Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaaviyam Paadavaa Thendraley...
Kaaviyam Paadavaa Thendraley...
Kaaviyam Paadavaa Thendraley...
Ebook291 pages2 hours

Kaaviyam Paadavaa Thendraley...

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

முரடன்.. ரவுடி.. என நாயகியின் குடும்பத்தாரால் பட்டம் கட்டி ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையிலும் நாயகியே உலகம் என அவள் மீது மாறா அன்பு கொண்டிருக்கும் நாயகன் தன் உண்மை அன்பினை அனைவருக்கும் உணர்த்தி நாயகியை கரம் பற்றுகிறானா இல்லையா என்பதை கதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateOct 1, 2022
ISBN6580134209079
Kaaviyam Paadavaa Thendraley...

Read more from Viji Prabu

Related to Kaaviyam Paadavaa Thendraley...

Related ebooks

Reviews for Kaaviyam Paadavaa Thendraley...

Rating: 4.333333333333333 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaaviyam Paadavaa Thendraley... - Viji Prabu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காவியம் பாடவா தென்றலே...

    Kaaviyam Paadavaa Thendraley...

    Author:

    விஜி பிரபு

    Viji Prabu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/viji-prabu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 1

    "ஸ்ரீநிவாசா கோவிந்தா..

    ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா.."

    ஸ்பீக்கரின் வழியாக மெல்லிய ஓசையுடன்.. மென்மையாக ஒலித்துக் கொண்டிருந்த பாடலை கேட்டவாறு பிரகாரத்தினை வலம் வந்து கொண்டிருந்த துளசியின் கரம் தன்னருகே வந்து கொண்டிருந்த பேத்தியின் தோளினை பாதுகாப்புடன் அணைத்துக் கொண்டது.

    பார்த்து.. மெதுவா நட தம்பி..

    பாட்டி அவளை பாதுகாக்க.. பெரிய மனுசியைப் போல தம்பியை எச்சரித்தவளை சிரிப்புடன் திரும்பிப் பார்த்தான் உதய்.

    உங்களை மாதிரி பார்த்து.. மெதுவா.. நடந்துக்கிட்டு இருந்தா நைட்டுக்குதான் வீடு போய் சேர முடியும். பரவாயில்லையா..?

    கேலியாக கேட்ட பேரனை கண்டிப்புடன் பார்த்தாலும், அவனது துறுதுறுப்பினை ரசித்தவராக புன்னகைத்தார் திரிலோகன்.

    முன்ன மாதிரியெல்லாம்.. ஐயா குடும்பத்தோட கோவிலுக்கு வந்து.. ரொம்ப நாள் ஆகிருச்சு!! தம்பி அப்படியே அவங்க அப்பாவை போலவே செம ஆக்டிவ்வா இருக்கு!!

    ஆமா..

    அவர்களை உடனிருந்து ஒவ்வொரு சன்னதிக்கும் அழைத்துச் சென்று.. ஸ்பெசல் மரியாதையுடன் சுவாமி தரிசனத்தினை காட்டிக் கொண்டிருந்த கோவிலின் ஊழியர் நைச்சியமாக கூறியதற்கான பதிலாக.. ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டு..

    அதுவே அதிகம் என்பதைப் போல அமைதியான அமரிக்கையுடன் நடக்க தொடங்கிய கணவரின் குணம் அறிந்திருப்பளாக அவரை பின் தொடர தொடங்கினாள் துளசி.

    திரிலோகன் அறநிலையத் துறையில் அதிகாரியாக இருந்து ரிட்டையர் ஆனவர் என்பதால்.. எந்த கோவிலுக்கு சென்றாலும் கோவில் சார்பாக அவர்களது குடும்பத்திற்கு ஸ்பெசல் மரியாதை கிடைக்கும்.

    திரிலோகன், துளசி.. தம்பதியினரின் ஒரே மகனான இளங்கோ தபால் துறையில் உயரதிகாரி!!

