Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhagai Pookkuthe...
Azhagai Pookkuthe...
Azhagai Pookkuthe...
Ebook160 pages1 hour

Azhagai Pookkuthe...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

நாயகன் ஹர்ஷா..! நாயகி சம்ருதி..!

கல்லூரி விழா ஒன்றில் சந்தித்துக் கொள்கிறார்கள்.

அமைதியாக, ஆனந்தமாக சென்று கொண்டிருந்த நாயகியின் வாழ்க்கையில் திடீர்த் திருப்பங்கள்.

போராட்டக் களத்தில் இருந்த நாயகிக்கு ஹர்ஷா கை கொடுத்தானா?

நட்பு காதலாக மாறிய விந்தை..!

காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே..!

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580134505704
Azhagai Pookkuthe...

Read more from Hansika Suga

Related authors

Related to Azhagai Pookkuthe...

Related ebooks

Reviews for Azhagai Pookkuthe...

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhagai Pookkuthe... - Hansika Suga

    http://www.pustaka.co.in

    அழகாய் பூக்குதே...!

    Azhagai Pookkuthe…!

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 1

    வானவில்லின் வர்ணங்களாய் தோரணங்கள்...! வித்யாலயம் பள்ளியின் பத்தாம் ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் வகையில் சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    சிறப்பு விருந்தினராக... பிரம்மாண்ட வணிக நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்த ஹர்ஷவர்தன் அழைக்கப்பட்டிருக்க... விழா குறித்த நேரத்தில் கனகச்சிதமாக துவங்கியது.

    இறை வணக்கத்தை தொடர்ந்து, துணை பிரின்சிபால் பதவி வகித்த சம்ருதி வரவேற்புரை நிகழ்த்தினாள். பள்ளியின் தாளாளர் சிறப்பு விருந்தினர் கையில் பூச்செண்டு கொடுக்க, அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.

    குழந்தைகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சியுடன் விழா துவங்க, சிறிது நேர இடைவெளியில் சிறப்பு விருந்தினரை பேச அழைத்தார் பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி.

    சிறப்பு விருந்தினர் எப்போதும் போல பள்ளியின் புகழ்மாலை பாடிவிட்டுப் போவார் என்று நினைத்து இருந்தவர்களுக்கு ஹர்ஷாவின் பேச்சு வெகு சுவாரஸ்யமாக இருந்தது.

    வெளிநாட்டுப் பாடத்திட்ட முறைக்கும், நமது நாட்டுப் பாடத்திட்ட முறைக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி ஒரு குட்டி பிரசங்கமே நடத்திவிட்டான். அவன் பேசிய விதம் தெள்ளத்தெளிவாக எந்தத் தடங்கலும் இன்றி பிரவாகமாய் கொட்டியது.

    மிகவும் இழுவையாக இல்லாமல் கனகச்சிதமாக அவன் பேசி முடிக்க அரங்கத்தில் எழுந்த கைதட்டல் ஒலியடங்க வெகுநேரமானது.

    மாணவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சியும், நன்றியுரையும்...! தேசியகீதத்தோடு விழா இனிதே முடிய... எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் அமைதியாக இறுதி வரை அமர்ந்து பார்த்தான் ஹர்ஷா.

    சம்ருதி... விழா முடிஞ்சதும் சார்கிட்ட கெஸ்ட் செரிமோனி புக்ல கையெழுத்து வாங்கிட்டு அப்படியே சென்ட் - ஆஃப் பண்ணிட்டு வாங்க...

    உமாமகேஸ்வரி சிறப்பு விருந்தினரை வழியனுப்பும் பொறுப்பை சம்ருதியிடம் ஒப்படைத்து இருந்ததால்...

    விழா முடிந்ததும் அந்த கனத்த புத்தகத்தில் அவனிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு அவனது கார் வரை சென்று வழியனுப்பினாள். உடன் சில மாணவிகளும் சேர்ந்து மலர்ச்செண்டுகள் கொடுத்து அவனை வழியனுப்ப...

    யூ ஹாவ் காட் எக்ஸலன்ட் கமாண்ட் ஓவர் லேங்குவேஜ் சார்...! நீங்க பேசுனவிதம் ரொம்ப இம்பரஸிவா இருந்தது...தேங்க்ஸ் எ லாட் சார்...

    சம்ருதி தன் மனதிலிருந்து பாராட்ட,மோஸ்ட் வெல்கம் என்று அவளைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு தன் சியாராவில் ஏறினான் ஹர்ஷா.

    விழா முடிந்து சம்ருதி வீடு வந்து சேர்ந்தபோது இரவு மணி எட்டு...! தன் காரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு காலிங்பெல் அடித்தாள்.

