Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Penne... Nee Kaanchanai...
Penne... Nee Kaanchanai...
Penne... Nee Kaanchanai...
Ebook328 pages2 hours

Penne... Nee Kaanchanai...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

‘டேக்ஓவர்’ தேவராஜ்..!

நலிவடைந்த சிறு கம்பெனிகள் பெரும்பாலானவற்றைத் தன் வசத்தில் கொண்டுவர நினைப்பதால், அவனுக்கு அப்படியொரு பட்டப்பெயர்.

நாயகி லதிகாவின் கம்பெனியும் அப்படியொரு நிலைக்கு வர, தன்னம்பிக்கை சிகரமான நம் நாயகி தன் கம்பெனியை அவனுக்கு விலைபேச மறுக்கிறாள். கம்பெனியை நீயே வைத்துக்கொள்... காதலால் உன்னை ஜெயிக்கிறேன் என்கிறான் நம் நாயகன்.

காதலில் தன்னை ‘டேக்ஓவர்’ செய்தவனை, லதிகா எவ்வாறு இதயத்தில் வைத்துக் கொண்டாடினாள்.

இவர்களின் காதலுக்கு நடுவே, தேவராஜின் சகோதரி தெய்வானையின் குளறுபடியான வாழ்க்கை.

விதிவசத்தால் எத்தனை முயன்றாலும், சில பெண்களின் வாழ்க்கை சரியாக அமைவதில்லை.

வாழ்க்கைத் துணையை விரட்டிவிட வேண்டும் என்று நினைக்கும் கணவன் மிகச் சுலபமாக மனைவி மீது பழியைப் போட்டுவிடும் பாழாய்ப்போன மனப்பாங்கு. இந்தக் கதையைப் படிக்கும்போது தேவா போல் ஒரு சகோதரன் கிடைக்கமாட்டானா என்ற ஏக்கம் வரலாம்.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580134505711
Penne... Nee Kaanchanai...

Read more from Hansika Suga

Related authors

Related to Penne... Nee Kaanchanai...

Related ebooks

Reviews for Penne... Nee Kaanchanai...

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Penne... Nee Kaanchanai... - Hansika Suga

    http://www.pustaka.co.in

    பெண்ணே... நீ காஞ்சனை...

    Penne... Nee Kaanchanai...

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    https://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    1

    மேடம்… அவர்தான் டேக்-ஓவர் தேவராஜ்…

    தன் உதவியாளர் ஷீலா சுட்டிக்காட்டிய திசையில் டக்கென்று திரும்பிப் பார்த்தாள் லதிகா.

    கனகம்பீரமாய் அந்த மண்டபத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தான் TOT. (டேக்-ஓவர் தேவராஜ்.)

    இவரா…?

    சந்தேகக் கேள்வியுடன் தன் பார்வையை அகலமாக்கினாள் லதி. பெண்களுக்கு மட்டும், குறிப்பாகத் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு அழகான கண்களைப் படைத்தே ஆகவேண்டும் என்பது ஆண்டவனின் பார்லிமெண்டில் அவரே எடுத்துக்கொண்ட உறுதிமொழி போலும்…!

    இவரேதான் மேடம். நம்ம கம்பெனியை டேக்-ஓவர் பண்ணிக்க ஒப்புதல் கேட்டு அந்த வண்டுமுருகனைத் தூது அனுப்புன தடியன் இவனேதான்.

    இவரே என்று ஆரம்பித்து, சகல மரியாதைகளுடன் முடித்த ஷீலாவைப் பார்த்து லதிக்குச் சிரிப்பு வந்தது. ஆயினும், ஷீலாவைப் போலவே அவளுக்கும் மனதின் ஓரமாய், அந்தத் தேவராஜ் மீது ஒரு அடங்காத கோபம்.

