Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Velicha Poove Vaa
Velicha Poove Vaa
Velicha Poove Vaa
Ebook162 pages43 minutes

Velicha Poove Vaa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஃபிலிம் டைரக்டராக பணிபுரியும் சுவாதிக்கு ஒரு பெரிய பிரச்சனை. அவளுடைய வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு அந்த பிரச்சனை அவளை மெல்ல மெல்ல ஊடுருவுகிறது. அதிலிருந்து அவள் தப்புவதற்கு டாக்டர் ரோஷன் உதவி செய்ய முன் வருகிறான். இருள் நிறைந்த வாழ்க்கையில் வெளிச்சமாக வரும் டாக்டர் ரோஷனை பற்றியும் சுவாதியை பற்றியும் தெரிந்து கொள்ள 'வெளிச்ச பூவே வா' உள்ளே நுழையலாமா?

Languageதமிழ்
Release dateDec 3, 2022
ISBN6580140909309
Velicha Poove Vaa

Read more from Lakshmi Sudha

Related to Velicha Poove Vaa

Related ebooks

Reviews for Velicha Poove Vaa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Velicha Poove Vaa - Lakshmi Sudha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வெளிச்ச பூவே வா

    Velicha Poove Vaa

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம்-2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    சமர்ப்பணம்

    22/8/2022, ஏகாதசி திதி அன்று இறைவனடி சேர்ந்த

    எனது தாயார் திருமதி சரோஜா அவர்களுக்கு இந்த நாவல் சமர்ப்பணம்.

    அவர்களின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது

    இந்த உலகில் இரண்டு பேருக்கு அவரால் பார்வை கிடைத்துள்ளது என்பதை நினைக்கும் பொழுது மனம் நெகிழ்கிறது.

    அத்தியாயம் 1

    நீ

    போகும்

    பாதையில்

    நான்

    வருகிறேன்

    உன்

    நிழலாக...

    உனக்குத்

    தெரியாமலே...

    உன் கண்கள்

    என்னும்

    மாயை கயிற்றில்

    என்னை

    கட்டிப்

    போட்டு

    விட்டாய்

    நீ...

    கைதியாய்

    நிற்கிறேன்

    நான்…

    ஆனால்

    நிம்மதியாக

    இருக்கிறது…

    உன்வசம்

    கைதியாக

    இருப்பதில்...

    அதனால்

    எந்த

    கவலையுமின்றி

    உன்

    கைதியாக

    இருக்க

    விரும்புகிறேன்...

    வாழ்நாள்

    முழுவதும்...

    இந்த கதைக்கு இந்த லோக்கேஷன் நன்றாக இருக்கும்என்றாள் சுவாதி.

    "இங்கே எதுவுமே இல்லை போட்டோ எடுப்பதற்கு.

    ஒரு காய்ந்து போன டிரை ஏரியா... இந்த லொகேஷன் ஆ..."என்றான் கோபமான குரலில் தினேஷ்.

    "தினா...

    கதையை ஒழுங்காக படித்தாயா? என்றால் கீச்சுக்குரலில் சுவாதி.

    "ஆமாம் இது பெரிய மணிரத்னம் படம். கல்கியின் பொன்னியின் செல்வன் போல் நிறைய கதாபாத்திரங்கள்...

    படித்தாயா என்று கேள்வி? கதை படித்தாயா என்று கேள்வி கேட்பதைப் பார் என்று மனதிற்குள் முனங்கினான் தினேஷ்.

    நாம் எடுக்கப் போவது காதல் காட்சிகள் அல்ல.

    இது ஒரு சோகமான சீன் அதுக்கு இந்த மாதிரி லொகேஷன் தான் சரிவரும்.

    புரிந்ததா என்றாள் காட்டு கத்தலாக சுவாதி.

    இப்ப எதுக்கு இப்படி கத்துற எனக்கு காது நல்லாவே கேட்கும் என்றான் தினேஷ்.

    அப்ப ஏதாவது பதில் சொல்லு இப்படி மரம் மாதிரி நின்னுக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்

    அங்கு இருந்த மொத்த யூனிட்டும் தன்னை பரிதாபமாக பார்ப்பதை உணர்ந்தான் தினேஷ்.

    "சரி கத்தாதே.

    இதையெல்லாம் போட்டோ எடுக்கணும் ...நீ சொல்றபடி நான் கேட்கிறேன்...

    நீ டைரக்டர்...

    என் தலைவிதி இது"

    என்றான் விரக்தியான குரலில் அவன்.

    "விஷால்... இங்கே

    இதை கொஞ்சம் கவனி

    பிரண்டை எல்லாம் கேமராமேனாக அழைத்துப்

    கொண்டு வந்தால் இதுதான் பிரச்சனை..."

    என்று சலித்துக்கொண்டாள் சுவாதி.

    "என்ன இது மரியாதை குறைகிறது...