    அவளது அன்னை சரோஜினி கதவைத் திறக்க... அப்பாடா என்று ஹேண்ட்பேக்கை தூக்கியெறிந்தவள் அப்படியே சோபாவில் சரிந்தாள்.

    ரொம்ப லேட் ஆயிடிச்சா பப்பும்மா? ஏதாவது சாப்பிட்டியா இல்லையா? கீரை அடை தயாரா இருக்கு... சாப்பிட வா... என்று சரோஜினி அழைக்க...

    விழாமேடையில் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட ஸ்நாக்ஸ்...! பெயருக்கு என்னவோ கொறித்துவிட்டு வந்திருந்தாள் சம்ருதி. வயிறு கெஞ்சிக் கொண்டு இருந்தது.

    தனக்கே இப்படியென்றால் அந்தக் குட்டிக் குழந்தைகளுக்கு இன்னும் எவ்வளவு சோர்வாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.

    நைட்டிக்கு மாறி டைனிங்டேபிளுக்கு வந்தபோது நெய் அடையின் வாசனை நாசியைத் துளைத்தது. டேபிள்மீது இருந்த ஸ்வீட்பாக்ஸ் கவனத்தை இழுக்க...

    ஸ்வீட்ஸ் இருக்கு... யாரும்மா இன்னைக்கு வந்துட்டுப் போனது. என்று கேட்டாள் சம்ருதி.

    நெருங்கிய உறவினர்களோ, நண்பர்களோ வந்தால் மட்டுமே இப்படி பெட்டி நிறைய ஸ்வீட்ஸ் இருக்கும். பொதுவாக அவர்கள் வீட்டில் இனிப்பு செய்வதும் இல்லை... அவ்வளவாக வாங்குவதும் இல்லை.

    சரோஜினி சர்க்கரை நோயாளி என்பதால் இனிப்பு பக்கமே தலை வைக்கக்கூடாது என்று கடுமையாக சட்டம் போட்டிருந்தாள் சம்ருதி.

    ஹேமா சித்தி வந்துட்டு போனா... நகைக்கடைக்கு வந்தாளாம்... அப்படியே நம்ம வீட்டுக்கும் வந்துட்டு போனா...! அவ சொந்தத்துல உனக்கு ஒரு வரன் பார்த்து வெச்சிருக்கா...! ஜாதகம் பொருத்தம் பார்த்து சொல்லுங்க... மேற்கொண்டு பேசலாம் - ன்னு சொல்றா... நீ என்ன சொல்றே பப்பும்மா...

    மேலும் ஒரு அடையை தட்டில் வைத்து காரச்சட்னியும் பரிமாறிக் கொண்டே சரோஜினி மகளின் முகத்தைப் பார்க்க... அவர் கேட்டதே காதில் விழாதது போல சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள் சம்ருதி.

    திருமணப் பேச்சு எடுக்கும் போதெல்லாம் இவளிடம் இதைத் தவிர வேறு ஒன்றும் எதிர்பார்க்க முடியாது என்று சரோஜினிக்கு நன்றாகத் தெரியும். அதற்காக பெற்றவளின் கடமையை மறக்கமுடியுமா?

    சாப்பிட்டு முடித்து தன் அறைக்குச் சென்றவள், பவர்கட் ஆகுமுன், ஏசி கூலிங் ரூம் முழுக்க பரவ வேண்டுமே... கடவுளே என்று இறைவனை வேண்டிக்கொண்டு கட்டிலில் விழுந்தாள். விழுந்த வேகத்தில் உறங்கியும் விட்டாள்...!!

    இரவு வெகுநேரம் கழித்து அந்த பிரம்மாண்டமான கேட் திறக்கப்பட ஹர்ஷாவின் வண்டி உள்ளே நுழைந்தது.

    இன்னைக்கும் லேட் தானா... சாப்பிட வா ஹர்ஷா... அமிர்தாவின் அழைப்பு அவனைத் தடுத்து நிறுத்த,

    ஒரே நிமிடம் என்பது போல் தன் அம்மாவுக்கு சைகை காட்டிவிட்டு நான்கே தாவலில் மாடிப்படிகளை கடந்தான் ஹர்ஷா. ஊருக்குத்தான் அவன் பெரிய மனிதன்... வளர்ந்து வரும் தொழிலதிபர். அம்மாவுக்கோ செல்லப்பிள்ளை...!

    அம்மா...நீங்க சாப்பிட்டாச்சா... என்று கேட்டுக்கொண்டே இரவு உடையுடன் ஹர்ஷா டேபிளுக்கு வர...

    ம்ம்... டைம் என்னாச்சுன்னு பாரு... நீ வர்றதுக்குள்ள ஒரு குட்டித் தூக்கமே போட்டு எழுந்துட்டேன். மகனுக்குப் பரிமாறத் தொடங்கினார் அமிர்தா.