    ஒரு கம்பெனி நஷ்டத்துல இயங்கிட்டு இருக்குன்னு அவன் காதுக்குச் சேதி போனாலே போதும். உடனே அதை டேக்-ஓவர் பண்ண ஸ்கெட்ச் போட்டுடுவான். இவன் அள்ளிப்போடற சம்பளக் காசுக்குக் கைகட்டி வேலை பார்க்க ஒரு கூட்டமே இருக்கு. அதுல ஒருத்தன்தான் அன்னைக்கு நம்ம ஆபீசுக்கு வந்த வண்டுமுருகன்.

    ஷீலா தேவராஜைப் பற்றிக் குற்றப்பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருக்க, ஆலமர விழுதுபோல் ஓங்குதாங்காய் நின்றுகொண்டிருந்த அந்த தேவாவைப் பார்வையால் அளவெடுத்துக் கொண்டிருந்தாள் லதி.

    தனக்குத் தெரிந்த யாரிடமோ தேவராஜ் வெகு சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருக்க, செகரெட்டரி ஷீலா அவனைப் பார்த்த பார்வையில் அசாத்திய வன்மம் தெரிந்தது.

    இருக்காதா பின்னே? தற்போது அவள் வேலை செய்து கொண்டிருக்கும் லதிகாவுக்குச் சொந்தமான எல்.எல்.புட்ஸ் அந்தச் சிடுமூஞ்சி தேவராஜனின் கைக்குப் போனால் ஷீலாவின் நிலை என்னாவது…? அவள் பாடுதானே திண்டாட்டம்.

    தேவராஜ் தன் கம்பெனி ஊழியர்களிடம் கொடுங்கோல் ஆட்சிபுரிபவன் என்றல்லவா ஷீலா கேள்விப்பட்டு இருக்கிறாள். லதிகாவிடம் இருப்பதுபோல் தேவராஜிடம் சுதந்திரமாக வேலை செய்ய முடியுமா?

    இன்னொருவரிடம் கைகட்டிச் சம்பளம் வாங்கினாலும், அலுங்காமல் சொகுசாக வாங்கவேண்டும் என்பதே ஷீலாவின் வாழ்நாள் கொள்கை. வளர்ந்து கெட்ட இந்தத் காட்டுப்புலியிடம் அந்தச் சொகுசெல்லாம் நடக்குமா என்ன?

    ஷீலா அவனை முறைப்பாகப் பார்த்துக்கொண்டிருக்க, மீண்டும் ஒருமுறை அந்த தேவாவைத் தன் கூரிய விழிகளால் ஆராய்ந்து கொண்டிருந்தாள் லதி.

    அடிதடி, ரகளை கேஸ் போல், ஆசாமி பார்ப்பதற்கு கொஞ்சம் அராஜகமாகத் தெரிகிறானே என்று மனம் கணக்கிட்டது. அன்றொரு நாள் இந்த ஆலமரத்தின் தூதுவனாய் வந்தவன் பெயரென்ன?

    வண்டுமுருகன் என்ற அடைமொழியை, தன் உதவியாளர் அடிக்கடி உபயோகித்ததில், தேவராஜின் தூதுவனாய் வந்தவனின் உண்மையான பெயரே லதிக்கு மறந்துவிட்டது.

    இவர் அனுப்பின ஆளோட பெயர் என்ன ஷீலா? நீ அடிக்கடி ‘வண்டுமுருகன்’-ன்னு சொன்னதுல எனக்கு அந்த ஆளோட உண்மையான பெயரே மறந்து போச்சு.

    அட… அவனுக்கு என்ன பேர் இருந்தா என்ன மேடம்? அவனும் அவனோட கிராப்புத் தலையும்…! எனக்கு அவனைப் பார்த்தவுடனே வண்டுமுருகன் கேரக்டர் ஞாபகம் வந்தது. அதையே பேரா வெச்சிட்டேன். நகைச்சுவையை நேரில் கண்டதுபோல் ஷீலாவுக்கு குபீர் சிரிப்புப் பொங்கியது.

