை. நீ டாக்டராய் இருந்தால் எனக்கென்ன பயம்.. எனக்கு எல்லாரும் ஒன்றுதான் டாக்டர் என்று மிரட்டுகிறது.. உருளைக்கிழங்கு ரோஸ்ட் அவருக்குப் பிடித்தமான பதார்த்தம். ருசித்துச் சாப்பிட ஆசை இருந்தாலும்.. வாயு பகவானின் அன்புத் தொல்லையை நினைத்து ஏக்கப் பெருமூச்சு விடுவார். அவரைப் பார்க்கவே பாவமாக இருக்கும்.

    அதனால் கூடவே சீரக திப்பிலி ரசமும் வைத்து விடுவாள்.

    வாயுவை அது ஓட ஓட விரட்டிவிடும் என்பதால்.. அத்தோடு.. கேரள பாணியில் சீரக வெள்ளமும் தயார் பண்ணி சாப்பாடு மேஜையில் வைத்து விடுவாள்.

    பிறகு என்ன.. உருளை ரோஸ்டை எல்லோரும்.. தந்தையும் சேர்த்து ஒரு வெட்டு வெட்டுவார்கள். அப்புறம் இருக்கவே இருக்கிறது திப்பிலி ரசமும்.. சீரக வெள்ளமும். வாயுத் தொல்லையாவது.. கிட்டே நெருங்குவதாவது.. நெவர்.

    ஆனால் ஒன்று.. மாதத்தில் இரண்டு நாள் மட்டுமே உருளை வறுவலுக்கு அனுமதி. மற்ற நாள்களில் தினசரி மெனுவில் அது இடம் பெறாது. யார் கெஞ்சினாலும் கிடையாது. அத்தனைக் கண்டிப்புடன் இருப்பாள் நேத்ரா.

    ஏனென்றால் 'புட் டிபார்ட்மெண்ட்' முழுக்க முழுக்க அவளுடையது. மெனு ராணி அவள் தான். சமையல் அறையில் அவள் வைத்தது தான் சட்டம். அவள் கிச்சன் கில்லாடி என்பதால் மட்டும் இல்லை. அவள் படித்த படிப்பும் அதே தான்.

    அவள் வீட்டில் எல்லோருமே டாக்டர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் தேர்ச்சி பெற்று.. தம் தொழிலில் நல்ல பெயர் எடுத்தவர்கள்.

    அவளது தந்தை சத்யமூர்த்தி மணிப்பால் ஹாஸ்பிடலில் கார்டியாக் சர்ஜன்.. நெடுநெடுவென்ற உயரம். கம்பீரமான தோற்றம்.. முகத்தில் சாந்தமும்.. இனிய சுபாவமும் எல்லோரையும் வசீகரிக்கும்.. அவரிடம் வரும் நோயாளிகளுக்கு அவர் நடமாடும் தெய்வம். அவர் என் தந்தை என்று சொல்லிக் கொள்வதில் நேத்ராவுக்கு பெருமைதான். அவளது தாய் சுனந்தா மகப்பேறு மருத்துவர். நல்ல கைராசியான மருத்துவர் என்ற பெயர் பெற்றவர்.

    யோகா.. தியானம் என்று தினமும் தவறாமல் செய்து தன் உடம்பை படு கச்சிதமாய் வைத்துக் கொண்டிருப்பார்.

    சதை போடாத உடம்பு வயதைக் குறைத்துக் காட்டும். வயது ஐம்பத்து நான்கு என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். பார்க்க அத்தனை இளமையாக இருப்பார். தோற்றத்திலும் மிடுக்கு இருக்கும்.

