Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannoramai Kathai Pesu!
Kannoramai Kathai Pesu!
Kannoramai Kathai Pesu!
Ebook173 pages1 hour

Kannoramai Kathai Pesu!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ஹாக்கி விளையாட்டில் பிரபலமானவன் ஆகாஷ். ஒரு விபத்திற்கு பின்பு, விளையாட்டை கைவிட வேண்டிய சூழல் ஏற்படுகிறது அவனுக்கு. ஸ்போர்ட்ஸ் குட்ஸ் கடையில் வேலை பார்க்கும் பிரியங்காவை அவன் சந்திக்கிறான். எலியும், பூனையும் பேர்ல இருவரும் சண்டைப் போட்டப்படியே இருக்கின்றனர். இருவருக்கும் இடையே சமாதானக் கொடி பறக்குமா? படியுங்கள்! உங்களுக்குத் தெரியும்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580140906603
Kannoramai Kathai Pesu!

Read more from Lakshmi Sudha

Related to Kannoramai Kathai Pesu!

Related ebooks

Reviews for Kannoramai Kathai Pesu!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannoramai Kathai Pesu! - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    கண்ணோரமாய் கதை பேசு!

    Kannoramai Kathai Pesu!

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    வாங்க பேசலாம்!

    இந்தப் புத்தகம் எழுதி முடிக்கும்பொழுது ஃபிடல் கேஸ்ட்ரோவின் மறைவு ஊடகங்களின் மூலம் கசிந்தது.

    சர்க்கரைக் கிண்ணமான கியூபாவின் அதிபர் அவர். உலகின் நீண்டகால அதிபர் என்று பெயர் பெற்றவர். அறுநூறுக்கும் மேற்பட்ட முறை. இவரை அமெரிக்க உளவுப்படை கொல்ல முயற்சி செய்து இருக்கிறது.

    ‘அதிகமான கொலை முயற்சியை எதிர்கொண்டு உயிர் தப்பியவர் என்று ஒரு ஒலிம்பிக் விருது இருந்தால் அது எனக்குக் கிடைத்து இருக்கும்’ என்று கிண்டலாக அவரே குறிப்பிட்டுள்ளார்.

    அனைவருக்கும் கட்டாயக் கல்வி, இலவச மருத்துவ வசதி ஆகிய இரண்டிலும் கியூபா நிகழ்த்திய சாதனைக்கு முக்கிய காரணம் இவர்தான்.

    அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஒரு சிறிய நாடான கியூபா எதிர்த்தது. அதற்குப் பின்னால் இருந்தது ஃபிடல் கேஸ்ட்ரோ.

    புரட்சி விதைக்கு வித்திட்டவர் அவர். ஆனால், மனித உயிர்களைப் பெரிதும் மதித்தவர். எதிரி நாடான அமெரிக்காவில், புயல் உயிர்களைப் பலி வாங்கிய பொழுது பல மருத்துவர்களை அங்கே அனுப்பியவர் அவர். அதேபோல் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது அங்கே மருத்துவர்களை உடனடியாக அனுப்பிய வரும் அவரே.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், கேஸ்ட்ரோ இறந்தவுடன், ‘சர்வாதிகாரி பிடியில் இருந்து கியூபா தப்பித்துவிட்டது’ என்று ஃபேஸ்புக் வழியாக இணைய தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

    அதற்குக் கேரளாவில் இருந்து பல ஆயிரம் எதிர்ப்புக் குரல்கள். கம்யூனிஸம் கேரளாவில் உயிர்ப்புடன் இருப்பதே இதற்குக் காரணம்.

    புரட்சி வெடிக்கும் இடத்தில் எல்லாம் ஃபிடல் கேஸ்ட்ரோவைத் தரிசிக்கலாம்.

    என் கதைகளைத் தொடர்ந்து படித்து ஆதரவு அளிக்கும் வாசகப் பெருமக்களுக்கு நன்றி.

    விமர்சனங்களை வரவேற்கிறேன்.

    மீண்டும் சந்திப்போம்.

    நட்புடன்,

    லட்சுமி சுதா

    ***

    1

    ஏதோ

    புதிய

    கனவுகள்!

    உன்னைச்

    சந்தித்த

    நாள்

    முதலாக!

    தினம்

    தினம்

    என்

    மனத்திரையில்

    நீங்காமல்

    தொடர்ந்து

    தெரிகிறது

    உன் பிம்பம்!

    என்ன மாயம்

    இது? சொல்லடி

    என் உயிரே!

    சென்னையில் உள்ள அடுக்கு மாடிக் கட்டடத்தில் அமைந்து இருந்தது அந்த விளையாட்டுப் பொருட்கள் விற்கும் நிறுவனம்–‘ப்ரீத் (Breathe) ஸ்போர்ட்ஸ்.’

    விளையாட்டுச் சாமான்கள் அனைத்தும், கிரிக்கெட் மட்டை முதல் ஹாக்கி பந்து வரை அங்கே மொத்தமாகவும், சில்லரையாகவும், தரமான விலையில் கிடைக்கும்.

