Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poovil Thoongum Panithuli
Poovil Thoongum Panithuli
Poovil Thoongum Panithuli
Ebook279 pages2 hours

Poovil Thoongum Panithuli

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

என் ‘பூவில் தூங்கும் பனித்துளி’ மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி.

இந்தக் கதையின் நாயகி வர்ஷாவிற்குத் தன் தந்தை ஒரு அந்நியனிடம் வியாபார சம்பந்தமான விஷயங்களைப் பற்றியும், உடல் நலத்தைப் பற்றியும் பகிர்ந்து கொள்வது மனதிற்கு ஒப்பவில்லை.

விளைவு நாயகன் ரிஷப்புடன் எப்பொழுதுமே ‘சண்டைக் கோழி’யாக இருக்கிறாள். இருவரும் எப்படிக் கடைசியில் இணைகிறார்கள் என்பதே இந்தக் கதை.

கதையைப் படித்துக் கருத்துக்களைத் தெரிவித்து, மேலும் மேலும் எழுதத் தூண்டும் அத்தனை வாசகர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.

உங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,

லட்சுமி சுதா

Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580140906519
Poovil Thoongum Panithuli

Read more from Lakshmi Sudha

Related to Poovil Thoongum Panithuli

Related ebooks

Reviews for Poovil Thoongum Panithuli

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poovil Thoongum Panithuli - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    பூவில் தூங்கும் பனித்துளி

    Poovil Thoongum Panithuli

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    முன்னுரை

    அனைவருக்கும் வணக்கம்!

    என் ‘பூவில் தூங்கும் பனித்துளி’ மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி.

    இந்தக் கதையின் நாயகி வர்ஷாவிற்குத் தன் தந்தை ஒரு அந்நியனிடம் வியாபார சம்பந்தமான விஷயங்களைப் பற்றியும், உடல் நலத்தைப் பற்றியும் பகிர்ந்து கொள்வது மனதிற்கு ஒப்பவில்லை.

    விளைவு நாயகன் ரிஷப்புடன் எப்பொழுதுமே ‘சண்டைக் கோழி’யாக இருக்கிறாள். இருவரும் எப்படிக் கடைசியில் இணைகிறார்கள் என்பதே இந்தக் கதை.

    கதையைப் படித்துக் கருத்துக்களைத் தெரிவித்து, மேலும் மேலும் எழுதத் தூண்டும் அத்தனை வாசகர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.

    உங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்,

    லட்சுமி சுதா

    1

    உன்

    பார்வையின்

    அர்த்தம்

    என்ன?

    என்னை

    உருக்குகிறது

    உன்

    நீள்

    விழி!

    நான்

    உன்

    பார்வையில்

    கரைகிறேன்!

    நான்

    உன்

    பார்வையில்

    என்னை

    முற்றிலும்

    தொலைத்து

    விட்டேன்!

    உன்

    பார்வையில்

    நான் என்னை

    இழந்து

    உன்னில்

    கலந்து விட்டேன்!

    ‘மலைகளின் அரசி’ என்று வர்ணிக்கப்படும் ஊட்டியிலிருந்து கிட்டத்தட்ட இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அவலான்சி என்னும் இடம்.

    இயற்கை கொஞ்சும் அந்த இடம் பார்க்கப் பார்க்கத் திகட்டாத ஒன்று. பறவைகளுக்கு ரொம்பப் பிடித்த இடம் அது. ‘பர்ட்-வாட்சர்ஸ்’ தவறாமல் வரும் இடம் அது.

    ‘கானடா அணை’ என்று ஒரு அணை அங்கே ரொம்ப பிரசித்தம். ‘கேனடா’ அந்த அணையைக் கட்ட உதவி புரிந்ததால் அந்தப் பெயர் பெற்றது அது.

    இந்த அணைக்குப் பக்கத்தில் ‘ட்ரொவ்ட் ஃபார்ம்’ ஒன்று உள்ளது. ‘ட்ரொவ்ட்’ வகை மீன்கள் சுத்தமான தண்ணீரில் மட்டுமே உயிர் வாழும்.

