Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennavale.. Enathuyire..
Ennavale.. Enathuyire..
Ennavale.. Enathuyire..
Ebook258 pages2 hours

Ennavale.. Enathuyire..

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

நினைவு தெரிந்த நாள் முதலாக ஓர் உயிர் ஈருடலாக ஒன்றாக வளர்ந்து.. அன்பு கொண்டிருக்கும் நாயகன் நாயகியின் வாழ்க்கை.. ஓர் கபட நாடகதாரியின் செயலால் பிரிவதும்..பின்.. இணைவதுமான காதல் கதை இது.

Languageதமிழ்
Release dateOct 1, 2022
ISBN6580134209076
Ennavale.. Enathuyire..

Read more from Viji Prabu

Related to Ennavale.. Enathuyire..

Related ebooks

Reviews for Ennavale.. Enathuyire..

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennavale.. Enathuyire.. - Viji Prabu

    http://www.pustaka.co.in

    என்னவளே.. எனதுயிரே..

    Ennavale.. Enathuyire..

    Author :

    விஜி பிரபு

    Viji Prabu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/viji-prabu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 1

    சுக்லாம் பரதரம் விஷ்ணும்..

    தலை நரைத்துப் பின்னால் குடுமி வைத்திருந்த ஐயர் மந்திரம் ஓத சுற்றியிருந்த அனைவரும் கைகூப்பி மனதார வேண்டியபடி நின்றிருந்தனர்.

    மந்திரம் சொல்லி முடித்த ஐயர் கற்பூர ஆரத்தியை அங்கு வரிசையாக வைத்திருந்த சாமி படங்களைச் சுற்றிக் காட்ட.. பயபக்தியுடன் கன்னத்தில் போட்டுக் கொண்ட புரொட்டியூசர் வைத்தியலிங்கத்தைக் கேலியாகப் பார்த்த படக் குழுவினரின் பார்வைகளைக் கண்டும் காணாதவரைப் போல தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தார் வைத்தியலிங்கம்.

    வைத்தியலிங்கம் சார்.. என் வேலை ஓவராயிடுத்து. இனி நீங்களும், டைரக்டர்வாளும் ஆரத்தி காட்டி முடிச்சுட்டா வேலை முடிஞ்சுடும். கூறிய ஐயரைப் பல்லைக் கடித்துக் கொண்டு பார்த்தார் வைத்தியலிங்கம்.

    ‘படவாப் பயலே. முத முதல்ல பட பூஜை போடும் போது நாலு நல்ல வார்த்தை இவனோட நாறுன வாயில இருந்து வருதான்னு பாரு. ஓவராயிடுத்து.. முடிஞ்சுரும்னு.. அபசகுனமா பேசித் தொலையுறானே..’

    அர்ச்சகரை மனதாரத் திட்டிக் கொண்டே ஆரத்தித் தட்டினை வாங்கிக் கொண்டவரின் கண்கள் ஏழுமலையானின் படத்தை பக்தியுடன் பார்த்தது.

    ஐயா ஏழுமலையானே.. எப்பொழுதும் போல என்னோட இந்தப் படத்தோட வேலையையும் உன் காலடியில் வெச்சுட்டேன் ஐயா. இந்தப் படம் நல்லபடியாக முடிஞ்சு.. நல்ல முறையில ஓடி.. நல்ல வசூலாக தருவதற்கு நீதானய்யா ஆசீர்வதிக்கணும். இனி எல்லாமே உன் பொறுப்பய்யா..

    மனதார வேண்டிக் கொண்டே கற்பூரத்தைக் காட்டியவரைப் பார்த்து கருணையுடன் சிரித்துக் கொண்டிருந்தார் படத்தில் இருந்த வெங்கடாசலபதி.

    அடுத்தது டைரக்டர் சாரை ஆரத்தி எடுக்கச் சொல்லுங்கோ சார்வாள் கடமை தவறாமல் குரல் கொடுத்தார் ஐயர்.

    வைத்தியலிங்கம் திரும்பிப் பார்க்க அவரது பார்வைக்குக் காத்திருந்தவனைப் போல அவரருகில் வந்து கற்பூரத் தட்டை வாங்கிக் கொண்டான் ரிஷி.

    ரிஷி.. ரிஷிகுமார்.. திரையுலகின் முன்னணி இயக்குனர்.. தான் இயக்கிய அனைத்துப் படங்களும் வசூலில் கோடிக்கணக்கில் கொழித்துக் கொண்டிருக்க அந்த மமதையை தன் தலையில் ஏற்றிக் கொள்ளாத எளிமையான பண்புள்ளவன்.

