Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neela Nayanangalil...
Neela Nayanangalil...
Neela Nayanangalil...
Ebook351 pages3 hours

Neela Nayanangalil...

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

அபிபாலா
தாய் இருந்தும், தாயின் ஸ்பரிசம் இல்லாமல் வளர்ந்த கௌதம் அவனுக்கு வரமாய் கிடைத்த காதலிதான் தேவி. தேவிக்கும், கௌதமுக்கும் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? நட்பிற்கு இலக்கணமாய் விளங்கிய சிபி தான்யாவை மணந்தானா? மயக்கும் நீல நயனம் யாருடையது? நாமும் விழி அகலாது படிப்போம் நீல நயனங்களில்……
Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580153808297
Neela Nayanangalil...

Read more from Abibala

Related to Neela Nayanangalil...

Related ebooks

Reviews for Neela Nayanangalil...

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neela Nayanangalil... - Abibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நீல நயனங்களில்…

    Neela Nayanangalil…

    Author:

    அபிபாலா

    Abibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/abibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    1

    புலர்ந்தும் புலராத இளங்காலைப் பொழுது! அன்றைய பொழுதை இனிதே புத்துணர்ச்சியோடு எதிர்கொள்ள ஆதவன் உற்சாகமாக மேலெழும்பத் துவங்கிய அழகான விடியல்! வானில் அதன் செந்நிற கிரகணங்கள் நிகழ்த்திய வர்ண ஜாலங்களைக் கண்டு, புள்ளினங்கள் உற்சாகக் கூச்சலிட்டன. அதன் மகிழ்ச்சியான ஒலி கேட்டு மலர்ந்த மலர்கள், தோட்டத்தையே ரம்யமாக்கி மலர்ந்து இனிய மணத்தை பரப்பிய இனிய புத்தம் புதுக்காலை!

    சிறியதாக இருந்தாலும், அழகு கொஞ்சும் தோட்டத்தை தன்னுள் அடக்கியிருந்த தேவி மஹால் உறக்கம் கலையாமல் அமைதியோடு இருந்தது. இதோ... அதிலிருந்த ஏதோ ஒரு அறையிலிருந்து, இனிய சங்கீதமாய் செல்போனில் ஒலி அழைக்க, அதன் ஓசையில் ஆழ்ந்த துயில் கொண்டிருந்த அந்த வீட்டின் இளவரசி, ப்ரியங்கா தேவி தன் சிப்பி இமைகளை மெல்ல விரித்தாள்.

    தன் அருகேயிருந்த சிறிய மேஜை மீதியிருந்த போட்டோவை முத்தமிட்டு மார்னிங் டாடி! மார்னிங் மை ஸ்வீட் மா! என்ற முறுவலோடு எழுந்து ஒரு நிமிடம் கண் மூடி தியானித்தாள். அவள் குளியலையிலிருந்து வருவதற்குள் அவளைப் பற்றிய ஒரு சின்ன அறிமுகம்.

    ப்ரியங்கா தேவி! துள்ளலும் துடிப்பும் குழந்தைத் தனமும் நிரம்பிய இருபத்தியொரு வயது சந்தனச் சிலை. கட்டிட நுண் கலையை விரும்பித் தேர்ந்தெடுத்து, இன்னும் ஓரிரு மாதங்களில் இளம் பொறியாளராக தேர்வு பெறும் நிலையிலிருப்பவள். கல்லூரியிலும் அவள் உயரமும். கம்பீரமும் ஒரு ராணிக்கே உரிய நிமிர்வுமாக மற்றவரிடமிருந்து தனித்தே தெரிவாள். படிப்பிலும் படு சுட்டி. உற்சாகப் பந்து.

    குளியலறையிலிருந்து வெளிப்பட்டவள் தன் நீண்ட கூந்தலைச் சுருட்டிக் கொண்டையிட்டபடி சமையலறைக்கு விரைந்தாள். ஜன்னல் வழியே தெரிந்த தோட்டத்தைப் பார்த்ததுமே மனம் ததும்ப, "ம்! ஸாரிடா. இன்னிக்கு நான் அங்க வந்து சுத்த முடியாது. இன்னிக்கு என் செல்லத் தாத்தாவுக்குப் பாத்டே. அதுவும் எழுபதாவது பிறந்த நாள், அவர் எழுவதற்குள் எனக்குக் கிச்சனில் நிறைய வேலையிருக்கு. கொஞ்சம் ஸ்பெஷலா என் தாத்துவுக்குப் பிடித்த டிபனைச் செய்யணும். இன்னிக்குக் காலேஜ்ல கேம்ப்ஸ் இன்டர்வியூ வேற இருக்கு மனதோடு பேசிக் கொண்ட கிச்சனில் நுழைந்தவளின் கண்கள் வியப்பில் விரிய,

    ப்ரோ! குட்மார்னிங். என்ன இது? அஞ்சு மணிக்கே எழுந்தாச்சு. இது உனக்கு மிட்நைட் ஆச்சே! நான் வந்து உன்னை எழுப்பவே இல்லையே? என்ன நடக்குது?"