    ஷ்…ஷீலா…! யாரையும் அந்த மாதிரி கேலி பேசக்கூடாது. அடுத்தவங்களைக் கிண்டல் பண்றதை இத்தோட நிறுத்திக்கணும். புரியுதா?

    நிஜமான கோபத்துடன், தன் விழிகளை உருட்டி, லதிகா ஒற்றைவிரல் நீட்டி எச்சரிக்க, தான் சமைத்ததைத் தானே விழுங்கித் தொலைத்த மரண அவஸ்தையுடன், கப்பென்று அமைதியானாள் ஷீலா.

    சிலநேரங்களில் லதிகாவிடம் இப்படி வாங்கிக் கட்டிக்கொள்வது அவளுக்கும் வாடிக்கையாகிவிட்டது.

    ஹலோ லதி… ஹௌ ஆர் யூ? என்ற ஆரவாரமான குரல் அருகில் ஒலித்ததில் தன்னையும் அறியாமல் எழுந்து நின்றாள் லதிகா.

    அப்பாவின் நண்பரும், எல்.எல்.புட்ஸ்… ஆடிட்டருமான பத்மநாபன் அங்கிளைக் கண்டதும் லதியின் கரங்கள் அழகாய்க் குவிந்து வணக்கம் தெரிவித்தன.

    பத்மநாபனுக்கு வெளியூரில் ஜாகை என்றாலும், இங்கே அவருடைய வாடிக்கையாளர்களுக்கு குறைவில்லை. தன் கிளையன்டுகளின் அழைப்பை ஏற்று இங்கே வரும் நேரம், லதிகாவையும் அவர் மறவாமல் சந்தித்துவிடுவது உண்டு.

    இன்று கம்பெனி வரை போகத் தேவையில்லாமல் கல்யாண மண்டபத்திலேயே அவளைச் சந்தித்தாகிவிட்டது.

    இந்தத் தருணத்தில் லதியின் தோற்றத்தைப் பற்றி சில வரிகளாவது சொல்ல வேண்டுமே…!

    படித்தவள், பண்பானவள் என்பதற்கான சர்வ லட்சணங்கள் பொருந்தியவள். எழில்வடிவம் குலைக்காத, உடலின் கச்சிதமான எடை…! எடைக்கேற்ற உயரம்…! அவள் கட்டியிருந்த இலகுரக பீச் நிறப் பட்டு லதியின் வடிவத்தோடு கச்சிதமாகப் பொருந்தி வந்தது.

    நீங்க மட்டும்தான் வந்தீங்களா? ஆன்ட்டி வரலயா? என்று கேட்டுக்கொண்டே ஆடிட்டருடன் சேர்ந்து நடந்தாள் லதி.

    ஹ…ஹ…ஹா… என்று ஆர்ப்பாட்டமாகச் சிரித்தார் பத்மநாபன். அவ ஆன்ட்டி இல்லம்மா… பாட்டி…! எங்கேயாவது கிளம்புன்னு சொன்னாலே உன் ஆன்ட்டிக்கு முதுகுவலி, மூட்டுவலி-ன்னு எல்லா வலியும் வந்துடும். என் சகதர்மிணி சரியான சோம்பேறி லதிகா. ஏசி ரூம்ல வாழ்ந்தே உடம்பை வளர்த்துட்டா என்று அவர் முடித்தபோது, அவளுக்குப் புருவங்களுக்கு இடையே கோபம் எட்டிப் பார்த்தது.

    எத்தனை படித்திருந்தாலும் இந்த நாபன் சாருக்கு நாசூக்கு இல்லையே? அடுத்தவர் முன் மனைவியைக் கேலி செய்வதில் இந்த ஆண்களுக்கு ஏன் இவ்வளவு கொண்டாட்டம்? பத்மநாபனின் பகபக சிரிப்பிலேயே அது நன்றாக வெளிப்பட்டது.

    எந்தச் சூழ்நிலையிலும் தாரத்தை விட்டுக்கொடுக்காமல் பேசவேண்டும் என்று, எந்த வயதில்தான் இந்த உத்தமவில்லன்கள் கற்றுக் கொள்வார்களோ?