    இந்தியாவிலேயே ‘ட்ரொவ்ட்’ மீன்கள் இங்கே மட்டுமே இருக்கின்றனவாம். அமைதியாக, இயற்கை வளம் பொதிந்து உள்ள இந்த இடத்திற்கு வர்ஷா அவ்வப்பொழுது வருவது உண்டு.

    அங்கிருந்த ஏரியில் மீன் பிடித்து விட்டுக் குதிரையில் சவாரி செய்வது அவளுக்கு ரொம்பப் பிடித்த பொழுது போக்கு. மரங்கள் சூழ்ந்த அந்தப் பகுதியில் அன்றும் அவள் குதிரையில் வந்து கொண்டிருந்தாள்.

    அந்த ஏரியைத் தாண்டிச் சாலை அருகே குதிரையில் வந்து கொண்டிருந்தாள் அவள். சட்டெனக் குதிரை மிரண்டது போல் அவளுக்குத் தோன்றியது.

    ‘என்னவாக இருக்கும்?’ என்று அவள் யோசித்துச் சுதாரிப்பதற்குள் ஒரு கார் அவர்கள் அருகே வேகமாக வந்தது. அந்தக் குறுகலான சாலையில் வளைவில் இருந்து சட்டென வந்த காரைக் கண்டு திடுக்கிட்டாள் வர்ஷா.

    அந்தக் கார் அவர்கள் அருகே வந்தது. பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து போய்ச் சிலையாய் இருந்தாள் அவள்.

    அந்தக் கார் சட்டென பிரேக் போட்டு நின்றது. மிரண்டு போன குதிரை பின்வாங்கியது. அதன் முரட்டுத்தனத்தோடு போட்டி போட முடியாமல் தோற்றுப் போன வர்ஷா தரையில் விழுந்தாள்.

    கார் கதவைத் திறந்து அதிலிருந்து இறங்கினான் ஒருவன். அவன் முகத்தில் கோபம் தாண்டவமாடியது.

    நீ உன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? இது பிரைவேட் - ரோட். இங்கே குதிரையில் ஜம்மென்று சவாரி செய்கிறாய்! என்று அவளைப் பார்த்துச் சீறினான் அவன்.

    ‘கீழே விழுந்திருக்கிறேன் நான். கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் கத்துகிறானே... சரியான காட்டுமிராண்டி! சே... இவனிடம் மாட்டினோமே!’ என்று மனதிற்குள் புலம்பினாள் அவள்.

    என்ன பேச்சையே காணோம்? கீழே விழுந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியில் வாய் ‘ஃபெவிகால்’ போட்டது போல் ஒட்டிக் கொண்டதோ! என்றான் ஏளனமாக.

    "என்ன, விட்டால் பேசிக் கொண்டே போவீர்கள் போல... நீங்கள் குறைந்தது எழுபது கிலோ மீட்டர் வேகத்தில் வளைவில் திரும்பி இருப்பீர்கள்.

    கார் புதிதாக ஓட்டத் தொடங்குகிறீர்கள் போல... முதலில் அதை ஒழுங்காக ஓட்டக் கற்றுக் கொள்ளுங்கள்.

    பின்னர் இந்த மாதிரி மலைக்கெல்லாம் காரை எடுத்து வாருங்கள்..." என்று தன் சுடிதாரில் ஒட்டிக் கொண்டிருந்த மண்ணைத் தட்டி விட்டபடியே அலட்சியமாகப் பேசினாள் வர்ஷா.

    "டோண்ட் டாக் ரப்பிஷ், நான் இருபது கிலோ மீட்டர் வேகத்தில்தான் வந்து கொண்டிருந்தேன்.

    குதிரைக்கு அடி ஏதும் படவில்லையே... பாவம்!"

    தேங்க்ஸ் டு யூ. குதிரையையும் என்னையும் நீங்கள் மேல் உலகிற்கு அனுப்பி இருப்பீர்கள். யார் செய்த புண்ணியமோ... நாங்கள் தப்பித்தோம்!

    "இது உன்னுடைய குதிரை இல்லை. அதான் இப்படி பொறுப்பில்லாமல் பாசம் இல்லாமல் இருக்கிறாய்.

    பிரைவேட் - ரோட்டில் குதிரைச் சவாரி செய்கிறாயே! சே... சரியான இடியட்!" என்று சொன்னவன் குதிரையைப் பாசத்தோடு தடவிக் கொடுத்தான்.