    மணக்க மணக்கக் காபியைப் ப்ளாஸ்கில் ஊற்றிக் கொண்டிருந்த சிபிச் சக்கரவர்த்தி, தேவியின் ஒரே அண்ணன்.

    புன்னகையோடு, மார்னிங் குட்டிம்மா! இன்னிக்குத் தாத்தா பாத்டே இல்லையா, கண்டிப்பா செலிப்ரேட் பண்ண விடமாட்டார். அதனால, அட்லீஸ்ட் அவருக்கு முன்னால எழுந்து ரெடியாகி, அவரை விஷ் பண்ணி ஆசீர்வாதம் வாங்கிடலாம்னு தான் சீக்கிரம் எழுந்துட்டேன்.

    நானும் டிஃபன் செய்ய ஹெல்ப் பண்றேன். இன்னிக்கு மட்டுமாவது அவருக்குக் கிச்சனிலிருந்து விடுதலை கிடைக்கட்டும்! சரியா. இந்தா முதல்ல காபியை குடி! என்றவனின் குரலில் தெரிந்த வாஞ்சையில் கரைந்து போன தேவி, காபியைச் சுவைத்துக் கொண்டே, சரிண்ணா! நேத்து நைட் நீங்க தூங்கின பிறகு குலோப்ஜாமூன் செஞ்சு வச்சுட்டேன். இன்னிக்குச் சமையல் பண்ண காய்கூட கட்பண்ணி பிரிட்ஜில் இருக்கு. நைட் நீயும் ஆபிசிலிருந்து வந்ததும் டின்னருக்கு வெளியே போகலாம். இருவரும் பேசிக் கொண்டே வேலையை முடித்தார்கள்.

    சிபி பொறுப்பாக அவளுக்கு உதவி செய்துவிட்டு, சரி குட்டிம்மா. நான் இதையெல்லாம் டேபிளில் எடுத்து வைக்கிறேன். நீ குளிச்சு ரெடியாயிடு கேம்பஸ் இருக்கில்ல. பிரிப்பேர் பண்ணியாச்சா? இன்னிக்கு நான் டூ ஹவர்ஸ் பர்மிஷன் போட்டிருக்கேன். நாம கோயிலுக்குப் போய் தாத்தா பேருக்கு அர்ச்சனை பண்ணிட்டுப் போலாம். உன்னை நானே காலேஜ்ல டிராப் பண்ணிடறேன். ஓ.கே.

    தேங்க்ஸ் ப்ரோ!

    சிபி, தேவி இருவருமே சங்கர், நந்தினி தேவியின் செல்லக் குழந்தைகள். அவர்களே உலகமென மகிழ்ச்சியாக ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வாழ்ந்தனர். வட இந்தியாவில் மிகப் பிரபலமான கல்லூரியில் ஒன்றாகப் படித்து காதலித்து மணந்தவர்கள். சங்கர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவர் தந்தை கிருஷ்ணமூர்த்தி அவர்களின் காதலை அங்கீகரிக்க, ஜெய்பூரைச் சேர்ந்த நந்தினி தேவியின் வீட்டிலோ கடும் எதிர்ப்பு. அதை மீறி வீட்டை விட்டு வெளியேறி சங்கரின் கரம் பிடித்தவளுக்கு, அன்றைய தினமே தன் வீட்டினரோடு தொடர்பே அற்றுப் போனது.

    சென்னைக்குக் கிளம்பி வந்த அவர்கள் இருவருக்குமே ஒரு பெரிய மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை கிடைத்தது. இருவரின் உயர்ந்த பதவியே அவர்களின் வளமான வாழ்விற்கு அடித்தளமிட்டது. கிருஷ்ணமூர்த்தி நேர்மையான தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆடம்பரமில்லாத எளிமையான வாழ்வில் தன்னைப் பிணைத்துக் கொண்டிருந்ததால், தனது சேமிப்பை வைத்து, சென்னையில் பிரதான இடத்தில் நிலம் வாங்கிப் போட்டிருந்தார். சங்கரும், நந்தினியும் அதை தேவி மஹாலாக மாற்றியிருந்தனர்.

