Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbil Thilaitha Uravu…
Anbil Thilaitha Uravu…
Anbil Thilaitha Uravu…
Ebook177 pages1 hour

Anbil Thilaitha Uravu…

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

தவறான நபரைக் காதலித்து அவப்பெயரைச் சந்திக்கும் பெண் தன் தந்தையின் வெறுப்பைச் சம்பாதிக்கிறாள். படிப்பு தடைப்பட்டு எதிர்காலம் கேள்விக் குறியாகிறது. அந்த நேரத்தில் கடவுள் அனுப்பிய மனிதர் மாதிரி ஒருவர் இவர்கள் இல்லம் தேடி வருகிறார்.

அவர் பெண்ணின் வாழ்வின் உள்ள சிக்கல் முடிச்சு அவிழ ஒரு வழி சொல்கிறார். அது அந்தப் பெண்ணின் வாழ்க்கை பக்கங்களை மாற்றி அமைக்கிறது. புதிய ஔி அவள் வாழ்வில் பரவி, எப்படி அவளின் துன்ப வாழ்வு இன்ப வாழ்வாக மாற்றியது என்பதையொட்டி கதை அழகாய் நகர்ந்து பயணிக்கும். உங்கள் கருத்துகளை srigangaipriya@gmail.com என்னும் முகவரியில் கூறும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்

Languageதமிழ்
Release dateSep 6, 2020
ISBN6580136305787
Anbil Thilaitha Uravu…

Read more from Sri Gangaipriya

Related to Anbil Thilaitha Uravu…

Related ebooks

Reviews for Anbil Thilaitha Uravu…

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbil Thilaitha Uravu… - Sri Gangaipriya

    http://www.pustaka.co.in

    அன்பில் திளைத்த உறவு…

    Anbil Thilaitha Uravu…

    Author:

    ஸ்ரீ கங்கைபிரியா

    Sri Gangaipriya

    For more books

    http://www.pustaka.co.in/home/author//sri-gangaipriya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 1

    அது ஒரு அழகான அடுக்குமாடிக் குடியிருப்பு! சேலத்தில் மையப் பகுதியை விட்டு சற்று தள்ளி இருக்கும் அது பார்க்கவே பளபளவென, படு சுத்தத்தோடு கண்களை கொள்ள அடிக்கும். அங்கே வசிப்பவர்கள் செல்வச் செழிப்பில் குறையற்றவர்கள். ஆக அந்த குடியிருப்பில் எந்த வசதிகளுக்கும் இம்மி குறைவிருக்காது. அருமையான பராமரிப்பில் மிளிர்ந்த ‘தோட்டம்’, ‘சிறுவர் பூங்கா’ மற்றும் வரிசை குறையாக ‘நூலகம்’ ஆகிய மூன்றையும் உதாரணங்களாக கூறலாம்! இத்தனை சிறப்பு வாய்ந்த அதற்கு ‘வெண்தாமரை’ என்ற இனிய பெயர்.

    அதன் முதல்தளத்தில் வயது மூத்த தம்பதிகளான வாசனும் அகல்யாவும் வசித்து வந்தனர். சற்று கலகல பேர்வழிகளான இருவரும் உற்சாகத்தோடு நடைப்பயிற்சி, புத்தக வாசிப்பு, தியானம் மற்றும் வீடு சார்ந்த வேலைகள் என்று அற்புதமாக பொழுதை கழித்தனர். இருவருக்கும் ஒரே மகன்! அந்த பையன் சந்திரனும், மருமகள் லதாவும் வெளிநாட்டில் வசித்தாலும், அவர்கள் இல்லாத குறையை போக்க, அவர்களின் அருமையான பேரன் ‘மயூரன்’ அவர்களோடு வசித்து வந்தான்.

    மயூரன் என்ற பெயர் மயிலை குறிப்பது போலவே, அவனும் குறையற்ற சுந்தர தோற்றத்தை பெற்றவன். மயில் தோகையை போல இதமான மனம்படைத்த இனியன்! ‘மயூரன்’ தாத்தா, பாட்டியின் உயிர் என்றால் மிகையில்லை. உள் ஊரிலே சொந்தமாக தொழிலை நடத்தி, சிறப்பான முறையில் வளர்ந்து கொண்டிருக்கிறான்.