    வயிற்றுச் சுமையுடன் கூடவே பயத்தையும் மனதில் சுமந்து கொண்டு வரும் பெண்களிடம் பரிவாய் பேசி.. அவர்களது பயத்தையும்.. பிரசவம் நல்லபடியாய் ஆக வேண்டுமே என்ற கவலையையும் போக்கி.. தைரியமூட்டி பிறகுதான் தன் சிகிச்சையைத் தொடங்குவார். அவரிடம் வந்தால் நிச்சயம் சுகப் பிரசவம் தான் என்ற நம்பிக்கையுடன் கருவுற்ற தாய்மார்கள் வருவதுண்டு.

    அந்த நம்பிக்கை வீண் போகாமல் சுனந்தாவும் கூடியவரைக்கும் சுகப்பிரசவமாக செய்ய முயல்வார். பணம் தான் முக்கியம் என்று நினைத்து.. சிசேரியன் என்று சொல்லி பணம் பிடுங்க நினைக்கும் டாக்டர்களுக்கு நடுவே.. இவரைப் போன்ற நேர்மையான மருத்துவர்கள் அபூர்வமாயிற்றே. அதனால்தான் சிறந்த மகப்பேறு மருத்துவர் என்ற புகழும் அவருக்குக் கிடைத்தது.

    மருத்துவ உலகில் தன் பெற்றவர்களுக்குக் கிடைத்த புகழையும் நன்மதிப்பையும் கண்டு, நேத்ராவின் உள்ளம் பெருமிதத்தில் விம்மியது.

    அவர்கள் மட்டுமில்லை. அவளது அண்ணன் அசோக்கும் தான். மருத்துவப்படிப்பில் முதல் மாணவனாய் தேர்ச்சி பெற்று அதற்காக தங்கப் பதக்கமும் பெற்றவன். மேனாட்டில் மேற்படிப்பை முடித்து விட்டு வந்தவன்.

    பிரபலமான மருத்துவமனைகள் அவனுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வேலை தரத் தயார் என்ற போதிலும்... அவற்றையெல்லாம் உதறி தள்ளி விட்டு.. ட்ரஸ்டால் நடத்தப்பட்டு வந்த இலவச மருத்துவமனையில் குறைந்த சம்பளத்தில் பணி புரிந்தான்.

    தான் படித்த படிப்பை ஏழை மக்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதே அவனின் குறிக்கோள்.

    பணக்காரர்களுக்காக நிறைய மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இல்லாதவர்களுக்கு யார் இருக்கிறார்கள். அவர்களுக்கு என் படிப்பு உதவட்டுமே.. என்ற மகனை பெருமிதத்துடன் பார்த்தனர் பெற்றவர்கள்.

    இந்தக் காலத்தில் இப்படியொரு பிள்ளையா என்று வியந்தனர். மருத்துவ படிப்பு முடிந்ததும்.. சிகிச்சை என்ற பெயரில் பணத்தைக் கறந்துவிட நினைக்கும் இளைஞர்களின் காலம் இது. மருத்துவப் படிப்புக்கு செலவான தொகையை மருத்துவத் தொழிலில் இரண்டு மடங்காய்.. மூன்று மடங்காய் சம்பாதித்து விட வேண்டும் என்னும் வெறியுடன் பணிபுரிய ஆரம்பிக்கும் இளம் மருத்துவர்கள் நடுவே.. தொழில் தர்மம்தான் முக்கியம் என்று எண்ணும் தன் பிள்ளையைப் போல் காண்பது அபூர்வம் தானே..

    ஆயிரத்திலோ.. ஏன்.. இலட்சத்திலோ ஒருத்தர் தான் அத்தகைய உன்னதமான எண்ணம் படைத்தவராக இருப்பார்கள்.

    பெற்றவர்கள் மனம் பூரித்துப் போனார்கள்.

