Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Radha Kaadhal Varatha
Radha Kaadhal Varatha
Radha Kaadhal Varatha
Ebook914 pages8 hours

Radha Kaadhal Varatha

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

என் அன்பான வாசகர்களுக்கு வணக்கம்... நீண்ட நாட்கள் ஆகிவிட்டன... உங்களைச் சந்தித்து... இதோ இந்த நாவலின் மூலம் உங்களைச் சந்தித்து விட்டேன்.

இந்தக் கதையின் நாயகியும் எளிமையானவள்... உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவள்… காதல் என்றாலே ஒதுங்கி ஒளியும் அவளுக்கும் காதல் வருகிறது… ஆனால் கல்யாணத்திற்குப்பிறகு அவள் எப்போதோ செய்த சின்னதவறு பூதாகாரமாய் வந்து அவளை பயமுறுத்துகிறது... அதை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதை இந்தக் கதையில் சொல்லியிருக்கிறேன்…

இந்தக் கதையின் நாயகி ராதா உங்கள் மனதில் இடம் பெறுவாள் என்ற நம்பிக்கையுடன்… உங்களது கருத்துக்களை அறியும் ஆவலுடன் காத்திருக்கும்.

- அருணா நந்தினி

Languageதமிழ்
Release dateFeb 9, 2017
ISBN6580104901809
Radha Kaadhal Varatha

Read more from Arunaa Nandhini

Related authors

Related to Radha Kaadhal Varatha

Related ebooks

Reviews for Radha Kaadhal Varatha

Rating: 4 out of 5 stars
4/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Radha Kaadhal Varatha - Arunaa Nandhini

    http://www.pustaka.co.in

    ராதா காதல் வராதா

    Radha Kaadhal Varatha

    Author:

    அருணா நந்தினி

    Aruna Nandhini

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arunaa-nandhini

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    ராதா காதல் வராதா

    என் பக்கம்

    என் அன்பான வாசகர்களுக்கு வணக்கம்... நீண்ட நாட்கள் ஆகிவிட்டன… உங்களைச் சந்தித்து... இதோ இந்த நாவலின் மூலம் உங்களைச் சந்தித்து விட்டேன்.

    இந்தக் கதையின் நாயகியும் எளிமையானவள்... உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவள்… காதல் என்றாலே ஒதுங்கி ஒளியும் அவளுக்கும் காதல் வருகிறது… ஆனால் கல்யாணத்திற்குப்பிறகு அவள் எப்போதோ செய்த சின்னதவறு பூதாகாரமாய் வந்து அவளை பயமுறுத்துகிறது... அதை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதை இந்தக் கதையில் சொல்லியிருக்கிறேன்…

    இந்தக் கதையின் நாயகி ராதா உங்கள் மனதில் இடம் பெறுவாள் என்ற நம்பிக்கையுடன்… உங்களது கருத்துக்களை அறியும் ஆவலுடன் காத்திருக்கும்

    உங்கள்

    அருணா நந்தினி

    தொடர்புக்கு: arunaanandhini@gmail.com

    1

    வழியும் வியர்வையைத் துடைக்கவும் நேரமில்லாமல்… வேலையில் மும்முரமாய் இருந்தாள் ராதா,

    மருத்துவமனையில் அன்று அத்தனைக் கூட்டம்… அவளைச் சுற்றி ஈ மொய்ப்பதுபோல் நோயாளிகள் பெயர் தரக் காத்திருந்தார்கள். நோயாளிகளின் பெயரையும்… விவரங்களையும் கேட்டுக் கணினியில் பதிவு பண்ணி நோயைப் பற்றிய முழு விவரங்களையும் அதில் சேர்த்து நோயாளிகளுக்கு தனித் தனியாய் அட்டை எண் தந்து, அதன் நடுவே வரும் போன் அழைப்புகளுக்கு பதில் சொல்லி. ஒரு நிமிடமும் ஒய் வில்லாமல் பரபரப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தாள்.

    நல்லவேளையாய் பரிசோதனைகளுக்காக வரும் நோயாளிகளைக் கவனிக்கும் பொறுப்பை சுரேகா ஏற்றிருந்ததால்... வேலைப் பளு குறைந்திருந்தது.

    ஒரு வழியாய் நோயாளிகளை அங்கிருந்த இருக்கைகளில் அமர வைத்துவிட்டு... தன்னைச் சுதாரித்துக் கொண்டாள். முகத்தைத் துடைத்துக் கொண்டவள் தன் முன் இருந்த மினரல் வாட்டரை எடுத்துக் குடித்தாள்.

    பாட்டிலைக் கீழே வைக்கவும் இல்லை.

    ஹலோ மிஸ்டர் சுதர்சன் என்ற பேஷண்டோட ரூம் எது என்று தெரிவிக்க முடியுமா? என்றது ஒரு அழுத்த மான குரல்.

    நிமிர்ந்து பார்த்தாள். எதிர் நின்றாலே அண்ணாந்து பார்க்கும் உயரம்… இப்போது உட்கார்ந்தபடி பார்த்த வளுக்கு கழுத்து சுளுக்கியது போல வலித்தது...

    கொஞ்சம் இருங்கள்… பார்த்துச் சொல்கிறேன் என்றவள் கணிணியில் கண்களைப் பதித்துக் கேட்டாள். அவருடைய வயசு... அட்மிட்டுக்கான காரணத்தைச் சொன்னால் நல்லது… ஏனென்றால் இன்பேஷண்டாய் மூன்று சுதர்சன்கள் இருக்கிறார்கள். என்றாள் அவள்.

    அவருக்கு வயது அறுபத்து மூன்று. லேசாய் நெஞ்சு வலி என்றார். அதனால் அட்மிட் செய்திருக்கோம் என்று விவரம் தந்தான் அவன்.

    இதோ சில நிமிடங்களில் சொல்லி விடுகிறேன்.

    இந்த ஹாஸ்பிடலின் சீஃப் டாக்டருக்கு உறவு. ஸ்பெஷல் வார்டில் இருக்கிறார்… என்று அவன் சொன்னதும்,

    ஓ…! அந்தப் பேஷண்டா… அவர் ஏழாம் நம்பர் அறை யில் இருக்கிறார். இதை நீங்கள் முதலில் சொல்லியிருக் கலாமே மிஸ்டர் ம்ம் என்று இழுத்தாள்.

    கெளதம். தாங்க்ஸ் ஃபார் த இன்ஃபர்மேஷன் மிஸ் என்றவன் அவளைக் கேள்வியுடன் பார்த்தான்.

    அவள் யோசிப்பதற்குள் அவளது வாய் முந்திரிக் கொட்டையாய் சொல்லிவிட்டது.

    ராதா… ராதா முகுந்தன் என்றாள் புன்னகையுடன். பிறகு தான் அவசரப்பட்டு விட்டோமோ என்று தோன் றியது. முதல் நாள் அறிமுகத்தில் பெயரைச் சொல்ல வேண்டிய அவசியமேது. அதுவும் ஒரு இளைஞனுக்கு... அவளது முகத்தில் இருந்த புன்னகை மறைந்து யோசனை வரிகள் எட்டிப் பார்த்தன.

    மேலும் அவளைச் சீண்டிப் பார்க்கலாம் என்று நினைத்தானோ என்னவோ. இந்த முகுந்தன் என்பது உங்களோட கணவர் பெயரா? என்றான்... கூடவே அவனது பொல்லாத கண்கள் வாளின் கூர்மையுடன் அவளது கழுத்துப் பக்கம் பாய்ந்து ஆராய்ந்தது.

    இதென்ன தேவையில்லாத கேள்வி என்று எரிச்சல் வந்தாலும், கேட்டதுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற கட்டாயத்திற்காக அவர் என் அப்பா என்றாள் மைனஸ் புன்னகையுடன்.

    அப்போ இன்னும் மிஸ்தான் என்று அவன் விடாமல் கேட்க... அவளுக்கு சுள் என்று கோபம் வந்தது.

    அதை அவளது கண்கள் காட்டினாலும். முகத்தை சாதாரணமாகவே வைத்துக்கொண்டு அமைதியாகச் சொன்னாள்,

    இது அவசியமில்லாத கேள்வி மிஸ்டர் கெளதம்.

    அப்படியில்லை. இன்னும் நாலைந்து நாளாவது என் தந்தை இந்த ஹாஸ்பிடலில் இருக்க வேண்டியிருக்கும். ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் உங் களிடம் தானே வரவேண்டும். எல்லார் முன்னே ராதா என்று அழைத்தால் நன்றாக இருக்காதே. மிஸ்ஸா… இல்லை மிஸ்ஸா… என்று தெரிந்து கொண்டால் உங்களை மதிப்பாய் கூப்பிடலாமே என்றுதான்.

    இவனிடம் நான் ஏன் சொல்ல வேண்டும் என்று வீம்பு எழுந்தாலும் சீஃப் டாக்டரின் உறவினரைப் பகைத்துக் கொள்வதா என்ற அச்சத்தில் விருப்பமில்லாமல் பதிலிறுத்தாள்.

    இன்னும் மிஸ்தான்... முகுந்தன் தந்தைப் பெயர் என்றால் இன்னும் திருமணம் ஆகவில்லை என்றுதானே அர்த்தம் என்றாள் அவள். கஷ்டப்பட்டு எரிச்சலை அடக்கிக் கொண்டு.

    அப்போது அவளது கண்களில் தெரிந்த கேலிப்பார்வையை அவனும் கவனித்தான்.

    இது கூடத் தெரியாத மடையனா நீ என்ற கேலி. அவனோ முகம் மலர்ந்தவனாய்...

    நல்ல பதில்... வெரி ஸ்மார்ட், பாராட்டுகிறேன் என்று குதூகலம் தொனிக்கச் சொன்னான்.

    அதற்கு என்ன பதில் சொல்வது என்று அவள் யோசிக்கும்போதே இன்டர்காம் ஒலித்தது. அதன் சத்தம் இப்போது வேணுகானமாய் காதில் நுழைந்தது.

    சாரி போன் அட்டெண்ட் பண்ண வேண்டும்… என்று சொல்லிவிட்டு ரிஸிவரைக் கையில் எடுத்துக் கொண்டாள். ஒகே... ஒகே டாக்டர்... இதோ வருகிறேன் என்று சொன்னவள் அவன் புறம் திரும்பி. உங்களுக்குத் தேவையான விவரங்களைக் கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன். இப்போது நான் ஆர்த்தோ டாக்டரைப் பார்க்கப் போகவேண்டும்… வருகிறேன் சார்... என்று அவள் கூறியதும்.

    அவனும் அதைப் புரிந்து கொண்டது போல் அங்கிருந்து சென்றான்.

    தந்தை இருந்த அறையை நோக்கி நடந்தான்.

    ஸ்பெஷல் வார்ட் பக்கம் நடந்து ஏழாம் நம்பர் அறையைத் தேடிச் சென்றபோது தந்தையின் காட்டுக் கத்தல் காதில் விழுந்தது.