    இதை கவனி என்கிறாய் நான் என்ன ஆடா மாடா"

    என்றான் தினேஷ்.

    "அவளோட தமிழ் தான் உனக்கு தெரியும் இல்ல.

    நீ அவகிட்ட ஏன்

    வாய் கொடுக்கிற?

    ஜஸ்ட் சில் மேன்"

    என்றான் விஷால்.

    "நீ சொல்லவடா உனக்கு மான ரோஷம் கிடையாது.

    உன்னுடைய

    கேர்ள் ஃப்ரெண்ட் அவள்.

    அவ என்ன சொன்னாலும்

    உனக்கு காதில் தேன் பாய்ந்த மாதிரி இருக்கும்.

    எனக்கு அப்படியெல்லாம் ஏதும் இல்லை."

    "ஹலோ.

    எல்லாவற்றுக்கும் ஒரு லிமிட் இருக்கிறது.

    தினேஷ் கெட் அவுட்"

    என்று அவன் கழுத்தை பிடித்து தள்ளினாள் சுவாதி.

    "போதும் இந்த பக்கம்

    நீ வா சுவாதி.

    ஒரு சின்ன பிரேக்

    எடுத்துட்டு வரலாம்.

    பிரேக் எல்லோருக்கும் தான் இன்னும் ஒரு 30 நிமிஷத்தில் மீட் பண்ணலாம்"

    என்றான் விஷால்.

    அத்தியாயம்-2

    நீ

    போகும்

    பாதையில்

    இருக்கும்

    முட்களை

    நான்

    அப்புறபடுத்துகிறேன்

    உன்னைத்

    தொடர்ந்து

    நான்

    நிழல்

    போல்

    வருவேன்

    தீயசக்திகள்

    இருந்து

    காப்பாற்றுவதற்கு

    உன்னை

    தயார்

    படுத்துவேன்...

    உன்னிடமிருந்து

    நான்

    எதையும் எதிர்பார்க்கவில்லை

    சில

    நேரம்

    உன்

    நினைவுகள்

    மட்டுமே

    எனக்கு

    போதுமானதாக

    இருக்கிறது...

    நீ உன்னுடைய கோபத்தை குறைக்க வேண்டும் சுவாதி என்றான் விஷால்.

    "கமான் எப்பவும் நீ என் மேல் தான் குற்றம்

    சுமத்துகிறாய்.

    தினேஷ் செய்வது

    சரியா என்ன"

    "அவன் செய்தது தப்பாகவே இருக்கட்டும். மொத்த யூனிட்டும் பார்க்கும்படி நீ அப்படியே நடந்து கொள்வாய்.

    ஒரு பெண்ணிற்கு இவ்வளவு கோபம ஆகக்கூடாது"

    "உன்னுடைய பெண் இலக்கணத்தில் நான் இல்லாமல் இருக்கலாம்.

    ஆனால் நான் இப்படித்தான்.

    என்னுடைய பழக்கத்தை என்னுடைய நடைமுறை அது யாருக்காகவும் மாற்றிக்கொள்ள முடியாது"

    "சரியான பாதையில் இல்லை

    இது சுவாதி.

    தினேஷ் நமக்கு ரொம்ப நாளாக தெரியும் காமன் பிரெண்ட்.

    அதனால் பரவாயில்லை ஆனால் மற்ற பிராஜக்ட்ஸ் இந்த மாதிரி இருக்க முடியாது.

    நீ கொஞ்சம் பிராக்டிகலாக யோசித்துப் பார்"

    "தியரி பிரக்டிகல் வென்று வாய்க்கு வந்த படி பேசாதே என்னை பொருத்தவரை எல்லாமே ஒன்றுதான்.

    நான் சொல்வதை செய்வோம் செய்வதைச் சொல்வோம்"என்றாள்

    தீர்மானமான குரலில் அவள்.

    நீ இவ்வளவு பிடிவாதம் பிடிப்பது சரி இல்லை.

    என்று சொல்லிவிட்டு கதவை அறைந்து சாத்திவிட்டு அங்கு இருந்து நகர்ந்தான் விஷால்.

    கெட் லாஸ்ட்.

    இவன் ரொம்ப பர்ஃபெக்ட் மாதிரி பேசுகிறான்.

    ஏதோ கோபமே வராத புத்தர் போலல்லவா உளறுகிறான்.

    இந்த கிரியேட்டிவ் ஃபீல்டில்

    இதெல்லாம் சகஜம்.

    ஆனால் ஒரு பெண் அதை செய்தால் தவறு.

    மிகப் பெரிய தவறு.

    இந்த ஆணாதிக்க சமூகத்தில் இருக்கும் வரை இது இப்படித்தான்...

    யாராலும் இதை மாற்ற முடியாது" என்று

    யோசித்தபடி இருந்தாள் அவள்.

    "மேடம் எல்லாரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் சாரி.

    Enjoying the preview?
    Page 1 of 1