    பணம் மட்டுமே குறி என்ற அளவில் கீழ்மட்டத்திற்கு வந்திருக்கும் மருத்துவ உலகில்.. தங்கள் பிள்ளை மக்களுக்கு சேவை செய்ய விரும்புவது பெரிய விஷயமாயிற்றே. இந்த சேவை மனப்பான்மையும். பெருந்தன்மையும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு மிக அவசியமான ஒன்று என்று நினைத்த பெற்றவர்கள் மகனின் இலட்சியத்திற்கு தடை சொல்லாமல்.. பாராட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

    சத்யமூர்த்தி மகனின் தோளைத் தட்டிக் கொடுத்து ஐ அம் வெரி ப்ரெளட் ஆஃப் யூ மை சன்.. உன் இலட்சியத்தை நான் பாராட்டுகிறேன். இப்போல்லாம் புனிதமான டாக்டர் தொழிலை வியாபாரமாக நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.. கிட்டத்தட்ட அரசியல் மாதிரி தான்.. ஓட்டுக்காக செலவழித்தப் பணத்தை.. தேர்தலில் ஜெயித்து பலமடங்காய் எடுத்துவிடலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளைப் போல்தான் இப்போ டாக்டர்களும் ஆகிவிட்டார்கள். மருத்துவப் படிப்புக்கு பணத்தை கொட்டத் துணிச்சலாய் வருவதற்குக் காரணமும் அந்த மாதிரிதான் ஆகி விட்டது. போட்ட பணத்தை நோயாளிகளிடம் வசூல் பண்ணி விடலாம் என்ற நம்பிக்கை தான். இப்போ பல அரசியல்வாதிகளும் சரி.. படித்து வரும் இளம் டாக்டர்களும் சரி.. மனசாட்சியை கழட்டி வைத்துவிட்டு அப்புறம் தான் தங்களது பணியை ஆரம்பிக்கிறார்கள். என்ன செய்வது.. நினைக்கவே வருத்தமாக இருக்கிறது. நீ அந்த மாதிரி இல்லாமல் பண வசதி இல்லாத கஷ்ட ஜீவிகளுக்காக உழைக்கப் போகிறேன் என்று நீ சொன்னது எங்களது வயிற்றில் பாலை வார்த்த மாதிரி இருக்கிறது அசோக்.. ஜன சேவையே ஜனார்த்தன் சேவை என்பார்கள்.. சந்தோஷமா உன் சேவையைத் தொடங்கு.. எங்களோட வாழ்த்துக்கள் மகனே.. என்று உற்சாகத்துடன் சொன்னார்.

    அசோக்கின் மனைவியும் டாக்டர்தான். பல் டாக்டர். அவளும் அமெரிக்காவில் மேற்படிப்பை கற்கும்போது தான் சந்திப்பு நிகழ்ந்தது. அசோக்கின் பண்பையும்.. அடக்கத்தையும் பார்த்து வியந்த பிரதிபா.. அவனை விரும்ப ஆரம்பித்தாள்.

    தனக்கு வரப்போகும் கணவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவளது கனவுகளுக்கு அவன் சரியாகப் பொருந்தினான்.

    ஒரு நாள் அவள் தனது காதலை அவனிடம் வெளியிட்டபோது.. அவனிடம் தயக்கம் தெரிந்தது.

    என்ன.. அசோக்.. உங்க பெற்றவர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்ற கவலையா...

    அதில்லை. அவர்கள் என் விருப்பத்திற்கு தடையேதும் சொல்ல மாட்டார்கள்.. பிரதிபா.

    அப்போ.. உங்களுக்கு என் மீது காதல் இல்லைன்னு சொல்லத் தயக்கம்.. அதானே.

    அதுவும் இல்லை. எனக்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது. இந்தியாவுக்கு திரும்பி போனதும் ஏழைகளின் நலனுக்காக பணிபுரிய வேண்டும் என்பது தான்... அதற்கு எனக்கு வரப்போகும் மனைவியும் சம்மதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பின்னால் தாம்பத்தியத்தில் அபஸ்வரம் வரக்கூடாது இல்லையா.. அதற்கு உனக்கு சம்மதம் என்றால் ஓகே.