    நோ… எனக்கு இஞ்செக்ஷன் வேண்டாம் என்கிறேன். ஏன் என்னைக் குத்தி ரணமாக்குகிறீர்கள்... ஏய்... சரளா... முதலில் என்னை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு அழைத்துப் போ… இங்கே இவர்களது இம்சை தாள முடியவில்லை என்று கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்.

    கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான் கெளதம்.

    அவனைப் பார்த்ததும் அவரது குரல் இன்னும் உயர்ந்தது.

    இதோ வந்துவிட்டான் என் பிள்ளை. கெளதம்... இந்த இடம் எனக்கு நரகம் மாதிரி இருக்கு. இங்கிருந்து என்னை அழைத்துப் போடா… இவர்கள் என் உடம்பை குத்தி குத்தி சல்லடை ஆக்கிவிடுவார்கள் போலத் தெரிகிறது. எனக்கு ஹாஸ்பிடல் என்றாலே பிடிக்காதுன்னு உனக்குத் தெரியும் இல்லையா. பின்னே ஏன்டா என்னை இங்கே அழைத்து வந்து படுக்க வச்சிருக்கே. ஏய் சிஸ்டர், முதலில் இங்கிருந்து கிளம்புகிறாயா இல்லையா… என்றதும். நர்ஸ் பரிதவித்துப் போனாள்.

    அவள் தனது ட்யூட்டியை முடிக்கா விட்டால் டாக்டரிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள நேரிடும். அதை நினைத்துக் கலங்கினாள். கையில் சிரிஞ்சுடன். என்ன செய்வேன் என்பது போல் கெளதமைப் பரிதாபமாய் பார்த்தாள்.

    அவளது நிலைமையை உணர்ந்தவன் போல் தந்தையிடம் பேச ஆரம்பித்தான். என்ன டாட்... சின்னக் குழந்தை போலப் பிடிவாதம்… உங்களை இங்கே இரண்டு நாள் கண்டிப்பாய் ஸ்பெஷல் கவனிப்பில் இருக்க வைக்க வேண்டும் என்று டாக்டர் அங்கிள் சொல்லியிருக்கிறார். அதை மறந்துவிட்டுப் பேசுகிறீர்களே. இந்த ஊசி மருந்து ரொம்ப முக்கியம். முதலில் கையைக் காட்டுங்கள். சிஸ்டர்... நீங்க உங்க ட்யூட்டியை செய்யுங்கள்… என்றதும் நர்ஸ் கொஞ்சம் தைரியத்துடன் அவர் அருகே குனிந்தாள்.

    நோ என்று கூச்சலிட்ட அவர்... அருகே டீபாயில் இருந்த டம்ளரை எடுத்துக் கோபத்துடன் வீசியெறிந்தார்.

    வாசலை நோக்கிப் பாய்ந்த டம்ளர் அப்போதுதான் கதவைத் திறந்து உள்ளே வந்த ராதாவின் நெற்றியைப் பதம் பார்த்துவிட்டு டண் என்ற ஓசையுடன் கீழே விழுந்தது.

    அதைச் சற்றும் எதிர்பார்க்காத ராதா அதிர்ச்சியில் சிலையாகிப் போனாள்.

    அய்யோ… என்ன காரியம் பண்ணினீங்க. பாருங்க... இரத்தம் வருகிறது என்று மிஸஸ். சுதர்சனம் அலறிய பின்புதான் அவளிடம் அசைவே வந்தது.

    இடது நெற்றியில் சுளிர் என்று வலியை உணர்ந்தவள் கையால் தொட்டுப் பார்த்தாள். ஆமாம். ரத்தம் வருகிறது. இல்லை கொட்டுகிறது.

    அருகே விரைந்து வந்த கெளதம்... கொஞ்சம் அப்படியே இருங்கள் என்று சொல்லி தன் கைக்குட்டையை எடுத்து கொட்டும் ரத்தத்தின் மேல் வைத்து அழுத்தினான்.

    அவள் முகம் வலியில் சுளித்தது. தன் கரத்தால் அவனது கையை விலக்கி விட்டவள். பரவாயில்லை விடுங்கள் என்று சொல்லிவிட்டு தன் கைக்குட்டையால் காயத்தை அழுத்த முயன்றாள்.

    நர்ஸிடம் உன்னை ஆர்த்தோ டாக்டர் உடனே வரச் சொன்னார் நிர்மலா… மிஸ்டர் கோவிந்தசாமி என்ற பேஷண்ட்டோட மெடிக்கல் ரிப்போர்ட் அர்ஜெண்டா வேண்டுமாம். அதைக் கொண்டு வரச் சொன்னார்… அதைச் சொல்லத்தான் இங்கு வந்தேன் என்று சொன்னாள்.

    இவர் முரண்டு பிடிக்கிறார் மேடம்... ஊசி போட விடமாட்டேன்கிறார்… நான் என்ன செய்வது என்று வருத்தத்துடன் சொன்னாள் நர்ஸ்.

    நேரே அவரிடம் சென்றாள் ராதா... சுதர்சனம் வெகு அமைதியுடன் இருந்தார். தப்பு செய்துவிட்ட உறுத்தல் அவரைக் குடைய... ராதாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

    என் நெற்றியைப் பார்த்தீர்களா சார்... உங்களது முரட்டு சுபாவத்தினால் என் நெற்றியில் காயம் பட்டு விட்டது. லோகல் அனஸ்தீவியா கொடுத்து. குறைந்தது மூன்று தையலாவது போடுவார்கள். இப்போ இருக்கும் வலியை விட இன்னும் அதிகம் இருக்கும். அதற்காக உங்களை நான் கோபித்துக் கொண்டால் நீங்கள் பொறுத்துக் கொள்வீர்களா. ஒரு சின்ன ஊசிக்கு கத்தி... ஊரைக் கூட்டி ஆர்ப்பாட்டம் செய்கிறீர்களே… என்று அவள் சொன்னதும். அவர் எதுவும் பேசாமல் தன் கையை நீட்டினார். ராதா நர்ஸிடம் ஜாடைக்காட்ட… அவளும் ஊசி மருந்தை ஏற்றினாள்.

    நர்ஸுடைன் அவளும் கிளம்ப... அவரது குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது.

    உன் பெயர் என்னம்மா?

    ராதா.

    நல்ல பெயர். அம்மாடி... என்னை மன்னிச்சிடும்மா. நான் செய்தது தப்புதான். ஒத்துக்கறேன். உடனே போய் டாக்டர்கிட்டே காட்டி மருந்து போட்டுக்கோ. கெளதம் கூடப்போய் ராதாவுக்கு தேவையானத செய். ஆகிற செலவு நம்மது என்றார் தணிவான குரலில்.

    அதெல்லாம் தேவையில்லை சார்… இங்கே வேலை செய்வதால் எனக்கு ஃப்ரீ ட்ரீட்மென்ட்தான்… நீங்க எங்ளோட ஒத்துழைத்தால் அதுவே போதும். நோய் என்கிறது சின்ன குழந்தைகளுக்கும் வருவது சகஜம். அவர்களே அதைப் பொறுத்துக் கொள்ளும்போது. வயதான நீங்க பொறுத்துக் கொள்ள முடியாதா சார்…! இந்த ஹாஸ்பிடலை ஒரு தடவை நீங்க சுற்றி வந்தால் உங்களுக்குத் தெரிய வரும். எத்தனை நோயாளிகள் எப்படியெல்லாம் அவஸ்தைப்படுகிறார்கள் என்று. இதே ஹாஸ்பிடலில் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஒரு நான்கு வயது குழந்தைக்கு இதயத்தில் ஓட்டையென்று அட்மிட் பண்ணியிருக்கிறார்கள். இரண்டு நாளில் ஆபரேஷன். அந்தக் குழந்தையே அந்த வலியைப் பொறுத்துக் கொள்ளும்போது. இந்த வலியெல்லாம் எம்மாத்திரம் சார். ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் என்றாள் பொறுமையுடன்.

    என்னம்மா சொல்றே. நான்கு வயசு பிள்ளைக்கு இதய ஆபரேஷனா. இதென்ன கொடுமை என்று சுதர்சனம் திகைப்போடு கூற.

    ஆமாம்... இரத்தப் பரிசோதனை... அனஸ்தீவியா... டிரிப்ஸ்... ஊசி மருந்து என்றெல்லாம் சொல்லி குழந்தை உடம்பைக் குத்திப் புண்ணாக்கும்போது எப்படி வலிக்கும் அதற்கு. அந்தச் சின்ன மார்பைக் கீறி திறந்து…

    அய்யோ... சொல்லாதேம்மா. நீ சொல்லச் சொல்ல என் சப்த நாடியும் அதிருகிறது. என் உடம்பெல்லாம் கூனிக் குறுகிப் போகிறது. எறும்புக்கடி மாதிரி இருக்கும் இந்தச் சின்ன வலிக்காகக் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணினேனேன்னு எனக்கே அவமானமாய் இருக்கும்மா… எனக்கு அதை நன்றாய் உறைக்கிற மாதிரி எடுத்துச் சொன்னதுக்கு உனக்கு ரொம்ப நன்றிம்மா… என்றார் அந்தப் பெரிய மனிதர்.

    எதுக்கு சார் நன்றியெல்லாம்… நான் சின்னவள் என் பேச்சை மறுக்காமல் ஏற்றுக் கொண்டீர்களே… அதுக்கு நான் சந்தோஷப்படுகிறேன். எனக்கு நிறைய வேலை இருக்கு சார்... போகவேண்டும்… வருகிறேன் என்று சொல்லிப் புறப்பட்டாள் ராதா.

    அவளைத் தொடர்ந்து வெளிவந்த கெளதம். சாரி... மிஸ் ராதா... எங்கப்பாவின் செயலுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்… என்றான் அவளிடம்.

    மன்னிப்பு எதற்கு சார்... வயதாகிவிட்டால் அவர்களும் குழந்தைகள் தான். நானும் அதைப் பெரிது படுத்த விரும்பவில்லை. போய் காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டால் ஆயிற்று. உங்க கர்சீப் தான் வீணாகி விட்டது. சாரி சார்… என்றாள் அவளும்.

    நானும் உடன் வரட்டுமா.

    நோ… தாங்க்ஸ்... நானே போய்க் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அவள் விரைய. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில் பிரமிப்பும் மெச்சுதலும் தெரிந்தது.

    விஷயத்தைப் பெரிதுபடுத்தாமல் அதைச் சாதாரணமாய் எடுத்துக்கொண்டு வலியை சகித்துக்கொண்டு செல்லும் அவளை மனசுக்குள் மெச்சினான்.

    காயம் பட்ட இடம் விண் விண் என்று வலித்தது ராதாவுக்கு. தையல் போட வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லிவிட்டு… காயத்தைத் துடைத்து மருந்து தடவி ப்ளாஸ்டர் போட்டு வலி நிவாரணி மாத்திரையையும் தந்து அனுப்பினார் டாக்டர்.