    பரண் மேல் இருந்த இறகுப் பந்துகளை எடுப்பதற்காக, ஏணியின் மேல் ஏறிக்கொண்டு இருந்தாள் பிரியங்கா.

    ஸோ, இங்கே எப்பவும் கத்தி கூச்சலிடும் வாடிக்கையாளர்களைத்தான் நீங்கள் முதலில் கவனிப்பீர்களா...? என்ற ஆண் குரல் பின்னால் திடீரெனக் கேட்டவுடன், தூக்கி வாரிப்போட்டது அவளுக்கு.

    ஆனால் திரும்பிப் பார்க்காமல், இறகுப் பந்துகள் இருந்த அட்டைப் பெட்டியை எடுத்துக்கொண்டு, ஏணியில் இருந்து இறங்கினாள் அவள்.

    ‘கத்தியவன் யாராக இருக்கும்...?’ என்று யோசித்தபடியே ஏணியில் இருந்து மெல்ல இறங்கியவளின் கால்கள் தரையைத் தொட்டதும்தான் தாமதம், அவள் அருகே வந்து நின்ற ஒருவன்.

    காட்! இந்தக் கடையில் எப்பொழுதும் முதலில் வரும் வாடிக்கையாளர்களுக்குக் கடைசியில்தான் முன்னுரிமை அளிப்பீர்களோ...? என்று கத்தினான்.

    ஏணியில் இருந்து இறங்கும்பொழுது சுவரைப் பார்த்தபடியே இறங்கியதால், பிரியங்காவிற்கு அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை.

    திடீரெனத் தன் அருகே பனை மரம் போன்ற உயரத்தில் இருந்த ஒருவன் கத்தவும், என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தாள் அவள்.

    ‘இவன் எதற்குக் கடைக்கு...?’ என்ற யோசனை அவள் மனதில் ஓடியது.

    பின் தன்னைச் சுதாரித்துக் கொண்டவள், அவனைப் பார்த்து, ஸாரி ஸார்... என்ன சொன்னீங்க...? என்றாள்.

    சே...! வேலையிலும் ஒழுங்கு இல்லை, அதோடு சொல்வதும் புரிவது இல்லை. சரியான மக்கு போல... என்றான் ஆகாஷ்

    என்னது...? அவள் விழிகள் அகல அவனை முறைத்தாள்.

    நிச்சயமாக மக்குதான்... என்று தெளிவாக மீண்டும் சொன்னான் அவன்.

    ஹலோ ஸார், நான் ஒன்றும் மக்கு இல்லை. அதே போல் வேலையிலும் ஒழுங்கு இல்லாமல் இல்லை. ஆனால் நீங்கள்தான் ரொம்ப ரூடாக பிஹேவ் செய்கிறீர்கள். ஆனால், இது புதிது இல்லையே உங்களுக்கு... என்று சொல்லி முடித்த பின்புதான், அது தப்பு என்று அவளுக்கு உறைத்தது.

    அவள் ஸாரி சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். ஆனால், அதற்குள் அவன் முந்திக்கொண்டான்.

    ஸோ, நான் யார் என்று உனக்குத் தெரிந்துவிட்டது. அப்படித்தானே...?

    ஆமாம் ஸார். நீங்கள் ஆகாஷ், இந்திய ஹாக்கி டீமின் முன்னாள் கேப்டன். எனக்குத் தெரியும்... என்றாள் தணிந்த குரலில்.

    ஓ.கே... சரி, நீ என்னிடம் நான் ரூடாய் நடந்துகொண்டேன் என்று சொன்னாய்தானே! என்னைப் பொறுத்தவரை நீதான் என்னிடம் ரூடாக நடந்துகொண்டாய்.

    என்னது...! நானா...?

    அவள் குரலில் அதிர்ச்சி தெரிந்தது.

    யெஸ்... நீயேதான். வாடிக்கையாளர்களிடம் நீ நடந்து கொள்ளும் முறையைத்தான் சொல்கிறேன். நீ நடந்துகொண்ட முறை நல்ல மேனர்ஸ் இல்லை. வாடிக்கையாளர்கள்தான் பிசினஸுக்கு ரொம்ப முக்கியம். ஆனால், நீ வாடிக்கையாளரைக் கவனிக்காமல், பரணில் இருந்து எதையோ எடுக்க முயற்சி செய்கிறாய். அதனால் தான் சொல்கிறேன். தப்பை உன் பெயரில் வைத்துக் கொண்டு, என்னைக் குறை சொல்லாதே! என்றான் கோபமாக அவன்.

    நோ ஸார், அப்படி இல்லை. நீங்கள் வருவதற்கு முன்பே மேடம் கிரேஸி இங்கே வந்து விட்டார்கள்.