    அட.. இதுக்கா தயக்கம்.. நான் உங்க லட்சியத்திற்கு குறுக்கே நிற்கமாட்டேன் அசோக். எனக்கும் பணம் முக்கியமில்லை. நிம்மதியான. சந்தோஷமான வாழ்க்கைதான் வேண்டும். பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்து விடலாம். ஆனால்.. மன நிம்மதியைப் பெறுவதுதான் கஷ்டம். உனக்கு பணம் வேண்டுமா. இல்லை சந்தோஷம். நிம்மதி வேண்டுமான்னு கேட்டால்.. நான் இரண்டாவதைத் தான் கேட்பேன்.. போதுமா.

    இது போதும் பிரதிபா. என் பெற்றவர்களின் சம்மதம் எளிதாய் கிடைத்துவிடும். உன் பக்கம் எப்படி.

    எங்க வீட்டிலும் அப்படித்தான் அசோக். எனக்கேற்ற மாப்பிள்ளை என்றால் அவர்களுக்கு சந்தோஷம் தான். அதுவும் உங்களைப் பார்த்தால் உடனே பிடித்துவிடும். உங்களோட லட்சியத்தை நீங்க சொல்கிறபோது எனக்கு வெட்கமாக இருக்கிறது அசோக். ப்ச்சு.. என்னால் அது முடியாது. என் படிப்புக்காக என் அப்பா கடன் பண்ணியிருக்கிறார்கள். அதைத் தீர்க்க நான் உதவ வேண்டும். இல்லாவிட்டால் நானும் உங்களுடன் சேர்ந்து கொண்டிருப்பேன்... என்று பிரதிபா சொன்னதும் மனம் குளிர்ந்து போனான் அசோக்.

    இந்த வார்த்தைகளை நீ சொன்னதே போதும் பிரதி. நிச்சயம் நம்ம வாழ்க்கை இனிமையாக இருக்கும் பார்.. உன் அப்பாவின் கடனைப் பற்றி நீ கவலைப்படாதே. அந்த கடனைத் தீர்க்க நானும் உனக்கு உதவுவேன். உன் வருமானத்தை அப்படியே உன் அப்பாவிற்குக் கொடுத்துவிடு. நமக்கு அது தேவைப்படாது என்றவனை பிரமிப்புடன் பார்த்தாள் பிரதிபா.

    அவளது மலைப்பைப் பார்த்துவிட்டு அவன் சிரித்தான்.

    என்ன பிரதி.. இவன் சொல்வதெல்லாம் நிஜமா.. இல்லை.. சும்மா அளக்கிறானா என்ற திகைப்பா. நான் எப்போதும் சொன்ன வாக்கை மீறமாட்டேன். போதுமா.

    கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது அசோக். ஆனால் ஒரு சின்ன உறுத்தல்.. அதற்கு உங்கள் வீட்டில் சம்மதிப்பார்களான்னு தெரியவில்லையே... அவர்களின் அனுமதியும் வேண்டாமா.

    அவர்களைப் பற்றி உனக்குத் தெரியாது பிரதிபா. இன்னொருத்தர் விஷயத்தில் அனாவசியமாய் தலையிடக் கூடாது. அது அநாகரீகம் என்று நினைப்பவர்கள். நான் இந்த விஷயத்தைச் சொன்னால் உடனே என்ன சொல்வார்கள் தெரியுமா. உன் மனைவியோட கஷ்ட நஷ்டங்களில் உனக்கும் பங்கு இருக்கிறதுப்பா. அவளுக்கு நீயும் உதவ வேண்டும். அதுதான் நியாயம் என்று சொல்வார்கள்.. என்று பெருமிதத்துடன் சொன்னான் அவன்.

    உங்கள் வீட்டிற்கு மருமகளாய் வர நான் ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும் அசோக்.. உங்க அப்பா.. அம்மா.. உங்க தங்கை எல்லோரையும் சந்திக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கு.