    எதிர்த்துக் கேட்டால், என் மனைவி… என் உரிமை… என்று ரெடிமேட் வசனம் பேசுவார்கள். மனைவியைக் கேலி, கிண்டல் செய்ய கணவனுக்கு உரிமையில்லையா என்பார்கள்.

    அவள் சிந்தனையோட்டம் முடிவதற்குள், ஹலோ… மிஸ்டர் தேவராஜ்… என்று அதிரடியான குரலில் அடுத்த ஆளுக்குத் தாவினார் பத்மநாபன்.

    லதிகாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. இத்தனை பெரிய கூட்டத்தில், இவர் அழைப்பதற்கு, போயும் போயும் அவன்தான் கிடைத்தானா?

    அதுவும் இவளை அருகில் வைத்துக்கொண்டு அவனை அழைப்பானேன்?! சரிதான்…! வில்லங்கம் வீதி உலா வரப்போகிறது.

    ஹாய்… மிஸ்டர் பத்து… என்று சற்றும் சளைக்காத ஆர்ப்பாட்டத்தோடு குரல் கொடுத்தபடி அவர்களருகில் வந்தான் தேவராஜ். அவன் நெருங்குவதற்குள் அங்கிருந்து விலகி நடக்க முயன்றாள் லதி.

    இரும்மா… உனக்கு அறிமுகப்படுத்தத்தான் அவரைக் கூப்பிடறேன். நீ அதுக்குள்ள ஓடுனா எப்படி? பத்மநாபன் விடாப்பிடியாய் லதியின் கரம் பற்றி நிறுத்த,

    அருகில் நெருங்கிவிட்ட தேவராஜைக் கண்டு லதிகாவுக்குத் தர்மசங்கடமாகிப் போனது. இருவருக்கும் இடைவெளி குறைந்துகொண்டே வர, அவன் பிம்பம் படுபிரம்மாண்டமாய் தெரிவதுபோல் ஏனிந்த பிரமை?

    வஞ்சனையே இல்லாமல் வளர்ந்திருக்கிறான். ராட்சத வம்சமாய் இருப்பானோ? லதியின் கம்பெனியைக் கையகப்படுத்த இவன் ஆளைத் தூதுவிடத் தேவையில்லை. இவனே தன் அகண்ட கைகளால் கட்டிடத்தைப் பெயர்த்து எடுத்துச் சென்றுவிடலாம். அப்படியொரு அசாத்திய உருவம்.

    அவனைப் பற்றி ஏன் ஏடாகூடமாகச் சிந்திக்கிறோம் என்று ஒருகணம் வியந்து பின் சகஜமானாள் லதிகா.

    "ஹலோ மிஸ்டர் தேவராஜ்…! இவங்கதான் லதிகா…!

    எல்.எல்.புட்ஸ் நிர்வாகம் வாரிசுதாரருக்கு வந்து சேர்ந்துடுச்சுன்னு நோட்டீஸ் பார்த்திருப்பீங்களே? என் நண்பன் ரகோத்தமனோட வாரிசு இவங்கதான். புனேல எம்.பி.ஏ படிச்சிட்டு, தன் அப்பாவோட நிர்வாகத்தை ஏத்துக்க வந்திருக்கற மாதர்குலத்திலகம்."

    பத்மநாபன் அறிமுகப்படுத்திய விதத்தில், தேவராஜ் முகத்தில் அடர்ந்த புன்னகை அரும்பியது. தன் எதிரில் நின்றவள் மீது படிந்த குறுகுறு பார்வையுடன், மரியாதை நிமித்தம் கைகளைக் கூப்பினான் தேவா.

    சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள். டேக்-ஓவர் தேவராஜ். முறம்போன்ற அகலமான அவனது உள்ளங்கைகளுக்கு நடுவில் உலகமே அடங்கும்போல இருந்தது.