    அதைப் பார்த்த அவள் மனம் எரிந்தது. கீழே விழுந்தது நான். ஒரு பேச்சிற்குக்கூட அடிப்பட்டதா என்று கேட்கவில்லை. குதிரையைக் கொஞ்சுகிறான் எனப் பொருமினாள் அவள்.

    ஓ... நீங்க திரைப்பட நடிகை அமலாவிற்குச் சொந்தமா? என்றாள் சட்டென வர்ஷா.

    அவன் அவளைக் குழப்பத்தோடு பார்த்தான்.

    "என்ன ஆச்சு உனக்கு? கீழே விழுந்ததில் மூளையின் செல்கள் ஏதேனும் ஆஃப் ஆகிவிட்டதா உனக்கு?

    நீ என்ன கேட்கிறாய், சம்பந்தம் இல்லாமல்...?"

    ம்... நீங்கள் ஆள்தான் நன்றாக வளர்ந்திருக்கிறீர்கள். மூளையில் ஆனால் செல்லே இல்லை. பாவம்!

    ஏய்... என்ன சொல்றே நீ! என்று அவளைக் கோபத்துடன் நெருங்கினான் அவன்.

    அவன் கண்களில் தெரிந்த ‘தீ’யைக் கண்டு அவள் பயந்து போய்ப் பின்வாங்கினாள்.

    "நீங்கள் ப்ளூ-க்ராஸில் மெம்பரா என்பதைத் தான் அப்படிக் கேட்டேன். நடிகை அமலா ப்ளூ-க்ராஸ் வழியாக நிறைய விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் உதவி புரிகிறார்களே, அதுபோல நீங்கள்... நீங்களும் செய்கிறீர்களோ என்று சந்தேகம் வந்தது

    அதுதான் கேட்டேன். மற்றப்படி வேறு ஏதும் இல்லை!" என்றாள் அழுத்தமாக வர்ஷா.

    ஓ.கே.! என்று தோளை அலட்சியமாகக் குலுக்கி விட்டுக் காரை நோக்கி நடந்தான் அவன்.

    அவன் கார் அந்த ரோட்டில் சீறிப் பாய்ந்தது. அதைப் பார்த்த வர்ஷாவின் கோபம் அதிகரித்தது.

    சரியான திமிர் பிடித்தவன். சே! இவனோடு பேசினாலே பி.பி. ஏறிவிடும் போல! சரியான காட்டு மிராண்டி. பெரிய லக்ஸரி - கார் வேறு ஐயாவிற்கு என்று அவனைக் கரித்துக் கொட்டினாள் வர்ஷா.

    கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். அச்சச்சோ... நேரமாகி விட்டதே! பாவம், விக்ரம் வேறு காத்துக் கொண்டிருப்பானே எனப் பதைபதைத்தாள். இந்த நெட்டையனால் மூட்-அவுட் ஆகிவிட்டது. சே! என நினைத்தபடியே குதிரையில் ஏறினாள்.

    கிட்டத்தட்ட ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்திருப்பாள் வர்ஷா. அவள் கைப்பேசி சிணுங்கியது.

    விக்ரம்! ஸாரி... நீ அங்கேயே இரு. நான் இன்னும் பத்து நிமிஷத்தில் அங்கே இருப்பேன் என்று சொல்லி விட்டுக் கைப்பேசியின் இணைப்பைத் துண்டித்தாள்.

    வாடகைக் குதிரைக்கு உண்டான பணத்தைக் கொடுத்துவிட்டுத் தன் காரைக் கிளப்பினாள் அவள்.

    காரை ஓட்டும் பொழுதும் அந்த நெட்டையன் செய்ததை அவளால் மறக்க முடியவில்லை.

    வர்ஷாவின் முகத்தில் எப்பவும் குழந்தைத்தனம் இருக்கும். அதனாலேயே அவளை யாரும், குறிப்பாக ஆண்கள் கடிந்து பேச மாட்டார்கள்.

    அவளும் கடிந்து பேசும்படி நடந்து கொள்ள மாட்டாள். ஏதாவது அவள் தெரியாமல் தப்பு செய்திருந்தாலும், ‘பரவாயில்லை, இட்ஸ் ஆல் ரைட்!’ என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விடுவார்கள் ஆண்கள்.