    நந்தினிக்கு, தன் மாமனார், கணவர் என இருவரின் அன்பும் ஆதரவும் சேர தன் தாய் வீட்டு நினைவே மறந்து போனது. சிபியும் தேவியும் அவர்களின் வாழ்க்கையைச் சொர்க்கமாக்கினர். இருவருமே தங்கள் தாத்தாவின் அரவணைப்பில் ஒழுக்கமான குழந்தைகளாய் வளர்த்தனர். சிபி டெக்ஸ்டைல் துறையில் ஆர்வத்தோடு கால் பதித்தான். அதற்குரிய படிப்பை முடித்து எம்.பி.ஏவும் முடிக்க, கல்லூரியில் நடந்த கேம்பஸில் அகமதாபாத்தில் உள்ள பிரபலமான டெக்ஸ்டைல் நிறுவனம் சிபியை வேலையில் இணைத்துக் கொண்டது.

    தேவியோ கட்டிடக் கலையில் ஆர்வம் கொண்டு பி.ஆர்க் முடிக்கும் தறுவாயில் இருந்தாள். அவளது மூன்றாம் வருட செமஸ்டர் தேர்வின் போது, ஒரு வேண்டுதலை நிறைவேற்ற சங்கர் - நந்தினி இருவரும் வெளியூர் சென்றனர். திரும்பி வந்த விமானம் விபத்துக்குள்ளானதில் சிபி, தேவி இருவரும் பெற்றோரைப் பறி கொடுத்தனர்.

    வயோதிகத்திலிருந்த கிருஷ்ணமூர்த்தி தனது மகன், மருமகள் மறைவில் இடிந்து போனார். அந்தத் துயரத்தைத் தன்னோடு புதைத்துக் கொண்டு, கலங்கிப் போய் பரிதவித்து நின்ற தேவி, சிபி இருவரையும் தன் மார்போடு அணைத்துக் கொண்டார். அதன்பிறகு, தன் பேரக் குழந்தைகளின் எதிர்காலமே அவரின் உயிர் மூச்சாகிப் போனது. சிபியும் தங்கள் வீட்டு தேவதையைத் தாயின் கனிவோடு அரவணைத்துக் கொண்டான்.

    அகமதாபாத்தில் தான் ஏற்றிருந்த வேலையை தங்கைக்காக உதறித் தள்ளினான். வீட்டின் ஆதாரமாக இருந்தவர்களின் இழப்பை ஈடு செய்ய முடியாது தான். ஆனாலும், அந்தத் துயரத்தை தங்களின் ஒரே ஆதரவான தாத்தாவின் மடி தேடி ஆறுதல் அடைந்தனர்.

    காலம் காயத்தை ஆற்றும் மருந்தானது. வாழ்க்கை மெல்ல இயல்பு நிலையடைந்ததும், சிபி தனது படிப்பிற்கான வேலையை சென்னையிலேயே தேட ஆரம்பித்தான். அவனது முந்தைய அனுபவத்திற்கும், திறமைக்கும் வேறு ஊர்களிலிருந்து வந்த நல்ல வாய்ப்புகளைக்கூட நிராகரித்தான்.

    ‘பத்மினி குரூப் ஆப் கம்பெனிஸ்’ சென்னையில், மிகப் பிரபலமான டெக்ஸ்டைல் யூனிட் அதன் தொடர்ச்சியாக புதிதாக ஒரு நிறுவனம் துவங்குவது தொடர்பாக வந்த வேலை வாய்ப்பு விளம்பரம் ஒன்றை நாளிதழில் படித்துவிட்டு, அதன் ஜெனரல் மேனேஜர் பதவிக்குத் தனது ரெஸ்யூம் ஒத்துப் போக, அதற்கு விண்ணப்பித்தான். குறிப்பிட்ட நாளில் அதன் நேர்முகத் தேர்வையும் திருப்திகரமாக முடித்து வெளியே வந்தபோது, தனது நெருங்கிய நண்பன் கௌதமைச் சந்தித்தான். சிபி, கௌதம், மிதுன், வருண் நால்வரும் பெங்களூரில் ஒன்றாகப் படித்தவர்கள். சிபியைத் தவிர மற்ற மூவரும் ஆர்க்கிடெக்சர் படித்தனர். ஹாஸ்டலில் அடுத்தடுத்த அறையில் தங்கியதால், நட்பு இறுகியது.