    லதிகா பதிலுக்குக் கரம் குவித்தாலும் அவள் மனம் சுணங்கியது. எதற்காக இந்த ஆடிட்டர் அங்கிள் மாதர்குலத்திலகம் என்றெல்லாம் அடைமொழி கொடுத்துப் பேசவேண்டும்? ஆனாலும் இவருக்கு எல்லாமே விளையாட்டுத்தான்.

    வந்தவன் நக்கலாக ஒரு சிரிப்பை வேறு சிந்துகிறான். டூத்பேஸ்ட் மாடல் என்று நினைப்பு…! ப்ரஷுக்குப் பதிலாக மீசையை வைத்தே பல் துலக்குவானோ…!

    நீங்க ரெண்டுபேரும் பேசிட்டு இருங்க. நான் இதோ வந்துடறேன்… பத்மநாபன் திடீரென்று வேறு திசைக்குத் தாவ,

    அவர் போவதையே உலகமகா சலிப்புடன் பார்த்தாள் லதிகா.

    அடப்பாவி மனுஷா…! குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பதை இப்படியா நிரூபிக்க வேண்டும். நிமிடத்துக்கு நிமிடம் யாரிடமாவது ஹலோ சொல்லி எங்கோ தாவிவிடுகிறாயே? கடைசியில் என்னை இவனிடம் சிக்க வைத்துவிட்டாயே…?

    அவள் மனத்தின் அலறல் அந்த மண்டபத்தின் சத்தத்தில் யாருக்கும் கேட்டிருக்கப் போவதில்லை.

    அக்கம்பக்கம் பற்றிய அக்கறையின்றி லதிகாவை உச்சி முதல் பாதம் வரை கண்களால் அளவெடுத்தான் தேவராஜ். அதிலென்ன தவறு…?

    ஆரம்பக் காட்சியில் லதியும் இதைத்தானே செய்தாள். அவள் தூரத்திலிருந்து செய்ததை இப்போது அவன் மிக அருகிலிருந்து செய்து கொண்டிருக்கிறான். அவ்வளவே…!

    நிற்பதுவே… நடப்பதுவே என்று ஒலித்துக்கொண்டிருந்த திரையிசை மண்டைக்குள் உஷார் மணியடிக்க, அவனிடம் பேச்சை வளர்க்க விருப்பமின்றி அங்கிருந்து நடக்கத் தொடங்கினாள் லதி.

    பதில் சொல்லாமப் போனா எப்படி? தேவராஜின் கணீரென்ற குரல் இடைமறித்தது.

    என்ன பதில் சொல்லணும்? கூர்மையான பதில் கேள்வியுடன், அவனைத் திடமாக ஏறிட்டாள்.

    டெர்ம்ஸ் பேசச் சொல்லி நம்பிராஜனை அனுப்பியிருந்தேனே? தன் அடர்ந்த மீசையைத் தடவிக்கொண்டான்.

    ஓ… சினிமாவில் வரும் வில்லனைப்போல் மீசையைத் தடவி அவளைப் பயமுறுத்தப் பார்க்கிறானா?

    "அதுக்கான பதிலை அன்னைக்கே உங்க நம்பிக்கைக்கு

    உ…ரி…ய ராஜனிடம் சொல்லியாச்சே…" தன்னிடம் மீசையை முறுக்கிய கோபத்தில், லதிகாவின் வார்த்தைகளும் முறுக்கிக்கொண்டு வந்து விழ,

    லேசானப் புருவத்தூக்கலுடன் சுவாரசியமானான் தேவா. அவனுக்கே எசப்பாட்டா?

    உங்க கம்பெனி இருக்கற நிலைமை என்னன்னு எனக்கும் தெரியும். உனக்கும் தெரியும். எதுக்கு இந்தப் பிடிவாதம்?

    மிகவும் உரிமையுள்ளவன் போல் அவன் ஒருமைக்குத் தாவ, கோபத்தை அடக்கும் பொருட்டு இமைகளை மூடித் திறந்தாள் லதி.