    அவளால் வேலை செய்ய முடியவில்லை. தலைகனத்தது போல இருந்த வலி அவளை வேலையில் ஈடுபட முடியாமல் தடுத்தது.

    கொஞ்ச நேரம் படுத்தால் தேவலை என்று தோன்றியது. அவளுடன் வேலை செய்யும் சுரேகா அவளது துன்பத்தைப் பார்த்துவிட்டு உடனே உதவிக்கு வந்தாள். போய் ஒய்வறையில் கொஞ்ச நேரம் படுத்துக்கொண்டு விட்டு வா. உன் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னவளை நன்றியுடன் பார்த்து விட்டு ஒய்வறைக்குச் சென்றாள்.

    ட்யூட்டி நர்ஸ்களும் மற்ற பெண் ஊழியர்களும் இடைவெளிப் பொழுதில் ஒய்வெடுத்துக் கொள்ளவும் சுதாரித்துக் கொண்டு மறுபடியும் வேலைகளை ஆரம்பிக்கவும் அவர்களுக்காக தனியறை இருந்தது. அங்கே படுத்துக்கொள்ள கட்டிலும் மெத்தையும் இருந்தது. தவிர படுத்து ஒய்வெடுத்த பின்பு முகம் கழுவி புத்துணர்ச்சியடைய சோப்பு... துவாலை... முகம் பார்க்கும் கண்ணாடி என்று எல்லாமே இருந்தன.

    அங்கு சென்று ஒய்வெடுத்துக் கொண்டாள் ராதா,

    வேலை செய்த களைப்போ… இல்லை மாத்திரையின் வீரியத்தாலோ படுத்தவுடன் உறங்கிவிட்டாள்.

    கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவள்… அங்கு வந்த நர்ஸ் நிர்மலாவின் கை ஸ்பரிசத்தில் விழித்தாள்.

    வேறு ஏதோ பிரபஞ்சத்திலிருந்து குதித்தவளைப் போல் முதலில் விழித்துவிட்டு... பிறகு நிதர்சனத்தை அப்போதுதான் உணர்ந்தவள் போல பரபரப்புடன் எழுந்து அமர்ந்தாள்.

    சாரி ராதா படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து களுக்கு உடம்பு சரியில்லையோ என்று நினைத்து பொட்டுப் பார்த்தேன். உங்களோட தூக்கத்தைக் கெடுத்து விட்டேன் போல. காயம் ஒன்றும் ஆழமாய் இல்லையே… என்று அக்கறையுடன் கேட்ட நிர்மலாவைப் பார்த்து இல்லை என்று தலையசைத்தவள் தன் கை டிகாரத்தைப் பார்த்துவிட்டுப் பதற்றத்துடன் எழுந்தாள்.

    மை காட்! மணி ஒன்றா... அத்தனை மணி நேரமா தூங்கியிருக்கிறேன். தாங்க்ஸ் நிர்மலா. நீ மட்டும் என்னை எழுப்பாமல் போயிருந்தால் அவ்வளவுதான். நேரம் தெரியாமல் தூங்கிக் கொண்டு இருந்திருப்பேன் என்றாள் கவலை முகத்துடன்.

    டோண்ட் வொர்ரீ ராதா... என்றைக்கும் இங்கு வந்து படுக்காத நீங்கள் அதிசயமாய் இன்று ஒய்வெடுத்திருக்கிறீங்க... அதை யாரும் தப்பாக நினைக்க மாட்டாங்க, இப்பத்தான் சுரேகாவைப் பார்த்துவிட்டு வந்தேன். பேஷண்ட்ஸ் அவ்வளவா அங்கில்லை. அவங்க சொல்லி தான் எனக்குத் தெரிந்தது. நீங்க இங்கிருப்பது" என்றாள் நிர்மலா. ۔۔۔۔

    எனக்கும் கொஞ்சம் வலித்தது. முடியாமல் தான் படுத்துக் கொண்டேன். இப்போ பரவாயில்லை. போய் கொஞ்சம் வேலை பார்க்கிறேன். அட்லீஸ்ட் இன்னும் ஒரு மணி நேரம்... அப்புறம் லஞ்ச் பிரேக் இருக்கவே இருக்கிறது. இன்னும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க... ஆமாம்… நிர்மலா அப்புறம் அந்த பேஷண்ட் மிஸ்டர் சுதர்சனம் சண்டித்தனம் ஏதும் பண்ணவில்லையே என்று கேட்டாள் ராதா.

    அதை ஏன் கேட்கிறீங்க... ராதா... சண்டிப்பிள்ளை இப்போ சாதுபிள்ளையா மாறியாச்சு. இன்ஜெக்ஷனா. இதோ என் கை என்று நீட்டுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எனக்குச் சிரிப்பா வந்தது ராதா, உங்களுக்கு அடிபட்டதில் எனக்கு வருத்தம் தான் என்றாலும்... கெட்டதிலும் நல்லது என்பார்களே அது மாதிரி தான் நடந்திருக்கு என்று உற்சாகத்துடன் பேசினாள் நிர்மலா. அதை ஏற்றுக் கொள்வதுபோல புன்னகைத்தாள்.

    பிறகு... எழுந்து சென்று முகத்தை லேசாய் துடைத்துக் கொண்டு கிளம்பினாள்.

    அவளைப் பார்த்ததும் சுரேகா. ஆர் யூ ஆல் ரைட்… ராதா... என்று கேட்டாள்.

    யெஸ்… மச் பெட்டர் சுரேகா… தாங்க்ஸ்டீ என்றாள் ராதா.

    ப்ளீஸ்டீ... ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்து கொள்வது சாதாரண விஷயம். அதைப் பெரிசு படுத்தாதே யேன். ஆங் சொல்ல மறந்துவிட்டேனே. அந்த ஆள் என்னிடம் வந்து உன்னைப் பற்றி விசாரித்தார். நீ எப்படியிருக்கே... காயம் ஆழமா ஒண்ணும் இல்லையே… காயத்திற்கு மருந்து போட்டாச்சா. மாத்திரை சாப்பிட்டாச்சா… என்று ஏகப்பட்ட விசாரிப்புதான். யாரு அந்த ஆசாமி ராதா, பார்க்க ஆள் கெத்தா இருக்கான். வலிய வந்து உன்னைப் பற்றி விசாரிக்கிறான் என்றால். ம்ம்... ஐ ஸ்மெல் சம்திங் ஃபிஷ்ஷி… என்றாள் கொஞ்சம் குறும்புடன்,

    நான்ஸென்ஸ். அப்பா பண்ணின தப்புக்கு பிள்ளை வருந்தி இப்படி விசாரிக்கிறான். அவ்வளவுதான். அதை ஏன் கோணக்கண்ணால் பார்க்கிறாய் சுரேகா… என் நெத்தியில் காயம் பட்டதே அவனோட அப்பாவின் முரட்டுத்தனத்தினால் தான்.

    ஓ! மிஸ்டர் சுதர்சனின் மகன் என்று சொல்றே. அந்த முசுடு அப்பாவுக்கு இப்படி ஒரு ஹாண்ட்ஸம் மகனா? ஆள் சூப்பரா இருக்கான் இல்லே. அந்த மாதிரி ஆணழகன் வந்து கரிசனத்தோடு விசாரிக்கிறான் என்றால்… ஒரு கிக் தான் ராதா… ம்ம்... அதற்கும் கொடுத்து வைக்கணும். யூ ஆர் வெரி லக்கிடா.

    மண்ணாங்கட்டி... இது பெரிய ஹாஸ்பிடல்... எத்தனையோ அழகான ஆண் பிள்ளைகள் வருவார்கள்… போவார்கள்... அவர்களைப் பார்த்து சலனப்படலாமா. ரயில் நட்பு மாதிரி தான் இதுவும். ஹாய் பையோட முடிஞ்சுடும். எதற்கும் அசையாமல் நாம் நம் வேலையைப் பார்த்துக் கொண்டு போக வேண்டும் அவ்வளவுதான். சரி எனக்கு ஏதாவது வேலையிருக்கிறதா. இருந்தால் கொடு. முடித்து விடுகிறேன்... என்றாள் ராதா.

    இப்போதைக்கு எதுவும் இல்லை. சாப்பாட்டு வேளை ஆனதும் மறுபடியும் பேஷண்ட்டுகள் வரலாம். அப்போ செய். நான் போய் தண்ணிர் பாட்டிலில் ஐஸ் வாட்டர் நிரப்பிக் கொண்டு வருகிறேன். அதுவரைக்கும் போன் வந்தால் அட்டெண்ட் பண்ணு. ஒகே என்று சொல்லிவிட்டு நீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு நடந்தாள் சுரேகா.

    அங்கிருந்த ஆங்கில இதழ் ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள் ராதா,

    சுரேகா சொன்னது போலவே மதியத்திற்கு மேல் பேஷண்டுகள் வந்தனர். தன் வேலையில் கருத்தூன்றினாள் ராதா.

    எல்லா பேஷண்ட்டுகளையும் கவனித்து. அவர்களை அந்தந்த டாக்டர்களிடம் அனுப்பி வைத்துவிட்டு நிமிர்ந்த போது மணி ஆறு. அப்பாடா. வீட்டுக்கு புறப்படும் நேரம் வந்தாயிற்று. இனி புறப்பட வேண்டியதுதான் என்ற எண்ணத்தில் உள்ளத்தில் குதூகலம் வந்தது.

    என்ன சுரேகா புறப்படலாமா... என்று அவள் எழுந்தபோது தான் அவன் வந்தது.

    அவனை அப்போது… அந்த நேரத்தில் எதிர்பார்க்காத தால் அவள் புருவங்கள் சுருங்கின. உடனே வலி மின்னலாய் வெட்டியது.

    ஸ்... ஸ்ஸ்… ஸ்ஸ்… என்று வலியில் முகம் சுளித்து. நெற்றியில் கை வைத்தாள்.

    ஹலோ மிஸ் ராதா எப்படி இருக்கிறீர்கள்? உங்களைப் பற்றி காலையில் வந்து விசாரித்தேன். சொன்னீர்களா மேடம்... என்று திரும்பி சுரேகாவைப் பார்த்துக் கேட்க,

    ஆங்... நானா காலையா. அது வந்து... ஒ சொல்லிட்டேனே... என்று தடுமாற்றத்துடன் சொன்னாள் சுரேகா,

    சொன்னாள். ஐ ஆம் ஆல் ரைட் நவ் சார் என்றாள் ராதா.

    பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. இப்போ வலியில் உங்கள் முகம் மாறியதே என்றான் அவன்.

    அவளுக்கு எரிச்சலாய் வந்தது. அதுவும் அவன் கண்களில் பட்டுவிட்டதா. ச்சே மனம் புகைந்தாலும் அதை வெளிப்படையாய் காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் சொன்னாள்.

    அதெல்லாம் இல்லை. புருவத்தைச் சுருக்கியதால் வலித்தது. மற்றபடி வலி ஏதும் இல்லை. ஒரு சின்ன காயத்திற்கு ஃபஸ் பண்ண வேண்டாமே… ப்ளீஸ்.