    ஹாய் சிபி! தன்னைத் தோளோடு அணைத்த கௌதமைப் பார்த்து மகிழ்ச்சியானான்.

    டேய் கௌதம்! எப்படி இருக்கடா? உன்னைப் பார்த்து இரண்டு வருஷம் ஆச்சு... என்ன செய்யற? உன் அப்பா கன்ஸ்ட்ரக்ஷன் தானே பண்றார்? நீ அவர்கூட இருக்கியா? நம்ம ப்ரண்ட்ஸ் எங்க இருக்காங்க தெரியுமா?

    நம்ம கான்வகேஷன் போது தானே லாஸ்டா மீட் பண்ணினோம்? நான் அகமதாபாத் போன பிறகு கொஞ்ச நாள் தொடர்பிலிருந்தோம். அப்புறம் கான்டாக்ட் பண்ணவே முடியலை. நீ எங்கடா இங்க? கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடித்தான்.

    மூச்சு விடுடா. வா, லஞ்ச் டைம் தானே. போய் சாப்பிட்டுகிட்டே பேசலாம். இன்னிக்கு என் ப்ரோக்ராம் எல்லாம் கேன்சல்ட் சிபியைக் கைப்பிடித்துக் காருக்கு அழைத்துச் சென்றான். வழியில் யாருக்கோ போன் செய்து அன்றைய வேலைகளைப் பட்டியலிட்டவன், ஒரு ஸ்டார் ஹோட்டல் முன் காரை நிறுத்தினான்.

    உள்ளே வசதியான இடம் பார்த்து அமர்ந்ததும், அதெல்லாம் இருக்கட்டும். நீ என்ன பண்ற? அதைச் சொல்லு என்றான் கௌதம்.

    நான் பார்த்துட்டு இருந்த வேலையை விடும் படியான சூழ்நிலைடா என்று சுருக்கமாக தன் நிலையை விளக்கினான்.

    இங்க பத்மினி டெக்ஸ்டைல் யூனிட்டில் ஜி.எம் போஸ்ட்க்கு அப்ளை பண்ணி, இண்டர்வியூ முடிச்சிட்டு வெளியே வரும்போது தான் உன்னைப் பார்த்தேன்.

    சாரிடா. உன் பேரண்ட்ஸ் தவறிய விஷயம் எனக்குத் தெரியாம போச்சு. டோண்ட் வொர்ரி. அது எங்க யூனிட் தான், என் அம்மாதான் எம்.டி. அப்பா தான் பார்த்துக்கறார். உனக்கு வேலை கன்பார்ம்ட். நான் அப்பாகிட்ட பேசறேன் அவன் கைகளை அழுந்தப் பற்றினான்.

    அவன் அக்கறையில் நெகிழ்ந்த சிபி, தேங்க்ஸ்டா. ஆனா, என் திறமைக்கு இந்த வேலை நிச்சயமா கிடைக்கும். அப்பத்தான், என்னாலயும் நிம்மதியா வேலை பார்க்கவும் முடியும். சரி. உன்னைப் பத்திச் சொல்லு.

    அவனின் தன்னம்பிக்கையும், நிமிர்வும் கௌதமைப் பெருமைப்பட வைத்தது. "‘சிபி! நான் படிச்சு முடிச்சதும், வருண், மிதுன் கூடச் சேர்ந்து சுமி ஆர்க்கிடெக்ட் ஆரம்பிச்சு, சக்சஸ்புல்லா நடத்திகிட்டு இருந்தோம். ஒரு வருஷம் முன்னால மிதுன் அதிலிருந்து விலகி லண்டன் போய் செட்டிலாயிட்டான்.

    வருண் மேரேஜ் முடிஞ்சதும், அவன் வொய்ப் வந்து ஹெல்ப் பண்ண ஆராம்பிச்சாங்க. என் அப்பாவுக்குக் கொஞ்சம் ஹெல்த் ப்ராப்ளம். அவரோட விஷ்வா பில்டர்ஸை நான் ஏற்று நடத்த வேண்டிய சூழ்நிலையால, நானும் விலகிட்டேன். வருண் கலக்கிட்டு இருக்கான். அவனும், நானும் பிசினஸில் மியூச்சுவலா ஹெல்ப் பண்ணிக்குவோம். இப்ப எனக்கும் நிறைய ப்ராஜெக்ட் சைன் ஆகி இருக்கு. டைட் வொர்க் வருண்கிட்ட பேசலாம். ஒரு நாள் பிளான் பண்ணி டின்னருக்குப் போலாம்" என்றான்.