    வழக்கம்போல அவனது அமைதியான நடவடிக்கையால் கவரப்பட்டவராக அவனைப் பார்த்துப் புன்னகைத்தார் வைத்தியலிங்கம்.

    கம் ரிஷி.. திஸ் இஸ் யுவர் டர்ன்..

    சிரித்துக் கொண்டே அவருக்குத் தலையசைத்துவிட்டு கற்பூரத்தட்டை சுற்றினான் ரிஷிகுமார்.

    ரிஷிகுமாரைத் தொடர்ந்து படத்தின் கதாநாயகன், கதாநாயகி பூஜைக்காக வந்திருந்த முக்கியப் பிரமுகர்கள் என அனைவரும் ஒருவர் பின் ஒருவராக ஆரத்தி காட்டி முடிக்க தன் வேலை இனிதாக முடிந்த மகிழ்வில் முகம் கொள்ளாத சிரிப்பும் கை கொள்ளாத தட்சிணையுமாகக் கிளம்பினார் அர்ச்சகர்.

    பூஜைக்காக வந்திருந்த முக்கியஸ்தர்கள் அனைவரையும் அவரவர் தகுதிக்கும் மனதிற்கும் தக்கபடி பேசி உபசரித்துக் கொண்டிருந்த ரிஷிகுமார் வைத்தியலிங்கத்தின் வேலையைப் பாதியாகக் குறைத்துவிட..

    அவர் அங்கிருந்த சேர் ஒன்றில் அமர்ந்து கழுத்தில் கிடந்த பட்டு அங்கவஸ்திரத்தால் முகத்தினை நிம்மதியுடன் வைத்துக் கொண்டார்.

    வைத்தியலிங்கம் படம் எடுக்கிறார் என்றால் அவரது படத்தினை இயக்குவதற்காக முன்னணி இயக்குனர்கள் அனைவருமே விரும்பி வருவார்கள் என்றாலும் வைத்தியலிங்கத்தின் முதல் சாய்ஸ் ரிஷிகுமார் மட்டும்தான்.

    அவனும் அவரது நம்பிக்கையைப் பொய்யாக்கி விடாதவனாக தன் திறமையினாலும், அயராத உழைப்பினாலும் மேலும் மேலும் பல வெற்றிப் படங்களைத் தொடர்ந்து வைத்தியலிங்கத்திற்காக இயக்கிக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தான்.

    அவர்கள் இருவருக்கும் இடையில் தொழில் ரீதியான பழக்கம் போய் ஒரு பெற்றவருக்கும் மகனுக்கும் இடையிலான பாசம் பரிமளித்து விட்டிருந்தது.

    வந்திருந்த விருந்தினர் அனைவரையும் வழியனுப்பி முடித்துத் திரும்பியவனின் அருகில் வந்தாள் அர்ஷிதா.

    தலை முதல் கால் வரை பிரம்மன் ரசித்து ரசித்து செதுக்கிய ஓவியம் ஒன்று அசைந்து வருவதைப் போல அவள் நடந்து வருவதை அங்கிருந்த அனைவரும் பார்வையால் படம் பிடித்துக் கொண்டிருக்க..

    இயல்பாக அவளை.. குறிப்பாக அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துப் புன்னகைத்த ரிஷியை அதே இயல்புடன் ரசித்துப் பார்த்தாள் அர்ஷிதா.

    ஹாய் அர்ஷ். வந்ததில் இருந்து உன்னைக் கவனிக்க முடியவில்லை.. கூறிய ரிஷியைப் பார்த்து செல்லமாக தலையாட்டிச் சிரித்தாள் அர்ஷிதா.

    சார்.. நீங்க என்னிக்கு சார் என்னை ஸ்பெஷலாக கவனித்து இருக்கீங்க..? உங்களுக்கு உங்க டியூட்டி மட்டும் தான் முக்கியம் சார். உங்களைப் பற்றி எனக்கும் தெரியும் தானே சார்?

    தலை சாய்த்துக் கேட்டவளை பதில் கூறாமல் பார்த்துச் சிரித்தான் ரிஷி.

    எப்படி சார் நீங்க மட்டும் மாறாமல் அப்படியே இருக்கீங்க? ஐ மீன்.. இத்தனை சக்ஸஸ்.. இத்தனை அவார்ட்ஸ்.. இத்தனை பேன்ஸ்.. எல்லாம் இருந்தும் மாறாமல் இருக்கிறவங்க எனக்குத் தெரிஞ்சு ஒரு சிலர்தான் இருக்காங்க சார். அதில் நீங்களும் ஒருத்தர் சார்.