    இளங்கோவின் மனைவியான தீபா என்கிற தீபலட்சுமி.. புட் அண்ட் சேஃப்டி டிபார்ட்மெண்டின் மேலாளர்!!

    இவர்களின் பிள்ளைகளான ரூபேஷ், தேன்மலர், உதயன் ஆகிய மூவரில் பெரியவனா ரூபேஷ் ரெயில்வேயில் இன்ஜினியராக பணிபுரிகிறான்!

    அவனுக்கு அடுத்தவளான தேன்மலர் இளநிலை கல்லூரி படிப்பு முடிந்து.. கரஸ்பான்டன்சியில் மேற்படிப்பை தொடர்ந்தவாறே அரசு வேலைக்கு தேவையான தகுதிகளை வீட்டிலிருந்தே வளர்த்துக் கொண்டிருக்கிறாள்.

    இளையவனான உதய்.. எதற்கும் கட்டுப்படாத.. யாருக்கும் அடங்காத.. கல்லூரி பயிலும் இளங்கன்று!!

    கணவன், மகன், மருமகள், பேரன்.. என அனைவரும் அவரவர் வேலைக்காக ஆளுக்கொரு திசையில் பறந்து கொண்டிருக்க..

    பேரன் பேத்திகள் அனைவரையும் பொறுப்பாக கவனித்து வளர்த்ததில் இருந்து இன்று வரையிலும் அவர்களை பேணிப் பாதுகாத்துக் கொண்டிருப்பது. துளசிதான்.

    தற்போது திரிலோகன் ரிட்டையர் ஆகிவிட்டதால்.. மனைவியின் பொறுப்பில் தானும் இணைந்து கொண்டிருந்தார்.

    உயர் பதவியில் இருந்தவர்.. குடும்பத்தினர் அனைவருமே அதே போல அரசாங்க வேலையில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள்.. என்கிற மமதை திரிலோகனுக்கு எப்போதும் உண்டு!!

    அதன் காரணமாகவே அவர் எவருடனும் அதிகமாக பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ள மாட்டார்!

    அறிந்தவர் தெரிந்தவர் என்று மட்டுமில்லை.. நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் கூட.. அவர் அப்படித்தான் இருப்பார்..!

    அவ்வளவு ஏன்.. அவரது நலனே தன் நலனென கருதி வாழும்.. குடும்பத்தினருக்கென தன் வாழ்வை அர்பணித்திருக்கும் குணவதியான துளசிக்காக கூட அவர் தன்னுடைய குணத்தினை மாற்றிக் கொண்டதே இல்லை.

    அதிலும் துளசி, ஓரளவிற்கு படித்தவள் என்றாலும், அவளது குடும்பத்தினர்.. அவள் வழி உறவுகள் என எவருமே அவ்வளவாக படிப்பறிவின்றி இருந்த காரணத்தினால், மனைவி வழி உறவுகள் எல்லாம் திரிலோகனுக்கு என்றுமே ஒரு பொருட்டாக இருந்ததில்லை.

    இப்படிப்பட்ட திரிலோகன்.. அவர் அவராக இருக்கும்.. ஒருவரின் அன்பிற்கு அடிபணியும்.. அவர்கள் மீது உயிரையே வைத்திருக்கும் ஒரு ஜீவன் உண்டென்றால்.. அது அவரது பேத்தி தேன்மலர் மட்டும்தான்.

    தேன் மலர்!! திரிலோகனுக்கு மட்டுமல்லாது குடும்பத்தினர் அனைவருக்கும் உயிருக்கு உயிரான.. தேவதைப் பெண் அவள்..!!

    அழகிலும், அறிவிலும், தாத்தா திரிலோகனையும்.. குணத்தில் பாட்டியான துளசியையும் தன்னில் கொண்டிருக்கும் பேத்தியை பார்க்கும் போது மட்டுமல்லாமல் அவளை நினைத்தாலே பெருமையில் பூரித்து போவார் அவர்.