    இந்தியாவுக்குப் போனதும் என் வீட்டில் இது விஷயமாய் பேசி முடிவெடுத்ததும் உன்னை என் வீட்டிற்கு அழைத்துப் போகிறேன். என் தங்கையும் ரொம்ப நல்லவள். உன்னிடம் ஒட்டுதலாய் இருப்பாள். பாரேன்.. என்றதும்.. பிரதிபா அப்போதே கல்யாணம் ஆகி.. அவர்களுடன் சந்தோஷமாய் இருப்பதை கற்பனையில் கண்டு.. அகமகிழ்ந்தாள்.

    அவர்களின் விருப்பப்படியே அவர்களின் திருமணம் இனிதாய் நடந்தேறியது. நேத்ராவிற்கு ஒரு நல்ல அண்ணியாக மட்டுமில்லை. நல்ல சினேகிதியாகவும் இருந்தாள் பிரதிபா.

    அந்த வீட்டில் அனைவருமே டாக்டர்கள். அவளைத் தவிர..

    அவளையும் அதையே படிக்கும்படி சொன்ன போது... அவள் மறுத்து விட்டாள். வீட்டில் இருக்கும் டாக்டர்ஸ் போதாதா. அந்த குரூப்பில் நானும் சேர்ந்து கொள்ள வேண்டுமா. அய்யோ.. அப்புறம் நம் வீடு, வீடு மாதிரி இருக்காது. ஹாஸ்பிடல் மாதிரி தெரியும். நானாவது கொஞ்சம் வித்தியாசமா படிக்கிறேன்.. என்று சொல்லி.. ஹோம் சயன்ஸ் படிப்பை எடுத்துக் கொண்டாள்.

    அதில் அவள் அம்மாவிற்கு கொஞ்சம் வருத்தமே. ஏன்டா.. ஒரு நல்ல கோர்ஸா எடுக்கக் கூடாதா. ஹோம் ஸயன்ஸ் எதுக்கு. சீக்கிரமே என் கல்யாணத்தைப் பண்ணி வையுங்கள் என்பதை மறைமுகமாய் சொல்கிறாயா.. சொல்லு.. செய்து விடுகிறோம் என்றதும் மற்றவர்கள் சிரித்து விட்டனர்.

    சரியாகச் சொன்னாய் சுனந்தா.. என்னம்மா.. உன் அம்மா சொல்வதுபோல் அப்படி ஒரு ஆசை இருந்தால் சொல்லு.. ஒரு நல்ல மாப்பிள்ளையாப் பார்த்து.. கல்யாணத்தை முடிச்சுடலாம். எங்களுக்கு பேரன் பேத்தியைப் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்காதா என்ன.. ஆனால் ஒரு கண்டிஷன். வரும் மாப்பிள்ளை டாக்டரா இருக்க வேண்டும்... என்று தந்தையும் தன் பங்குக்குக் கிண்டல் பண்ண.. நேத்ரா தலையில் கை வைத்துக் கொண்டாள்.

    ஏம்ப்பா.. ஹோம் சயன்ஸ் எடுத்தால் கல்யாணத்திற்குதான் என்று யார் சொன்னது. இந்த வீட்டில் எல்லோரும் வெள்ளைக் கோட்டைப் போட்டுக் கொண்டு.. ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக் கொண்டு மிடுக்கா போயிட்டால் வீட்டை யார் பார்த்துக் கொள்வது. சாப்பாட்டு விஷயத்தை யார் கவனிப்பது. எல்லோருக்கும் வயிறு என்று ஒன்று இருக்கிறது இல்லையா.. அதையும் கவனிக்க வேண்டாமா.. பசியெடுத்தால் என்ன காப்ஸ்யூலையும் மாத்திரைகளையும் விழுங்கி வைப்பீர்களா.. சமையல்காரர்கள் சுத்தமாய் சமைப்பார்கள் என்று என்ன நிச்சயம். நம் வீட்டில் தான் யாருக்கும் வேற்றாள் சமைப்பது பிடிக்காதே. வீட்டு நிர்வாகம். உள் அலங்காரம்.. வரவு செலவு மெயின்டெயின் செய்வது.. டயட் கன்ட்ரோல்.. ஆரோக்கியத்தில் கவனம்.. சத்தான உணவு என்று எத்தனையோ விஷயங்கள் இந்த படிப்பில் இருக்கிறது.. அதைக் கற்றுக் கொண்டால் நல்லதுதானே.. என்று அவள் சொன்னதும். அனைவரும் வாயடைத்துப் போனார்கள். குழந்தை என்று நினைத்தோமே.. அந்த குட்டியா இப்படி பேசுவது.. என்னமாய் யோசிக்கிறாள்.

