Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbu Mazhaiyiley Naan
Anbu Mazhaiyiley Naan
Anbu Mazhaiyiley Naan
Ebook148 pages52 minutes

Anbu Mazhaiyiley Naan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஸ்பெஷல் க்ரைம் பிரான்ச்சில் வேலை செய்யும் அர்ஜுன் கல்லூரி பேராசிரியையாக வேலை பார்க்கும் வாஹினியை முதல் சந்திப்பிலேயே தவறாக எடை போடுகிறான்.

அவனை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவன் முன்னே குற்றவாளி போல் வாஹினி நிற்க வேண்டிய சூழல். இருவருக்கும் இடையிலான மோதல் எப்படி முடிகிறது படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த நாவலில் உங்களுக்கு பிடித்த பகுதியை என்னிடம் பகிர்ந்து கொள்ளலாம். பகிர்ந்து கொள்ளும் சிறந்த விமர்சனங்களுக்கு பரிசுகள் உள்ளன.

விமர்சனங்கள் அனுப்ப வேண்டிய முகவரி lakshmisudha2010@gmail.com, lakshmisudha2010@yahoo.com

அன்புடன்

லட்சுமி சுதா

Languageதமிழ்
Release dateMar 12, 2022
ISBN6580140908242
Anbu Mazhaiyiley Naan

Read more from Lakshmi Sudha

Related to Anbu Mazhaiyiley Naan

Related ebooks

Reviews for Anbu Mazhaiyiley Naan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbu Mazhaiyiley Naan - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    அன்பு மழையிலே நான்

    Anbu Mazhaiyiley Naan

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 1

    மாலை

    நேரம்

    ஆற்றங்கரை

    ஓரம்

    நிலா

    வெளிச்சம்

    எங்கும்

    அமைதி

    உலகம்

    உறங்கிக்

    கொண்டிருக்கிறது

    நான்

    மட்டும்

    விழித்துக்

    கொண்டிருக்கிறேன்

    இந்த

    நொடி

    மீண்டும்

    கிடைக்காது

    உனக்காக

    காத்துக்

    கொண்டிருக்கிறேன்

    வருவாய்

    தானே

    ***

    அந்தப் பூங்காவில் கூட்டம் அவ்வளவாக இல்லை. வார இறுதி நாட்களில் சனி ஞாயிறுகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் போல. தங்கை அபிராமிகாக பூங்காவில் காத்துக் கொண்டிருந்தான் அவன்.

    அப்பொழுது ஒரு சொகுசு கார் பூங்காவை நெருங்கி வந்தது. காரில் இருந்து ஒரு அழகான இளம் பெண் இறங்கி வந்தாள். அவளருகே அவள் தோள் மேல் கை பதித்தபடி இன்னொருவன் வந்தான். டிரைவர் காரில் அமர்ந்திருந்தார்.

    அந்தப் பெண்ணின் முகம் வசீகரமாக இருந்தது. அந்தப் பெண்ணும் கூட வந்த இளைஞனும் பூங்காவை சுற்றுமுற்றும் பார்த்தனர். அவர்கள் ஏதோ தப்புக் காரியம் செய்ய வந்தது போல் அர்ஜுன் மனதிற்குப் பட்டது.

    நான் ஒருவேளை எல்லாவற்றையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கிறேன் போல. என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்டான் அவன். பூங்காவின் பெஞ்சில் அமர்ந்தனர் அந்த ஜோடி.

    அந்த இளைஞன் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்தான். அது விஸ்கி பாட்டில் என்று பார்த்தவுடனே அர்ஜுன் புரிந்துகொண்டான். நான் நினைத்தது தப்பு இல்லை. மது அருந்த தான் இங்கு வந்து இருக்கிறார்கள். பொதுவிடத்தில் இந்த மாதிரி செய்வதற்கு இந்தப் பெண்ணிற்கு வெட்கமில்லை. நாகரீகம் எவ்வளவு மோசமாக போக்கிவிட்டது. என்று நினைத்தபடியே அவர்களையே கூர்ந்து கவனித்தான்

    அவன் விஸ்கி பாட்டிலை அந்த பெண்ணிடம் நீட்டினான் அவன். அவள் அதை சிரித்தபடியே வாங்கி குடிக்கத் தொடங்கினாள். அவள் வேக வேகமாக தண்ணீரை குடிப்பது போல் விஸ்கியை குடிப்பதை பார்த்த அர்ஜுன் மிரண்டு போனான். காட் மொடா குடிகாரி போல. எவ்வளவு வேகமாக குடிக்கிறாள். சொகுசு காரில் வந்து எதற்காக இங்கு பார்க்கிற்கு வந்து குடிக்கிறாள்.?

    சிலருக்கு ஹோட்டல் அறையில் குடிப்பது பிடிக்காது அந்த ரகத்தை சேர்ந்தது போல் இவள் என நினைத்துக்கொண்டான். அவள் கன்னத்தில் முத்தம் பதித்தான் அந்த இளைஞன். அவள் ஏதும் சொல்லாமல் அவனை அணைத்துக் கொண்டாள்.