    பிரசாதமா கொடுத்த பூவை பிள்ளை தலையில வெச்சுவிடாம என்ன செய்யுற துளசி..?

    தந்தையையும் தாத்தாவையும் போல.. நல்ல சிவந்த நிறத்துடன், காது வரை நீண்டிருக்கும் கயல் விழிகளுடன், அழகிய நாசியும், கொவ்வை இதழ்களும், பிறை நெற்றியில் வில்லென வளார்த்திருக்கும் புருவங்களுமாக..

    தங்கப் பதுமை போன்ற அழகுடன்.. நீண்டு இடை தாண்டி அசைந்தாடும் பின்னலுடன் தம்பியை துரத்திப் பிடிப்பவளைப் போல அவன் பின்னால் வேக நடையுடன் விரைந்து கொண்டிருக்கும் பேத்தியை பார்த்தவாறு அவர்களை பின்தொடர்ந்து சென்றபடி மனைவியை கடிந்து கொண்டார் திரிலோகன்..

    நான் அப்பவே தலையில வெச்சு விடறேன்னு சொன்னேங்க.. மலருதான் பிரகாரத்துல உட்காரும் போது பொறுமையா வெச்சுக்கறேன்னு சொல்லிருச்சு...

    எதைக் கேட்டாலும் ரெடிமேடா ஒரு பதிலை தயாரா வெச்சுரு..!! சரி சரி.. சீக்கிரமா நடந்து வா.. பிள்ளைங்க போயிட்டாங்க பாரு..

    நீங்க வேணும்னா போங்களேன். எனக்கு மூட்டு வலி இருக்குன்னு தெரியும் தானங்க..? இதுல சீக்கிரமா எங்கிட்டு நடக்கறது!?

    இயன்ற அளவிற்கு வேகமாக நடக்க முயன்று முடியாமல் மூச்சு வாங்கியவாறு கூறிய மனைவியை.. அவளது நிலையறிந்த புரிதலுடன் பார்த்த திரிலோகன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை என்றாலும்..

    அவரது பார்வை தம்பியை துரத்திக் கொண்டு சென்ற பேத்தி போன பாதையின் மீதே கவலையுடன் பதிந்திருந்தது.

    சிறியவர்களுடன் கோவில் சிப்பந்தி சென்றிருந்தாலும், அவர்களை தனித்துவிட மனமற்றவராக அவர் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே..

    தம்பியின் கரம் பற்றி அழைத்துக் கொண்டு.. அவனுடன் விளையாட்டும் சிரிப்புமாக பேசிக்கொண்டே திரும்பி வந்த பேத்தியை கண்டவரின் முகம் திருப்தியுடன் மலர்ந்து விட்டது.

    மலர் வருது..!!

    வராம எங்க போயிர போகுது..!! நம்மளை விட்டுட்டு தனியா எங்கயும் போகாதுன்னு எனக்குதான் தெரியுமே..!! நீங்கதான் தேவையில்லாம டென்சன் ஆகிக்கறீங்க..

    பின்ன.. ஆகாம..?

    ஏங்க.. இது நம்ம ஊர்க் கோவில்!! சுத்தி இருக்குற அத்தனை மனுசங்களுமே நமக்கு நல்லா தெரிஞ்சவங்கதான். இதுல நம்ம பிள்ளைங்க என்ன தொலைஞ்சா போயிர போகுதுக..?

    உன்னமாதிரி என்னால அசால்ட்டா இருக்க முடியாது துளசி..

    அதுதான் தெரியுமே.. அது தெரிஞ்சதுனாலதான் மலருக்கண்ணு திரும்ப வருது..

    கருநீல நிறத்தில் தங்க நிற நூலினால் எம்பிராட்டரி செய்யப்பட்ட சுடிதாருக்கு மேட்ச்சாக போட்டிருந்த தங்க நிற ஷால் காற்றில் பறக்க..