    மகள் எல்லாரையும் போல் மருத்துவம் படிக்கவில்லையே என்ற குறையை ஒதுக்கித் தள்ளிவிட்டு அவளது விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டினார்கள். அவளது விருப்பப்படியே.. ஹோம்சயன்ஸ் எடுத்து படித்து முடித்தாள் நேத்ரா.

    பெங்களூரில் பெயர் பெற்ற கல்லூரியில் இளநிலை படிப்பினை முடித்துவிட்டு.. அதன் பின்பு.. டயட்டீசியன் கோர்ஸையும் முடித்தாள்.

    பிறகு.. கேட்டரிங் வகுப்பிற்கு சென்று அனைத்து வட இந்திய... தென் இந்திய உணவு வகைகள்.. பஞ்சாபி.. குஜராத்தி.. கர்நாடகா.. ஆந்திரா.. கொங்கு நாடு.. செட்டி நாடு.. சைனிஷ் என்று பல டிஷ் வகைகள் என எல்லாவற்றையும் திருத்தமாய் கற்றுக் கொண்டாள்.

    வீட்டில்... தினுசு தினுசாய் சமைத்து எல்லோரையும் அசத்தினாலும்... அவர்களின் ஆரோக்கியத்தையும் நினைவில் வைத்துக் கொண்டு.. அளவான கலோரியில் இருக்கும்படி பார்த்துக் கொள்வாள்.

    அப்பாவிற்கு வாயுத் தொல்லை என்பதால் உணவில் கண்டிப்பாய் புதினாவும். பெருங்காயமும் மணக்கும். உடம்பில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க வாரத்தில் ஒரு நாள் மெனுவில் கொள்ளு ரசமோ.. அல்லது கொள்ளுத் துவையலோ கட்டாயம் இருக்கும்.

    இன்னும் உடல் சத்திற்கு முளைக்கட்டிய தானியங்கள் - வாழைப்பூ கறி.. வாழைத்தண்டுக் கூட்டு இவையெல்லாம் சிறுநீரகங்களின் நலனுக்கு... குடல் புண்.. வயிற்று எரிச்சலுக்காக மணத்தக்காளிக் கீரை மசியல்.. கண் பார்வை நன்றாக இருக்க பொன்னாங்கண்ணி சூப்.. சருமப் பராமரிப்புக்கு பச்சைக் காய்கறி ஸாலட்.. இரும்புச் சத்திற்கு பச்சை சுண்டைக்காய் வதக்கல்.. என்று எதையாவது செய்து சாப்பாட்டு மேஜையில் வைப்பாள்.

    வைத்தியர்களுக்கே வைத்தியமா.. சரிதான் என்று கேலி செய்து கொண்டு சாப்பிடுவார் சத்யமூர்த்தி.

    நான்கு மருத்துவர்கள் இருந்த வீட்டில் ஐந்தாவதாய் இன்னொருத்தரும் வந்து சேர்ந்து கொள்ள.. வீட்டில் ஆஸ்பத்திரி வாசனை கூடி.. பேச்சில் மருந்து நெடி அடித்தது.