    ம்... பார்த்தேனே... நான் வந்த பின்புதான் அவர்கள் வந்தார்கள். ஆனால், அவர்களைப் பார்த்தவுடன் நீ வேகமாகப் பரணை நோக்கி ஓடி வந்து விட்டாய். உடனே ஏணி மேலே ஏற ஆரம்பித்து விட்டாய்.

    நோ ஸார். இது அப்படி இல்லை. நீங்கள் வருவதற்கு முன்பு அவர்கள் கடைக்கு மூன்று முறை வந்து விட்டார்கள். அவர்களிடம் நான் இறகுப் பந்து பாக்ஸைத் தேடித் தருவதாகச் சொல்லி இருந்தேன். அதனால்தான் வேகவேகமாக, அவர்கள் தலையைப் பார்த்தவுடன் உள்ளே ஓடி வந்தேன். என்றாள்.

    அவன் ஏதும் சொல்லாமல், அவளை மேலும் கீழும் பார்த்தான்.

    முதல் முறையாக ரொம்ப அன்கம்பர்டபிளாக அவள் ஃபீல் செய்தாள்.

    வெள்ளை நிற டாப்பும், ஜீன்ஸும்தான் நிறுவனத்தின் சீருடை, ‘இந்த ஜீன்ஸ் ரொம்ப இறுக்கமாக இருக்கிறதா...? சே...!’ என ஏதேதோ யோசனைகள் அவள் மண்டைக்குள் ஓட, திருதிருவென விழித்தபடி நின்றாள் அவள்.

    சரி... இப்படியே நின்றுகொண்டு இருப்பதாக உத்தேசமா? உனக்கு ரொம்பச் சிரமம் இல்லாவிட்டால், எனக்குக் கொஞ்சம் நேரம் ஒதுக்க முடியுமா? இல்லை... இப்படிக் கேட்பது கூட ரூட் பிஹேவியரா மேடம்...? என்றான் குத்தலாக அவன்.

    அவள் கன்னங்கள் கோபத்தில் சிவந்தன. ஆனால், கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் அவள்.

    ஸார்... நீங்க கொஞ்சம் இங்கே உட்காருகிறீர்களா...? ப்ளீஸ்... நான் ஒரு நொடியில் வருகிறேன்... என்றபடியே வேகமாக கேஷ் கவுண்டர் நோக்கிச் சென்றாள்.

    அங்கே காத்துக் கொண்டு இருந்த மேடம் கிரேஸிடம் இறகுப் பந்து பாக்ஸைத் திணித்து விட்டு, ஓட்டமும் நடையுமாக உள்ளே ஓடி வந்தாள்.

    அவன் உட்கார்ந்ததால், சோபாவே சின்னதாகப் பொம்மை போல் காட்சி அளித்தது.

    ஸார், உங்களுக்கு என்ன வேண்டும்? என்றாள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க.

    ம்... எனக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ வேண்டும். ட்ராக்ஸன் பிராண்ட், சைஸ் பதினொன்று.

    ஓ.கே. ஸார், இதோ வருகிறேன்... என்று உள்ளே சென்றவள், அவன் கேட்ட சைஸில் மூன்று மாடல்களை எடுத்து வந்தாள்.

    இந்த மூன்று மாடல்களில் உங்களுக்கு எது பிடித்து இருக்கிறது என்று பாருங்கள் ஸார்.

    ம்... இந்தக் கருப்பு ஷூ ஓ.கே.யாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ஓ.கே. ஸார். இதைப் போட்டுப் பாருங்கள்... என்று அவன் முன்னால் இருந்த டீப்பாயில் ஷூவை வைத்தாள் அவள்.

    ஓ.கே. போடுவதற்குக் கொஞ்சம் ஹெல்ப் செய்ய முடியுமா...? என்று லேசாக முறுவலித்தான் அவன்.

    வழக்கமாக, கஸ்டமர்ஸில் வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மட்டுமே ஷூ போடுவதற்கு உதவி புரிவது அவள் வழக்கம். ஆனால், இவனைப் புறக் கணிக்க ஏனோ அவளுக்கு மனம் ஒப்பவில்லை.

    ஓ.கே. ஸார்... என்றபடியே கீழே முழங்காலிட்டு உட்கார்ந்தாள்.

    நல்ல காலம், அவன் பழைய காலணிகளைக் கழற்றி இருந்ததால், அதைக் கழற்ற வேண்டிய வேலை அவளுக்கு இல்லை.

    புதிய காலணிகளை அவன் கால்களில் அணிவித்தாள். அவனுக்காகச் செய்தது போல் அது ரொம்பப் பொருத்தமாக இருந்தது.

    அப்பொழுது தற்செயலாகத் தன் கழுத்தைப் பார்த்தவள், திடுக்கிட்டாள். காரணம், அவள் ப்ளவுஸின் முதல் பட்டன் காணவில்லை.

    வெரி நைஸ்... எனக்கு ரொம்பப் பிடித்து இருக்கிறது... என்று அதே நேரம் அவன்,

    Enjoying the preview?
    Page 1 of 1