    ஆனால் இந்த நெட்டையன் அப்படி ஏதும் செய்யவில்லை. அதுவே அவள் மூளையை அரித்துக் கொண்டிருந்தது.

    தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு காரை அந்த ‘ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்’ முன் நிறுத்தினாள் வர்ஷா.

    வர்ஷாவிற்கு நகைகள் டிசைன் செய்வதில் விருப்பம் அதிகம். ‘ஜெம்மாலஜி’யில் முறையாக மேற்படிப்பு படித்தவள். அப்பாவின் அனுமதியோடு ‘தி க்ரிஸ்டெல்ஸ்’ என்று ஒரு கடையை ஊட்டியில் தொடங்கினாள்.

    பெண்களின் விருப்பத்திற்கேற்ப, அவர்கள் ரசனைக்கு ஏற்ப அழகழகான கற்களில் மோதிரம், கம்மல், வளையல், சங்கிலி, கொலுசு என நிறைய அணிகலன்களை அவள் வடிவமைத்துத் தயாரித்து, விற்பனை செய்து வருகிறாள்.

    ஒரு வருடமாக வியாபாரம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடையில் விற்பனை செய்ய இரண்டு பெண்களை நியமித்திருந்தாள்.

    பெண்கள் உடை நிறத்திற்கு ஏற்ப டிரெண்டியாக அணிகலன்கள் அணிவது ஃபேஷனாகிவிட்டதால் அவள் கடைப் பொருட்களுக்கு நல்ல கிராக்கி.

    அதுவும் ரொம்ப விலை அதிகம் இல்லாமல், ‘ரீசனபிள் காஸ்ட்’டாக இருந்ததால் நிறையப் பேர் தயங்காமல் வாங்கினார்கள்.

    நிறைய டூரிஸ்ட்கள் வரும் இடம் என்பதால் கூட்டம் அந்த இடத்தில் எப்பவுமே இருக்கும். அதனால் அவள் கடையிலும் பெண்கள் கூட்டம் இருக்கும்.

    விக்ரம் அவளுடைய ஸ்கூல்-மேட். பள்ளிப் படிப்பை முடித்து விட்டு ‘பி-ஆர்க்’ படித்தான் அவன். அப்பாவின் சிவில் பிஸினெஸ்ஸைப் பார்த்துக் கொள்ள இண்டீரியர் டிஸைன் செய்ய இந்தப் படிப்பு உதவி புரியும் என்று தெரிந்துதான் அந்தப் படிப்பைத் தேர்வு செய்தான் விக்ரம்.

    விக்ரமை அவள் முதலில் சந்தித்தது, அவள் மனதில் ஓடியது. ஸ்கூல் படிக்கும்பொழுது அவள் விக்ரமிடம் அவ்வளவாகப் பழகியது கிடையாது. அவளுக்கென்று ஒரு ஃபிரண்ட்ஸ் வட்டம் உண்டு.

    அதில் விக்ரம் இல்லை. ஆனால் கல்லூரிப் படிப்பு முடித்த பின்பு நட்பு பூத்தது. அந்த நாள் அவள் நினைவுக்கு வந்தது.

    ஊட்டியில் நாடகக் குழுக்கள் அவ்வப்பொழுது நாடகங்களை மேடையில் போடுவது வழக்கம். சரித்திர நாடகங்கள், காதல் நாடகங்கள், காமெடி நாடகங்கள் எனப் பலதரப்பட்ட நாடகங்களைக் குழுக்கள் அரங்கேற்றுவார்கள்.

    தோழி மீரா வற்புறுத்தியதால் ‘ரோமியோ - ஜூலியட்’ நாடகத்திற்கு அவளுடன் வருவதாக வாக்களித்தாள் வர்ஷா.

    அந்த அரங்கத்தில் நல்ல கூட்டம். மூன்றாவது வரிசையில் இருவருக்கும் இடம் கிடைத்தது.

    நாடகம் ஆரம்பித்தவுடன் மேடையில் தோன்றிய ரோமியோவை முதலில் அடையாளம் கண்டுகொண்டது மீராதான்.

    ஏய் வர்ஷா! ரோமியோவை நல்லா பார்! என்று கத்தினாள்.