    அதன் பிறகும் பேச நிறைய விஷயங்கள் இருந்தன. செல்போன் நம்பரைப் பரிமாறிக் கொண்டனர். சிபி நினைத்தது போலவே, அங்கேயே தேர்வாகி வேலையில் அமர்ந்தான். கௌதமுடனான நட்பும் இறுகியது. ஸ்வீட்டான செய்தியோடு வீட்டுக்கு வந்தவனை தேவி புன்னகையோடு வரவேற்றாள்.

    தேங்க்ஸ்ண்ணா. இனிமே என்னை விட்டுட்டுப் போக மாட்ட தானே. இப்பத்தான் நிம்மதியாய் இருக்கு.

    என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க தாத்தா!

    நல்லாயிருப்ப கண்ணா. எப்ப ஜாயின் பண்ணணும்? ஜி.எம் போஸ்ட்னா பொறுப்பு அதிகம்... கவனமா இருக்கணும். ஆல் த பெஸ்ட்.

    நாட்கள் வேகமாக விரைய, இதோ தேவி படிப்பை முடிக்கப் போகிறாள். சிபியுடைய வேலையும் எந்தத் தடையும் இல்லாமல் செவ்வனே நடந்து கொண்டிருந்தது.

    குட்டிம்மா! ரெடியா? டைம் ஆச்சு. வா, தாத்தாவை எழுப்பலாம். டிஃபன் சாப்பிட்டுட்டுக் கிளம்பச் சரியா இருக்கும்.

    தாங்கள் வாங்கிய பரிசுப் பொருளோடு தாத்தாவின் அறைக்குள் நுழைந்தார்கள். தூங்கிக் கொண்டு இருப்பார். எழுப்ப வேண்டும் என்று நினைத்து உள்ளே வந்தவர்களின் முகத்தில் அசடு வழிந்தது.

    அங்கே கிருஷ்ணமூர்த்தி குளித்து முடித்து நெற்றியில் திருநீறு துலங்க, வெண்ணிற உடையில் கம்பீரமாக இவர்களை எதிர்பார்த்து காத்திருந்தார்.

    இருவரும் ஒரு சேர, ஹேப்பி பாத்டே தாத்தா. எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க என்று அவர் காலில் விழுந்தனர். பின் பரிசைக் கொடுத்து விட்டு, அவரை டிஃபன் சாப்பிட அழைத்துச் சென்றனர்.

    "தேவிம்மா! இன்னிக்கு உனக்கு இண்டர்வியூ இருக்கில்ல. தைரியமா கான்ஃபிடன்டா பண்ணு. உன்னோட திறமையை, தன்னம்பிக்கையை வெளிப்படுத்தற மாதிரி தெளிவா பேசணும்! உன்னோட ஃபைல் ரெடி பண்ணிட்டியா? என்று கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டார்.

    சரி தாத்தா! லஞ்ச் ஹாட் பேக்ல இருக்கு. இன்னிக்குப் புல்லா உங்களுக்கு ரெஸ்ட் தான். நைட் டின்னர் அண்ணாவோட ட்ரீட் வெளியே! ரெடியா இருங்க. இன்னிக்குக் கிளாஸ் இல்ல. கேம்பஸ் ரிசல்ட் தெரிஞ்சதும் வந்திடுவேன். பை தாத்தா, சிபியுடன் காரில் கிளம்பினாள்.

    கோவிலுக்குச் சென்று தாத்தாவின் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு, தயாராக வாங்கி வைத்திருந்த உணவுப் பொட்டலங்களை கோவில் வாசலிலிருந்த எளியவர்களுக்கு அளித்து விட்டு மன நிறைவோடு கிளம்பினார்கள்.

    சந்தன நிறத்தில் கருநீல பூக்கள் மின்னிய காட்டன் சுடிதாரில், அழகு தேவதையாக காரில் அமர்ந்திருந்த தங்கையைப் பார்த்து மனம் கனிந்தான் சிபி.

    "இன்னிக்கு எந்தக் கன்சர்ன்ல இருந்து இண்டர்வியூ பண்றாங்கடா?

    சிவில் இன்ஜினியரிங் ஸ்டூடண்ட்ஸை ஐ.டி. ஃபீல்ட்ல எல்லாம் கூட செலக்ட் பண்றாங்க. பட் எனக்கு அதுல இஷ்டமில்ல ப்ரோ, விஷ்வா பில்டர்ஸ், ஆர்.எம்.பி கன்ஸ்ட்ரக்ஷன் மாதிரி ஃபேமசான கன்சர்ன்ல வொர்க் பண்ணி எக்ஸ்பீரியன்ஸ் கெயின் பண்ணணும். அப்புறம் சொந்தமாக நானே ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி நடத்தணும்! பார்க்கலாம்.