    சின்னக் காயமாக இருந்தாலும் அதற்குக் காரணம் என்னோட அப்பாதானே. அவர் தான் உங்களை விசாரிக்கச் சொன்னார். தன்னால் தான் உங்களுக்குக் காயம் ஏற்பட்டது என்ற குற்ற உணர்வில் அவர் குமைந்து கிடக்கிறார். உங்களைக் கவனிப்பது எங்களின் பொறுப்பு என்ற அக்கறை அவருக்கு என்று அவன் கூறியது அவளுக்கு சலிப்பைத் தந்தது.

    கடவுளே... இத்துனுரண்டு காயத்திற்கு இவ்வளவு ஆர்பாட்டமா. இவர்களை என்ன சொல்ல. சார் எனக்கு ஒன்றும் இல்லை. இந்தக் காயம் நாளைக்கே ஆறிவிடும். கவலைப்பட வேண்டாம் என்று உங்கள் அப்பாவிடம் சொல்லுங்கள் என்றாள் நிதானமாய்.

    அப்படியே சொல்கிறேன். ஸி யூ என்று சொல்லி விட்டு அவன் அங்கிருந்து செல்ல. அவள் ஊஃப்ப் என்று காற்றை வெளியிட்டு மனதைச் சமனப்படுத்தினாள்.

    சரியான அன்புத் தொல்லை ச்சே என்று முணு முணுத்தவள் திரும்பி சுரேகாவைப் பார்த்து போகலாமா" என்று கேட்க… அவளும் திக் பிரமையிலிருந்து விடு பட்டவள் போல் அசைந்து... தன் தோள் பையை எடுத்துக் கொண்டாள்.

    அவன் கண்களைக் கவனித்தேன் ராதா... காந்தப் பார்வை என்பார்களே அந்த மாதிரி இருந்தது. என்னை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டதும். பேச்சே வரவில்லை என்றால் பாரேன்... என்றாள் அவள்.

    பார்த்தேனே... எப்படி நீ தத்துப் பித்துன்னு உளறினதை. கேட்க சகிக்கவில்லை... இப்படியா ஒருத்தி தட்டுத் தடுமாறுவாள். வெட்கக் கேடு என்றாள் எரிச்சலுடன்.

    எல்லோரும் உன்னைப் போல உணர்ச்சி இல்லாத ஜடமா இருக்க முடியாதுப்பா. பெண்மையின் இயல்பே. முன் பின் தெரியாத ஆடவன் வந்து நின்றால். மனசு பரபரக்கும். பேச்சு வராது. இதயம் படபடக்கும். அதுவும் அழகான ஆடவன் என்றால் அவ்வளவுதான். மனசுக்குள் மத்தாப்புதான் என்றாள்.

    சுரேகா... அவளுடன் நடந்த வண்ணம்.

    பார்க்கிற ஆண் பிள்ளைகளையெல்லாம் பார்த்து கிறுகிறுத்துப் போய் நின்றால் வேலை செய்த மாதிரி தான்… என்றாள் ராதா,

    மை காட்... பாட்டி மாதிரி இருக்கு ராதா… நீ பேசறது... உனக்குள்ளே ஒரு கிழவி ஆவி நுழைந்து கொண்டது போல் இருக்கு. உன் பேச்சையும் செய்கையையும் பார்த் தால். ஆமாம்... கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கா… அதுவும் இல்லையா… சொல்லுங்க ஒளவைப் பாட்டியே… என்று கேலியாய் கேட்டாள் சுரேகா.

    எனக்கென்று ஒருவன் பிறந்திருப்பான் என்றால் கல்யாணம் நிச்சயம் நடக்கும். அப்போது கண்டிப்பாய் உன்னை அழைக்கிறேன். போதும்… என்றாள் அவளும் கடுப்புடன்.

    குட்… உனக்குள்ளும் பெண்மை ஒளிந்து கொண் டிருக்கிறது என்று தெரிகிறது. என்ன... அது கொஞ்சம் தூங்கி வழிகிறது. அவ்வளவுதான் என்று பரிகாசக் குரலில் சொன்னாள் சுரேகா.

    அம்மா... தாயே… உங்களுக்குள் தலை விரித்தாடும் பெண்மை எனக்கு வேண்டவே வேண்டாம். நான் பத்தாம் பசலியாகவே இருந்து விட்டுப் போகிறேன். விடு... என்று கோபத்துடன் சொன்னாள் ராதா.

    ஒரு கணம் மெளனித்துவிட்டு ஐ அம் சாரி... ராதா கம்மா தமாஷக்காகப் பேசினேன். உன் மனசை நோக அடிக்கும் எண்ணம் எனக்கில்லை. சினேகிதி என்று கொஞ்சம் சலுகை எடுத்துக் கொண்டு பேசிவிட்டேன். எல்லையைத் தாண்டிவிட்டேன் போல… அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்... என்றாள் சுரேகா. தணிவான குரலில்.

    அந்த வார்த்தைகளில் தணிந்து போனாள் ராதா.

    சாரி... சுரேகா… ஏதோ எரிச்சலில் நானும் ஹார்ஷா பேசிவிட்டேன்… மன்னிச்சுடு.

    ஒகே… நடந்ததை மறப்போம்... மன்னிப்போம். இப்போ சூடா காபி குடிப்போமா. நாக்கு என்னவோ நமநம என்கிறது… என்றாள் சுரேகா.

    காண்டீனுக்கா... வாசல் வரை வந்தாச்சு. திரும்பி அத்தனை தூரம் போக வேண்டுமே. சுரேகா.

    ஊஹூம்... ஹாஸ்பிடலுக்கு வெளியே சின்ன கடை இருக்கு. அங்கே காபி டீ எல்லாம் கிடைக்கும். அப்புறம் சுடச்சுட சமோசா... போண்டா வடை கூட கிடைக்கும். சாப்பிடலாம் வா.

    இத்தனை நாளா அந்த வழியாகத்தான் போகிறேன். வருகிறேன். என் கண்களுக்குப் படவில்லையே… எப்படியடீ உன் கண்ணில் மட்டும் பட்டது.

    நீ தான் குதிரைக்கு கண் திரை போட்ட மாதிரி அக்கம் பக்கம் பார்க்காமல் போகிறாயே. அதான் உன் கண்களில் படவில்லை. நான் அப்படியில்லை. நடக்கறப்போ சுற்றிலும் என்னன்ன இருக்கிறதுன்னு பார்ப்பேன். இந்தத் தெருவில் எத்தனை வீடுகள்... எத்தனை கடைகள்… எத்தனை ப்யூட்டி பார்லர்கள்… சலூன்கள்... இன்னும் காபி பார்... ஜூஸ் கடைகள்… என்று கணக்காய் சொல்லட்டுமா. என்றாள் ஜம்பமாய்.

    பரவாயில்லையே. அறிவு ஜிவி தான். ஒத்துக் கிறேன். என்றாள் ராதா. அந்தக் கடையும் வந்து விட பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சமோசாவிற்கும் காபிக்கும் சொல்ல பத்து நிமிஷத்தில் கைக்கும் வாய்க்கும் போட்டி வந்தது. இருவரும் மெளனமாய் உண்டனர்.

    உண்மையிலே காபியும் சமோசாவும் நன்றாக இருந்தது.

    மசால் வடையின் மணமும் நாசியில் நுழைந்து நாக்கில் எச்சில் ஊற வைத்தது. மனம் வீட்டை நினைத்துப் பார்த்தது.

    தங்கைக்கும் தம்பிக்கும் ரொம்பப் பிடிக்கும். எல் லோருக்கும் வாங்கிப் போனால் என்ன என்ற எண்ணம் வர. கடைக்காரரிடம் ஐந்து வடை, ஐந்து போண்டாவைப் பார்சல் செய்யச் சொன்னாள்.

    என்ன... வீட்டுக்கா. ராதா... என்று கேட்ட சுரேகாவிடம் ஆமாம் என்று தலையசைத்தாள் அவள்.

    நான் சொல்லல்லே. இந்தக் கடையில் நன்றாக இருக்கும்னு… நானும் எத்தனையோ நாள் வாங்கிக் கொண்டு போய் கொடுத்திருக்கிறேன். நிச்சயம் உங்க வீட்டில் விரும்பிச் சாப்பிடுவாங்க பாரேன்… என்றாள் சுரேகாவும்…

    பிறகு இருவரும் பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தனர்.

    2

    மறுநாள் ராதா மருத்துவமனைக்கு வந்ததும் நர்ஸ் நிர்மலா அவளிடம் வந்து சொன்னாள். அந்த ஸ்பெஷல் வார்ட் பேஷண்ட் உங்களைப் பார்க்கணும்னு சொன்னார்.

    யாரு... மிஸ்டர் சுதர்சனமா... என்று வியப்புடன் கேட்டாள் ராதா.

    ஆமாம்... நீங்க வந்தாச்சான்னு பல தடவை அவர் கேட்டாச்சு. உடனே போய் பார்க்கணுமாம்... என்றாள் நிர்மலா.

    போச்சுடா... வந்ததுமா… எனக்கு வேலை இருக்கிறது நிர்மலா. இன்னும் சுரேகாவும்... வரவில்லை... பேஷண்ட் எல்லோரும் வந்து காத்திருக்கிறார்கள் பார்... என்னால் இப்போது முடியாது. கொஞ்சம் நேரம் காத்திருக்கட்டும் விடு… என்றாள் கொஞ்சம் எரிச்சலுடன்,

    இப்பத்தான் சீஃப் டாக்டரும் அவரைப் பார்க்க போனதைப் பார்த்தேன். அவரிடம் மிஸ்டர் சுதர்சனம் கம்ப்ளெயிண்ட் பண்ணினால் பிரச்சனை ஆகிவிடும் ராதா.

    அடச்சே... வந்தோமா… வேலைப் பார்த்தோமான்னு இல்லாமல் இது என்ன தலைவலி, எப்போ அந்த மனுஷன் டிஸ்சார்ஜ் ஆகிறாராம். தெரியுமா.

    ஊஹூம். தெரியாது. ராதா. இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருப்பாரோ என்னவோ.

    இரண்டு மூன்று நாட்களா... மை காட்! அதுவரையில் அவரது நச்சரிப்பைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமா. போய் தொலைக்கிறேன்... என்று புறப்பட்டவள்... ஏதோ நினைத்துக் கொண்டவளாய் அவர் மகன் அங்கு இருக்கிறாரா... அந்த ஆள் ஒரு அன்புத் தொல்லை வேறு… அதையும் சகித்துக் கொள்ள வேண்டும். என்றாள்.

    அவர் அங்கு இல்லை… மிஸஸ் சுதர்சனம் மட்டும் தான் அறையில் இருந்தார் என்றாள் நிர்மலா.