    நோ.. நோ.. அத்தனை காம்ப்ளிமென்ட்டையும் எனக்கு மட்டும் கொடுத்து விடாதே அர்ஷ். உங்கம்மா கூடத்தான் இன்னும் மாறாமல் அப்படியே இருக்காங்க.

    தூரத்தில் அட்டகாசமாக கால்மேல் கால் போட்டுக் கொண்டு கையில் ஜூஸ் டம்ளருடன் பத்திரிகையாளர்களுடன் அமரிக்கையாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த அர்ஷிதாவின் தாய் அம்சவேணியைக் கண்களால் சுட்டிக் காட்டிய ரிஷிகுமாரை முகம் கறுக்கப் பார்த்தாள் அர்ஷிதா.

    "வாட் அர்ஷ்... நான் சொன்னது சரிதானே?’ கேலியாகக் கேட்டான் ரிஷிகுமார்.

    நோ சார், யூ ஆர் ராங். ஏன்னா எங்கம்மாவோட ஆசைகளும் கனவுகளும் இப்போதெல்லாம் ரொம்பவும் பெரிதாகி விட்டது சார். நான் இப்போ அவங்களுக்குப் பொன் முட்டை இடும் வாத்து கிடையாது சார். வைர முட்டை இடும் வாத்து. அதனால் அவங்க ஆசையெல்லாம் இப்போ பேராசையாகி விட்டது சார்...

    அர்ஷிதாவின் கண்களில் தெரிந்த அடிப்பட்ட வேதனையைப் பார்த்து வாயடைத்துப் போனவனாக அமைதியுடன் அவளது முகத்தைப் பார்த்த ரிஷிகுமாரின் முகத்தில் அவளது வேதனை புரிந்த ஆறுதல் பாவம் தோன்றியது.

    ஓகே அர்ஷ்.. இதுக்கெல்லாம் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தால் நீ உன் வீட்டிலேயே இருக்க முடியாது அர்ஷிதா. பார்ப்போம்... இன்னமும் காலம் கடந்து விடவில்லை என்ற நம்பிக்கையை மட்டும் மனதில் வை.

    ரிஷிகுமார் அர்ஷிதாவின் தோளில் ஆறுதலாக ஒரு தட்டு தட்டிக் கொடுத்துவிட்டு விலகியதை அங்கிருந்த அத்தனை மீடியாக்களின் கேமராவும் கண்சிமிட்டி தனக்குள் அடக்கிக் கொள்ள..

    நாளைய பத்திரிகைகளின் முன்பக்கம் தங்களுடைய போட்டோவினால் நிரப்பப்படப் போவதை அறிந்திருந்தும் அதனைப் பற்றிய கவலை இல்லாதவர்களாக விலகி நடந்தனர் இருவரும்.

    கலைத்துறையில் நல்லவைகளும் இருக்கும்... அதே கலைத் துறையில் கெட்டவைகளும் இருக்கும்.

    அனைத்தையும் இரண்டு கண்களைப் போல இயல்பாக எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே அங்கு சாதிக்க முடியும் என்று அறிந்தவர்கள் மட்டுமே அந்தத் துறையில் நிலைத்து இருக்க முடியும்.

    அத்தியாயம் 2

    ஹீரோ சார்.. ரெடியா?

    கையில் இருந்த சிறிய மைக்கில் ரிஷி மெல்லிதாகக் குரல் கொடுக்க லைம் லைட் வெளிச்சத்தின் நடுவே வந்து நின்று ரிஷியைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டினார் அந்த கதாநாயக நடிகர்.

    ரிஷிகுமாரின் படம் என்றால் பூஜை போட்ட அன்றே படப்பிடிப்பு துவங்கிவிடும் என்பதை அறிந்திருந்தவர்கள் என்பதினால் மொத்த யூனிட்டுமே படப்பிடிப் பிற்கு ஆயத்தமாக ரெடியாகக் காத்திருக்க நிம்மதியுடன் அவருக்கென்று இருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு நடப்பவைகளை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார் வைத்தியலிங்கம்.

    ரிஷிகுமார் ஒரு படத்தினை இயக்க ஒத்துக் கொண்டால் அந்தப் படம் சில மாதங்களில் முழுமையாக எடுத்து முடிக்கப்பட்டு தயாரிப்பாளரின் கையில் ஒப்படைக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையே அவரது நிம்மதிக்குக் காரணம்.

    என்ன ஹீரோயின் மேடம்.. உங்களுக்கு டைம் பத்தலியா? ஹீரோ சாரே ரெடியாகி வந்து விட்டார் பாருங்க.. ஹரியப்.. ஹரியப்..