    இப்படி பூஞ்சோலை போன்று வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டிருந்தது. மயூரன் தற்போது தொழில் நிமித்தமாக வெளியூர் சென்றுள்ளான். இதுமாதிரி பயணங்கள் எல்லாம் அவன் தொழிலில் சராசரியாக நடக்கும் ஒன்றுதான்.

    எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்த போதிலும் மயூரன் பெற்றவர்களுக்கு பெற்றவர்களை பெற்றவர்களுக்கும் ஒரு ஏக்கம் இருக்க தான் செய்தது!

    அது வயது வந்த பிள்ளைகள் இருக்கும் வீட்டில் பெரியவர்களுக்கு ஏற்படும் இயல்பான ஆசைதான்! ‘மயூர’ன் மணக்கோலத்தில் காண வேண்டும் அவ்வளவே! பெண்கூட தயாராகவே இருக்கிறாள்! அவள் சந்திரனின் நெருங்கிய நண்பர் நந்தனின் மகள் ‘சுவாதி தான்! சென்ற வருடம் வெளிநாட்டிலிருந்து வந்த தம்பதி, மகனிடம் இதைப் பற்றி கோடிட்டு பேச, அவன் இப்போதைக்கு எதுவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டான். பெற்றவர்கள் மீதுள்ள ஒரு குறிப்பிட்ட கோபத்தால், அவன் அவர்களிடம் சற்று அளவாகவே பேசுவான்.

    ஏமாற்றத்துடன் கிளம்பியவர்கள், இன்னும் ஓராண்டுக்குள் நல்ல முடிவை சொல்ல வேண்டும் என்று கறாராக கூறி இருந்தார்கள். அந்த கெடு முடிய இன்னும் இரண்டே மாதங்கள் தான் உள்ளன.

    அதை பற்றி ஒரேயொரு முறை அகல்யா மயூரனிடம் பேசினான்.

    ‘‘மயூ! அப்பா அம்மா சொன்னது நினைவு இருக்கிறதா? உன் கல்யாணத்தை பற்றி என்ன முடிவு எடுத்தாய்?’’

    மயூரன் சற்று அமைதி காத்தான்! அகல்யாவே தொடர்ந்து ‘‘என்ன மயூ! நான் கேட்டது உனக்கு பிடிக்கவில்லையா?’’ என்று கவலையோடு கேட்டாள்.

    லேசாக சிரிக்க முயன்றவன், பாட்டியின் கரங்களை அன்போடு பற்றி கொண்டான், சற்று உணர்ச்சி மங்கிய குரலில், ‘‘பாட்டி! நீங்கள் கேட்காமல் என்னை யார் கேட்பார்களாம்! ஆனால் பாட்டி! அவர்களுக்கு என் மீது இப்போது மட்டும் அக்கறை வந்துவிட்டதா? ‘கல்யாணம், கடமை என்கிறார்களே! அன்று என்னை தனியாக விட்டு சென்றார்களே அப்போது என் மேல் அக்கறை இல்லையா?’’ என்று கேட்டான்.

    மகனுக்கு பரிந்து பேசுவதா? பேரனுக்கு பரிந்து பேசவதா-? என்று புரியாமல் விழித்தவள், ஒரு வழியாக அன்று தன் செல்ல பேரனை சமாதானம் செய்தாள். அதற்கு பிறகு அகல்யா பேரனிடம் அந்த விசயத்தை மட்டு பற்றி பேசுவதையே நிறத்திக் கொண்டாள்.

    இவைகளை பற்றியெல்லாம் சிந்தித்தபடி, அகல்யா, நந்தியாவட்டை பூக்களை வெகு அழகாக தொடுத்து, அவள் மனதுக்கு பிரியமான ‘ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீஅன்னையின் திருஉருவப் படங்களுக்கு சூட்டி மகிழ்ந்தாள். மிக நிறைவாக பிரார்த்தனையை முடித்தபோது, அழைப்பு மணி ஒலித்தது.