    ம்... நான் நல்லா பார்த்தா ஜூலியட் கோவிச்சுக்கப் போறா!

    அடச்சே... நம்மளோட ஸ்கூல்ல படிச்சானே லாஸ்ட் பென்ச் பாய்... விக்ரம்... அவன்தான்டி ரோமியோவா நடிக்கிறான்...

    அவள் சொன்ன பிறகு அவனைக் கூர்ந்து நோக்கினாள் அவள்.

    ஆமாம் மீரா... அவன்தான் போல. ஏய் அவன் மிஸ்கிட்ட பேசவே மாட்டான். அவனா ஸ்டேஜில இப்படித் தூள் கிளப்பறான்!

    எனக்கும் அதே சந்தேகம்தான்...!

    சரி... எதுக்கு இப்படி மண்டையை உடைச்சுக்கணும். நாடகம் முடிஞ்சவுடன் விக்ரம் தானா ரோமியோன்னு உறுதி செஞ்சுக்கலாம்டி...!

    தட்ஸ் எ குட் ஐடியா! பரவாயில்லை. உனக்கு அப்பப்ப மூளை வேலை செய்யுது!

    சரிடி... வாயை மூடிக் கொண்டு நாடகத்தைப் பார்! என்று அவளைத் தொடையில் கிள்ளினாள் வர்ஷா.

    அதற்குப் பின்பு இருவரும் நாடகம் முடிந்த பின்பு, முதல் வேலையாகக் குழுவினர் இருந்த அறைக்குச் சென்றனர்.

    ஹலோ ரோமியோ! நீங்க நல்லா நடிச்சீங்க! என்றாள் மீரா.

    ஓ... தேங்க்யூ! நீங்கள் மட்டும் சொல்றீங்க. உங்க ஃபிரெண்ட் பேச மாட்டாங்களா?

    ம்... ம்... நீங்க நல்லா ஆக்ட் செஞ்சீங்க.

    "தேங்க்ஸ் எ லாட். உங்களை மாதிரி ஒரு பெண் ஜூலியட்டாக நடித்திருந்தால் நான் நடிக்க அவசியமே இருந்திருக்காது.

    இட் வுட் ஹேவ் பீன் ஆல் ரியல்!"

    ஓ... நீங்கள் நிஜமாலுமே இறந்து போய் இருப்பீர்களா? என்றாள் கிண்டலாக வர்ஷா.

    நான் சொன்னது காதல் ஸீன் மட்டுமே...

    சரி... ரெண்டு பேரும்... மாறி மாறிச் சண்டை போட்டுக்காதீங்க. நானும் வர்ஷாவும் இங்கே வந்ததே ஒரு உண்மை தெரிஞ்சுக்கத்தான். முக்கியமான விஷயம் உங்களைப் பற்றி... என்றாள் மீரா.

    "அட... என்னங்க இப்படி ஒரு பீடிகை? சீக்கிரம் சொல்லுங்க. நீங்க சொல்றதைப் பார்த்தா பயமா இருக்கு.

    நான் படபடன்னு பேசுவேன். ஆனால் நல்ல பையன்தாங்க!"

    அந்தப் பயம் இருக்கட்டும். நீங்க செயிண்ட் லூயிஸ் ஸ்கூல்லதானே படிச்சீங்க?

    அட! ஆமாம். நீங்களும் அங்கேதான் படிச்சீங்களா? உங்க ரெண்டு பேர் முகமும் ஃபெமிலியரா இருக்கு. வந்தவுடனேயே நான் கேட்கணும்னு நினைச்சேன்.

    "ஆமாம்... நாங்களும் அதே ஸ்கூல்தான். ஃபிரெஞ்ச் க்ளாஸ் போது உங்களை மீட் செஞ்சிருக்கோம்.

    நீங்க கடைசி பென்ச்சில் உட்கார்ந்து இருப்பீங்க. அப்புறம் எனக்குத் தெரிஞ்ச வரை நீங்க மிஸ் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொன்னதா ஞாபகம் இல்லை...!" என்றாள் மீரா.

    ஓ... இதெல்லாம் நல்லா ஞாபகம் வெச்சிருப்பீங்களே... என்றான் விக்ரம்.