    ஆக... ஒரு தொல்லை இல்லை. தாங்க் காட்... நிர்மலா... சுரேகா வந்தால் நான் அங்கே போயிருக் கிறேன் என்று சொல். அவள் என் வேலையும் சேர்த்துச் செய்வாள்... என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

    அறைக்கதவை லேசாய் தட்டிவிட்டு உள்ளே வரலாமா சார் என்று அவள் குரல் கொடுக்க. கம் இன் என்று அதிகாரத்துடன் குரல் ஒலித்தது.

    அது சீஃப் டாக்டரின் குரல் என்று உணர்ந்தவளாய். தன் எரிச்சலைக் காட்டிக் கொள்ளாமல். மறைத்துக் கொண்டு. இதழ்களில் புன்னகையுடன். உள்ளே சென்றாள்.

    அவருக்கு பணிவுடன் வணக்கம் தெரிவித்துவிட்டு. நோயாளி பக்கம் திரும்பி... என்னை வரச் சொன்னீர் களாம். சார். அதான் வந்தேன்… என்றாள் அமைதியாய்,

    ஆமாம்மா… உன்னைப் பார்க்க வேண்டும் என்று தோணிச்சு... அதான் நர்ஸிடம் சொல்லியனுப்பினேன். உனக்குக் காயம் பட்டதிலிருந்து எனக்கு மனசு சரியில்லை. உன்னைப் பார்த்து... காயம் அதிகமில்லை என்று தெரிந்து கொள்ளும் வரை எனக்கு நிம்மதி வராது என்று தான் உன்னை வரச் சொன்னேன். காயம் ஆழமாய் படவில்லைதானே... என்று அன்புடன் கேட்டதும் அவளுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.

    தன் நலத்தை விசாரிக்கவே அவர் அழைத்திருக் கிறார். அதைத் தொல்லையாகக் கருதினோமே. மனம் குன்றிப் போனது.

    இல்லை சார். லேசான காயம்தான். தையல் ஏதும் போடவில்லை. நீங்கள் வேண்டும் என்றே என்னைக் காயப்படுத்தவில்லையே. எதேச்சையாகத்தானே என்மீது பட்டது. அதை நான் பெரிசாய் எடுத்துக் கொள்ள வில்லை. நீங்களும் அதைப் பத்திக் கவலைப்பட வேண்டாம் சார். இரண்டு நாளில் ஆறிவிடும். என்று பதில் சொன்னாள் ராதா.

    தாங்க்ஸ்ம்மா. இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தாமல் ரொம்ப சாதாரணமாய் எடுத்துக் கொண்டே பார். அதைப் பாராட்டுகிறேன். உனக்கு நல்ல மனசு. என்னவோ தெரியவில்லைம்மா. உன்னிடம் பேசினால் ஆறுதலாய் இருக்கு. உன் அமைதியான தோற்றமோ. உன் பதட்டப்படாத சுபாவமோ... என்னைக் கட்டிப் போடுகிறது. அதைத்தான் உன் சீஃப் டாக்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நல்ல பொண்ணு. காயம் பட்டதிற்கு ஆர்பாட்டம் செய்யாமல் பொறுமையுடன் இருந்தாள். என் தப்பு என்ன என்பதை நிதானமாய்… தெளிவாய் எனக்குப் புரிய வைத்தாள் என்று சொன்னேன். இந்த மாதிரிப் பொண்ணு இங்கே வேலை பார்க்கிறது சந்தோஷமான விஷயம் கிரிதரா... என்று அவர் சொல்லச் சொல்ல அவளுக்கு உடம்பு கூனிக் குறுகிப் போனது.

    என்னைப் பற்றி இத்தனை உயர்வாய் நினைக்கும் மனிதரை எப்படியெல்லாம் மனசுக்குள் திட்டினேன்... இத்தனைப் பாராட்டுதலுக்கும் நான் லாயக்கானவள் தானா… நல்ல மனசாமே... பெரிய தொல்லை. படு நச்சு என்றெல்லாம் எண்ணி எரிச்சல்பட்ட என்னைப் போய் புகழ்ந்து பேசும் இவர் முன் நான் எண் சாண் உடம்பும் ஒரு சாணாய் குறுகி நிற்கும்படி ஆனது எனக்கு வேண்டியதுதான்.

    சபாஷ்... மிஸ் ராதா, வசிஸ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் கிடைத்த மாதிரிதான். இவன் வாயிலிருந்து பாராட்டு வருவது… அத்தனை சீக்கிரத்தில் அவன் யாரையும் பாராட்டிவிட மாட்டான். உன்னை இந்த அளவிற்கு உயர்வாகப் பேசுவதைக் கேட்கும்போது எனக்கே வியப்பாய் இருக்கிறது. கோபத்தில் ஆர்ப்பாட்டம் செய்பவன். அவனை சிறுகுழந்தையாட்டம் உன் பேச்சைக் கேட்க வச்சே பார். அதுக்கு உன்னை மெச்சியே தீரணும்… என்று சீஃப் டாக்டர் கிரிதரன் சொன்னதும் அவள் மலைத்துப் போனாள்.

    இதென்ன ஆச்சர்யம் கண்டிப்பும் கறாருமான அவரது வாயிலிருந்தா எனக்குப் புகழாரம், அவ்வளவு சீக்கிரம் இளகாதவர் ஆயிற்றே. அவரே பாராட்டுகிறார் என்றால் அது பெரிய விஷயம் தான். அவளது உள்ளம் மகிழ்ச்சியில் தத்தளித்தது.

    இருந்தும் தனது பூரிப்பை வெளிக்காட்டிக்காமல்... தன்னடக்கத்துடன் அவருக்கு பதில் சொன்னாள்.

    நான் பெரிதாய் எதுவும் செய்யவில்லை சார், மற்ற பேஷண்டுகளைப் பற்றி எடுத்துச் சொன்னேன். அவரும் அதைப் புரிந்து கொண்டு உடனே ஏற்றுக் கொண்டார். அவ்வளவேதான் சார். நான் எதையோ சாதித்து விட்டது மாதிரிப் பேசுவது எனக்கு என்னவோ போல் இருக்கிறது.

    அதைக் கேட்டுவிட்டுப் புன்னகையுடன் தலையசைத்த வாறு எழுந்த டாக்டர் கிரிதர் நான் ரவுண்ட்ஸ் போக வேண்டும் சுதர்சன். உன்னை அப்புறமாய் வந்து பார்க்கிறேன். ஒகே. கெளதம் வந்தால் என்னை வந்து பார்க்கச் சொல்... என்று சொல்லிவிட்டு அவர் வெளியேறினார்.

    அதே நேரத்தில் உள்ளே வந்த நர்ஸ் கல்யாணி சார் இன்ஜெக்ஷன் போடணும்… என்றாள் தயக்கத்துடன்,

    மறுப்பேயில்லாமல் தன் கரத்தை அவள் பக்கம் நீட்டினார் சுதர்சனம். அவளைப் பார்த்துக் கண் சிமிட்டி விட்டு பார்த்தாயாம்மா... இப்போதெல்லாம் ஊசிக்கு நான் பயப்பட்றதில்லை, எனக்கும் தைரியம் வந்து விட்டது… என்றார்.

    அதைக் கேட்டு விட்டு அவள் சின்னச் சிரிப்புடன் கூறினாள். இந்த மாற்றத்தைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். சார். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் உங்களை டிஸ்சார்ஜ் பண்ணி விடுவார்கள் என்று நினைக்கிறேன். ஆகையால் கவலையில்லாமல். ரிலாக்ஸாய் இருங்கள். உங்களுக்கு ஏதாவது தேவைப் பட்டால் என்னிடம் சொல்லுங்கள். நான் கொண்டு வந்து தருகிறேன். ஒகே சார். இப்போது தான் வந்தேன். நிறைய வேலைகள் இருக்கு. உடனே போயாக வேண்டும்… வருகிறேன் சார். கிளம்பிய அவளை அவரது குரல் இழுத்து நிறுத்தியது.

    அம்மாடி... உன்னிடம் ஒன்று கேட்கலாமா.

    தாராளமாய் கேளுங்க சார், உங்களுக்கென்ன தேவை என்று சொல்லுங்கள். கண்டிப்பாய் கொண்டு வருகிறேன்.

    எனக்கு எதுவும் வேண்டாம்மா... உன்னால் முடிந் தால் என்னை வந்து பார்த்து... ஒரு பத்து நிமிடம் பொழுதைக் கழிக்க முடியுமா… அது போதும்... என்றார் கெஞ்சிய பார்வையுடன்.

    அவளுக்கு வியப்பு... கத்தி ஆர்பாட்டம் செய்து... யாரையும் தன்னருகே அண்ட விடாமல்… எல்லோரிடமும் எரிந்து விழுந்த மனிதரா இப்படி அன்பாய் வேண்டுவது... என்ன ஆச்சர்யம். அவளால் அதை நம்பவும் முடியவில்லை.

    ஆனாலும் அந்தப் பெரியவரின் வேண்டுகோளை ஒதுக்கித் தள்ளவும் மனம் வராமல் ஒப்புதலாய் தலை யாட்டினாள். அவரிடம் விடைபெற்றுக் கொண்டு வெளிவந்த போது. எதிர்பட்ட மிஸஸ் சுதர்சனம். அவளைப் பார்த்து விட்டு முகம் மலர்ந்தவளாய் நின்று பேசினாள்.

    எப்படி இருக்கேம்மா. காயம் ஒன்றும் பலமாய் இல்லையே. நேற்று முழுக்க அதையே நினைச்சு மனசுக்குள் சங்கடப்பட்டேன்ம்மா. என் புருஷன் சின்னக் குழந்தை மாதிரி. ஊசியென்றால் அலறுவார். ஆஸ்பத்திரி பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டார். எல்லாம் சித்த வைத்தியம்தான். இந்த தடவை என் பிள்ளை பிடிவாதமாய் இங்கே கொண்டு வந்து சேர்த்து விட்டான். அந்தக் கோபம் தான் அவருக்கு. அந்த எரிச்சலை எல்லார்கிட்டேயும் காட்டிட்டார். ட்ம்ளரை வீசி எறிந்து விட்டு... அதற்குப் பின் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அது என்னவோ உன்னிடம் பெட்டிப்பாம்பாய் அடங்கி விட்டார். பாரேன்… தப்பு பெய்துவிட்டோமே என்ற உறுத்தல் போல. இன்னிக்கு கூட என்னிடம் சொன்னார். அந்தப் பொண்ணைப் பார்த்தால் வரச்சொல்லு, நான் மாறிட்டேன்னு அவளுக்குத் தெரியணும், அப்பத்தான் எனக்கும் நிம்மதின்னு… உன்னைப் பார்க்கத்தான் போயிருந்தேன். அங்கே உன்னைக் காணோமா. அதான் வந்துட்டேன்.

    நேற்று நடந்த சம்பவத்திற்கு உண்மையாகவே வருந்தி சங்கடப்பட்டிருக்க வேண்டும். அவர்களின் பேச்சும். தவிப்பு அவளுக்குப் புரிந்தது.