    வாசன் கதவை திறக்க, எதிர்வீட்டு கவிதா தன் இரண்டு வயது மகள் மிருணாவுடன் வந்து நின்றாள். அகல்யா சாமியறையை விட்டு வந்தபடி.

    ‘‘மிரு குட்டி! கவி அம்மாவை போட்டு மிகவும் படுத்துகின்றாயா? வாடி தங்கம்!’’ என்று அழைத்து அணைத்து கொண்டாள்.

    சற்று சலிப்பு கலந்த உரிமையோடு சோபாவில் வந்தமர்ந்த கவிதா,

    "அதை ஏன் கேட்கிறீர்கள் பாட்டி? எல்லாவற்றையும் கலைத்து வீட்டையே ஒரு வழி செய்கிறாள். எனக்கு எடுத்து வைத்து இடுப்பே கழன்றுவிடுகிறது. சமயத்தில் ‘ஓ....’ என்று அழுகையே வருகிறது!’’

    லோச சிரித்த அகல்யா,

    "உன் கவலை புரியாமல் என்ன கவி? பேசாமல் பெயரிவர் யாரையாவது துணைக்கு அழைத்து கொள்ளேன்மா!’’ என்று கூறினாள்.

    "போங்க பாட்டி! என் அம்மா அண்ணாவோடு வெளிநாடு சென்று மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. விமலின் அம்மாவும் மூன்று மாதங்கள் வந்து தங்கி இருந்துவிட்டு போனதோடு சரி! அவர்களுக்கு ஏனோ இங்கே ஒத்துவருவது இல்லை.’’

    ‘‘ம்! மாமியார் மருமகள் உலகமறிந்தது தானே கவி!’’

    ‘‘ஆமாம் ஆமாம் பாட்டி! என் கோணம் அவர்களுக்கு புரியவில்லை. அதேபோல அவர்கள் கோணமும் எனக்கு விளங்குவதே இல்லை. சில விசயங்களில் ‘கட்டளை நிரல் மாதிரி, மாற்றி யோசிக்காமல் நடப்பார்கள் பாட்டி!’’

    அவள் கூறிய விதத்தில் கொள்ளென்று சிரித்த வாசன், ‘‘இவள் கூறுவதை கேட்டால் எனக்கு வேற தோன்றுகிறது அகல்யா!’’ எனக்கூறினார்.

    ‘‘தோன்றியதை சொன்னால் நாங்களும் சிரிப்போமே தாத்தா!’’ என்று கவி இடைபுகுந்தாள்.

    இப்போது தாத்தாவிடம் தாவிய மிரு, அவர் தாடையை இழுத்து விளையாடினாள்.

    ‘‘இல்லை எங்கள் மருமகள் லதா, அகல்யாவை பற்றி என்ன நினைத்துள்ளாளோ!’’

    பெண்கள் சிரிக்க, அகல்யா சற்று தணிந்து, ‘‘என்னை ஒன்றும் வம்பிழுக்காதீர்கள். கவிக்கு ஏதாவது வழி சொல்லுங்கள் பார்க்கிறேன்!’’ என்று கூறினாள்.

    ‘‘ஏம்மா கவி! இரண்டு பேர்களை வேலைக்கு வைத்தாயே, அவர்கள் எங்கே?’’

    "தாத்தா! இருவரும் ஓடிவிட்டார்கள். ஒரு அம்மாளுக்கு சுத்தம் என்பதுவே அறியாத ஒன்று இன்னொரு அம்மாளுக்கு குழந்தை பராமரிப்பு எல்லாம் ஒத்தே வரவில்லையாம்! என்ன செய்ய சொல்கிறீர்கள்? இன்னும் ஒருமாதத்திற்கு பிரச்சனை இல்லை. அதற்கு பிறகுதான் எனக்கு பெரிய தலைவலியே!’’ என்று கூறி, தற்போது அகண்ட சிவப்பு கம்பளத்தின் முனையில் தொங்கிய நூல்களை பிய்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த மிருவை கவலையுடன் நோக்கினாள்.

    ‘‘என்னம்மா?’’ என்று இளகிய மனதுடன் அகல்யா கேட்டாள்.