    பூமிக்கு வலிக்குமோ என பயந்தாற்போல தரை அதிராமல் தாமரைப் பாதங்கள் மென்மையுடன் எட்டு எடுத்துவைக்க நடந்து வந்து கொண்டிருந்த பேத்தியை மனம் கொள்ளாப் பெருமையுடன் பார்த்தவாறு கணவனிடம் கூறினாள் துளசி.

    அது வர்றது இருக்கட்டும்.. நீயும் வா.. இப்பிடியே போனா உதய் சொன்ன மாதிரி நைட்டுதான் வீடு போய் சேர  வேண்டியதாகிப் போயிரும்..

    சரிங்க.. வந்துக்கிட்டுதான இருக்கேன்..

    கணவன் கடிந்து கொண்டதில்.. சற்று வேகமாக நடக்க முயற்சித்த துளசியை.. அதற்குள் அவர்களை நெருங்கி வந்துவிட்ட தேன் மலர்.. செல்லக் கோபத்துடன் தடுத்தவாறு அவளது கரத்தினை ஆறுதலாக பற்றிக் கொண்டாள்.

    இப்ப இம்புட்டு வேகமா நடந்து போய் எந்த கோட்டையை பிடிக்க போறீங்க அப்பத்தா..? எல்லா சந்நிதியிலயும் தரிசனத்தை முடிச்சாச்சு! அப்புறமெதுக்கு இவ்வளவு அவசரம்? வீட்டுக்குத்தான போறோம்.. மெதுவா நடங்க அப்பத்தா..

    ஆமாமா.. வீட்டுக்குள்ள போயிட்டா.. அப்புறம் கேட்டை தாண்டி வெளியில வரக்கூடாதுன்னு ஜெயில் கைதி மாதிரியா வீட்டுக்குள்ளயே அடைச்சுப் போட்டு வைப்பீங்க! அதுக்கு இன்னும் கொஞ்ச நேரத்துக்கு கோயில்ல ஃபிரீயா சுத்திக்கிட்டு இருந்துட்டு மெதுவாவே வீட்டுக்கு போயிக்கலாம்..

    டேய்.. நீ அடங்கவே மாட்டியா..? உன்னாலதான் அப்பத்தா வேகமா நடக்கணும்னு சிரமப்படறாங்க.. அவங்களுக்கு மூட்டுவலி இருக்குன்னு தெரியாதா உனக்கு..?

    பாட்டியின் கரத்தினை பற்றி அவள் நடக்க உதவிக் கொண்டே அதட்டிய அக்காவினை முகம் சுளித்து பார்த்தான் உதய்..

    இது நல்ல கதையா இருக்கே..!! நானா உங்களை என் பின்னாலேயே வரச் சொன்னேன்..? கோவில்லயாவது கொஞ்ச நேரம் பிரீயா இருக்கலான்னு பார்த்தா இங்கயும் விடாம துரத்திக்கிட்டு வந்ததுமில்லாம.. என்னையே குறை வேற சொல்லுவீங்களாக்கும்..?

    ரொம்பத்தான் அலுத்துக்காதடா.. இங்க நீங்க எப்படியெல்லாம் ஃபிரீயா இருப்பீங்கன்னு எங்களுக்கு தெரியாதா..? இவன் இருக்கான்ல தாத்தா.. கோவிலுக்கு வர்ற பொண்ணுங்களை சைட்...

    க்கா..!! பேசாம இருக்கா..!! நல்ல அக்கால்ல..!! என் செல்ல அக்கால்ல நீ!! அது வேற ஒண்ணுமில்ல தாத்தா.. கோவில்ல சைட் சீயிங்குக்குன்னு தனியா ஆளுங்க இருக்காங்களான்னு கேட்டாங்க.. அதான்.. இல்லன்னு சொல்லிட்டிருந்தேன்.. அதுக்குள்ள அக்கா வந்துருச்சு.. அதானக்கா சொல்ல வந்த..?