    ஏய் குட்டிம்மா! விஷ்வா பில்டர்ஸ் என் ப்ரண்ட் கௌதமோடது. நான் வொர்க் பண்றதும் அவங்களோட டெக்ஸ்டைல் யூனிட்ல தான். கௌதமுக்கு ஒரு போன் பண்ணினா போதும். ஆர்டர் உன் கையில்! அவன் என் பேச்சைமீற மாட்டான்.

    "அ.ண்.ணா! அது தான் வேண்டாங்கறேன். நான் என்ன மக்கு ஸ்டூடண்டா? ரெகமண்டேஷன்ல வேலை வாங்க! நான் என் டேலண்டை ப்ரூவ் பண்ணி, இந்த வேலையை வாங்கிடுவேன். இது பத்தி நீ யார்கிட்டயும் மூச்சு விடாதே. நான் இது வரைக்கும் செஞ்ச ப்ராஜெக்ட்ஸ், பேப்பர் பிரசன்டேஷன்ஸ், செமினார்ஸ் அப்புறம், நான் ஸ்பெஷலா ரெடி பண்ணி வச்சிருக்க என்னோட பில்டிங் ப்ளான்ஸ்! இது போதும்! வேலையைத் தூக்கி என் கையில கொடுத்திடுவாங்க. நான் உன் தங்கைன்னு ப்ராமிசா யார்கிட்டயும் சொல்லக் கூடாது. இண்டர்வியூ முடிஞ்சதும் உனக்கே நான் சொன்னது புரியும். கண்கள் மின்ன நம்பிக்கையாகப் பேசியவளைப் பார்த்து புன்னகைத்தான்.

    "சரிம்மா. நான் சொல்ல மாட்டேன். போதுமா? இண்டர்வியூ முடிஞ்சு எனக்குப் போன் பண்ணு. ஈவினிங் நானே வந்து பிக்கப் பண்ணிக்கறேன். ஆமா உன் ஃப்ரண்ட் ஒண்ணு அடிக்கடி வீட்டுக்கு வருவாளே ஏன் இப்ப வர்றதில்லை என்னாச்சு?

    தான்யாவா அண்ணா? அவ டெக்ஸ்டைல் படிக்கற காலேஜ்ல ஐ.வி. போயிருக்கா. படிப்பு முடிஞ்சதும் அவளோட பெரியப்பாவோட நிறுவனத்திலேயே வேலை ரெடியா இருக்கு. நெக்ஸ்ட் வீக்தான் வருவா.

    நான் உள்ள வரட்டுமாடா?

    கண்களில் குறும்பு மின்ன, எதுக்கு சைட் அடிக்கவா? அஞ்சு வருஷமா நான் படிக்கிற காலேஜ் தான் இது. நீ ஆபிஸ் போற வழியப்பாரு என்றதும் அவள் தலையில் செல்லமாகக் குட்டியவன், பை தேவிம்மா! என்று காரைக் கிளப்பினான்.

    தன்னுடைய ஃபைலோடு இண்டர்வியூ நடக்கும் இடத்துக்கு வந்ததும், அங்கிருந்த எல்லோருடைய முகத்திலும் இருந்த டென்ஷனைப் பார்த்ததும் மனதில் லேசாக பயம் தோன்றியது. பைலை சரிபார்த்துவிட்டு அருகிலிருந்தவளைப் பார்த்து ப்ரிப்பேர் பண்ணியாச்சா? என்றாள்.

    அவளோ, பயமா இருக்குப்பா. இண்டர்வியூ கஷ்டமா இருக்கும்னு சொல்றாங்க. நிறைய கேள்வி கேட்டாங்களாம் அதற்குள்ளாக அவள் பெயர் அழைக்கப்பட கொஞ்சம் நெர்வசானாள் ஃபைலோடு உள்ளே நுழைந்தவள், நாற்பது வயதுக்கு மேல் மதிக்கும்படியான மூன்று பேரை எதிர் கொண்டாள்.

    ப்ரியங்கா தேவி காலை வணக்கம் தெரிவித்ததும், மூவரில் கம்பீரமாக அனுபவசாலியாக இருந்த பெரியவர், அவளின் பதட்டம் உணர்ந்து, ஹலோ ப்ரியங்கா தேவி யூ ஆர் லுக்கிங் ஸ்மார்ட். உக்காருங்க. செமஸ்டருக்கு எப்படிப் ப்ரிப்பேர் பண்ணிருக்கீங்க? இது ஃபைனல் செமஸ்டர் தானே!