    ‘‘பாட்டி! இன்னும் ஒரே மாதம்தான் என் விடுப்பு முடிய இருக்கிறது அப்புறம் மிருவை பார்த்து கொள்ள அவசியம் ஒரு ஆள் தேவை! ‘மழலையர் காப்பகத்திற்கு அனுப்பவும் எனக்கு மனம் இல்லை பாட்டி! விமல் அதை தவிர வேறு வழி இல்லை என்கிறார். ஆனால் அதிலும் நிறைய சிக்கல் உள்ளது பாட்டி! மாலை மூன்று மணிக்கு அவளை யார் பள்ளியிலிருந்து அழைத்து வருவது? நாங்கள் இருவருமே வர ஐந்துக்கும் பக்கமாக ஆகிவிடும்! அப்படியே பேருந்தில் குழந்தை இங்கு வந்து சேர்ந்தாலும், நாங்கள் யாருமில்லாமல் அவள் தனியே என்ன செய்வாள்? பேசாமல் வேலையை விடலாம் என்று பார்த்தாலும் முடியவில்லை. நல்ல சம்பளம், மனதிற்கு பிடித்த சூழல்! இதுபோல் மறுபடியும் அமையுமா? நான் வீட்டிலே பறவையாக சிக்கி விடவும் விரும்பவில்லை! தாத்தா! பாட்டி! ஒரே குழப்பம்!’’

    ‘‘அதற்காகவா கவலைப்படுகிறாய் கவி? நீ வேலைக்கே போ கவி! நாங்கள் எல்லாம் இல்லை? அவள் பேருந்தில் திரும்பியதும், நாங்கள் அழைத்து பார்த்து கொள்கிறோம்! என்ன ஒரு இரண்டு மணி நேரங்கள் சமாளிக்க மாட்டோமா?’’

    என்று பெரியவள் சின்ன போகத்தோடு கேட்க, வாசனும் பலமாக தலையாட்டினார்.

    அவர்களின் பெருந்தன்மையை எண்ணி வியந்து, நெகிழ்ந்து போன கவி, அகல்யாவின் கைகளை அன்போடு பற்றினாள்.

    ‘‘பாட்டி! இப்போதே ஏதாவது வெளி வேலை, அவசர வேலை என்றால் உங்கள் உதவியை தான் நாடுகிறேன். நீங்கள் வேறு வயதில் பெரியவர்கள்! எனக்கு மனம் அதற்கே உறுத்தும். நீங்கள் ஓய்வு எடுக்கும் நேரத்தில் போய் தொ...ந்தரவு கொடுக்கிறோமோ என்று! இப்போது இந்த உத...வியையும் மனம் சுருங்காமல், பெருந்தன்மையோடு வழிய செய்ய நினைக்கின்றீர்கள்...! உங்களை போன்ற நல்லவர்கள் இருப்பதால்தான் சேலத்தில் மழைக்கு பஞ்சம் இல்லை! ஆனால் எனக்கு இந்த சுமையை உங்கள் தலையில் போட மனமில்லை! பாட்டி! நீங்கள் இத்தனை ஆதரவாக பேசியதிலே மனம் சற்று நன்றாகிவிட்டது இன்னும் ஒரு மாதம் இருக்கின்றதே, ஊரில் சொந்தக்காரர்களிடம் சொல்லி உள்ளேன்! நிச்சயம் ஒரு நல்ல நபர் கிடைப்பார்!’’ என்று தெளிந்த குரலில் முடித்தாள்.

    அதற்குள்ளே மிரு கைகளை வாயில் போட்டு சூப்பினாள். எழுந்து சென்ற கவி, குழந்தையை கையில் தூக்கி கொண்டாள்.

    ‘‘உன் எண்ணம் போல நல்லதாக நடக்கட்டும் கவி!’’ என்று கூறி, அகல்யா புன்னகைத்தாள்.

    ‘‘நன்றி பாட்டி! மிருவிற்கு பசியும், தூக்கமும் சேர்த்து கொண்டது போல.... நான் போய் பார்க்கிறேன் பாட்டி! தாத்தா!’’

    என்று

    Enjoying the preview?
    Page 1 of 1