    காலாகாலத்துல கல்யாணம் பண்ணிட்டா வர்ற மருமக உன் பார்த்துப்பா... எனக்கும் ரெஸ்ட் கிடைக்கும். எப்போதும் போல் அமிர்தா ஆரம்பிக்க...

    கீர்த்தி குட்டி எப்போ வர்றாளாம்? ஏதாவது தகவல் சொன்னாளா? ஏர்போர்ட்டுக்கு வண்டியனுப்பணும். திருமணப் பேச்சிலிருந்து தப்புவதற்காக மகன் வேறு விஷயங்களைப் பேசுவது அமிர்தாவுக்கு புரியாமல் இல்லை.

    கீர்த்தி ஹர்ஷாவின் ஒரே தங்கை...! பல லட்சங்கள் சம்பளம் வாங்கும் ஒரு சாஃப்ட்வேர் நிபுணனைத் திருமணம் செய்துகொண்டு மும்பையில் ஆனந்தமாக வாழ்கிறாள்.

    நினைத்தபொழுது ஃபோன் செய்து,எனக்கு அம்மாவைப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது... வருகிறேன் என்பாள். அதைத்தான் இப்போது அதிமும்முரமாகக் கேட்டுக் கொண்டிருந்தான் ஹர்ஷா.

    இந்த தேதியில தான் வரப்போறேன்னு இன்னும் சரியா சொல்லலடா... நாளைக்கு ஃபோன் பண்றப்போ மறுபடியும் கேக்கறேன். முதலில், நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லு ஹர்ஷா. பெத்த பிள்ளைங்க குடும்பத்தோட வாழறதைக் கண்குளிரப் பார்க்கணும்டா. அதைவிட இந்த வயசுல வேற என்ன ஆசை எனக்கு இருக்கப் போகுது?

    எப்ப கேட்டாலும் எனக்குப் பிடிச்ச மாதிரி ஒருத்தி வரணும் - ன்னு பதில் சொல்றே...! உனக்குப் பிடிச்ச பொண்ணை, நீ தேடி, கொண்டு வர்றதுக்குள்ள நானும் உங்க அப்பா போன இடத்துக்கே போயிடுவேன் போல இருக்கு. உன் அப்பா உயிரோட இருந்திருந்தா இந்த மாதிரி உன் இஷ்டத்துக்கு இருக்க விட்டிருப்பாரா?

    இரண்டு வருடங்களுக்கு முன் மாரடைப்பால் இறந்துவிட்ட தன் கணவரை நினைத்து அமிர்தாவின் கண்களில் நீர்வழிய, முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தபோது பாதி சாப்பாட்டில் ஹர்ஷா எழுந்து போயிருந்தான். தன் மகனை நினைத்து அமிர்தாவுக்கு மிகவும் ஆயாசமாக இருந்தது.

    The Way of the Peaceful Warrior என்ற புத்தகத்தை படித்துக்கொண்டே கட்டிலில் சாய்ந்திருந்தான் ஹர்ஷா.

    அமிர்தாவின் கண்ணீர் அவன் மனதை என்னவோ செய்ய, புத்தகத்தில் கவனம் பதிய மறுத்தது. எதற்காக திருமணத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறோம் என்று யோசித்தான். பெரிதாக ஒரு காரணமும் பிடிபடவில்லை.

    எந்த பந்தத்திலும் சிக்காமல் இருப்பதால் தான் தொழிலில் இந்த அளவு முன்னேற முடிந்ததோ என்றுகூட சில சமயம் நினைத்துக் கொள்வான் ஹர்ஷா. நிர்வாகம், வீடு என்று இப்படி இருப்பதே நிம்மதியாகத் தான் இருந்தது.

    *****

    அத்தியாயம் - 2

    ரிவிஷன் எக்ஸாம் பேப்பர்களைத் திருத்துவதற்காக கையில் அள்ளிக்கொண்டு வந்து காரில் வைத்தாள் சம்ருதி. வைஸ் பிரின்சிபாலாக இருந்தாலும் பத்தாம் வகுப்புக்கான கெமிஸ்ட்ரி ஆசிரியை அவள்தான். இனி பப்ளிக் எக்ஸாம் முடியும்வரை ஸ்பெஷல் கிளாஸ், கோச்சிங் என்று சரியாக இருக்கும்.

    பாதி வழியில் வந்து கொண்டிருந்த போது சரோஜினி போன் செய்ய...வீட்டுக்கு தான் வந்துகிட்டு இருக்கேன்... என்ன விஷயம்மா... என்று சம்ருதி கேட்க...

    "நாளைக்குக் காலையில நம்ம வரலஷ்மியோட பொண்ணு கல்யாணம்

    Enjoying the preview?
    Page 1 of 1