    இதுக்கு நானு ஆமான்னு சொல்லணுமா உதய்!!?

    அக்க்க்கா...!! சமயம் பார்த்து பழிவாங்காத.. சொல்லிட்டேன்.. அப்புறம் நீ இந்த தம்பியோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியதாக்கும்.. ஜாக்கிரதை..

    இந்த ஒரு முகத்தையே பார்க்க சகிக்கலை.. இதுல.. இன்னொரு முகத்தை வேற பார்க்கணுமாக்கும்..? வேண்டாம் சாமி.. பொழைச்சுப் போ..

    அது.. அந்த பயம் இருக்கணும்..

    டேய்.. பயம் கியம்னு சொல்லி காமெடி பண்ணாதடா.. ஆனாலும் உதய்.. உன்னோட டேஸ்ட் ஏண்டா இவ்வளவு ஒர்ஸ்ட்டா இருக்கு? ஏதாவது ஒண்ணாவது பார்க்குற மாதிரி இருக்காடா..? அதுககிட்ட போய்..

    க்கா.. உனக்கு இதுல அனுபவம் பத்தாது.. பேசாம இரு.. எல்லாருமே ரதியா இருக்கணும்னு எதிர்பார்த்தா முடியுமாக்கா..?

    ஆமாமா.. முடியாதுதான்.. ஏன்னா அதுக்கு நாம மன்மதனாக இருக்கணுமில்ல..? என்ன..? என்ன தம்பி முறைப்பு..?

    முறைக்காம..?!

    முறைக்காமவா..!? பேச்சுல திமிர் தெரியுதே தம்பி..!! தாத்தாகிட்ட உண்மைய சொல்லிரவா..?

    க்கா..!!

    வேண்டால்ல..? அப்ப ஷோல்டர இறக்கு! நார்மல் மோடுக்கு வா..! நம்மகிட்ட சவுண்ட ரைய்ஸ் பண்ணாம.. பவ்யமா பேசணும்! புரியுதா..? எப்படி? பவ்யமா.. ஓக்கேவா தம்பி..?

    என்னாது..!?

    அப்போதைக்கு இன்ஸ்டன்ட் சொர்ணாக்காவாக உடனடியாக பார்மிற்கு வந்துவிட்டிருந்த தேன் மலரினை, உதய் பல்லைக் கடித்துக் கொண்டு முறைக்க.. தற்செயலாக அவர்கள் பக்கமாக திரும்பிப் பார்த்த திரிலோகனின் விழிகள் கேள்வியாக சுருங்கி விட்டது.

    என்ன உதய்..?

    ச்சும்மா பேசிக்கிட்டு இருக்கோம் தாத்தா.. இல்லக்கா..?

    இப்ப ஆமான்னு சொல்லணுமா..?

    தயவு செய்து சொல்லு தாயே! நம்ம பிரச்சினையை அப்புறமா தனியா டீல் பண்ணிக்கலாம்..

    அப்படிங்கற..?! அப்பச்சரி!! ஆமா தாத்தா.. பேசிக்கிட்டுதான் இருந்தோம்..

    தம்பியிடம் மெல்லிய குரலில் வம்பிழுத்து.. பின் அவசர உடன்படிக்கையால் சமாதானமாகி.. தாத்தாவிடம் கூறிய அக்காவினை உதய் கொலை வெறியுடன் முறைக்க..

    இருவரின் உரையாடலையும் அவர்களுடனிருந்தால் ஒன்று விடாமல் கேட்டுக்கொண்டு இருந்த துளசி.. பேரனின் முகம் போன போக்கில்.. அதற்கு மேல் அடக்கிக் கொள்ள முடியாதவளாக வாய்விட்டு சிரித்து விட்டாள்.

    அப்பத்தா.. வீட்டுக்குள்ளயே சத்தமில்லாம இப்படியொரு வில்லிய வளர்த்து விட்டுட்டு என்னைப் பார்த்தா உங்களுக்கு சிரிப்பா இருக்கா..?