    ரிஷி குரல் கொடுத்த அடுத்த நிமிடம் வேகமாக ஓடிவந்து ஹீரோவின் அருகில் நின்று கொண்டாள் அர்ஷிதா.

    ஓகே.. சார்.. டேக்குக்குப் போகலாமா?

    ரிஷியின் கேள்விக்கு ஹீரோ மறுமுறையும் கட்டை விரலை உயர்த்தி விடையளிக்க கேமரா அவர்கள் இருவரையும் சுற்றிச் சுழன்று படம் பிடிக்கத் துவங்கியது.

    "எல்லாம் நல்லபடியாக நடக்கும் ஐஸ்வர்யா...’’

    ஹீரோ ஹீரோயினைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே முதல் டயலாக்கைக் கூற அதை அப்படியே விழுங்கிக் கொண்டது படப்பிடிப்புக் கேமரா.

    முதல் டேக்கை எடுத்து முடித்துவிட்டு பிரேக் விடப் பட்டு ஹீரோ தன் கேரவேனுக்குள் புகுந்து கொள்ள..

    சற்றுத் தள்ளியிருந்த சேரில் அமர்ந்து அதிகாரம் செய்து கொண்டிருந்த அன்னையின் அருகில் வேகமாகச் சென்ற அர்ஷிதாவின் அவசர நடை வித்தியாசமாக மனதில் பட அவர்கள் இருவரையும் நோக்கி நடந்தான் ரிஷி.

    வாட் பேபீ.. வொய் ஆர் யூ சீ லைக் திஸ்.. திஸ் இஸ்..

    தோள்களை நாகரீகமாக உயர்த்தியபடி உடைந்த ஆங்கிலத்தில் கேட்ட தாயை எரிச்சலுடன் பார்த்தாள் அர்ஷிதா.

    "அம்மா.. நான் ஏற்கெனவே ரொம்ப டென்ஷனாக இருக்கேன். நீங்களும் சேர்ந்து இர்ரிடேட் பண்ணாதீங்க. என் போன் எங்கே?’’

    என்னாச்சு பேபி.. ஏன் இவ்வளவு டென்சன் ஆகிறே? கூல்.. கூல்.. அன்னைக்குப் பதில் கூறும் மனநிலை இல்லாமல் அவள் கையில் இருந்த போனைப் பறித்தாள் அர்ஷிதா.

    "அர்ஷ்... இஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்? ஒண்ணும் பிராப்ளம், இல்லையே?’’ கண்களில் கவலையுடன் கேட்ட ரிஷிகுமாரைத் தவிப்புடன் பார்த்தாள் அர்ஷிதா.

    சார்.. இந்தப் படம் எனக்கு எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும் சார்.. ஆனால்...

    ம்ம்ம்.. அப்கோர்ஸ்.. ஆனால் என்ன? உண்மையான அக்கறையுடன் கேட்டான் ரிஷிகுமார்.

    சிறிது கால இடைவெளிக்குப் பின்பு அர்ஷிதா ஒப்புக் கொண்ட முதல் தமிழ்ப் படம் அது.

    சில பெரிய படங்களில் நடிக்கும் பொருட்டு வேற்று மொழிக்குச் சென்றுவிட்ட அர்ஷிதா தமிழில் தான் விட்டுச் சென்ற முன்னணி இடத்தினை மீண்டும் பிடிக்கும் வெறியோடு ஒப்புக் கொண்ட படம் அது.

    அதுவும்கூட ரிஷிகுமார் இயக்குனர் என்ற ஒரே காரணத்திற்காக அர்ஷிதா அந்தப் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கியிருந்தாள்.

    "சார் இன்னிக்கு ஷூட்டிங்குக்காக நான் கொண்டு வரச் சொல்லியிருந்த காஸ்ட்யூம் எதுவுமே எனக்குச் செட்டாக மாட்டேங்குது சார்...’’ அழாத குறையாகக் கூறினாள் அர்ஷிதா.

    வாட்.. இதையெல்லாம் முன்கூட்டியே செக் பண்ணி யிருக்க வேண்டாமா அர்ஷிதா.. கோபமும் அதிர்ச்சியுமாக கேட்ட ரிஷிகுமாரைப் பார்க்க முடியாமல் தலை குனிந்தாள் அர்ஷிதா.

    அன்றைய ஒரு நாள் படப்பிடிப்பு கேன்சல் ஆகிவிட்டால் பல லட்சங்களில் நஷ்டம் வரும் என்பதை இருவருமே அறிந்து இருந்ததினால் அர்ஷிதாவின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கியது.