    ஹரிணி.. நேத்ராவின் பெரியம்மாவின் மகள். எம்.டி. முடித்த கையோடு பெங்களூரில் ஒரு நல்ல ஹாஸ்பிடலில் வேலையும் கிடைத்து விட்டதால் சித்தி வீட்டிலேயே தங்கி விட்டாள். இதோ.. அவள் வந்து விட்டாள் என்பதை அவளுக்கு முன் வந்து கட்டியம் கூறிய அவளது பாடி லோஷன் வாசனை உணர்த்தியது.

    ஹேய்.. என்ன கம்மென்ற வாசனை.. எதோ ரோஸ்ட் மாதிரி இருக்கு. ம்ம்.. ஆலு ரோஸ்ட்.. சூப்பர்.. நேத்ரா.. உன்னோட பிரமாதமான சமையலை சாப்பிட்டு எனக்கு இரண்டு கிலோ கூடிவிட்டது தெரியுமா.. என்றாள் அருகில் வந்த ஹரிணி..

    அடடா.. எல்லோருக்கும் பிடிக்குமே என்று கொஞ்சம் அதிகமாகவே பண்ணி விட்டேனே.. இப்போ நீ சாப்பிடாமல் போனால் வேஸ்ட் ஆகி விடுமே.. என்ன செய்வது.. என்று குறும்புடன் சொல்ல.

    யார் சொன்னது.. நான் சாப்பிடப் போவதில்லன்னு.. ஸ்ஸ்ஸ்... பாரு.. வாயில் எச்சில் ஊறுவதை.. நீ அதைக் கொண்டு வந்து வைத்து விட்டு அப்பறம் பார்.. நான் எப்படி வெட்டுகிறேன்னு." என்று ஹரிணி சொன்னதும் கலகலவென்று சிரித்தாள் நேத்ரா.

    அப்படிச் சாப்பிட்டால் எடை இன்னும் கூடி விடும். அப்புறம் என்ன செய்வாய் ஹரிணி.. என்றாள் கேலியாய்.

    என்ன செய்வேனா.. நாளைக்கும்.. நாளை மறுநாளுக்கும் அரைப்பட்டினிதான். நீதான் செய்வேயே. கொள்ளு ரசம் அதைக் குடிச்சா போச்சு... சீக்கிரம் கொடேன்.. வயிறு புலம்புகிறது.. என்றாள்.

    இதோ.. ஐந்து நிமிஷம்.. டேபிளில் ரெடி பண்ணி விடுகிறேன். இரு என்றவள் பரபரப்புடன் இயங்கினாள்.

    சரி.. அதற்குள் என் செல்லை சார்ஜ் செய்து விட்டு வருகிறேன் என்று அவள் சென்றாள்.

    மளமளவென்று பதார்த்தங்களை பீங்கான் கிண்ணங்களில் மாற்றிவிட்டு... அவற்றைக் கொண்டு வந்து டைனிங் டேபிளின் மீது வைத்தாள்.

    சமைப்பது மட்டுமல்ல. அதை நேர்த்தியாய்.. கண் கவரும்படி வைப்பதும் ஒரு கலைதான். பார்த்ததுமே.. எடுத்து உண்ண வேண்டும் போல. நாக்கில் சுரக்க வேண்டும்.

    வெள்ளரியை வட்ட வட்டமாய் நறுக்கி அதை ஒரு அழகான தட்டில் அடுக்கி.. அதைச் சுற்றி காரட் துண்டுகளைக் கரைகட்டி அதன் மேல் லேசாய் உப்பையும் மிளகுத் தூளையும் தூவியிருந்தாள்.

    எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு டின்னர் ரெடி.. வரலாம் என்று குரல் கொடுத்தாள் நேத்ரா.

    இரவு நேரம் மட்டும் அனைவரும் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்பது அந்த வீட்டில் எழுதப்படாத சட்டம். அதைப் போட்டது நேத்ராதான். காலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் காலை உணவை முடித்துக் கொண்டு புறப்பட்டு விடுவார்கள்.

    சத்யமூர்த்திக்கு தினமும்

    Enjoying the preview?
    Page 1 of 1