    கேலி வேண்டாம் மிஸ்டர்…! கம்பெனியோட நிலைமை எமர்ஜென்சி வார்ட்ல அட்மிட் பண்ணுற அளவுக்கு மோசமாவா இருக்கு? ஜஸ்ட் எ லிட்டில் ஸ்லிப்…! கூடிய சீக்கிரம் நிலைமையை மாற்றமுடியும்-ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. எந்த இடத்துல கோளாறுன்னு தேடிப்பார்த்துச் சரி செய்தா, எவ்வளவு மோசமான வண்டியும் நல்லபடியாவே ஓடும்.

    இதைப் பாருடா…! மேடம் நமக்கே பாடம் சொல்லித் தர்றாங்க…! ரகோத்தமன் சாருக்குப் பதிலா, நீங்க நிர்வாகத்தை ஏத்துட்டு நாளாச்சே மேடம்? எங்க கோளாறுன்னே இன்னும் உன்னால கண்டுபிடிக்க முடியல? எப்ப கண்டுபிடிச்சு எப்ப சரி செய்யறதா உத்தேசம்? அதுக்குள்ள உங்க ஆடிட்டர் பல பக்கங்களுக்கு நஷ்டக்கணக்கு எழுதிடுவார். இதெல்லாம் உனக்குத் தேவையா? வர்ற ஆஃபரை (Offer) ஏத்துக்கிட்டு சுமுகமா முடிச்சிட்டுப் போகலாமே? விஷமிகளும், போட்டிகளும் நிறைஞ்ச உலகத்துல ஒரு பொண்ணால எந்த அளவுக்குப் போராட முடியும்?

    சிங்கத்தைச் சீண்டிப் பார்க்கிறான். பெண்களை மட்டம் தட்டும் பேச்சுக்கள் லதிகாவுக்கு சுத்தமாகப் பிடிப்பதில்லை. தன் விழிகளில் அவள் மறைக்க முயன்ற சீற்றம், வார்த்தைகளில் வக்கணையாக எட்டிப் பார்த்தது.

    இந்த்ராநூயி, கிரண்மஜூம்தார்-ன்னு ஆண்களுக்கு நிகரா பொருளாதாரத்தைக் கட்டியாளும் பெண்களைப் பற்றி, சார் கேள்விப்பட்டது இல்லையோ?

    தன் கல்விஞானத்தைக் கேள்வியாக்கிவிட்டு, அவன் முகத்தின் மீதிருந்த பார்வையை அலட்சியமாகத் திருப்பிக்கொண்டாள் லதி. தேவராஜின் முகத்திலும் புன்னகை மறைந்து கடுமை ஏறியது.

    இந்தப் பெண்களே இப்படித்தான். கொஞ்சம் படித்துவிட்டாலும் உலகத்தையே அளந்துவிடலாம் என்ற கர்வம். யதார்த்தத்தில் இருந்து விலகிப் பேசுபவர்களை அவனுக்கும் பிடிப்பதில்லை.

    ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது. கற்பனை வேற. ரியாலிட்டி வேற மேடம். ஆசைப்படற அத்தனை பேரும் பெப்சிகோ, பயோகான் லீடர்ஸ் மாதிரி ஆகிடமுடியாது. அப்படி உருவாக முடிஞ்சிரிந்தா, இந்நேரம் பெண் சமுதாயம் எங்கேயோ போயிருந்திருக்கும். தொழில்ல வாங்குன அடி தாங்காமத்தான் உன் அப்பாவுக்கு உடம்புக்கு முடியாமப் போனது. மறுபடியும் அடுத்த அடி விழுந்து அவருக்கு விபரீதமா எதுவும் ஆகறதுக்கு முந்தி, புத்திசாலித்தனமா யோசிச்சு முடிவெடு.