    நீங்க வருத்தப்படுகிற மாதிரி எதுவும் நடக்கவில்லை மேடம்… இது அற்ப விஷயம். எனக்குக் காயம் படனும்னு இருக்கு... பட்டு விட்டது. அதற்கு சார் என்ன செய்வார்… பாவம். நடப்பது எல்லாமே நன்மைக்குத்தான் என்று நினைத்துக் கொள்வோம். இப்படி ஒரு சம்பவம் நடந்ததால் தான் சாரோட ஆஸ்பத்திரி பயமும் ஓடிப் போச்சு. அவரும் அமைதியாகி விட்டார். இதைவிட என்ன வேண்டும். சொல்லுங்கள்... என்று சொன்னாள் அவள்.

    வாஸ்தவம் தான்ம்மா… அவரோட பயம் தெளியற துக்குத்தான் இது நடந்ததோ என்னவோ. சரிம்மா... உனக்கு வேலைகள் இருக்கும். உன்னை நிறுத்தி வச்சுப் பேசறது சரியில்லை. நீ போ... என்று சொல்லிவிட்டுச் சென்றாள் அந்த அம்மாள்.

    தன் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டவள்… வேலையில் மும்முரமாய் இருந்த சுரேகாவிடம் சாரி… சுரேகா… அந்தப் பெரியவர். அதான் மிஸ்டர் சுதர்சனம் என்னைப் பார்க்கணும்னு சொன்னார். போய் பார்த்து விட்டு வந்தேன். பாவம்… தன் தப்புக்கு வருந்தி... என்கிட்டே தணிவாய்... கனிவுடன் பேசினார். தெரியுமா... என்றாள்.

    பரவாயில்லையே… கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கு என்கிறே.

    ஊஹூம்... கல்லும் கனியாகும் என்கிறேன். என்னை அவ்வப்போது வந்து பார்க்கச் சொன்னார் என்றால் பார்த்துக்கொள். அந்த அளவு அவர்கிட்டே மாற்றம் வந்திருக்கிறது... சுரேகா.

    ம்ம்ம்... இது ஒரு நல்ல சான்ஸ் உனக்கு. அவர் நம்ம சீஃப் டாக்டருக்கு சொந்தம் என்பதால் உன் மீது அவருக்கு நன்மதிப்பும் வந்திருக்கும். இதற்கு பெயர் தான் ராஜயோகம் என்பது, இது எல்லோருக்கும் அமையுமா... என்று பெருமூச்சு விட்டாள் சுரேகா,

    அடியம்மா... அடிபட்டவள் நான். எனக்குத்தான் அந்த வலி தெரியும்.

    இருக்கட்டுமே. குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப் படனும் என்பாங்க. நீ வைர மோதிரக் கையால் அல்லவா குட்டு பட்டிருக்கிறாயே. அது போதாதா. அதைவிட அதிர்ஷ்டம் வேறு என்ன வேண்டும். கணவனும் மனைவியும் போட்டி போட்டுக் கொண்டு அன்பைக் காட்டுகிறார்கள் என்றால்... மகன் அதற்கும் மேலே. போகும் போதும். வரும் போதும் எப்படியிருக்கே... எப்படியிருக்கேன்னு ரொம்ப விசாரிப்புத்தான். ம்ம்ம்… ஜமாய்.

    அடிப்பாவி. அந்த ஆள் காதில் விழுந்தால் தப்பா எடுத்துக் கொள்ளப் போகிறான்டீ... இப்படி வம்பா பேசுவது நல்லதில்லை சுரேகா, இங்கே எங்கேயாவது இருந்து தொலைக்கப் போகிறான். உஷார்.

    அய்யோ… திங்க் ஆஃப் தி டெவில்டீ. அவனேதான் உன்னிடம் பேச வருகிறான் போல… என்று சுரேகா சொன்னதும் திகைப்புடன் பார்த்தாள்.

    தன் சினேகிதியை தர்ம சங்கடத்துடன் பார்த்தாள்.

    எதுக்கு இங்கே வருகிறான். மறுபடியும் காயத்தைப் பற்றி விசாரிக்கவா… மை காட்... காயம் ஆறினாலும் இவர்கள் விட மாட்டார்கள் போல… என்று சலிப்புடன் சானனாள ராதா.

    அதற்கு பதில் சொல்லாமல் உதட்டைப் பிதுக்கி தோள்களக் குலுக்கினாள் தோழி.

    அருகே வந்த கெளதம். ராதாவைப் பார்த்து இளநகையுடன் கேட்டான். ஹலோ… ஹெளவ் ஆர் யூ… ஆல் ரைட்…? என்று விசாரிக்க… சுரேகா நமுட்டுச் சிரிப்புடன் அவளைப் பார்த்தாள்.

    தந்தையிடம் சொல்லியாச்சு. தாயிடமும் சொல்லி பாச்சு. திரும்ப இவனிடமுமா… அய்யோ… தாள முடிய வில்லையே. உள்ளூர பொருமியவாறு பதில் சொன்னாள் அவள். போச்சுடா. இப்போத்தான் உங்க அப்பாவிடமும் அம்மாவிடமும் அதையே சொல்லிவிட்டு இங்கே வந்தேன். மறுபடியும் உங்களிடமும் சொல்கிறேன். ஐ ஆம் ஆல்ரைட்... போதுமா... ப்ளீஸ்... மறுபடியும் அதைப் பற்றி விசாரிக்க வேண்டாமே மிஸ்டர் கெளதம். ஒரு சுண்டைக்காய் காயத்திற்கு இப்படி விழுந்து விழுந்து விசாரிப்பது எனக்கு என்னவோ போல் இருக்கிறது. என்னிடம் பேசுவதற்காகவே வருகிறீர்களோ என்றுகூடத் தோன்றுகிறது அவளது வார்த்தைகள் ப்ளாட்டிங் பேப்பரைப் போல் அவனது புன்னகையை உறிஞ்சி எடுத்துவிட்டது. அவனது கண்கள் குத்தீட்டியாய் அவளைத் துளைத்தது.

    சாரி... உங்களை விசாரிக்க வந்தேன் என்று நினைத் தீர்களா. ஊஹூம். அப்பாவின் அறையில் ஏஸி சரியாக வொர்க் ஆகவில்லை. அதை சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தேன். புகாரை யாரிடம் சொல்ல வேண்டும் என்று சொன்னால் அவர்களிடம் சொல்கிறேன்... என்று அவன் சொன்னதும் அவளுக்கு சப்பென்று ஆகி விட்டது. ஒருவாறு தன்னை சுதாரித்தவளாய். டோண்ட் வொர்ரி. நான் ஹவுஸ் கீப்பிங் செக்ஷனுக்கு போன் செய்து ஏ.ஸி. சர்வீசுக்கு ஆளை அனுப்பி வைக்கிறேன். என்றாள் தாழ்ந்த குரலில்.

    குட்... சீக்கிரம் அனுப்பி வையுங்கள். அப்பாவுக்கு ஏ.ஸி. இல்லாமல் இருக்க முடியாது என்று சொல்லி விட்டு அடியெடுத்து வைத்தவன். அவள் பக்கம் திரும்பி. மிஸ். ராதா... ஏதோ உங்களைப் பார்த்து... பேச வேண்டும் என்ற துடிப்பில் நான் இங்கே வருகிறேன் என்று நினைக்க வேண்டாம். அந்தத் தவிப்பு வரும் அளவிற்கு நீங்கள் ப்யூட்டி குயினும் இல்லை. நான் அதற்காக அலையவும் இல்லை. ஒகே... என்று கூறிவிட்டு நிமிர்ந்த நடையுடன் அவன் அங்கிருந்து சென்றான்.

    பளீர் என்று கன்னத்தில் அடி வாங்கியது போல இருந்தது ராதாவிற்கு.

    உன்னைப் பார்க்க ஒன்றும் வரவில்லை என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. அதை ஒத்துக் கொண்டிருப்பாள்.

    நீ ஒன்றும் ப்யூட்டி குயின் இல்லை என்றது தான் அவளைத் துளைத்து ரணமாக்கியது. கண்களில் வலியுடன் சுரேகாவைப் பார்த்தாள்.

    உன்னோட வார்த்தைகள் அவரோட ஈகோவை புண்படுத்தியிருக்க வேண்டும் ராதா, அதான்... பதிலுக்கு உன்னை ஹர்ட் பண்ணிவிட்டுப் போயிருக்கிறார். இதுவரைக்கும் அவரைப் பார்த்து எந்தப் பெண்ணும் முகம் சுளித்து எரிச்சலைக் காட்டியிருக்க மாட்டாள். நீ அப்படி நடந்து கொண்டது அவருக்குக் கோபத்தை வர வழைத்திருக்கும். அவரது பேச்சை பெரிதாய் எடுத்துக் கொள்ளாதே. வா... நாம் நம் வேலையைப் பார்ப்போம்… என்றாள் சுரேகா.

    இதோ வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு... ஒய்வறையை நோக்கி விரைந்தாள்.

    நேரே சென்று அங்கிருந்த பெரிய கண்ணாடியின் முன் நின்று தன் பிம்பத்தை ஊன்றிக் கவனித்தாள்.

    இல்லையே… நான் அழகாய் தானே இருக்கிறேன். என்னிடம் எந்தக் குறையும் இல்லையே. கல்லூரியில் என் வகுப்பில் எல்லோரும் என்னை அழகு சுந்தரி என்று தானே அழைப்பார்கள். கல்லூரி நாடகத்தில் என் அழகுக்காகத்தானே என்னை கிளியோபாட்ராவாய் நடிக்கச் சொன்னது.

    பளிச் என்ற முகத்தில் துள்ளும் கருவண்டாய் கண்கள். அழகாய் வளைந்த இரு புருவங்கள். முகத்தின் வசீகரத்தைக் கூட்டிக் காட்டும் சிவப்பு பொட்டு. கண் ணாடியின் வழவழப்பாய் மின்னும் கதுப்புக் கன்னங்கள். சிவந்திருக்கும் உதடுகள். சங்கு கழுத்து. கொடி போன்ற உடம்பு. ஒவ்வொன்றாய் பார்த்தாலும் அழகுக்கு கம்மியில்லையே. எதை வைத்து அவன் அப்படிச் சொன்னான். நீ ஒன்றும் ப்யூட்டி குவின் இல்லை… வலி நெஞ்சைப் பிளக்க வேதனையில் கண்கள் மூடிக் கொண்டன.

    என்னை வேதனைப்படுத்த வேண்டும் என்றே அவ்வாறு சொன்னானா… அல்லது… அவன் சந்தித்திருக்கும் பெண்கள் ரூபவதிகளோ. அவர்களின் வனப்புக்கு முன்னே என் அழகு முழுமதி முன் ஒளிகுன்றிய நட்சத்திரம் போல் ஆனதோ. ஏதேதோ எண்ணி உள்ளம் பெளர்ணமி நாள் கடலாய் அலை பாய்ந்தது.