    ஏண்டா.. என் தங்கத்தைப் பார்த்தா உனக்கு வில்லி மாதிரியா தெரியுதாக்கும்..?

    கேட்ட துளிசியின் கரம் பேத்தியின் மென் கன்னத்தினை பாசத்துடன் வருட.. அதனை கோபத்துடன் தட்டிவிட்டான் உதய்..

    போங்க அப்பத்தா.. ஆனாலும் உங்களுக்கு அக்கா மேலதான் பாசம் அதிகம்.. என் மேல உங்களுக்கு பாசமே இல்ல.. அதனாலதான் இது பண்ணுற அலப்பறை எதுவும் உங்க கண்ணுக்கு தப்பாவே தெரிய மாட்டேங்குது..

    டேய் படவா.. பண்ணுற தப்பையெல்லாம் நீ பண்ணிட்டு பழிய தூக்கி அக்காமேல போடறியா..?

    நானென்ன செஞ்சேன்..?

    கோயிலுக்கு வர்ற புள்ளைகளை நீ.. அத என் வாயால வேற சொல்லணுமாக்கும்!

    அட அப்பத்தா!! நீங்க வேற!! வாயால சொல்ல முடியாத அம்புட்டு பெரிய குத்தம் எதையும் நாங்க பண்ணிடலை..! புரியுதா..?

    அப்ப அக்கா என்ன பொய் சொல்லுதா..?

    அது பொய்யும் சொல்லலை.. உண்மையையும் சொல்லலை.. பொத்தாம் பொதுவுல நடந்தத சொல்லிக்கிட்டு இருக்கு..

    அப்பிடின்னா..? புரியுற மாதிரி பேசேண்டா..

    ஆமா.. புரியுற மாதிரி விளக்க என்ன இருக்கு இதுல..?! கோயிலுக்கு ரெண்டு பொண்ணுங்க வந்துச்சுக அப்பத்தா.. அதுக அதோ.. அந்த கேட்டுக்குள்ள நுழையும் போது.. நான் இதோ இங்க.. ரெண்டுக்கும் இடையில இருக்க தூரத்தை பார்த்துக்கங்க.. ஒரு அரை கிலோ மீட்டர் இருக்காது..? இருக்குமில்ல.. ம்ம்... இங்க நின்னு அதுக உள்ள வர்றத பார்த்துட்டேனாம்.. அத இந்த சிபிஐ அம்மிணி கண்காணிச்சு என்னை கையும் களவுமா பிடிச்சுட்டாகளாம்.. அதுக்குத்தான் இவ்வளவு சீன் போயிட்டிருக்கு.. இப்ப புரியுதா..?

    அழாத குறையாக பேரன் சுட்டிக் காட்டிய தூரத்தினை கண்ணாலேயே அளவெடுத்த துளசியினைப் பார்த்த தேன் மலர், குறும்புடன் சிரிக்க தொடங்க..

    பாவமாக நின்றிருந்த பேரனைப் பார்த்த துளசிக்கும் சிரிப்பு வந்து விட்டதால்.. உதய்யின் முறைப்பினை லட்சியம் செய்யாது.. பேத்தியின் சிரிப்புடன் தானும் இணைந்து கொண்டாள் துளசி.

    அத்தியாயம் 2

    குட் மார்னிங் தாத்தா...

    பேரன் பேத்தி இருவரையும் நடுவில் விட்டு.. அவர்களுக்கு பாதுகாப்பாக பக்கத்திற்கு ஒருவராக நடந்தவாறு இளையவர்களுடன் பேசிக்கொண்டே நடந்து கோவிலை விட்டு வெளிவந்து கொண்டு இருந்த திரிலோகன் தன்னெதிரே கேட்ட குரலில் கவரப்பட்டவராக நிமிர்ந்து பார்த்தார்.