    அவரின் கனிவான பேச்சில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன தேவி, தேங்க்யூ சார். இந்த செம் கண்டிப்பா நல்லா பண்ணுவேன் என்றாள்.

    உங்களைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா? பொதுவா பெண்கள் சிவில் செலக்ட் பண்ண மாட்டாங்க. உங்களை இதுதான் படிக்கணும்னு, யாராவது ஃபோர்ஸ் பண்ணினாங்களா?

    நோ சார். கன்ஸ்ட்ரக்ஷன் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஃபீல்ட், ஏதாவது பழமையான பில்டிங், கோயில்லாம் பார்த்தா அதிலிருக்கும் கலை நுணுக்கம் தான் என் கண்ணுக்கு முதல்ல தெரியும். அது ரிலேட்டடா நிறைய நெட்ல சர்ச் பண்ணிப் பார்ப்பேன். என் இண்ட்ரஸ்ட் தான் நான் ஆர்க்கிடெக்சர் படிக்க முதல் காரணம்.

    ஓ குட்! என்று கேள்விகள் தொடர்ந்து கொண்டேயிருக்க, அவளுக்கு இஷ்டமான சப்ஜெக்ட் என்பதால் அவரின் கேள்விகளால் கவரப்பட்டு ஆர்வத்தோடு பதில் அளிக்கத் தொடங்கினாள். இது அவளுடைய வேலைக்கான இண்டர்வியூ என்பதையே மறந்து போய் அவருடன் விவாதித்தாள்.

    கட்டிடம் கட்டும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள், சேஃப்டி வழிகள், தவறுகளை சரி செய்யும் முறை என்று எல்லாக் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொன்னாள். இறுதியாக அவள் டிசைன் செய்த கட்டிடங்களின் பிளான்கள் அடங்கிய ஃபைலைப் பார்த்ததும் மலர்ந்த மூவரின் முகங்களுமே, அவளுடைய ரிசல்டை அறிவித்தன.

    அந்தப் பெரியவரே, வெல்டன் ப்ரியங்கா! யூ ஆர் வெரி பிரில்லியண்ட். நீ இங்க செலக்ட் ஆனா கூட ஃபைனலா உனக்கு மெயின் இண்டர்வியூ எங்க ஆஃபீஸ்ல காத்திருக்கு. விஷ்வா பில்டர்ஸ் எம்.டியே நேரில் உன்னைச் சந்திப்பார். அதிலயும் வெற்றி பெற்று, எங்க விஷ்வா பில்டர்ஸ் ஃபேமலியில் ஜாய்ன் பண்ண அட்வான்ஸ்ட் வாழ்த்துக்கள் மா.

    தேங்க்யூ சார். தேங்க்யூ வெரி மச். நான் உள்ள வந்ததுமே உங்களோட பேச்சு என்னை ரிலாக்ஸ் பண்ணிடுச்சு உங்க கூட எல்லாம் பேசியது எனக்கு ஒரு நல்ல அனுபவமா இருந்தது. என்னோட கான்பிடன்ஸ் லெவலும் கூடியிருக்கு. உங்க எல்லோர் கூடவும் சேர்ந்து வொர்க் பண்ண ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா, அதை என் அதிர்ஷ்டமா நினைக்கறேன். கண்டிப்பா எம்.டியை சந்திக்கறேன். ஐ வில் ப்ரூவ் மை செல்ஃப்! தேங்க்யூ அகெய்ன் கரம் குவித்து மூவரிடமும் நன்றி தெரிவித்துவிட்டு தன்னம்பிக்கை மிளிரும் புன்னகையோடு வெளியே வந்தாள்.

    உள்ளே மூவரின் மனதிலும் திருப்தி அவர்களின் ஜி.எம். சாரா, பெரியவரிடம், சார். சச் எ ஸ்வீட் கேர்ள். வெரி பிரில்லியண்ட் பாஸீக்கு இந்தப் பொண்ணு சேலஞ்சிங்கா இருப்பா.

    ஆமாம் சாரா. என் மகன் ஃபாரின்லயிருந்து வந்து இந்த பிசினசை ஆரம்பித்தபோது இருந்த துடிப்பு: ஆர்வம், அறிவு, வேகம் எல்லாமே இந்தப் பொண்ணுகிட்டயும் பார்க்கறேன். ஆனா இவளைப் பார்த்து கௌதம் என்ன சொல்வானோ? அவன் செலக்ட் பண்ணணுமே.