    "சார்.. நான் மார்னிங்தான் மும்பையில் இருந்து வந்தேன் சார்.. அதனாலதான் செக் பண்ண முடியாமல் போய் விட்டது...’’ கூறிய அர்ஷிதாவை வெறித்தது ரிஷியின் பார்வை.

    "இதெல்லாம் ஒரு ரீசன்னு நான் போய் புரொட்யூசர் கிட்டயும் ஹீரோகிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா?’’

    மிகவும் அமைதியாக ஒலித்த ரிஷியின் குரலில் அர்ஷிதாவின் முகம் வெளிறியது.

    சார்.. ப்ளீஸ்.. எனக்காக இன்னும் ஒரு டென் மினிட்ஸ் மட்டும் பொறுத்துக்கங்க சார்.. நான் என் டிசைனருக்குப் போன் பண்ணிட்டேன்.. அவர் இப்ப வந்துடுவார்.

    ஹெல் யுவர் டிசைனர்... காஸ்ட்யூம்.. அண்ட் ப்ளா.. ப்ளா..!! இன்னும் பத்தே நிமிடங்கள்தான். அதற்குள் ரெடியாக வேண்டும். இல்லாவிட்டால் நடக்கும் விளைவுகளுக்கு நான் பொறுப்பாளி இல்லை அர்ஸ். ஹீரோ சாரோட ஒரு நாள் கால்ஷீட்டின் வேல்யூ உனக்கும் தெரியும் இல்லை...

    சார் ப்ளீஸ்.. ஐ அண்டர்ஸ்டாண்ட். ஆனால் என்னைப் பற்றியும் உங்களுக்குத் தெரியும் இல்ல சார்? நான் கேர்லெஸ்ஸாக இருக்கும் ஆள் இல்லையே சார்.. தணிவான குரலில் பதிலளித்த அர்ஷிதாவைப் பார்த்த ரிஷியின் கோபம் சிறிது குறைந்தது.

    ஓகே.. ஓகே.. உன்னை யார் தனியாக காஸ்ட்யூம் டிசைனரை ஏற்பாடு செய்யச் சொன்னது? கம்பெனிதான் ஒரு காஸ்ட்யூம் டிசைனரை ஏற்பாடு செய்திருக்கே.. இன்பாக்ட்.. நம்ம ஹீரோகூட அந்த காஸ்ட்யூமைத்தானே போட்டுக்கிட்டிருக்கார். அப்புறம் நீ மட்டும் ஏன் இப்படி தேவை இல்லாமல் டென்ஷனை உண்டாக்கி விட்டுக்கிற?

    இல்ல சார்.. இவங்களும் பெரிய டிசைனர்ஸ்தான். இவங்களோட கலெக்சன்சைப் போட்டுக்கிட்ட பிறகுதான் என்னோட கேரியர் டாப்புக்குப் போச்சு.

    ‘‘ம்ஹ்ம். அப்புறம் என்ன? அவங்க அனுப்பின டிரெஸ்ஸைப் போட்டுக்க வேண்டியதுதானே?"

    ரிஷியின் கேலியைப் புரிந்து மெல்லியதாகச் சிரித்தாள் அர்ஷிதா.

    "விளையாடாதீங்க சார்.. டிரெஸ் எல்லாமே ரொம்ப லூசாக இருக்கு சார்.’

    இப்பத்தான் அவங்களோட டிரெஸ்ஸைப் பத்தி ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தீங்க.

    ‘அதுவும் உண்மைதான் சார். இப்படியொரு தவறு இதுவரைக்கும் நடந்ததே கிடையாது சார்."

    அப்படி யார்தான்ம்மா உனக்காக டிஸைன் பண்றது!? பில்டப்பெல்லாம் பெரிசாக இருக்கே?

    "அதெல்லாம் இல்லை சார். நான் உண்மையைத் தான் சொல்றேன் சார். பனி பேஷன் ஹவுஸ்னு கேள்விப்பட்டு இருப்பீங்களே சார். அவங்கதான் சார்.’’

    அர்ஷிதா கூறியதைக் கேட்டு புருவம் சுருக்கி யோசித்தான் ரிஷிகுமார்.

    "ம்ம்... கேள்விப்பட்டிருக்கேன் அர்ஷ். ஆனா அவங்க இப்ப ரீசண்ட்டாகத்தான் இந்த பீல்டுக்கு வந்திருக்காங்க. இல்ல?’’

    "நோ சார். நம்ம செபாஸ்டியன் பேஷன் டிசைனிங்சோட ஓனர் செபாஸ்டியன் மேத்யூ

    Enjoying the preview?
    Page 1 of 1