    சில நிமிடங்கள் ஆழ்ந்த பெருமூச்செடுத்து தன் மனதை சமனப்படுத்திக் கொண்டாள், கண்களின் கசிவைத் துடைத்துக் கொண்டு. வாஷ் பேசின் அருகே சென்றாள். பைப்பைத் திருகி விழுந்த தண்ணிரால் முகத்தைக் கழுவிக் கொண்டாள், கொஞ்சம் இதமாய் இருந்தது.

    மனசுக்குத் தெம்பும் வந்தது. அவன் சொன்னதால் நான் ஒன்றும் குறைந்துவிட மாட்டேன். எனக்கென்று ஒருவன் வருவான். அவன் கண்களுக்கு நான் அழகு ரதியாய்... ப்யூட்டி க்வீனாகத் தெரிவேன். அது போதும் என்று நினைத்து சமாதானம் அடைந்தாள்.

    பத்து நிமிடங்கள் கழிந்து விட்டதை உணர்ந்தவளாய்... பரபரப்புடன் அங்கிருந்த வெள்ளைத் துவாலையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டு வெளி வந்தாள். அவளைப் பார்த்துவிட்டு அவளது மனநிலையைப் புரிந்து கொண்டாலும். அதைப்பற்றி ஏதும் வினவாமல் தன் வேலையை செய்து கொண்டிருந்தாள் சுரேகா.

    வந்திருக்கும் நோயாளிகளை விசாரித்து... அவர்களின் பெயர்... வயது... விலாசம் எல்லாவற்றையும் குறிப் பெடுத்து. கணிணியில் பதிவு செய்து. அவர்களுக்கான ஃபைல்களை தயார் செய்து… அவர்கள் செல்ல வேண்டிய டாக்டர்களின் அறைகளுக்கு அனுப்பி வைத்து... விவரம் கேட்டு வரும் ஆட்களுக்கு விஷயத்தைத் தெளிவாய் எடுத்துரைத்து. பணம் எங்கு கட்ட வேண்டும். இரத்தப் பரிசோதனைக்கு எங்கே போக வேண்டும்... ஜெனரல் வார்ட் எங்கிருக்கிறது… பார்மஸிக்கு எந்த வழி... போன்ற கேள்விகளுக்கு பொறுமையாய் பதில் சொல்லி முடிப்பதில் பொழுது அதி விரைவாய் கழிந்தது. வேலை பளுவில் மனமும் அவனை மறந்தது. புறப்படும் நேரமும் வந்தது. விரல்களை நெட்டி முறித்தவாறு எழுந்த சுரேகா என்ன ராதா… புறப்படலாமா... என்று வினவ. அவளும் தலையசைத்து விட்டு கணிணியை அணைத்துவிட்டுக் கிளம்பினாள்,

    அந்த நேரத்தில் சீஃப் டாக்டரும் கெளதமும் அந்த வழியாய் வர இருவரும் ஒதுங்கி நின்றனர்.

    அவளைப் பார்த்ததும் சிறு புன்னகையுடன் வினவினார். என்னம்மா கிளம்பியாச்சா. உன் வீடு எங்கே இருக்கிறது.

    இருப்பிடத்தைச் சொன்னாள். அவளையும் அறி யாமல் அவளது விழிகள் ஒரக்கண்ணால் கெளதமைப் பார்த்தன.

    அவன் எங்கேயோ வெறித்துக் கொண்டு நின்றிருந் தான். அவள் இருக்கும் பக்கமே திரும்பவில்லை.

    எப்படி பஸ்ஸில் போகிறாயா… இல்லை ஸ்கூட்டரா என்று அவர் கேட்க பஸ்தான் சார் என்று பதில் சொன்னாள்.

    ஏன் ஸ்கூட்டர் ஒட்ட வராதா, சின்ன வயசுதானே. கத்துக்கலாமே... என்று அவர் கேட்டதில் அவளுக்கு ஆச்சர்யம்.

    என்ன. இன்றைக்கு இத்தனை அக்கறையுடன் கேட்கிறார்.

    இல்லை சார். இந்த டிராபிக்கில் ஸ்கூட்டர் ஒட்ட எங்கள் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். எனக்கு இதில் கஷ்டமே இல்லை சார், பஸ் வசதி இருக்கிறது. பஸ்ஸில் ஒய்வும் கிடைக்கிறது என்றாள் தணிவான குரலில்.

    அதுவும் சரிதான். இப்போதைய ட்ராஃபிக்கில் வாகனம் ஒட்டுவது சர்க்கஸ் வித்தை மாதிரிதான். சரிம்மா... நீ புறப்படு... என்று அவரும் கிளம்ப கெளதமும் அவருடன் இணைந்து நடந்தான்.

    கெளதம் அழுத்தமாய் நின்று... தன் பக்கம் திரும் பாமல் போனது அவளுக்கு உறுத்தலாய் இருந்தது. எரிச்சலுடன் தான் பேசிய பேச்சு அவனை இறுகச் செய்து விட்டது போலும் என்று நினைத்துக் கொண்டாள். முதலில் அது மனதைப் பிராண்டினாலும்… அதை உதறித் தள்ளிவிட்டு… அவன் பேசினால் என்ன... பேசா விட்டால் எனக்கென்ன என்று எண்ணி உள்ளத்தை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

    அவன் பேசினதை நினைத்து உள்ளம் மறுகுவது படு முட்டாள்தனம் என்றும் தோன்றியது. இன்னும் இரண்டு நாட்களில் இங்கிருந்து போய் விடுவார்கள். பிறகு அவர்கள் யாரோ. நான் யாரோ… ஒரு மூன்றாம் மனிதனின் பாராமுகம் என்னை என்ன செய்து விடும். அதை எண்ணி மனசை ஏன் குட்டையாக்கிக்கணும். ஊஹூம். கூடாது. தன்னைத் தேற்றிக் கொண்டவளாய்... தொய்ந்த மனதை நிமிர்த்திக் கொண்டு நடந்தாள். அந்த சின்னக் கடையில் ஒரு டீ சாப்பிட்டுவிட்டு. பஜ்ஜியைக் கட்டிக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்கள்.

    3

    எதுவும் நடக்கவில்லை என்பது போல ரிலாக்ஸாய் இருக்க முயன்றாலும்... எதோ ஒன்று நண்டின் பிராண்டலாய் மனதை அரிக்கத்தான் செய்தது.

    தான் அழகு என்று தெரிந்தாலும்... அதற்காக கர்வப்படாதவள்தான். ஆனால் ஒரு ஆடவன் தன் முகத்திற்கு எதிரில் நீ ஒன்றும் அழகு தேவதை இல்லை என்றுரைத்தது அவளை வாட்டி வதைத்தது. தன் பெண்மைக்குக் கிடைத்த அவமானமாய் நினைக்கத் தோன்றியது.

    அந்த வாட்டத்தில் அம்மா ஆசையாய் செய்திருந்த வாங்கிபாத் தொண்டைக்குள் இறங்க மறுத்தது.

    அதை சம்பூர்ணமும் கவனித்தாள்.

    என்ன ஆச்சு இவளுக்கு... எப்போதும் ருசித்து உண்பவள். மண்ணை எடுத்து விழுங்கற மாதிரி அல்லவா உணர்ச்சியில்லாமல் சாப்பிடுகிறாள்.

    சாதத்தை அள்ளித் தின்பவளுக்கு இன்றைக்கு என்ன வந்தது. கொறித்துச் சாப்பிடுகிறாளே.

    பசிக்கவில்லையா. உணவு ருசிக்கவில்லையா. இல்லை… வழியில் எதையாவது சாப்பிட்டு விட்டு வந்தாளா.

    தாள முடியாமல் கேட்டு விட்டாள் சம்பூர்ணம்.

    ஓட்டலில் எதையாவது சாப்பிட்டுவிட்டு வந்தாயா என்ன. சாதத்தைக் கொறிக்கிறாயே,

    இல்லை என்பது போல் தலையசைத்தவள்... திடீர் என்று நினைவுக்கு வந்தது போல் தங்கை விஜியிடம் விஜி… என் தோள் பைக்குள் ஒரு பொட்டலம் இருக்கும்... அதைக் கொண்டு வாயேன். ப்ளீஸ்… என்றாள்.

    அவளும் அதைக் கொண்டு வந்து தாயிடம் கொடுத்தாள்.

    என்னது... என்றவாறு பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்த சம்பூர்ணம். பஜ்ஜியா… ஆறிப் போயிருக்கே... சுடச் சுட இருந்தால் தான் சாப்பிடுவதற்கு நன்றாய் இருக்கும். ராதா… நீ கொண்டு வருவதற்குள் ஆறிப்போய் ரப்பர் மாதிரி ஆகி விடுகிறது. இனி வாங்கி வராதே… என்றாள்.

    சுரேகா நன்றாய் இருக்கும் என்று சொன்னாள்ம்மா. அதான் வாங்கி வந்தேன். நேத்து நான் வாங்கி வந்தப்போ எதுவும் சொல்லவில்லையேம்மா.

    போண்டாவும் வடையும் ஆறிப்போனாலும் சாப்பிடலாம். பஜ்ஜி அப்படியில்லை. மொறு மொறுன்னு இருக்கறப்ப சாப்பிட்டால்தான் ருசி.

    ராதாவிற்குச் சிரிப்பு வந்தது. அம்மாவுக்கு நாக்கு ருசி ரொம்பவே ஜாஸ்தி என்பது மட்டுமில்லை. தன் குடும்பத்தினரும் அதே போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்.

    எல்லாமே சரியாகப் பொருத்தமாய் இருக்க வேண்டும். கொஞ்சம் அப்படி… இப்படி என்று இருந்தால் சுத்தமா பிடிக்காது.

    தோசைக்குக் கொத்தமல்லி சட்னி... இட்லி என்றால் தேங்காய் சட்னி... அல்லது சாம்பாரோ இருக்க வேண்டும்… சப்பாத்தி என்றால் தான். உருளைக் கிழங்கு மசாலா என்று செய்வாள். இதுக்கு இதுதான் காம்பினேஷன் என்று அடித்துச் சொல்வாள்.

    அடைக்கு அவியலும். வெல்லமும். வெண் பொங்கலுக்கு வெங்காயக் குழம்பு... பூரிக்கு சாகு. அரிசி உப்புமா என்றால் கத்திரிக்காய் கொத்சு. ரவா தோசைக்கு பாம்பே சட்னி என்று ஒரு பட்டியலே நீளும்.

    எத்தனை மணியானாலும் சரி. பொருத்தமான சைட் டிஷ் செய்து தான் பரிமாறுவாள்.

    எதுக்குக் கஷ்டப்படுகிறே... இருக்கறதை வைத்து சமாளிக்கக் கூடாதா என்பார் முகுந்தன்.