    ஊசியாய்ச் செருகிச் சென்ற வார்த்தைகள். அவன் உண்மையைத்தான் சொல்கிறான். ஆனால், அவளுக்கு சுரீரென்று வலிக்கிறதே…!

    பதிலுக்குப் பதில் சூடாகத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று ஆதங்கப்பட்ட உதடுகளை அழுந்த மூடிக்கொண்டாள் லதி.

    வார்த்தைகளை வீணாக்குவதில் அவளுக்கு விருப்பமில்லை. தன் சாமர்த்தியத்தைச் செயலில் காட்டவேண்டும்.

    விழுந்து கொண்டிருக்கும் கம்பெனியின் செயல்பாட்டைத் தூக்கி நிறுத்தி, இதோ பார்… ஜெயித்துவிட்டேன்… என்று இவன் முன்னால் மார்தட்ட வேண்டும். அடர்ந்த மீசைக்கு மேல் புடைத்து நிற்கும் அவன் மூக்கை அறுத்து எறிந்தால்தான் அவளுக்கு நிம்மதி.

    மேலும் விவாதத்தை வளர்க்க விரும்பாமல், தகிக்கும் பார்வையுடன் அவனிடமிருந்து அவள் விலகிச் செல்ல, ஹைவேசின் கனரக வாகனம்போல் அசையாமல் நின்றிருந்தான் தேவா.

    விருந்து உபசாரங்கள் முடிந்து, அந்த கருப்பு நிறக் காரில் ஷீலாவும், லதியும் தங்கள் இருப்பிடம் நோக்கி விரைந்து கொண்டிருந்தனர்.

    "லதி மேடம்… ஏன் உம்முன்னு இருக்கீங்க? நீங்க

    மூட்-அவுட் ஆகற மாதிரி அந்த தேவராஜ் ஏதாவது சொன்னானா?" மௌனத்தை உடைத்தாள் ஷீலா.

    பழைய டேக்-ஓவர் பல்லவி. பொண்ணுங்க எதுக்கும் லாயக்கில்ல. அவங்களால எதையும் சரிபண்ண முடியாது… சாதிக்க முடியாதுன்னு மட்டந்தட்டிப் பேசறான். தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும்-ன்னு கர்வப்படற ஆணாதிக்க மனப்பான்மை. இமோஷனலா என்னை ப்ரெயின்-வாஷ் பண்ணி அவன் நினைச்சதை சாதிக்க ஆசைப்படறான். இவன் மூக்கை அறுக்கவாவது நாம நம்ம நிர்வாகத்தை ஸ்பீடப் பண்ணணும். இந்த மாதிரி எத்தனை கம்பெனிகளை இவன் டேக்-ஓவர் செய்திருக்கான் ஷீலா?

    எனக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் நாலு சின்ன கம்பெனி அவனோட தேவா க்ரூப் நிறுவனங்களோட மெர்ஜ் ஆயிருக்கு. என் காதுக்கு எட்டாத விவரங்கள் இன்னும் எத்தனை இருக்குன்னு தெரியலயே மேடம்? இப்படியே போயிட்டிருந்தா தொழில் சாம்ராஜ்யத்துக்கு சக்ரவர்த்தி ஆயிடுவான்னு, அவனைப் பார்த்துப் பொருமுற கூட்டமும் இருக்கு.

    போட்டியும், பொருமலும் எங்கதான் இல்ல ஷீலா. இருக்கறவன் அள்ளி முடியறான். இல்லாதவன் ஏக்கத்தோட பார்க்கறான். அப்பா இன்னும் கொஞ்சம் கவனமா, நிர்வாகத்தைப் பார்த்துட்டு இருந்திருந்தா, இந்தச் சரிவு நமக்கு வந்திருக்காதோ என்னவோ? நானும் நிம்மதியா எம்.என்.சி. வேலை தேடிச் செட்டிலாகியிருப்பேன். திடுதிப்புன்னு இப்படி ஓடிவந்து நிர்வாகத்தையும் ஏத்துக்கிட்டு, தேவா மாதிரியான ஆளுங்களையும் சமாளிக்க வேண்டி வந்திருக்காது.