    அபிராமி இந்த காட்சி எல்லாம் பார்க்க கூடாது நாம் வேறு இடம் சென்று விட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் அர்ஜுன்.

    ஆனாலும் அவன் மனதில் இருந்து அந்த காட்சி நீங்கவில்லை. வெட்கம் கெட்ட பெண். ஆணுக்கு நிகர் பெண் என்ற கருத்து இந்த மாதிரி தவறாக சிலரால் உபயோகப்படுத்தப்படுகிறது. சமுதாயத்திற்கே சீர்கேடு இந்த மாதிரி பெண்கள் என நினைத்தபடியே அங்கிருந்து வேகமாக நடந்தான். கோபம் தீ போல் அவன் உடலெங்கும் பரவியது. அவன் கைபேசி சிணுங்கியது.

    சொல்லு அபிராமி என்றான் அவன்.

    சாரி அண்ணா. என்னோட ஃப்ரெண்ட் என்னை ட்ராப் செய்து விடுகிறேன் என்று சொன்னாள். அதனால் நீ எனக்காக காத்துக் கொண்டிருக்காதே. கிளம்பிப் போய் விடு.

    ஓ அப்படியா சரி. நீ இங்கே வராதது நல்லதுதான்.

    ஏன் அண்ணா ஏதாவது பிரச்சனையா அங்கே

    அப்படித்தான் என்று வைத்துக்கொள் ஆனால் வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியாது

    சீக்ரெட் போல தெரிகிறது. நேரில் பார்க்கும்பொழுது எப்படியாவது விஷயத்தை வாங்கி விடுகிறேன் என்றாள் சிரித்தபடியே மறுமுனையில் தங்கை.

    தங்கையுடன் பேசிய பின்பு மனம் அமைதி அடைந்ததை அவனால் உணர முடிந்தது.

    அத்தியாயம் 2

    அன்பு

    புதிய

    உலகத்தை

    படைக்கும்…

    அன்பு

    கடல்நீரை

    குவளைக்குள்

    அடக்கிவிடும்...

    அன்பு

    வானத்தில்

    நட்சத்திரங்களை

    பகலில்

    ஒளிரச்

    செய்யும்

    அன்பு

    மலையை

    சிறிய

    துகள்களாக

    மாற்றிவிடும்

    அன்பு வாழ்க.

    ***

    "ஹலோ சென்னை

    எப்படி இருக்கீங்க எல்லாரும் நலமா இருக்கீங்கன்னு நினைக்கிறேன். வாழ்க்கை வாழவே இந்த தொகுப்பில் உங்களோடு இணைந்து இருக்கப்போவது உங்களுடைய ஆர் ஜே வனி. நிகழ்ச்சியுடன் நம்முடன் இணைகிறார் முதல் காலர்.

    ஹலோ சார் சொல்லுங்க எப்படி இருக்கீங்க.

    நான் நல்லா இருக்கேன் மேடம் நீங்க எப்படி இருக்கீங்க

    ரொம்ப சூப்பரா இருக்கேன். சொல்லுங்க சார் எதைப் பத்தி இப்ப பேச போறீங்க

    மேடம் இப்ப இருக்கிற பசங்க எல்லாம் குறிப்பாக டீன் ஏஜ் பசங்க காலேஜ் பசங்க எல்லாம் சின்னதா தோல்வி வந்தால் கூட தாங்க மாட்டேங்கறாங்க. உடனே மனசு உடைஞ்சு போயிடுறாங்க. அவங்களுக்கெல்லாம் பூஸ்டர் மாதிரி ஏதாவது நிகழ்ச்சி பிரசன்ட் பண்ணுங்க மேடம். உங்களோட ஷோ ரொம்ப உபயோகமான தகவல்கள் நிறைந்ததா இருக்கும். அதனாலதான் உங்கள இந்த மாதிரி நிகழ்ச்சியை பிரசன்ட் பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறேன்

    இப்ப நாட்டுக்கு ரொம்ப தேவையான கருத்தை சொன்னீங்க.ரொம்ப நன்றி உங்க பேர் என்ன?

    சுபாஷ் மேடம்

    ரொம்ப நன்றி சுபாஷ் சார். நாட்டுல எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் பொழுது நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கிற இந்த பிரச்சனை ரொம்ப முக்கியமான ஒன்று. வளரும் தலைமுறைக்கு தேவையான ஒன்று. இதப்பத்தி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் உடன் பேசிவிட்டு உங்களை தொடர்பு கொள்கிறோம். உங்களுடைய ஐடியாவிற்கு ரொம்ப நன்றி. ஒரு சிறிய விளம்பர இடைவெளிக்குப்பின் மீண்டும் சந்திக்கலாம். இணைந்திருங்கள் எங்களுடன் ஹலோ சென்னை

    அடுத்த அரை மணி நேரம் ப்ரோக்ராமில் பிஸியாக இருந்தாள் வாஹினி.

    கல்லூரியில் பேராசிரியையாக இருக்கும் அவளுக்கு பொழுதுபோக்கு எஃப் எம் ரேடியோவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது. கல்லூரி வேலை

    Enjoying the preview?
    Page 1 of 1