    இப்படிக் கேலியும் கிண்டலுமாக ஆரம்பித்த சந்திப்பு கொஞ்சம் கொஞ்சமாக நட்பாக வளர்ந்தது.

    விக்ரமின் கண்ணியமான பார்வை, கிண்டல் பேச்சு இதெல்லாம் வர்ஷாவிற்குப் பிடித்தது. அதனாலேயே எந்தத் தயக்கமும் இன்றி அவனிடம் அவளால் இயல்பாகப் பேச முடிந்தது.

    பழக ஆரம்பித்த நான்கு மாதத்திற்குள் சட்டென ஒரு நாள் தன் காதலை அவளிடம் சொன்னான் விக்ரம்.

    அதை எதிர்பார்க்காத வர்ஷா திகைத்தாள். என்ன சொல்வது எனப் புரியாமல் குழம்பினாள். அவள் விக்ரமை அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தது இல்லை.

    அவனை ஒரு நல்ல நண்பனாக நினைத்துத்தான் பழகி வந்தாள். அதனாலேயே என்ன பதில் சொல்வது அவனுக்கு எனத் திணறினாள்.

    பின்பு மனதில் நினைத்ததைப் பக்குவமாக அவனிடம் சொன்னாள். விக்ரம்... நான் இதை உங்ககிட்டே இருந்து எதிர்பார்க்கலை. நான் யோசிக்கணும், ப்ளீஸ்.

    ஓ.கே வர்ஷா! நீ யோசிச்சு சொல். பட் ரொம்ப நாள் என்னைக் காக்க வைக்காதே!

    "சரி விக்ரம். அதோட எனக்கு அப்பாவின் விருப்பமும் இதில் ரொம்ப முக்கியம்.

    என்னை அம்மா இல்லாத குறை தெரியாமல், ரொம்ப அன்பாக, பாசத்தைக் கொட்டி வளர்த்தவர் அப்பாதான். நிறையப் பேர் அவரை வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளச் சொன்னபொழுது அதை உறுதியாக மறுத்தவர் அப்பா.

    அதனால் அவரை எதிர்த்து நான் எதையும் செய்ய மாட்டேன். யூ நீட் டு அண்டர்ஸ்டாண்ட் தட்."

    "ம்... ம்... இந்தக் காலத்தில் இப்படி ஒரு பெண் இருப்பது ஆச்சரியம்தான். ஆனால் உன்னுடைய அப்பா என்னை ஏன் மறுக்கப் போகிறார்...? சொல்.

    என்னுடைய அப்பாவின் பிஸினெஸை நான்தான் அவருடன் சேர்த்துப் பார்த்துக் கொள்கிறேன்.

    அதோடு நான் ஒரே பிள்ளை. சொத்தெல்லாம் எனக்குத்தான். பார்க்க நன்றாக இருக்கிறேன். இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்?" என்றான் சற்றே கோபமாக விக்ரம்.

    விக்ரம்! எனக்குத் தெரியாது. ஹி மே ஹேவ் ஸம் எக்ஸ்பெக்டேஷன்ஸ் அபௌட் ஹிஸ் டாட்டர்ஸ் வெட்டிங்.

    ஓ.கே. நீ யோசித்த பின்பு சொல்! என்றான், தணிந்த குரலில் அவன்.

    விக்ரம் தன்னை ப்ரபோஸ் செய்ததை நினைத்தபடியே கடையினுள் நுழைந்தாள் அவள்.

    ஹாய் வர்ஷா! ஹவ் ஆர் யூ? என்றான் புன்முறுவலோடு விக்ரம்.

    ம்... உண்மையைச் சொன்னா... நாட் ஃபைன்! என்றாள் பெருமூச்சோடு.

    ஏன், என்ன ஆச்சு? யூ ஸவுண்ட் டல். கமான் டெல் மி!

    வீட்டில் பிரச்சினை விக்ரம்...

    என்ன வர்ஷா? எதுவாயிருந்தா என்ன, என்கிட்டே சொல்லு. தயங்காதே... ப்ளீஸ்... உன்னை இப்படி டல்லா பார்க்க மனசு என்னவோ செய்யுது.

    "நான் இதுவரை கேட்ட எதையுமே அப்பா மறுத்தது இல்லை. சொல்லப்

    Enjoying the preview?
    Page 1 of 1