    ஒரு பெருமூச்சோடு வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாள் லதி. ரகோத்தமனுக்கு உடல்நிலை சரியில்லை என்று அவளுடைய அன்னை காவேரி தொலைபேசியில் அழைக்கும் வரை, சொந்த ஊருக்குத் திரும்பி வரும் எண்ணம் அவளுக்குத் துளியும் இல்லை.

    புனேவில் தங்கும் விடுதியில் இருந்துகொண்டு, பன்னாட்டு நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளை அவள் அலசி ஆராய்ந்து கொண்டிருந்த நேரம்,

    இனி உன் ஜாகை சொந்தமண்ணில்… என்று விதி அவளை மீண்டும் இங்கேயே அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

    2

    ஹை… மாமா வந்தாச்சு… என்று ஓடிவந்து முழங்காலைக் கட்டிக்கொண்ட அனன்யாவைத் தூக்கி, அவள் பட்டுக்கன்னத்தில் முத்தமிட்டான் தேவராஜ்.

    எங்க போனே மாமா? உன் கழுத்துல சந்தனம் இருக்கு… என்று அவன் கழுத்தைத் தொட்டுக் காட்டினாள் குட்டிப்பெண் அனன்யா.

    ஏய் மக்கு…! மாமா ஒரு மேரேஜ் பன்க்ஷன் அட்டன்ட் பண்ணப் போயிருக்கறதா மம்மி அப்பவே சொன்னாங்க இல்ல. அதுக்குள்ள மறந்துட்டயா?

    அனன்யாவை விடச் சற்றே பெரியவனான ரட்சித், பெரியமனிதன் போல் தன் தங்கையைக் கடிந்துகொண்டான்.

    வா தேவா… கல்யாணமெல்லாம் நல்லபடியா நடந்ததா? என்று கேட்டுக்கொண்டே ஹாலுக்கு வந்தார் தெய்வானை.

    ஹெவிவெயிட் நகைகள் அணியாத அம்மன். காலண்டரில் இருக்கும் அசத்தலான தெய்வ கடாட்ச முகம். கருணை நிறைந்த கண்கள்.

    கல்யாணத்துக்கு என்ன குறைச்சல் அக்கா? ஆஹா… ஓஹோ…! தடபுடல்…! ஒரே பொண்ணோட கல்யாணம்-ன்னு பணத்தை வாரியிறைச்சிட்டாங்க. ஆடம்பரத் திருமணங்களுக்கு வரி விதிக்கப்படும்-ன்னு அதர் ஸ்டேட்ல சட்டம் கொண்டு வந்த மாதிரி, இங்கேயும் கொண்டு வந்தாதான், இந்த மாதிரியான ஆளுங்க அடங்குவாங்க. வெஜ், நான்வெஜ்-ன்னு ரெண்டு வகையான கேட்டரிங் சர்வீஸ். ஏகப்பட்ட வெரைட்டி. வயிறு டொம்முன்னு இருக்கு.

    தன்னுடைய ஒரே மகளோட திருமணத்தை விமரிசையா நடத்திப் பார்க்கணும்-ன்னு அவங்களுக்கும் ஆசையிருக்காதா? வாழ்க்கையில ஒருமுறை நடக்கற வைபவம்…! மனசுக்குத் திருப்தியாச் செய்யட்டுமே…

    செய்யலாம் தான். அனேக கோடி ஆசீர்வாதங்களோட நடத்தி வைக்கப்படும் திருமண பந்தம் ஆயிரம் காலத்துப் பயிரா நிலைக்கறதா இருந்தா, எவ்வளவு செலவு செய்தாலும் தப்பில்லை. ஆனா…

    பேசிக்கொண்டே சென்றவன் தெய்வானையின் முகம் போன போக்கைக் கண்டுத் தன் தவறை உணர்ந்து

    Enjoying the preview?
    Page 1 of 1