    செய்யறவ நான். உங்களுக்கு என்ன கஷ்டம். நாம சாப்பிட்றதே கொஞ்சம் தான். அதையும் வக்கணையா சாப்பிடாவிட்டால் எப்படி. இப்ப சாப்பிட்டாதான் உண்டு. அப்புறம் வயிறு சுருங்கிடும். எது சாப்பிட்டாலும் ஜீரண மாகாது. ஓமவாட்டர் தான் கதியென்று இருக்கணும். அது மட்டுமில்லை. என் கை உழைக்கிறவரைக்கும் தான் நடக்கும். நமக்கும் வயசாகி... மருமகள் என்று ஒருத்தி வந்து விட்டால் நாம ஆசைப்பட்ற மாதிரியெல்லாம் சாப்பிட முடியாது. தெரிஞ்சுக்கோங்கோ... என்பாள் மனைவி.

    ஏன் அப்படிச் சொல்றே. வரும் மருமகள் நல்லவ ளாய் இருப்பாள் என்று நினைப்போமே. நம்மை உட்கார வைத்து நல்ல விதமாய் கவனிப்பாள் என்று நம்புவோம். சம்பு.

    பெரிய வங்க சும்மாவா சொல்லியிருக்காங்க, பொண்ணு பொறக்கறதுக்கு முன்னாலே நகைகளைப் பூட்டிக்கோ. மருமகள் வருமுன் சாப்பிட்டுக்கோன்னு…

    நீயும் ஒரு காலத்தில் மருமகளாய் இருந்தவள் தானே. நீ என் அம்மாவையும் அப்பாவையும் கவனிச்சுக்கல்லயா... அது மாதிரியே நமக்கு வர்ற மருமகளும் இருப்பாள். விடு… என்று சொல்லி மனைவியை அடக்கப் பார்ப்பார் முகுந்தன்.

    ஆமாம். இந்தக் காலத்துப் பெண்களுக்கு சமையலில் அ... ஆ… கூட தெரியாது. அத்தனை அசிரத்தை… ஆ… ஊன்னா ஒட்டல் சாப்பாடுன்னு ஓடுகிறார்கள். நமக்கு வரப்போகும் மருமகள் நம்மை உட்கார வைத்து வகை வகையாய் பண்ணிப் போடுவாள் என்றெல்லாம் கனவு காண வேண்டாம். என்ன இருந்தாலும் என் கை சமையல் தான் உங்களுக்கு கெட்டி என்ற மனைவியைப் பார்த்து புன்னகையுடன் சொல்வார் முகுந்தன்.

    எனக்கும் அதுதான் வேண்டும். உன் சமையலுக்கு ஈடு இணை ஏது சம்பு. நான் கொடுத்து வச்சிருக்கணும்.

    இப்படி ஐஸ் வச்சே காரியத்தை சாதித்துக் கொள்வதில் நீங்க கெட்டிக்காரர்தான் என்று பிகுவாய் சொன்னாலும் சம்பூர்ணத்தின் முகத்தில் பூரிப்புத் தெரியும்.

    தன் குடும்பத்திற்காக உழைப்பது அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். தன் குடும்பத்தினருக்கு ருசி ருசியாய் சமைத்துப் போடுவது பிடிக்கும்.

    உனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் எது அவளிடம் கேட்டால். தன் கையால் விதவிதமாய் சமைத்து… அந்த சுவையான சாப்பாட்டைதன் குடும்பத்தினருக்கு பரிமாறி… அதை அவர்கள் ஆனந்தமாய் உண்பதைப் பார்த்து உள்ளம் பூரிப்பதுதான் என்பாள்.

    அப்படிப்பட்டவளுக்கு இன்று தன் மகள் தான் ஆசையாய் செய்த பதார்த்தத்தை சரியாகச் சாப்பிடவில்லை என்பது வேதனையான விஷயம் தானே.

    உண்மையிலே பசியில்லையா. இல்லை மனசு சரியில்லையா. முகம் கூட வாடிப் போயிருந்ததே. ஏதாவது பிரச்சனையோ… எப்போதும் கலகலப்பாய் பேசுகிறவள் இன்றைக்கு ஏனோ எதுவும் பேசாமல் மெளனமாய் இருந்தாளே.

    தாய் மனம் தவித்தது.

    என்ன என்று தெரிந்து கொள்ள உள்ளம் துடித்தாலும். உடனே போய் கேட்க வேண்டாம். வேலைகள் முடிந்ததும் ஆற அமர அவள் அருகே அமர்ந்து மென்மைாய் விசாரிப்போம் என்று நினைத்தாள் சம்பூர்ணம்.

    சாப்பாட்டை முடித்துக் கொண்டு கூடத்துக்கு வந்தாள். கணவர் தொலைக்காட்சி முன் அமர்ந்து கிரிக்கெட் மேட்சைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து இவருக்கு வேறு வேலை இல்லை. கிரிக்கெட் மேட்ச் ஒண்ணு இருந்துட்டா போதும். யாரு எப்படியிருந்தாலும் கவலையில்லை. பொண்ணு முகம் வாடியிருக்கே, என்ன ஏதுன்னு கேட்க வேண்டாம். இப்படியா டி.வி. முன்னால் பிடிச்சு வச்ச பிள்ளையாராட்டம் அசையாமல் உட்கார்ந்திருப்பார் ஒரு மனுஷன்... ச்சே.

    மனசுக்குள் பொருமிய வண்ணம் அவர் அருகே சென்றாள்.

    அவளைப் பார்த்ததும் படு உற்சாகத்துடன் சொன்னார் முகுந்தன். வந்து உட்கார்ந்து நீயும் இதைப் பாரேன் சம்பு. ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. இந்தியா தான் ஜெயிக்கப் போகிறது. பாகிஸ்தானோட ஆடி அதைத் தோற்க அடிக்கிறதில் என்ன விறுவிறுப்பு தெரியுமா. அவுட்... எல்.பி.டபிள்யூ… அடிசக்கை… எட்டாவது விக் கெட்டும் விழுந்தாச்சு. மேட்ச் முடிஞ்ச மாதிரிதான்… என்று சின்னப் பிள்ளை மாதிரி சந்தோஷப்பட்டவரை பார்த்து அவளுக்கு எரிச்சல் வந்தது.

    நம்ம பொண்ணு முகம் வாடியிருந்ததே. அதை கவனித்தீர்களா… என்று கேட்டாள்.

    வேலை செய்த களைப்பில் அப்படி இருந்திருப்பா... ரெஸ்ட் எடுத்தால் எல்லாம் சரியாகிவிடும். சம்பு… அடடா… பால் பவுண்டரிக்கு போச்சே. சே கடைசி விக் கெட்டை வீழ்த்தாமல் இப்படி ரன்ஸ் கொடுக்கிறார்களே… என்று அங்கலாய்த்தார் முகுந்தன்.

    சரி இன்னிக்கு கலகலப்பாய் பேசாமல் எதையோ மனசுக்குள் வைத்து மறுகுவது போல இருந்தாளே. அது உங்கள் கண்களில் படவில்லையா என்றாள் அவளும் விடாமல்.

    நீயாக எதையாவது கற்பனை பண்ணிப் பேசாதே. அவளுக்கு அலுப்பாக இருக்கும். அதனால் தலை வலியோ என்னவோ. அதை ஏன் பெரிசு படுத்தறே. இரு... இரு. பால் மேலே போகிறது. காட்ச்சாகத்தான் இருக்கும். பிடிப்பா… அய்யோ... நழுவவிட்டுட்டானே சரியான வெளக்கெண்ணை...

    சரியாப் போச்சு. என் பேச்சை நீங்க சரியாகக் காதில் போட்டுக்கல்லைன்னு தெரிகிறது. இந்த மாதிரி நம்ம பொண்ணு இருந்ததில்லையே. அவள் நல்ல மூடில் இருந்திருந்தால் இத்தனை நேரம் உங்களோட உட்கார்ந்து கிரிக்கெட் மேட்ச்சைப் பார்த்திருப்பாள் தானே… ஏன் இல்லை.

    அடடா... கொஞ்ச நேரம் தொண தொணக்காமல் இருக்கியா. மனுஷனை நிம்மதியா மேட்சைப் பார்க்க விடாமல் நொய் நொய்னு பேசி இம்சை பண்ணினால் எப்படி. உனக்கு முடியலைன்னா போய் உன் பொண் ணையேக் கேள். ஏன் இப்படி இருக்கேன்னு. என்னைத் தொந்திரவு பண்ணாதே. ஆளை விடு. அவுட்… ஆல் அவுட்… இந்தியா ஜெயிச்சாச்சு… சூப்பர்... சந்தோஷத்தில் கூக்குரலிட்ட கணவனை முகச்சுளிப்புடன் பார்த்தாள் சம்பூர்ணம்.

    இப்படியா ஒரு மனுஷர் குழந்தைகளைப் பற்றிப் பொறுப்பின்றி இருப்பார்.

    அப்படி என்ன பித்தோ இந்த விளையாட்டில். யாரைப்பற்றியும் கவலையில்லாமல்.

    இப்படி டி.வி.யே கதி என்று விழுந்து கிடக்க,

    கோபத்தை ஒரு பெருமூச்சில் வெளியிட்டுவிட்டு மகளின் அறையை நோக்கிச் சென்றாள்.

    ராதா படுக்கையில் சுருண்டு கிடந்தாள். முகத்தில் இன்னும் வாட்டம் இருந்தது. அவள் அருகே அமர்ந்து அவளது கூந்தலை கோதியவாறு கேட்டாள் சம்பூர்ணம்.

    ஏம்மா ஒரு மாதிரி இருக்கே. உடம்பு சரியில்லையா என்ன. தலைவலின்னா சொல்லும்மா... மருந்து தடவகிறேன்… என்றாள் வாஞ்சையுடன்.

    ப்ச்சு... உடம்புக்கு ஒண்ணும் இல்லைம்மா.

    பின்னே... மனசு சரியில்லைங்கிறியா. வேலையில் ஏதாவது பிரச்சனையா ராதா… உன் மனம் நோகும்படி யாராவது பேசினார்களா.

    என் வேலையில் எந்தக் குறையும் வராதும்மா. அதில் எனக்கு நல்ல பேர்தான்.

    சரி... அப்போ ஏன் இப்படி மூட் அவுட்டாகி உம்முன்னு இருக்கே சொல்லு. எங்கிட்டே எதையும் மறைக்க மாட்டியே ராதா. இன்னிக்கு என்ன ஆச்சு... என்று மனத்தாங்கலுடன் கேட்டாள் தாய்.

    சின்னத்தனமான விஷயம்மா. உதறித் தள்ளணும்னு பார்க்கிறேன். என்னால் முடியவில்லை.

    அப்படி என்னம்மா நடந்தது. மனம் விட்டுப் பேசினால் ஆறுதலா இருக்கும் இல்லையா.

    தாயின் கரிசனம் மனதுக்கு இதமாக இருந்தாலும். அதைச் சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்கம் அவளை இழுத்துப் பிடித்தது.

    ஏதாவது முக்கிய நிகழ்வுகள் இருந்தால் அதைத்

    Enjoying the preview?
    Page 1 of 1