    சாரா, இவ பாஸை செலக்ட் பண்ண வெச்சிடுவா, நிறைய நாலெட்ஜ் இருக்கு என்றதும், மூவரும் சிரித்தனர்.

    #

    2

    தன் அண்ணனுடன் இண்டர்வியூ நடக்கவிருந்த அலுவலகம் வந்து சேர்ந்த தேவி, உள்ளே அடியெடுத்து வைத்ததும் மலைத்துப் போனாள். ஐந்து மாடிக் கட்டிடத்தில் அத்தனை ஹை-டெக்காக, அழகு கொஞ்சும் இன்டீரியருடன் அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

    சிபியிடம், அண்ணா! நீ கிளம்பு நான் பார்த்துக்கறேன். நீ என் அண்ணன் என்று இப்போது யாருக்கும் தெரிய வேண்டாம் என்றாள்.

    ரிசப்சனிலிருந்த பெண் இவளைப் பார்த்து விழி விரிக்க, புன்முறுவலோடு, குட்மார்னிங்! ஐ யாம் தேவி. பதினோரு மணிக்கு இங்கே எனக்கு இண்டர்வியூ இருக்கு என்றவளைப் பார்த்ததுமே பிடித்துப் போனது.

    கால் மீ சிந்து என்ற ரிசப்ஷனிஸ்ட், ஜி.எம் மேடம் பைவ் மினிட்ஸ்ல வந்திடுவாங்க. ப்ளீஸ் பீ சீட்டட் அருகிலிருந்த சோஃபாவைக் காட்டினாள்,

    தேங்க்யூ! என்று நகர்ந்தவளிடம், தேவி! ரொம்ப அழகு நீங்க. அதுவும் உங்க கண்ணு, நோ சான்ஸ். சோ அட்ராக்டிவ்.

    கன்னங்கள் சூடாக, டீப்பாய் மேலிருந்த மேகசினைப் புரட்டத் துவங்கினாள். ஜி.எம் வந்ததும் அவரது அறைக்கு வரச் சொன்னார்கள். பைலோடு உள்ளே நுழைந்தவளை, ஜி.எம் சாராவின் மலர்ந்த முகம் வரவேற்றது.

    முகம் விகசிக்க, குட் மார்னிங் மேடம். ஹவ் ஆர் யூ?

    "ஃபைன். உட்காரும்மா ஒரு அர்ஜென்ட் வொர்க்கா. எம்.டி. டெல்லி போயிருக்கார். வர ஒரு வாரம் ஆகும். அதனால, ஃபார் தஃபர்ஸ்ட் டைம், அவரோட ஒபினியன் இல்லாம, நாங்களே செலக்ட் பண்ண போறோம். பாஸ் ஒரு பெரிய ஷாப்பிங் மால் ப்ராஜெக்ட்ல, கமிட் ஆகியிருக்கார். அவருக்கு பி.ஏ.வா இருந்தவங்க போன வாரம் மேரேஜ் ஆகி ஃபாரின் போயிட்டாங்க. அதனால, அவரோட பர்சனல் செகரட்டரியா உன்னை அப்பாயிண்ட் பண்றேன்.

    பாஸ் ரொம்ப ஃபாஸ்ட் வொர்க்குன்னு வந்தா சாப்பாடு, தூக்கம் எதுவுமே ஞாபகம் இருக்காது. வேலையில பர்ஃபெக்ஷனை ரொம்ப எதிர்பார்ப்பார். அவருக்கு ஈக்வலா அதே ஸ்பீட்ல வேலை செய்யப் பழகணும். இல்லேன்னா அவருக்கு ரொம்ப கோபம் வந்திடும். ஹோப் யூ கேன் டூ இட். ஆல் த பெஸ்ட். என்னிக்கு வந்து ஜாய்ன் பண்றீங்க?

    வேலை கிடைத்த மகிழ்ச்சியில் முகம் பளபளக்க. தேங்க்யூ மேம். எங்க தாத்தாதான் எனக்கு எல்லாமே. அவர்கிட்ட கேட்டுட்டு உங்களை உடனே கான்டாக்ட் பண்றேன் என்று மறுபடியும் நன்றி கூறி விட்டுக் கிளம்பினாள். சிபிக்கு உடனே போன் செய்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாள்.

    ஸ்வீட்டோடு வீடு திரும்பிய தேவியின் முகத்தைப் பார்த்தே விஷயத்தை தெரிந்து கொண்ட தாத்தா,

    Enjoying the preview?
    Page 1 of 1