    அவரது கணிப்பினை பொய்யாக்காதவனாக எதிரில் நின்றிருந்த விமலினைக் கண்டவரது முகம் திருப்தியுடன் மலர்ந்தது.

    விமல்..! திரிலோகனின் ஒன்றுவிட்ட தங்கை பேரன் என்கிற வகையில் தூரத்து சொந்தம்.

    தன் பக்க உறவென்றால் வெல்லமாக இனிக்கும் திரிலோகனுக்கு.. அவரது உறவுக்கார பையன்..! அதிலும் படித்தவன்..! அதை விட நு.க்ஷ. யில் இன்ஜினியராக.. அரசு வேலையில் இருப்பவன்..! என..

    அத்தனை தகுதிகளை கொண்டவனான விமல்.. நெருங்கிய சொந்தக்காரனாக ஆகிப் போனதில் வியப்பொன்றும் இல்லைதான்..!!

    மார்னிங்.. மார்னிங்..!!

    வாயெல்லாம் சிரிப்பாக பதில் வணக்கம் தெரிவித்த பெரியவரைத் தாண்டி.. அவருக்கு சற்று பின்தங்கி காலில் செருப்பினை மாட்டிக் கொண்டிருந்த தேன் மலரின் மீது பார்வை பதிந்திருக்க.. வினயமாக பெரியவரிடம் பதிலுக்கு தலையசைத்தான் விமல்..

    என்னப்பா..!! இந்த நேரத்துக்கு கோவிலுக்கு வந்திருக்க..?! ஆபீஸ் லீவா..?

    இல்ல தாத்தா.. இன்னிக்கு சைட் விசிட் மட்டும்தான். அதனால லேட்டா போனா போதும்..

    வெரிகுட்..! வெரிகுட்! ஆபீசுக்கு லேட்டா போனா போதும்னு தூங்கி வழியாம எர்லியரா எப்பவும் போல எந்திரிச்சு கோவிலுக்கு வந்துட்டியே! பரவாயில்ல..! நல்ல பழக்கம்..

    திரிலோகன் பாராட்டிக் கொண்டிருக்கும் போதே அவர்களது அருகில் வந்துவிட்ட தேன்மலர்.. விமலினை கண்டவுடன் தயங்கி நிற்க..

    அவளது தயக்கம் புரிந்தவளாக.. பேரன் பேத்தி இருவரையும் காரில் சென்று அமருமாறு சைகையில் அறிவுறுத்தி.. அவர்களை கையோடு அனுப்பி வைத்துவிட்டு..

    பின் விமலின் அருகில் வந்த துளசியைக் கண்டு உள்ளூர மூண்ட எரிச்சலினை வெளிப்படையாக காட்ட முடியாதவனாக பெயருக்கு புன்னகைத்தான் விமல்.

    அன்று.. அந்த நேரத்தில்.. அவர்கள் கோவிலுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்ட பிறகே..

    அவசர அவசரமாக அரைத் தூக்கத்தில் இருந்து எழுந்து.. குளித்து முடித்து அங்கு விரைந்து வந்திருந்தவனின் பிளானினை ஒரு நொடியில் துளசி தவிடுபொடி ஆக்கிவிட்ட கோபம் அவனுக்கு.

    'ஆனாலும் இந்த கிழவிக்கு இம்புட்டு வில்லத்தனம் ஆகாது..!!'

    'நான் நினைச்சது மட்டும் நடக்கட்டும்.. அப்புறம் இருக்கு உனக்கு..'

    மனதிற்குள் கறுவியவாறு.. வெளித்தோற்றத்திற்கு அப்பாவியாக சிரித்தவனை ஆராய்ச்சியாக பார்த்தவாறு.. பெயரளவிற்குக்கூட சிரிப்பின்றி அவனை நேர்ப்பார்வையாக பார்த்தவாறு நின்றிருந்தாள் துளசி.

    பெரும்பாலும் திரிலோகன் வழி சொந்தங்களின் மீது துளசிக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1